தகட்டூர்

(Thagattur)

 
இறைவர் திருப்பெயர்		: பைரவநாதசுவாமி.  (சிவலோக நாதர்) 
இறைவியார் திருப்பெயர்		: (சிவகாமசுந்தரி) 
தல மரம்			: நாவல். 
தீர்த்தம்				:  
வழிபட்டோர்			:  
வைப்புத்தலப் பாடல்கள்		: சுந்தரர் - வீழக் காலனைக் (7-12-1). 

தல வரலாறு

  • கோயிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள பீடத்தில் பஞ்சாட்சர யந்த்ரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே 'யந்த்ரபுரி' என்ற பெயருமுண்டு. இதுவே தமிழில் (தகடு + ஊர்=) தகட்டூர் என்றழைக்கப்படுகிறது.

குறிப்பு

  • தகட்டூர் என்பது வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள தலமென்றும்; தற்போதைய தருமபுரி என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

சிறப்புக்கள்

  • இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • மூலவராக பைரவரே எழுந்தருளியுள்ளார். அவருக்கே உற்சவம் முதலிய அனைத்தும் நடைபெறுகின்றன.

  • பிராகாரத்தில் பின்புறத்தில் சிவலோக நாதரும், சிவகாம சுந்தரியும் எழுந்தருளியுள்ளனர்.

  • இங்கு பிரதான மூர்த்தி பைரவநாத சுவாமியே ஆவார்.

  • கோயில் கருவறை கல் கட்டமைப்புடையது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் 'வாய்மேடு' வந்து விசாரித்து சிறிது தூரம் வந்தால் தகட்டூரை அடையலாம்.

< PREV <
தக்களூர்
Table of Contents > NEXT >
தகடூர்