|
Home > Temples of India >
kAnychipuram thalangkaL
சுரகரேசம்
இறைவர் திருப்பெயர் : ஜ்வரஹரேசுவரர், வெப்புஎறி நாதர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் :
தீர்த்தம் : சுரகர தீர்த்தம் (வெப்புஎறி குளம்.)
வழிபட்டோர் :
தல வரலாறு
- இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
- சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கோயில்.
- கஜப்பிரஷ்ட வடிவமானது கோயிலமைப்பு.
-
மூர்த்தி - ஜ்வரஹரேசுவரர்; இது சிவமூர்த்தங்கள் அறுபத்து நான்கனுள் ஒன்றாகும். இம்மூர்த்தி மூன்றுத் திருவடிகளைக் கொண்டவர்; ஆனால் இக்கோயிலில் இவர் சிவலிங்க வடிவமாக உள்ளார்.
- தேவர்களுக்கு உண்டான வெப்பு - சுரநோயை தீர்த்தருளியமையினால் இறைவன் ஜ்வரஹரேஸ்வரர் என திருநாமம் பெற்றார்.
- உரநோய், உடல்வெப்பம் முதலிய நோய்கள் நீங்கவல்ல சிறப்பு தலமாக உள்ளது.
- சுராக்கன் என்னும் அரக்கனை அழித்த இடம் இதுவேயாகும்.
-
இக்கோயில் மூன்று கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை முறையே - இக்கோயில் "சுரவட்டாரமுடைய நாயனார் கோயில்" என்றும், "தறிகளுக்கு வரி தானமாகத் தரப்பட்ட" செய்தியையும், "விஷார் என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தரவேலர் என்பர் கோயிலுக்கு நிலதானம்" செய்ததையும், "இக்கோயிலை மேற்பார்வையிடும் உரிமையை அழகிய திருச்சிற்றம்பலமுடையார் என்பவருக்கு" தந்ததையும் குறிக்கின்றது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
காஞ்சிபுரம் - பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் இக்கோயில் உள்ளது.
|