|
Home > Temples of India > thirumuRaith thalangal
கீழ்க்கோட்டூர் மணியம்பலம் / (கோட்டூர்)
இறைவர் திருப்பெயர் : மணியம்பலநாதர், அமுதலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : மணியம்பலநாயகி, அமுதாம்பிகை, மதுரவசனாம்பிகை.
தல மரம் : வன்னி.
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்.
வழிபட்டோர் : பிரமன், ஐராவதம்.
திருவிசைப்பா பாடல்கள் : கருவூர்த்தேவர் - திருவிசைப்பா; (3-வது தலம்).
தல வரலாறு
சிறப்புக்கள்
கோட்டூர் சோழநாட்டு (காவிரி)த் தென்கரைத் தலம். கோட்டூர், (1) மேலக்கோட்டூர் (2) கீழ்க்கோட்டூர் என இரு பிரிவுகளாக உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள திருக்கோயில்
திருமுறைப் பாடல் பெற்றது. கீழ்க்கோட்டூரில் உள்ள இத்திருக்கோயில் தான் திருவிசைப்பா தலம்.
இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.
ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும்
எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.
மூலவர் சிறிய அழகான மூர்த்தி.
நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன.
நவராத்திரி, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விசேஷகால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி பாதையில் "திருப்பத்தூர் பாலம்" என்னுமிடத்தைத் தாண்டி மேலும் 1-கி.மீ. சென்றால் கோட்டூர் தலத்தையடையலாம். முதலில் வருவரு
திருமுறைப்பாடல் பெற்ற ஆலயம்தான். (மேலக்கோட்டூர்) கோயிலின் முன்பு வளைவு உள்ளது; அதைத்தாண்டி சற்று உள்ளே சென்றால் கீழக்கோட்டூர் மணியம்பலம் கோயிலை
அடையலாம். வழி விசாரித்துச் செல்ல வேண்டும்.
|