அம்பாசமுத்திரம் அ/மி ஸ்ரீ மரகதாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ காசிபநாத சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

ambAsamudram srI marakathAmbikai samEdha srI kAsibanAtha swAmy temple thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ காசிபநாதர் திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

ஊர் சிறப்பு:

அம்பாசமுத்திரம் மிகவும் தொன்மையான தலமாகும். முற்காலத்தில் இத்தலம் பூலோக தவலோகம் என விளங்கி உள்ளது. இத்தலம் ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம் என விளங்கி உள்ளதால் காசிபநாதர் கோயில் இராஜ ராஜ சோழன் காலத்தில் நிறுவப்பட்டு அதன் பின் ஆண்ட மன்னர்களால் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே உள்ளது என அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.

கோயில் சிறப்பு:

அடைக்கலப் பொருளை மறைத்து சத்தியம் செய்த அர்ச்சகரை எரித்து ஆண்டமையால் "எரிச்சாளுடையார்" என்றும், அந்நாளில் தேவர்கள் வந்து போற்றியமையால் "திருப்போற்றீசுவரர்" என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இறைவன் திருமணக் கோலத்தை அகத்தியர் காண வாய்ப்பின்மையாலும் இத்திருக்கோயிலில் ஆகம முறையில் ஸ்ரீ மரகதாம்பிகை காசிபநாதர் திருவிழா நடத்தப் பெற்று வரும் நாளில் அவ்விழாவின் எட்டாந் திருவிழா அன்று சுவாமி தமது திருமணக் கோலமும், திருநடனக் கோலமும் கண்டு மகிழும்படி அகத்தியருக்கு அருளினார். அவ்விழா ஆண்டுதோறும் அகத்தியர் காணும் வண்ணமும் வரம் பெற்றார். அதுவே இன்றும் நடைபெற்று வருகிறது.

திருப்பணி விபரம்:

மிகவும் புராண சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தில் 46 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கோயிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய இறைவன் திருவுளப்பாங்கின் வண்ணம் முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே, இறைபணியில் தாங்களை உட்படுத்தி, திருப்பணிக்கு பொருளுதவி செய்து, ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ காசிபநாதர் சுவாமி திருவருளைப் பெற்று உய்வுற வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர், கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம்.

 
			செயல் அலுவலர், 
			அருள்மிகு காசிபநாத சுவாமி திருக்கோயில்,   
			அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் - 627 401. 
			Ph: 04634 - 253921. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page