மாலையை மலரச் செய்வாய்!

 

திருஞானசம்பந்தர் தேவாரம்

தலம் : திருமருகல் பண் : இந்தளம் இரண்டாம் திருமுறை திருச்சிற்றம்பலம் இலங்கைக் கிறைவன் விலங்கல் எடுப்பத் துலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய் வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான் அலங்கல் இவளை அலராக்கினையே. திருச்சிற்றம்பலம்
thalam : thirumarugal paN : indhaLam Second thirumuRai thirucciRRambalam ilaN^gaikku iRaivan vilaN^gal eDuppath thulaN^gav viral UnRalum thOnRalanAy valaN^goL mathil cUz marukaR perumAn alaN^gal ivaLai alarAkkinaiyE. thirucciRRambalam

Meaning of Thevaram

Oh the Lord of thirumarugal surrounded by walls, Who was circumambulated (worshipped) by the lord of ilangai who lifted up the Mount and as soon as (You) planted a finger properly, became clueless! You have made this garland (lady) dried out!

பொருளுரை

இலங்கைக்கு அதிபதி மலையை எடுத்த பொழுது, (நீவீர்) ஒரு விரலை நன்றாக வைத்திட, (இடர்ப்பட்டு) எதுவும் தோன்றாதவனாக ஆகிப்பின் வலம் வந்து வணங்கும் மதில் சூழ்ந்த மருகற் பெருமானே, மாலை போற இவள் வாடுமாறு செய்தனையே!

Notes

1. இறைவன் - அதிபதி; விலங்கல் - மலை; துலங்க - நன்றாக; அலங்கல் - மாலை; அலர் - வாடிய மலர்.
< PREV <
நீலகண்டம் கருணை செய்க
Table of Contents > NEXT >
மரித்தல் இல்லாதவர்கள் பிரியாத பெருமான்

Back to Thirumurai Series Page
Back to Thirumurai Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Shaivam Home Page