கத்தரிநத்தம் அ/மி ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

kaththarin^aththam srI nyAnAmbikai uDanuRai srI kALahaSthISwarar swAmy
temple (Renovation) thiruppaNi
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் திருக்கோயில், கத்தரிநத்தம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. (தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில் இருந்து 2-கி.மீ. தொலைவு)

புராண வரலாறு:

ஒரு சமயம் இறைவனுடைய சாபத்தால் பீடிக்கப்பட்ட சப்தரிஷிகளும் பல ஊர்களுக்கும் அலைந்து திரிந்து சாபவிமோசனம் பெறமுடியாமல் துயருறும் காலத்தில், இத்தலத்திற்கு வந்து இங்குள்ள காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டு சாபவிமோசனம் நீங்கப்பெற்றனர். "சப்தரிஷி நத்தம்" என்ற இத்தலம் மருவி தற்போது கத்தரிநத்தம் என்று வழங்குகின்றது. ஆயிரம் ஆண்டுகளு மேற்பட்ட பழமையான திருக்கோயிலாகும்.

சிறப்பு:

இத்திருக்கோயில் சோழர் காலத்தில் திகழ்ந்த ஒன்றாகும்; இச்சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம், நந்தி மாமன்னன் முதலாம் இராசராச சோழன் காலத்திய சிற்பப் படைப்புகளாகும். பழங்காலம் முதற்கொண்டு இத்திருக்கோயில் செங்கல் தளியாகவே இருந்து வந்துள்ளது. தற்போதுள்ள கட்டுமானம் தஞ்சாவூர் மராட்டியர் காலத்தில் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் முன்மண்டபத்தில் தஞ்சை மராட்டிய அரசர் முதலாம் துகோஜி எனும் துளஜா என்பவரின் கல்வெட்டு சாசனம் ஒன்றுள்ளது; அச்சாசனம் ராயமானிய துக்கோஜி மகாராஜா சப்தரிஷிநத்தம் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சுவாமிக்கு சர்வ மானியமாக நிலம் அளித்ததை இக்கல்வெட்டு விளக்குகின்றது. ராராமுத்திரைக் கோட்டை எல்லைக்கு மேற்கும், குளிச்சப்பட்டு எல்லைக்கு கிழக்கும், மருங்கை எல்லைக்குத் தெற்கும், குளிச்சப்பட்டு ராராமுத்திரைக் கோட்டை எல்லைக்கு வடக்கும் ஆகிய இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட சப்தரிஷிநத்தம் கிராமம் ஒன்றினை 24 அடி கோலால் அளந்து கண்ட 20 வேலி நிலத்தில் புறம்போக்கு நிலம் 6 1/4 வேலி போக மீதமுள்ள 13 3/4 வேலி நிலத்தை சப்தரிஷிநத்தம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சுவாமிக்கு சர்வமானியமாக பிரமாணம் செய்து கொடுத்தார் என்று கூறுகிறது.

திருப்பணி விபரம்:

பழமை, பெருமை போன்றவைகளால் சிறந்து விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், தற்போது திருப்பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; திருவருளால் விரைவில் திருகுடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; தாங்களும் இயன்றளவில் உதவிகள் செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற்று உய்வு பெற வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட கமிட்டி உறுப்பினரை தொடர்பு கொள்ளலாம்.

 
			R. Kaliyamoorthy, 
			Thalavapalayam, 
			Mariyammankoil Post, 
			Thanjavur Dt. 
			Tamil Nadu - 613501. 
 
			தொடர்பு : 04362 - 267384. 
				  09487029230. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page