அரசூர் அ/மி ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத அ/மி ஸ்ரீ திருவாலீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

arasUr srI soundaravalli samEdha srI thiruvAlISwarar swAmy
temple thiruppaNi (Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில், அரசூர் & அஞ்சல், பொன்னேரி வட்டம், (பொன்னேரிக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவு.) திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தலவரலாறு / கோயில் சிறப்பு:

இவ்வூர் "அசலபுரம்" என்ற பெயரிலே விளங்கி நாளடைவில் அரசூர் ஆனது. அரசூர் அ/மி ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத அ/மி ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீவாலியினால் பூசிக்கப்பட்ட தலமாகும். சிவலிங்கத் திருமேனி 16 பட்டைகள் கொண்ட "தாராலிங்க"மாக அமைப்பெற்றுள்ளது. இத்தல தீர்த்தம் வாலி தீர்த்தமாகும்.

புராண வரலாற்றுக்குப்பின் முதலாம் நர்சிம்மவர்மன் (630 - 668) ஆட்சிக்குப்பின் வந்த இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன் (700 - 728) காலத்தில் இக்கோயிலின் அதிட்டானம் முதல் விமானம் வரை முழுவதும் கல்லினால் ஆக்கப்பட்டன. இவரது காலத்தில் தான் அகமண்டபம் - முகமண்டபம் - ஸ்ரீசௌந்தரவல்லி அம்மன் சன்னதி திருச்சுற்று, மதில், கோபுரவாசல் ஆகியனவெல்லம் கட்டப்பெற்றது.

திருப்பணி விபரம்:

இத்திருக்கோயிலில் கடந்த ஸ்வஸ்தி ஸ்ரீ சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 9-ம் நாள் (24-11-2008) திங்கட்கிழமை சுபயோக நன்னாளில் "பாலாலயம்" எழுப்பப்பட்டு பூசைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், திருவருள் துணைகொண்டு இராஜகோபுரம் மற்றும் சன்னதிகளின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத அ/மி ஸ்ரீ திருவாலீஸ்வரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் Cheque / Draft / MO மூலம் நேரடியாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்; நேரடியாக பணம் செலுத்த விரும்புவோர், Indian Overseas Bank, Ponneri Branch, (ஆலய / temple) A/c No.16766 என்ற வங்கி கணக்கில் செலுத்தலாம்; அல்லது கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.

 
	அ/மி. ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத  
	ஸ்ரீ திருவாலீஸ்வரர் சுவாமி சேவா சங்கம் 
	பதிவு எண். SI. No.1/2009, 
	அரசூர் & அஞ்சல்,  
	பொன்னேரி வட்டம், 
	திருவள்ளூர் மாவட்டம், 
	தமிழ்நாடு, Pin : 601 204. 
		 
	Contact No. : 9444463073 / 9381522327 / 9380483536. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page