logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருக்கடம்பநாத புராணம்

திருவாவடுதுறை அம்பலவான தேசிகர் அருளிச் செய்த

(Thirukkadampanatha Puranam)

காப்பு
சித்தி விநாயகர் துதி

விருத்தம்
பொருளுஞ் சித்தியும் போகமும் யோகமுந்
தெருளுஞ் சித்தித் திடமலத் தெவ்வினான்
மருளுஞ் சித்திய மானனென் பார்க்கெலா
மருளுஞ் சித்திநல் லானையைப் போற்றுவாம்.            1  

பாயிரம்
மங்கள வாழ்த்து
ஆனினம் வாழ்க வேத மந்தண ரரசு வாழ்க
வானின்மும் மாரி பெய்க வளர்கநற் றருமஞ் செல்வந்
தேனிறைக் கடம்புந் தேவி யாவுடைத் திருவும் வாழ்க
ஞானநா யகன்க டம்ப னாதனும் வாழ்க மாதோ.            2

நூற்பயன்
உம்பர்புகழ் திருகடம்ப நாத னெங்கோ
னுண்மையருட் சரிதமிதை யுவந்து கேட்போ
ரிம்பரிடை யிருநிதியுஞ் சுகமு மேவி
யினியதிரு மகப்பெறுவர் பிணிவந் தெய்தார்
வெம்பகைகண் முதலான துயர நீங்கி 
மேதினியில் வாந்துமிக விண்பா லெய்தித் 
தம்பெருமா னாகியசங் கரன்றா ணீழற்
சச்சிதா நந்தபர முத்தி சார்வார்.                3

முதலாம் அத்தியாயம்


கடவுள் வாழ்த்து

திருக்கடம்ப நாதர் துதி

விருத்தம்

சீர்கொண்ட விருசரணும் வரதமழு மானபயந் திருக்கை நான்குங்
கார்கொண்ட மணிமிடறுஞ் சின்மயமா மலர்முகமுங் கருணை நோக்கு  
நீர்கொண்ட சடைமுடியு மாவுடைத்தா யொருபாலு நிறைபூங் கொன்றைத்
தார்கொண்ட வுருக்கொண்ட கடம்பவனத் தனிப்பொருளைச் சார்ந்து வாழ்வாம்.        1

ஆவுடை  நாயகியார்  துதி 

பூங்கமல  மலர்ப்பதமும்  புனைமணிமே  கலையுடையும் பொருவி நான்கு
தேங்கமல  மலர்க்கரமுஞ் சிற்றிடையுந் திருநயனச்  சிறப்புஞ் செம்பொற்
கோங்குமலர் முகையனைய கனதனமுங் குளிர்ந்தமதி முகமுஞ் கொண்டேன்
பாங்கமலன் றன்ணோடுவா ழாவுடைநா யகியிருதாள் பற்றி வாழ்வாம்.            2

சபாநாயகர் துதி           

(வேறு)

உறுதி யாகிய சூக்குமந் தூலமென் றுரைக்குங் 
குறைவின் மூலமந் திரத்தையே திருவுருக் கொண்டு 
மறுவி லாமணி மன்றுணின் றிருவர்வாழ்த் தெடுப்பப் 
பிறவி நோய்கெட நடம்புரி பிரானடி பணிவாம்.                        3

சிவகாமியம்மையார் துதி 

வளைத்த தெண்டிரை யுடுத்தபா ரிடத்தருண் மகற்கா 
வளித்த தாய்முனம் புரிதொழின் மீட்டுமாற் றுதல்போற் 
றளித்த வாருயிர் பொருட்டரு ணடந்தனிக் காணுத் 
திளைத்தெக் காலமுங் கண்டெரு டேவிதா டொழுவாம்.                    4

விக்கினேச்சுரர் துதி
உந்து கார்கன்னத் துகுசல மிருபுறத் துறலா 
லிந்தி ரைக்கிறை யுமைவல மிடம்பெற விருந்த 
தந்தை போல்வளர் தந்திதாட் டாமரைத் தமியேன் 
சிந்தை கண்சிர மீதினுஞ் சிரந்துசேர்ந் தனவே .                        5

குமாரக் கடவுளின் துதி
(வேறு)
பொரு பெருஞ் சூரடும் போத கன்றவோ 
ரிருவரை யிடந்தவாள் வலங்கை யேந்தலால் 
குருபர னிருவினை குமைத்தல் காட்டிய 
முருகனைக் குமரனை முன்னு வாமரோ.                        6

இதுவுமது
(வேறு)
பன்னிரு விழியு மார்பும்  பாணியும் பிறைக்கு நேராம் 
பன்னிரு தரைப்பண் டுண்ட படைகளும் பதமுங் காணப் 
பன்னிரு மலனே யாறு பங்கய முகனே வின்மேற் 
பன்னிரு பருக்கும் மேலாம் பதந்தருங் குகனே போற்றி.                    7

வீரபத்திரர் துதி 
(வேறு)
கோரபத் திரனே ருண்கட் கொற்றவை கணவ மேணாட் 
சாரபத் திரமெய்ச் சார்ந்தாய் கடம்பமா நகரிற் றங்குந்
தீரபத் திரண்டுகோடி பிழையினைச் செயினுந் தீர்த்தாள்
வீரபத் திரனே தக்கன் வேள்வியட் டவனே போற்றி.                    8

கால வயிரவர் துதி 
(வேறு)
கயிரவ நாண்மலர்க் கவின்க ணார்மயல் 
செயிரவ நாடொறு மியற்றி யேதிரி 
யுயிரவ ணானென வொறாது காத்தருள் 
வயிரவ நாதனை வணங்கி வாழ்த்துவாம்.                        9

நந்திகேஸ்வார் துதி .
(வேறு) 
சாத்திரம் படைத்த ஞான தற்பர னுரைத்த வேத 
சூத்திரம் படைத்த வேள்வித் தோன்றலை யயனை மாலைக்
காத்திரம் படைத்த மோலிக் கதிர்மணிப் பிதிரத் தாக்கும் 
வேத்திரம் படைத்த செங்கை விமலனை மேவி வாழ்வாம்.                    10

திருஞான சம்பந்தர் துதி 
(வேறு)
பொன்பூத்த கிண்கிணிச்செஞ் சீரடியும் யோகவுடையப் பொலிவும் வேத
மின்பூத்த முன்னூலும் வெண்ணீறுந் திகழ்மார்பும் விரிபொற்றாள 
முன்பூத்த திருக்கரமு மிணைவிழிவுங் குருநகையு முதல்வன் பான்மெய் 
யன்பூற்றுங் கனிவாயும் பெற்றமழ விளங்களிற்றை யண்மி வாழ்வாம் .   (11)

திருநாவுக்கரசு துதி
ஞானந்தங் கருணீருண் டமண்பாழி யிடித்துவினை கருத்தெஞ் ஞான்று 
மீனந்தங் குலகாசைக் கடுங்கோடை யிரிந்தோட  வெம்மான் சைவத் 
தானந்தங்கருட்செல்வெந் தழைத்தோங்கத் தாண்டகச்சீர்ப் பதிக மென்னு 
மானந்தம் பொழிமுகிலை யகமலரத் தொழுதுவினை யகன்று வாழ்வாம்.(12)

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி 
(வேறு)
பழுதறத்  துறந்து ளோர்க்கே பரமருள் பானைப் பாவாற் 
றோழுதொரு பரவை தன்பாற் றூதிடைச் செலுத்தித்
மழவினை முதலை வாயின் வரவழைத் தந்த ணாள் [தூயோன்
னழுகை தீர்த் தருளு மெங்கோ னடியவர்க் கடிமை  செய்வோம்.    13

மாணிக்கவாசகர் துதி 
(வேறு) 
திருவாத வூரனைமெய்ப் பெருந்துறைசேர் சிவஞானக் கடலிற் றேன்றி 
யொருவாவென் னிருணீக்கிப் பதிப்பொருளைக் காட்டியுறு புத்தன் றீய 
தருவாயம் புயமூட மூகைவா யாம்பறழைத் தலர ஞானப் 
பெருவான நிறைமதியைத் தொழப் பெற்றேன் சிவயோகந் தரப்பெற் றேனே      

அறுபத்து மூவர் துதி 
இறவாத பேரின்ப முறுவார்க டுணைஞாலத் திருவாறாக 
வறவாண னருளரச சரலிங்க வுருவன்றி யறியாராகி 
முறையாகப் பாலாட்டிக் கனியூட்டி வினைவீட்டி முத்திவீடே 
பெறுவார்களுடணாக வறுபத்து மூவரையும் பேணிவாழ்வாம்.       15

சிவனேசத் திருக்கூட்டத் துதி
(வேறு)
மறந்தேனும் பொறிவழிதன் மனம்புகுத லறியாத வாழ்க்கை யோராய்
அறஞ்சேருந் திருநீறாஞ் சாதனமும் பொருளாக் கொண்டாசு தீர்ந்தே
சிறந்தோங்கு மஞ்செழுத்து நெஞ்சழுத்திச் சிவானந்தச் செல்வ ரேயாய் 
நிறைந்தோங்கு திருத்தொண்டர் திருக்கூட்டம் நீடூழி நிலவ மாதொ.      16

நமச்சிவாய குருமூர்த்தி துதி 
(வேறு) 
புடவிமிசை யறுசமயப் புறவிருளு மெனைத்தொடருள் ளிருளு நீங்க 
மிடியகல நாற்பதமு மத்துவிதப் பேரின்பும் விளங்கித் தோன்றத் 
திடமுறுநன் மெய்கண்ட சந்ததியுஞ் சிவஞானத் திருவு மோங்கத் 
தடமலர்ப்பூம் பொழிற்றுறைசை வருநமச்சி வாயகுரு சரணம் போற்றி.      17

(உபதேச குரு)
சுப்பிரமணிய குரு ஸ்வாமி துதி 
(வேறு) 
அறிவு முதலா வீரைந்து மமையாவிடத்து முடணாகி 
யறிவு முதலா யவையருளி யவற்றாலியற்றுஞ் சிலகரும 
மறிவு முதலா வீரைந்துக் காக்கி யடித்தா மரைச்சேர்த்தென் 
னறிவு தருசுப் பிரமணிய குருமாமணிக ளடிபோற்றி.                               18
அவையடக்கம் 
(வேறு) 
சீத நீர்முகில் வாய்ப்படு முவரியுந் திசைவான் 
மேதி னிக்கமும் தாதலின் விழுத்தகு சான்றோர் 
கோதி லாவவை புகுந்தருள் கொழித்திடுங் கடம்பி 
ணாத ணார்க்கினிதாவ நலமிலென் புன்சொல்.           19

புராண மெய்ம்மை 
(வேறு)
திருக் கடம்பமா நகர்ப்புக ழருளிணாற் சிறியேன் 
உரைத்த தவ்வரு ளுடையவர்க் கினிதுமா சொழியார்க் 
கரத்தி யாவதென் னனைவரும் விரும்பிய வான்பால் 
விரித்த பித்துளார் நாவினிற் கைத்திடு மிகைபோல் .      20

புராணஞ் செய்ததற்குக் காரணம் 
(வேறு) 
செய்வாய்ப் பசுங்கட் கருங்கூந்தற் றிங்கண் முகத்தார் செறிவீதி 
யெவ்வா னவருந் தொழுதேத்து மெழிலார் கடம்ப நகர்ப்பெரும்மை
யவ்வான் மதியஞ் சடைகணிந்த வமல னடியார் தருகவெனு 
மெய்வாய் மொழியா லுரைக்கின்றேன் இறவா வீடு தருமெனவே.         21

புராண வரலாறும் ஆக்கியோன் பெயரும் 
(வேறு) 
காந்த னூலெனும்பாற் கடலைனுண் ணுணர்வாங் கவின்றமந் தத்திணாற் கடைய 
வேந்துசீர்க் கடம்ப நகர்ப்புக ழமுத மெடுத்தற வோர்செவி வாயான் 
மாந்தநற் றமிழ்ப்பா வெனுங் பொலங் கலத்தின் மாண்புற வமைத்தருத் திணாற்
றேந்துணர் பொழிற்சூ ழாவடு துறையிற் சிறக்குமீ சாணதே சிகனே.         22

ஆக காப்பு உள்பட திருவிருத்தம்    (25)
பாயிரம் முற்றிற்று.

இரண்டாவது 
புராண வரலாறு உரைத்த அத்தியாயம் 

திருச்சிற்றம்பலம் 
ஸ்ரீ கடமபநாதார் துதி 

விருத்தம் 
பாச நீங்கிடப் படைத்தலும் வினைப்பயன் பருகி 
யாசு நீங்கிட வளிப்பதும் பிறந்திறந் தலையு 
மாசு நீங்கிட வழித்து மற் றுயிர்களை வளர்த்து 
நேச நீங்கிடா  தருள்கடம் பிறைவனை நினைவாம்.     (1)

முந்தொர் காலையிற் காஞ்சியின் * முண்டக முதல்வன் 
வந்து நோற்புழிச் சவுனக ராதியோர் வணங்கி 
யெந்தை யாந்தவ மியற்றவோ ரிடமருள் கென்னப் 
புந்தி யாற்குசை † நேமியோன் றியற்றினன் புகல்வான்.       (2) 

உணர்ந்த மாதவத் தலைவர்கா ளுருட்டுமித் † திகிரி 
யிணங்கு கங்கையந் தடங்கரை யெய்துமவ் விடத்தே 
‡ யணங்கு நீங்கருட் டவம்புரி மின்களென் றருளிக் 
குணங்கோ ணான்முக னுருட்டினன் சுருட்டுபூங் குசையே.      (3)

*தாமரை      † சக்கரம்        ‡துன்பம் 

2-வது புராணவரலாறு உரைத்த அத்தியாயம் 

புரையி லாதவெப் பொருள்களும்ந் தருதவம் புரிவான் 
பிரம * னூக்கிய நேமியும் பெருகுவா னதியின் 
கரையி னோரிடை யவிழ்ந்ததவ் விருந்தவர் களிப்பத்
தரையி லவ்வன நைமிசா ரணியமாய்த் தழைக்கும்.                       (4)

கொன்றை யார்சிரத் தவிர்மதி குளிர்ந்தவா னதியும் 
துன்று காட்சியின் மகத்தழ லேந்திய தொடர்பின் 
வென்ற மாதவ ருடன்வட நீழன்மே வுதலின் 
மன்று ளாடிய வரதணாம் நைமிச வனமே.                           (5)

ஆரந் தேக்ககி † றாடிம ‡ மிறலியா ரமுமந் 
தாரங் கூவிளம் வெள்ளிலால் சண்பகங் § கன்னி 
காரங் கொன்றைதேங் காசினி பாடலங் கமுது 
நாரத் தம்முதற் றருவது நைமிசா ரணியம்.                              (6)

அரிய மாதவர் வேள்வியி லவியுண மகவான் 
கரிய மாலய ணொருங்குவந் திருந்தெனக் கவினு
மருவு லாவிய ¶ தமாலமும் பூவையு மலர்ந்தாங் 
குரிய கோங்குநின் றேங்குசீர் நைமிச புறவம்.                           (7)

வழுவை கேசரி சிம்புள்புள் ளிறையரா மஞ்ஞை 
யுழுவை யானரி யாளியென் குழைநெடுங் கழுத்தன் 
தழுவு தம்மினப் பகையொரீச் சார்தலிற் றவர்போன் 
றழகு செய்வது நைமிச மானகாந் தாரம்.                                     (8) 

மறையி னோதையு மந்திரத் தமரமுஞ் சீடர் 
முறையி நூல்பயி லரவமு மாகம முழங்குங் 
குறைவில் வேள்வியங் கொழுங்கன லோசையுங் குளிர்வன் 
டறையு மார்ப்புமங் கறாதது நைமிச டவியே.                                 (9)

*செலுத்திய      †தாதுமாதுனை        ‡மருது.    வெள்ளில் – விளா 
§கோங்கு .    ஆசினி- பலா          ¶பச்சிலைமரம்.

புண்ட ரஞ்செறி நெற்றியுஞ் சடைமுடிப் பொலிவுந் 
தண்டொ டுங்குசை கமண்டலந் தாங்குதிண் கரமும் 
வெண்டி ருப்பொடி னேனியும் விழிமணி யணியாக் 
கொண்ட மேனியும் படைத்தவ ரிருப்பதக் கொழுங்கான்.                   (10)

எழில்கொ ளிவ்வனத் திருந்துவா ழருந்தவ ரினிதா 
மழலை மென்மொழி மலைமகள் கணவனை மனத்தாற் 
றழுவி யாகமொன் றியற்றினர் சச்சிதா நந்தம் 
விழையு  நெஞ்சின ராகிய மெய்யுணர் வுடையோர்.                              (11)

சற்ச னங்களைப் புரத்திலிற் * சத்திரம் பூசை 
நிச்ச யம்பெற நிகழ்த்தலி னீடறி வனைத்து 
மிச்ச கத்தறி வித்தலா * லெச்சமா மிதுவே 
யச்சு தன்வடி வதனிறை யைம்முகப் பகவன்.                                           (12)

என்றி யாவையு மெடுத்துரைத் திருவினைக் குறும்பு 
வென்ற மாதவர் சிவனடி மேவுவான் வேள்வி 
யொன்றி யற்றியங் குறைந்திடுங் காலையி லுணர்வாற் 
சென்று மேம்படு சூதனவ் வனத்திடைச் சேர்ந்தான்.                                  (13)

(வேறு)
† நிலவு நிலவு பலகோடி நிறைந்து சிறந்து நடந்தென்ன 
விலகு ‡ மிலகு மாமுதலெண் சித்தி சித்தித் திடந்தருவெண்
குலவு § குலவெண்பொடியணிந்து கோதில் கண்டி கண்டமணிந் 
துலக ¶ வுலகர் தொழவரலு முறுவ ரெவரு மெதிருவார்.                             (14)

∹ இது முதன் மூன்றும் குளகம் __;

ஸனகன் ஸனந்தன் துருவாஸன் சமதக் கினிவை சம் 
பாய, னனக னனந்தன் குமுதாக்க ணாபத் தம்பன் பிருங்கி 
யுப, மனிய னகத்யன் சங்கன்ம தங்கன் மார்க்கண் டன்காசி, 
பனிரை வதன்கண் வன்வசிட்டன் பரத்து வாசன் கெளத மனே.                  (15)

* வேள்வி       †பிரகாசிக்கும்                 ‡இலகுமா 
§சிறந்த          ¶மேன்மக்கள் 

வேதா ரணியன் மாண்டவியன் பிருகு விபாண்டன் 
வான்மீகன், சாதா தபன்முற் கலன்கும்ப சாலனிடப யோகி 
முனி, போதா யனணா ரதன்சுப்ர ணாசி கேதன் புதன் 
கபிலன், மாதே சனக ணாசிமுனி வாம தேவன் சதா நந்தன்.                  (16)

என்னு மிவர்சென் றுவகையுட னெய்து முனிவற் 
காதனமீந், துன்னு முறைப்பாத் தியமாகி யுதவிப் போற்றி 
யுருங்காலை,* துன்னு வினைத்தற் போதமுனி சூத முனியுஞ் 
சிவனடியீர், பன்னு மகமெப் பயன் வேண்டிப் புரிந்தீ ரென்ன வவர்பகர்வார்.   (17)

இகமும் பரமும் பரமசிவன்றா ளினைக்கண் டேத்திப் 
பெறும் வீடும், மகமே யுதவு மெனயாகம் வகுத்தே மென்ன 
வருந்தவர்கோன், மிகுமவ் வேள்வி யிகபரமுங் கொடுக்கும் 
வீடு விரைந்துதவா, புனகல் வினையான் மனமாசு போக்கும் வீடு பெறலரிதே. (18)

எனவாய் மலர்ந்த பெருந்தவர்கோ னினையா ரடிகண் 
முடிசூடி, மனவா சகமுங் கடந்தசிவ னருளால் வந்தீர் மறை 
நான்குங், கனவா கமமு மூவா † மூவாறு கதையுங் கரிசிரித் 
‡ தோர், முனிவா விரைந்து முத்திபெறு முறைகூறு கெனத்தவன் மொழிவான்.  (19)

(வேறு)
வீடுபே றெளிதிற் கூடு முபாயநீர் வினைவுந் தன்மை 
நீடுநீ ருலகிற் கெல்லாம் நிகழ்த்துப கார மேயாந் 
தேடுமவ் வுபாயம் பல்வே றவற்றுளுஞ் சிறந்து தோன்றும் 
பீடுசேர் வழிக ளீரைந் தவற்றையும் பேசக் கேண்மின்.                                       (20)

*இருவினைகளை  யடையச் செய்யிம் ஜீவபாவத்தை யறுத்தசூதன்.
†பதினெண் புராணம்.    ‡ஓர்== உணர்ந்த, 

∹ இது முதன் மூன்றும் குளகம் ;__
சிவனருட் டலத்தின் மேவல் றீர்த்தநீ ராட னித்தஞ்
சிவனடி யார்கள் சேவை யவர்க்கனந் திருந்த வீதல் 
சிவனடி யார்க ளேவல் திருவுளங் களிப்பச் செய்தல் 
சிவனடி யார்க ளுண்ட பரிகல சேடங் கொள்ளல்.                     (21)

கண்டிகை திருவெண் ணீறு கலந்தமெய் யடியார் வாரிக் 
கொண்டிடத் தனங்க ளீதல் கூற்றுதைத் தவனை யன்பால் 
வண்டுசூழ் மலரிற் போற்றன் மழவிடை யவன்றா ளுன்ன 
லெண்டெரு சைவ நூலி னியல்புமெய் யுணர்ந்து போற்றல்.      (22)

என்னுமீ ரைந்தி னுள்ளுஞ் சிவதலத் திருக்கும் 
பேறே, நின்மல வீடு சேர்க்கு மாயினு நிலத்தின் மாக்கள், 
கன்மபா கத்துக் கீடா யிவைகளிற் கருத்து நேரும், பின்ன 
மன் றென்றான் சூதன் பின்னரும் பெரியோர் கேட்பார்.              (23)

(வேறு) 
சைவ தலத்தி லுறைவதுவே வீடு தருமேற் சதுமறையிற் 
றெய்வ நிறையு மாகமத்துஞ் செப்புந் தருமம் வீண்செயலோ 
பொய்கொல் லோவெம் புந்திகொளப் புகல்வா யென்ன மாதவர்க
ளையநீங்க வருட்சூதன் வினவு பொருளை யறிவு றுப்பான்.    (24)

அறிய வறிவு வெளிப்படுப்ப தாற்ற வினிதே யாகமமு 
மறையு †மறையும் பலசெயலும் வாய்மை யேமற் றவையாவும் 
பிறபா லியற்றிற் பரம்பரையாய் வீடு பேறு தரும் பெம்மா 
னுறையும் பதியி ‡னுஞற்றுனருக் குதவுஞ் சித்தி யுடன் முத்தி.         (25)

† கூறுகின்ற.    ‡ செய்பவருக்கு.

இவ்வா றவ்வா னவர்மேணா ளிறவா முத்தி யெளிதுறுவான்
தவ்வா வொளிசேர் திருக்கயிலை சார்ந்து நாதன்றனைக் கேழ்ப்பத்
*தெவ்வானவரு ரெரித்தபிரான் றெரிந்தெம் பதியி லுறைவதுபோல்
மெய்வாழ் வளிக்கும் விரைந்தென்னத் திருவாய் மலர்ந்து விரிந்துரைத்தன்.    (26)
*சத்துருக்களின் முட்புரங்கள்

அதணா லவனி தலமீதி லரணார் பதியி லுரைவதுவே 
மதமா றிரண்டுக் கப்புறமாய் வளரும் வீடு பேறுதவும் 
*கதமா றியநற் றவமுனிவீ ரென்று கருணைத் திருக்காந்தத்
திதமார் கடம்ப நகர்ப்பெருமை யெல்லாஞ் சிவன்றா ணினைந்துரைப்பான்.    (27)

* கோபந்தனிந்த.

பதிகம் 
∹இதுமுதல் மூன்றும் குளகம்:-

அழகார் கடம்ப நகர்த்தீர்த்த மூர்த்தீ கந்த ராஞ்சிரம 
மொழியீ ரைந்து பெயருடனென் பலராங் கதையு முன்னால்வர்
தொழுதாங் கடைந்து நோற்றமையுந் துரிசு தீர்த்தங் கிருபறவை
யெழியார் வீடு பெற்றமையு†மியல்கா சிபர்பூ சித்தமையும்.        (28)

† நல்லொழுக்கமுள்ள.

இருதா னவரைக் குகன்படுத்த வியல்பு மரனை யவன் பூசை
புரிநீர் மையுஞ்சங் கரித்தவஞ்செய் ‡பொற்பு மவளை யிறைமணஞ்செய்
தொருவா வின்பந் தந்ததுவு மொருவே தியன்சேர் கன்னியுடன்
திருவா ரருள்வீ டெய்தியதுந் திருமா கரலீச் சுரன்சிறப்பும்.    (29)

‡ அழகு

(கவிக்கூற்று)
அன்னாட் சூத மாதவர்கோ னறவோர்க் குறைத்தான் வடமொழியில்
§நன்னா வலர்கோன் றமிழ்க்கிரங்கி நயன மளித்த நாதனருண்
மன்னா டுறுமா வளர்கடம்ப வரத னருளா லதைத்தமிழா
லின்னா ளென்னாப் பெற்றபய னேயத் தெரிந்த வாறுரைப்பாம்.    (30)

§ சுந்தர மூர்த்திகள். 

இரண்டாவது 
புராண வரலாறுரைத்த அத்தியாயம் முற்றிற்று. 

(ஆக திருவிருத்தம் .        55)

மூன்றாவது 
தலவிசேடமுரைத்த அத்தியாயம் 

ஸ்ரீ கடம்பநாதர் துதி. 

நிலமாதி யாறாறுக் கப்பா லாகி நிர்க்குணமா யேகமாய்
நித்த மாகி, மலமாதி யகன்றவரு ளறிவா நந்த வாரிதியா 
யாருயிராய்ப் பேரா வின்ப, நலமாகி யாவுடைநா யகிபா 
கத் திருக்கடம்பிற் றங்கி வாழுந் தனிமுதலைத் தொழுது 
தலப்பெறுமை சொல்வாம்.                                                              (1)

(வேறு) 
 அருட்கயிலை கோகரணந் திருவளர்கே தாரம் 
அவந்தி திருப் பருப்பதமு மந்தரமே மாயா 
திருத்தில்லை வடமுல்லை மதுரை *குட மூக்குச் 
† சேரைதிரு வையாறு கலியாணச் சிகர 
முரைத்ததிருக் காளத்தி யருணகிரி ‡ முதுகுன் 
றுயர்காசி காஞ்சிதிருக் கடம்பவன மென்னாப் 
பொருத்தமுறு நாலைந்து திருப்பதியு முத்தி 
பொருந்தினவர்க் கருளுமிது § மந்தணமெப் பொருட்கும்.                     (2)

*கும்பகோணம்   †திருச்செந்தூர்   ‡ விருத்தாசலம்  §இரகசியம்.

சொன்னவையிற் பொன்மன்றங் கயிலாயங் காசி 
தூயபுகழ்க் காஞ்சிதிருக் கடம்பவன மைந்து 
நின்மலபஞ் சாக்கரமாம் மற்றுமெழு கோடி 
நீடுமனுப் பிர * தளிக ளாகிநிலை பெறுமாங் 
கின்னவையிற் றிருக்காஞ்சி திருக்கடம்ப வனமென் 
றிருதலமு மைந்தெழுத்தி னீரெழுத்தே நேரா 
யன்னபுரு டற்கிருக ணாகியுயிர்க் கெலலா 
மருவினையால் வருபவநோ யகற்றியரு டருமே.                                   (3)

(வேறு) 
எவ்விடமும் பூரணமாய்ச் சிவனிற் பானே 
லிப்பதிக ளதிகமெவ ணென்னின் † முந்நீ 
ரொவ்வொருபா னீரோட்ட முறுத லேபோன் 
றுவந்துசிவ னுறைதலினான் மேலா மன்றித் 
தெய்வநகர் நான்குவிதந் துவந்து வஞ்சீர் 
சிறக்குமிகு காமிகமிச் சிரத்தி னொடுந் 
தவ்வறுதை சதமாக விவற்றி னுள்ளுந் 
தைசதமூ விருசமய முதற்குந் தானம்.                                               (4) 

 தங்குதிரு மூர்த்திபிலம் பீட மூன்றுந்
தனித்தனியு மூன்றிரண்டும் விரவிச் சார்ந்துந்
தங்குதலிற் றைசதமாந் தலமும் பார்மேற்
றழைத்ததிரு மூவிதமா யிவற்றிற் காசி 
தங்குபில மூர்த்தியது காஞ்சி மூன்றுஞ் 
சார்தலினு மேலாகுஞ் சத்தி பீடம் 
தங்குதலின் மூன்றுமுடைக் கடம்பர் கோயிற் 
சத்திசிவ தலமெனுவுஞ் சாற்று நூல்கள்.                             (5)

*கோயில்    †கடல் 

புகழ்ந்த விப்பதி யையிரு பெயருடன் பொருந்தித் 
திகழ்ந்த தந்நக ராற்சிறப் பெய்திய நாடும் 
பகர்ந்த நாட்டிலத் தலத்தினுக் கெல்லையும் பகர்வே 
னுகந்து கேழ்க்கெனச் சூதமா தவனெடுத் துரைப்பான்.      (6)

பொன்மை நீடுநற் றுகளலாற்  பிற* துகள் பொருந்தாத் 
தன்மை நீடுநல் லறம்பயில் குடிபல தழைத்து 
நன்மை நீடுபொன் மாளிகை நகர்பல வுடைத்தாய்த் 
தொன்மை நீடிய வளத்தது தொண்டநன் னாடு.                  (7)

பிறக்கு நானிலத் துயிர்க்கெலாம் பேரருட் டாயாய்ச் 
சிறக்கு மெம்பெரு மாட்டியுந் திருக்கயி லையைவிட் 
டறத்தின் மேம்படு மெட்டுநா லறஞ்செயற் கிடமாய்த் 
துறக்க நாட்டினுஞ் சிறந்தது தொண்டநன் னாடு.                (8)

செழுநல் வித்திடல் படைப்பதாய் வளர்ப்பதே திதியாய் 
வழுவி டாதறுத் துயர்த்துவ தழிப்பொடு மறைப்பாய்க் 
†குழுவி னல்குத லருளெனக் ‡ கூத்தனைந் தொழில்சே 
ருழவ ரானுமிக் குயர்வது தொண்டநன் னாடு.                     (9)

(வேறு) 
கதிர்நகை முல்லைவாயில் லாளத்தி கச்சூர் கொங்கை 
புதுவயி றாலங்காடு போர்விழி திருவேற் காடு 
மதிமுகங் காஞ்சி சாயன் மயிலைநந் துதல்விற் கோலம் 
பதியுயிர் கடம்பர் கோயிற் §பாலிநா டெடுநல் லாட்கே.          (10)

சிற்சபை யீரைங் காதந் தென்திசை மேற்கு வேத 
நற்றல் மீரைங் கன்னல் வடதிசை ஞானக் காஞ்சி 
மற்றதோர் காதமாகு மயிலையைங் காதங் கீழ்சா 
ருற்றிட நாப்பண் மேவி யுயர்ந்தது கடம்பர்கோயில்.                (11)

*குற்றம்         ‡சபாபதி      †இரப்போர்கூட்டம்  
§பாலியாறுபாயும் தொண்டைநாடு.

நிருதியி லகத்தி சஞ்சீர் நெடுஞ் * சோணை வாயுக் கோண [தூர்
†முருகவேண் மணஞ் செய் யோங்கன் ‡முன்னமு தளித்தமு 
மருவிய வடகீழ்ப் பாலின் வளர்திருப் புலிசை தென்கீழ்ப் 
பொருவருந் திசையின் மேவப் பொலிவது கடம்பர் கோயில்.      (12)

∹இது முதல் மூன்றுங் குளகம்:-

குருவின் மெய்ஞ் ஞான நல்குங் குருவென மனிதர் தம்மு 
ளிருபிறப் பாள ரென்ன முச்சுடர்க் கிரவி யென்னப் 
பரவிய நூல்க டம்மிற் பயிலுவே தாக மம்போற்
கரவிலாத் தானந் தம்மிற் கல்விமா தான மென்ன.                       (13)

தருவிலைந் தருக்க ளென்ன மலரினுட் சலச மென்னக், 
குருநவ மணியிற் சிந்தா மணியெனக் கொடையின் முன் 
னைப், பொருளிலான் கொடுத்த லென்னப் பொருப்பினுண் 
மேரு வென்னப், பெருகுதண் புனல்சூ ழாற்றிற் பிரானணி 
கங்கை யென்ன.                                                                          (14)

புருடரிற் றிருமா லென்னத் தேவரிற் புரமூன் றட்ட, 
வரனெனப் § பொதுவின் ஞான வம்பல மென்ன ¶ வாவிக், 
குரியவையும் பொறியிற் கண்போன் றுமையொரு பாகன் கண்ணைகுழவி 
மேவும், திருமலி பதிகட் கெல்லாஞ் சிறந்தது கடம்பர் கோயில்.        (15)

பாசமா மிருளை நீக்கும் பருதியும் * பசுக்கள் வாடு 
மாசுறு பிறவிக்கோடை மாற்றருண் மதியு மன்னு 
நேசநல் லறிவாம் பைங்கூழ் வளர்க்குநீண் முகிலு நீங்காத் 
தேசுறு முத்தி வீட்டின் சிகரமுங் கடம்பர் கோயில்.                               (16)

ஆதலா லவனி மீதே யருவினைத் தொடர்பு நீங்கிப் 
போதவா நந்த வாழ்வு பொருந்திட விரும்புகின்றோர்
தீதிலாக் கடம்பர் கோயிற் சேருதல் வேண்டு மற்றைப் 
பூதலம் விரும்பல் பொன்னீத் திரும்பினை விரும்பல் போலாம்.             (17)

*திருவணை     †திருத்தணி      ‡ திருக்கச்சூர்      § நடனசபை 
¶உயிர்க்குரிய பஞ்சேந்திரியம்     * ஜீவர்கள்.
*மடும்படு பிறவி நோயிம் வறுமையுந் துபரு மாற்றுங் ,
கடம்பமா நகரைக் காணிற் கருத்துற நினைக்கிற்கேட்கில்,
திடம்பெறப் பணியிற் போற்றிற் றிசைமுக னெடியோன் 
றேடும், படர்ந்தபே ரொளிவாழ்ந் தோங்குங் கயிலையே பதி 
யாக் கொல்வார்.                                                                             (18)

இந்திருப்பதியி லன்ன மிருநிதி யாடையீதல் 
சந்திர மடநீர்ப் பந்தற் றடம்புனற் கூவம்வாவி 
முத்திவேட் டுலகநீத்தோர்க் குணவுமுன் நான்கு நல்க 
னித்தலுஞ் செய்யப் பெற்றோர் நிருமலா நந்த ராவார்.                     (19)

நெருங்குதண் மலர்ப்பூஞ்  சோலை நிறைதிருக் கடம்பர் 
கோயில், மருங்கொரு தான கோமம் பிதுர்க்கடன் மனுக்க 
ணீத்தல், அருந்தவத் தியான நிஷ்டை யாதியோ ரணுச்செய் 
தாலும், பொருந்து பொற் கிரியின் மேலாய் பொரு விலாப் போக நல்கும்.  (20)

சிவனிராத் திங்கள்வார மாதிரை யாதி செப்பும் 
சிவவிர  தங்க ளேனைச் சிவதலத் தியற்ற லுள்ளுஞ் 
† சிவமுறக் கொடுக்கு மிந்தத் திருநக ரிடத்தோ ருச்சி 
‡சிவன்மகிழ் பொழுது மேவியந்தியங் கிருந்தார் சேர்வர்.                             (21)

போகமும் வீடும் போற்று முப்பொரு ளியல்பு ஞான 
யோகமுஞ் சிவத்தோ டொன்று முண்மையா நந்த வீடு 
நாகமுன் வில்லாக் கொண்ட நாதனி நகரை நண்ணும் 
§பாகமுற் றவர்க்கே நாளுந் தருமெனப் பரும் வேதம்.                                     (22)

இந்திர லயன்மா லேணோ ரெண்டிசைக் கிறைவ னொன்பான் 
¶ மைந்துறு கிரகமீறா றிராசிவா சுகிகூர் மாண்டர் 
நந்துமா தவர்க ளேனோர் நாதனார் கடம்பர் கோயில் 
வந்தருந் தவங்கள் செய்தே மருவினர் மாறாச் செல்வம்.                                   (23)

*அஞ்ஞானம்     †மங்களம்       ‡பிரதோஷ காலம்    §பரிபாகம்     ¶வலி

(வேறு) 
புல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிக் 
கல்லாகிப் பிறவாகிச் செனித்தாலுங் கதிசேர்வர் 
எல்லாரு மணிமாடக் கடம்பநக ரிடத்தென்றே 
பல்வேறாய் மலரோனும் படைத்தது * மன் பதையாக்கை.                          (24)

சீராங் கடம்பநகர்ச் சிலையெல்லாஞ் சிவலிங்கம் , பாரா 
ரும் புனலெவையுஞ் சிவகங்கை யாமைம்பொற், றாராருந் 
திருநகரஞ் சிவபுரமித் திருநகரி , லாராயிற் சராசரமுஞ் சிவமாக 
வளர்ந்தோங்கும்.                                                                                           (25)

(வேறு) 
காந்தெரியி னிடைப்பட்ட வெப்பொருளு மக்கனலாய்ச்,
சார்ந்திடல்போ லருட்சிவமே தங்குபர வெளியாகிப், போந் 
துளவித் திருக்கடம்பா புரிதனிலெவ் வுயிர்த்தொகைகள்,
சேர்ந்திடினும் பூரணன்மெய்த் திருவுருவாய்ச் சிறந்தோங்கும்.                        (26)

ஒதியவிக் கடம்பநகர் தனையன்றி யுமையினோடுஞ், 
சோதியுறை தலங்கள்சில வுளவவையுந் தொகுத்துரைப்பாம். 
போதனருச் சனைபுரிந்து போற்றுதிருப் பிரமீசம், தீதிலிறை 
யான்பனைபெண் பனையாக்குந் திருவோத்தூர்.                                           (27)

அனுமெனொடு மணில் காக்கை யகத்தியன்கோ சிகன் 
பிருங்கி, மனுமுறைசெய் குருகுலத்தோர் † மானிவர்பூ சனை 
யாற்ற, நனிவரந்தந் தொருசோழ னணுகியா லயமியற்ற,
வனிதையொடு மகிழ்பரமன் மருவுகுரங் கணின்மூட்டம்.                              (28)

கயிலையினிற் செய்தபிழை தனைக்கழுவக் கவுரியெனும், 
மயிலணைந்து பூசிப்ப வளைத்தலும்பு முலைத்தலும்பு , மெயி
லெரிசெய் யிறைபெற்றே யிருந்தருளே கம்பமுதற், பயிலு 
மறை முதல்வைகும் பலதளியார் திருக்காஞ்சி.                                             (29)

† இலக்குமி     * மக்கள் ஜாதி

தன்வலியோ டெதிர்பொருவோர் வலிபாதி தனைச்சார, 
மன்மகிழ்வின் முனம்வாலி வந்தனைசெய் வாலீசம் , பன்னு 
திருப் பனங்காட்டூர் பயிலுமறை நூபுரஞ்செம், பொன்மதில் 
சூழ் பரசுரா மீற்சுரநற் புலிவனமே.                                                               (30)

தெருணிறையுங் கங்கைநிகர் சேய்நதிப்பாற் செவ் 
வேடன், கருணையினால் வேல்விபுரி காசிபமா தவன்கண்ட, 
வருணிறையுஞ் சோளீச மமர்ந்த விச்சு வேச்சுரமெய்ப், பொரு 
ணிறையுஞ் * பிறிதுகங்கை யீச்சுரமும் பொருந்துமால்.                                  (31)

என்னிருகண் மணியனைய விமையமயி லொருபாகன், 
பொன்னிடும்பா யொருபுற்றிற் புகுந்தகழ வெளிப்பட்டு ,
மன்னுமய னிரதிமுதல் வானோர்க ளருசிப்பப், பன்னிருநா 
மம்படைத்துப் பயின்றதிரு மாகரலே.                                                             (32)

செகத்தோர்போற் றிடும் ‡ பெருந்தண் டலமுடையார் 
தங்குதல, மகத்தார்மா முனியீசம் வாசீசங் கன்னீசம், அகத் 
தீச, மெனச்சூழு மலகிலாத் திருத்தலமம், பகத்தாற் கண் 
டேத்தினருக் கெப்பேறும் பலித்திடுமே.                                                           (33)

(வேறு) 
செப்பிடு மகத்தீசத்திற் செந்தமிழ் முனிவன் றீதி, 
லொப்பறு வசுரர்ச் செற்ற வுறுபவ, வுன்னி முப் 
புர மெரித்த முக்கண் முதல்வனை வழுத்தி யாங்கே, திப்பிய 
சித்தி பெற்றான் திருவருண் மாண்பி தென்னே.                                              (34)

நால்வகைச் செய்யு ளெங்கு நடுவன செய்யு ளெங்குங்,
கால்வன முத்தங் கஞ்சங் கயமெலா மலர்ந்தங் கஞ்ச, நீல்வனந் 
தவழுங் காரு நிதிநிகே தனமங் காருஞ், சேலன மடவார் 
கண்ணுஞ் சிறந்தமெய்த் திருவார் கண்ணும்.                                     (35)

*நெய்யாடு பாக்கம்     ‡ இளையனார் வேலுருக்குக் கிழக்கேயிருந்த ஓரூர் 
அம்பகம் – கண்கள்     பவம்- பாவம் 

எங்கணுஞ் செல்வங் கல்வி யெங்கணு மீகை யோகை 
மெங்கணுங் *கன்னல் செந்நெ லெங்கணு மாடல் பாடல் ,
எங்கணுந் தருமஞ் சீல மெங்கணு $ மாலை மாலை, எங்கணு 
† மாதர் மாதர் எங்கணு ‡ மன்றல் மன்றல்.                                          (36)

§ இருநிறக் கமல மாத ரிருவருங் கணவ ரோடுங், குரு 
வளர் கடம்பர் கோயிற் குழகனைப் பூசை செய்து, தருதவ 
மியற்ற லாலே சண்முகன் புரமா மாலுர், பிரமனூர் போலு
மன்றிப் பெருந்தவ ருலகு போலும்.                                                         (37)

¶ சலதியின் முகக்கு நாழித் தன்மைபோற் குமரன் 
போற்று, நலதிருப் பதியின் மேன்மை யரிந்தவா நவின 
றேன் ஞானப், புலனருட் கடம்ப நாதன் பூசனைக் கிளை 
யோன் றந்த, குலநதி யாதிதீர்த்தத் தன்மையுங் கூற லுற்றேன்                 (38)

3 – வது தலவிசேட முரைத்த அத்தியாயம்  முற்றிற்று.
ஆக திருவிருத்தம்    (93) 

*கரும்பு    $ஆலைகளின் வரிசை  † அழகிய மாதர்  ‡ வாஸனை வீசும் 
தெருக்கள்   ¶ கடல்    § இலக்குமி ஸரஸ்வதி 

நான்காவது தீர்த்த விசேட முரைத்த அத்தியாயம்.
ஸ்ரீ கடம்பநாதர் துதி. 
கண்ணினுண் மணியா யுன்னுங் கருத்தினுட் கருத் 
தாய்ப் பாடும், பண்ணினு ளிசையாய்த் தீந்தெம் பழத்தினுட் 
சுவையா யாவி, யுண்ணிறை யுணர்வாய் மற்றை யுணர்வினு
ளொளியாய் நாயே, னெண்ணிய வரந்தந் தாளுங் கடம்புறை 
யிறைவா போற்றி.                                                                          (1)

ஆயிரங் கோடி சேர்ந்த வறுபத்தொ டாறென் றேது 
மாயிரும் புவியுண் மன்னுந் தீர்த்தமற் றவைக்கு மேலாய்ச் 
சேயருண் ஞான தீர்த்தஞ் சிறக்குமிஃ தன்றி யிந்தத் 
தூயமா நகரி னான்கு தீர்த்தமுஞ் சூழ்ந்து தோன்றும்.                           (2)

கீட்டிசை * மகவான் றீர்த்தந் தென்கிழக் கயன்மா றீர்த் 
தங், † கோட்டகந் தென்க ணின்ன கலியினிற் குலலித் 
தோன்றா, வேட்டகா சிபன்செய் தீர்த்த நிருதியில் விளங்கு 
மற்றை, நாட்டுநாற் ‡ றிசையுஞ் செவ்வே ணதியத னியற்கை சொல்வாம்.    (3)

(வேறு) 
பாகி னேர்சொற் குறமகள் பாகரா 
லேகி நித்தலு மிக்கடம் மாபுரி
யோகி னிற்பவ ருந்தொழ வுத்தர 
வாகி னித்திரு வானதிம் மாநதி.                                                                (4)

‡ மேற்கு வாயு, வடக்கு, ஈசானம்       † கோயில் 
*இந்திரன்  

இந்த மாநதி யின்புன றேய்ந்தெழு 
* வந்து வந்து வழங்கிட மெங்கணு
நந்து கின்றச ராசர நாடொறும் 
பந்த வல்வினை நீங்குவ பான்மையால்.                                                    (5)

முன்ன † மோர்முனி முற்றருந் தெச்சிலாய்ப் 
பின்ன ருஞ்செவி வாய்வரு பெண்ணையோ 
வென்னை யாள்கும ரேசன ழைத்தவிப்
பொன்ன திக்கினை யென்று புகல்வதே.                                                          (6)

முருகன் மாநதி யின்கரை முன்னியோர் 
தரும மோமந் தருப்பணந் தென்புலக்
கருமந் தானந் தியானங் கடம்பினுட் 
பொருலை யுன்னிப் புரியி லனந்தமாம்.                                                            (7)

 கடம்ப நாதனை நெஞ்சிற் கருதியித் 
தடங்கொண் மாநதி யாடினர் தாமயன் 
‡படம்ப டிந்தவ னுந்தொழப் பாவையா 
ரிடம்பெ றுஞ்சிவன் றன்வடி வெய்துவார்.                                                           (8)

இனிய தீர்த்த மொருகுட மென்னையா 
ளனையொர் பாகற் குதவினு மன்னவர் 
வினையி னீங்கியும் மேதினி வேந்தரா 
யினிது வாழ்ந்துபின் முந்தியு மெய்துவார்.                                                            (9)

சேய்ந திப்புனற் றீண்டினுங் காணினும் 
வாயி லாசம னமொன்றி யற்றினு 
மேய செல்வமுங் கல்வியு மிக்கசீ 
ராய சித்திக ளெட்டு மணுகுமே.                                                                          (10)

*காற்று       † ஜந்துமகரிஷி        ‡ திருமால். 

மேவ றம்பொரு ளின்பமும் வீடுமோர் 
தாவித் தேகந்த னிற்பெற வெண்ணினோர்
காவ * னீப வனத்திற் கமழ் நதி 
மாவி திப்படி யாடினர் மன்னுவார்.                                                                    (11)

†பைகொள் பாம்பிந் திரவிகள் பற்றுநா
‡ளெய்து நாளய னந்தக ரேறுதேண்
மொய்சு  ராகனு மாதமு மூழ்கி னோர் 
செய்த பாவந்தி சையகன் றேடுமே.                                                     (12)

ஒழுக்க மன்பரு ளீகையு ணர்வுசீ 
ரிழுக்கில் செல்வந் தவமனை யின்பெழில்
வழுக்கி லாமகப் பேறுமற் றியாவையு
மழுக்கி லிந்நதி யாடினர்க் கெய்துமே.                                                 (13)

இன்ன திப்புனல் பாய்வய லின்கதி 
ரன்ன முண்ணுமி வர்பிறர் மாதரை 
மன்னு பாவம கல்வர் § மறலியூர் 
தன்னி லேகலர் சார்வர் சிவபுரம்,                                                         (14)

நறைகொள் பூம்பொழில் நற்கடம் பின்னிடை 
யுறையு மெம்பெரு மானுரு வாகுமித் 
துறைந திப்புன லாடத் ¶ துறக்கமே 
விறைவ ருத்தவம் வேண்டுவ ரின்னுமே.                                                 (15)

வேற்று நாட்டிரு வேதிய ரென்புகொண்
டூற்று நீழலு றைந்துமி யோர்துளி
காற்றின் மேவிக் கடிமல ராக்குமே 
லாற்று மேன்மைய தாரள வாயதே.                                                          (16)

* கடம்பு            † சந்திர சூரிய கிரகணங்கள் 
‡ அமாவாசை    § இயமன்      ¶ சுவர்க்கம் 

(வேறு) 
வருவினை துடைக்குந் திருநகர்ச் சிறப்பும் 
வளம்பெறு தீர்த்தமான் மியமுந் 
தெரிதர வுரைத்தீர் மூர்த்திமான் மியமுஞ் 
செப்புகென் * றிருந்தவர் கேட்பக் 
கரமலர் முகிழ்த்து விருதய மலரக் 
கண்கலுழ்ந் தின்பநீர் பொழியப் 
பரவிமெய் சிலிர்ப்பக் கடம்பநா யகன் சீர் 
பாடுவான் சூதமா தவனே.                                                               (17)

தீர்த்த விசேட முரைத்த அத்தியாயம் முற்றிற்று 
                      திருச்சிற்றம்பலம் 
ஆக திருவிருத்தம் .    (110)

* பெருந்தவமுடைய நைமிசாரண்ய வாசிகள் 


திருச்சிற்றம்பலம் 
ஐந்தாவது மூர்த்தி விசேட முரைத்த  அத்தியாயம் 
ஸ்ரீ கடம்பநாதர் துதி. 

சுருதியின் முடிவே ஞானச் சோதியே யிருளை நீக்கும் 
பருதியி னொளியே காலன் படவுடைத் தவனே நாயேன் 
கருதிய வரந்தந் தாளுங் கடவுளே கடம்ப நாதா 
வருதியா னத்தின் பேறே வள்ளலே போற்றி போற்றி .                         (1)

கொடியணி சிகரமாடக் கோதிலா வளங்க ணீடக், கடி 
மனை மாதராடக் * காரளி யிசைப்பண் பாடப், படியிரண் 
டேழு மேத்தும் படிவள ரிவ்வூர்ப் பாங்கர்ப், பொடியணி பர 
மன் கீர்த்தி போல்வளர் கடம்பொன் றுண்டால்.                                    (2)

சாற்றுமக் கடம்பி லென்றுஞ் சச்சிதர நந்த மாகி 
வேற்றுமாய் விண்ணு மாகி வித்துமாய் விளைவு மாகிக் 
† கோற்றொடி பாகமாகுங் கோதில்செஞ் சோதி தானே 
போற்றரு லிங்க மாகித் தோற்றினன் புவன முய்ய.                                    (3)

* கருநிறவண்டுகள்     † வளைந்த கங்கணமணிந்த உமையம்மை.

செங்கய லுகளும் வாவித் திருநக ருயிராய்ச் செல்வம், 
பொங்கிய சிகரக் கோயி லுயிரினுட் போத மாகித், தங்கிய 
கடம்பந் தாரு தளர்வின்மெய் யன்பா யின்ப, மங்கள சுகசொ 
ரூப மிலிங்கமாய் வளர்ந்து தோன்றும்.                                                      (4)

தவப்பயன் றழைத்து ஞானத் தண்ணருண் மலர்ந்து 
பாசப், பவத்துய ரகலக் காய்த்துப் பருப்பதக் கொடிபாற் 
றேன்றச், சிவப்பொருண் மணந்தா ரின்பத் தேன்பொழிந் 
தமுத வாரி, கவர்த்தெழு கடம்பி னுள்ளோர் கருணையாங் 
கனிவாழ்ந் தோங்கும்.                                                                                 (5)

‡அத்துவா விருமூன் றாய வண்டங்க ளெல்லாந் தோற்று 
வித்தமூ  லத்தி னாலும்  விதிமுத லதிப ரெல்லாம்
நித்தம்வந் தேத்த லானும் நிறைதிருக் கடம்பின் மேய 
சுத்தமா லிங்க மூல விலிங்கமாய்ச் சிறந்து தோன்றும்.                                 (6)

‡ மந்திரம், வன்னம், பதம், தத்துவம், புவனம், கலை.

மூவருமாகி யந்த மூவர்க்கும் மூலமாகி, யாவையு மகன்ற 
ஞான நாயக னுலக மீன்ற, தேவியா வுடைய வம்மை பாக 
மாய்ச் சிறக்கு மிந்தத், தூவெளியிலிங்கந் தானே § யிருமைக் 
குந் துணையாய்த் தோன்றும்.                                                                        (7)

§ இம்மை, மறுமைகள்.

கந்தன்வந் தேத்த லானுங் கடம்பநா யகனாங் கண் 
டோர், பந்தவல் லிருளை நீக்கும் பரிசினாற் சோதி நாதன், 
* சிந்தலில் செல்வ நல்குஞ் சிறப்பினாற் செல்வ நாதன் , நந்து 
மெண் சித்தி நல்கு நலத்தினாற் சித்தி நாதன்,                                                  (8) 

*அழிவற்ற .

சரியைமுன்  னான நான்கு பயன்களுந் தருத லாலே, 
உரியநல் லுலக நாத னோங்குசீ ரம்மை யப்பன் , மருவுபிர்த் 
துணைவ னென்றும் வாழ்த்து சீர்க் குரவ னென்றும், பரவ 
மிவ் விரண்டு நான்கு திருப்பெயர் படைத்தா னெங்கோன்.                                 (9)

(வேறு)
† நிராமயநிஷ் களசகள நித்தபரி பூரணமாய் நிமல ஞானப் 
பராபரமாய்ப் பரவொளியாய்ப் பல்லுயுராய் நல்லறிவின் 
பயனா யின்பப், புராதனமா யைந்தொழிலும் புரியாது புரிந்
தருளும் போதன் தானே, சராசரங்கட் கருள்புரிவான் 
கடம்பநா யகனெனும்பேர் தரித்துத் தோன்றும்.                                                 (10)

† நோயின்மை 

இத்திருமா நகரின்கட்  சிவாநந்த வடிவாமிவ் விலிங்கங் 
கண்டோ, ரத்தகைய பேரின்ப வருள்வீடு கண்டுதனை யக 
லாப் பாசக், கொத்தகல மெய்ஞ்ஞானக் குரைகடலிற் குளித் 
திரண்டொன் றன்றென் றேதும், ‡ பித்துணர்வு கெடத்தரு 
மெய்ச் சுத்தசிவ வத்துவிதம் பெற்று வாழ்வார்.                                                   (11)

‡ மயக்க அறிவு.  

வழிச்செலவிற் புகுந்தேனும் பசிக்குணவு வேட்டேனும்
வளர்பொன் வேட்டுஞ், செழித்தமலர்க் குழன்மாதர் திறத் 
தேனு மறந்தேனுங் கரவினேனும், பழிப்பில்புகழ்த் திருக் 
கடம்ப நாதனையோர் கால்விழியாற் பார்த்து ளோரு, மொழிப் 
பரிய தாகிமுனம் பிரிந்தொடும் பாவமெலா மொழிந்து வாழ்வார்.                      (12)

கடம்பநா யகவென்று கேட்டவர்கள் சாலோகங் கண்க 
ளாரக், கடம்பநா யகனுருவங் கண்டவர்கள் சாமீபங் கருத் 
தொன் றாகிக், கடம்பநா யகனுருவ நினைத்தவர்கள்சாரூபங் 
காதல் செய்து, கடம்பநா யகன்றன்மை யுணந்தவர்க டிரு 
வடியிற் கலந்து வாழ்வார்.                                                                                  (13)

*பலரியிலிச் சிவலிங்கந் தெரிசித்தோர் கிரவுபுரி பவம் 
போய் நீங்கும், அலர்கதிர்நண் பகற்கண்டு தெரிசித்தோர்க்
கிச்சென்மத் தழுக்கு மாறும், மலர்தலைமா நிலத் † தேழு பிறவி 
வினை மாசறுக்கு மாலைக் காட்சி, நலமிகுநள் ளிரவின்கட் 
டெரிசித்தோ ரின்பநிலை நண்ணி வாழ்வார்.                                                      (14)

*விடியற்காலம்.   † தேவர், மக்கள், விலங்கு, புள், நீர்வாழ்வன,
தாவரம்.

 இந்தவருட் சிவகுறிகண் டேத்தினோர் செய்தவினை 
யெல்லாம் வெய்ய, கொந்தழலிற் பஞ்சென்னக் கோபத்திற்
றவமெனப்பெண் ணாசை கூர்ந்தோர், புந்திமிக வழிந்தென்ன 
‡ வுருமொலியி னரவினுயிர் போவ தென்ன, வந்தமறு நற் 
குணங்க ளுலோபத்தா லழிந்தென்ன வழியு மன்றே.                                        (15)

‡ இடிமுழக்கம். 

இதுமுதல் மூன்றுங் குளகம். 

வற்றாது புனல்பெருகுஞ் சேயாற்றில் வைகரையின் 
வந்து மூழ்கி, வற்றாது தேன்பொழியு மலர்க்கடம்பர் திருக் 
கோயில் வலங்கொண் டேகி, வற்றாது மதம்பொழியுஞ் சித்தி 
மழ களிற்றினடி வணங்கிப் போற்றி, வற்றாத வருட்கடலாந் 
திருக்கடம்ப நாதமகா விலிங்க வாழ்வை.                                                  (16)

அன்புமனங் கரைந்துருக வட்டாங்க பஞ்சாங்க மாகத்
தாழ்ந்து, பின்புமூ வலஞ்செய்து சன்னதியின் முன்னின்று 
பெருகு மன்பாற், பொன்பிறழ்செஞ் சடைமுடியு முக்கண்ணு 
நாற்றேளும் பாதப் § போது, மின்புருவா மாவுடைய வம்மை 
யொரு பாகமுங்கொண் டிருப்ப தாக.                                                        (17)

§ மலர். 

பொறிவழியிற் சுழலுமன மொருவழிக்கொண் டிடக் 
கண்டு போற்றப் பெற்றோர், அறிவுதரு கலைமகளுந் திருமக 
ளும் பணிகேழ்ப்ப வவனி மீதே, வறுமை யற வாழ்வரவர் 
மனமறிந்து புரிந்தபிழை நூறு மற்றும், இறைவனருட்
கடம்பநா யகனீக்கிப் பேரின்ப மெய்தச் செய்வான்.                                  (18)

கடம்படியின் முளைத்தெழுந்த கருணைபொழி யாரமு 
தைக் கருத்தொன் றாகிக், குடங்கையள வாகியநீ ராட்டி 
யொரு மலரேனுங் குளிரச் சாத்தி, யொடுங்கரிய வுயிர்ப் 
போத மொடுங்கவொரு பலமேனு முதவி யெங்கோ, னிடந் 
தெரிய வொருபளித விளக்கேனு மிடுமவரே யிமையோராவர்.                  (19)

கருவாதைத் துடைத்தருளி யருள்கொடுக்குந் திருக் 
கடம்ப நாதர்க் கண்பாற், ரிருவாரு மணிகலசங் குடமாகி 
*யடுகலன்கள் செவ்விப் போருங், † குருவாரும் பரிவட்ட 
மாபரணங் கொடுப்போரும் குளிர்பூ மாலை, மருவாரத் 
தொடுப்போரும் வானுலகிற் ‡ சசியிருதோண் மணந்து வாழ்வார்.             (20)

* சமையற்பாத்திரம். †பெருமை.  ‡ இந்திராணி.  

அச்சுதனு மலரோனு மறிவரிய வரிட்கடம்ப நாதன் 
ஞானப், பச்சைமலைக் கொடிபாகன் திருக்கோயி லலகிட்டுப் 
பாணியாரப், § பொச்சமறத்  திருமெழுகிட் டேத்தினோர் நாரி 
யராய்ப் பிறவார் பூமே, லெச்சமிலெண் ணிரண்டான முக 
மனாற் பெறுபயனு மியம்பக் கேண்மின்.                                                     (21)

§ குற்றம்.

சாற்றியவா வாகனத்தாற் பூரணத்தை யாசனத்தாற்
சகலா தாரம், போற்றியபாத் தியமுதலா மூன்றானு மல 
மகன்று புனித மாத, லாற்றுமபி டேகத்தா னிருமலரா 
மொற்றாடை யகிலந் தன்னுள்,வேற்றுமையற் றிருத்தல் 
வரைக் கலவையா ¶ னிருலேபம் விளங்கித்தோன்றும்.                              (22)

¶ அஸங்கம். 

அணியணியி னெப்பொருளுஞ் சமமாதன் முந்நூல்பற் 
றற்று வாழ்தன், மணமலரின் வாசனைகண் மூன்றகலும் வளர்
தூப தீபங் காட்டி , * லுணருருதன் னொளிதோன்று நிவேத 
னத்தா லுருநித்த திருத்தி சோதித், துணருறுநீ ராசனத் 
தாற் றானாத றுதிமுதலத் துவிதந் தோன்றும்.                                           (23)

* ஞானசொரூபம்.

முதுமறை நான்கு மித்த முகமனா நான்கு முத்தி 
யுதவுமென் றுரைக்கு மன்றி யுயர்திருக் கடம்ப நாதன் 
பதமலர் தொழுவார் வேற்றுப் பதியினுள் ளவரை நெஞ்சத் 
திரமுற நினைவுற் றாரே லிருங்கதி யவர்க்கு மெய்தும்.                              (24)

இன்னகர்க் கிறைவ னேயா மென்னயாள் கடம்ப நாதன் 
பொன்னடிக் ‡ கார மாரம் பொறுந்துதேன் றயில மாகி 
நன்னிதி யாடை பூண்பொற் பாத்திர நடந்து மூர்தி 
மன்னருட் பணிசெய் வோரு மலரயன் போற்ற வாழ்வார்.                         (25)

‡ சந்தனகாப்பு. 

சீரணி கடம்ப நாதன் திருவுளங் களிப்ப பூமி 
காரணி குழலா ராடற் கவினிய விழாச்செய் விப்போர் 
வாரணி † யியங்கள் செய்வோர் வாவிகூ வங்கள் செய்வோர் 
§நாரணி கேள்வன் போலு ஞாலமே லோங்கி வாழ்வார்.                             (26)

† வாத்தியம்.  § திருமால். 

ஆவுடை யம்மைபாக னருட்செய லறிவி லாவோர் 
நாவுடை யெளிய னானோ நவிற்றுவன் வேத நான்கும் 
பாவுடை மொழியா லின்னும் பகருதற் கடங்கா தென்றால் 
சேவுடைக் கொடியோ னல்லா லியாவரே தெரிக்கற் பாலார்.                       (27)

புண்ணிய கடம்பர் மூதூர் போலொரு தலமு மில்லை 
புண்ணிய சேயா றென்னப் புவியிலோர் தீர்த்த மில்லை 
புண்ணிய கடம்பநாதன் போலொரு மூர்த்தீ யில்லை
புண்ணியம் வேட்டோ ரங்கட் பொருந்திவாழ்ந்  திருத்தல்.                              (28)

தவம்பெறு கடம்பர் கோயிற் றலந்தீர்த்த மூர்த்தி யோதுஞ் 
சிவம்பெறு செய்யுள் கேட்போர் படிப்பவரெழுதிச் சேர்ப்போர் 
* நவம்பெறு பவர்க்கே தேனு முதவுவோர் ஞால மீதிற்
பவம்பெறு துயர நீங்கிக் கயிலையம் பதியை நீங்கார்.                                     (29)

* நட்பு. 

சூதமா தவர்கோன் மேனாட் டூயமா முனிவர் கேட்பக் 
கீதமார் நகரந் தீர்த்த மூர்த்திசீர் கிளந்த வாறே 
போதமார் புலமை கூரப் புகன்றனம் புகழ்ச்சி மேவுஞ் 
சீதமார் பொழில்சூழ் கந்தாச் சிரமத்தின் சீர்மை சொல்வாம்.                              (30)

மூர்த்தி விசேடமுரைத்த அத்தியாயம் முற்றிற்று. 
திருச்சிற்றம்பலம்.
______________

ஆக திருவிருத்தம்  (140)


ஆறாவது கந்தராச்சிரம வரலாறு உரைத்த அத்தியாயம். 

ஸ்ரீகடம்பநாதர் துதி. 

அந்தராச் சிரம தாய்வே றமரர்பா லணுகி யானின்
பந்தராச் சிரம மேவாப் பதமருள் பரனே போற்றி 
யிந்தராச் சிரம மேவத் தரித்தரு ளிறைவா போற்றிக்
கந்தராச் சிரம மேவுங் கடம்பநா யகனே போற்றி.                                        (1) 

(வேறு) 
பொறிக ளைந்தும் வித்துயர் புண்ணியத் 
துறவின் மேம்படு தூயவ னேசொலுங்
குறைவில் சீர்க்கடம் பாரணி யங்குகன் 
மறுவி லாச்சிர மப்பெயர் வாய்ந்தென் ?                                                        (2)

அருளு கென்ன வனைத்துமு ணர்ந்தருள் 
பெருகு சூதப்பெ ருந்தவன் பேசுவான் 
சுருதி நாதன் சுடர்க்கயி லாயமே 
லருளி யுற்றன னாகம மன்னைபால்.                                                             (3)

உரைத்த காலையி னுத்தமி வேறொரு 
கருத்த ளாகக் கடவுள்ச பித்தலால் 
விரித்த வாகம முற்றும் விநாயகன் 
முரித்து வார்கடல் வீசினன் மூழ்கவே.                                                         (4)

வேலெ டுத்த விசாகன் வெடிகுண்டிறை 
பா * லெ டுத்த பசுபதி பாசனன் 
ணுலெ டுத்தவி ரிகட னூக்கினான் 
ஆல டுத்தரு ளாதிய ழன்றனன்.                                                                 (5)

* பொருந்திய.
சமய மின்மைய றிந்திலை தானிவர் 
நமைய டுப்பவி டுத்தலின் நந்திநீ 
† துமியு மீனுரு வாகெனச் சொல்லியே 
குமா வூமையிற் றேன்றெனச் செப்பினாற்.                                                (6)

† அறுக்கப்படும்.    

கூறுங் காலைக் குமரன்வ ணங்கிவெள் 
ளேறு கந்தவி றைவனை வேண்டலு 
மாறு சூடும மலன றைகுவான் 
தேறு கூடற்ப தியினிற் சென்மித்தே.                                                           (7)

சங்க மேவுந் தமிழ்வலர் சங்கைநீ 
யற்க கற்றி யருட்கடம் பாபுரி 
தங்கி நற்றவஞ் செய்திடிற் சண்டவேற் 
செங்கை யாயருள் செய்துமென் றேதினான்.                                               (8)

உன்னு வேழமு கந்தனை யோதினாற் 
றன்னை மேவலிற் சாபமு ரைத்திலான் 
கன்னி பாண்டிநன் னாட்டின்க டற்கரை 
மன்னு மீனவர் பாண்மக வாயினாள்.                                                          (9)

நந்தி யாகமம் வாய்கொடு நற்கட 
லுந்து மீனென வுற்றனன் கூடலிற் 
குந்த மேந்துங் குமரன் வணிகர்பால்
வந்து மூகை மகவெனத் தோன்றினான்.                                                      (10)

வலைகொண் டாகமம் வாய்கொண்ட மீன்படுத் 
திலைகொள் சூலத்தி றைவனி றைவியை
யலைவி னன்மண மாற்றி யவரொடுங் 
கலையுங் கொண்டு கயிலையி னெய்தினான்.                                              (11)

ஊம னாகுங்கு மானவ் வூரின்* வாழ் 
வாம மார்சங்கத் தாரைய மாற்றியே 
காம னாகம்பொ டிசெய்க டவுளாஞ் 
சோம சேகரன் பாதந்து திசெய்தே.                                                               (12)

* வாழ்வு-ஆம்-அம்-ஆர்-சங்கத்தார்.

மூகை யாமிம் † முடையுரு நீங்கவு
மாக மப்பொரு டோவு மையநீ 
யோகை யோடரு ளென்னவு மையொரு 
பாக மான பரமன் பகருவான்.                                                                     (13)

† இழி பிறப்பு. 

(வேறு) 
இதுமுதல் மூன்றுங் குளகம் 

மழலை மென்மொழிக் குமரகேள் வருமலப் பகையா 
யழகி னுக்கெலா மணியதாய் நமதரு ளதுவா 
யெழில்கொ ளெவ்வகை ‡ யூழியு மழிவுறா வியல்பாய்ப்
பழுதி லாதமெய்ஞ் ஞானமே யளித்திடும் பதமாய்.                                          (14)
‡ பிரளயம். 

சித்தி யாவையுந் தருவதாய்த் தென்றமிழ்ச் சிறப்பாய் 
முத்தி யாவையும் பலிப்பதாய் § முக்குறும் பகற்றிப் 
பத்தி யாவையுந் தருவதாய்ப் பலவள முடைத்தாய்ப் 
புத்தி யாவையுந் தருவதாய்ப் பொருவிலா ததுவாய்.                                       (15)

§ ஆணவம், மாயை, கன்மம். 

சிறந்த காஞ்சிமா நகரினுங் திருச்சிற்றம் பலத்துஞ் 
சிறந்த வாலவாய் கயிலையா தியதிருத் தலத்துஞ் 
சிறந்த மந்திரப் பொருளினு மந்தணத் திருவாய்ச் 
சிறந்து நாமுறைந் திருப்பது திருக்கடம் பேசம்.                                              (16)

பீடுசேர் திருக் காஞ்சியில் வித்தியா பீட 
நீடுநாம் புகல் நீபமா வனமிது நிறைசீர் 
கூடும் யோகபீ டங்குல விடுமது குறித்தாங் 
கீடிலாத் தவ மியற்றுகென் றருளின மெங்கோன்.                                          (17) 

எந்தை யோதிய வாசகங் கேட்டிலை வேற்கை 
கந்தர் காஞ்சியின் றென்றிசைக் கடம்பமா நகரின் 
வந்து மாதிடப் பாகனைக் கண்டுள மழ்ந்தார் 
தந்தை தாயரை நோக்குறி லுவகையார் சாரார்.                                             (18)

அன்பி னான்விதிப் படியவன் றனையருச் சித்துப் 
பின்பு யோகபீ டத்தினில் வேற்கரப் பெருமா 
னின்பி னேற்றலு மியம்புதற் கருஞ்சிவ ஞான 
முன்பு தோன்றிநின் றருளினன் கடம்பில்வாழ் முதல்வன்.                              (19)

ஆத லாற்றிருக் கடம்பமா நகரினை யறிந்தோ
ரோது சீர்த்திருக் கந்தராய்ச் சிரமமென் றுரைப்பா
ரீது கேட்டுளேன் வியாதனாங் குருபர னிடத்தே 
மாத வத்தினீ ரென்றனன் வார்சடை சூதன்.                                        (20)

கபல மஞ்ஞையுங் * கலுழுமும் மதப்பெருங் களிறுங் 
குலவு மேடமு மூர்ந்தருள் குமரவேட் கருளா 
னலமெய்ஞ் ஞானமெங் கோனருள் புரிந்தமை நவின்றா 
மிலகு மத்தலத் தசப்பெயர் மகிமையு மிசைப்பாம்.                                 (21)

*பொழியும்.

கந்தராச்சிரம வரலாறு உரைத்த அத்தியாயம் முற்றிற்று. 
ஆக திருவிருத்தம்.  (161)

ஏழாவது தசநாத மகிமை யுரைத்த அத்தியாயம். 
ஸ்ரீகடம்பநாதர் துதி.

உருக்கடம்ப வனமருந்து முரகமுலை யல்குலா 
வுடையாள் கேள்வ 
னருக்கடம்ப வனமலரு மணிந்தசெஞ் சடாமகுட 
னரணோ டொன்னார்    [ குத் 
தருக்கடம்ப வனக்கணியா னாகங்கொண் டருள்சேய் 
தனிவா டந்த 
திருக்கடம்ப வனநாதன் சரணார விந்தமலர் 
சென்னி சேர்ப்பாம்.                                                                           (1)

மண்ணேந்துஞ் செஞ்சூட்டுப் பணியரசும் புகழரிய
மகத நாட்டில் 
விண்ணேந்துங் கடவுளரும் வியப்பெய்து மொருநகரம் 
விஜய மென்னத் 
தண்ணேந்து மலர்ப்பொழில்சூ ழந்நகரத் தொருமறை 
தவத்தின் மிக்கோன்   [ யோன் 
பெண்ணேந்து மொருபாகன் பூசைபுரி வோனவன்பேர் 
பிரம நேசன்.                                                                                     (2)

அன்னவருக் கரும்புதல்வ ரெண்மரவர் பெயர்சோம 
னனகன் வேதன்
பன்னகபூ ஷணன்விபுலன் பவுத்திரனஞ் சன்னிருத்த 
பாத னென்ன 
வின்னவர்நான் மறைமுதல வெல்லா நூல் களுந்தெரிந்தா 
ரினைய நாளின் 
மன்னுமுல கினிற்பெரிதா யுரைத்திடுமென் சித்திபெற 
மனம்வைத் தாரால்.                                                                         (3)

வைத்தவரந் நகர்க்கண்ணே யருமறையு மாகமும் 
வடித்த நாவான் 
சித்தமய லற்றவிபன் டிதனென்றோ ரருமறையோன் 
சிறப்பின் வாழ்வா 
* னத்தவனை யடுத்தேத்தி யட்டமா சித்தியும்யா 
மணுக வேட்டே    [ கேட் 
மித்தரையிற் பெறவருளென் றிசைத்தனரப் பெரியோன் 
டியம்பு கின்றான்.                                                                                (4)

*அந்தத்தவசியை.

பூசுரர்தங் குலத்தின்வரு புத்திரர்கா ளெம்பானீர் 
புகுந்த வேட்கைத் 
தேசுதரத் தந்திடவல் லேமல்லே மாயினுமச் 
சித்தி யெட்டும் 
வீசுபுகழ் பெறக்கிடைக்கும் விதம்புகல்வாம் பதுமபுர 
மென்ன மேலோர்
பேசுநகர் தனிலுள்ளான் றற்புருட னெனுமறையோன்
பெருமை மிக்கான்.                                                                              (5)

வேதமெழு நான்கென்ன விளங்குமா கமமுதனூல் 
விரிவி னாய்ந்தான் 
சூதமுனி யெனநாளுஞ் சிவகைதைக ளுரைசெய்வான்
றெடர்ந்தங் கெய்தி 
யாதரவிற் கேட்டுலகில் * அலகிலோ ரவனருளா 
லனுட்டித் துள்ளங் 
காதலித்த தடைந்திருந்தார் நீவிருமம் மாதவனைக் 
கடிதிற் சேர்ந்தே.                                                                                    (6)

* எண்ணிறந்தவர்.

இட்டமுரைத் தரன்கதைகேட் டவனருளா லெய்துவீ 
ரென்னக் கூறி
விட்டனனம் மறைச்சிறுவர் தற்புருட மேலோனை 
விரைவி னெய்திக் 
கட்டமக லப்பணிந்தா ரன்னவனு முகமனொடு 
கருனை நல்கிக்
கிட்டுசுதர் காள்நீவிர் யாரெனத்தம் மூரொடுபேர் 
கிளந்தா ரன்றே.                                                                                   (7)

என்னவிழைந் தெம்பானீ ரெய்தினீ ரெனவேட்ட 
திசைத்தார் மைந்த 
ரன்னவரைப் பார்த்திப்போ திருக்கடம்பநகர்ப் பெருமை 
† யடுத்த வற்றா 
‡ லின்னவைகேட் டனுட்டிப்பினெய்துவீ ரெனப்புகன்றா 
னிருந்து மைந்தர் 
மன்னுமுடன் மயிர்ப்பொடிப்ப விருகணீ ராரமன 
மகிழ்ந்து கேட்பார்.                                                                            (8)

† பிரசிங்கிக்க நேர்ந்த காரணத்தினால். 
‡ தசநாமங்களின் பெருமையை.

தவநகரம் முத்திபுரம் யோகபுரம் ஞானபுரம் 
சாற்றுஞ் சீர்சால் 
சிவனருளு மன்னபுரம் வெற்றிபுரங் கலியாணச் 
செல்வ மூதூர் 
புவிபுகழுந் திருக்கந்த ராச்சிரமந் திருக்கடம்பர் 
கோயில் பூமேற்

பவமகலுந் திருச்சத்தி பீடமெனப் பெயர்பத்தும் 
படைத்த தவ்வூர்.                                                                                 (9)

ஆதியினிற் சாகமெனுந் தீவதனைப் புரந்திடுநா 
லரசர் மேவித் 
தீதிறவ மாற்றுதலிற் றவநகரங் * குறளைபிறர் 
செய்யக் கேட்டே 
கோதிறவங் கொன்றபிழை தீர்ந்சிவ கதியிருவர் 
கூட லாலே 
மூதறிவீ ரந்நகர முத்திநக ராகுமென 
மொழியும் வேதம்.                                                                               (10)

* கோள் சொல்லும் குற்றம்.

திருவால வாயிலர னருண்மேவிச் சிவகுமரன் 
சேர்தலாலே 
யொருவாத யோகபுரஞ் சிவஞான மவர்க்கெங்கோ 
னுதவ லாலே
யருளாரு ஞானபுரஞ் சிவகுமரன் படைஞர்முத 
லானோர்க் கெல்லாம் 
† பெருகார்வங் கெடவன்னஞ்  சிவனருளி யன்னபுர
மாமப் பேரூர்.                                                                                    (11)

† பசியாற்றேன்றிய உணவு விருப்பம்.

நற்றவன்செய் வேள்விதனை யட்டவரை யடக்கடம்ப 
நாதன் முன்னங் 
கொற்றநெடு வாளருளும் பெற்றிமையின் வெற்றிபுரங் 
கோதின் மன்றல் 
* பெற்றமுயர்த் தவன்புரியக் கலியாணப் பெரும்பதியாம் 
பேணிச் செல்வே
ளுற்றுநெடுந் தவம்புரியக் கந்தராச் சிரமென
வோங்கு மவ்வூர்.                                                                               (12)

* இடபம். 

வெம்பகைவென் றாறுமுக வேந்தர்புரி வித்தமையாற் 
கடம்பர் கோயி 
† லம்பதும வாசனமுற் றம்பைதவ மாற்றுதலிற் 
சத்தி பீடஞ் 
செம்பொனெடு மணிமாடத் திருநகரிப் பெயர்பத்துஞ் 
சிறந்து தோன்றி 
யம்புவியிற் புகன்றவர்தம் பிறவிநோ யகற்றுமருந் 
தாய தன்றே.                                                                                     (13)

† ஆசனவகைகளி லொன்றான கமலாஸனம்.

என்றுமறை யோனுரைப்பக் கேட்டுமன மகிழ்மைந்த 
ரெழுந்து போற்றி 
துன்றுமிவை யனுட்டிக்கு முறையுமெமக் கருள்செயெ 
தூயோ னன்னோர்க்      [ னத் 
கன்றதுவு மருள்செய்யப் பெற்றனர்தம் மிடத்தடைந்தவ் 
வாறு நோற்றார் 
நன்றுலகங் களிப்பெய்தச் சின்னாளிற் சித்தியெலா 
நணுகி வாழ்ந்தார்.                                                                         (14)

அட்டமா சித்தியென்ப தணுவினுழை யுருக்கொள்ளை 
‡ லளற்றிற் றேய்ந்து 
பட்டிடா துறன்மலையிற் பருத்தல்வேண் டியவெல்லாம் 
பலித்து வாழ்தல்
இட்டமா யாயிரமா தரைக்கூடல் வலியினரு 
மேத்தல் யாரு 
மட்டிலா விழைவுருதல் வலியினருந் தடுப்பரிதாய் 
வாழ்த லாமே.                                                                               (15) 

‡ சேறு 


உரைத்திடுமிச் சித்தியெலாம் பெற்றுநெடுங் காலநிலத் 
துறைந்து பின்ன 
ரிரைத்தநதி முடியிறைவ னெழிற்கயிலை மலையடைந்தா 
ரதனா  லென்றுந் 
தரைத்தலையார் கடம்பநகர் பெயர்பத்து முரைத்தவர்கள் 
சாற்றக் கேட்டோர் 
* வரைத்துமனத் தெண்ணினரிம் மூவர்களு மலர்மாதர் 
மருவ வாழ்வார்.                                                                                      (16)

*விரும்பி. 

கந்தர்தம தாச்சிரமத் தீரைந்து திருப்பெயருங் 
கணித்தெண் சித்தி 
முந்துமறைச் சிறுவர்பெறு முறைமைதனை விரிவுபெற 
மொழிந்தா மும்மைச் 
செந்தமிழும் வடகலையுந் தெரிந்தவர்க்குக் கற்பகம்போற் 
சிறந்து நல்குஞ் 
சுந்தரர்வா ழத்தலத்தி னத்திபூத்  தமையுமினிச் சொல்லு வாமால்.         17

தசநாம மகிமையுரைத்த அத்தியாம் முற்றிற்று
ஆக விருத்தம் (178)

எட்டாவது அத்திபூத்த அத்தியாயம். 
ஸ்ரீகடம்பநாதர் துதி

பொங்கார மூரற் புகழாவுடை யம்மை வாம 
பங்கார மேவும் பதியைக்கதிர் வேலர் வேண்டச் 
சங்கார வாளொன் றருளெந்தையைத் தாம மேற்றுஞ்
சிங்கார மாடக் கடம்பேசனைச் சிந்தை செய்வாம்.        1

திருவுற்ற செல்வத் தமிழாய்ந்தறி சீர்த்தி மேவிக்
கருவுற்ற கண்ட னருட்சைவமெய்க் காட்சி காட்டித் 
தருவுற்ற ஞானப் புனல்சூழ்ந்தது தக்க மேலோர்
மருவுற்ற தொன்மைப் புகழ்பூண்டது வையை நாடு.        2

கல்விப் பொருளாய்ந் தவர்வந்து களித்துமேவச்
செல்வப் பொருளீந் துயர்சீர்க்குடி சேர்ந்து வாழு
நல்வித் தகமிக் கவிந்நாட்டினந் *நாக நாடு
†மொல்கித் தொழுஞ்சீர் வளமேவி யுயர்ந்த தோரூர்.        3

* சுவர்க்கம்.    †தாழ்ந்து.

வேறு

அப்பொற் பதிதான் றருமநக 
ராகு மென்ப ரறிவுடையோர் 
செப்பத் தருமத் திருநகர்வாழ் 
செல்வ மறையோர் குலதிலகன் 
மெய்ப்பற் றுடையான் பொய்ப்பற்றை 
வெறுத்தா னறிவான் மேதினிமே 
லொப்பற் றுயர்ந்தா னருளுடையா  
னோங்கு மவன்பேர் குணசீலன்.                                           4

ஞாலம் பரவ மவன்மனையா 
ணாமந் தரும வதியென்பாள் 
கோலம் பரவ திருவனையாள் 
குறித்த பொறையிற் புவியனையாள் 
சீலம் பரவ மருந்ததிபோற் 
சிறந்தா ளிவட்கோர் திருமைந்த 
னாலம் பரவ கருமிடற்றா 
னருள்போற் பிறந்து வளர்ந்திருந்தான்.                                    5

*திங்கள் விரவும் பெயர்தரித்தான் 
சிறந்த புதல்வற் கிருவகையாந் 
துங்க மணமுந் தொகையறியாத் 
தூய கலையும் பெறுமறையுஞ் 
†சிங்க லின்றிப் புரிந்தளித்தான் 
சிந்தை மகிழுங் குணசீல 
னங்கப் புதல்வன் றனையொருநாட் 
டனியே யழைத்தொன் றருள்புரிவான்.                                      6

*புத்திசேனன்.   †குறைவின்ரி. 

தந்தை மொழிகேட் டியல்பவனே 
தங்க புதல்வ னாதலினா 
னந்த முறுநா ளிறுகடனீங் 
காற்றி யேனைக் கடனெவையுஞ் 
சிந்தை மகிழ்வார் காசிதனிற் 
செய்தென் னெலும்பும் பகிரதியிற் 
பந்த மறவீழ்த் திடுதியெனன்
பகர்ந்தான் மறைதேர் குணசீலன்.                                       7

பின்பு சிலநாட் கழிந்திறந்தான் 
பெற்ற மறையோ னுரைத்தபடி 
யென்பு தனையோர் குடத்திலமைத்
தினிய சீடன் கரத்தளித்தே 
யன்பு தருநன் மதிசேன 
னன்றேகாசி யனைவன் போல்
முன்பு சீடன் விரைந்தேக 
முயன்று நடந்தான் வினைகடந்தான்.                                  8

கானு மலையும் பெருநதியுங் 
கடுங்கற் * சுரமுங் கடந்துபெரு 
வானும் பரும்வந் தினிகேத்த 
வளருந் தொண்டைத் திருநாட்டின் 
ஞானந் தருதண் டகவனத்தி 
னல்ல கந்த ராச்சிரமத் 
தூனு முயிருங் கரைந்துருகு 
முச்சிப் பொழுதங் குறவணைந்தான்.                         9

*பாலைநிலம். 

அடைந்து கந்த ராச்சிரமத் 
தருளுத் தரவா கினியாற்றிற் 
குடைந்து சந்தி புரியுங்காற் 
*கூல மிருந்த மாணவகன் 
†மிடைந்த சுமையிற் புதுமணமொன் 
றெய்தக் கண்டு வியந்துரைந் 
திடைந்த வெலும்பார் கடமதனை 
யவிழ்ப்ப மலரா யிருந்ததுவே.                             10

*ஆற்றங்கரை.  †இறக்கின.

கண்டா சிரியன் றனக்குரையான் 
முன்னைப் படியே கடமதனைக் 
கொண்டா னடிசி லமைத்ததற்பின் 
குலவி யருந்திக் குரவோனும் 
வண்டார் பொழிற்க ணன்றிருந்து 
காசி யனைந்து வரன்முரையால் 
விண்டாழ் நதிமீ திடவெடுத்தான் 
வெள்ளை யெலும்பா யிடப்புகல்வான்.                     11

‡செற்ற மறுசீர்க் குருபரனே 
சிறியேன் வியப்பொன் றறிவேன்மு 
னுற்ற துறைத்தா லற்றதுவந் 
தொன்று மென்னும் பழமொழியான் 
மற்ற துரைப்பேன் முனமஞ்சி 
வழங்கா திருந்தேன் சேயாற்றிற் 
குற்ற மறுமுற் பலமலராய்க் 
குலவிற் றிதுவே குடத்தகத்தே.                 12

‡கோபம்.

எனமா ணாக்க னியம்புரைகேட் 
*டிறும்னூ தெய்தி வரும்பெரியோன் 
சினமால் விடையோன் செயலெவரே 
தேளியத் தருவார் காசியினு 
முனமாந் மலராந் திருத்தலந்தான் 
பெரிதோ முழுது மிவன்மொழியை 
†வணமாங் கெய்தி யறிந்தவாற் .                 13
*ஆச்சரியம்.  †திருக்கடம்பவனமாகிய அத்தலத்திற்குச் சென்று 

அவ்வா றமைக்கத் தாகையுரை 
யன்றே யீன்றா ராசிரியன் 
செவ்வாய் மொழியை மறுத்தவரே 
தீவாய் நரகிற் சேர்வரிதை 
யெவ்வா றிடுவே னெனப்புத்தி 
சேன னெண்ணி யிடருழந்து 
தெவ்வா னவரூ ரெரித்தவனே சிவனே 
தெளிவொன் றறிந்திலனே.                 14

எந்தா யிறைவா வடியவற்கோ 
‡ரெய்ப்பினிடத்தின் வைப்பேயென் 
சிந்தா மணியே தெள்ளமுதே 
திரள்கானரியைப் பரியாக்கித் 
தந்தா யிதழி நறுந்தாராய் 
தமியேயிடர்தீர்த் திடவிங்கே 
வந்தான் டருளென் றிடச்சிவனோர் 
வானமொழியா லாருள்புரிவான்.                 15

‡வறுமை. 

சிறந்த காசி யிதினுமிகச் 
சிறந்ததலமின் றாயினுமிங் 
சிறந்த பொழுதாம் பதமுத்தி 
யியம்புங் கடம்பர் கோயிலின்வந் 
துரைந்த பொழுதே பரமுத்தி 
யுதவு மதனாற் காசியினு 
நிறைந்த பெருமை யுடையதுநா 
னீங்கா துரையும் பதியதுவே.                 16

அலர்சூழ் கங்கா நதியுனுமுன் 
னைய னுரையுந் தவராதே 
சிலவென் பமைத்துப் பலகொடுப்போய்ச்
சேயாற் றிடுகென் றரனருளான் 
மலர்வான் மொழிகேட் டருமறையோன் 
மகிழ்ந்தவ் வணமே விட்டெழுந்து
குலமா மலர்சூழ் திருக்கடம்பர் 
கோயில் புகுந்தான் குறைதீர்ந்தான்.             17

 வேரு 
மன்னுங் கந்தராச் சிரமம்வந் திடுதலு மவரும் 
பொன்னுந் தெண்டிரை வீசிடும் புகழ்க்குக நதியிற் 
றுன்னுங் காற்றுநீர்த் துளிதனைத் தூவவெள் ளெலும்பு 
மின்னு மாமல ராயிடக் கண்டனன் வியந்தான்.             18

உரைத்த சீடனைத் தழுவினன் புகழ்ந்தன னுனைப்போற் 
றரைக்கு ளாரெனக் குயிர்த்துனை யாவர்நின் சார்பாற் 
பரத்தை யேகுரித் திருந்தநந் தாதையும் * பவம்போய்த் 
†திரத்தை மேவிய வீட்டினைச் சேர்ந்தன னென்றான்.         19

*ஜனன மரண மற்று.  †அகண்ட பாவனையை.

திகழு முத்தர வாகினிச் சேய்நதி யாற்று 
மகிமை யோதிருக் கந்தராச் சிரமஞ்செய் மாண்போ 
புகழு மிக்கடம் பேசனா ரருள்புரி பொற்போ 
பகரு மென்பிவண் பூத்ததென் றாடினன் பரவி.             20

சீட னோடுமக் கங்கையிற் சிறந்த சேயாற்றி 
னாடி நான்மறைப் படிபிதுர்க் கடனுமங் காற்றி 
யேடு நீடுமவ் வென்பல ரினைதனை யீன்றேன் 
வீடு சேர்கவென் றந்நதிப் புனலிடை விடுத்தான்.         21
புத்தி சேனனென் றுரைபெறும் பூசுரன் புனன்மீ
தத்தி பூத்ததை யமைத்தலு மனையவன் றாதை
முத்தி சேர்ந்தன னாதலின் முருகன்மா நதியிற் 
சித்த மன்பிலா ரென்புவீ ழினுஞ்சிவ கதியே.            22

பத்தி யாற்புக லிக்கிறை யென்பையோர் பாவான் 
முத்த வாணகை யாக்கிய பதியுமுப் போது
நித்த மூன்றலர் தருந்திருத் தணிகையு நிகழ்த்தி 
னத்தி பூத்தவித் தலத்தினுக் கிணையென லாமோ.        23

சிறந்த வித்தலப் பெருமைகண் டாயிடைச் சின்னா 
ளறந்த வாதுசே யாற்றினிற் படிந்தருட் கடம்பி
னிறங்கொள் செஞ்சடை நின்மலக் கொழுந்தினை யேத்தித்
துறந்து ளோர்க்குமங் கரியவீ டடைந்தனர் தூயோர்.        24

இன்பு சேர்கந்த ராச்சிர மத்திரு நதியி 
னென்பு செங்கழு நீர்மல ரானதை யிசைத்தா 
மன்பர் சூழுமத் தலத்திடை யமலனை யேத்தி 
முன்பு நால்வர்வந் தருந்தவம் புரிந்தமை மொழிவாம்.        25

எட்டாவது அத்தி பூத்த அத்தியாயம் முற்றிற்று.
ஆக விருத்தம் – 203.

ஒன்பதாவது* சூராதிகள் தவம்புரிந்த அத்தியாயம்
(*குறிப்பு – சுப்பிரமண்ணிய பராக்கிரமம் “87 – வது பதங்காப வர்க்க மூர்த்தி” பராக்கிரமம் பார்க்க.)

ஸ்ரீ கடம்பநாதர் துதி

தேடு மாலயற் கரியது திருவருட் சிறப்பாற்
கூடு மாதவ ருளத்தது குளிர்ந்தவம் பலக்கூத் 
தாடு மாகமப் பொருளதென் னகவிரு ளகற்றி 
நீடு சீர்த்திருக் கடம்பர்கோ யினிறிக ழொளியே.            1

வேறு 
செப்ப ரும்புகழ் பொதிதரும் சாகத் 
தீவ கத்தினை ச் செய்யகோ னடந்துந் 
தப்பில் சீர்ப்பிர பாகர வேந்தன் 
றனையர் நால்வர்கள் சூரனெ பதும 
னெப்பில் சிங்கனே தாரக னென்ன 
விரிவிற் சூரனுக் கணிமுடி சூட்டி 
வைப்ப ளித்திடுஞ் சுமையொழித் தன்னோன் 
மனையொ டுந்தவ வனம்புகுந் தன்னால்.             2

தந்தை போயபின் சூரனுந் தனைநேர் 
தம்பி மாரொடுஞ் சார்ந்துவாழ் நாளிற்
*சந்த னாசல முனிவனங் கடுப்பச் 
சயங்கொன் சூரனும் பதுமனும் போற்றி 
யெந்தை யாம்பவப் பிணிதவிர்ந் துய்வான் 
இயம்பு வாயொரு பொருளென வவனும் 
புந்தி லாலொரு கணப்பொழு தெண்ணிப் 
புகலு வானவ ரகமலர் களிப்ப.                     3

*அகத்தியர். 

கரண மியாவையுங் கடந்தது நிறைந்த 
கருனை யங்கட லானது சனன 
மரண நீப்பது தனைநிக ராசி 
வாச கங்கடந் ததுமனக் குகையிற் 
கிரன பானுவி னொளிர்வது வேதங் 
கிளக்கு மாகம முதர்கலை தோன்றும் 
பிரன வப்பொரு னானது பரவும் 
பெட்பி னோர்க்கருள் வடிவு கொண்டதுவே.             4

பொங்கு பேரருண் மூவிரு முகமும் 
பொருந்து மாறிரு †நோக்கமுங் கமலச் 
செங்கை வேலுடன் பன்னிரு படையுஞ் 
செய்ய கின்கிணிப் பாதமுங் கொண்டே 
மங்க ளம்பெறு கடம்பணி புயந்தன் 
வடிவ மேதின மனந்தனி னினைத்தே 
யங்க வன்மயில் வாகனந் துவச 
மாயி னுங்களுக் கழிவிலை யென்றான்.                 5

†நயனம்.

என்று கூறிய முனிவனைப் பின்னு 
மேத்தி மன்னவ ரியம்புவர் தவத்தோய் 
நன்று சொற்றனை யிவற்றினை யாங்க 
ணணுகு மார்க்கமு நவிலென விரப்பத் 
தென்ற லார்பொழி னாவலந் தீவிற் 
றிரைகொ ளுத்தர வாகினிச் சேயா 
றொன்று கந்தராச் சிரமத்திற் றவநீ 
ருஞற்றி டிற்சில வாண்டினி லுறுவீர்.                 6

விரத ராகியங் கருந்தவம் புரிந்து
வேட்ட வாறடைந் தார்களெண் ணிலராஞ் 
*சரத மென்றுதென் மலைமுனி யகன்றான் 
சிங்கன் றாரகன் றமதிடத் தொருகாற் 
றிரண விந்துவந் தடுதிறற் காளி 
செலுத்து மூர்தியா யையன்வா கனமாய்ப் 
பரவி யாமினென் றவர்க்குமத் தலமே
பன்னி யேகின னன்னமா தவனே.                 7
*நிச்சயம். 

செந்த மிழ்க்கிறை செவியறி வுறுத்தத் 
தெளிந்த சூரனும் பதுமனுந் திரண 
விந்து மாதவ ரருளிய துணர்ந்த 
வெற்றிச் சிங்கனுந் தாரகன் றானுங் 
கந்த ரூர்தியுங் கண்ணுதல் திருமான் 
மைந்த ணூர்தியு மாவதே கருதி 
வரம்பெ றத்தவம் புரிந்திட நினைவார்.                 8

பொகுட்டுத் தாமரைப் புண்ணியன் றருமேழ் 
புணரி சூழுமிப் புவியினோ ராறாய் 
வகுத்த தீவெலாம் போகமே வழங்கு 
மற்றை நாவலந் தீவெனி லெவர்க்குந்
தொகுத்த போகமு மோக்கமுங் கொடுக்குந் 
தோகை பாகன்வா ழிடம்பல வாகி 
*மிகுத்த தென்றற வோர்சொலுந் தலத்தே 
மேவி நோற்றியாம் விழைந்தவா றடைவாம்.             9

*சிறந்தது. 

இதனை யன்றிவே றிருங்கதி வருமா 
றில்லை யென்னநான் மன்னரு மியைந்தே 
†கதனை சிந்தைய ராயொருப் படுங்காற் 
கருதி முன்னவ னரசியற் கையிற்றன் 
சுதனை வைத்துடன் மேருவின் றென்பாற் 
றொண்ட நாடெனுந் தோகைகண் மணியா 
மதனை வென்றகட் கடம்பநா யகன்வாழ் 
வனப்பு மிக்குயர் தலத்தின்வந் தடைந்தார்.             10

†கதம்+நை 
அடைந்த நால்வரு முத்தர முகச்சே 
யாற்றி னாடிநன் னியமமு மாற்றி 
‡மிடைந்த செம்மணிக் கோயிலை வலமாய் 
மேவி யாவலிற் கடம்பநா யகனைக் 
கடைந்தி டாவமு தினைத்தொழு துருகிக் 
கரைந்த வன்பின ராயரி தகன்று
குடைந்து வண்டிமிர் மலர்ப்பொழி லிடைமுன்
குறித்த வாறிருந் தருந்தவம் புரிவார்.                 11

‡நெருக்கமாய் மணிகளையிழைத்த. 

இந்து தீயிடை யமர்ந்துநீ ரிலைகா 
யருந்தி யும்பல பகலுண வகன்றுங் 
கொந்த ழற்படு வேனிலின் வெயிலிற் 
குளிரு முன்பனி பின்பனிப் புனலின் 
*மைந்து கொண்டுநின் றைம்பொறி யடக்கி 
மன்னர் நால்வரு முன்னிய பெறுவா 
னிந்த மாதவ மன்றியும் பலநோன் 
பியற்றுங் காலையீ னடந்ததை யிசைப்பாம்.             12

*திடம்.

இன்ன வாறிவ ரருந்தவஞ் செயுங்கா 
லெள்ளி லாதுயர் வெள்ளியங் குவட்டிற்
றன்னை யேநிக ருமையொரு பாகத் 
தம்பி ரானருட் டிருனடந் தொழவே 
பின்னை நாயக னாதிய வானோர் 
†பெயரு மூர்தியைத் தாழ்வரை நிறுத்தி 
முன்னி மீச்செலக் கலுழனோ டனமு 
முருக னூர்தியை யடுத்திது மொழியும்.                 13

†செலுத்தும். 

வைய கந்தொழுஞ் சாகத் தீவகத்தின் 
மன்னர் நின்பதம் வாரணம் பெருமை 
‡யையை யூரரி சாத்தன தழகா 
ரானை யாம்பெரு வாழ்வும்வந் தடையப் 
பொய்யில் வான்றவ மனமுதன் மூன்றும் 
பொருத்த மெய்திபல் லாண்டுகள் புரிந்தா 
ரைய நும்பெரு வாழ்விது கணமோ 
வருக ணங்கொலோ வகலுவ தறியேம்.                 14

‡பத்திரகாளி. 

கடிம லர்ப்பொழிற் கடம்பமா நகரின் 
கண்ணி யற்றிடிற் றவம்பிழை வாரா
முடித லுண்மைய தெனநினைந் தெமையாள் 
முதன்மை யெய்தினீ ராதலின் மொழிந்தேம் 
அடிகளே வெள்ளம் வந்திடு முன்ன 
மகலுங் வான்கரை புரிவ ரென்றகலப் 
படிவ மஞ்ஞையுஞ் சேவலு மூடன்போய்ப் 
பாரினற்றவம் புரிபவர்க் குரைக்கும்.                 15

நீவிர் நால்வர் நெடுங்கன லிடையே 
நின்ற ருந்தவஞ் செய்தலென் பெறவென் 
றாவி யாக்கையு மெடுத்தருந் திடல்போல் 
திரத்தெ திர்ந்துநின் றுரைத்தலு நடுங்கி 
நாவு லர்ந்துதா னயந்தவை யுரைத்தார் 
நம்ப தம்பெற விழைதலிற் பேயா 
யாவி ரென்னலும் பணிந்துநந் தவங்க 
ளவம தாயின வோவென வழுதார்.                 16

வெள்ளி யங்கிரிப் பூதரிற் பூத 
கணங்க ளாகிநீர் மேவுவீ ரென்னா 
வுள்ள மன்புற வுரைத்தது கேட்டே 
வுற்ற நால்வரு முயரண்டா வரணர் 
தெள்ளு சீர்க்கணத் தொடுமிருந் தயன்மால்
செலுத்து மூர்திநஞ் செய்தவஞ் சிதையக் 
கொள்ளி வைத்தன வேயென வெண்ணிக் 
கூடு காலம்பார்த் திருந்தனர் கொதித்தே.                 17

மற்றொர் *வைகலில் வெள்ளியங் கிரிதனின் 
வள்ளலார் தமை யேத்த 
வுற்ற வானவர் வாகனந் தாழ்வரை 
யொறுவியங் குறு காலைச் 
செற்ற மேவுமிப் பூதர்க னால்வருஞ் 
செய்யவேற் கும ரேசன் 
வெற்றி யூர்தியா மயிலினைச் சேவலை 
யடுத்திது வின வுவரால்.                         18

*நாள். 

நுங்க ளாற்றலெம் முரையகத் தடங்குமோ 
நோற்பர்மா லயனுந் தாட் 
பங்க யந்தொழற் கென்றிடி லிவ்விரு 
பறவைகள் செருக் காலே 
இங்ங னுங்களை யிகழ்ந்தன யன்னமுங் 
கலுழனா மிவை மாள
மங்கு போர்த்தொழில் புரிந்திடி லியாங்களும்
வருவமென் றுரைசெய் தார் .                     19

என்னக் கூறலுங் கொதித்துமா மஞ்ஞையுஞ்
சேவலு மெதிர்ந் தேகி 
யன்னப் புள்ளுடன் புள்ளர சுடனம 
ராற்றிய வது காலைக் 
கொன்னற் பூதரும் பொருதன ரன்னமுங் 
கருடனுங் குறைந் தேதம் 
மன்னர்க் கோதிடத் தருணமின் றாதலான் 
மறைந்தொளித் தன வன்றே.                     20

தொடர்ந்து சென்றுகண் டனத்தினைக் கலுழனைத் 
துணைப்படு மிமை யோரைத் 
தடிந்து பூதரு மஞ்ஞையுஞ் சேவலுந் 
தணந்தன ரது காலை 
யடைந்த வானவ ரிரங்கின ராயிடை 
யமலன்வெள் விடை யேறு 
மடந்தை பாகன தருள்கொடு மீண்டனர் 
மறையவன் முதல்வா னோர்.                     21

ஏகு மவ்விடை யிமையவ ரனைவரு 
மிருந்துய ரெடுத் தோதக் 
கோகு லம்புரை மேனியன் விதியொடு 
குமரவே ளடி போற்றி 
*யாகு லங்களை யெடுத்துரைத் திரந்திட 
வறுமுகன் வன மேவு
மாக ணங்களுட் சூரனா தியர்தமை 
வருந்துறச் சபிக்கின் றான்.                         22

*துன்பம். 

நீவிர் வானவர்க் கிடர்செயி நீர்மையி 
னிருதரிற் பிறந் தின்னும் 
தேவர் தெய்விராய்த் திரிகநம் வேலுமைச் 
செகுக்குமென் றருள் செய்தே 
சேவ லோடுமச் †சிகண்டியை வெகுண்டுமைத் 
தீண்டிலே மினி யென் றான் 
றாவு பூதர்முன் றவம்புரி பயனருள் 
சண்முக வெனத் தாழ்ந்தார்.                     23

†மயில். 

என்றி ரத்தலுங் கந்தராய்ச் சிரமத்திற் 
புரிதவ மிட ரெய்தா 
தொன்று நற்பெய னாதலா லசுரரா 
யுதித்தபின் நாமூ ரும் 
வென்றி மஞ்ஞைவா ரணங்கரி யரியென 
மேவுவிர் நீரென் னா 
நன்று கூறியன் றவாழித் தவையெலா 
மெழுப்பின *னவைதீர்ப் பான்.                     24

*நவை=குற்றம். 

†பொருவின் மஞ்ஞையுங் குக்குடத் துவசமும் 
புகழ்புனை கும ரேச
னொருவ லுங்கருத் துளைத்தடி யேம்பிழை 
யொப்பிலாய் பொருத் தாள்கென் 
றருவி யின்விழிப் புனழுகுத் தலுங்குக
னறைகுவ னிப் பூதர் 
திருவின் மிக்குயர் கடம்பமா நகரின்முற்
செய்தவஞ் சிதைத்தீ ரால்.                         25

†உவமை. 

வேறு
தரும மாவது பிறர்க்கிதஞ் செய்தலத் தருமம் 
புரித ராமையே பாவமிப் பொருளினு மிகையா 
யொருவி டாததீங் குறுத்தனீ ருய்யுமா றுளதோ 
கருதி லிவ்வழுக் காருதீ ‡நிரயமே காட்டும்.             26

‡நரகம். 

ஆவ தாயினும் போழற் கீரமின் றதனா
னாவி னாலுணர்த் தருஞ்சிவ ஞானமுன் நமக்கே 
சேவு யர்த்தபெம் மானருள் செய்தவத் தலமே 
மேவு வார்வினை யனைத்தையும் வீட்டிவீ டளிக்கும்.         27

நறும லர்ப்பொழிற் காஞ்சிமா  நகரினுக் கணித்தாய் 
மறுவி லாதவக் கந்தராச் சிரமத்தின் மருங்கே 
யுருத வஞ்செயி லின்பவீ டுதவுது மென்னாக் 
குறுமு னிக்கருள் குருபரக் குரிசில்கூ றினனால்.             28

இளைகொள் வேற்படை யேந்துபெம் மானிவை யியம்பக் 
கலவ மஞ்ஞையுஞ் சேவலுங் கயிலையை யகன்றே 
தொலைவில் வெம்பவந் தொலைத்திடத் *துருமலர்ப் பொழில்சூ 
ழலகில் சீர்த்திருக் கடம்பமா நகரின்வந் தணைந்த.         29

*நெரிங்கிய. 

திறங்கொள் சூரன்முன் னால்வரு மாபைபாற் செனித்தார் 
†கறங்கு வண்டிமிர் காந்தளங் கண்ணிபான் பூவை 
நிறங்கொண் மான்முதற் றேவரைப் போக்குபு நெடுங்கா 
ருறங்கு பைம்பொழிற் கந்தமா தனக்கிரி யுற்றான்.        30

†ஒலிக்கும். 

கந்த ராச்சிர மத்தினிற் கடுந்தவ னால்வர் 
வந்தி யற்றிய துரைத்தன மலைமகட் கினிய 
மைந்த னீக்கிய பூத்தலைச் சேவலும் மயிலு 
முந்து சேர்ந்தவண் முத்திபெற் றமையினி மொழிவாம்.          31

சூராதிகள் தவம்புரிந்த அத்தியாயம் முற்றிற்று. 
ஆக அத்தியாயம்  9-க்குத் திருவிருத்தம். 234

பத்தாவது சேவலும் மயிலும் சிவகதிபெற்ற அத்தியாயம் 

ஸ்ரீகடம்பநாதர் துதி 

எங்கு மாகி யுயிர்க்குயிரா 
யுருமூன் றெழுத்தி னுரைப்பொருளாஞ் 
செங்கை வேலோன் கொடியூர்தி 
செய்த பிழைதீர்த் தருள்வீட்டிற் 
றங்க வருளுங் கடம்ப வனந் 
தனிலு மடியார் தமதகத்தும் 
நங்கை யுடன்வாழ் திருக்கடம்ப 
நாதன் திருத்தாள் சிரத்தணிவாம்.                 1

அறஞ்சேர் தவத்துக் காசிபரை 
யனைந்த மாயை யிடத்துதித்த 
மறஞ்சேர் சூரன் முதன்மூவர் 
வருத்துங் கொடுமையாற் சுரர்வான் 
துறந்தார் சிலர்கள் சிறைப்பட்டார் 
துரக்க வேந்தன் காழியினிற் 
சிறந்தே தவஞ்செய் தனன்றீங்கி 
னீங்க நினைந்தக் காலத்தே.                 2

*இழுமென் னருவித் திருக்கயிலை 
யிறைவ னருளா லுமையவளும்
பழுதி லிமவான் மகளாகிப் 
பரிந்து தவஞ்செய் தனள்பரனுந் 
தொழுத சனகா தியர்க்கருளி 
யோகத் திருப்பத் தொல்லுலகந் 
தழுவின் பகல மகபதியுந் 
தளர்ந்து மதனை வேண்டிடவே.                 3

*நீர்பாய் சப்தம். 

மறைந்தே நின்று மலர்ப் †பகழி 
தூவுமதனை மாய்த் துமையாள் 
அறந்தா னோக்கி மணஞ்செய்து 
காமற் கருவ முருவளித்தங் 
குறைந்தோங் கலின்வந் தமரர்தொழ 
வுதித்த முகத்தோ டாறுமுக
நிறந்தாங் கியகட் பொறியளித்தான் 
நினையா ரகத்துக் கொளித்தானே.             4

†அம்பு. 

ஆறு பொறியும் பரந்தருளா 
லடங்கி யனல்கா லுடனிமையோ 
ராறு மருவிச் சரவணஞ்சேர்ந்
தாரு மகவா‡யாரன்முலை 
யாறு வழிபா லருந்திவிளை 
யாடி வருங்கால் விபுதரிட 
ராறும் வகையா விலக்கத்தொன்
பதுவீ ரர்களு மவதரித்தார்.                     5

‡கார்த்திகை மாதர். 

ஈச னுமையுன் மதலையென 
வெடுத்தா றுருவு மொன்றாகி 
நேச மொடும்பா லளித்தளிக்க 
நிமலன் மகவை மார்பினணைத்
தாசில் கயிலை யணையவிளை 
யாடி முருக னசமேறிப் 
பேசும் விதியைச் சிறைசேர்த்திப் 
பெருமாற் கருளி விடுத்திட்டான்.                 6

எந்தை யுடனங் குமையவளு 
மிமையோர் கூறு முறைக்கிரங்கிக்
கந்தன் றனையோர் நாளழைத்துக் 
கதிர்வேன் முதலாம் படையருளி 
மைந்த வசுரர் தமைவென்று 
வாவென் றருளப் படைகளுடன் 
முந்திப் புவிமேற்*கரிமுகனை 
முடித்தா †னசலம் பொடித்தானே.                 7

*தாரகன்.  †கிரெளஞ்சன். 

அன்று தேவ கிரியிலமர்ந் 
தறாட்கே தார முதற்பதிகள் 
சென்று கண்டு திருச்சேய்நல் 
லூரிற் சிவன்றன படைபெற்றுத் 
துன்று சுரந்தீர்ந் தருட்செந்தூர் 
சூழ்ந்தங் கசுரர் திரங்களெலாங்
குன்ற லின்றிக் கேட்டருளக் 
குறித்தா னுடுவிற் றெரித்தானே.                 8

சூர பன்ம னரிமுகவன்  
றும்பி முகன் * மை முகிப்பிறப்பும்
வீர யாகத் திவர்க்கெங்கோ
னளித்த வியப்பும் திசைவென்றே
கோர முடிபெற் றெழின் மணஞ்செய் 
தரசாள் கொடுங்கோண்மையும் பிறவும் 
கீர னுரைபோற் குருமோழியக் 
கேட்டான் றணிகை நட்டானே.                 9

*அசமுகி. 

ஏற்ற குமரன் றூதுவே 
†விருங்குன் றகன்றே கடல்பாய்ந்தங் 
காற்றல் வீர சிங்கனொடு 
மிலங்கை வீழ்த்தி யதிவேகன் 
றோற்று யானை முகற்கொன்று
நகரிற் றுயர்கூர் சயந்தனையுந் 
தேற்றி யவைசென் றரியனைமேற்
சிறந்தான் ‡சிலம்பிற் பிறந்தானே.                 10

†கந்தமாதனகிரி.  ‡வீரவாகு. 

தகுதி மொழிந்து சதமுகனைக் 
காவ லாளர் தமைநகரைப் 
புகுமையுஞ் ஞூற்று முகத்தினரைப் 
பொருவச் சிரவா குவையாளி 
முகனை யழிவு புரிந்தந்தி 
முந்த வந்து சூர்* நினைவைக் 
குகனை வணங்கி யுரைத்திட்டான் 
கொற்ற வீர வாகுவே.                     11

*எண்ணம். 

அவுணர் குலவே ரறுப்பெனெனக்
குகன்பா சறைவந் தமர்ந்திடலும் 
தவறில் போர்செய் கெனச்சூரன் 
பானுகோபன் றனை விடுத்தான்
கவர்போர்புரிகென் றிளையோனைக் 
கடிது விடித்துக் காரவுணன் 
புவிமீ தோடத் †துரந்தான்முன் 
பொறியா றாகிப் பரந்தானே.                 12

†துரத்தினான். 

எண்ணிக் குமரன் வருசூரோ 
டெதிர்ந்து பெரும்போர் புரிந்தவனை 
வண்ணக் கிரீட பங்கமுற 
வருத்திச் சூரன் மகன்மாயைத் 
திண்ணப் படையால் வீரர்களைச் 
சேனை யுடனீள் கடலின்மய 
லுண்ணச் செயக்கண் டதைவேலா 
லொழித்தான் கருனை கொழித்தானே.             13

மைய லகலச் சூரநகர் 
மாய்த்துக் கனகன் மீனாகக் 
‡கொய்தி முகன்மூ வாயிரமாங் 
குமர ரமைச்ச ருடன்கொன்றே 
வெய்ய பானு கோபனுயிர் 
வீட்டி யனைந்த வீரபுய 
னையன் மலர்ந்தாள் பணிந்தேயன்
பருளென் றிரப்ப வருள்புரிந்தா..                 14

‡அக்கினி முகன். கொய் + தீ 

முடியா யிரஞ்சே ரரிமுகனை 
முன்னோன் விடுப்ப வசிரத்தாற் 
கடியோ னுயிர்கொன் றாயிரத்தெட் 
டண்டச் சேனை களைமுழுதும் 
பொடியாய்ப் பொடிந்திந் திரஜால 
யெல்லாம் போக்கிப் பொருசூரன் 
மடியா மாயை யிருப்பலவு 
மடித்தான் வடிவேற் பிடித்தான்.                 15

உலக முழுதுந் தானாமோ 
ருருவங் காட்டி யொருமாவாய் 
நிலவு சூரன் றனைவேலா 
னீற்றி யிருவே றுருவாக்கக் 
*கலகச் சேவன் மயிலாகக்
கண்டு கோழிக் கொடியாக 
வலகின் மயில்வா கனமாகென்
றமைத்தா னவர்முன் னளித்தானே.             16

*முன்கலகஞ் செய்த 

சீறு மமறிற்  றானிறந்த 
சிங்க முகனுந் தாரகனும் 
வீறு மரியுங் கரியதுவாய் 
வேலோ னருளால் வந்தேத்தக் 
கூறும் வலிசேர் காளியொடு 
கொற்ற னைய னூர்தியதாம் 
பேறு தந்தோ மெனவவர்பாற் 
பெரிதும் மகிழ்வா லமர்ந்தனவே.                 17

அமரர் சிறைதீர்த் தெழிற்செந்தூ
ரமர்ந்து பரங்குன்றினை யனுகி 
யமரர் வேந்தன் மகளைமணந் 
தமர ருலகங் கிடியேற்றி 
யமர ரமுதொப் பாம்வள்ளி 
யம்மை மணந்து தனித்தணிகை 
யமரர் தொழவுற் றருட்கடம்பா 
புரியை யடுத்தா னருமுகவன்.                 18

வேறு 
ஆவலிற் றவஞ்செய் தங்க ணமர்தரு மயிலுஞ் சூட்டுச் 
சேவலும் போற்றக் கந்தாச் சிரமத்திற் றவநீர் செய்து 
மேவலின் முன்னஞ் செய்தீ வினையொழிந் துய்தி ரென்னாப் 
பூவலர் கடப்ப மாலைப் புண்ணியன் வீடு தந்தான்.             19

கட்கமழ் கடப்ப மோழிக் கடவுளா லொறுக்கப் பட்ட 
புட்களும் வீடு சேர்ந்த தறிந்தவா புகன்றா மேவி 
யுட்கவ லொழிப்பான் வேண்டிக் காசிப னுணர்வான்மிக்கோன் 
றப்பநீ ராடிப் போற்றுந் தன்மைமே லெடுத்துச் சொல்வாம்.         20

சேவலும் மயிலுஞ் சிவகதியடைந்த பத்தாம் அத்தியாயம் முற்றிற்று. 
ஆக அத்தியாயம் 10-க்குத் திருவிருத்தம் 254 

பதினோராவது காசிபமுனி பூசித்த அத்தியாயம் 
ஸ்ரீகடம்பநாதர் துதி 

படம்படு பாய லானும் பங்கயத் தவனுந் தேட, மடம் 
படு பிறவி நோய்க்கோர் மருந்தென விரிந்து தோன்றித், 
திடம்படு பன்பர் நெஞ்சிற் சிறந்துதித் திக்கு ஞானக், 
கடம்படி முளைத்த முட்கட் கரும்பினை விரும்பி வாழ்வாம்.         1

பாட்டாளி முரலுங் காந்தள் பரித்தருள் குமரன் 
பண்டு, வாட்டிறற் சூர பன்மன் கிளையெலாம் மாய்க்குங் 
காலைக், கோட்டுவில் வீர தீரர் குடைந்துவென் கொடுத்துச் 
சென்றார், சேட்படு சேனை காப்போர் மலையன்மா கரனாந் தீயோர்         2

பொருந்தினா ரிடுக்கண் டீர்க்கும் பொருவில்சீர் தொண்ட 
நாட்டி, லருந்தவர் தம்மைப் போற்றி யவரருள் செய்த 
வாறே, பெருந்திருக் கடம்பர் கோயிற் பீடுறு வடகீழ்ப் பாங்க
ரிருந்தவன் மீகநாத னினையடி யருச்சித் திட்டார்.                 3

வழிபடு மிவரைக் காப்பான் மங்கலங் காத்த கோமா, 
னழிவில்வா ணாளுஞ் சீரும் ஆற்றலு மொன்னா ரஞ்சுங் 
கொழுவுட னெழுவுந் தானே கொடுப்பமா கரன்றன் நாமம், 
வழுவிலந் நகருக் காக்கி வலியரில் வலிய ரானான்.                 4

பின்வலி படைத்த தீயோ ரிருவரும் பெருநீர் வையப் 
பும், பொன்பெரு முலகஞ் சூழுந் திசைகளும் பொருது 
முன்னே, மின்பெறு வேலன் போரி லுடைந்தவர் வெற்றி 
பெற்றார், இன்பமாஞ் சிவன்றாள் சேர்ந்தார்க் கரியதே தியம் புங் காலே.     5

செய்தவஞ் சிதைத்தும் வேள்வித் தீங்கன லவித்தும் 
பொல்லாக், கைதவங் கரந்து செய்துங் கண்டிகை நீறுங் 
கண்டால், †வைதவம் புகன்றுந் தீங்கே விளைத்தனர் மறவர் 
தீயோர்க், கெய்திடிற் செல்வந் தீங்கே யிழைப்பரென் பதும் பொய் யாமோ.     6

†வைது + அவம்புகன்று 

கற்பெலாம் பழித்துந் தர்ம சாலையிற் கனலிட் டார்த்தும் 
வற்பினா றலைத்துந் தீயோர் சேனைகள் வருத்த லாலே ,
நற்பெரும் புவியுள் ளாருஞ் சுரர்களும் நலிவு கூர்ந்தார், 
மைப்புயன் மறந்து மண்மேற் சராசரம் வாடிற் றன்றே.                 7

வேறு 
வெறுத்தவிக் காலையின் விபுதர்க் கீண்டையாஞ் 
சிறப்பொடு பூசைசெல் லாது வான்மழை 
மறத்தலின் மகபதி மருவு காசிபத் 
திறத்தவன் றனையடைந் தினைய செப்புவான்.                 8

தீதறு மாதவச் செல்வ னேபுவி 
மீதரு தானவர் வலியின் மேலராய்க் 
கோதறு வேள்விகள் குயிற்று வார்க்கெலா 
மாதுயர் விளைத்தலான் மழைம றுத்ததே.                 9

ஆதலிற் பசிமிகுந் தெவர்க்கு மாருயிர் 
போதருந் துயர்தனைப் போக்கி யாவிக 
ணீதரு வாயென நினைந்து வந்தன 
னாதனே வேள்வியா னல்க வேண்டுமே.                     10

தவம்பிற ரியற்றினாற் *றகுவர் தாங்கெடுத் 
தவம்புரிந் திடுவரே யாத லாலவர் 
பவங்கடி நின்குலத் துதித்த பான் மையாற் 
சிவம்புரி நீமகஞ் செய்தல் வேண்டுமால்.                     11

*அசுரர். 

என்னநின் றிந்திர னிரப்ப மாதவன் 
பன்னுதன் மேவினன் பரந்து தம்மையார் 
துன்னினும் அவரிடர் தொலைத்துக் காப்பதே 
யுன்னுமிப் பிறப்பினா லுறுதி யாவதே.                     12

இங்குநீ யியம்பிய தெவர்க்கு மின்பமாம் 
மங்கள மாதலாற் குடிகள் வாய்மையே 
பொங்குசீர்த் தொண்டநன் னாட்டிற் போதுமே 
தங்குமோர் தலத்தியாஞ் சார்ந்தி யற்றுவாம்.                 13
என்றுவா சவனொடு மெழுந்து காசிபன் 
கன்றுமான் கரத்தினான் கடம்பர் கோயிலி 
னன்றுசேர் வடகிழக் கதனை நண்ணியே 
வென்றியா மிடமென வேள்வி யாற்றுவான்.                14

ஆயிடை யருமகச் சாலை யொன்றமைத் 
தேயுற வேண்டுவ யாவுங் கற்பகந் 
தூயவற் குதவிடத் தூண்டி யிந்திரன் 
போயின னவனடி யிணைகள் போற்றியே.                 15

மாசறு மாதவன் பின்பு மாமறை 
பேசிய விதியெலாம் பெருக வோர்மகந் 
தேசுற வியற்றினா னனைய தின்புவி 
காசிபன் தண்டல மென்னுங் காசினி.                     16

வேறு 
ஒற்றினா லொற்றித் தந்த பொருளையு மற்றோ ரொற் 
றாம், பெற்றியா லறிந்து காக்கும் வேந்தர்போற் பெரியோன் 
வேள்வி, யிற்றதை யறிந்து தீயோர் *தீவினை யுஞற்ற 
லென்னா, வெற்றிமா முரச மார்த்தார் பின்னரும் விளைத்தல் 
கண்டே.                                    17

*தீ+வினை=வேள்வி 

சேனையிற் சிதைத்தும் வேள்விச் சாலைசெங் கனலுக் 
கீந்தும், ஆனையிற் றீங்கு செய்து மடுபுலியாதி யான, கானவல் 
விலங்கிற் றீது காட்டியும் வாட்டஞ் செய்தார், ஈனர்க ளளித் 
தோர்க் குந்தீ தியற்றலை யறிவித் தாரே.                     18

கொடுத்திசை பெருக்கு மாந்தர் குணமு மோர் கணவர் 
போற்றும், வடுப்படா மாதர் கற்பும் வசுந்தரை பொறுக்கும்
பண்பு, மடுத்தெவ ரழித்தா ரேனுங் காசிபன் மறைனூ 
லாற்றாற், றொடுத்தநல் வேள்வி தீய வசுரராற் றொலைவு றாதே.     19

காலனா ருயிருண் டோங்குங் காலனா ரளித்த †ஞானப்
பாலறா வாயன் மேனாட் சமணரைப் பகர்ந்து வெல்வா, னால 
வா யனைந்த வாபோ லருந்தவன் கடம்ப நாதன், கோலமாங் 
கேத்தச் செல்வான் குளிர்வனப் பெருமை கண்டான்.             20

†திருஞானசம்பந்தர். 

நெளி*யாரக் குருளை யோர்சார் நெடுவெயிற் குழன்ற 
தென்னாக், களிமயில் சிறகா னீழல் கவித்தன புரப்ப வோர் 
சார், துளிமது மழையிற் றேனு துய ருழந் தனவென் றேங்கி 
†யளியினாற் ‡றரக்குக் கையாற்றுடைத் தளிப் பனவுங்கண் டான்.     21

*பாம்புக்குட்டி .  †அம்பு.  ‡புலி. 

ஆறுகா லினங்க ளெல்லா மமலனர்ச் சனைகட் கேய, 
நாறுமா மலரின் செல்லா நறுமல ருகுத்து ஞாலத், தூறுதே 
னருந்திச் செல்லு முணர்வையு முரக மாதி, தேறிடா தீண் 
டினாலும் விடமுறாச் செயலுங் கண்டான்.                 22

வானவர் ரியக்கர் சித்தர் மாதவர் முனிவர் யோகர்,
கானவிஞ் ஞையர்க ணாதர் கருடர்கத் தருவர் மிக்கா, ரானவ 
ரெவரு மேவி யருள்திருக் கடம்ப லிங்கம், பான்மையாற் 
பரவுஞ் சீரும் பருவிழி குளிரப் பார்த்தான்.                 23

பார்த்திவை பிறவு நெஞ்சிற் பரமவா நந்த னாகிச், 
சீர்த்திசேர் தருமிக் கானந் தீயரா லழிக்கொ ணாதா, லாற் 
றினுங் கருனை செய்யு மாற்றிய மகமு முற்று, மேத்திநல் 
வரமுங் கொள்வே னித்திரு விலிங்க வாழ்வை.                 24
என்னநன் றெண்ணி யாங்கே யிருந்தவர் கோமான் 
மாமான், றன்னையேந் தியகோன் றென்மேற் சாரொரு தீர்த் 
தங் கண்டு, முன்னவன் கடம்பநாதன் முளரித்தா ணினைந்து 
மூழ்கி, மின்னுபூந் துகில்வெண் பூதி சாதனம் விளங்கப் பூண்டு.     25

மும்மொழி யாகி மூவெட் டெழுத்தினான் முடிந்தொன் 
றாமோர், செம்மொழி மனுவாற் செய்யுந் தெய்வநீர்க் கடன் 
முன் னாற்றி, மெய்ம்மொழி யாக மத்தின் விதித்தமா 
மனுக்க ளாலும், வெம்மொழித் திடுமா சந்தி விருப்புடன் 
விளங்கச் செய்வான்.                             26

ஐங்கரன் குருவைப் போற்றி யட்டசம் ஸ்கார மாற்
றிப், பொங்குமா சமனமாதி புரிந்துநீ றிடக்கை யேந்தித், 
தூங்கமா மனுக்க ளோதித் தோயத்தாற் குழைத்து நானான், 
கங்கமும் பிரம மைந்தாற் புண்டா மணிதல் செய்வான்.             27

நானான்கங்கமாவன :-கலாமந்திரம் ஐந்து, சங்கிதா 
மந்திரம் பதினொன்று. ஆக பதுனாறு. 

முச்சுடர் மூன்று தேவர் முக்குண மூன்று கால 
முச்சக மூன்று வன்னி மூன்றெழுத் துருவ மாக 
வைச்சபுண் டரங்கள் சாத்தி யாசம னாதி யங்கை 
மெச்சுநி யாத மங்க நியாதமும் விதியாற் செய்து.             28

பூரக மாதி மூன்றும் புராணவ யுவிற் புரிந்து 
சீருறு தியான மாதி தர்ப்பணம் பிறவுஞ் செய்தங் 
கேருறு தபனர்க் கீந்து சிவமனு நூற்றெட் டெண்ணி 
யூர்விடை யுயர்ந்த கோமா னுபயபா தங்கள் போற்றி.             29

தடங்கரை யேறிப் கேடில் சதுமறை யுருவாய் நீண்ட,
கடம்பினை வலமாய்ப் போந்து காசிப முனிமுன் செய்த,
திடம்பெறு தவத்தின் பேற்றாற் றிகழ்சிவ லிங்கத் தேவை, 
*நுடங்கிடை யொருபா லாக†நோக்கினா னோக்கி னானே.         30

*நுண்ணிய இடையையுடைய உமை. †நோகுக்=கண். 

கண்டனன் பணிந்து நெஞ்சங் கரைந்திரு கரமுஞ் 
சென்னி, கொண்டுகண் கலுழ்ந்தா நந்த வாரியிற் குளித்து 
நின்று, தொண்டனே னுய்ந்தே னுய்ந்தேன் றுரிசுறு 
பவநோ யின்னே விண்டனன் றவத்தின் பேறும்விரவினன் 
கரவு தீர்ந்தேன்.                                 31

என்னமெய் யன்பா லேத்தி யிளமதிக் கலையொன் றேந்தும்
பொன்னவிர் சடிலத் தெங்கோன் பூசனை புரிதற் கூறு 
மன்னிடர் தவிர்த்துக் காப்பான் வல்லபைகொழுன னாகு 
முன்னவ னிருதாண் முன்னி முன்னிரும் பூசை யாற்றி.             32

இனியசிற் றுண்டி யாதி யிளம்பயிற்றொடிய லேனைக்
கனிகடேங் காயைஞ் ஞூறுங் கைவினை*வலத்தாற் செய்யோ 
தனவகை யடைக்கா யாவுந் தந்திமா முகற்குப் போற்றுக் 
தொனிதரு நல்லகாயத் திரிமனுச் சொல்லி யீந்தான்.             33

*சாமர்த்தியம். 

புகையொளி விளங்க மாதி பொருந்துவ புரிந்து வேதச் 
சிகையினுட் பொருளை யேத்திச் சித்தியா னெய்துங் காறு 
மிகையினா லவுண †ரூறு விளைத்திடா தருள்க விந்தத் [கோர். 
தகையினா னினையுஞ் சித்திக் கணேசனென் றுரைக்கதக்          34

†துன்பம். 

என்று வேண்டியவை நல்கு மிபமுகன் கருனை பெற்று 
நின்றுவிண் ணவர்கள் போற்ற நிரந்தர மிடைந்து நேராய்ச் 
சென்றுமெய் யன்பாற் போற்றுந் திருநெடு வாயில் சார்ந்தான் 
கன்றுதா யிடைச்சென் றாங்கே கடம்பநா யகன்முற் சென்றான்.      35

பற்பல கலையும் வேதப் பனுவலு மயனு மாலுங் 
கற்பமுங் காணற்காகாக் கடம்பநா யகனை யிந்தப் 
பொற்புறு வனத்திற் றோன்றும் பூரண வடைவைப் பூசித் 
தற்பொருட் டிருவே றாய வுடற்சுத்தி  புரியச் சார்ந்தான்.         36

பவப்பெருங் கடற்கோர் புணையெனத் தோன்றும் 
பருமணிச் சிகரநீத் தொருபா
லுவப்புறு பதுமா சனம்பெற விருந்தாங் 
குடலொடு கரநியா சங்கள் 
நிவப்புறு மனுக்க ளியற்றியே நிமல 
னந்துணை யடிகளை நினைந்தே 
யவப்புலை யுடவி தூழ்வினை நுகர்வா 
னடுத்ததென் றெணியக மறுத்தான்.                     37

தன்னிரு சரணப் பெருவிரன் முதலாய்ச் 
சாற்றுமூ லத்தள விரண்டாய் 
மன்னிய மூலா தாரமே யாதி 
யுச்சியின் காறுமோர் வடிவாய்த் 
துன்னிய விடைபிங் கலைசுழு முனையாற் 
சூழ்ந்தவெண் கஞ்சமோ ரைந்தும்
பின்னிய விதயங் கண்டநாப் புருவம் 
பிரமரந் திரத்ததோ முகமாய்.                         38

கொழுமுகை யுருவா யுறநினைத் தவற்றைக் 
கோதறு சுழுமுனை வழியா 
லொழுகிய விந்து சத்தியி னமுதா 
னனைத்தபி னுயிர்ப்பையுள் ளடக்கி 
வழுவறு வாம தேவமந் திரத்தாற் 
பூரக கும்பகம் வயக்கித் 
தழுவு *சோ டிகையாற் றெறித்துமேன் மலர்த்தித் 
தம்பித வாயுவை விடுத்து.                             39

*ஓர் முத்திரை. 

மேலுற விரிவெண் டாமரை யகத்துள் 
வானமீ னுருவுபோல் விளங்கி 
யேலுமான் மாவை யான்மமந் திரஞ்சங் 
காரமுத் திரையினா லெடுத்து 
நாலுமூ விரன்மீ துறைசதா சிவன்பா 
னணுகுற விடுத்துநல் லறிவாற் 
றூலமா முடலுட் சூக்கும வுடலைச் 
சுத்திசெய் திடமென னினைந்தான்.                     40

*ஸுஷ்மதேக சுத்தி.  (*அகோரசிவாசாரியர் இயற்றிய க்ரியாக்ரம 
ஜ்யோதி முதல்பாகம்). 

பரிசமு மொலியும் விதியிடை யிரத 
மாலிடை யுரித்திரன் பாலே 
யுருவமு மணமும் மகேசனிற் புந்தி 
யகந்தையு முயர்சதா சிவன்பால் 
விரைவுரு மனமும் விந்துவு மொடுக்கி 
விளம்பிய சூக்கும தேகப் 
புரையறுத் ததன்பின் றூலதே கத்திற் 
பூதசுத் திகளைமுன் புரிவான்.                         41

பிரிதிவிபூத சுத்தி. 

பொன்னிறங் கடினம் “ல ” கரநாற் கோணம் 
வச்சிர மைங்குணம் பொருந்தித் 
தன்னிக ரைந்தா முகமனு நிவர்த்தி 
விதியதி தெய்வமார் தரையை 
முன்னிமுன் னுரைத்த கலைமனு வைங்கான் 
மொழிந்துயிர்ப் பதனைமே னோக்கி 
யன்னமுற் பூதந் தன்னையு †நான்கா 
யடுத்தபூ தங்கொளக் கொடுத்தான்.                     42 

†வாயு.       வாணமீன் நஷத்திரம். 

அப்புபூத சுத்தி

வெண்ணிறம் பாதி மதியுரு “வ” கர 
நெகிழ்ச்சிமென் கமல நாற் குணங்க
ணண்ணுறு நான்கா முகமனு விரண்டாங் 
கலையதி தெய்வமால் குளிர்ச்சி 
நண்ணுறு புனலை யுண்ணினைந் துயர்ப்பைப் 
- பூரககும்பகம் நடத்திக் 
கண்ணுறு மிரண்டாங் கலைமனு வொருநால்
விதஞ்சொலிக் கனலுணக் கொடுத்தான்.                 43

அக்கினிபூத சுத்தி. 

செம்மைமமுக் கோணஞ் சுடுகுணம் “ர” கர முக்குண 
முருத்திரன் றெய்வ 
மும்மையாங் கலைமூன் றாமுக மனுவா 
யுதஞ் சுவத் திகமுற வுடைத்தாய் 
வெம்மையா ரனலை நோக்கியவ் வுயிர்ப்பைப் 
பூரக கும்பகம் விரித்தாங் 
கம்மைசேர் மூன்றாங் கலைமனு முக்கா 
லறைந்து நீரருந்திடக் கொடுத்தான்.                 44

வாயுபூத சுத்தி

மூவிரு கோண மூவிரு புள்ளி யாயுத 
நீனிறஞ் சலன 
மேவிய “ய” கர மிருகுண நான்காங் கலைமனு 
விளம்புதற் புருடந் 
தேவருண் மகேசன் றன்னையு முடைத்தாய்ச் 
சிறந்தவா யுவை நினைக் துயிர்ப்பைக் 
காவல்செய் திருகா னான்கெனுங் கலைமா 
மனுச்சொலிக் காசினிக் களித்தான்.                45

ஆகாசபூத சுத்தி 

வட்டமாய் நிறைவாய்ப் படிகமாய் “அ”கர 
மொருகுண முதன் முக மனுவாய்த்
தட்டறு மைந்தாங் கலையதி தெய்வஞ் 
சதாசிவ மாயுத மமுதம் 
விட்டவிந் துளதாய் விளங்குவா னினைந்தே 
வாயுவை யிருமையும் விளைத்துக் 
கட்டறு மைந்தாங் கலைமனு வொருகாற் 
கழறிவான் குணமெலாங் களைந்தான்.                 46

தேகத்தை வடவிருஷமாகத் தியானித்துச்சுத்தி செய்தல். 

பிருதிவி விரையாய்ப் பிரமன்மான் முளையாய்ப் 
பேசிய விருப்புடன் வெறுப்புத் 
தருமறம் பாவ மோகமூ லமதா 
யறிவறி யாமையார் துணையாய்ப் 
புரையறுங் கலாதி சாரமாய்த் தன்மாத்  
திரைகளும் பொறிகளுஞ் சினையாய்
வருபுலன் றளிறா யுலகொரு மலராய் 
மன்னுசங் கற்பமே கனியாய்.                     47

புருடனாம் பறவைக் குண்டியாச் சினைகீழ்ப் 
போக்கி வேர் மேக்குறப் பொருந்தும் 
*பொரியரை யாலந் தருவென வுடலைப் புந்தி  
செய் † தனிலனா லுலர்ந்தி 
மருவிய வலக்காற் பெருவிரன் மீதாய் 
வாய்ந்தகா  லாக்கினி யெழுப்பி 
யெரிகொளிப் பந்த மியாவையு மிகந்து 
சூனியவெளியென நினைந்து,                     48

*பொருக்குகளையுடைய அடியோடுகூடிய  
†காற்று 

தேக சிருட்டி. 

சுழுமுனை வழிபூ ரகவழி யாகத் 
துவாதசாந்தத்தின் வீழமுதம் 
மொழிதரநனைந்தாங் கெண்ணுபு குடிலை 
புகன்றிடு விந்துநா தத்தின் 
வழுவறு மனமா திய வுடைச் சூக்க 
வடிவமுந் தூலகா யகும்வந் 
தழிவற வமர்ந்தாங் கறிவினிற் றியானித் 
தாகமிவ்விரண்டுமுற் றதன்பின்.                     49

ஐந்துவான் கலையாம் பிரணவம் பொருந்து 
மான்மமந் திரத்தையுச் சரித்து 
முந்துவா யுவைப்பூ ரகமுத லியற்றி 
முன்புபன் னிருவிர லும்பர் 
நந்திபாங் கமைத்த வுயிரையிவ் வுடவி 
னண்ணுவித் தருளமு தாட்டி 
நிந்தைநீங் குடலைச் சுத்திசெய் ததன்பி 
னந்தரி யாகமு நிகழ்த்தும்.                        50

ஹிருதயத்தைத் தமரை மலராகத் தியானித்தல் 
நிறங்கண்மூன் றுடைமுக் கோணநா பியினீ 

டசுத்ததத் துவம்விர வறுநான் 
குறழ்ந்தநா ளமதாய் மிச்சிரஞ் சுத்த 
வித்தையெட் டிதழ்களா யும்பர் 
பிறந்தவீச் சுரஞ்சா தாக்கியம் பிரியாக் 
கேசரஞ் சத்திபின் பொகுட்டாய் 
அறந்தரு சிவதத் துவம்விரை வடிவா 
யமரித யாம்புய மதன்மேல்.                     51

இருந்தருள் சோதி யிலிங்கநா யகனை 
யுச்சிமீ தீரறு விரன்மேற் 
பொருந்தவுண் ணினைந்தே காற்றினை முன்போற் 
பூரக கும்பகம் புரிந்து 
திருந்தவா வாகித் தகத்தினும் புறம்போன் 
முகமனைந் தானுமர்ச் சித்து 
வரந்தரு கென்று வேண்டிமா மாயை 
மாயையால் வளர்ந்தகுண் டத்தில்.                 52

ஞானவெங் கனல்வேட் டித்திருப் பூசைப் 
பயனுத னடுவுறை விமலன் 
பானயந் திவ்வா றருச்சனை புறத்தும் 
பரமகொண் டருள்கவென் றிரந்து 
மானிடந் தரித்தோன் றன்மனம் வேட்ட 
வரங்கொடுத் தளித்தவா மதித்து 
மோனநீத் திருவே றாகவும் நிதித்தே 
முதல்வனை வழிபட முயன்றான்.                     53

வேறு 
சாந்த னற்றிரு மஞ்சனந் * திருப்பள்ளி தாமம் 
பூந்தன் மாலிகை புனைமணி துகில்நறும் புகைசீ 
ரேந்து தூபதீ பங்கண்மற் றேனையும் பிறவுஞ் 
சேர்ந்த நால்வகை திருவமு துடன்வளஞ் செழிப்ப.        54

*கோயிற் பூமாலை 

காம தேனுவொண் கற்பகத் தருவுடன் கலந்தே 
வாம தேவன தருச்சனைக் குவந்துவந் தளிப்பத் 
தீமை தேயுறச் செய்தவ னாயகன் மகவா 
னாம தேயம தெண்ணினா னவனுளங் களித்தான்.         55 

நங்க ணாதனாங் கடம்பநா யகனருச் சனைகட் 
கங்க ணானிலத் துள்ளவு மந்தரத் தனவுஞ் 
செங்க ணாடிடச் சேர்ந்தபின் சீதநீர் தெளித்து 
வெங்க ணிங்கவோ ரிடத்திலைங் கவ்வியம் விதித்தான்.     56

பின்பே ழுந்தருள் வாயில்கா வலரையும் பேணி 
யன்பு கொண்டருட் சினகரம் புகுந்தருந் தவர்கோன் 
இன்ப மெய்யொளி யாய்முளைத் தெழுந்தரு ளிலிங்க 
முன்பு நின்றுசெய் பூசைகொண் டருள்கென மொழிந்தான்.     57

அங்கி யின்றிசை தங்குபொற் பாசன மதனிற் 
கங்கை யாதிய தீர்த்தமுஞ் * கஞலுறத் தருவித் 
தங்க ணாற்றுவ வாற்றியோர் கலசமொண் டமுதம் 
பொங்கி வீழ்வதாய்ப் புந்தியுட் கொண்டுபூ ரித்தான்.         58

*நிறை வுற
வேறு 
உருக்குசெம் பொருளாற் குயிற்றிய வள்ளத் 
தொண்புனன் மந்திர முரைத்துத் 
தருக்கர வாக்கிச் சந்தன முதலாச் 
சாத்திமந் திரத்துயர் சிரமேற் 
பொருட்பேறு பூசைத் தானமேற் பொருண்மேற் 
புரோக்கணஞ் செய்துபின் புரமூன் 
றெரித்தவன் மனுவா லாசன மூர்த்தி 
யியம்புமத் தனையருச் சித்து.                 59

திலகநன் னுதன்மீ திருதய மனுவாற் 
றீட்டிடு மூலமந் திரத்தா 
லலர்முடி சாத்திச் சங்கிதை யொருகா 
லறைந்து * தற் பூசைசெய் ததன்பின் 
மலவிரு ளிரிக்குங்  கடம்பநன் னிழல்வாழ்
வள்ளலை விதியரி மலைமேற் 
றலைவியி னுடனே பீடலிங் கத்துஞ் 
சதாசிவ வுருவமாய் நினைத்து.                 60

*ஆத்ம பூஜை. 

கலைமனு வருச்சித் தருக்கியங் கொடுப்பான் 
கருதுகா யத்திரி சாத்தி 
யலர்கழித் திருகா னிசித்தபின் சத்தி 
யாதியந் தமுமருச் சித்து 
விலகிடா நல்ல சதாசிவ மூர்த்தி 
வித்தியா தேகநேத் திரமே 
னலமுறு மாவா கனமுத னடத்தி 
நிசித்துநா லிருமலர் சாத்தி.                     61

கமழ்நறுந் தூப தீபமுங் காட்டி 
கவ்விய முறைமையா லாட்டி 
விமலநீ ராட்டிக் கருப்புரங் கூட்டி 
விரைப்பொரு ளேனவு மூட்டி 
யமலன்மெய்க் கிடுவா னமைத்தநல் லெண்ணெ
யாதியா ரக்குழம் பீறாய் 
நமையருள் கடம்ப நாயகன் முடிமே 
னயந்தமெய் யன்பினா லாட்டி.                 62

எண்மலர் சாத்தி யருக்கிய மீந்து 
நிவேதன மேனவு மியற்றி 
யொன்மலர் மாற்றி நறும்புன லாட்டி 
யருக்கியந் தபனநீ ருளவுங் 
கண்மலர் மலர மனமலர்ந் தபிஷே 
கம்புரிந் * தருவையா லொற்றி 
யண்ணன்மெய் யீரம் புலர்த்தி † யா டகத்தா 
மாயிழை யாடையொன் றணிந்து.                 63

*பரிவட்டம்.  †பொன். 

நங்கிளர் சந்தந் திருமல ராதி 
நவின்றவஞ் செழுத்தினாற் சாத்தி 
யிலங்குபொன் னரைஞாண் கோவண மாதி 
யெழினவ மணியணி யணிபா 
லலங்கரித் தாரந் தொடைதொடர் தேனார்ந் 
தவிழ்மல ரிண்டையு மணிந்து 
மலங்களைந் தருள்வான் றிருவுரு நோக்கி 
மகிழ்ந்தன னிகழ்ந்தமெய்த் தவத்தோன்.             64

‡தத்துவத் திரயஞ் சாத்திய பின்னர் 
தகுமில யாங்கபோ காங்க 
நித்தனா கமத்தி னிகழ்த்திய விதியா 
னிருமலன் றனையருச் சித்துக் 
கொத்தலர் கூந்தல் சத்தியை யிடப்பாற் 
குறித்தருச் சனைபுரிந் ததற்பின் 
வைத்திடுந் தூப தீபமுங் கொடுத்து 
வருக்கநல் லமுதநீ ரூட்டி.                     65

‡ஆத்ம, வித்யா, சிவதத்வங்கள். 

குறைவறத் தீபங் கோட்டுவ கோட்டிக் 
கோதறக் காட்டுவ காட்டி
நறைமலர் நிறைத்தாங் கஞ்சலிக் கரத்தா 
னாயகன் றிருவடிக்  கணிந்தாங் 
கிறைதிரு வெழுத்தெண் மலர்வலக் கரமேற் 
றிரும்புனலுடன் பல னெவையும் 
கறைமிடற் றவன்பாற் கொடுத்தருச் சித்தே 
கனிதரு மனத்தினாற் றுதிப்பான்.                 66

வேறு 
*விண்ணாடர் நண்ணும் வையத் தியக்க 
வடிவாகி மேவி விதிமால் 
கண்ணா யிரங்கொளுடலோனு முற்ற 
கலகச் செருக்க தறவோர் 
மண்ணார் துரும்பி னறவென்று நின்று 
வரமன்று நன்ற தருள் செய் 
யண்ணா கடம்ப வனநாத வென்னை 
யடுமைக்கொளத்த சரணம்.                 67

*இதன் விளக்கம் “கேநோபநிடத” த்தில் காண்க. 

முழவோடு தாளம் விதிமா லெடுப்ப 
முனிவோர் துதிப்ப மதியாத்
தொழுதாடி யன்ப ரருள்வாய் மடுப்ப
மலை மன்னு தோகை மகிழப் 
பழமா மலங்க ளறநா டகஞ்செய் 
பரதேவ தேவ சிவனே
யழகார் கடம்ப வனநாத வென்னை 
யடிமைக்கொளத்த சரணம்.                     68

இருளாகி யென்று மகலாத பாச 
மலமாயை கன்ம மிவை யான் 
மருளா யிறந்து மிகவும் பிறந்து 
மறுகிக் கிடந்த வுயிரைப்
பொருளா யெடுத்து மலமா சகற்றி 
யுடலாதி கொண்டு புரைதீ 
ரருளா கடம்ப வனநாத வென்னை 
யடிமைக்கொளத்த சரணம்.                     69

இன்பமாகி யின்ப நுகர்வோனு மாகி 
யருளின்ப நல்கு மிறையாய் 
முன்பாகி முன்பி னடுவாகி வித்தின் 
விளைவாகி முற்று நினயார் 
வன்பாகி யன்ப ரறமாகி யென்றன் 
மனமாகி யென்கண் மணியா 
மன்பார் கடம்ப வனநாத வென்னை 
யடிமைக்கொளத்த சரணம்.                     70

ஒப்பாரு மின்றி மிகையின்றி யென்று 
முளதாகி நின்ற வொருவா 
வைப்பான செல்வ மணவாள ஞான 
வரதா * சிவாய குருவே 
துப்பாரும் வேணி முடியாய் முடித்த 
வனலாடு சோதி துணைவா 
வப்பா கடம்ப வனநாத வென்னை 
யடிமைக்கொ ளத்த சரணம்.                     71

*பஞ்சாஷரத்தை யுபதேசிக்கும் குருவே. 

என்னெஞ்ச மென்ன தறிவாசை செய்கை 
யெனதைம் புலன்போ றிகணீ 
யென்னைச் செலுத்து மிறைநீ 
யெனக்கொர் செயலில்லை யானுன் னுடைமை 
யென்னன்பு நீயென் னறிவா னியன்ற 
பிழையும் பொறுத்து னிருதா 
ளென்னப்ப வென்றன் முடிமீ திருத்தி 
யருளெந்தை யெந்தை சரணம்.                     72

வேறு 
இன்ன வாகிய மொழிமலர் மாலைக 
ளிணையடி மலர் சாத்தித் 
தன்ன வாவறப் பணிதலு மிறையவன்
றனிவிடை மிசைதோன்றித் 
துன்னும் வார்சடை முனிவர விதிப்படி 
சோர்விலா வார்வத்தான் 
மன்னு பூசனைத் துறைகுறை வின்றியே 
வகுத்தலின் மகிழ் கூர்ந்தேம்.                     73

சிந்தை வேட்டன வர * மெவை யெனுநீ 
செப்புக வருள் வாமென் 
றெந்தை நற்கடம் பாபுரி நாயக னினிதருள் 
செயத்தாழ்ந்தே 
யைந்து வெம்பொறி யடக்கிய காசிப 
னகமகிழ் வொடுமேத்தி 
யுய்ந்து ளேனென விரைந்துநின் றுச்சுமே
லமைத்தகை யொடுஞ் சொல்வான்.                 74

*எப்படிப்பட்டவையாயினும். துப்பு- செம்மை. 

வைய முய்யநின் னருளினா லொருமகம் 
வகுப்பது மனத்தெண்ணிச் 
செய்யும் வேளையி லசுரருற் றேகொடுந் 
தீவினை புரிகின்றா 
ரைய வென்றலுங் குமரனா * லிருதிறத் 
தவர்தமை யடுவிப்பாந் 
தெய்வ மாதவ வின்னுநீ வேண்டுவ 
செப்புகென் றருள்செய்தான்.                     75

*மலையன்மாகரனென்னுமிரண்டு அசுரர்கள். 

திங்கள் வாணுத லிடம்பெற முடிமிசைத் 
திங்கள்வா ணுதல் செய்யத் 
திங்க ளாயிரங் கோடிபோன் றெழுந்தருள் 
செய்தலாற் றிருநாளுந் 
திங்கள் வாரத்தாற் சோமசுந் தரப்பெயர் 
சிறக்கவு முனைமாசித் 
திங்க ளிற் † சிவ நிசிதொறு மீண்டுயான் 
சேர்ந்து போற் றிடும்பேறும்.                     76

†மகாசிவராத்திரி. 

எண்டி சைப்படு முலகினுஞ் சோமசுந் 
தரனெனு நின்நாமங் 
கொண்டி சைத்திடு நாவின ராய்மனக் 
குகையினின் றிருமேனி 
கண்டி சைத்தவிவ் விரவினிற் போற்றிடுங் 
காதலா ரெவரேனும் 
வண்டி சைத்திடு மிதழியந் தொடையராய் 
வாழவு மருள்செய்வாய்.                         77

என்று வேண்டிய வரங்கொடுத் தாவுடை 
நாயகி யிடப்பாக 
னின்ற வாறரு ளிலிங்கமே வுற்றன
னிறைதிரு வருணோக்கி 
நன்று ளங்களித் தப்பதி யுறைத்தன 
னவிற்றுமன் னவன்றீர்த்தத் 
தொன்றி யாடியங் கிறைவனைப் பணிபவர் 
உம்பர்போற் றிடவாழ்வார்.                     78

இருவர் தானவர்க் கஞ்சிய வொருதவர்க் 
கிறையவன் றரைமீதே 
*மிருக வாதியி னுரியணிந் திருத்தருண் 
மேலவன் மிகு † நீபத் 
தருவின் மேவிய சோமசுந் தரப்பிரான் 
றாடொழு தமைசொற்றா 
முருக வேள்பொரு தசுரர்க டமைக்கொலு 
முறைமையு மறைகிற்பாம்.                         79

*புலி. †கடம்பு. 

காசிபமுனி பூசித்த பதினோராம் அத்தியாயம் முற்றிற்று. 

ஆக அத்தியாயம் 11-க்குத் திருவிருத்தம். 333

12-வது அத்தியாயம். 
மலையன் மாகரன் வதை யுரைத்தது.
ஸ்ரீகடம்பநாதர் துதி. 
கந்தனைக் கிம்புரிக் கவின்கொ ளொற்றைமாத் 
தந்தனை யருளிநீள் தண்க டம்பிலென் 
சிந்தனை யினும்வளர் தேவை யன்றியென் 
வந்தனை யாவர்பான் மருவற் பாலதே.                 1 

காசிப முனிக்கருள் கடம்ப நாயகன் 
மாசிலா நந்தியான் மாக ரற்பதி 
தேசயி ராவதஞ் செலுத்தும் வேற்கரத் 
தாசில்கொற் றவன்றனை யழைத்திஃ தோதுவான்.         2

கந்தகே ளிம்முனிக் கனன்ம கங்கெடுத் 
திந்திரன் முதலினோர்க் கிடுக்க ணாற்றிவாழ்
வெந்திறல் சூரரை வீட்டென் றோதியோர் 
மந்திர வாட்படை வழங்கி விடடன.                 3

கூதள மணிபுயக் குமரன் றீயர்பாற் 
றுதுவிட் டாற்று தீத் தொழில்விட் டுய்மினென் 
றோதவுங் கேட்கிலா தோர்ந்தே ழுந்தனன்
பூதரும் வீரரும் போற்றிச் சூழவே.                     4 

வேறு 
அந்தவெலை முந்துவேலை யாயிரங்க லித்தல்போ 
லுந்துபே ரியங்கலித்த வோசை * யாசை யோங்கவே 
வந்துமஞ்ஞை நிற்பவெள்ளை வாரணந்த ணந்ததி
னெந்தையேறி யடுகளத்தி லசுராஞ்ச வெய்தினான்.         5

*ஆசை-திக்குகள். 

ஈதுகண்டு தீதுபண் டியற்றிநின்ற மாகரன் 
கோதுகொண்ட நான்குசேனை குழுமிவந்து கழுமுள்வே 
லோதுதண்டு குந்தநேமி யோங்குதோம ரங்களே 
யாதிகொண் டெதிர்த்துநின்ற மைத்தபோர்ச மைத்துளான்.         6

வெண்மைமிக்க வொருகடற்குள்விரவுநீல வேலையேழ் 
திண்மைமிக் கெழுந்துசென் றதிர்த்துநின் றடர்த்தல்போ
லொண்மைமிக்க பூதிமேணி யோங்குபூதர் பாங்குபோ 
யெண்மைமிக்க வசுரர்ச்சேனை யெற்றெதிர்த்த லாற்றினார்.         7

கரியொலித்த †மாகமோடு காரொலித்த லென்னதேர் 
பரியொலித்த மிகவிடுத்த படையொலித்த பாரிடத் 
திரளொலித்த வீரர்தஞ் சிரிப்பொலித்த தேறலா
ருரையொலித்த கடலடுத்த வொலியடுத் தொடுங்கவே.             8

†ஆகாயத்திலோடும். 

வெற்றிமேவு வீரரோடு வெய்யசூர ரெய்யவும் 
கொற்றமேவு பூதரோடு கொடியர்சேனை கடியவுஞ் 
சுற்றுமேவு தேரினோடு துன்னுசேர்கண் மன்னவுஞ் 
செற்றமேவு படைகளைச்செ லுத்தியங்க றுத்தனர்.             9

அற்றதாள்க ளற்றதோள்க ளற்றசென்னி யற்றகண் 
ணற்றமார்ப மற்றமோலி யற்றகண்ட மற்றகை 
யற்றதந்த மற்றவால்க ளற்றநீள்பு ழைக்கையே 
யற்றதேர்கள் புரவிவெள்ள மற்றழிந்த மற்றுமே.                 10

பரந்தெழுந்து செம்புநீர் படர்ந்துபார் மறைந்துமே 
நிறைந்தெழுந்து விண்மறைத்த நீடுவெம் புணககுழாம் 
விரிந்தெழுந்து கூளிஞாளி மேலெழுந்து துள்ளுவ 
விரைந்தெழுங் கவந்தமங்க ளெண்ணிறந்த வாடுமே.             11

நிருதர்விட்ட படைவிலக்கி நீடுபூத ராடுவார் 
பொருதுபூதர் படைவிலக்கி யசுர்நின்று பொங்குவார்
இருதிறந்த ரின்னவாறு முன்னுபோ ரியற்றுகால் 
வருசமர்க்க ணாற்றலின்றி யவுணர்சேனை மாண்டவே.             12

கண்டுசீறி நாகமீது கருடனண்ணு மாறுபோற் 
றண்டமொன்று கொண்டெழுந்து சார்ந்துதீப மாகரன் 
*மிண்டுகின்ற பூதசேனை மீதுமோதி மோதியே 
மண்டுமட் குடந்தகர்த்த வாறுபோலு நூறினான்.                 13

*நெருங்கி எதிர்க்கின்ற 

உறுமொலிக்க ணரவினங்க ளுயிலொடுங்க லென்னமா 
கரனடுத்து மோதுபோது கதிநிர்த்த பூதரும் 
திரமடுத்த வீரருஞ் சிதைந்தழிந் தலைந்தனர் 
புரமழித்த பரனளித்த புதல்வனீது கண்டனன்.                     14

வேறு 
கண்டு சீற்றமுட் கொண்டுசெவ் வேளொரு 
கார்முக  மெடுத்தாங்கே 
மண்டு நாணொலி யெழுப்பினன் வெடித்தது 
படித்தல மலைந்தெல்லா 
வண்ட கூடமு மதிர்ந்தன மாகர 
னஞ்சினன் வலியற்றே 
யண்டர் நாயக னாகிய குமரனை 
நோக்கியொன் றறைகின்றான்.                             15

ஆல மாமிடற் றாதிமுன் னருளிய 
வரத்தினா னழிவெய்தேன் 
சீல மார்குரு வருளிய மந்திரத்
திறத்தினுக் கெதிர்காணேன் 
நீல மாமயி லாளியென் னொடுபொர 
நினைவது தவிர்கண்டாய் 
கோல மார்ந்திடு கருடனுஞ் சிவனணி 
யரவினைக் குறுகாதே.                             16

என்று மாகர னியம்புசொற் கேட்டெதி 
ரியம்புவன் குமரேசன் 
பொன்று நாளுனக் கடுத்தது காலனும் 
புகுந்தன னீதோராய் 
ஒன்று கேள்சிவ னணிநில வாயினு 
மிரவிமுன் னொளியாமோ 
நின்ற பேதையே வுனக்குரை நமதுவாள் 
நிகழ்த்துமென் றுரைசெய்தான்.                         17

பின்பு மாகரன் கொடுஞ்சினம் பொருந்தியோர் 
பெருங்கொடு வில்லேந்திப் 
பொன்பி றங்குமே ழாயிர மம்புகள் 
புங்கவர் புகழ்கோமான் 
முன்பு தாக்குற விடுத்தனன் விடுத்தவை 
யனைத்தையும் முருகேசன் 
மின்பி றங்குமோ றழற்கணை தொடுத்துடன் 
வெறுந்துகள் படுத்திட்டான்.                         18

மீட்டு மாயிரங் கோடிவெஞ் சரங்களை 
விடுத்தனன் ரொடுத்தொன்னான் 
கோட்டு மாமுகற் கிளையவன் வாளியிற் 
குரைந்தன னதுகண்டே 
பூட்டு வார்சிலை வலியினா லசுரனும் 
பொருகணை பலவேவி 
மீட்டு தேவரத் திரங்களு மிடையிடை 
யிடியென விடுத்தார்தான்.                     19

பார் மறைத்தன திசைகளு மறைத்தன 
படுதிறைக் கடலோடுங் 
கார் மறைத்தன வானமு மறைத்தன 
கடியவன் விடும்வாளி 
போர் மறைத்தன வனைத்துமோ ரிமைப்பினிற் 
பொடித்தன னுயிர்க்கெல்லாஞ் 
சீர் மறைத்தபல் வினைத்தொகை யனைத்தையுந் 
தீர்ப்பவற் கரிதாமோ.                     20

அந்த மாகரன் சரங்களும் தெய்வதப் 
படைகளு மகிழ்ந்தேகக் 
கந்த வேளறுத் தையிரு கணைகளிற் 
கடியவ னெடுஞ்சாபஞ் 
சித்தினாலிரண் டம்பினான் மகுடமுஞ் 
சிதைவுசெய் திருகோலா 
லுந்து தேரையு மொழித்தனன் விழித்தெனை 
யுறுதுய ரொழித்தானே.                     21

இலங்கு மோலியுஞ் சாபமு மிரதமு 
மிழந்தவ னெதிர் * சாகா 
விலங்கு போற்குதித் தாயிடைத் தன்குரு 
விளம்பிய மனுவோதித் 
துலங்கு வேற்படை யாளிமுன் மறைந்தொரு 
சூட்சியிற் பலவேறாக் 
கலங்கு மாயையால் வடிவெடுத் தறுமுகக் 
கடவுளைப் பொரவந்தான்.                     22

*சாகாவிலங்கு-குரங்கு

தீயி னங்களுஞ் செறியிருட் கூட்டமுந் 
திகிரியுந் திரைநீரும் 
பேயி னங்களு முருமிடிப் பெருக்கமு 
மூழியம் பெருங்காற்றும் 
நோயி னங்களு மெரிபடைக் கலங்களு 
நுகலருங் கொடுமாயைச் 
சேயி னங்களு மாய்ப்பல வுருவெடுத் 
தெதிர்த்தமர் செய்தானே.                     23

நாத னீதுகண் டின்னவன் மாயையு 
நவிற்றுமந் திரவீறும் 
பூத லத்தினி லழுந்திடத் திருக்கரம்
பொருந்தும்வேற் கிதுகூறும் 
தீது தீர்த்துநீ கீட்டிசை யுறைகெனச் 
செப்பிவேல் விடுத்திட்டான் 
போதன் விட்டவேல் பொருந்திடந் தனைப்புவி 
புகலும்வே லூரென்றே.                     24

கோடி சூரிய ருதித்தெனக் கீழ்த்திசைக் 
கொற்றவே லுறுங்காலை 
நாடு*கோகழி யைந்தெழுத் தெங்குரு 
நாதநல் லருணோக்கால் 
வீடு சஞ்சித மென்னவும் விடிந்தபின் 
விளிந்திடு மிருள்போன் றுங் 
கூட லான்புரி மாயையின் வலிகளும் 
குறைந்தழிந் தானமாதோ.                     25

*திருவாவடுதுரை. 

ஆன காலையின் மாகர னொருவனே 
வாகவெண் டிசையாவும் 
வான நாடரும் பூதரும் வீரரும் 
மானிலத் தருமஞ்சச்
சோனை மாரியிற் சுடுசரம் பின்னருந் 
தூண்டியார்த் தெழுந்தெங்கோன் 
மேனி மேற்சிவ னருள்கொழுப் படையினாற் 
புடைத்திட விதிர்துற்றான்.                     26

வஞ்ச னாண்மையுங் கொழுப்படைப் பெருக்கமு 
மானிலத் தவர்வானோ 
ரஞ்சு மாறுநல் லாறிறு தோள்வள 
ரண்ணல்கண் டலர்ந்தோங்குங் 
கஞ்ச மாமல ரனையதன் கரத்துறுங் 
கதிர்நெடு வடிவேலால் 
நஞ்ச மாகிய மாகரன் றலையறுத் 
துட்டினத் * னவை தீர்ப்பான்.                 27

*நவை-குற்றம். 

வேறு 
வெய்ய மாகர னிறத்தலு முலகெலாம் வேலன் 
செய்ய தண்ணரு ளொத்தது செங்கதிர் வெயிலா 
லையன் றாண்மறந் தவர்படுந் துயரெனப் பசியாற் 
றுய்ய வோதனம் வேட்டலந் தனர்துறந் தவரும்.         28

மரங்கள் வாடின மலைக்குலம் வெடித்தன வருமான் 
றரங்க நீரெனக் கானலைப் பருகுவ தடனீ 
ரெரிந்தி யாவையும் வரண்டன வெழுந்தநீர் நசையால்
விரைந்து மேற்கடற் படிந்திட நடந்தனன் வெய்யோன்.         29

நாவு லர்ந்திட செவிகளும் செவிடுற நயனம் 
பாவு தீயெழ வுடலயர்ந் துளஞ்சுடப் பதமுந் 
தாவு கின்றுழித் தளர்ந்திட வனைவருஞ் சலித்தார் 
மேவு கின்றுழிப் பசியினுங் கொடிதுவே றிலையே.         30

இந்த வேலையோ ரிளம்பொழி னறுந்தட மெழில்சேர் 
பந்த †ரோதன மலையுடன் பகரடி யவர்போல் 
வந்து தோன்றினன் கடம்பமா நகரில்வாழ் வரதன் 
றந்தை தாயலான் மகப்பசி யறிந்தெவர் தணிப்பார்.         31

†ஓதனம்-அன்னம். 

வேத சாலமுந் தொடர்வருந் திருவடி மிசையே 
*பாத சாலமின் னொலிசெயப் பரித்தகச் சரையின் 
மீது கோசிகம் விளங்கிடச் சிறந்தவெண் பொடியும் 
போத முப்புரி நூலுநீண் மார்பிடைப் பொலிய                       32

*சிலம்பு.

சுந்த ரஞ்செறி கண்டிகை மிடற்றின்மேற் றுலங்க 
வுந்து பேரொளிக் குண்டலஞ் செவியினி னொளிரக் 
கொந்து கொண்டொளி ரிளநகை திருமுகங் குளிர 
விந்து வான்பிறை யனையபுண் டரநுத லிலங்க.             33

காணு மாந்தர்கள் கண்களும் நெஞ்சமுங் கவரப் 
பூணு மேனியும் பொலிதரப் பூசுர வடிவாய்த் 
தாணு வாகிய கடம்பநா யகன்வருந் தனககண்  
டேணு லாம்பெரு மகிழ்ச்சிகொண் டனைவரும் வியந்தார்.     34

ஆடி னார்சில ரரும்பசி யகன்றவ ரெனவே
பாடி னார்சிலர் நீழலிற்†பதிகொடு பவநோய் 
வீடி யாநந்த மேவினா மெனச்சிலர் வியந்தார் 
கூடி னார்க்கெலாங் கடம்பநாயகனனங் கொடுப்பான்.         35

†பதிகொடு-அமர்வுற்று. 

மனிதர் பூதர்கள் வானவர் மாதவர் துறவோர் 
புனித ராதியோர்க் கியன்றவா சாரமெய்ப் பொறுத்தே 
யினிது வேண்டுவார் வேண்டுமா றின்னமு துடனீர்
தனிமு தற்பிரா னுதவியே பசிப்பிணி தவிர்த்தான்.         36

கருணை யேயுரு வாகிய கடம்பநா யகன்வந் 
தருளி னாற்றரு மன்னமு மருந்திநன் னீரும் 
பருகி யாவரும் பசிப்பிணி யகன்றனர் பரனு 
மருவ மாய்மறைந் தானவ ரதிசய மடைந்தார்.             37

இன்ன காலையின் மலர்மழை பொழிந்திட விமையோர் 
சின்ன மார்த்திடப் பல்லியந் துவைத்தெழத் திறல்சேர் 
மன்ன ராதியர் போற்றிட மரகத மயிலூர்ந் 
தென்னை யாள்பவன் பாசறை யெய்திவீற் றிருந்தான்.         38

முனிவர் போற்றிட யோகியர் வாழ்த்தொலி முழங்கப் 
புனித மெய்யடி யார்களர்ச் சனைசெயப் பொருவேற் 
றனிமு தற்பிரான் சார்ந்தபின் *சாரணர் பலர்போய் 
அனைய மாகர னிறந்ததை மலையனுக் கறைந்தார்.         39

*சாரணர்-ஒற்றர். 

ஒற்றர் கூறிய வுரையெனுங் காற்றடுத் துதைப்பச் 
சுற்று துன்பெனுங் கடலினுள் ளறிவெனுந் தோணிப் 
பற்று வீழ்ந்துழன் றலைபவன் மானமாந் தெப்ப 
மெற்ற மேன்மிதந் திடர்ப்படு மலையனேங் குறுவான்.         40

வேறு 
அய்யவோ வென்னுடைய வாருயிரோ வாவிக்கு 
மெய்யவோ வென்னை விடுத்தெங்கு மேவினையோ 
உய்யவோ வேரொன் றறியே னுனைகோறல் 
செய்யவோ†நீ பச் சிவன்வா ளளித்தானே.             41

†கடம்பநாதன். 

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற சிறியோர்க் கெனும்மாற்ற 
முன்னின்ற காசிபரான் முற்றும் அறிந்தேனான் 
கன்னின்ற நெஞ்சே னுனையென்று காண்பேனே.         42

என்றென் றழுதிரங்கி யேங்கி யிழிமனத்தா 
லன்று மலையன் படுந்துயர மாரளப்பா 
ரொன்று முணர்வாற் றெளிந்தபுனோற் றரைக்கூவித் 
தன்றன் படையிரத மெல்லாந் தரப்பணித்தான்.             43

அப்பணியி லன்னா ரகன்றிடலு மம்மலைய 
னொப்பிலரி யாசனத்தை யொருவியொரு மந்தணமாம் 
வைப்பிற் றனியிருந்து வன்சூரன் றாயென்னுஞ் 
செப்பிற் றிரள்கொங்கை மாயைவரச் சிந்தித்தான்.         44

வேறு 
மருவி ருந்தவ னையல ரோதியான் 
மருவி ருந்தவ னையல ரோதியே 
யொருவ ருந்தணி தம்பமு றுத்தினா 
*ளொருவ ருந்தணி தங்குப யோதரி.                 45

*ஒருவு-ஆடு 

இன்ன மாயை மலைய னிருவிழி 
முன்ன ரெய்தி முழுப்பவ மாற்றலாற்
 பின்ன வன்கெடப் போதுற லுற்றனை
யுன்னை நோவதென் னூம்வழி யுற்றாதே.             46
மாயை வார்த்தை வினவி மலையனாந் 
தீய னீவந்த தின்னது செப்பவோ 
†தாய னாய்பல தேகந்த ரிப்பவோர் 
தூய மந்திரஞ் சொல்லென வேண்டினான்.             47

†தாய்போன்றவளே. 

மலைய னெண்ணிய வாறொரு மந்திர 
நிலைய ளித்தவ ணீங்கலு மாங்கொரு 
சிலையுந் தூணியுந் தெய்வத மாப்படைக் 
குலமு மேந்தி யனலிற் கொதித்த்னன்.                 48

கச்ச ணிந்தனன் மார்பிற் கவசமார்த் 
துச்சி மேன்மகு டந்தரித்*தொன்னலா 
ரச்ச மேவவெ ழுப்படை யங்கைகொண் 
டெச்ச மின்றுயர் வாயில்வந் தெய்தினான்.             49

*பகைவர். 

வந்த தீயம லையனீ ராயிரஞ் 
†சிந்து ரம்புலி சீரரிபேய்கணத் 
துந்து சில்லியத் தேருமொன் றேறினான்
அந்தியாழியி னார்த்தவி யங்களே.                 50

†யானை.     

§வைய மெண்ணில வாம்பரி யெண்ணில 
கைய மாமலை யெண்ணில காருடல் 
வெய்ய ரெண்ணிலர் மிக்குவி ரைவியார்த் 
தொய்யெ னக்கொடி யோன்புடை யுற்றனன்.             51

§வையம்-தேர். 

தேரொ லித்தப ரிகள்சி ரித்ததிண் 
பேரொ லிக்கய மார்த்தபெ ருந்திறற் 
றாரொ லித்த தறுகண்ம லையன்மேற் 
காரொ லித்திடி வீழ்தல்க டுப்பவே.                 52

குடையெ ழுந்தகொ டிகளெ ழுந்தபோர்ப் 
படையெ ழுந்தப றந்தன பூதிவா 
னிடையெ ழுந்தும றைத்தது ஞாயிறை 
யுடைய போர்க்களத் தொன்னல னுற்றனன்.             53

மலையன் வந்தது ணர்ந்துவெம் பூதரு 
மலைவு மேவிய வீரரும் வாழ்த்தவே 
மலய மாதவன் றன்னையு மால்செயு 
மலையை நீறுசெய் வேலனும் வந்தனன்.                 54

கங்கை பெற்றக டவுள்வந் தெய்தலும் 
பொங்கு பூதவே டவைக்க னல்பொரப் 
பங்க மெய்திய ழிந்தன பற்றலான் 
றுங்க னாற்பெருந் தானைதொ டுகடல்.                 55

வேறு 
வெற்றி மேவிய மலையனாம் வெய்யவன் சேனை 
யிற்ற வாறுகண் டிரதம்விட் டிழிந்தனன் சிலகைப் 
பற்று தண்டினான் மூச்சினாற் சிலசில பதத்தாற் 
கொற்ற நீடிய பூதர்க ளழிவுரக் கொன்றான்.             56

வீர வாகுவு  மதுகண்டு வெஞ்சிலை வளைத்து 
மாரி யாமெனக் கணைமழை சொரிதலு மலையன் 
றேர தேறியா யிரங்கணை செலுத்திமுன் றடுத்துக் 
கோர மேவிய நூறுகோல் விடுத்தனன் கொதித்தே.         57

கந்த னுக்கிளை யானுமச் சரமெலாங் கடிதிற் 
சிந்தி யோரிலக் கங்கணை செலுத்தியத் தீய 
னுந்து தேரினைப் பொடித்தன னொன்ன லான் நகைத்து 
விந்த மன்னதோர் சேமத்தே ரேறினன் வெகுண்டு.         58

விலக்க ரும்பல கணையினால் வீரவா குவினைக்
கலக்கஞ் செய்திடக் கண்டதை யெண்மராய்க் கவின்ற 
துலக்க மேவிய வீரரும் வியர்வையிற் றோன்று 
மிலக்க வீரருந் தனித்தனி சமர்புரிந் திளைத்தார்.             59

அனைய காலையின் வீரவா குப்பெய ரறிஞன் 
நினைவு வந்துவெங் கணைமழை பொழிந்தவ னெடிதாய்ப் 
புனையு மாமுடி வீழ்த்தினன் தேரினைப் பொடித்தான் 
இனைய வில்லையு மிறுத்தன னிமையவ ரார்ப்ப.         60

பங்க மாற்றுமிவ் வீரனைப் படுத்துவா வென்னச் 
சங்க ரன்றரு மெழுவினைத் தானவன் விடுத்தா 
னங்க தற்கெதி ராய்ச்செல வருச்சனை யாற்றி 
துங்க வீரனு மிறையவன் படையினைத் தொடுத்தான்.         61

தொடுத்த வப்படை யீசனை வேதனைத் துளப 
மடுத்த மார்பனைக் காற்றினை யனலினைப் புனலைக் 
கடுத்த வேங்கையை யரியினைக் கரியினைப் புகையைத் 
தடுத்த மின்னிடி மழையினைத் தந்துடன் பொருத்தே.         62

எழுவி னாற்றலைத் தொலைத்தலு மாயைமுன் னீந்த 
வழுவின் மந்திர மாயையை வேற்படை மாய்க்கக் 
கழிவில் தென்றிசை நூறுயோ சனையினிற் கடிதி 
னொழிவி லாவிற லுடைந்தவன் போலுமோ டினனே.         63
ஓடல் கண்டிடு மிலக்கத்தொன் பதின்மரு முடனாய் 
நாடி யோடினர் மலையனு மாயையா னலிப்பக் 
கூடு நித்திரை கொண்டனர் வீரர்பின் குமரன் 
வாட வெஞ்சமர் புரினென் றெண்ணிமுன் வந்தான்.         64

கண்டு வேலவன் மயிற்பரி கடிதினிற் றூண்டிக்
கொண்ட வில்வளைத் தொருகணை யேவவக் கொடுங்கோல் 
மிண்டு செய்துபல் லாயிரங் கணைகளாய் விரிந்து 
விண்டு போர்புரி மாற்றலான் மெய்யெலாந்  துளைத்த.         65

கிளைத்து வண்டினங் கீண்டிய மரமென வண்டு 
துளைத்த வாய்வழி குருதீநீர் சொரிதரத் துணுக்குற 
றிளைத்த மெய்யனாய்த்தே றினனெனைப் பொருவேலோன் 
களைத்தி டப்புரி வேனெனக் கார்முகம் வளைத்தான் .         66

தன்ன கத்தெழு நெடுஞ்சினந் தணிவுறு மளவும் 
பன்ன கப்பகை மயிலிவர் முருகன்மேற் பாணங் 
கன்ன கத்தின்மேற் காரெனச் சொரிதலுந் தடுத்தான் 
என்ன கத்துறை தருமிளை யானிளைப் பானோ.         67

வள்ளல் பின்னரும் வடிக்கணை தூவியம் மலையக் 
கள்ள னேறிய கொடுஞ்சியந் தேரினைக் கலைத்தான்
தொள்ளை நெஞ்சினன் சோர்ந்தனன் பின்னுமோர்தேரிற் 
றுள்ளி யேறினன் வானவர்ச் சரம்விடத் துணிந்தான்.         68

காற்றி னத்திரம் விடுத்தனன் கடியவன் கந்தன் 
மாற்றும்  வெம்பணிப் படைவிடுத் தழித்தனன் மாற்றான் 
சீற்ற மேவுபன் னகப்படை விடுத்தனன் செவ்வே
ளீற்று காருடப் படையினா னீக்கிநின் றனனால்.          69

அக்கி னிக்கணை தீயவன் விடுத்தன னறிஞன் 
மிக்க வாருணப் படைவிடுத் தழித்தனன் வெய்யோன் 
றொக்க நாரசிங் கப்படை விடுத்தனன் றூயோன் 
றக்க தாய்ப்பொரு சரபவெம் படையினாற் றடுத்தான்.         70

அயிலும் வெஞ்சினத் தயன்படை விடுத்தனன் மலையன் 
வயிர வன்படை விடுத்தது கெடுத்தனன் வள்ளல் 
பயிலு மாற்றலன் விடுத்திடும் படைக்கெலாம் பகையாக் 
கயிலை நாயகன் மைந்தனுங் கணைவிடுத் தழித்தான்.         71

மண்ணின் மேவிய திசைகளின் மேவிய வசைதீர் 
விண்ணின் மேவிய கடல்களின் மேவிய வெற்பின் 
கண்ணின் மேவிய மலையனுங் கனிவுறு மடியா 
ரெண்ணின் மேவிய முருகனு மேவிய சரங்கள்.             72

குடையும் வானவர் படைகளுங் குறைந்தன வினியெப் 
படையி னாலிவன் றன்னைவெல் லுவதெனப் பரிவாற் 
கடையன் வீரர்போ லிவனையுங் கடிதினின் மைய 
லடையச் செய்குவ மெனநினைந் தோடின னன்றே.             73

நீப மாலிகை யானது கண்டனன் நீப 
மாப ராபர னருளிய வாட்படை செலுத்தித் 
தாப மேயெனத் திரிதரு மலையானைத் தரையிற் 
றீப மாங்கதி ரிருனைச் செகுத்தல்போற் செகுத்தான்.             74

ஞான வத்திர மொன்றுவிட் டானது நடந்து 
மான வீரர்த மாயையைக் கடிதலும் வந்தார் 
கான மாமலர்க் கடம்பனைக் பணிந்தவ ணிருந்தார் 
வான நாடர்கள் பூமலை பொழிந்தனர் மகிழ்ந்தார்.             75

விண்களித்தன திசைகளுங் களித்தன விரிநீர் 
மண்க ளித்தன தருமமுங் களித்தன வசனப் 
பெண் களித்தனள் பெரியவர் களித்தனர் கண்டோர் 
கண்க ளித்தனர் கந்தவேள் படைகளுங் களித்த.                 76

மலையன் மாகரன் குமரவேள் மாய்த்திடு சிறப்பா 
லலைவி லாதுயர் சுவர்க்கம்வாழ்ந் திருந்தன ரன்னோர் 
தலைவன் றன்னொடுஞ் சமர்புரி தலத்தினை யின்றும் 
நிலைமை மேவிய செம்புல மென்பரா னிலத்தோர்.             77

வள மிகுந்திடு மலையன்மா யிடத்தினை மலையான் 
களமெ னப்புகல் வார்முனங் கடிகொள்பா சறையா 
யிளைய வன்புகு மிடத்தினை யிரும்புல மென்பார் 
விளையு மன்புளீ ரென்றனன் மெய்ப்புகழ்ச் சூதன்.             78

வள்ளி நாயகன் மலையனை மாகரன் றன்னைத் 
துள்ளிவீழ்தர வாளினாற் ரொலைத்தமை யுரைத்தாங் 
கள்ளராமலர்க் கடம்பமா வனத்திலக் கடவுள் 
பிள்ளைமாமதிச் சடையனைப் பேணிய துறைப்பாம்.            79

பன்னிரெண்டாவது மலையன் மாகரன் வதையுரைத்த 
அத்தியாயம் முற்றிற்று. 

ஆக திருவிருத்தம் – 412

13 – வது திருக்குமாரக் கடவுள் பூசித்த அத்தியாயம். 
ஸ்ரீகடம்பநாதர் துதி 

வைகுந்த மெடுத்துமுன மசுரர்தமை மாய்த்தகுன் மன 
த்திற் றீமை, வைகுந்த குவமலைய மாகரனை வாட்படையால்
வாட்டிப்  பைம்பூ, வைகுந்த மிடைகடம்ப வனத்து வந்து
பூசைசெய மகிழ்ந்து தோன்றும், வைகுந்த மாலறியாக் கடம் 
பநா யகனிருதாள் வணங்கி வாழ்வாம்.                     1
விதிமுறைசெய் வேள்விதனை யடுமிருவர் விளியவடல் 
விளைத்த செய்வேல், எதிரில்*வய வீரரொடு மிறந்திடுவெம் 
பூதருமுய்ந் தெழுந்து சூழ, வதிரொலிய வியங்கலிப்ப வடுகள 
நீத் தாடனெடுந் தோகை யூர்ந்தே, வதிவடிவே லையுநினைப்ப 
வரவேந்திக் கடம்பவன மருங்கு வந்தான்.                 2

*வலிமை பொருந்திய. 

ஞான வேலவ னண்ணித் தலநதி 
ஞான மூர்த்தியு நற்பிர தோடமுந் 
தான மொன்றினிற் சார்வரி திவ்வருட் 
டான மொன்றிற் றழைத்ததென் றெண்ணியே.                 3

மீனத் திங்களும் வெண்மதி பக்கமு 
மான நன்மக மன்றியும் மந்தநாண் 
மேன நற்பிர தோடமு மேலலாற் 
கோன ருச்சனை யாற்றக் குறித்தனம்.                     4

ஆத லாலெம் மிறைவ னருச்சனைச் 
சீத நீதமு தைங்கவ்வி யந்திருக் 
*கோதை யாதிகொ ணர்கென வெண்ணிறப் 
‡போத கத்துப் புரந்தரற் கோதினான்.                     5

*புஷ்பமாலை. ‡யானை. 

வான வேந்தகன் றானவ்வ னத்திடை 
மான வேலவன் வானவர்த் தச்சனைத் 
தான ழைத்தோர் தடனகர் செய்கென 
வான தென்றவ னுந்தொழு தாக்குவான்.                     6

ஆழி யென்ன வகழி யணிமதி 
லேழி ருந்தநி லையெழிற் கோபுரம் 
பாழி சூளிகை மாளிகை பாங்குசேர் 
வாழி வீதுசூழ் மாநக ராக்கினான்.                         7

வேறு 
ஓங்குமறை யவர்பயிலு §நியமமமைத் துலகையெலாந் 
தீங்ககற்றிக் காத்தருளுஞ் செல்வர்தமா வணமியற்றித் 
தேங்குவணி கரின் *மறுகும் செய்திவர்கண் மூவரையுந் 
தாங்குபுக ழேர்த்தொழிலார் வீதிகளுஞ் சமைத்தனனால்.         8

§தெரு. *தெரு. 

ஓதியவிவ்வீதிகளி னொருபுறமா யொளிதிகழச் 
சாதிபேதமதாகுஞ் † சங்கரர்தம் மனைகள் புரிந் 
தேகமிலாக் கடம்பவனத் தெந்தைபணி விடைபுரிந்து
தீதகலும் பரிசனர்தாஞ் செறியும்வீ தியுங் கண்டான்.             9

†கலப்பு ஜாதியர். 

சரியைமுதனாற் பதமுஞ் சாற்றுமறை வேள்வியுமிக் 
குரியவராயருணீபத் துறைசோதி யிலிங்கவரன் 
றிருவடி மூவிருபொழுதுந் தீண்டுசிவ வேதியராய்  
வருமாதிசைவர்கள்வாழ் மடங்களுமுண் ணகரமைத்தான்.         10

ஞானமணி விளக்காகி யருட்கடம்ப நாதனுறை 
ஞானமணித் திருக்கோயிற் றிருப்பணிநா டொறும்பரவும் 
ஞானமணி ஞானவதி முதற்றீக்கைக் குரியவராய் 
ஞானமணி விளக்கிடுவார் மடங்களுநன் குள்ளமைத்தான்.         11

வேறு 
கற்பமு மழிவுறாக் கடிகொண் மாமதிற் 
கற்பக மனையபூங் கடம்பி னுள்ளுறக் 
‡கற்பகை யெறிந்தவேற் கடவுள் போற்றவாழ் 
கற்பனை கடந்துளான் கோயில் கண்டனன்.                 12

‡இருடுறந் தெழுமணி யிலங்கு கோபுர 
மிருவர்முன் றேடநீண் டெழுந்த சோதியா 
மிருநில மேத்துமிச் சிகரி மேற்கொடி 
யிருண்மிடற் றவன்முடி யிருந்த கங்கையே.                 13

‡பகைவனாகியரெளஞ்சன். 

ஞாலந் தோன்றிய வுயிர்க்கெலா நவிற்றுமிந் நகரே 
சீலந் தோன்றுவீ டருடிறந் தெரித்தென விதனு 
ளாலந் தோன்றிய மிடற்றிறை யடிகளர்ச் சனைசெய் 
காலந் தோன்றநின் றொலி‡ யிய மண்டபங் கண்டான்.         14

‡இதய- வாத்தியம். 

அம்பு யத்திரு மண்டப மாயிரந் துவர்க்காற் 
செம்பபொன் மண்டப நடனமண் டபத்திரு நூற்றுக் 
கம்பண்டப மேனைய மண்டபங் கவினி 
யும்பர் சூழுமைந் தாவர ணங்களு முறுத்தான்.                 15

கான மாமலர்க் கடம்பநா யகன்றிரு முன்னர் 
மேன நந்திவெள் விடைக்கொடி  மிக்குயர் கம்ப 
மான நற்பலி பீடமும் வகுத்தனன் றென்கீழ் 
ஆன பாங்கரி னடுமனை மண்டப மமைத்தார்.                 16

இந்தி ரன்றிசை யேறுதென் பாற்குரு சோம 
சுந்த ரப்பிரா நிருதியி லைங்கரன் றொண்டர் 
கந்த ராவுடை நாயகி யுத்தரக்*ககுப 
முந்தி வாழிட முந்துமா வரணத்து முயன்றான்.                 17

*திசை. 

முயன்ற கோயிலுண் மொழிந்தபே ரூழியு மழியா 
துயர்ந்த மாமணி விமானம் தும்பரும் பரவ 
வயங்கொ ளுந்திருக் கடம்பநா யகன்வளர்ந்த ருள்வா 
னியைந்து கண்டுவந் திளையவ னிணையடி தொழுதான்.         18

தொழுத கம்மியற் கருள்புரிந் தருமுகத் தோன்றல் 
பழுதில் சீர்த்திரு நகரமும் பரன்றிருத் தளியும் 
பொழிய ருட்டிருக் கண்மலர் சாத்தியே புவன 
முழுது மானதன் றந்தைதாள் வழிபட முயன்றன்.             19

ஆயகாலையின் மகபதி சுரரொடு மமலன் 
றூயமேனியின் லாட்டுவ சூட்டுவ துவர்வா 
யேயவூட்டுவ திருமுனர் கோட்டுவ வெல்லாந் 
தூயவைந்தரு நல்வகைத் திறைஞ்சிடத் தொல்லோன்.             20

கடம்படித்தலச்  சோதியை யாட்டவுங் கனிவாந் 
திடம்படிந்ததின் முழ்கிடிற் றேவர்மா னிடர்மற் 
றிடம்படிந்தவ ரெவருமுய் யவுமுளத் தெண்ணி 
யுடம்பிடிப்படை யூன்றினன் குடகடற் கொருசார்.             21

பிரணவப்பொரு ளரன்பெறப் பேசிய பெரியோன் 
வரையிலூனறுவே லுலகெலாந் தணந்துசார்ந் தண்டப் 
புரிசைகீண்டதவ் வழியவன் பொருந்தருட் டீர்த்தம் 
புரையகற்றுசே யாறெனப் புடவியில் வருமால.                 22

வேறு 
கரைநிறை தருமர முறிதர கரிவெரு வொடுமிரியத் 
திரைபொரு நுரைவிரி கரமவைதிசைவிசை யொடுமெறியா 
*முரிதரு மலையுடை மடமக ளுடல்கிழி படமுடுகா 
‡வரியர வுணவென வுடைமயி லிறையவ னதிவருமால்.         23

*சூழ்ந்துள்ள. ‡நீண்ட சர்ப்பம். 

சேயாற்றினைப் பரவசிவமாக உவமானிக்கின்றார். 

உழைகொடு மணியனல் கொடுமித ழிகளுறு சடைமுடியா 
விழைவொடு மிகுமர வொடுபுலி யதளொடு கரியுரியொன் 
டழைகொடு பெணையிட மதுகொடு தடமதி முடிகொடுநீண் 
மழவிடை மிசைவரு தலினர னிகர்வது வரநதியே.             24

பிரமசாரியாக உவமானிக்கின்றார். 

நீரொடு சிறுகர கமதொடு நெடுமகிழ் கொடுகலையோ 
டாரறை மறைபல துறைதொறு மறிதர வெதிர் வரலா 
னேரொழு குறுநிலை பலவொடு நிகழ்கிடை கொடுவரலாற் 
சீரோடு வருகுக நதியது சிறுமறை யவர்நிகராம்.                 25

மகபதி*கனவுல கினினிலை பெறவா மருளியசீர்க் 
ககபதி யுயர்க்கொடி யவனுடை மருமக னதிகடுகா 
நகபதி மகளொடு சிவனுறை நரைநிறை தருநீபச் 
சகபதி தொழுதிரு நகர்தனை வலமொடு கடறழுவும்.             26

*பொன்னுலஞ். 

வேறு 
குக்குடத் துவசச்சேய்தன் கூர்வேலா லழைத்திடுசே 
யாறிவ் வாறு, பக்கமுள குளமேரி வாவியெலா நிறைத்தவ 
னைப் பரவ மன்பர், மிக்குறுபே ராநந்தக் கடலினிடை யடை 
வதுபோல் வேலை நீரிற், புக்குவிரவியததுகண் டெல்லோருங் 
களித்தனரப் பொழுது தன்னில்.                         27

மருவுகதிர் வேலவன்கை வாளதனான் மலையனுமா கரனு 
மாய, விருவினையாம் பிறப்பிறப்பு மின்றழிந்த தெனவுலகோர் 
இன்ப மெய்தச், செருமலிந்த வசுரர்குல மின்றொடுவே ரற்
றதெனத் தேவர் போற்றப், பருதியுந்தன் ஞாதியென்றே 
மூழ்கநினைந் தெனக்கடலிற் படிந்தா னன்றே.                 28

மலைக்கால வருணனை. 

சிவனடிசண் மெய்யன்பிற் றொழுமவர்கள் விழியெனவும் 
செங்கை போன்றும், §புவனமிசை நறுங்கமலங் குவியவளர் 
செங்குவளை பொலிந்து பூப்பத், தவமுனிசெய் தீவினையை 
தடுத்தவர்தீ வினயினிருள் சாரச் செவ்வே, ளவருயிர்கொன் 
றிடுவீரப் பிரதாப மெனச்‡செக்கர் விரிந்த தன்றே.             29

§புவனம்-நீர்.  ‡செவ்வானம். 

துன்புறுமை வினைப்போகந் தொலைந்துழியங்  கிறைவ 
னடித் துணைக்கண் டாங்கே, யன்புறுமை யடியவர்கள் சிவதளி 
கள் வேட்டுவிரைந் தணுகு மாபோன், மன்புவியிற் பகம்புனு 
கர் பசுவினங்கள் குழக்கன்றை மனத்துணாடி, யின்புறுநன் 
மனைகடொறும் விரைந்துவிரைந் தெய்துவன வாகுமெங்கும்.         30

வேறு 
இருந்த வாதன மேட்டொடுங் கைக்கொளீ இப் 
பரிந்து வாயிற் குருமொழி பன்னுறத் 
தெறிந்து வீடுறச் செல்லு மகாரிமை 
பொருந்தி யோகர் வழிக்கொளல் போலுமே.                 31

இரவை ஸ்திரீயாக உவமானிக்கிறார். 

வான மெல்லிடை வண்மதி யேர்முக 
மீன முண்ணகை மேக நெடுங்குழ 
லான செக்க ரணிதில தங்கொடு 
மேன*வல்லெனு மெல்லிய றோன்றினாள்.                 32
*அல்-இரவு

சந்திரோதய வருணனை. 

மாயம் வல்ல மலையனை மாகரத 
தீயனைப் பொரு செய்திரு மேனிமே 
லாயநல் லமு தாட்டியைய் வேனெனா 
நேயமோ டுறல் போன்றது நீண்மதி.                     33

தக்க பற்பல சமய நடுவணே 
மிக்க சைவ சமயம் விளங்கல்போற் 
றொக்க ‡தாரகை சூழவோர் தூமதி 
திக்கெலா மொளி செய்து சிறந்ததே.                     34

‡நஷத்திரம். 

வண்ண வேலணி வள்ளி மணாளனெம் 
மண்ணல் பூசனை யாற்று நிசிப்பொழு 
தெண்ணு மென்ற னுரையள வோவினி 
புண்ணி யக்கும ரன்செயல் போற்றுவாம்.             35

வேறு 
சீர்வளர் மணிகொ ழித்துச் சென்றசே யாற்றைச் செவ்வேள் 
பார்வளர்ந் தோங்கச் சுத்தி பயிற்றியப் புனலுண்மூழ்கி 
யேர்வளர்  மேணி யீரம் புலர்த்தின னுபிரை யெல்லாம் 
நேர்வள ரருளா நந்த வாரிநீ ராட்டு நேசன்.             36

இவகை யாவி யூட்டி யமைந்தகோ சிகந்தை யம்பொன்
மெய்யிசை விளங்கச் சாத்தி வெண்பொடி யுருத்திராக்கம் 
சைவவா கமத்தாற் சாத்தி பிரபல தருமமாங்கட் 
செய்வன புரிந்தா னாயேன் தீவினை தீர்க்குந் தூயோன்.     37

வினைத்தளை யருத்தா நந்த வீடுயிர்க் கெல்லா நல்குந் 
தனிப்பொருள் வீதி நீங்கிக் கோயிலை வலமாய்ச் சார்ந்து 
முனிக்கணத் தோடு நீப நாயகன் முன்ன ரெய்தி 
யினித்ததே மொழிபா லாகியாவுமா மிலிங்க வாழ்வை.         38

சிவமரு வுருவங் கத்தா கன்மமென் றைந்தாச் செப்பும் 
பவமிலைந் தாய சாதாக் கியத்தையும் பரிவி னோடுங் 
கவரில்கீழ் மேற்பீ டத்து மிலிங்கத்துங் கண்டு போற்றி 
யவமில்கொல் லாமை யாதி யெண்மல ரமையெச் சாத்தி.     39

சிவம், அமூர்த்தம், மூர்த்தம், கர்த்துரு, கன்மமெனச் சாதாக்கியம் 
ஐந்தாம்.
அஷ்டபுஷ்பமாவன:- கொல்லாமை, இந்திய நிக்கிரகம், பொறுமை, 
தயை-பாவனை-தவம்-சத்தியம்-ஞானம். 

எண்ணெய்மா நெல்லி மஞ்ச ளியம்புமா னைந்தே யைந்தாய் 
நண்ணிய வமுத மின்பா னறுந்ததி நெய்தேன் கன்ன 
றண்ணய கனிதேங் குண்ணீர் கூவிளஞ் சந்தச் சேறு 
கண்ணிய முறையா லாட்டிச் சுத்தநீர் கருதி யாட்டி.         40

*பத்துறழ் நூற்றுத் தாரா பாத்திர † மாமா வின்கோ 
டுத்தமவெண்கோட் டானு முறுபுன லாட்டிப் பின்னர் 
வைத்தவர்க் கியஞ்சே யாற்றுத் தபனநீர் மகிழ்வாலாட்டி 
மெய்த்தவீ ரம்புலர்த்திப் பரிவட்டம் விளங்கச் சாத்தி.         41
*ஸஹஷ்ரதாரா.  †ஆமா;காட்டுபசு. 

வெண்பொடிக் கந்தமக்க மறுகதும் வேறு சாத்திச் 
கண்பெறு மகுட மாதி பரிபுர வரையுங் கையா 
லெண்பெறு முறுப்புத்தோ றுமெழின் மிகுத்திலங்கச் சாத்தித் 
தண்பயி ‡லிண்டை மாலை சரமுதற் பலவுஞ் சாத்தி.         42

‡தாமரை. 

சருக்கரைபயிறு பாணெய் ததிபுளி மிளகெள் ளெண்ணெய் 
விரைக்கொளப்  பயிற்று மன்னம் வெற்றனந் துவைஉஅல் தீயல் 
பருப்பு நெய் கறிநற் சாறு கறிவகை பலசிற் றுண்டி 
தெரித்தபல் வேறு தெண்ணீ ருடநிவே தித்த பின்னர்.         43

மறைச்சிலம் பலம்பு நோன்றாண் மலாமுக மோலி மீது 
முறைப்படப் பாத்தி யாதி மனமுவந் துதவி வாச 
நிறைந்ததூ பாதி யீரெண் முகமனு நேர்ந்து குழ்ந்து
நறைச்செழு மலரைந் தெண்ணிச் சாத்திநன் கேத்தலுற்றான்.     44

வேறு 
பூத மைந்துமாய்ப் பூத மல்லவாய்ப் பொறிபு லன்களா 
யவைக ளல்லவாய்க், கோதி லுட்சர ணங்க ணான்குமாய்க் 
கூறு நாற்கர ணங்க ளல்லவாய்த், தீதில்*காலமே யாதி யேழு 
மாய்ச் செப்பு  மன்னவை யல்ல வாய்ச்செழுஞ், சோதியாந் 
திருக் கடம்ப நீழலுட் டோன்றி வாழ்சுக சொருப போற்றியே.         45

*காலம், நியதி, கலை,வித்தை, அராகம், புருஷன் மாயை யென 
வேழாம். 

பிரம் மூர்த்தியாய்ப் பிரம மல்லவாய்ப் பேச்சிறந்திட 
மாகி யெங்குமாய்க், கருது பூரனா கார மூர்த்தியா யகண்ட 
பூரனாதீக மாய்மிகுந்,† தரணி நீரனல் வாயுவான்மதி தபன 
னாவியாத் தழைத்த மேனியாய்ச், சுருதி யந்தமாய்க் கடப்ப 
நீழலுட் டோன்றி வாழ்சுக சொருப போற்றியே.                 46

†அஷ்ட மூர்த்தம். 

உயர்ந்த ‡ சைவதத் துவங்க ளைந்துமா யோங்கு மன்ன 
வை யல்ல வாய்வளர், வியத்த மூர்த்தியாய் வியத்த மல்ல வாய் 
மிக்க வாவியா யாவி யல்லவாய், துயக்க றுத்தபூங் 
கடம்ப நீழலுட் டோன்றி வாழ்சுக சொருப போற்றியே.             47

‡சுத்த வித்தை, ஈச்வரம், சாதாக்கியம்,சத்தி, சவம், எனச் சிவதத்துவம் ஐந்தாம். 

செய்ய தாண்மலர் செங்கை மாமலர் சிறந்த கண்மலர் 
செய்ய வார்சடை, துய்யவங்குலி யானு மந்தகன் றும்பி காம 
ன்விணாறிராவண, னையநின்றநன் மேனி நம்பனே நம்பு 
வார்வினை வெம்பு மாறரு, ளையனேயருட் கடம்ப நீழல்வா 
ழமல ஞானசிற் சொருப போற்றியே.                     48

போற்றி போற்றிமும் மலவி ருட்பகை போக்கி வீட 
ருண் ஞான பாநுவே, போற்றி போற்றிபூங் கொன்றைவான் 
மதி புரிந்த செஞ்சடைக் கணிந்த பூரணா, போற்றிபோற்றி 
யென் றேத்து மன்பர்தம் புந்தி வேட்டவை யருளு மெந்தை 
யே, போற்றி போற்றிதண் கடம்ப மாநகர் புரக்கு ஞானசிற் 
சொருப போற்றியே.                             49

வேறு 
என்றுநின் றேத்துங் காலை யென்னையாள் கடம்ப நாதன் 
மின்றிரு வடிவேற் செங்கை விசாகனுக் கருளிச் செய்வான் 
முன்றொழு தேத்து மிந்த முனிவரன் முறைவு தீர 
நன்றருள் செய்து வேள்வி நலம்பெறப் பாதுகாத்து.             50
மைந்தநீ விடுத்த வைவேன் மன்னிய வேலூர்மேவி 
யந்தரர் முனிவர் நாகர் மானிட ராதி யானோர் 
சிந்தனைப் பேறீந் திந்தத் தினத்தெமை யாண்டுக் கோர்கால் 
வந்துவந் தனையி யற்றி வாழியென் றருளிச் செய்தான்.         51

தேவர்கள் முனிவர் யோகர் சித்தர்கந் தருவ ரண்டர் 
காவலர் எவரும் போற்றக் கடம்பமா நகர்க்கு நாதன் 
தூவருள் புரியப் பெற்றுத் தூரியந் துவைப்ப வீரர் 
யாவரும் போற்ற வேள்விச் சாலைவந் தணைந்தா னெங்கோன்.     52

அங்கனைந் தடிகள் போற்று மருந்தவர்க் கரச னான 
பங்கய மலரோ னீன்ற காசிபன் பரிவு கூரத் 
தங்குநன் மயங்காத் தோம்பிச் சயசய முழக்கத் தோடு 
மெங்கணா யகனும் வேலூ ரெய்திவாழ்ந் திருந்தா னன்றே.         53

இளையனார் வேலூ ரென்றப் பதிப்பெயரியம்ப வும்பூந்,
தளையவிழ் மலர்சூழ் வாவித் தடாகமுஞ் செழித்துச் செந்நெல், 
விளையவும் வசித்தோர் கண்டோர் மேவினோர் வினைகள்யாவுங், 
களையவு மிளையோ னெண்ணிக் கருணை கொண்டினித மர்ந்தான்.     54

புரந்தரன் வாழ்வின் மிக்கபோகமும் பொறுளும்பெற்று 
நிரந்தரச் செல்வர் மாட நெருங்கிய வேலூர் மேவி 
வரந்தரு குமரன் பூசை செய்தமை வகுத்தா மிப்பாற் 
பரந்தருள் புரியு மென்தாய் தவம்புரி பண்புச் சொல்வாம்.         55

பதின் மூன்றாவது திருக்குமாரக்கடவுள் பூசித்த அத்தியாயம் முற்றிற்று. 

ஆக திருவிருத்தம் – 467

14 – வது உமையம்மை தவம்புரிந்த அத்தியாம். 

ஸ்ரீகடம்பநாதர் துதி 

வேத வுள்ளுரை யாவுமாய் விளம்புவிண் முதற்கோ 
ராதி யாய்த்தனக் காதியீ றின்மையா யனையோர் 
பாதி யாய்ப்புவி முற்றுமாய்ச் சிவாகமம் பகரு 
நீதி யாய்த்திருக் கடம்பில்வாழ் நிமலனை நினைவாம்.             1

திருக்கயிலாய வருணனை 

பச நீங்கிய மன்பதைப் பரப்பெனப் பதிமேற் 
பூசு வெண்பொடிப் பொலிவெனப் போர்விடை யுருப்போ 
லாசி லைந்தெழுத் துணர்ந்தமெய் யடியவர்க் கறம்போற் 
றேசு மேவியே திகழ்வது திருக்கயி லாயம்.                 2

போழு மாமதி முடிப்பொருண் முடியுறும் பொலிவாற்
சூழு மாரணங் குலவுறு கின்றதோர் தொடர்பால் 
வீழு மான்மத நீர்பல துறைபெறும் வியப்பால் 
வாழி மாமறை நிகர்த்தது வெள்ளிமால் வரையே.             3

திருவி னாயக னாதியோர் வணங்குறச் செறிகாற் 
பொருவி லாதுயர் * புதவுறு கணம்படை புடைப்ப 
வரகராவெனு மோதையுந் தடையகன் றடியார் 
பரவு காலிசை நாமமெத்  திசைகளும் பரக்கும்.                 4

செய்ய மாமணி யருவிவீ ழோசையிற் செறிந்தம் 
பெய்யு நீர்மையிற் பிறங்குவெண் மலர்களும் பெரியோர் 
மெய்யு லாவலில் விளங்குவெண் பூதியும் வெள்ளித் 
துய்ய மால்வரைத் தன்னில்வே றரிதெனத் தோன்றும்.             5

சித்தி பேதமும் சத்தருந் தவர்களுத் தவமும் 
சித்தி பேதமும் சித்தருந் தத்துவத் திரளு 
முத்தி பேதமும் முத்தரும் முத்தமிழ் முதலாம் 
வித்தை யீசரும் வேறுவே றுருச்சொடு மிகுவார்.                 6

வேறு 
அண்ணல் மேவிய வத்திரு வெற்பின்மீ 
தெண்ணில் நற்றவம் செய்தயன் ஏர்பெறப் 
பண்ணு மாயிரக் காற்பசும் பொன்மணி 
வண்ண மண்டபத் தோர்மணிப் பீடமேல்.                 7

மந்த மாருதம் வீச மலரயன் 
இந்தி ரன்முத லோர்தொழ வேழிசைக் 
கந்த ருவரி சைப்பக்க வுரியோ 
டெந்தை யும்மகிழ்வெய்தியி ருந்தனன்.                     8

உற்ற காலை யுலகுயிர் யாவையும் 
பெற்ற தாயெனும் பேரரு ளாட்டிநீள் 
கற்றை வார்சடைத் தன்கண வன்பதம் 
பற்றி வந்தனை செய்திது பன்னுவாள்.                     9

முன்பு தக்கன் மகளென முற்றினேன். 
பின்பி மாசலந் தன்னிற் பிறந்தன 
னன்ப னாய்த்தவ மாற்றிய பாண்டியன் 
றன்பு தல்வி யெனவுருத் தாங் கினேன்.                     10

பின்னு நெய்த னிலத்திற் பெருங்குடி 
யென்ன நின்ற வலய ரிடத்தினின் 
மன்னு நன்மக வாகி மணந்தன 
னுன்னை நின்பிரி வொன்றல வுன்னினே.                 11

ஆத லாற்பிரி வின்றியே யென்றுமுன் 
போத வின்பம் பொருந்த வுனைப்புணர்ந்து 
தேத மின்றி யிருந்திட வெண்ணினேன் 
நாத வென்றனள் ஞானப் பிராட்டியே.                 12

வெற்பு வேந்தன் விழுந்தவ மென்கொடி 
பொற்பு வேய்ந்து புகன்ற மொழிக்குறிப் 
*பெற்பு வேய்ந்த விறைவ னினிதுணர்ந் 
தற்பு வேய்ந்தருள் செய்குவ தாயினான்.                 13

*என்பு மாலை.

வேறு 
முத்தம்பெறு மிளவாண்கை முகிழ்மென்முலை யமுதே 
சத்தம்பொரு  ளருணன்கதி தண்பாலுறு சுவைபோல் 
நித்தம்பிரி வின்றுன்னொடு நிற்கின்றன மெனினும் 
நத்தம்புவி யுய்யும்புடி நாடிச்சொல லுற்றாய்.             14

நறுமாமல ரணிவார்குழ னங்காயய னரியோ 
டிறுமாயினு மழியாததொ ரெழின்மாநகர் புவிமேற்
பெறுமாறிரு தோளுன்புதல் வன்பேணிய பெருஞ்சீ 
ருறுமாதலிற் கந்தாச்சிர மப்பேருடை யதுவே.             15

அப்பொற்பதி கச்சிப்பதி தென்கீட்டிசை யதினா 
மொப்பற்றுயர் சிவலிங்கமெய் யுருவுற்றுறை கின்றா
மிப் * பொற்புட னீசென்றவ ணெம்பூசை யியன்றா 
னற்பொற்புறு கலியாணமும் நாம்வந்துமு டித்தே.         16

*அழகு. 

சீர்மேவிய கந்தாச்சிர மப்பேரோடு திருநல் 
லேர்மேவுக டம்பாபுரி யெனுமத்திரு நகரிற் 
றார்மேவிய கோதாயுனைத்†தணவாகை யினிநாம் 
பேர்மேவிய வின்பந்தரு வோமென்றனன் பெம்மான்.         17

†நீங்காதபடி. 

வரிமேவிய மலர்வாழ்விழி மலைமாமகன் மதமா 
வுரிமேவிய பெருமானரு ளுரைகொண்டுள மகிழ்கொண் 
‡டரிமேவிய கந்தாச்சிர மத்தேதொழ வணிவெண் 
கிரிமேவிய கணவாவிடை யருளென்றுகி ளர்ந்தாள்.         18

‡அரி வண்டுகள். 

வேறு 
மலயரையன் றவப்பயனாய் வளருமிளங் குயில்வேண்டக் 
கலைமதியஞ் சடைக்கணியெங் கணைமுகில் பிரிவாற்றா 
நிலைம்மையினாற் றமதுருவாய் நிகழ்த்துமிரண் டிருவேதந் 
தொலைவிலொரு விதையாகத் தொடுத்தமலை கரத்தளித்தான்.     19

அளித்துவிடை யளித்தலுமங் கதுகொண்டு திருவுள்ளங் 
களித்துலக முழுதீந்த கன்னிகையுங் கருத்தன்பு 
தெளித்தமறைச் சிலம்பணிதன் வலப்பாதந் தனிற்சேர்த்தி 
வெளிக்குள்வெளிப் பொருளைவல மேவியே புறந்தணைந்தாள்.    20

விடைமேவுங் கணவனருள் விடைமேவி விளங்கியமின் 
னிடமேவும் பூரணியங் கெழுந்தருளுங் காலையன 
நடைமேவுந் தாரைமுத லறுபத்து நாற்கோடி 
தொடைமேவுந் துணைவியரும்பிரியா தொடர்ந்தணைந்தார்.         21

ஆயிடையா யிரக்கோடி  யருக்கர்நிகர்த் தரனருளாற் 
சேயிளவெங் கதிர்பறப்புந்  திருத்தேரொன் றிடைமேவ 
நாயகிமற் றதிலேறி நடந்தனல்பல் லியமார்ப்பத் 
தாயருள்பெற்*றிகுளையருந் தத்தமதூர் திகள் சார்ந்தார்.         22
*தோழிகள். 

வந்தனைசெய் தடியவரு மாதவரும் வாழ்ந்திசைத்தா 
ரெந்தணர்நான் மறைமொழிந்தா ரமரர்கள்பூ மழைபொழிந்தார் 
கந்தருவர் முதலானோ ரிசையேழுங் களித்திசைத்தார் 
அந்தரியுந் திருக்கயிலை யகன்றுதாழ் வரையணைந்தாள்.         23

அல்லிமலர் திருமாதர் கலைமாதர் அணிதாங்கி, வில்லிடு 
வெண் கவிகைகளுங் கவரிகளும் வியந்தேத்தச், செலவமலி 
யரம்பையரு முருப்பசியுந் திலோத்தமையு, நல்லவபி னயமு 
றையா நடஞ்செது நடந்தேக.                         24

†நாடகையா ழிசைகூட்டிச் சிலமாதர் நனியேத்தப், பாடக 
மெல் லடியெழுவர் கன்னியர்பல் லாண்டிசைப்பத், தேடகமுந் 
தெரிவரிய தனித்தேவி திருத்தேர்தென், நாடகமெல் லாஞ் 
சிறப்ப நடந்ததுதென் றிசைநோக்கி.                     25

†முறுக்காணி. 

வேறு 
ஆயபொழு துடன்றொடர்ந்தோர் தமக்குவிடை யளித் 
தெந்தாய் விசும்‡பா றாகத், தூயவன்ன பூரணியா தியரென் 
னுந் தோழியர்கள் சூழப் பண்டு, மேயதனை நீங்கிவலம் புரி 
பிருங்கி வியப்பெய்த  விழைந்து தான்முன், நாயகனைப் பூசை 
புரிந் $திடம்பெறுகே தாரமெனு நகரங் கண்டாள்.             26

‡வழி.  $ இடதுபாகம்.

முற்பிறப்பி னினைந்தேறி யுச்சினின்றும் வீழ்ந்திறந் 
தோர் முன்னு மாறே, பிற்பிறப்பு தருமல்லி கார்ச்சுனமா நந் 
திமலைப் பேணி நீங்கித், தற்பரனங் கிறந்தவருக் கைந்தெ 
ழுத்து மருள்காசித் தலமும் போற்றி, நற்சிவகங் குலினிரதம் 
நடந்துகோ கன்னமெனுநகருங் கண்டாள்.                     27

தன்னொடுமுன் சினந்துகுகன் குகைவழியிற் சார்தரு 
வேங் கடமுந் தாண்டி, மன்னுவசிட் டன்சிலந்தி யானைபணி 
சிவகோசன் வளர்கண் ணப்பன், பன்னுதமிழ்க் கீரன்மட 
வார்க்கருளுந் * தென்கயிலைப் பணிந்து நாதன், மின்னிகர்கா
ரைக்காலென் தாய்காண நடம்புரி †கான் வயந்து கண் டாள்.             28

*திருக்காளத்தி.   †திருவாலங்காடு. 

தான்றழுவக் குழைந்ததிரு வேகம்பங் கச்சபே சஞ்சித் 
தீச, மான்றநெறிக் காரைவன மேற்றளிசார்ந் தார்சயம நேக 
தங்கா, தோன்றுமணி கண்டீசம் புண்ணியகோ டீசமெழிற் 
சுரக ரீச, மீன்றபுகழ்க் காரோண முதற்பதி யாற் றிகழ் 
காஞ்சி யெய்தி னாளால்.                                 29

மெய்பூசை கொண்டதிருத் தளிகளெலாம் பணிந்தங் 
ஙன் மேவிச் சின்னாள், கைப்பூசு மண்ணலுறை யணின்முட் 
டம் பொதியர்பதி கண்டு போற்றி, மைப்பூசுங் கண்ணிதிரு 
மாகரலு மகிழ்ந்தேத்தி மதிவா ரஞ்சேர், தைப்பூசந் தனிற் 
கடம்ப மாநகர மெய்தினாள் தரணி வாழ்க.                     30

வேறு 
வேயார் தோளி மேவுதலும் விண்ணோர் புகழும் மந்த 
கரார், தாயார் தமைக்கா ணிளஞ்சிறுவர் தமையொப் பானார் 
தடம்பொழிலிற், காயா மரமுங் காய்த்துமிகக் கனிந்த பூவா 
மரம்பூத்த, தீயா ருளமுந் தயையான தீய்ந்தமரமுந் தளிர்த் தனவே.         31

ஆய பொழுதத் திருநகரார் அருளா நந்தந் தமதுளத் 
தின், மேய வதர்க்குக் காரணமின் றறிந்தோ மென்று வியப் 
பெய்தித், தூய விமலை யெழுந்தருளுந் தோற்றங் கண்டெண் 
மங்கலமும், நேய முடன்கொண் டெதிரிறைஞ்ச நிமலையருள் 
செய் துடன்போந்தாள்.                                 32

உலக முலகத் துருபொருளு முதவி யுலகுக் கப்புற 
மாய், நிலவும் பரம காரணிதன் நிரைமென் மலர்த்தா 
ளினைத் தீண்டிக், குலவு மெனிலிக் கடம்பநகர்ப் பெருமை 
யெவரே கூறுவர்மற், றிலகி லாத திருத்தொண்ட நாடெத் 
தவந்தா னியற்றியதோ.                                 33

பாசப் பகையாம் பரமனருள் பரவி யெழுந்து பர மேட்டி 
வாசக் குழலா ருடன்கூட மணியும் பொன்னு மருங் 
குபெற, வீசிப் படருஞ் சேய்நதிநீ ராடிப் பொடியும் விளங் 
கணியும்,பூசித் தரித்து நியதிகளும் பிரிந்து திருவீ தியிற் 
புகுந்தாள்.                                         34

மருவார் குழலி மருவுதலும் வளர்மா நகரி னுளமாக்க,
ளொருமா வுவகை தலைசிறப்ப வோடி யாடிப் பணிகிற்பார், 
திருவார் வீதி யணியணிவார் செறியுங் கதலி கமுகமைப்பார், 
குருவார் மணிபொற் கலசமுதற் கொடுவந் தேத்திக் களி 
கூர்வர்.                                         35

தம்மை யுணர்ந்து தமதுமுதற் றனையு மறிந்த தபோ
தனர்தஞ், செம்மை மனமுந் திருவிழியுஞ் சிறந்து காணும் 
பரமேட்டிக், கொம்மை முலையா ருடன்சூழக் குலவு வீதி 
பலவுமகன், றிம்மை மறுமை யினுங்காப்பா ளிறைவன் 
றிருக்கோ யிலையணைந்தாள்.                             36

தேவர் முனிவர் பணிந்தேத்தச் செல்லுந் திருவாயிலை 
வணங்கிக், காவல் நந்திக் கருள்புரிந்தே கரங்க ளிரண்டுந் 
தலைசுமப்ப, மூவல் முடியின் மணித்தழும்பார் முளரி மலர் 
மெல் லடிபெயர்த்து, மாவின் மணிமா ளிகைவலமாய் வந்தா 
ளருட்சிந் தாமணிமுன்.                                 37

அருவு முருவு மருவுருவுங் கடந்தா நந்தப் பிழம்பாகிப், 
பெருகு முயிராய்ப் பேருணர் வாய்ப் பிறம்ஹ்கு மொளியாய்ப் 
பூரணமாய், உருகு மடியா ருளமாகி யொன்றாய்ப் பலவாய்த் 
தனதுடனாய், மருவு சிவமாய் முளைத்திடுகண் மணியைக் 
கண்டு மனமகிழ்ந்தாள்.                                 38

கண்டு தொழுது விழுந் தெழுந்து கடம்பிற் கருணைக் 
கடலமுதை, மொண்டு பருகிக் களித்துமன முகிழ்த்த புள 
கத் துடன்மூழ்கிப், பண்டு பிரிந்த துயரக்கன்று பரமா நந்தப் 
பரவசமாய், வண்டு மருவு மலர்குழலாள் வழுத்தி யடங்கா 
மகிழ் கூர்ந்தாள்.                                     39

எல்லா மாகி யல்லவுமாய் எழிலார் கடம்பர் சினகரம் 
வாழ், நல்லார் பரவ வருள்கொளிக்கு ஞானக் கடம்ப நாயகனை 
வில்லார் நுதலார் பணிகேழ்ப்ப விமலை மனமெய் மொழி 
யொன்றாய்ச், சொல்லா கமத்தின் படிபூசைத் துறையு நிறப் 
பிப் பணிந்தனளாய்.                                 40

பின்பு முன்பு திருக்கயிலைப் பெம்மா னளித்த விதை 
யதனை, யின்ப வுருவா யெழுந்தருளவ் விலிங்கத் தொருசா 
ரிருநிலத்தே, யன்பு பெருகத் திருக்கரத்தா லமைத்தோ*ரா 
லவாலமதின், மன்பு நிதமாந் திருவணீர் வார்த்தாள் வினை 
யைத் தீர்த்தாளே.                                     41

*பாத்தி. 

ஆதி யாகி நடுவாகி யந்தமாகி யமர்ந்த சிவன், பாதி 
யாகும் பரமேட்டி பரமன் றிருத்தா ளகத்துன்னில், பேதி 
யாது சிவயோகம் பெருக்கி வருநாட் டிருக்கரத்தால், நீதி 
யாய்முன் விதைத்ததுவோர் கடம்பந் தருவாய் நிகழ்ந்த துவே.             42

வியந்த வருட்டா ரகம்வேராய் விரிந்த காயத் திரி 
கோடாய், உயர்ந்த வேதா கமங்கலைகண் முத்னூ லுரைத்த 
வக்கோட்டி, லியைந்த விலைகாய் கனிமலரா யெழுந்து பெரி 
யோர் தமதுளத்தி, னயந்த கடம்ப நாயகற்கு நறிய நீழல் 
செயுங்கடம்பு.                                     43

சிவமுஞ் சத்தி யதும்வேராச் செறியுங் கருணைச் 
சதாசிவமே, யவம தகன்ற கீழரையா யலர்காய் கனிபூத் 
தளிரெவையும், பவம தகலீ சனுஞ்சுத்த வித்தை யாகப் 
பயின்றோங்கிப், புவிக டொழநன் மதுவின்மழை பொழிந்து 
வளரும் பூங்கடம்பு.                                     44

தாது கமழு மலர்க்கடப்பந் தருவி னொருசார் செழுங்கம 
லப், போது மருவுந் திருமகளும் கலையின் மாதும் புகழ்ந் 
தேத்த, வேத மகற்றுந் தனியோக பீடத் திருந்தெல் லாவு 
யிர்க்கும், தாதையின்பம் பெறவேண்டித் தாயுந் தவஞ்செய் 
திருந்தனளால்.                                     45

மங்கை பிரிவாற் றாமையினால் வளருங் கடம்ப நகரீசன், 
றுங்க மமரர் புடைசூழத் தோன்றுங் கணங்கள் போற் 
றெடுப்பச், சங்க முழங்க முரசியம்பத் தாங்கு*மிமில்வெள் 
விடயேறிப், பொங்கு பருதி பலகோடிப் போந்த தென்ன 
வெதிர்நின்றான்.                                     46

*திமில். 

நின்ற விறையை முகமலர்ந்து நோக்கி விழியினீர்பாயத், 
துன்று வளைக்கைச் சிரமேற வுடலம் பொடிப்பத் தொழுதிடு 
மான், கன்றை நோக்கி நினது தவங் கண்டு களித்தோம் 
நாளைமணம், நன்று புரிவோந் தவம் நீங்கென் றுரைசெய் 
திலிங்க நடுவுற்றான்.                                 47

ஈச னருளிற் கூமுரை யென்னு மமுதஞ் செவிவாயா, 
னேச முடனுண் டொருபாங்கா னிலவு பொழியும் நவமணி 
யாற், றேசு தரச்செய் காவணத்திற் சேடி மார்வந் துபசரிப்ப, 
வாச மருவு மலர்க் குழலா டவத்தை நீங்கி மகிழ்ந்திருந்தாள்.             48

சித்தி யளித்து மெய்வீடுஞ் சேரக் கொடுக்கும் படி 
விளங்கும், பத்து திருப்பேர் படைத்த திருக் கடம்ப வனத் 
திற் பரிந்துமையாண், மெத்து தவஞ்செய் தமைவிரித்தாம்
விமல னந்தத் திருநகரின், முத்த நகையை மணம்புரிந்த 
சிறப்பு மினிப்ப மொழிந்திடுவாம்.                             49

பதினான்காவது உமையம்மை தவம்புரிந்த அத்தியாயம் 
முற்றிற்று. 
ஆக அத்தியாயம் பதினான்குக்குத் திருவிருத்தம், 516

பதினைந்தாவது 
உமையம்மை திருமணம் புரிந்த அத்தியாயம் 
ஸ்ரீகடம்பநாதர் துதி. 

மாவுடையா யிரத்திரட்டி புடைசூழ நடுநின்ற மதிபோற் 
றெய்வப், பூவுடையா யிழையார்கள் போற்றநடு வீற்றிருந்து 
புவியோ ருய்யக், காவுடையா நீரிலஞ்சிப் புறஞ்சூழுங் கடம் 
பர்சின் கரத்தில் வாழு, மாவுடையா நந்தவல்லி தனைமணக்கும் 
பெருமானை யகத்துள் வைப்பாம்.                             1

செந்துவர்வாய்க் கெளரி செயுந் தவங்கண்டு திரு 
வருள்செய் தேகுஞ் சீதக், கந்தமலர்ப் பொழிற்கயிலைக் 
கடவுண்மலர்க் கண்ணானைக் கண்ணா னோக்கி, நந்து மெழிற் 
றிருக்கடம்ப நகரதனி லுமைதனக்கும் நமக்கும் நாளை 
முந்துமுறை விதிப்படியே திருமணஞ்செய் செயலதனின் 
முயல்வா யென்றான்.                                 2

ஆதியரு ளுரைமேற்கொண் டரவணையா னுள மகிழந் 
தந் நகரமேவ, வீதிமுர சறைவித்து வேண்டுபொருள் 
கொணர்வென வின்ணோ தம்மோ, டோதிவிசும் புனை
கின்ற யவனரைக்கூ விறைவனொடு முமையாண் மேவித், 
தீதின்மணம் புரியவெழிற் காவணநன் றியற்றென்னச் செய் 
வாரன்றே.                                         3

செம்பவளத் தூனிறுவி மரகதப்போ திகைசேர்த்தித் 
திகழ்நீ லத்தாற், பம்பியவுத் திரம்நீட்டி வச்சிரமேற் பரப்பி 
நிலம் பசும்பொன் னாக்கி, யும்பர்*மதிக் காந்தத்தாற் சிகரஞ் 
செய் தொளிப்பளிங்கிற் †பித்தி யாக்கி, வம்புமலர் மணி 
பரப்பி விசித்திரமாய் மணஞ்செய்கா வணஞ்செய் தாரால்.             4

*சந்திரக்காந்தக்கல்.  †சுவறு. 

குண்டமொடு மண்டலம்வே திகையாற்றி யிறையுமலைக் 
கொடியு மேவக், கொண்டநவ மணிப்பீட மியற்றிவரும் விண் 
ணவர்தன் குழவுஞ்சார்ந்த, தொண்டருமா தவருமுறை யிடங் 
கள்விதம் விதமாகத் தோன்றசெய்தே, தண்டடமும் மலர்ப் 
பொழிலும் ச்‡தெற்றிகளும் பிறவுமிகத் தழைப்பக் கண் டார்.             5

‡சித்திரசபை. 

இன்னணமங் கவரியற்ற வந்நகர்வாழ் மாந்தரெலா
மிமைய மீன்ற, கன்னிமண முரசோதை செவிப்புகவுங் கழித் 
தெறிந்த கந்தமாலைப், பன்னுவிரைச்ம்சந்தனத்தின் குப்பை 
தனையகற்றிநறும் பனிநீர்வீசி, மன்னியமா ளிகைபு துக்கி 
மணிமாலை மலர்மாலை மலியத் தூக்கி.                          6

துரகமுகக் குலையரம்பை நீள்கமுகு சுவைக்கழைகள் 
தூணிற் சேர்த்திக், திருமனைமுன் பாலிகையும் பூரணகும் 
பதுமமைத்துத் திகழ்கண் ணாடி, பருதிமணித் தீப நீறைத் 
திழியுமத கரியுனொடு பரிதேர் பூணிற், பெரிதுமொளி 
பெறப்பூட்டித் தாமுமணி யாடையினிற் பிறங்கினாரால்             7

வேறு 
கடம்ப மாநகர் மாந்தர் களித்திறங் களிப்புட னெழில் 
செய்ய, விடம்ப யின்றருண் மிடற்றினா னந்தியை விளித்து 
விண்ணோடோடுந், தட்ம்ப யின்றுள வேனைய வுலகினுந் தங் 
குதே வரையெல்லா, இடம்ப வின்றுதன் திருமணங் கண்டிட 
விண்டழைத் திடுகென்றான்.                             8

ஆசிலாத்திரு நந்தியவ் வருள்வழி நினைத்தலு மிஃ 
தோர்ந்தே, மாசில் காலவேந் திப்பெய ருருத்திரர் மருவுறு 
கூர்மாண்டர், தேசின் மேவிய வாடகே சுரரொடு செண்டணி 
கரத்தையன், காசி லாவிறல் வீரபத் திரரவர் கணத்தவ 
ரொடு வந்தார்.                                     9

வண்ண வம்புய னிந்திர னிமையவர் வசுக்களெண் 
டிசையாள, ரண்ணன் மாதவர் விஞ்சையர் கதிர்மதி யவிர் 
தருங் கோணான்கேழ், நண்ணு மாகம மறைமனு மந்திர 
ஞாலமா தீயபூதம், புண்ணி யத்திரு நதிகளுந் தத்தம துருக் 
கொடு போந்துற்றார்.                                 10

சத்த மாதருந் தடமலர் மாதருஞ் சசியெனு மடவாரு,
முத்த வாணகை யருந்ததி முதலிய முனிவர்கண் மடவாருஞ், 
சித்த மார்தரு முருப்பசி முதலிய தெய்வநன் மடவாரும், 
இத்தி றத்தின ரன்றியு மாதரார் யாவரு மிடைந்துற்றார்.             11
பொருந்தி யாவரு மிடைந்துழி யங்கையிற் பொற்பிரம் 
புடைநந்தி,*திருந்த லார்புரஞ் செற்றவன் முன்புறச் செலுத் 
தின னவரெல்லாம், பரிந்து போற்றினர் தத்தம வகையினாற் 
பரமனு மருள்கூர்ந்தே, மருங்க யன்றரு பொற்றிரு வடிமிசை 
மலரடி வைத்தேகி.                                      12
                                
*பகைவராகிய அசுரர்.

பாங்கி னின்றகும் போதரன் முதுகிலோர் பங்கயத் 
தாளூன்றி, யோங்கு  மால்விடை யூர்ந்தன னெவர்களுமுவகை 
யங் கடலாழ்ந்தார்,தாங்கு மன்புடைச் சுந்தரர் வெண்பொடி 
தன்னொடு மலரேந்த், வீங்கு பொய்யுடன் மேவுகுண்டோத 
ரன் விளங்குவெண் குடைதாங்க.                             13

இந்திரன் பெருந் துந்துபி யதிர்த்திடத் தாள*மெண்
கண்ணேந்தப், பந்தமுற்றதன் றோழனும் வெற்றிலை பாகடை 
பரித்தேக, முந்து வாணனீ ராயிங் கரங்களான் முழவதிர்த் 
திட மற்றோர், சந்திரன்வரச் சலித்தெழுங் கடலென தயங் 
குபல் லியமார்ப்ப.                                     14

*பிரமன். 

கவரி கால்செய வட்டமு மரம்பையர் களித்திரு பால் 
வீசப், பவமில் தும்புரு நாரத ரேழிசை வீணைகள் பயின் 
றார்ப்ப, நவமு றுத்திருக் கயிலையின் மேவிய ஞானநா யகன் 
வந்தான், சிவனி னைந்தவர்க் கெளியன்வந் தானெனச் சின்ன 
மார்த் திடவன்றே.                                     15

பானு சம்பனோர் புடையினிற் சங்கிசை பரப்பவா கன 
மூர்ந்தே, யானை மாமுகக் கடவுளுங் குமரனு மிருபுற மும் 
போக, வேனை யோர்களுஞ் சூழ்தர வான்வழி யேகிமா 
தர்கள்போற்ற, †மேனை தன்மக டவம்புரி கடம்பமா வியன 
கர்ப் புறஞ்சேர்ந்தார்.                                 16

†இமவான்மனைவி. 

திருவி னாயக னடியவர் முதலவர் திகழ்மறை யவரா
னோர், பொருவின் மங்கையர் பிறர்களுஞ் சூழ்தரப் பூரண 
குடமுன்னா, மருவு நாலிரு மங்கலந் தன்னொடும் வள்ளலை 
யெதிர்கொண்டா, ருருவ னோக்கிமுன் வணங்கின ரண்ணலு 
மருள்புரிந் துடன்போந்தார்.                             17
பாத லத்தினில், பரவுறு பவர்களும் படுதிரைக் கடல் 
சூழ்ந்த, பூத லத்தினின் மாந்தருங் கற்பகப் பொதும்பரிற் 
குளிர்தூங்கு, மீத் லத்துறை வானவர் கணங்களு மிடைதலா 
னெடுமாட, வீதி யெங்கனு மடிபெயர்த் தேகுற* வெள்ளிடை 
யரிதாமால்.                                         18

*வெற்றிடம். 

வீதி யேவிடை வருதலை நோக்கிய விளங்கிழை யாரெல் 
லாம், ஏதி யாந்தவஞ் செய்தன மிவர்தமைக் கண்டிட வின் 
றென்பார், மாதர் நாயகி யுமைதவம் புரிதலால் வள்ளல்வந் தன 
னென்பார், தீது தீர்க்குமிந் நகரமுற் காலையிற் செய்தவப் 
பேறென்பார்.                                     19

மரும லர்க்கொடு†மறுகிடை வீசுவர் வாசனீர் தெளித் 
தார்வர், பரும ணிக்குட விளக்கதை யேந்துவர் பகர்நறுக் 
துகடூப்பர், குரும ணித்திரள் பரப்புநீ ராஞ்சனங் கொண் 
டுகோ தையர் சூழ்வார், பெருகு தூபநற் றீபமிட் டுவகையிர் 
பிஞ்ஞகன் வரவேற்பார்.                                 20

†தெரு. 
நெடிய வீதியி லடியர்செய் பணியெலா நிறைதிருக் 
கண்சாத்தி, விடையி னின்றிழிந் திறைவனும் பாதுகை மேற் 
பத மலர்சேர்த்திப், படிய ளந்தமா லயனிரு புறத்தினும் 
பங்கயக் கரமேந்தக், கடிகொண் மண்டபத் தமர்ந்தன னியம் 
பல கடன்முழக் கெனவார்ப்ப.                             21

சுருதி யார்ப்புறச் சுடர்மணித் தவிசினிற் றுலங்குற 
வினிதேறிப், * பருதி யேந்திய மான்முதற் றேவரைப் பகரு 
ருத் திரர்தம்மை, மருவு மேனைய மாதவர் குழுவினை வகை 
வகை புரிந்துற்றத், திருவி னீடிய விருகையின் மேவுறத் 
திருக்கடைக் கண்வைத்தான்.                             22

*வெற்றிடம். 

அந்த வேலையி லயனிறை யடிபணிந் தடியருய்ந் திடு 
மாற்றாற், புந்தி கூர்திரு மனவினுக் கேற்றவா பரண்நீ 
பூண்பாயென், றுந்தி வேண்டலு மீசன்மெய்ப் பணிகளே 
யொளிர்தரு பணியாகச், சிந்தை செய்தன னாயின வனைத்து 
மாச் செல்வனுக் கரிதென்னே.                             23

வேறு
துளப மாலிகைத் தூயவன் றாமரை வளருங் 
களப மாமுலை மாதரை நோக்கிநீர் கடிதித் 
தளவ வெண்ணகைச் சங்கரி தான்மணக் கோலங் 
கொளவி யற்றுமென் றுரைப்பவக் கோதையர் புகுந்தார்.             24

நிலவு தாரகை சூழ்தர நின்றவெண் மதிபோற் 
கலப மாமயி லியலினார் நடுவினிற் கவின்ற 
விலவி தழ்த்திரு மலைமகட் கீதுரைத் திறைஞ்சத் 
தலைவி யின்புடன் மஞ்சனச் சாலையிற் சார்ந்தார்.                 25

இலங்கு செம்பவ ளத்திருப் பலகையி னிருத்தி 
யலங்க லோதியை யவிழ்த்துநெய் யள்ளிமுன் சாத்திப் 
பொலங்கொண் மஞ்சளி னெல்லியின் விழுதுமெய்ப் பூசித் 
துலங்கு பொற்றசும் பார்நறுந் தூயநீ ராட்டி.                     26
-----
மெய்யி னீரம தொற்றியைந் தருவியந் தளித்த 
செய்ய பூந்திருத் தானையுந் திகழ்வுற வணிந்தி 
துய்ய பாதுகை வைத்திடத் துணையடி சாத்தி 
யைய்யை போற்றவந் தணியணி மண்டபத் தமர்ந்தாள்.        27

*கேதை கைப்புனைந் திருசுடர்ப் பிறைமணி குழைநற் 
சோதி மூக்கணி திலதநீள் சுட்டிகற் கடகஞ் 
சீத நித்தில மாலிகை ‡மேகலை சிலம்பும் 
பாத சாலநன் னவமணி யாழிகள் பலவும்.                28

*தாழம்பூ.  ‡ஒட்டியாணம்.

அணியுந் தென்மலைச் சாந்தமு மளியின முறல்பூ
வணியலுங் கதிர் மணியினும் பொன்னினு மமைமற் 
றணியும் நல்லணி பெறவுமை யவட்கலங் கரித்தா 
ரணிதி கழ்ந்தமெய் யரிவையர் பலருமங் குவந்தே.        29

(வேறு)
இன்னண மணியெ லாஞ்செய் திகுளையர் நிற்ப வானப் 
பொன்னனார் பலரு மீண்டிப் பூவையின் வனப்பு நோக்கித்
துன்னிய வுவகை பொங்கச் சோபனம் வாழ்த்த பூவின் 
கன்னியர் கரங்கள் பற்றிக் கவுரியு மகிழ்ந்து போந்தாள்.        30

கங்கைவெண் டிரையிற் சீர்கொள் கவரிவெண் குடைசாந் தாற்றி 
நங்கையர் பிடித்துப் பாங்கா தொழின்முறை நடத்தி மேவப்
பொங்குற விரித்த வாடை மீதினின் மெல்லப் போதித்
திங்களஞ் சடையன் பாங்கிற் சிறந்து வீற்றிருந்தா ளன்றே.    31

அண்ணலை யணங்கி னோடு மணியணித் தவிசிற் கண்ட 
விண்ணவர் முதலோர் யாரு மிகத்தொழு துவகை பூத்தார்
கண்ணனு மிறைவன் செய்ய கழன்மலர் விளக்கம் போந்தான்
றிண்ணிய மண்ணும் விண்ணுஞ் செவிடுற வியங்களார்த்த.    32

பொன்னினற் கரகத் தீம்பாற் பூமக ளுவந்து வார்ப்ப 
வன்னமா லீசன் செய்ய மலரடி விளக்கி யந்நீர்
சென்னியிற் றெளித்துப் பட்டாற் றிருவடி மெல்ல வொற்றல் 
தன்னிரு நாட்ட மேவுந் தகைமைகண் டஞ்சல் போலும்.        33

கனியொடு கன்ன னெய்பால் கமழ்மது பருக நல்கிப்
பனிமலர்க் காந்த ளங்கேழ் பங்கய மேற்பூத் தென்னத் 
தனியெழிற் கவுரி கையைச் சங்கரன் கரமேற் சேர்த்தி 
யினியநல் லுதகம் வார்த்தே யீந்தனன் கமலக் கண்ணன்.    34

கலித்தன முழவஞ் சங்கங் கலித்ததுந் துபிகள் சின்னங்
கலித்தன குழல்கள் வீணை கலித்தபல் லியங்க ளெல்லாங்
கலித்தன மறைக ணான்குங் கலித்தவா கமங்க ளெங்குங்
கலித்தன கலையின் கூட்டங் கலித்தவாழ்த் தொலிக ளன்றே.    35

கற்பகப் பூவின் மாரி கடவுளர் பொந்தா ரேனைப் 
பொற்பகத் தவர்க ளானோர் புகழ்ந்தனர் வியந்து போற்றி
யற்பகத் தடியர் கண்ணா லாநந்த வருவி பாய
வெற்பகம் பொடித்தான் றாதை வியன்புகழ் பாடி நின்றார்.    36

விருந்தளி யினங்கண் மூசும் வேரியங் கமல மேய 
பெருந்தவன் வேத நூலிற் பிறங்கழற் கடன்க ளாற்ற
மருந்தினு மின்சொ லெந்தாய் மங்கல மிடற்றி லீசன்
திருந்துமங் கலநாண் சாத்திச் செங்கரம் பற்றினானே.        37

நண்பக மமைந்து நின்ற நங்கையுந் தானும் பின்னர்
வெண்பொறி யிறைத்து வேத முனிவரும் பிறருங் கொள்ளப்
பண்பொடுந் தான னல்கிப் படரெரி வலங்கொண் டம்மை 
வண்பத மலர்க்கை பற்றி வைத்தன னம்மி மீதே.            38

அருந்ததி யெங்கென் றண்ண லருளலும் போற்றி நிற்குந்
திருந்திழை தன்னை நோக்கித் திருவருட் பார்வை நல்கிப்
பெருந்தழற் கடன்கண் முற்றிப் பேணியெல் லோருஞ் சூழப்
பொருந்தொரு மனிப்பீடத்திற் பூரணி யுடன மர்ந்தான்.        39

செந்தழ லாவான் றானுந் தீவளர்த் திடுவான் றானு
முந்துண வருந்து வானு மொருவனா மூர்த்திவைய 
நந்தலில் போக மூழ்க நங்கையுந் தானு மாகி
வந்திரு மணஞ்செய் தானே லவன்றிற மதிப்பார் யாரே.        40

பின்னருட் கடம்ப நாத னந்தியை விளித்துப் பேசு
நன்மணத் தணைந்தோர்க் கெல்லாம் நல்விருந் தளித்தி யென்றா
னன்னவா றவனுஞ் சிந்தா மணிமுத லவற்றாற் செய்தா 
னன்னவ ரருந்தி யுள்ளங் களித்துவந் திறையைத் தாழ்ந்தார்.    41

வேத்திர மேந்துஞ் செங்கை விமலனு மாலும் வேத 
சாத்திரத் தயனும் போற்றித் தாழ்குழற் கவுரி யோடுங்
காத்திர விடையின் மீது நின்னையு மறுகிற் கண்டு
தோத்திரஞ் செய்ய வேட்டோ மெனவருள் சுரந்துட் கொண்டார்.    42

அதிர்குரன் முரசஞ் சங்க மலங்கொளி முழவஞ் சின்ன
முதிர்தரு திமிலை தட்டை முருசெல் லரித டாரி
பதிதரு தாள மொந்தை பதலைநற் பணவ முன்னாய்ப்
பிதிர்தரு மியங்க ளண்டம் பிளந்தென மருங்கி னார்ப்ப.        43

வெண்மதிக் கவிகை தாங்கி விரிகதிர் கவரி வீச 
வெண்மதிக் கொடிக ளோங்க விலங்குசாந் தாற்றி யேந்தப்
பண்மலி மாத ராடல் பாடல்கள் பயின்று மேவத்
திண்மலி மாட வீதித் திருவுலாப் போதற் கேற்ற.            44

வெள்ளியங் கிரியென் றுள்ள மயலுற மேவு மேற்றி 
லொள்ளிழை கரிய கூந்த லொண்டொடி பவளச் செவ்வா 
யள்ளழ கொழுகு மேனி யணங்கொடு மிவர்ந்து நாதன் 
தெள்ளிதி னமரர் போற்றித் தேமலர் தூவப் போந்தார்.        45

(வேறு)
கண்டு மாலய னிந்திரன் முதலவர் கடனீ
ருண்ட மாமுனி முதலிய மாதவ ருரகர்
மண்ட லத்தவர் யாவரு மணமகிழ்ந் துருகித்
தொண்டு செய்து நின்றாடினர் பாடினர் தொழுதார்.        46

விருப்பி னோர்செயுஞ் சிறப்பெலாங் கண்டருள் விமலன்
*அருப்பு வாணகை யவளொடும் வீதிகண் டருளிப்
பொருப்பு நேர்முலை மடந்தையர் புரிநடங் கண்டு 
மருப்பு மால்விடை நீங்கிவண் சினகர மமர்ந்தான்.        47

* அரும்பு.

மாலு நான்முகக் கடவுளும் பின்னரும் வணங்கி
யேல வார்குழ லாளையித் தலத்தினி லின்றே
போல வாண்டுக டோறுநீ புதுமணம் புரியுங்
கோலம் யாந்தொழத் திருவருள் கூரெனக் கொடுத்தான்.    48

இந்த நற்றலத் தம்பிகை யருந்தவ மியற்றிப்
புந்தி யெண்ணிய வெண்ணியாங் கெய்திடும் பொலிவால் 
வந்து யார்தவம் புரியினும் வரமெளி தருளென்
றுந்து நற்றவர் வேண்டலு முவந்தினி தளித்தான்.        49

வலங்கொள் ✽தாருகற் காய்ந்தவண் மழைமதர் நெடுங்கட்
புலங்கொ ளேழ்திருக் கன்னியர் நிற்பநற் புகழ்சேர்
நலங்கொள் காலவெந் தீப்பெய ருருத்திரர் ★நரலை
யிலங்கொண் மான்முத லெவர்க்குநல் விடையளித் திருந்தான்.    50

✽ பத்திரகாளி.  ★திருப்பாற்கடல்.

பெய்யு மும்மத வாரண முகத்திறை பிறங்குஞ்
செய்ய வேலிறைச் சினகரத் தெற்கணும் வடக்கும் 
எய்யின் மேவினர் காளி✦யேழ் மின்னனை யவரோ
டைய னேவலி னந்நகர் காவல்கொண் டமர்ந்தாள்.        51

✦சப்பதகன்னிகள்.

✿சிலாத ரன்தரு புதல்வனுஞ் செழுமணிச் சுடர
கலாத வானெடுங் கோபுர வாய்தலிற் கலந்தான்
குலாவு பூங்கடம் பாபுரி நாதனுங் குளிர்ந்த
நிலாம தித்திரு முகத்தியைப் பார்த்திது நிகழ்த்து.            52

✿ நந்தி.

(வேறு)
சீர்பெறும் பிரியாச் சுகமிகப் பெறநீ செழுந்தவம் புரிந்ததோர் செயலா 
லேர்பெறு மிந்தத் தலத்தினின் மணஞ்சேர்ந் தபேதவாழ் வினிதிவ ணளித்தெம்
ஆர்பெறு மிதனா லெமைப்பசு பதியென் றருமறை பகருமத் திருப்பேர் 
கார்பெறு குழலா யுனக்குமா வுடையா ளெனும்படி கருணைசெய் தனமே.    53

பூவுடை யலரோன் றிருநெடு மாலும் போற்றுமிக் கடம்பமா நகர்வாழ்
தேவுடைக் கடம்ப நாதனா மெம்மைச் சிறந்தவத் திருவெழுத் தைந்தா 
லாவுடை யம்மை யென்னுமுன் திருப்பே ரைந்தெழுத் தானுமன் புடனே
தூவுடை மனத்தா னினைப்பவர் பிறவா நெறியுறுஞ் சுகமிகப் பெறுவார்.    54

இன்பநீ வேண்டி யித்திருத் தலத்திற் றவம்புரி யோகபீ டமுநற் 
கொன்பெறு காம பீடமென் றொருபேர் குலவுக வித்திருப் பீட
மன்பொடு கண்டு வணங்கினோர் மகிழ்வி னருச்சனை புரிந்துளோர் மேலாந்
துன்பகன் றிட்ட காமிய மெய்திச் சுரர்களும் போற்றவீற் றிருப்பார்.        55

(வேறு)
என்ன வாய்மலர்ந் தருள்புரிந் திலகுநித் திலமே
யன்ன வாண்கை யாவுடை யம்மையை யிடப்பான்
மன்னி வாழியென் றருளினா னிறைவியும் வதிந்தான்
மின்னு லாஞ்சிவ லிங்கமா யிருந்தனன் விமலன்.                56

ஆசி லாத்தவத் துறையுளீ ரருமறைப் பொருளா 
மீச னார்திரு மன்றலீ தியம்புவோர் கேட்பதோர்
பேசு நாலிரு மன்றலின் செல்வமும் பிறந்தே
தேசு லாம்பர மாநந்த மன்றலுஞ் சேர்வார்.                57

மேக வார்குழ லாவுடை யம்மையை விமலன்
போக மார்தரப் புதுமணம் புரிந்தமை புகன்றா 
மேக னாதனாங் கடம்பநா யகன்றனை யிறைஞ்சிச்
சோக நீங்கியோர் வேதிய னுய்ந்தமை சொல்வாம்.            58

- பதினைந்தாவது உமையம்மை திருமணம்புரிந்த அத்தியாயம் முற்றிற்று -
(ஆக அத்தியாயம் 15-க்குத் திருவிருத்தம் 574)
-----------------------------------------------------------------------

பதினாறாவது 
கண்டகவயிரி முத்திபெற்ற அத்தியாயம்
ஸ்ரீ கடம்பநாதர் துதி
வெள்ள வேணியில் விறகினைச் சுமந்தும் வெள்வளைகள்
மெள்ள மாதர்கை யேற்றியும் விழைந்துகல் வேழங்
கொள்ள வேழம தளித்துமுன் கூடலி னாடும் 
வள்ள லாகிய கடம்பநா யகன்றனை மதிப்பாம்.                1

திருந்து செந்தமிழ்க் கெல்லையாய்ச் சிறந்த ✽சீர்காழிப்
பொருந்து முத்தமிழ் விரசராம் புனிதர்வந் தருளி
வருந்து மீனவன் வெப்பொழித் தமணிருண் மாயப்
பரிந்து தென்றழிழ் பகர்ந்தது பாண்டிநன் னாடு.                2

பகரு மத்திரு நாட்டிடைப் பரவையின் முகில்கள் 
நுகரு நீர்க்குறை யகற்றுது மியாமென நுரையார்ந்
தகரு வோடுபன் மரங்களு மசழ்த்தலைத் தேகும் 
‡புகரி றந்தசீர்ப் பொருணையென் றொருநதி பொருந்தும்.        3

✽ திருஞானசம்பந்த சுவாமிகள்.  ‡குற்றமற்ற.

அந்த மாநதி யரும்பெறற் றீரத்தி னொருசார்
கந்த மாமலர்ச் சண்பக மாசினிக் கமுகுச் 
சந்த மாமகி ழாதிய நிறைந்த✿தண் டலையார்
✫பந்த மானது பாடலி புரமெனும் பதியே.                4

✿நந்தனம்.  ✫அழகு.

அப்ப திக்கணான் மறைகளா றங்கமீ மாஞ்சஞ் 
செப்பு மாதருக் கம்புரா ணந்தெரி யறநூ
லொப்பி லெண்ணறு கலைகளு முணர்ந்துயர் மனுவாற்
றிப்பி யந்தரு வேள்விசெய் யந்தணர் செறிந்தார்.            5

இனைய தன்மைய ராகிய விருபிறப் பாளர்
மனைக ளாயிர மலிந்தன வவற்றொரு மனையின்
 வினையி னீங்கிய விளங்கிய வறிவனாம் விமலன் 
றனைய லாதுண ராதவன் சமரச னென்பான்.            6

அன்ன வன்திரு மனையருந் ததியென நிறையாள்
பொன்னை வென்றசீ ரியலுடைப் பூவையங் கவள்பான்
முன்ன மாற்றிய தீவினை முதிர்ந்தொரு வடிவாய்
மன்னி யிந்நிலத் துதித்தெனப் பிறந்ததோர் மதலை.        7

அந்த மைந்தனைத் தந்தைதாய் சாதகன் மாதி
முந்து செய்வினை பருவம்வந் துழியெலா முயன்று 
விந்தை யுள்ளவும் வேதமும் விதிவழி யறிவித்
துந்து நன்மணம் புரிந்துதம் முரிமையின் வளர்த்தார்.        8

அன்ன நாளிடை யின்னவன் றன்னையீன் றளித்த 
வன்னை தந்தையு மூழினா லிறந்தன ரவரென்
னன்னை பாகர்தா ளணுகுறப் பிதிர்க்கட னாற்றி
யன்ன மன்னதன் மனைவியு டன்தனி யமர்ந்தான்.        9

தமியனாகிய வேதியன் றன்மனைத் தனமாஞ் 
சிமைய மேவியே வாழுநா ளிளமையின் செருக்கா 
லமைவில் காமவெந் துறைபடிந் தருமறைத் துறையும்
விமல மாகிய கல்விநல் வினைகளும் விடுத்தான்.        10

வரைவின் மங்கையர் காமமங் கையர்மண மிழந்தோ
ருரைசெய் நற்குல மிழிகுலத் துதித்தவ ரன்றித் 
தரையின் மங்கையென் றோருருக் காணினுஞ் சார்ந்து 
திரியு மாதலிற் பொருள்பெறத் தீவினை புரிவான்.        11

(வேறு)
இரவினிற் கரவு செய்து மில்லத்தி னுட்பு குந்து 
மருவருந் தான மேற்றுஞ் சூதுமற் றிழிவு செய்தும் 
பொருது கொன்றாறலத்து மிழிவழக் குரைத்துப் புன்மைப் 
✾பருவரல் பயிற்றி யென்றும் ❁பட்டிமை பலப யின்றும்.    12

✾துன்பம்.  ❁திருட்டுத்தனம்.

செங்கைசேர் நிதிய மெல்லாம் சீயுடன் றங்குஞ் செந்நீர்ப்
பொங்கிய வரைப்புண் மாட்டே புகுத்தன னவையும் போதோ
தங்கண னடியார் தீர்த்த யாத்திரை புரிவா ரங்கைத் 
துங்கநீ ணிதியுங் கொண்டு தொலைத்தனன் றொலையாப் பாவி.    13

கண்டக வயிலென் றோதுங் கண்ணியர்க் குருகி யாருங் 
கண்டக வயிர மில்லா னெனவிருந் தவர்க்கே காலிற் 
கண்டக வயிர மென்னக் கடுமைக ளியற்ற லாலே
கண்டக வயிரி யென்னுங் காரணப் பெயர்பெற் றானே.        14

பழியொடு பாவ மாற்றிப் பார்ப்பன வொழுக்க மாற்றி 
யிழிதக னாகி வாழ்நா ளிவனுரிக் கற்பி னாளு 
மொழிவனுக் கருப்ப நோயா லுயிரிழந் தொழிந்தா ளந்நாட் 
கழிவறு ❂மீமத தாற்றுங் கடன்புரிந் தணுகி வாழ்நாள்.        15

❂ மயானம்.

(வேறு)
❋இக்கினுஞ் ✻சோகினு மிழிந்த பித்தினு 
மிக்குறுங் காமநோய் வெதுப்ப வெண்மலர்
வைக்கொழுங் கணைசுட வருந்தி வையமுந் 
திக்கினு முழன்றவன் திரிகின் றானரோ.            16

❋ கள்.  ✻ பிசாசம்.

புளினரு மகற்றுமோர் புளினப் பாவையம் 
முளிபுதர் வனத்துறக் கண்டு முன்புசென்
★றளியொடு மினிமைசொற் றணைந்த ழிந்தன 
னிளமையிற் றனித்துளா ருய்வ தில்லையே.        17

★ காதல்.

(வேறு)
நிலத்தியல் பாகி நீர்திரிந் தற்றே நீடுயிர்க் கினத்தியல் பாகிப்
புலப்படு மறிவென் றுரைத்தலிற் ✡புளினப் பூவைதோள் புணர்ந்தபூ சுரனுந்
தலத்திடை மதுவூ னருந்திவேட் டுவரிற் றடிந்தபல் லுயிரையுந் தானே
விலைப்படுத் துறுநாண் மேவிய வவளும் வெம்பிணி யுற்றன ளன்றே.    18

✡ வேடுவப்பெண்.

முன்பிவன் பலரைக் கொன்றவன் பழிகண் முதிர்ந்தொரு பேயுருக் கொடுவந் 
தென்பழி தாவென் றெதிர்த்துநின் றெதிர்ந்தே யிடியினுங் கடியவாய் மடித்துப்
பின்புமுன் பினுநின் றதியிரு ளுறுத்துப் பெயரவொட் டாதுகண் மறைத்துத்
துன்பிடை யொறுருத்துத் தொடர்ந்திடத் திரிவான் கடம்பமா வனத்திடை 
                                    சூழ்ந்தான்.    19

இப்பவத் தறமோ முற்பவத் தறமோ வீன்றவ ரியற்ருநல் லறமோ
வெப்பவத் தறமோ வறிகிலே னிறையாங் கடம்பநா யகனெழிற் கருணை
வைப்பவற் றினுக்கோ ரிடமெனுங் கடம்ப வனத்திடை யொருதரு நிழலிற்
றுப்பவண் பெறுவா னிருந்தனன் கடம்பின் தூயகால் படப்பழி தொலைத்தான்.20

கடிமலர்க் கடம்ப வனத்திடை மேவக் கடும்பழி தொலைந்தபுண் ணியத்தாற்
கொடியணி சிகரக் கோபுரங் கண்டான் கொடும்பவம் பலகொடி வடிவாய்
யுடலினின் றெழுந்தாங் கொழ்யவுங் கண்டான் நல்லுணர் வுதிக்கவும் பெற்றான்
படிமிசை யதனாற் கடம்பநா யகன்சீர் பாவினு ளடங்குமோ பகரில்.        21

வெய்யவேட் டுவர்தங் குலத்திழி மகளும் வினையகன் றிருந்தவே தியனோ
டுய்யவே பெற்றா ளுடற்பிணி யகன்றா ளுணர்வுநன் குற்றன ளதனாற்
செய்யவேட் டலர்சூழ் கடம்பநா யகன்றான் சேர்ந்துகண் டவர்கதி சிறிதோ
துய்யவேட் டெழுதிப் பிரமன்மால் பலகாற் சொல்லினு மெல்லைகா ணரிதே.    22

இங்கிவ ரிவ்வா றுய்திற மறியா திறுதிவந் துற்றன ரென்னப் 
பொங்குதென் புலத்தோ னேவலிற் பொருந்தும் பொறையறு தூதுவர் கொடும்பா
சங்கொடு பிணிப்பா னணுகலுங் கடம்பிற் றங்கிவாழ் சோமசுந் தரனா
மங்கணன் றிருக்கோ புரத்தெரி சனத்தால் அரும்பவ மகன்றவ னறைவான்.    23

வார்புனல் குடைவார் நீர்நசைக் குடையார் மன்னரைச் சேர்ந்தவர் வருந்தார்
ஊர்புறங் காக்கும் பாடிகா வலரா லுமையொரு பாகனாற் குரித்தாம் 
பார்புகழ் கடம்பா ரணியம்வந் தடுத்தேன் பாவமும் பழியுமென் பவமுந் 
தீர்வுறக் கண்டேன் கடம்பநா யகன்றாள் சேர்வனீர் போமெனச் செயிர்த்தான்.24

செயிர்த்தவ னுரைகேட் டஞ்சியாம் போயென் செப்புவோம் நமைவிடு மேதி 
யுயர்த்தவ னோறுப்பான் விடுத்திடிற் கொள்ளின் உணர்வருள் கடம்பநா யகன்றா 
✣ளயிர்த்திட லறியாச் சிவகணத் தவர்வந் தாவியு மகற்றுவ ரதனாற் 
றுயக்கறு விருத்தி யொழிபினு முயிரே வேண்டுமென் றகன்றனர் தூதர்.    25

✣ சந்தேகித்தல்; மறத்தல்.

தொல்லைவன் றூதர் சென்றவ ணடைந்த செயலெலாஞ் சொல்லலுந் தருமன்
மல்லலங் கடம்ப மாநக ருறையு மாந்தரை மறந்தும்நீர் வருத்தச்
செல்லலீ ரின்னா ளாதியென் னாளுஞ் செழுந்திருக் கடம்பநா யகனார்
நல்லடி யாரை வந்தனை புரியின் நமக்கும்வாழ் வெய்துமென் றுரைத்தான்.26

நஞ்சினுங் கொடிய தூதர்கள் நடுங்கி யகன்றபி னங்கையி னுடனே 
யஞ்சன முகிழ்த்த கரஞ்சிர மமைத்தே யாநந்த நீர்விழி பொழிய 
நெஞ்சனெக் குருகி யுத்தர முகமாய் நீடுவல் வினையெலாந் தொலைக்குஞ் 
செஞ்சுடர் வேலோ னழைத்தசே யாற்றிலே திருந்தநீ ராடினன் சிறந்தான்.    27

பிரிந்ததன் கணவற் பொருந்துமங் கையரிற் பேரமு தருந்துவா னவரின் 
முரிந்திள நகையார் முகிழ்முலை மகிழ்கா முகரென முன்புதே டியசொற் 
றரும்பொரு ளுணருங் கவிஞர்நெஞ் செனவுஞ் சராசர மாகியும் வேறாய்ப்
பொருந்தருட் கடம்ப நாயகன் கோயிற் பொன்ம தில்கண்டு பூரித்தான்.    28

சேண்டொட நிமிருங் கோபுரம் பணிந்து திருநிலை வாயிலுட் சென்று
பூண்டொடு முலையா ராடலு முழவும் பொருந்துசன் னிதியினிற் புகுந்தோர்
மீண்டிட லறியா மாளிகை வலமாய்ச் சித்தியைங் கரன்பதம் விரும்பித் 
தூண்டருஞ் சுடராங் கடம்பநா யகனாஞ் சோதியைக் கண்டுதோத் தரிப்பான்.29

(வேறு)
அண்ணலே போற்றி போற்றி யமரர்க டலைவா போற்றி
பண்ணுளா ரிசையே போற்றி பழமறை முடிவே போற்றி
பெண்ணொரு பாகா போற்றி பிஞ்ஞகா போற்றி நாயேன் 
கண்ணினுண் மணியே போற்றி கடம்ப நாயகனே போற்றி.        30

படைத்தளித் தழிப்பாய் போற்றி பழமலங் களைவாய் போற்றி
விடைபெருங் கொடியாய் போற்றி வெள்ளியங் கிரியாய் போற்றி
நடைபெருந் துறவோர் நெஞ்சில் விளையுநல் லமுதே போற்றி
கடைக்கணித் தெனையாட் கொண்ட கடம்ப நாயகனே போற்றி.    31

ஆற்றருங் கொடுமை தானே யாற்றியவ் வூழிகாறு 
மாற்றரு நரகில் வீழ்ந்தே மாண்டிடற் கொருப்பட் டேனைச் 
சாற்றருந் துயர்தீர்த் தாண்ட சங்கரா போற்றி போற்றி 
காற்றருந் தரவம் பூண்ட கடம்ப நாயகனே போற்றி.            32

கண்டக வயிரி யிவ்வாறு ளங்களித் தேத்தக் காமாத் 
தண்டக நாட்டுக் கெல்லாந் தடங்கணாங் கடம்பர் கோயிற் 
றொண்டக மகிழ்ந்து வாழுஞ் சுகப்பொருட் கடம்ப நாதன் 
முண்டக மலர்த்தா ணீழற் சேர்த்தருண் முழுதுந் தந்தான்.        33

அருமறை யொழுக்க நீத்த வந்தணன் கிராதி யோடுந்
திருமலி கடம்ப நாதன் றாள்பெறு சீர்மை சொற்றாம் 
பொருவக லிதன் வடக்கிற் புற்றிடங் கொண்ட பெம்மான் 
பெருமைசேர் பெயரீ ராறும் பெற்றவா றியம்ப லுற்றாம்.        34

- பதினாறாவது கண்டக வயிரி முத்திபெற்ற அத்தியாயம் முற்றிற்று -
(ஆக அத்தியாயம் பதினாறுக்குத் திருவிருத்தம் 608)

பதினேழாவது
திருமாகரலீச்சுரர் மகத்துவங்கூறிய அத்தியாயம்

சமையஞ் சாத்திரஞ் சார்ந்திடுங் கடவுளும் பலவா
யமைதல் கண்டுநான் மெய்த்ததே வென்றன லேந்தி
யிமைய மால்வரைக் கண்ணியை யிடப்புறத் திருத்தி
யெமையுங் காத்தருள் கடம்பநா தனையிறைஞ் சிடுவாம்.    1

துன்னு செஞ்சடை முனிவரர் சூதனைப் போற்றி
பன்னமாகர மலையருக் கருள்வரந் தந்தோன்
பொன்னு டும்பெனப் புற்றிடைப் போந்ததும் பிறவும்
இன்னநீ சொலக்கேட்டிட வேட்டன மென்றார்.            2

என்ற மாதவரின்புறப் புற்றிடங் கொண்ட 
கொன்றை வார்சடைக் குழகனார்பன் னிருபெயரு
நன்றி சேருமப் பெயரவர் நண்ணியவாறுந்
துன்று மெய்ம்மயிர் சிலிர்த்திடச் சொல்லுவன் சூதன்.        3

வேறு
புற்றிடங்கொண் டவன்றடுத்தாட் கொண்டவன்பாரைத் தழும்பன் புராந்த கன்சீர்
பற்றுமடைக் கலங்காத்தா னாபத்துக் காத்தான்முன் பரிந்து காத்தான் 
பெற்றதிரு நிலையிட் டான்மங்கலங்காத் தான்வேள்வி காத்த பெம்மா
னெற்றிருமா கரலீச னகத்தீச னெனப்பெயர்க ளீரா றாமா.    4

துன்னுபுகழ் சோணாட்டி லுறையூர் வாழ் பரிதிகுலச்சோழன் வாய்மை 
மன்னுமிரா ஜேந்திரனாம் வள்ளல்புலிக் கொடியிமைய வரையிற் றீட்டி
யிந்நிலத்தைப் புரந்திடுநா ளிருந்ததுவா மாகரலி னிரும்ப லாவொன்
றன்னதிலோர் கனித்தில்லை யாடியபா தற்குநிவேத தனஞ் செய்வானால்.    5

நிந்தியநி வேதனஞ்செய் வதுதெரியப் பிரசாத நிருபன் றன்பால்
பத்தியோடு வரவழைத்து நியமமுடித் ததற்பினெள்ளிற் பாதி யேனும்
வைத்திடக்கொண் டமுதருந்திவருநாளிற் கனியொரு நாள் வராத தாகச்
சித்தமிகு தில்லையினும் வந்ததிலை யெனக்கேட்டுத் திடுக்க மெய்தி.        6

இரதமுத னாற்படையுஞ் சூழவெழு மந்திரிக ளொடுந்தே ரேறி
விரதமுனி வரர்சூழுந் தில்லையினெல் லையினிழிந்து வீதி நோக்கிப்
பரவிநிலத் தட்டாங்க பஞ்சாங்க முறத்தாழ்ந்து பரமன் மன்றில்
வரமருள்செய் நடனங்கண் டாநந்த பரவசனாய் வணங்கி னானால்.        7

வணங்கியிறை வனைநோக்கி வருக்கையின்முட் புறக்கனிதான் வந்த தில்லை
யணங்கரவ மரைக்கசைத்தாய் அடியேன்செய் பிழையாதோ வறியே னென்னக்
குணங்கடந்த தனிமுதலை விடைகொண்டங் கரிதகன்று கொடித்தே ரிற்சென்
றிணங்குமணி மதில்சூழ்கந் தாச்சிரமக் கோபுரங்கண் டிழிந்து தாழ்ந்தான்.    8

தாழ்ந்தன வருக்கைமரம் பட்டதெனு மாற்ற மங்குசாற்றக் கேட்டுச்
சூழ்ந்தமனத் துடன்றிரைசூ ழுத்தரவா கினியாற்றிற் றுதித்து மூழ்கி
வீழ்ந்தவினை யுடையவனாய்க் கடம்பநா தரைக் கண்டு விழிநீர் சோரப்
போழ்ந்திடுவெண் பிறையணிந்தோய் கரும்பிறையைக் காய்ந்தவனே போற்றி
யென்றான்.    9

தீயனேன் யாதுபிழை செய்தனனோ வறியகிலேன் றேம்ப லாவும்
போயதுபட் டெனக்கேட்டே னினியுய்யே னதுதளிர்க்கப் புரிந்தி டாயேல்
தாயனையா யெனவுருகுந் தராபதிக்குச் சேயாற்றுத் தண்ணீர் கொண்டு
மீயிறைக்கின் மரந்தழைக்கும் வெறுவேலென் றொருமொழிவிண் ணெழுந்த 
                                    தன்றே.    10

அதுகேட்டு மகிழ்ந்துவிடை பெற்றுநதி கடந்திறைவ னாடல் செய்த
பொதுவான வேதநூ புரம்போற்றி வருக்கையின்பாற் புகுந்து நோக்கி
யிதுவீழ்ந்த தென்னெனக்கேட் டுந்தெரியா தங்கிங்கு நாற்ற மேவந்
ததுதேர்ந்து மந்திரியர் தமைநோக்கி யதிசயமீ தறிமி னென்றான்.         11

மந்திரியர் பரிஜனரான் மரமூலஞ் சோதிப்ப மருச் செய்காயங்
கந்தமிகுந் துறவரசன் கண்ணாற்கண் டரகரவிக் கருமம் யாரோ
நந்திடச்செய் தவரென்றா னங்குசில ரிம்மறையோர் நாளுந் தில்லை
வந்துகனி சுமந்துதவ மாட்டாது செய்தனரிவ் வசையை யென்றார்.        12

என்னலுமே யம்மறையோர் தமைவாளா லெறிவனென வெழுந்த மன்னன்
றன்னையமைத் தந்தணரிற் சிவத்துரோ கஞ்செய்தார் தமைவெய் யோன்வீ
ழன்னபொழு தேகொடுபோய் கங்குலெலா நடத்திவிடி வான வைப்பிற்
புன்னகர்செய் ததில்வைத்தன் மரபென்றார் மந்திரியிற் பொறுமை மிக்கார்.    13

நீதிநூ லிவ்வண்ண நிகழ்த்திடிலென் செய்வதென நினைந்து தீய
வேதியரை யவ்வண்ண மகல்வித்துச் சேயாற்று விழுநீர் கொண்டு 
நாதனரு ணினைந்துமர மேற்றெளித்தான் முன்னையினு நன்றாய்த் தோன்றிச்
சீதநிழல் பரப்பிநின் றதுகண்டு வியப்படைந்தார் செகத்தி லுள்ளார்.        14

தன்பினே வருமமைச்சர் தமையங்க ணிலைநிறுத்தித் தட்டா தென்று
முன்புபோ லக்கனியை யம்பலவற் கெய்துவித்து முறைசெய் வேந்த
னன்பினாற் கச்சியே கம்பரைத்தான் றொழச்செல்லு மாற்றின் முன்னர்
வன்புசேர் பொன்னுடும்பொன் றோடியொரு புற்றதனின் மறையக் கண்டான்.    15

கண்டுமிக வியப்பெய்திப் புற்றதனை யகழ்விக்குங் காலிற் சென்ற 
வெண்டகுபொன் னுடும்பதனைக் காணானாய் எழுங்குருதி முடியோ டம்மா
வண்டர்தொழுஞ் சிவலிங்க முறக்கண்டு நடுநடுங்கி யவச மெய்தி
மண்டனில்வீழ்ந் தழும்பொழுதோர் மறைச்சிறுவனாய் *முன்னோன் வந்து சொல்வான்.    16

* விநாயகக்கடவுள்.

ஒழிவில்சிவ தருமஞ்செய் +உரவோனே வெருவேல்யா மோதும் பொய்யா
மொழிபுகலும் புற்றிடங்கொ ளெந்தைவிளை யாட்டெவரே முற்றுங் கண்டார்
கழிமகிழ்வி னுனைத்தடுத்தாட் கொளவெண்ணி யிப்பரிசு கண்டா னென்ன
விழிதருசெங் குருதிமறைந் ததுவேந்த னிறையருள்கண் டேத்தி நின்றான்.    17

கனகவுடும் பாய்ப்புற்றிற் புகுந்திடலாற் புற்றிடங்கொள் கடவு ளென்றும்
தனையனைய சோழனையாட் கொண்டிடலாற் றடுத்தாட்கொள் சம்பு வென்றும் 
நனியவன்வெட் டும்பாரைத் தழும்புறலா னற்பாரைத் தழும்ப ரென்றும்
அனகனுமுப் பெயர்பெற்றா னருமறைப்பா லனைப்பின்பவ் வரசன் போற்றி. 18

இவ்விறைவன் சரித்திரநீ யெனக்கறிய வியம்பிடுவா யென்ன முன்னோன்
செவ்விபெறப் புகன்றிடுவான் திரிபுரத்தார் தமக்குடைந்து தேவர் தம்மோ
டவ்வரச னடைக்கலம்யா மெனவந்து பூசைசெய வவர்முன் றோன்றி
நவ்விவிழி யுமைபாகன் அடைக்கலங்காத் தானென்றோர் நாமம் பெற்றான்.    19

திரிபுரத்தை யெரித்திடலாற் றிரிபுராந் தகனானான்  றிங்க ளாசான்
பரியுமனை  வியைப்புணர வவன்சபிக்க நடுங்கிவந்து பரிந்து காப்பாய்
கரியுரியா யெனப்பூசை செய்யவ்வ னைப்பரிந்து காத்த லாலே
தெரிவரிய விவ்விறைவன் பரிந்துகாத் தோனென்னுந் திருப் பேருற்றான்.    20

சந்திரனைப் புணர்ந்தசெயல் குருவறிந்து சபித்திடலுந் தாரை யென்பாள்
வந்தழுதென் னாபத்தைக் காத்தருள்வா யெனப்பூசை வகுப்பக் காத்திட்
டெந்தையுமா பத்துக்காத் தவனென்றோர் பெயர்பெற்றான் எழிலார் வேதன்
வந்தனைசெய் துலகுநிலை பெறச்சிருட்டி செயும்மவை வழங்கு கென்றான்.    21

நிலவுலகு நிலைப்பமனு வருள்செய்து நிலையிட்ட நாத னென்னக் 
குலவுமொரு திருப்பெயர்பெற் றானெங்கோ னயன்பின்னர் கோட்டிற் சூழ்ந்த
பலவுதனைப் படைத்துமுப் பழந்தரநித் தமுங்கயிலைப் பரமற் கொன்றுந்
தலமுறுமிவ் விறைக்கொன்று மம்பலவற் கொன்றுநிவே தனஞ்செய் தானால்.22

என்னாளு மிவ்வண்ண மியற்றுவிப்ப நினைந்துவட கயிலை மேயப் 
பன்னாகப் பணியரற்குச் சுரரும்பூ சுரர்தில்லைப் பதிக்குங் கொண்டு 
தன்னாணை யாற்செல்லச் செய்வித்தா னிதுகாறுந் தவறா துற்ற 
தின்னாளின் வருமிடறு நினைத்தடுத்தாட் கொளவன்றோ விறைவ வென்றான்.  23

மற்றுமத னெரிந்திடலு மனையிரதி மனம்பதைத்தித் தலத்தில் வந்து 
பற்றலரூ ரெரித்தவனைப் பணிந்துசிவ லிங்கமொன்று பதிட்டை செய்து 
துற்றமலர் கொடுபோற்றி மங்கலங்காப் பாயென்னச் சோதி தோன்றி 
யிற்றமத னைத்தந்து மங்கலங்காத் தப்பெயரை யெய்தி னானே.        24

தன்மகத்தை யழிக்குமிரு தகுவர்செயல் காசிபஞ் சாற்ற யாமே
முன்வரமீ தலினழித்தல் கூடாது கடம்பைதனின் முற்றிற் பூசை
யன்னவரை மாலகம்வாழ் கொற்றவனா லடுவிப்பா மென்றவ் வண்ணம்
பின்னியற்றி மகங்காத்து வேள்விகாத் தானெனும்பேர் பெற்றா னெம்மான்.    25

மாகரனாந் தகுவன்முனம் பூசிப்ப மாகரலீச் சுரனே யென்றும்
வேகமொடு குறுமுனிவன் முத்தமிழை விரிப்பதற்கு விழைந்து பூசை
யாகமநூற் படிசெயலா லகத்தீச னென்னும்பே ரடைந்தா னீசன்
சேகறுமிப் பெயர்ப்புகல்வார் செல்வராய் மறுமையினிற் சேர்வர் முத்தி.    26

என்றுரைத்து நம்பெயர்பொய் யாமொழிவி நாயகனென் றிசைத்து விண்ணி
லொன்றியதன் னுருக்காட்டி யொருமுகுர்த்தந் தெரிசநந்தந் துடன்ம றைந்தான்
வென்றிபெறு மிறைபணிந்தத் திசைநோக்கித் தொழுதுமலை வில்லி னாற்குக்
குன்றுறழ்கோ புரமுதலா யாலயஞ்செய் துற்சவமுங் குறித்துச் செய்தான்.    27

ஆசினியின் கனியீங்குந் தில்லைபோனி வேதனஞ்செய் தந்நாள் போலப்
பூசைநிதம் நடத்திடப்பொன் பூமிவிடுத் தமைச்சர்கடன் னாணை போற்றப்
பேசியுறை யூரணுகித் தன்சுதற்கு முடிசூட்டிப் பிறவி நீங்கு
மாசகன்ற பேரின்ப மெய்….. றானெல்லாம் வல்ல சூதன்.            28

…………… ……… ……………. ……………… ………….. …….. ……        29
 

Related Content