திருஐயாறு (திருவையாறு)


இறைவர் திருப்பெயர்	: பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன். 
இறைவியார் திருப்பெயர்	: அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி. 
தல மரம்		: வில்வம். 
தீர்த்தம்			: சூரியபுட்கரணி, காவிரி. 
வழிபட்டோர்		: திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி, சேரமான் பெருமாள், 
			  ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், அருணகிரிநாதர். 
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - கலையார் மதியோடு (1-36), பணிந்தவர் அருவினை (1-120), புலனைந்தும் பொறிகலங்கி (1-130), 
			  கோடல் கோங்கங் (2-6), திருத்திகழ் மலைச்சிறுமி (2-32); 
அப்பர் - மாதர் பிறைக்கண்ணியானை (4-3), விடகிலேன் அடிநாயேன் (4-13), கங்கையை சடையுள் (4-38), குண்டனாய்ச் சமணரோடே (4-39), தானலா துலக மில்லை (4-40), குறுவித்த வாகுற்ற (4-91), சிந்திப் பரியன (4-92), அந்திவட் டத்திங்கட் (4-99), சிந்தை வாய்தலு (5-27), சிந்தை வண்ணத்த (5-28), ஆரார் திரிபுரங்கள் (6-37), ஓசை யொலியெலா) (6-38);
சுந்தரர் - பரவும் பரிசொன் (7-77).

தல வரலாறு

  • ஐந்து ஆறுகள் சேரும் இடம் என்பதால், இப் பெயர் பெற்றது.
  • சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.) thiruvaiyaru temple
  • நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.
  • இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.
  • அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.
  • சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.
  • இத் திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.

சிறப்புக்கள்

  • சப்த ஸ்தான தலங்களுள் முதன்மையானது.
  • நந்தி தேவர் திருமண உற்சவமும், சித்திரைப் பெருவிழா உற்சவமும் இன்றும் சிறப்பாக நடைபெறுகிறது.
  • பிற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூருக்கு வடக்கே 10 கீ.மீ. தூரத்தில் உள்ளது. தஞ்சாவூர்,கும்பகோணம் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.

< PREV <
காவிரி வடகரை 50வது தலம்
திருப்பழனம்
Table of Contents > NEXT >
காவிரி வடகரை 52வது தலம்
திருநெய்தானம்