|
Home > Temples of India > Padal Perra Thalangal
திருஆவடுதுறை (திருவாவடுதுறை)
இறைவர் திருப்பெயர் : 1. மாசிலாமணி ஈஸ்வரர், கோமுத்தீஸ்வரர் (மூலவர்)
2. அணைத்தெழுந்தநாயகர் (உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்.
திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தம் கொடுத்தருளுபவரும் இவரே.) 3. செம்பொன் தியாகர் (திருவிழா காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர்)
இறைவியார் திருப்பெயர் : ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குஜாம்பிகை
தல மரம் : அரசு (இது, படர்ந்துள்ளதால், படர் அரசு எனப்படுகிறது.)
தீர்த்தம் : கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்
வழிபட்டோர் : அம்பிகை, தரும தேவதை, முசுகுந்தச் சக்கரவர்த்தி, திருமூலர், போகர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( இடரினும் தளரினும்),
அப்பர்( 1. மாயிரு ஞால மெல்லாம் மலரடி, 2. மஞ்சனே மணியுமானாய்,
3. நிறைக்க வாலியள், 4. நம்பனை நால்வேதங்கரை கண்டானை,
5. திருவேயென் செல்வமே), சுந்தரர், திருமூலர் திருமந்திரம்(மூவாயிரம் பாடல்கள்),
சேந்தனார் திருவிசைப்பா
தல வரலாறு
- அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு) .
- தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில்
அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது. - தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால்,
இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்). - நந்தி தருமநந்திதேவராவார்.
- முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும்
காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்:
ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)
- திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த பதி.
- போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய பதி.
- முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளித்த பதி.
- சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.
- திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.
சிறப்புக்கள்
- சேரமான் பெருமாள் வழிபட்டத் தலம்.
- திருக் கயிலாய பரம்பரையில் சிவஞானதேசிகராய் எழுந்தருளியுள்ள ஸ்ரீலஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகளால்
நிறுவப்பெற்ற பழமையும் பெருமையும் வாய்ந்த திருமடாலயம் திகழும் பதி. - பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, நரசிங்கன்பேட்டை இரயில்நிலையத்திற்குத் தென்கிழக்கே 2கீ.மீ. தூரத்தில் உள்ளது.மயிலாடுதுறை-கும்பகோணம்
பஸ் பாதையில் இத் தலம் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பஸ் வசதி உள்ளது.
|