ரெட்டிப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத
ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Reddyppalaiyam Sri Annapoorani Ambal Samedha
Sri Utthirapatheeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரெட்டிப்பாளையம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

கர வருஷம் ஆவணி மாதம் 1ம் நாள் (18-08-2011) முதல் இக்கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, இறைவனின் திருவருள் துணைக்கொண்டு உள்ளூர் பெருமக்கள் மற்றும் இறையன்பர்களின் பெரும் முயற்சியால் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் நிதி பற்றாக்குறையினால் மற்ற திருப்பணி வேலைகள் காலதாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இதைக் கண்ணுரும் - விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் அளித்து திருப்பணிகள் பூர்த்தியாகி விரைவில் கும்பாபிஷேகம் செய்திட ஒத்துழைப்புத் தந்து எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்பாள் சமேத ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவன் கோயில் திருப்பணியில் பங்குகொண்டோர் என்றும் திருக்கயிலையினின்றும் நீங்காதவராய் பேரின்பத்தினை அனுபவித்திருப்பர் என்பதை கீழ்கண்டவாறு அறியலாம்.

	"புல்லினால் வருடம்கோடி புதுமண்ணால் பத்துகோடி
	செல்லுமா ஞாலம்தண்ணில் செங்கல்லால் நூறுகோடி
	அல்லியங் கோதைபாகருக்கு ஆலயம்மடங்கள் தம்மை
	கல்லினால் புதுக்கினார்கள் கயிலைவிட்டு அகலார்தாமே."

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

>	கிராமவாசிகள் ரெட்டிப்பாளையம்
	கும்பகோணம் வட்டம்,
	தஞ்சாவூர் மாவட்டம்,
	தமிழ்நாடு, இந்தியா.

>>	Cont. :	Mr. C. தினேஷ்	- +91-9942709755
		Mr. R. Senthilkumar - +91-9843739976
		Mr. R. Saravanan - +91-9788202588
		Mr. M. Vinothkumar - +91-9788202588


Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page