logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை

சிவநாம மகிமை

			கலிவிருத்தம்

		வேத மாகமம் வேறும் பலப்பல 
		வோதி நாளு முளந்தடு மாறன்மின் 
		சோதி காணிருள் போலத் தொலைந்திடுந் 
		தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே. 					1 

		புல்ல ராயினும் போதக ராயினுஞ் 
		சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு 
		நல்ல வாகு நவையென் றகற்றிய 
		செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே. 					2 

		நாக்கி னானு நயனங்க ளானுமிவ் 
		வாக்கை யானு மருஞ்செவி யானுநம் 
		மூக்கி னானு முயங்கிய தீவினை 
		தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே. 				3 

		சாந்தி ராயண மாதி தவத்தினான் 
		வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப் 
		போந்த பாகத மேனும் பொருக்கெனத் 
		தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே. 				4 

		வில்லி தென்ன விளங்குந் திருநுதல் 
		வல்லி பங்கன் மலரடி காணிய 
		கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ் 
		செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே. 				5 

		தீய நாளொடு கோளின் செயிர்தவு 
		நோய கன்றிடு நூறெனக் கூறிய 
		வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந் 
		தீய தீருஞ் சிவசிவ வென்மினே. 					6 

		வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை 
		பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே 
		விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின் 
		றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே. 				7 

		முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென 
		நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும் 
		வந்த தீவினை மாற்றுவ னாதலாற் 
		சிந்தை யோடு சிவசிவ வென்மினே. 				8 

		நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வா 
		னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார் 
		நீச ரேயென் றியம்புறு நின்றுப 
		தேச நூல்கள் சிவசிவ வென்மினே. 					9 

		எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர் 
		வண்ண மென்பதங் கிட்டி வணங்கவு 
		முண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன் 
		றிண்ண மீது சிவசிவ வென்மினே. 					10 


		அறுசீர்க் கழிநெடிலடி ஆசி£யவிருத்தம்

		இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங் கொலைவேட 
			னெனினும் பொல்லாப் 
		பழிமருவு பதகனெனி னும்பதித னெனினுமிகப் 
			பகரா நின்ற 
		மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென் றொருமுறைதான் 
			மொழியி லன்னோன் 
		செழியநறு மலரடியின் றுகளன்றோ வெங்கள்குல 
			தெய்வ மென்ப. 						11 

			- திருச்சிற்றம்பலம் -

- சிவநாம மகிமை முற்றிற்று -

 

Related Content

A Key To Sivagnana-Bodha

A Revel In Bliss Of Tayumana Swami

Amogha shivakavacha- அமோக ஷிவகவசம்

Chekkizar Swamikal Puranam

Irupa-Iru-Pahtu - Of St. Arul Nandi Sivachariar