அல்லியந்தல் அ/மி. ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Alliyandal Sri Marghasahayeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் சுவாமித் திருக்கோயில், அல்லியந்தல், செங்கம் வட்டம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

செய்யாற்றின் வடகரையில் அமைந்துள்ள கி.மு. 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய மிகவும் பழமையான சிவாலயம்; பர்வதமலையும் திருவண்ணாமலையும் முறையே இவ்வாலயத்திற்கு தெற்கேயும் மேற்கேயும் அமைந்து சிறப்பிக்கின்றன. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இவ்வாலயத் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்துகொண்டிருக்கின்றது.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் சுவாமியின் திருவருளைப்பெற வேண்டுகிறோம்.


	"முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய 
	நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
	தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு 
	புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்"

						- காஞ்சிப்புராணம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


தொடர்பு :

S. திருஞானசம்பந்தம், M. கண்ணப்பதாசன் மற்றும் அல்லியந்தல், அல்லியந்தல்பாளையம் கிராம பொதுமக்கள்.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page