சேராம்பட்டு அ/மி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Serampattu Sri Sundareswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ சுந்தரேசுவரர் சுவாமித் திருக்கோயில், சேராம்பட்டு, செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிவநெறி ஓங்கிய மாதவம் செய்த தென்திசையில் திருஞானசம்பந்த பெருமானால் ஆண் பனைமரத்தை பெண் பனைமரமாக மாற்றி ஈங்குலை வரசெய்த அதிசயம் நிகழ்ந்ததும், தொண்டை நாட்டு பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருவோத்தூர் திருத்தலத்திற்கு (செய்யாறு) மேற்கே, ஆரணி செல்லும் வழியில் 10-கி.மீ தொலைவில் சேராம்பட்டு என்னும் இத்தலம் அமைந்துள்ளது.

தல சிறப்பு:

இக்கோயில் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொல்லப்படுகிறது; பச்சை நிறமுடைய சிவலிங்க திருமேனி.

திருப்பணி விபரம்:

சிவபெருமான் திருவருளால் கிராம பொது மக்கள் ஒன்று கூடி இறைவனுக்கு ஒரு நிலை கருவறை கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் நந்தி மண்டபம் அமைக்க திருப்பணி நடைபெற்று வருகின்றது.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ சுந்தரேசுவரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவன் கோயில் திருப்பணிகளுக்கு உதவுபவர்கள், திருக்கோயிலை கட்டியவர்களைவிட நான்கு மடங்கு சிவ புண்ணியம் பெறுவார்கள் என்பது மாதவச் சிவஞான சுவாமிகளின் திருவாக்காகும்.


	"முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய 
	நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
	தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு 
	புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்"

						- காஞ்சிப்புராணம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


Arulmighu Sundareswarar Alaya Thiruppani Gulu Tamilnad Mercantile Bank Ltd, (Tamil Nadu, India.) A/c. No. 008100710400121. IFSL Code No.TMBL 0000008.

தொடர்பு :

அ/மி ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணி குழு, 09444352848, 09941321004, 09840327444. சேராம்பட்டு.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page