நிலையான பெருஞ்செல்வம் வேண்டுமா?

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : திருப்பிரமபுரம் பண் : சீகாமரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் சிலையது வெஞ்சிலையாகத் திரிபுரமூன்று எரிசெய்த இலைநுனை வேற்றடக்கையன் ஏந்திழையாள் ஒருகூறன் அலைபுனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடிபணிந்தால் நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே. திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : thiruppiramapuram paN : cI kAmaram Second thirumuRai thirucciRRambalam cilaiyathu venycilaiyAkath thiripuramUnRu ericeytha ilai n^unai vEl thaDakkaiyan En^thizaiyAL orukURan alaipunal cUz piramapuraththu arumaNiyai aDipaNin^thAl n^ilaiyuDaiya perunycelvam n^IDulagiR peRalAmE. thirucciRRambalam

Meaning of Thevaram

One holding in long hands the (sharp) leaf like edge spear, Who burnt the three puras with the mount as the lethal bow; Partner of beautiful Lady; When the Rare Gem at thiruppirampuram surrounded by tidal waters is saluted, one can get eternal great wealth in this grand world.

பொருளுரை

மலையே வலிய வில்லாகக் கொண்டு திரிபுரங்களை எரித்த இலை போன்ற கூரிய சூலத்தைக் கொண்ட நீண்ட கைகளையுடையவன்; அழகிய பெண்ணை ஒரு கூறு உடையவன்; நீரலை சூழ்ந்த திருப்பிரமபுரத்து அருமணியை அடிபணிந்தால் நிலையான பெருஞ்செல்வத்தை இந்தப் பேருலகிலேயே பெறலாகும்.

Notes

1. சிலை - மலை/வில்; தடக்கை - நீண்ட கை; ஏந்திழை - அழகிய பெண்.
< PREV <
எங்கு யாதாகப் பிறந்தாலும்
நம்மைச் சிவபெருமான் காப்பார்!
Table of Contents > NEXT >
தக்கார் என்பவர் யார்?

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page