உடையார்கோயில் அ/மி ஸ்ரீ தர்மவல்லி அம்பாள் சமேத அ/மி. ஸ்ரீ கரவந்தீஸ்வர சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Udaiyarkoil Sri Dharmavalli Ambal Samedha Sri Karavandheeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *	"ஆராயினும் இந்தத் தென்காசிமேவும் பொன்னாயலத்து 
	வாராததோர் குற்றம்வந்தால், அப்போதுஅங்கு வந்ததனை 
	நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன், 
	பாரார் அறியப் பணிந்தேன் பாராக்ரமபாண்டியனே".

					- தென்காசிக்கோயில் கல்வெட்டு.	"முரிந்து வீழ்ந்தன வெடித்தன உடைந்தன முதிய 
	நெரிந்தவாகிய கோபுரம் நெடுமதில் பிறவும்
	தெரிந்து முன்னையிற் சீர்பெறப் புதுக்குவோர் பண்டு 
	புரிந்து ளோர்பெறும் புண்ணியம் நான்மடங்கு உறுவர்"

						- காஞ்சிப்புராணம்.

அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ கரவந்தீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், உடையார்கோயில், பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

பழமையான திருக்கோயில்; இத்திருக்கோயிலைச் சுற்றி அகழி உள்ளது. இதற்கு திரிபுவனமாதேவிப் பேரேரி என்று பெயர். திருவிறையான்குடி என்பது இவ்வூரின் பழமையான பெயர் ஆகும். கி.பி.1014 முதல் 1042 வரை சோழநாட்டை ஆண்ட முதலாம் இராஜேந்திரன் என்ற கங்கைகொண்ட சோழ மன்னரின் கல்வெட்டுக்கள் இத்திருக்கோயிலில் உள்ளன. இதன்மூலம் இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் சீரோடும் சிறப்போடும் விளங்கியுள்ளது தெரியவருகின்றது.

பிரம்மன், இந்திரன், பூமாதேவி, மலயத்துவச அரசன், சுவரதன், வீரசோழன் முதலியோர் இவ்விறைவரை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

திருப்பணி விபரம்:

கும்பாபிஷேகம் நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிய நிலையில், இத்திருக்கோயில் ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளது. இந்நிலை கண்டு ஊர் மற்றும் அன்பர் பெருமக்கள் இத்திருக்கோயிலை புதுப்பிக்க வேண்ட, திருவருள் கூட்டுவித்து திருப்பணி தொடங்கப்பெற்று நடைபெற்று வருகின்றன.

வாராது வந்த மாமணியாக இத்திருப்பணி நமக்குக் கிடைத்திருக்கின்றது; இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல ஸ்ரீ தர்மவல்லி அம்பாள் சமேத அ/மி. ஸ்ரீ கரவந்தீஸ்வர சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகி இம்மையிலும் மறுமையிலும் பேரின்பப் பெருவாழ்வு பெற்றுய்ய வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


அ/மி. கரவந்தீசுவரர் திருக்கோயில் வழிபாட்டு மன்றம், உடையார்கோயில் Indian Bank, Ammappettai Branch. (Tamil Nadu, India.) A/c. No. 959223507 Code-01335. IFSC Code - IDIB000A096.

தொடர்பு :

அ/மி. கரவந்தீசுவரர் திருக்கோயில் வழிபாட்டு மன்றம்; உடையார்கோயில். செயலாளர் : O.N. குமார் பசும்படியார் - 09629329200. பொருளாளர் : S. கோவிந்தராஜன் - 09443847206. உடையார்கோயில்.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page