கூனஞ்சேரி அ/மி ஸ்ரீ பார்வதி அம்மாள் சமேத அ/மி ஸ்ரீ கயிலாசநாத சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

kUnanjchEri srI pArvathi ammAL samEdha srI kailAsan^Athar swAmy
temple thiruppaNi (Renovation)
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயில், கூனஞ்சேரி, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தலவரலாறு / கோயில் சிறப்பு:

அடியவர்தம் உள்ளக் குறைகளைத் தீர்ப்பது மட்டுமின்றி, அவர்தம் உடற் குறைகளையும் தீர்க்கும் திருத்தலமாக விளங்குகின்றது. அதனால் இவ்வூர் கூனஞ்சேரி, கூன்நிமிர்ந்தபுரம் என புராணங்கள் சிறப்பிக்கின்றன. இத்திருக்கோயிலில் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீ பார்வதி அம்மாள் தெற்கு முகமாகவும் ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் கிழக்கு முகமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மற்றொரு அம்சமாக ஸ்ரீ அஷ்டகோண மகரிஷி பூஜித்த அஷ்டலிங்கங்கள் (எட்டு லிங்கங்கள்) இத்திருக்கோயிலில் அமைந்துள்ளன.

திருப்பணி விபரம்:

இத்திருக்கோயில் ஆன்மீக அன்பர்களின் பேருதவியால் (பல சன்னதிகளும்) திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேக நாள் குறிக்கப்பட்டு (ஆவணி 21-ம் நாள் 06-09-2009) இறைவனின் கருணையால் விமர்சையாக நடைபெற உள்ளதால், மீதமுள்ள திருப்பணிகளையும், கும்பாபிஷேகத்திற்கு முன்பே செய்து முடிக்க வேண்டியுள்ளதால் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ பார்வதி அம்மாள் சமேத அ/மி ஸ்ரீ கயிலாசநாத சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

மீதமுள்ளத் திருப்பணிகள் விபரம்
திருப்பணி விபரம் மதிப்பு

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் சன்னதி 5 X 5 சதுரம்

8,000

ஸ்ரீ நந்திகேஸ்வரர் மண்டபம் 4 X 4 சதுரம்

6,000

அபிஷேகத்திற்காக தண்ணீர் வசதி கைபம்பு, மின்மோட்டார், பைப்கள்

20,000

யாகசாலை பந்தல் அமைத்திட

20,000

நாதஸ்வரம், ஒலி-ஒளி, மின் விளக்குகள், வாண வேடிக்கைகள்

25,000

நல்லெண்ணெய், சூடம், சாம்பிராணி, விபூதி, குங்குமம், பழவகைகள், தேங்காய், கலயங்கள்

9,000

ஹோமத்திற்கான நெய்

2,500

புஷ்பங்கள், பூமாலைகள்

6,000

குடம், சொம்பு, தூபக்கால், மணி, அலங்கார தீபம் போன்ற பித்தளை வகைகள்

10,500

அன்னதானங்கள், சிவாச்சாரியார்கள், தங்க, உணவு சம்பாவணை

50,000

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் அறங்காவலரைத் தொடர்பு கொள்ளலாம்.

 
	வை. நாகராஜகுருக்கள், ஆலய அர்ச்சகர், 
	ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயில்,  
	கூனஞ்சேரி, 
	பாபநாசம் வட்டம், 
	தஞ்சாவூர் மாவட்டம், 
	தமிழ்நாடு, Pin : 612 301. 
		 
	Contact No. : 0435 - 2941879. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page