காவாந்தண்டலம் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி சமேத அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமித்
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

Kavandandalam Sri Kasivisalatshi Samedha Sri Kasiviswanathar Swamy
temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், 186, காவாந்தண்டலம், திருமாகறல் வழி, காஞ்சிபுரம் வட்டம் & மாவட்டம், அஞ்சல் எண்.631 603. தமிழ்நாடு, இந்தியா. Sri Kasivisalatshi Samedha Sri Kasiviswanathar Swamy temple, Kavandandalam, Kanchipuram Dt.

தலவரலாறு:

புண்ணியத் தலங்களுள் முக்கியமாம் காஞ்சி என்றும், பஞ்சபூதத் தலங்களுள் மண் என்றும் போற்றப்படுவதுமான காஞ்சிபுரத்திற்கு தென்கிழக்கில் 20-கி.மீ தொலைவில் செய்யாற்றங்கரையில் காவாந்தண்டலம் என்னும் இத்தலம் அமைந்துள்ளது. காசிப முனிவரால் பூஜிக்கப்பட்ட தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும். காசிபர் தலம் என்பது மருவி காவாந்தண்டலம் என்றாகியுள்ளது என்பார் சிலர்.

திருப்பணி விபரம்:

இத்திருக்கோயில் 100 ஆண்டுகளாக பூஜை இன்றியும் - சிதிலமடைந்த நிலையிலும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று, விரைவில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.

 
	திருச்சிற்றம்பலம் அறக்கட்டளை, பதிவு எண்.482/2011, 
	சு. பழனி, திருப்பணி தலைவர், 
	காவாந்தண்டலம் - 631 603. 
	திருமாகறல் வழி, 
	காஞ்சிபுரம் வட்டம் & மாவட்டம்.

	Mob : 09444778747.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page