|
Home > Temples of India > Padal Perra Thalangal
திரு ஆனைக்கா
இறைவர் திருப்பெயர் : நீர்த்தீரள்நாதர், ஜம்புகேசுவரர்
இறைவியார் திருப்பெயர் : அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி
தல மரம் : வெண்நாவல்
தீர்த்தம் : காவிரி,இந்திரதீர்த்தம், சந்திரதீர்த்தம்.
வழிபட்டோர் : அம்பிகை, சிலந்தி,யானை.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் ( - மழையார் மிடறா மழுவாளுடையாய்,
- வானைக்காவில் வெண்மதி,
- மண்ணது வுண்டரி(கூடற்சதுக்கம்)
), அப்பர் ( - கோனைக் காவிக்,
- எத்தாயர் எத்தந்தை, ,
- முன்னானைத் தோல்போர்த்த
), சுந்தரர் (மறைகள் ஆயின நான்கும்)
தல வரலாறு
- பிரமன் திலோத்தமை மேல் காதல் கொண்ட பாவம் தீரும் பொருட்டு பூசித்த தலம்.
- ஆனை வழிபட்டதால், இது இப்பெயர் பெற்றது.
- இறைவனைப் பூசித்த சிலந்தி ஆனையேறாத பல மாடக்கோயில்கள் கட்டிய சோழமாமன்னர் கோச்செங்கட்சோழராக அருள்பெற்ற இடம்.
- ஈசன்,சித்தராக வந்து திரு நீறு அளித்து, அதனைக் கூலியாக்கி, நான்காவது பிராகார மதிற்சுவர் கட்டியதால், அது, திருநீற்றான் மதில் எனப்படுகிறது.
- சோழ மன்னன் காவிரியில் நீராடும்போது கழன்று விழுந்த ஆரத்தை, இறைவன் திருமஞ்சன நீர் குடத்தின் மூலமாக, தான் ஏற்றார்.
சிறப்புக்கள்
- மிகப்பெரிய திருக்கோயில்.
- பஞ்ச பூத தலங்களுள் இது அப்புத் தலமாகும்.
- ஆதி சங்கரர்,இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு சக்கரங்கள் செய்து, தோடாக அணிவித்தார்.
- பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், விஜய நகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் மொத்தம் 154 உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
திருச்சி நகரில் உள்ளது. திருச்சி தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலிருந்தும் பஸ் மூலமாகவும், இரயில் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. திருச்சி நகரிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
|