கிணார்

 
இறைவர் திருப்பெயர்		: வீரவனநாதசுவாமி. 
இறைவியார் திருப்பெயர்		: அம்பாநாயகி. 
வழிபட்டோர்			: கெளதம முனிவர், அகல்யா, பாண்டவர்கள். 
வைப்புத்தலப் பாடல்கள்		: சம்பந்தர் - ......... 

தல வரலாறு

  • தேவேந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம்.

சிறப்புக்கள்

  • இத்தலம் திருஞானசம்பந்தர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

  • மூலவர் சிவலிங்க திருமேனி; சுயம்பு மூர்த்தி.

  • சோமாஸ்கந்தர் சிற்பம் பெரிய அளவில் கருவறைச் சுவரில் அமைந்திருப்பது வியக்கும் விதத்தில் உள்ளது.

  • தேவேந்திரன் ஐராவதத்தின் மீது அமர்ந்து சாப விமோசனம் பெறும் காட்சி மூலவருகும் நந்திக்கும் நடுவில் சிலைவடிவில் உள்ளது.

  • இது பல்லவர் காலத்திய கோயிலாகும்.

  • பல்லவர், நாயக்கர் காலத்திய கல்வெட்டுக்கள் கோயிலில் உள்ளன.
அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் மாவட்டம் - மதுராந்தகத்திலிருந்து நான்கு கி. மீ. தொலைவு.

< PREV <
திருக்காரிக்கரை
Table of Contents > NEXT >
கிள்ளிகுடி