கீழகொற்கை அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி அம்பாள் உடனாய அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Keezhakorkai Sri Pushpavalli Ambal Udanaya Sri Brammapureeswarar swamy temple (Renovation) Thiruppani
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில், கீழக்கொற்கை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தலச் சிறப்பு:

ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று சிவபெருமான், பிரம்மதேவனுக்கு ஞானோபதேசம் அருளிய தலம். அந்நாளில் இங்கு உபநயனம் - பிரம்ம உபதேசம் செய்வது (பூணூல் அணிவது) சிறப்பானதாகும். இத்திருக்கோயில் பிற்கால சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கற்றளி (கருங்கல் கட்டுமான கோயில்) ஆகும். மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி.1178 - 1218) திருவுருவச்சிலையும், கல்வெட்டுக்களும் இத்திருக்கோயிலில் காணப்படுகின்றன.

சோழநாட்டு வரலாற்று நாயகர்களாகிய இராஜராஜ சோழன், செம்பியன்மாதேவி, குந்தவை நாச்சியார், வந்தியத்தேவன், இராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரமசோழன் முதலானவர்கள் உலவி, அரசாட்சி செய்த இப்பகுதியில், பின்னாளில் அன்னிய தேசத்தினராலும், கால மாற்றங்களினாலும் சீர்குலைந்துபோய், தற்போது, அச்சோழப் பேரரசை நினைவூட்டும் விதமாக, வரலாறு அறிந்தோர் கண்களை கலங்க வைக்கும் நிலையில் எஞ்சி நிற்கும் பல சுவடுகளில் ஒன்றாக இத்திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலின் முந்தைய கும்பாபிஷேகம் 100 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

திருப்பணி விபரம்:

இறைவனின் திருவுளப்பாங்கின்படி, கிராம மக்கள் மற்றும் இறையன்பர்களால் கடந்த 13.11.2011ல் விமான பாலாலயம் செய்யப்பட்டு, அதன்பின் 05.02.2012ல் பஞ்ச கோபூஜையுடன் திருப்பணி துவங்கப்பட்டு, திருக்கோயிலின் பழமையும் நேர்த்தியும் மாறாமல் புதுப்பிக்கும் வண்ணம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இத்திருக்கோயில் திருப்பணி வேண்டுகோளைக் கண்ணுரும் - விருப்பமுள்ள அன்பர் பெருமக்கள் திருப்பணி வேலைகள் தங்குதடையின்றி நடைபெற்று விரைவில் திருக்குடமுழுக்கு காணும்பொருட்டு தங்களால் இயன்ற நிதியுதவி - கட்டுமானப் பொருட்கள் அளித்து எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி அம்பாள் உடனாய அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

சிவப்பணியின் பெருமை

	"ஆராயினும் இந்தத் தென்காசி மேவுபொன் ஆலயத்து
	வாராதோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
	நேராகவே ஒழித்து புரப்பார்களை நீதியுடன்
	பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே."
				- தென்காசிக் கோயில் கல்வெட்டு.

இச்"சிவன் கோயிலுக்கு ஒருவேளை வாராததோர் குற்றம் வந்துவிட்டால், அப்போது அங்கு வந்து அக்குற்றத்தை யார் நீக்குகிறார்களோ அவர்களை இந்த உலகம் அறிய நான் பணிந்து வணங்குகிறேன்" என்று பராக்கிரம பாண்டியன் தென்காசி திருக்கோயிலில் கல்வெட்டு செய்துள்ளான்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

>	பிரம்மபுரீஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை, REGD.139/2012,
	எண்.4/827, சிவன்கோயில் தெற்குதெரு,
	கீழகொற்கை,
	கும்பகோணம், - 612 401.
	தஞ்சாவூர் மாவட்டம்,
	தமிழ்நாடு, இந்தியா.

>>	Details of Bank Account :
		பிரம்மபுரீஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை,
		S.B. A/c No.004001001543248.
		IFSC : 000004.
		CUB Kumbakonam Main Personal Banking Branch.

>>>	Contacts :
		D. சந்திரசேகர் - 09159583852
		V. சுவாமிநாதன் - 09688997687
		K. சிவகுமார் - 09344302966
		S. முரளி - 09443678579
		R. ஹேமமாலினி - 09042020452
		M. உமாமகேஸ்வரி - 09488209073

>>>>	திருப்பணி ஒருங்கிணைப்பு :
		ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம், 
		எண்.22, கும்பேஸ்வரர் கீழரத வீதி, 
		கும்பகோணம் - 612 001. 
		தஞ்சாவூர் மாவட்டம்.
		தமிழ்நாடு, இந்தியா.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page