உ சிவமயம் ஸ்ரீ மருதீஸ்வரர் துணை

  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம்


  திருஇடையாறு, ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ மருதீஸ்வர சுவாமி ஆலய


  ஜீரணோத்தாரண அஷ்டபந்தன


  மகா கும்பாபிஷேகம்


திருச்சிற்றம்பலம்
  பாலாமிருத விநாயகர் துதி
  கரும்பொடு சூலம் அமிர்தம் அபயம் கரம் மருவி பெரும்பெயர்க் கூர்மம் பிறந்துபா லாமிரு தப்பெயர்கொள் இரும்பொழில் ஆழிடை யாற்றில் இனிதே அமர்ந் தருளும் பெருங்களி யானை முகத்தண்ணல் சேவடி பேண நன்றே.
  சுப்பிரமணியர் துதி
  மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணைபோற்றி யேவருந் துதிக்க நின்றவீராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் சேவ்வேண் மலரடி போற்றி யன்னான் சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.
  சுந்தரர் தேவாரம் பண் : கொல்லி
  முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே ஊறிவா யினநாடிய வென்றொன் டன்ஊரன் தேறுவார் சிந்தை தேறுமடஞ் சிந்தைவெள்ளே றேறுவார் எய்தமான் இடையா றிடைமருதைக் கூறுவார் வினைஎவ் விடமெய் குளிர்வாரே.
  ஸ்ரீ ஞானாம்பிகை துதி
  ஆன நற்கலை ஆய்ந்து அறியினும் ஞான மெய்ந்நிலை நண்ணிட வேண்டினோர் ஞானநாயகி நல்லடி போற்றிடின் ஊன மில்புகம் எய்துவர் உண்மையே.
திரு அருட்பா
தாவாக் - கடையாற்றினன் பரதமைக் கல்லாற்றி னீக்கும் இடையாற்றின் வாழ்நல் இயல்பே. - இராமலிங்க அடிகள்.
 • தென்பெண்ணையாறு, மலட்டாறு இரண்டு நதிகளின் தென்கரையில் மருதமரத்தை தல விருட்சமாகக் கொண்டுள்ள திரு இடையாறு எனவிளங்குவது திருமருதந்துறை தலமாகும்.
 • இத்தலத்தே பிரம்ம விஷ்ணுக்கள் பூஜை செய்து பேறுபெற்றும் சுகப் பிரம்ம ரிஷி பூஜித்து ஞானசித்தி அடைந்தும், உரோமசர், பிருகு, இந்திராணி, சப்த கன்னிகள், காமதேனு யாவரும் வழிபட்டு பெரும் பேறு பெற்றனர்.
 • மிகத்தொன்மை வாய்ந்த இத்திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு நிலவும் விய ஆண்டு ஆனித் திங்கள் 28ம் நாள் (12-07-2006) கிருஷ்ணத்துவிதியை உத்திராட நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 12.00 மணிக்குள் கன்யா லக்னத்தில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ மருதீஸ்வர சுவாமிக்கும், இராஜகோபுரம் மற்றும் ஏனைய பரிவார தேவதைகளுக்கும்
  திருக்கயிலாயப்பரம்பரை திருவாவடுதுறை ஆதினம் 23வது குருமகா சன்னி தானம்

  சீர்-வளர்-சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்

  அவர்களது மேலான தலைமையில் திருக்கயிலாயப் பரம்பரை திருவண்ணாமலை, துறையூர், விருத்தாசலம் ஸ்ரீ குமாரதேவர் ஆதீனம் 23வது குருமகா சன்னிதானம்

  சீர்-வளர்-சீர் கல்யாணசுந்தர சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள்

  முன்னிலையில்
 • அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிற படியால் மெய்யன்பர்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து தரிசித்து ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ மருதீஸ்வர சுவாமியின் திருவருள் பெற்று பேராந்தப் பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.

  28ம் நாள் (12-07-2006) புதன்கிழமை - நிகழ்ச்சி நிரல் 28ம் நாள் (12-07-2006) புதன் காலை 7.00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை தொடக்கம், ஸ்பர்சாகுதி, தத்வார்ச்சனை.28ம் நாள் (12-07-2006) புதன் காலை 10.00 மணிக்கு மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை, யாத்ராதானம்.28ம் நாள் (12-07-2006) புதன் காலை 10.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு. 28ம் நாள் (12-07-2006) புதன் காலை 11.00 மணிக்கு இராஜகோபுரம், ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ மருதீஸ்வர சுவாமி விமான ஸ்தூபி கும்பாபிஷேகம்.28ம் நாள் (12-07-2006) புதன் காலை 12.00 மணிக்குள் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ மருதீஸ்வர சுவாமி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம்.28ம் நாள் (12-07-2006) புதன் மாலை 04.00 மணிக்குமேல் மகா கும்பாபிஷேகம். 28ம் நாள் (12-07-2006) புதன் இரவு 07.30 மணிக்குமேல் திருக்கல்யாணம்.28ம் நாள் (12-07-2006) புதன் இரவு 09.30 மணிக்குமேல் சுவாமிகள் திருவலம்.

 • யாகசாலை பூஜை நாட்களில் (06-07-06 முதல் 13-07-06 வரை) சிவாகம சொற்பொழிவுகளும் தேவார திருப்புகழ் பாராயணமும் சிறந்த மேளக் கச்சேரியும் நடைபெறும்.

  நிதி உதவி செய்ய விரும்புவோர்

  M. இராமலிங்க குருக்கள்
  பரம்பரரை தர்மகர்த்தா
  ஸ்ரீ மருதீஸ்வர சுவாமி தேவஸ்தானம்
  திருக்கோவலூர் (வட்டம்)
  விழுப்புரம் (மாவட்டம்)
  தமிழ் நாடு. PIN : 607 203.
  See Also:
 • Tala puranam idaiyaaru.

  Back to thirupaNi page
  Back to Shaiva Siddhantha Home Page
  Back to Shaivam Home Page