69.சாத்தனூர் அ/மி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனாய அ/மி. ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

69.sAththanUr srI kAsivisAlAkshi udanAya srI kAsiviSwanAthar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமித் திருக்கோயில், 69. சாத்தனூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

முற்காலத்தில் இச்சிவாலயம் அனைத்து பரிவாரங்களுடன் ஆறுகால பூஜைகளுடனும் சிறப்புடன் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது. நந்தியம் பெருமானிடம் அருள் பெற்ற சிவயோகியாரான சுந்தரநாதர் என்பவர், பொதியமலையை நோக்கிச் செல்லும்போது சாத்தனூர் (திருவாவடுதுறைக்கு மிக அருகில் உள்ள புராணச் சிறப்புடைய ஒரு ஊராகும்) என்னும் இத்தலத்தில் பசுக்கள் மேய்ப்பன் ஒருவன் இறந்து கிடப்பதையும், அதனால் அப்பசுக்கள் உறும் துயரத்தையும் கண்டு, மூலன் என்னும் அம்மேய்ப்பனின் உடலில் கூடுவிட்டு கூடு பாயும் (பரகாய பிரவேசம்) திறத்தால் தன் உயிரைச் செலுத்தி திருமூலர் என்னும் பெயர் கொண்டார்.

திருப்பணி விபரம்:

திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனாய அ/மி. ஸ்ரீ காசிவிஸ்வநாத சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


Thirumoolar Siva Seva Trust (திருமூலர் சிவ சேவா ட்ரஸ்ட்), A/C. No.009001000268558, City Union Bank, Aduthurai. K. Baskar, Teacher, No.976, Mela Agraharam, 69.Saththanur - 609 802. Thanjavur Dt. Tamil Nadu. Phone : +91 - 9047849904, 0435 - 2470344.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page