திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்) ஆத்மநாத ஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

Avudayarkoil temple

உ
சிவமயம்
ஓம் நமசிவாய

ஆன்மீகச் செல்வர்கள், பக்த அன்பர்களுக்கு பணிவான திருப்பணி வேண்டுகோள்.

	புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது மிகப் பழமைவாய்ந்த ஸ்தலமான 
(திருப்பெருந்துறை) ஆவுடையார் கோயில்.  ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு 
குருவாய் குருந்தமரத்தடியில் அமர்ந்து உபதேசித்து அருளிய «க்ஷத்ரம்.   “நமச்சிவாய வாழ்க” என ஆரம்பித்ததும், 
திருப்பெருந்துறை என்று சொல்லப்பட்டதும், இன்று உலகளவில் புகழப் பெறுகின்ற ஸ்ரீ மாணிக்கவாசக ஸ்வாமிகள் 
திருவாய் மலர்ந்தருளிய தெய்வப்பதிகமான திருவாசகம்  மலர்ந்ததும் இப்புனித பதியேயாகும்.

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது ஆன்றோர் வாக்கு.

	பெருமைமிகு இந்த ஸ்தலம், திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வாகிக்கப்படுகிறது.  1990ம் ஆண்டு 
இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இந்த ஆண்டு 2006 மே (சித்திரை) மாதம் மகா கும்பாபிஷேகம் 
செய்யத்தக்க வகையில் புனருத்தாரண திருப்பணிகள் செவ்வனே நடந்து கொண்டிருக்கிறது.  ஸ்ரீ ஆத்மநாதர் சன்னதியில் 
உள்ள பிரதான கதவுகளை வெள்ளியில் அமைத்தல், மகாகும்பாபிஷேக சம்பந்தமான யாகசாலை பூஜைகள், 
மண்டலாபிஷேகங்கள் உள்ளிட்ட பணிகளை ஸ்ரீ ஆதீனகர்த்தரவர்கள், பாரம்பரியமாய் பூஜா கைங்கர்யம் செய்து வரும் 
நம்பியார்கள், ஸ்தானீர்களான எங்களிடம் தந்துள்ளார்கள்.

	தாங்கள் மகா கும்பாபிஷேகத்தில் எங்களுக்கு எல்லா காரியங்களிலும் நன்கொடைகள், பொருளுதவி தந்து 
உதவிட வேண்டுகிறோம்.

	தாங்கள் உபயமளித்ததற்கு உரிய பூஜா மரியாதைகளையும் தங்கள் குடும்ப «க்ஷமத்திற்கு வேண்டிய 
சங்கல்ப அர்ச்சனைகளையும் செய்து பிரசாதம் எங்கள் பொறுப்பில் தவறாது செய்வோம்.

	பக்த அன்பர்களாகிய நீங்கள் எங்களுக்கு உதவிகள் செய்து இம் மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடக்கச் 
செய்து ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ ஆத்மநாதப் பெருமான், ஸ்ரீ மாணிக்கவாசக பெருமான் திருவருள் பெற வேணுமாய் 
கேட்டுக் கொள்கிறோம்.

	எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் எல்லோரும் எல்லா நன்மைகளும் அடைந்து சகல சௌபாக்கியங்களுடன் 
வாழப் பிரார்த்திக்கும்


ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி 
பரம்பரை நம்பியார்கள், ஸ்தானீகர்கள்

நம்பியார்ஸ்தானீகர்கள் சமாஜம்
ரிஜிஸ்டா எண். 11
திருப்பெருந்துறை - ஆவுடையார் கோயில் 
புதுக்கோட்டை மாவட்டம்.Avudayarkoyil manikkavasagar dheekshai உ சிவமயம் திருவாவடுதுறை ஆதீனம் திருப்பெருந்துறை என்ற ஆவுடையார் கோயில் ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி தேவஸ்தானம் ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி ஸ்ரீ குருந்த மூலகுரு, ஸ்ரீ மாணிக்க வாசகர் ஸஹ பரிவார புனருத்தாரண, அஷ்ட பந்தன மஹாகும்பாபிஷேக பத்திரிக்கை பக்த பெருமக்களே! பெருமைமிக்க திருப்பெருந்துறை என்று திருவாசகத்தில் ஸ்ரீ மணிவாசகப் பெருமானால் போற்றப்பட்ட ஆவுடையார் கோயில், திருப்பணிகள் செய்யப்பட்டு ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ ஆத்மநாதபெருமான், ஸ்ரீ மாணிக்கவாசகர் சஹபரிவாரங்களுக்கு, புனருத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நிகழும் விய வரும் சித்திரை மாதம் 20ந் தேதி 03 - 05 - 2006 புதன் கிழமை சஷ்டி திதியும், புனர்பூச நக்ஷ¢திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09. 00 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் திருவாவடுதுறை ஆதீனம் குரு மஹா சன்னிதானம், சீர்வளர் சீர், சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் தலைமையில் காசிமடம் திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ எஜமான் ஸ்வாமிகள் அவர்கள் முன்னிலையில் அதிவிமரிசையாக கீழே கண்டுள்ள நிகழ்ச்சி நிரல்களின்படி மகா கும்பாபிஷேகம் நடைபெறும். இம்மகா கும்பாபிஷேக விழாவில் சிவத்திரு கயிலை மாமணி அழகப்ப முதலியார், திவத்திரு. வசந்தகுமார் கற்பகம் காலேஸ், கோவை. மற்றும் தமிழ்நாட்டின் ஆதீனகர்த்தர்களும் ஆன்மீக பெரியோர்களும், அறநிலையத்துறை ஆணையர்களும், அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள். இம்மகா கும்பாபிஷேகத்தை சர்வ சாதகமாக இருந்து நடத்துபவர் ஸ்தலக்ஞர் பரம்பரையாக ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி பூஜாகைங்கர்ய ஸ்தானீகம் ஸ்ரீவித்யா உபாசகர் சாக்த ஸ்ரீ ம. ஆத்ம கணேச நம்பியார் என்ற ஆவுடையார் ஸ்ரீகா. பாலசுப்ரமண்ய நம்பியார், ஸ்ரீ சு. விஸ்வநாதன், ஆ. ரா£மகிருஷ்ணன் ஸ்தானீகம் மற்றும் எல்லா நம்பியார்களும். ஸ்ரீ வித்யா உபாசநா மந்த்ரபாராணங்கள், ஜபங்கள், கைங்கர்யம்ஸ்ரீ வித்யா ரத்தினம் - சாக்த ஸ்ரீ தினகர சாஸ்திரிகள் - கும்பகோணம் ஸ்ரீ வித்யா உபாசகர் - சாக்த ஸ்ரீ பைரவ சாஸ்திரிகள் - புதுக்கோட்டை ஸ்ரீ வித்யா உபாசகர் - சாக்த ஸ்ரீசிவக்குமார் சாஸ்திரிகள் - தஞ்சாவூர். நிகழ்ச்சி நிரல்கள் 30-04-2006 ஞாயிற்றுக் கிழமை காலை 5.00 மணி - அனுக்ஞை, சங்கல்பம், ஸ்ரீமகா பணபதி ஹோமம், ஸ்ரீநவக்ரஹ ஹோமம், ஸ்ரீமஹா ம்ருத்யுஞசய ஹோமம், ஸ்ரீமகாசுதர் சன ஹோமம். காலை 10.30 மணி - மஹா பூர்ணாகுதி. பகல் 11.00 மணி - மஹா தீபாரானை, மந்த்ரபுஷ்பம், ஆசீர்வாதம். மாலை 6.00 மணி - அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, ஆசார்ய ருத்விக்வர்ணம், கங்கணதாரணம், வாஸ்து சாந்தி, ரக்ஷ¢£ - பந்தனம், மிருத்யுங்கிரணம், அங்குரார்ப்பனம். மாலை 7.00 மணி - குபேர தனலக்ஷ¢மி அஷ்டலக்ஷ¢மி ஷோடச மஹாலக்ஷ¢மி பூஜை இரவு 8.00 மணி - கலாகர் ஷணம், யாகசாலப்ரவேசம் யாக சாலா ஹோமம் வேதிகா பூஜை இரவு 9.00 மணி - பலிதானம், மஹாபூர்ணாகுதி இரவு 9.30 மணி - ஷோட சோபசார பூஜா தீபாராதனை மந்தர புஷ்பம், ஆசீர்வாதம். 01-05-2006 திங்கட்கிழமை காலை 6.00 மணி - ஸ்ரீமகாகணபதி ஹோமம், ர«க்ஷ£க்நஹோமம் சாந்தி ஹோமம், யாக சாலா விசேஷ ஹோமம் காலை 8.00 மணி - த்வார பூஜை, யாகசாலா தோரண பூஜை ஸர்வதோ பத்ரமண்டல பூஜை பகல் 11.00 மணி - மகா பூர்ணாகுதி ஷோட சோபசார பூஜா தீபாராதனை, மந்த்ரபுஷ்பம், ஆசீர்வாதம் மாலை 6.00 மணி - ரிக்வேத சாந்தி, ஜப ஹோமங்கள், த்ரவ்ய ஹோமங்கள், யாகசாலா விசேஷ ஹோமங்கள், மகாபூர்ணாகுதி, ஷோட சோபசார பூஜா தீபாராதனை மந்த்ரபுஷ்பம் ஆசீர்வாதம். 02-05-2006 செவ்வாய்கிழமை காலை 6.00 மணி - ஸ்ரீமகா கணபதி ஹோமம், யாகசாலா விசேஷ த்ரவ்ய ஹோமம், யஜர்வேத விசேஷ ஜப ஹோமங்கள், வேதிகார்ச்சனை. பகல் 11.30 மணி - மஹா பூர்ணாகுதி, ஷோட சோபசார பூஜா, தீபாராதனை, மந்த்ரபுஷ்பம், ஆசீர்வாதம். மாலை 6.00 மணி - ஸ்ரீ மகாகணபதி பூஜை - சாமவேத மஹாமந்த்ர ஜபஹோமங்கள், யாகசாலா விசேஷ ஹோமங்கள் இரவு 8.30 மணி - மஹா பூர்ணாகுதி ஷோட சோபசார பூஜா தீபாராதனை, மந்த்ரபுஷ்பம், ஆசீர்வாதம். 03-05-2006 புதன்கிழமை காலை 5.00 மணி - ஸ்ரீ மகா கணபதி ஹோமம்த, அதர்வண வேதீய மகாமந்த்ர யாகசாலா ஹோமம், மூலமந்த்ர ஹோமம், கலா ஹோமம், ப்ரணப்ரதிஷ்டை, புனர்பூஜை. காலை 8.30 மணி - மஹா பூர்ணாகுதி, ஷோடசசோபசார பூஜா, தீபாராதனை, மந்த்ரபுஷ்பம், ஆசீர்வாதம். காலை 9.00 மணி - யாத்ராதானம், கடம் எழுந்தருளல். காலை 9.30 மணி - விமான மகா கும்பாபிஷேகம் காலை 10.00 மணி - மூர்த்தி மகா கும்பாபிஷேகம் காலை 10.30 மணி - மஹாதீபாராதனை தர்சனம், மஹாபிஷகம், அலங்காரம், மூலஸ்தானத்தில் ஷோட சோபசார பூஜா, தீபா- ராதனை, மந்த்ர பூஷ்பம், ஆசீர்வாதம். பகல் 1 மணி - அன்னதானம் அனைவருக்கும், பாரத தேசம் மற்றும் உலகமெங்கும் எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற்று சகல சௌபாக்கியங்களுடன் வாழ ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமி, ஸ்ரீ மாணிக்க வாசகர் திருவடி பணிந்து பிரார்த்திக்கின்றோம். இங்ஙனம் ஸ்ரீ யோகாம்பிகா சமேத ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி பாரம்பரிய பூஜா கைங்கர்ய பரர்கள், நம்பியார்கள், ஸ்தானீகர்கள் நம்பியார்ஸ்தானீகர்கள் சமாஜம் திருப்பெருந்துறை - ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டம்.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page