செய்துங்கநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஸமேத
அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலி ஸ்ரீ வியாக்கிரபாதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Seithunganallur Sri Sivakami Ambal Samedha Sri Padhanjali Sri Vyakrapureeswarar Swamy temple thiruppaNi
* * * * *

அமைவிடம் :

அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலி ஸ்ரீ வியாக்கிரபாதீஸ்வரர் திருக்கோயில், செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

சிறப்பு :

செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீபதஞ்சலி - ஸ்ரீவியாக்கிரபாதீஸ்வரர் திருக்கோயில், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் ஆகிய இரு மாமுனிவர்கள் பிரதிஷ்டை செய்த மிகவும் புராதனமான பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயிலாகும்.

திருப்பணி விபரம் :

இத்திருக்கோயில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பரமேஸ்வரர் திருவருளால் திருப்பணிகள் நடைபெற உள்ளது. உட்புறம் - வெளிப்புறம், சுற்றுச்சுவர், மேற்தளம் சீரமைத்தல், முன்பக்கம் விரிவு படுத்துதல், தூண்கள் அமைத்து வெளிப்புறம் கான்கிரீட் தளம் அமைத்தல், ஆலய உட்புறம் கிரானைட் பதித்தல், மிகவும் சேதம் அடைந்த சிலைகளுக்கு பீடம் அமைத்தல், சுவாமிக்கு - அம்பாளுக்கு விமானம் கட்டுதல், கற்பகவிநாயகர் சன்னதியை புதுப்பித்தல் மற்றும் விமானம் கட்டுதல், புதிதாக கொடிமரம் அமைத்தல், திருக்கோயிலுக்கு மின்விளக்கு அமைத்தல், முன்நிலை கதவுகளை புதுப்பித்தல், தெற்குவாசல் மற்றும் கிழக்குவாசல்களுக்கு தோரண வாயில் அமைத்தல், வர்ணம் பூசுதல் மற்றும் திருக்கோயிலில் செய்ய வேண்டிய அனைத்து திருப்பணிகளும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அனுமதியுடன் பக்த கோடிகளின் நல்லாதரவுடன் "ஸ்ரீபதஞ்சலி ஸ்ரீவியாக்கிரபாதீஸ்வரர் ஆன்மீகம் மற்றும் பொது சேவை அறக்கட்டளை" சார்பாக நடைபெற உள்ளது. விரைவில் திருப்பணிகள் நிறைவுற்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஸமேத அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலி ஸ்ரீ வியாக்கிரபாதீஸ்வரர் அருள்பெறுமாறு வணங்கி வேண்டுகொள்கிறோம்.

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

 
	ஸ்ரீபதஞ்சலி ஸ்ரீவியாக்கிரபாதீஸ்வரர் 
	ஆன்மீகம் மற்றும் பொது சேவை அறக்கட்டளை, 
	பதிவு எண்.271/2010, 
	எண்.6/341-A, ரயில்வே பீடர் ரோடு, 
	செய்துங்கநல்லூர் - 628 809.
	ஸ்ரீவைகுண்டம் தாலுகா, 
	தூத்துக்குடி மாவட்டம்.

	தொடர்பு : 09750469990, 09942369777, 09894253864, 09865553956, 09443507938.
	
	(அல்லது)

	Uco Bank, Karungulam Branch; A/c. No.05190210000069.

Back to thirupaNi page
Back to Important Events Page
Back to Shaivam Home Page