|
Home > Renovation and Services
அகர அன்னவாசல் அ/மி ஸ்ரீ ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி - - - - - - - - -
ahara annavAsal srI AnandhavaLLi ambikA samEdha srI aruNAchalEswarar swAmy temple (Renovation) thiruppaNi * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், அகர அன்னவாசல், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
கோயில் சிறப்பு:
இத்தலம் நீர்வளம், நிலவளம் பொருந்திய நன்னாடாகும்; தக்ஷன் யாகம் செய்த காலத்தில் இவ்வூரில் அன்னம் வடித்து கொட்டியதாக புராணம் கூறுகிறது. சூரியன், கார்க்கோடகன் ஆகியோர் வழிபட்டத் திருத்தலம். ஆலயத்திற்கு அருகில் சூரிய புஷ்க்கரணி திருக்குளம் உள்ளது.
திருப்பணி விபரம்:
பழமை வாய்ந்த இந்த அகர அன்னவாசல் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், தற்போது திருப்பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; திருவருளால் விரைவில் திருகுடமுழுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாங்களும் இயன்றளவில் கைங்கர்யம் செய்து கிடைக்கரிய இச்சிவ புண்ணியத்தில் பங்குபெற வேண்டுகிறோம்.
குறிப்பு:
இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்கண்டோரைத் தொடர்பு கொள்ளலாம்.
R. கணேச சிவாச்சாரியார், - பரம்பரை அர்ச்சகர்,
G. அருணாசல சிவம், - பரம்பரை அர்ச்சகர்,
N. பாலு, - அறங்காவலர்,
அ/மி. ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்,
அகர அன்னவாசல்,
தரங்கம்பாடி வட்டம்,
நாகை மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா.
Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page
|