erichy temple

எரிச்சி அ/மி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

erichy srI visAlAkshi uDanuRai srI kAsiviswanAthar swAmy temple thiruppaNi
* * * * *

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், எரிச்சி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

ஊர் சிறப்பு:

கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார் என்னும் பெரும்புலவர் புறநானூறு 54, 61, 167, 180, 197, 394 ஆகிய பாடல்களைப் பாடியவர். மதுரைக் குமரனாரின் ஊரான எறிச்சிலூரே தற்போது அறந்தாங்கி வட்டத்திலுள்ள "எறிச்சி" என்ற ஊராகும். தற்போது இவ்வூர் "எரிச்சி" என்று வழங்குகிறது.

pond (chunai) of erichy temple

கோயில் சிறப்பு:

இத்திருக்கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது; மிகவும் பழமையான திருக்கோயில் - பஞ்சபாண்டவர்கள் நிலவறை அமைத்து சிவபெருமானை வழிபாடு செய்து அருள்பெற்ற திருத்தலம். இங்குள்ள தீர்த்தம் சுனை வடிவில் அமைந்துள்ளது. இந்தச் சுனையில் நீராடி அன்னை விசாலாட்சி அம்மையை வழிபாடு செய்தால் திருமணம், மகப்பேறு உறுதியாகக் கைக்கூடும். ஆடி, தை அமாவாசைகளில் இச்சுனையில் நீராடி தாம்பூலத்துடன் தட்சனை வைத்து சுனையில் சமர்ப்பித்தால் கங்கையில் நீராடி காசியில் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்திருத்தலத்தில் சிவராத்திரி இரவு நான்கு கால பூஜைகளிலும் பங்கு பெறுவோர் நீண்ட ஆயுலும், நிறைந்த செல்வமும் பெறுவர். திருக்கார்த்திகை திருநாளில் இத்தலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் கல்வி சிறக்கும், தொழில்வளம் பெருகும் என்பது ஐதீகம்.

திருப்பணி விபரம்:

காலத்தின் தாக்கத்தால் இத்திருக்கோயில் பொழிவிழந்து காணப்பட்டதால் அடியவர் பெருமக்களால் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றன; புதிதாக இராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அதுசமயம் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து தாங்களும் தங்களின் வழித்தோன்றல்களும் அ/மி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை அ/மி ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

திருப்பணிக்கு தேவையான பொருள் கிரயம் மற்றும் செய்கூலி

 
		திருப்பணி விபரம்			  பொருள் கிரயம்(ரூபாயில்)     செய்கூலி(ரூபாயில்) 
1.	அம்பாள் கோபுர திருப்பணிக்கு 		  		  79,710.00		1,20,000.00  
2.	சுவாமி விமானத் திருப்பணிக்கு				1,09,580.00		  68,000.00 
3. 	திருக்கோயில் இராஜகோபுரம் திருப்பணிக்கு			1,74,650.00		1,95,000.00 
4.	பரிவார மூர்த்திகள், பைரவர் விமானத்திற்கு		  72,250.00		  99,000.00 
5. 	சண்டிகேஸ்வரர் விமானத் திருப்பணிக்கு			  24,700.00		  36,500.00 
6. 	தக்ஷிணாமூர்த்தி விமானத் திருப்பணிக்கு			  21,000.00		  17,000.00 
7. 	நவக்கிரக மண்டபத் திருப்பணிக்கு 				  31,400.00		  36,500.00 
8. 	அம்பாள் சன்னதி நுழைவாயில் மாடம் திருப்பணிக்கு		  15,950.00		  17,100.00 
9. 	திருக்கோயில் சுனை விநாயகர் ஆலய விமானத்  
					   திருப்பணிக்கு		  24,300.00		  36,250.00 
10. 	சுனை முகப்பு வளவு 2-க்கு				  24,650.00		  30,200.00 
11. 	திருக்கோயில் மதில் பூச்சுக்கு				  31,000.00		  26,550.00 
12. 	மதில்கோடி பூதம் 4-செட்டுக்கு				  15,000.00		  12,000.00 
							      ----------------         --------------  
							     ரூ.6,11,865.00	     ரூ.6,79,000.00 
							      ----------------         -------------- 
	 
								6,11,865.00 
								6,79,000.00 
							      --------------- 
					ஆக மொத்தம்	    ரூ.12,90,865.00 
							      --------------- 
 

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்ட திருப்பணிக் குழுவினரைத் தொடர்பு கொள்ளவும்.

 
			அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் நற்பணிமன்றம், பதிவு எண்.75/2007, 
			எரிச்சி - சிதம்பரவிடுதி, 
			அறந்தாங்கி வட்டம், 
			புதுக்கோட்டை மாவட்டம், 
			தமிழ்நாடு, Pin : 614 622. 
			 
			Ph : 04371 - 236547. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page