|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருநெடுங்களம்

இறைவர் திருப்பெயர் : நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.
இறைவியார் திருப்பெயர் : மங்களநாயகி, ஒப்பிலா நாயகி.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
வழிபட்டோர் : அகத்தியர்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்.
தல வரலாறு
சிறப்புக்கள்
- இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது.
- மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடமைந்தது.
- நெடுங்களப் பதிகத்தில் வரும் பாடற் கருத்துக்கள் அனைத்தும் ராஜ கோபுரத்தில் முன்னும் பின்னும் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
- மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.
- இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும்
ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.
- கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
- இத்தலத்தில் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி - தஞ்சை சாலையில் வந்து துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி. மீ. சென்று நெடுங்களத்தையடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து
நகரப் பேருந்து செல்கின்றன. திருச்சி - மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.
|