92 - புளியக்குடி அருள்மிகு ஸ்ரீ கற்பூரவல்லி உடனுறை
அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

92 - Puliyakkudi Sri Karpooravalli Udanurai
Sri Kailasanathar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், 92-புளியக்குடி, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

திருப்பணி விபரம்:

இத்திருக்கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டு, இறைவனின் திருவருள் துணைக்கொண்டு உள்ளூர் பெருமக்கள் மற்றும் இறையன்பர்களின் பெரும் முயற்சியால் நடைபெற்று வருகின்றன. இதைக் கண்ணுரும் - விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் திருப்பணி வேலைகள் தங்குதடையின்றி நடைபெற்று விரைவில் திருக்குடமுழுக்கு காணும்பொருட்டு தங்களால் இயன்ற நிதியுதவி - கட்டுமானப் பொருட்கள் அளித்து எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ கற்பூரவல்லி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

இச்"சிவன் கோயிலுக்கு ஒருவேளை வாராததோர் குற்றம் வந்துவிட்டால், அப்போது அங்கு வந்து அக்குற்றத்தை யார் நீக்குகிறார்களோ அவர்களை இந்த உலகம் அறிய நான் பணிந்து வணங்குகிறேன்" என்று பராக்கிரம பாண்டியன் தென்காசி திருக்கோயிலில் கல்வெட்டு செய்துள்ளான்.

	"ஆராயினும் இந்தத் தென்காசி மேவுபொன் ஆலயத்து
	வாராதோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
	நேராகவே ஒழித்து புரப்பார்களை நீதியுடன்
	பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே."
				- தென்காசிக் கோயில் கல்வெட்டு.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

>	கிராமவாசிகள் மற்றும் அருள்மிகு கைலாசநாதர் நற்பணி மன்றம்,
	92 - புளியக்குடி,
	பாபநாசம் வட்டம்,
	தஞ்சாவூர் மாவட்டம்,
	தமிழ்நாடு, இந்தியா.

>>	Cont. :	S. சண்முகவடிவேலு, M.A., M.Ed., (பொருளாளர்),
		எண்.88, முத்துப்பிள்ளைத்தெரு, ரயிலடி, 
		அம்மாபேட்டை - 614 402,
		பாபநாசம் வட்டம், 
		தஞ்சாவூர் மாவட்டம்.
		Mobile : 094867 42264.

>>>	Details of Account :
		Kumbakonam Central Co-op. Bank, Ammapettai Branch,
		A/c. No.12553. 

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page