திருவிடைமருதூர் அ/மி ஸ்ரீஞானாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீரிஷிபுரீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

thiruvidaimarudhUr srI gnAnAmbikai udanuRai srI rishipurISwarar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி ஸ்ரீரிஷிபுரீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு :

இத்திருக்கோயில் இதே தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்க சுவாமித் திருக்கோயிலுக்கு முற்பட்டதாகும். அகத்தியர், பரத்வாஜர், காசியபர், கௌதமர், உரோமேசர் ஆகியோர் இத்தலத்து இறைவரைப் பூசித்துப் பேறு பெற்றத் திருத்தலம். ரிஷிகள் வழிபட்டுப் பேறு பெற்றதினால் இவ்விறைவர் ஸ்ரீரிஷிபுரீஸ்வரர் என்னும் திருநாமம் கொண்டு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். கிரக - ராசி - புத்திர தோஷ நிவர்த்தித் தலமாக இத்தலம் விளங்குகின்றது. சித்திரகீர்த்தி - சுகுணா இவ்வாலயத்தில் தவம் செய்து மகப்பேறு அடைந்தனர் என்று தல புராணம் கூறுகின்றது. இத்திருக்கோயிலில் உள்ள காக்கைத் தீர்த்தத்திலிருந்து சிறு துளி நம் தலையில் பட்டாலும் பதினாயிரம் வேள்வி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருப்பணி விபரம்:

திருவருளால் இக்கோயில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீஞானாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீரிஷிபுரீஸ்வரர் சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


  • S. மஹாலட்சுமி - 9840053289, 28152533.
  • ஜெயபால் - 9442267150.

  • Back to thirupaNi page
    Back to Shaiva Siddhantha Home Page
    Back to Shaivam Home Page