இராஜபதி அ/மி ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

rAjapathy srI soundthiran^Ayaki samEdha srI kailAsan^Athar swAmy
temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், இராஜபதி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

வரலாறு:

நவ கைலாய தலங்கள், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஒரு சமயம் அகத்திய முனிவர் பொதிகை மலையில் தவமிருந்த போது, அவரது பிரதான சீடரான உரோமச முனிவர் இறைவனிடம் முக்தியை வேண்டினார். இறைவன் அவருக்கு அகத்தியர் மூலம் அருள எண்ணி அகத்தியருக்கு இதை உணர்த்தினார்; உரோமச முனிவரை அழைத்த அகத்தியர், பொருணை (தாமிரபரணி) நதியில் ஒன்பது தாமரை மலர்களை விட்டு, இந்த மலர்கள் எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, கைலாசநாதர் என்று பெயரிட்டு, வழிபட்டு கடைசியாக தாமிரபரணி நதி கடலில் சங்கமமாகும் இடத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்று கூறினார்.

குருவாகிய அகத்தியரின் கூற்றை அப்படியே பின்பற்றி, உரோமச முனிவர் தாமரை மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தெந்திருப்பேரை, இராஜபதி, சேர்ந்த(பூ)மங்கலம் ஆகிய இடங்களில் சிவ பிரதிஷ்டை செய்து கைலாசநாதரை வழிபட்டு, இறுதியாக தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் இடத்தில் நீராடி முக்தி பெற்றார். இந்த ஒன்பது தலங்களே நவ கைலாய தலங்களாகும்.

திருப்பணி விபரம்:

பொருணை நதிக்கரையில், நவ கைலாயக் கோவில்களில், வெள்ளத்தால் முற்றிலும் அழிந்த, கேது ஸ்தலமான, இராஜபதி ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலைப் புதிதாக நிர்மாணிக்கும் பணியை, சைவர்களின் தலையாய பணியாகக் கருதி செயல்பட வேண்டுகிறோம். பெருமக்களால் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றன. இத்திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற, அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ சௌந்திரநாயகி சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

திருப்பணிக்கு தேவையான பொருள் கிரயம்

 
		திருப்பணி விபரம்		பொருள் கிரயம்(ரூபாயில்) 
 
1.	விநாயகர் சன்னதி + மண்டபம் + விமானம்		1,50,000/- 
2.	சுப்பிரமணியர் சன்னதி + மண்டபம் + விமானம் 	1,50,000/- 
3. 	பஞ்சலிங்க மண்டபம் + விமானம்			1,00,000/- 
4.	பஞ்சலிங்க பாதை மண்டபம் 			1,00,000/- 
5. 	தட்சிணாமூர்த்தி + விமானம்			 50,000/- 
6. 	சண்டிகேஷ்வர் + விமானம்			 60,000/- 
7. 	அதிகார நந்தி சன்னதி 				 60,000/- 
8. 	பைரவர் சன்னதி + விமானம்			 60,000/- 
9. 	சூரியன் 						 40,000/- 
10. 	சந்திரன் 					 40,000/- 
11. 	மதில் சுவர் 					1,40,000/- 
12. 	மடப்பள்ளி					2,00,000/- 
13. 	கொடி மரம்					2,00,000/- 
14. 	பலி பீடம்					 30,000/- 
15. 	பிரதோஷ நந்தி மண்டபம் 			1,00,000/- 
16. 	நடராஜர் 					2,00,000/- 
17. 	நாயன்மார்கள் மண்டபம் 				3,00,000/- 
18. 	நுழைவு தோரணை வாயில்			2,00,000/- 
19. 	மகா மண்டபம் 					4,00,000/- 
20. 	சுவாமி கருவறை + அர்த்த மண்டபம் 		5,00,000/- 
21. 	அம்பாள் கருவறை + அர்த்த மண்டபம் + விமானம் 
		அம்பாள் முகப்பு மண்டபம் + பள்ளியறை	7,00,000/- 
22. 	வெளி சுவர் (நந்தவனம்) 			    12,00,000/- 
23. 	இடத்தைச் சமப்படுத்துதல் 			4,00,000/- 
24. 	மின் வசதி, தண்ணீர்				1,50,000/- 
25. 	அக்ரஹார பட்டர் விரதி				4,00,000/- 
						   ----------------   
				   ஆக மொத்தம் ரூ.59,30,000/- 
						   ----------------  

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும்.

 
			கைலாஷ் அறக்கட்டளை 
			பதிவு எண்.1042/2008, 
			கைலாஷ் டிரஸ்ட், 
			No.94/107, தனுஷ்கோடியாபுரம் தெரு, 
			கோவில்பட்டி, 
			தூத்துக்குடி மாவட்டம், 
			தமிழ்நாடு, Pin : 628 501. 
		 
			Contact No. : 9842263681 / 9842975618 / 9486716050 / 9894926640. 
			E.Mail ID : kailashtrust@yahoo.com 
			www.ravichader1964gmail.com 

அறிவிப்பு:-

இராஜபதி திருக்கோயில் திருப்பணியை நேரில் பார்வையிட ஒவ்வொரு ஆங்கில மாத முதல் ஞாயிற்றுக் கிழமையன்று, ஏற்பாடு செய்யப்படுகிறது; கலந்துகொள்ள விரும்புபவர்கள் பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொடர்பு எண். 9842263681 / 9486381956 / 9442500051.


Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page