இவையெல்லாம் ஐந்தே

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : பொது பண் : காந்தாரபஞ்சமம் மூன்றாம் திருமுறை பஞ்சாக்கரத் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் கொங்கலர் வன்மதன் வாளி ஐந்து; அகத்து அங்குள பூதமும் அஞ்ச; ஐம்பொழில்; தங்கரவின் படம் அஞ்சும்; தம்முடை அங்கையில் ஐவிரல்; அஞ்செழுத்துமே. 3.22.5 திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : pothu paN : gAndhAra panycamam Third thirumuRai panycAkkarath thiruppathikam thirucciRRambalam koN^galar vanmathan vALi ain^thu; akaththu aN^guLa bUthamum anyca; aimpozil; thaN^garavin paDam anycum; thammuDai aN^kaiyil aiviral; anycezuththumE. 3.22.5 thirucciRRambalam

Meaning of Thevaram

Five are the floral arrows of harsh cupid; Five are the elements inside; Five are the lands; Five are the hoods of the snake that resides; Five are the fingers in the hand; Five are the (holy) syllables!

பொருளுரை

வன்மையுடைய மன்மதனின் பூங்கணைகள் ஐந்து; உள்ளிருக்கின்ற பூதங்களும் ஐந்து; பொழில்கள் ஐந்து; அங்கிருக்கின்ற பாம்பின் படம் ஐந்து; தம்முடைய கரத்தில் விரல்கள் ஐந்து; (மந்திரத்) திருவெழுத்துக்களும் ஐந்தே!

Notes

1. கொங்கு - தேன்; வாளி - அம்பு.
< PREV <
சந்தியாவந்தன மந்திரம்
Table of Contents > NEXT >
துன்பப்படும் பொழுது யார் துணை?

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page