இயல்பாகப் பெற்ற செல்வம்

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : திருப்பிரமபுரம் பண் : சீகாமரம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன் பேர் பலவுடையான் விண்ணுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரந் தொழ விரும்பி எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே. திருச்சிற்றம்பலம்

thirunyAnacamban^thar thEvAram

thalam : thiruppiramapuram paN : cI kAmaram Second thirumuRai thirucciRRambalam kaNNuthalAn veNNIRRAn kamazcaDaiyAn viDaiyERi peNNithamAm uruvaththAn pinynyakan pEr palavuDaiyAn viNNuthalAth thOnRiya cIrp piramapuran^ thoza virumbi eNNuthalAm celvaththai iyalbAga aRin^thOmE. thirucciRRambalam

Meaning of Thevaram

Fore-head eyed; With white ash; With fragrant twined hair; Bull Rider; Of the soothing Form with Lady; One with the feather (of crane); One with very many names; As the ornament on forehead for the universe the thiruppiramapuram that appeared, the thoughts of ardently worshipping it - this wealth we naturally got!

பொருளுரை

நெற்றியில் கண்ணுடையவன்; வெண்ணீறு பூசியவன்; கமழ்கின்ற சடையுடையவன்; காளை ஊர்தியன்; இனிமையாகப் பெண்ணைக் கொண்ட உருவத்தன்; கொக்கிறகு அணிந்தவன்; பல திருநாமங்கள் உடையவன்; (அவனுடைய) விண்ணிற்குத் திலகமாகத் தோன்றிய திருப்பிரமபுரத்தைத் தொழவிரும்பி எண்ணுவதாகிய செல்வத்தை நாம் இயற்கையாகவே பெற்றோம்!

Notes

1. இயல்பாக அறிந்தோமே - சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தோடு தோன்றியவர் ஞானசம்பந்தர். எனவே இயல்பாகவே அவருக்கு இறைவனுடைய திருவடி தொழுதல் அவருக்கு அமைந்தது. ஒ. பாலனாய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும் சீலமாய சிந்தையில் தேர்வதில்லை; தேவரே! - சம்பந்தர். 2. பிஞ்ஞகம் - இறகு. சிவபெருமான் குரண்டாசுரன் என்ற கொக்கு வடிவான அசுரனை ஒடுக்கி இறகினை அணிந்தமை. 3. எண்ணுதலாம் செல்வம் - சிவபெருமான் திருவடி சிந்தித்தலே செல்வம். ஒ. தில்லைச் சிற்றம்பல மேய செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே - சம்பந்தர் தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும் தொலையாச் செல்வச் சோற்றுத்துறையே - சுந்தரர்.
< PREV <
செத்த நாட்கள் எத்தனை?
Table of Contents > NEXT >
எங்கு யாதாகப் பிறந்தாலும்
நம்மைச் சிவபெருமான் காப்பார்!

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page