தென்பூண்டிபட்டு அ/மி ஸ்ரீ தையல்நாயகி உடனுறை அ/மி. ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Thenpoondipattu Sri Thaiyalnayaki Udanurai Sri Vaitheeswara swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், தென்பூண்டிபட்டு, செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சான்றோற் நிறைந்த தொண்டை நன்நாட்டின் திலகமெனத் திகழும் தேவாரப் பாடல் பெற்றத் திருத்தலமாம் திருவோத்தூரின் வடக்கே 10-கி.மீ. தொலைவில் தென்பூண்டிப்பட்டு என்னும் இத்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 20-கி.மீ. தொலைவாகும்.

தல சிறப்பு:

முன்பொரு சமயம் பல்லவர் வழிவந்த விஜயவேந்தன் என்னும் அரசன் தனது ஆட்சிக் காலத்தில் வனவேட்டைக்காக இப்பகுதியிலிருந்த கானகத்திற்கு வந்தான். பின்னர் அரசன் இளைப்பார பர்ணசாலை அமைக்கும்பொருட்டு வீரர்கள் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அந்த இடத்தில் இருந்த ஐந்து மரங்களை வெட்டி பர்ணசாலை அமைத்து ஓய்வெடுத்தனர். வனவேட்டை முடிந்து நாடு திரும்பியபின் நாட்டில் மன்னருக்கும் மக்களுக்கும் உடலில் வெடிப்பு புண்கள் உண்டாகி உதிரமும் சீழும் பெருகின. வருந்திய மன்னன், காசியபர் முனிவரை தியானித்து, முனிவரிடம் தானும் தன் மக்களும் படுகின்ற துயரத்தை எடுத்துக் கூறினான்.

காசியபர் ஞானத்தால் நடந்தனவற்றை உணர்ந்து, வீரர்கள் பர்ணசாலை அமைக்க ஐந்து வில்வ மரங்களை வெட்டிய தவற்றைச் சுட்டிக்காட்டினார். பிறகு "வில்வ மரங்களை வெட்டிய இடத்தில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து, சுவாமிக்கு வில்வ இலைகளை சாத்தி பாலால் அபிஷேகம் செய்து, அந்தப் பாலைப் பருகிட வினைதீரும்" என்று காசியபர் முனிவர் உபதேசித்தார். மன்னனும் அவ்வாறே ஈசனை எழுந்தருளச் செய்தான். மன்னன் மற்றும் மக்களின் வினைகள் தீர்ந்தன. நாட்டில் சகல வளமும் கொழித்தது.

திருப்பணி விபரம்:

இறைவர் வைத்தீஸ்வரர் என்னும் திருப்பெயர் தரித்து அன்னை தையல்நாயகியுடன் எழுந்தருளியுள்ள சிறப்பு பெற்ற இவ்வாலயம் மிகவும் பழுதடைந்துள்ள நிலை கண்டு அன்பர் பெருமக்கள் இத்திருக்கோயிலை புதுப்பிக்க திருவருள் கூட்டுவித்து, திருப்பணி தொடங்கப்பெற்று நடைபெற்று வருகின்றன.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ தையல்நாயகி உடனுறை அ/மி. ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள், திருக்கோயிலை கட்டியவர்களைவிட நான்கு மடங்கு சிவ புண்ணியம் பெறுவார்கள் என்பது மாதவச் சிவஞான சுவாமிகளின் திருவாக்காகும்.


	"முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய 
	நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
	தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு 
	புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்"

						- காஞ்சிப்புராணம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


தென்பூண்டிப்பட்டு ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோயில் கைங்கர்ய சபா அறக்கட்டளை Karur Vysya Bank, Cheyyar Branch. (Tamil Nadu, India.) A/c. No. KVBL0001609155000022250

தொடர்பு :

அ/மி ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோயில் கைங்கர்ய சபா மற்றும் கிராம பொதுமக்கள், N. சங்கர் - 098410 33805, J. விநாயகம் - 099658 54754, G. முருகன் - 090952 30825. தென்பூண்டிப்பட்டு.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page