மணவூர் அ/மி ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அ/மி ஸ்ரீ திருநந்தீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

maNavUr srI Anandavalli samEdha thirunandhISwarar swAmy
temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ திருநந்தீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், மணவூர், திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு:

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவை பிராட்டியின் வாக்கு. திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு தொன்மையான சிவப்பதி மணவூர். சுமார் 1200 ஆண்டுகள் பழமையான அ/மி ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அ/மி ஸ்ரீ திருநந்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் இங்கே அமைந்துள்ளது. "ஆடியது ஆலங்காட்டில், அமர்ந்தது திருவூறலில், மணந்தது மணவூரில்" என்னும் சான்றோர் கூற்று இக்கோயிலின் பழமையும் சிறப்பையும் உணர்த்துகிறது.

சிவபெருமான் அகத்தியருக்கு மணக்கோலத்துடன் காட்சி அளித்த ஸ்தலம்; ஆதலால், மணவூர் என வழங்கலாயிற்று. நந்தி பகவான் சிவபெருமானை பூஜித்து அருள் பெற்றத் திருத்தலம். இக்காரணத்தால் இறைவர் திருநந்தீஸ்வரர் என்று வழங்கப்படுகின்றார்.

திருப்பணி விபரம்:

தற்போது பழமையான ஆலயங்களைப் புதுப்பித்து வழிபாடு செய்ய ஊக்குவிப்பதே சிறப்பானதாக உள்ள நிலையில் ஊர் மக்கள் திருப்பணி குழுவை அமைத்து இத்திருக்கோயில் இராஜகோபுரம் அமைத்திட திருவருள் கூட்டியுள்ளது. சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம் தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும் கூடவே நல்வினைகள் சேரும். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு தரல், இடம் அல்லது மனை தரல், குளம் தூர் வாறல், கல், மணல் அளித்தல் ஆகிய எல்லாம் மிக மிக சிவ புண்ணிய செயல் என்பதை நம் பழம் பாடலால் அறியலாம்.

 
		"புல்லினால் கோடி யாண்டு, புது மண்ணால் பத்துகோடி
		செல்லுமா ஞாலந்தன்னில் செங்கல்லால் நூறு கோடி
		அல்லியங்கோதை மின்னே ஆலயம் மடங்கள் தம்மை
		கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே"


	தேவையான பொருட்கள்
	
	சிமெண்ட்	- 760 மூட்டைகள்
	செங்கல்		- 70,000
	மணல்		- 15 லோடு
	கம்பி		- 70 அந்தர் (16 - மி.மீ., 12 - மி.மீ., 8 - மி.மீ.)
	கருங்கல் ஜல்லி 	- 34 யூனிட்
	1 1/2 ஜல்லி	- 3 லோடு

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


	அ/மி திருநந்தீஸ்வரர் திருப்பணிக் குழு,
	No.14/W1 Post Office Street, 
	Manavur Post,
	Thiruthani Taluk,
	Thiruvallur Dt. Pin - 631 210

	Cont : 9843618157, 9884126417, 9940444681.

		INDIAN BANK S/B A/C NO.870325121
		Indian Bank,
		Thiruvalangadu Branch.

	Web : htttp://thirunandeeswarar.blogspot.com


Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page