துகிலி அருள்மிகு ஸ்ரீ வேதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Thukili Sri Vethavalli Ambika Sametha Sri Vethapureeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல சிறப்பு:

நான்கு வேதங்களும் இத்தலத்தில் இறைவனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றன. வேதங்கள் இத்தலத்திலே தங்கி வழிபட்டதால் இவ்வூர் "வேதபுரம்" என்றும் இறைவன் "வேதபுரீஸ்வரர்" என்றும் இறைவி "வேதவல்லி" என்றும் தீர்த்தம் "வேதபுஷ்கரணி" என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பணி விபரம்:

பல சிறப்புகளைக் கொண்ட இத்திருக்கோயிலில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. இதைக் கண்ணுரும் - விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் அளித்து திருப்பணிகள் பூர்த்தியாகி விரைவில் கும்பாபிஷேகம் செய்திட ஒத்துழைப்புத் தந்து எல்லாம் வல்ல ஸ்ரீ வேதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவன் கோயில் திருப்பணியில் பங்குகொண்டோர் என்றும் திருக்கயிலையினின்றும் நீங்காதவராய் பேரின்பத்தினை அனுபவித்திருப்பர் என்பதை கீழ்கண்டவாறு அறியலாம்.

	"புல்லினால் வருடம்கோடி புதுமண்ணால் பத்துகோடி
	செல்லுமா ஞாலம்தண்ணில் செங்கல்லால் நூறுகோடி
	அல்லியங் கோதைபாகருக்கு ஆலயம்மடங்கள் தம்மை
	கல்லினால் புதுக்கினார்கள் கயிலைவிட்டு அகலார்தாமே."

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

	ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருப்பணி மன்றம் துகிலி
	(Sri Vedapurishwarar Thiruppani Manram, Thugili.)
	City Union Bank, Aduthurai Branch,
	S.B. A/c. No.1350382. (IFSC Code CUB-0000009)

	ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருப்பணி மன்றம், 
	எண்.241, தேவாங்கர் தெரு, 
	துகிலி. Pin - 609 804.
	தஞ்சாவூர் மாவட்டம்,
	தமிழ்நாடு, இந்தியா.

	தொடர்பு : 09443601535, 09443664569, 09443070173.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page