பேசப் பேச ஆர்வங் கூட்டுவன

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : பொது பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச் சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர்வணமாவன அஞ்செழுத்துமே. 3.22.9 திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : pothu paN : gAndhAra panycamam Third thirumuRai panycAkkarath thiruppathikam thirucciRRambalam kArvaNan n^Anmukan kANuthaRku oNAc cIrvaNac cEvaDi cevvi n^ALthoRum pErvaNam pEcip pithaRRum piththarkaTku ArvaNamAvana anycezuththumE. 3.22.9 thirucciRRambalam

Meaning of Thevaram

For the mad devotees, who talk and rave the glorious names everyday on the qualities of the Perfect-colorful-Feet That were beyond vision of the cloud-colored and four-faced, the excitement for them are the Holy Five Syllables.

பொருளுரை

மேகவண்ணனும், நான்முகனும் காண இயலாத, சீர்மையும் அமைப்பும் உடைய செம்மையான திருவடிகளின் பெருமைகளை நாள்தொறும் பெயர் பல கொண்டு பேசிப் பிதற்றும் பித்துடையவராகிய அடியவர்களுக்கு, ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைவன திருவைந்தெழுத்தே!

Notes

1. கார் - மேகம்; செவ்வி - குணநலன்கள்; ஆர்வணம் - ஆர்வம்.
< PREV <
இப்பேரண்டத்தை ஆள வேண்டுமா?
Table of Contents > NEXT >
வினையை வெல்லும் ஆயுதம்

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page