logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கண்டதேவி புராணம் - ஆசிரியர்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - Kandadevi purANam

ஆசிரியர்: திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

 

கண்டதேவிப் புராணம்.
திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.


 

கணபதி துணை
source: 
கண்டதேவிப் புராணம்.

திரிசிரபுரம் மஹாவித்துவான்
மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றியது.
-------------
இஃது சிவநேசம் பொருந்திய
வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள்
அநுமதிப்படி தேவகோட்டை
மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர்
முத்தரசப்பசெட்டியாரால்
சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.

யுவ வருஷம் - புரட்டாசி மாதம் 
-------------------

சூசீபத்திரம். 

படலம்படலம்.பாடற்றொகை.
 கடவுள் வாழ்த்து (1-24)24
 அவையடக்கம் (25-29)5
1சிறப்புப் பாயிரம் (30)1
2திருநாட்டுப்படலம் (31-110)80
3திருநகரப்படலம் (111- 200 )90
4நைமிசைப்படலம் (201-237)37
5திருக்கண்புதைத்தபடலம் (238-312)75
6தேவிதவம்புரிபடலம் (313-362)50
7தேவியைக்கண்ணுற்றபடலம் (363-412)50
8சண்டாசுரன்வதைப்படலம் (413-544)132
9திருக்கலியாணப்படலம் (545 - 634)90
10உருத்திரதீர்த்தப்படலம் (635- 651)17
11விட்டுணுதீர்த்தப்படலம் (652 - 669)18
12பிரமதீர்த்தப்படலம் (670-685)16
13சூரியதீர்த்தப்படலம் (686-700)15
14சந்திரதீர்த்தப்படலம் (701-727)27
15சடாயுபூசைப்படலம் (728-767)40
16காங்கேயன்பூசைப்படலம் (768-798)31
17பொன்மாரிபொழிந்தபடலம் (799-835)37
18சிலைமான்வதைப்படலம் (836-853)18
19சிவகங்கைப்படலம் (854-868)15
20தலவிசேடப்படலம் (869-884)16

ஆக திருவிருத்தம் . 884.

--------------



சிவமயம்
திருச்சிற்றம்பலம்

கண்டதேவிப்புராணம் 
கடவுள் வாழ்த்து

 

1விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம்
1
2சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம்
2
3தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி
3
4பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம்
4
5வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம்
5
6சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம்
6
7சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம்
7
8தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம்
8
9வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம்
9
10மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம்
10
11வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம்
11
12சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம்.
12
13திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம்.
13
14தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே.
14
15திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம்.
15
16திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம்.
16
17சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம்.
17
18மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம்.
18
19தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம்.
19
20அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே.
20
21பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே.
21
22அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே.
22
23சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம்.
23
24ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார்.
24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.

------------

அவையடக்கம்.

 

25தரைபுகழ்வேதசாரமாம்விபூதிசாதனமேபொருளாக்கொண்
டுரைபுகழ்சிறந்ததேவிசாலப்பேருத்தமவணிகர்கள்யாரும்
வரைபுகழமைந்தகண்டதேவியிற்பொன்மாரிபெய்தருளியபெருமான்
குரைபுகழ்விளங்குதெய்வமான்மியமாய்க்குலவியபெருவட்மொழியை.
1
26மொழிபெயர்த்தெடுத்துமதுரமிக்கொழுகிமுழங்கிமுப்புவனமும்போற்றப்
பழிதபுத்துயர்ந்துபரவுசெந்தமிழாற்பாடுகவென்றலுமனையார்
கழிசிறப்புவகைமீக்கொளப்புகன்றகட்டுரைமறுப்பதற்கஞ்சி
யுழிதரற்றகையமனமுடையானுமுரைசெயத்துணிந்தனன்மன்னோ.
2
27வேறு.
இருவகையெழுத்துமல்லாவாய்தமுற்குறிலுமீற்று
மருவுவல்லெழுத்துங்கூடவன்னமாயெழுதல்போல
விருவகைவழக்குமல்லாவென்கவியிறைவன்சீரு
மருவுநற்பெரியோரன்புங்கூடலான்மதிக்கும்பாவாம்.
3
28வேறு.
மறைமுழுதுணர்ந்தசிறையுடைக்கழுகுவானகந்துருவியுமுணராப்
பிறைவளர்முடிமேற்சிறையிலாக்கழுகுபெய்தபூநிறைதரக்கொண்ட
விறையவன்செவிகற்றுணர்ந்தவர்மொழிபாவேற்றலிற்கற்றுணராத
குறையினேன்மொழியும்பாக்களுமேற்குங்குறித்துணர்பொருட்டிறமதனால்.
4
29மறையவனுணராமதிமுடிப்பெருமான்மருதமர்வனப்பெருங்கோயி
லுறைபவன்புராணமுரைக்குநீபொருளுக்கொக்குமாறுரைப்பைகொலென்னி
னிறையவனருளாவியன்றமட்டுரைப்பேனிமித்தகாரணனெனற்கந்த
விறையவன்குலாலனென்றுரைத்ததுதானெற்றுமற்றற்றுணர்ந்தவரே.
5


அவையடக்க முற்றிற்று.
-----------------

சிறப்புப்பாயிரம்.

 

30இலங்குமதிநதிபொதியுஞ்சடிலத்தெம்மா
      னினிதுமகிழ்ந்திருக்குமுயர்கண்டதேவித்
தலங்குலவுமான்மியநன்கெம்மனோர்க
      டருக்கியுணவமுதுகுசெந்தமிழாற்செய்தா
னலங்குலவுஞானகலைமுதலாவெண்ணி
      னவில்கலைகளுந்தெரிந்தநல்லோனெங்குந்
துலங்குபெரும்புகழ்படைத்தவொருமீனாட்சி
      சுந்தரநாவலவனுயர்தோற்றத்தானே.
1


சிறப்புப்பாயிர முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 30


1. திருநாட்டுப்படலம். (31- 110)

 

31பிறங்கருள்வடிவமானபெரியநாயகியாரோடு
மறங்கிளர்செம்பொன்மாரிபொழிந்தவரமர்ந்துமேவு
நிறங்குலாங்கண்டதேவிமுதற்பலநெருங்கக்கொண்ட
திறங்கமழ்பாண்டிநாட்டின்வளஞ்சிலசெப்பலுற்றாம்.
1
32வான்றவழிமயமென்னமாலயற்கரியனாய
தேன்றவழ்கடுக்கைவேணிச்செம்மலைமருகாப்பெற்ற
மீன்றவழ்வசத்தண்ணல்விளங்குவெண்குடைநன்னீழ
றான்றவழ்தரப்பொலிந்துதழைவதுபாண்டிநாடு.
2
33திருந்துபல்லுயிர்க்குஞ்செம்பொற்றிருவடிநீழனல்கும்
பெருந்தகைவழுதியீன்றபேரெழிலணங்கைவேட்டுப்
பொருந்துபொன்முடிகவித்துப்பொலிகுடைநீழல்செய்ய
வருந்தவம்புரிந்ததம்மாவணிகெழுபாண்டிநாடு.
3
34உமைநிகர்சிறப்புவாய்ந்தவுலோபாமுத்திரையோடன்பி
னமைசிவபெருமானன்னவகத்தியமுனிவர்கோமான்
கமைமிகுதமிழ்விரித்துக்கவினவீற்றிருக்குந்தெய்வச்
சிமையமால்வரையுடைத்தத்திருத்தகுபாண்டிநாடு.
4
35பெரும்பொருள்வெறுப்பத்தோற்றும்பெற்றியான்மற்றைநாடும்
விரும்புறத்தக்கதாகிமெலிதராவிளையுணாளு
மரும்புபல்செல்வர்சான்றோரமைதரவுடையதாகி
யிரும்புகழ்படைத்துமேவுமேற்றஞ்சால்பாண்டிநாடு.
5
36புனைபிருதுவிமுனைந்தாம்பூதகாரியமேயென்று
நினைதருபுவனமோம்பநிலவுமப்பூதமைந்து
ளினைதலிலொன்றுதெவ்வவெண்ணியப்புகழ்சால்பூதந்
தனைநிகருருவக்கொண்மூதழைவிசும்பாறுசென்று.
6
37பொழிபுனன்மிகவும்வேண்டும்புகழ்ப்பணைக்காவல்பூண்ட
வழிமதுக்கற்பமாலைவானவன்றிசையிற்புக்குக்
கழிபுனல்வெறுப்பவுண்டுகரைந்தவைம்பூதந்தம்மு
ளழிவுசெயொன்றைநட்டாங்கதனுருக்கொண்டுமீண்டு.
7
38நாட்டுமைம்பூதந்தம்முண்டுநிலைப்பூதமாயும் 
வாட்டுவெங்கோடையோடுமருவியெவ்வுயிருந்தீய
மூட்டுதல்கருத்துட்கொண்டுமுதுசினங்கொடுமுழங்கிப்
பூட்டுதல்செய்யாச்சாபம்பொருக்கனவொன்றுவாங்கி.
8
39அளவருந்தீட்டாவம்புமலங்குபமின்னெனும்பல்வாளும்
பளகரும்வலியிற்றாங்கிப்பரவிடங்கொடுக்குமாற்ற
லுளவொருபூதமாயவாகவப்பூமியுற்று
வளனமைமற்றோர்பூதமருவுவெப்பொழிந்ததென்ன.
9
40திசைபுகழ்ந்தேத்துங்கண்டதேவியின்மருதநீழ
லசைவறவமர்ந்தவெங்கள்சிறையிலியண்ணன்முன்னம்
வசைதவிரரசற்காகப்பொழிந்தபொன்மாரிபோல
விசைநிமிர்ந்தெழுச்சிமேவப்பொழிந்தனவெங்கு மாதோ.
10
41புலவர்கள்பெருமான்முன்னம்பொழிந்தபொன்மாரியாலே
நலவர்கள்புகழ்காங்கேயன்வெங்கலிநசித்தாற்போல
வலவர்களுவக்குங்கொண்மூவளவறப்பொழிந்தநீராற்
குலவரகணெருங்கும்பார்வெங்கோடைபோயொழிந்ததன்றே.
11
42சிறையிலிநாதர்பெய்தசெம்பொன்மாமழையாலன்று
தறையகத்துள்ளவாயசிலவுயிர்தழைத்தவின்று
குறையறவாரியுண்டுகுயின்பொழிமழையினாலே
நிறைபலவுயிர்களெல்லாந்தழைத்தனநிரம்பினமண்மேல்.
12
43நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே
யறத்தினாலுலகமோம்புமென்பதையறையக்கேட்டோ
நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே
யறத்தினாலுலகமோம்புமென்பதையமையக்கண்டோம்.
13
44வான்றமிழ்பொதியக்குன்றமழைபொழிபெருநீரெங்குந்
தான்றவழ்கின்றதோற்றஞ்சந்தனஞ்செறியக்குன்ற
மான்றவெங்கோடைமாயவடர்ந்துமிக்கெழுகார்கால
மீன்றதண்குளிர்க்குடைந்துவெண்படாம்போர்த்ததேய்க்கும்.
14
45வரையகங்காந்தட்டீபம்வயக்கினகலிகைகானத்
தரையகமாம்பியோம்பித்தழைந்தனநாரையோடை
நிரையகம்பீலியூதிநிரைத்தனநெய்தல்பூத்த
திரையகம்பவளமுத்தஞ்சிந்தினமுகிற்புத்தேட்கே.
15
46தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந்
தலைமிசைக்கொள்ளாக்குன்றந்ததையருவியினகைக்குந்
தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந்
தலைமிசைக்கொள்ளும்பல்பாதவஞ்செறிகானைமாதோ.
16
47உண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறத்துவீசுந்
தண்டருச்செறிந்தகானந்தளவினானகையாநிற்கு
முண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறம்போக்காது
தண்டலில்சிறையினாக்குந்தடம்பணைவைப்பைமாதோ.
17
48மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடாவண்ணந்தேக்கி
விழைதரவுதவம்பண்ணைநாரையான்மிகநகைக்கு
மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடும்வண்ணந்தேக்கி
விழைதரப்படாதாச்செய்யும்வீரையைநோக்கிமாதோ.
18
49வெள்ளியமேகம்பச்சைவீரைநீர்மடுத்துத்தாமு
நள்ளியபசுமையந்தமேகநன்னீர்மடுத்துத்
துள்ளியவேனிலாலேவெள்ளெனுந்தோற்றமுற்ற
வொள்ளியபுவியும்புல்லாற்பசந்ததாலொருங்குமாதோ.
19
50முன்றளையுண்டதின்னுமயர்த்திடாமுகில்களெல்லா
நன்றளைபாண்டிநாட்டிற்பொழிவளநவில்வார்யாரே
யென்றளையோங்கலாதியிருந்திணையைந்துண்முன்னங்
குன்றளைவளந்தொகுத்துக்கூறுதலுற்றாஞ்சில்ல.
20

குறிஞ்சி. 

51வேறு.
அமரமான்மியமுள்ளதென்றறிஞரேயறையுந்
தமரமோங்கிடப்பெருவளநனிகொடுதழையும்
பமரமார்தொடைப்பசுவருக்கத்தகப்படாத
குமரவேளினிதிருந்தரசாட்சிசெய்குறிஞ்சி.
21
52கிளக்குந்தெய்வமான்மியமுடைத்தாதலிற்கிரிக
ளளக்கலாவளவரும்பொருள்வறப்பினுமளித்த
றுளக்கலாநிலைதோற்றமுற்கொடுகலைத்தொகைகள்
விளக்குமாரியர்க்கொப்பெனவிளங்குவமாதோ.
22
53கருங்குடாவடியிறவுளர்காய்கணைக்கஞ்சி
மருங்கொர்கந்தரம்புக்கதுமற்றதுகதிர்கண்
டொருங்குவெந்தழல்பொழிதரவுள்ளலைந்துயங்கு
முருங்குதுன்பமெவ்விடஞ்சென்றுமுருக்கிடாரொத்தே.
23
54வட்டமாகியபளிக்கறைநடுவொருவழுவை
யிட்டமேவுறத்துயிறல்கண்டிறவுளர்மடவார்
பட்டநீரலாற்கறைமதிப்பிரதிவிம்பந்தா
முட்டவானுயர்வரையகமுகிழ்க்குமோவென்பார்.
24
55தலைவரில்வழிமாரவேட்குறுசரந்தந்து
மலையுமாசெயலென்னெனமங்கையருதைப்ப
வுலைவில்பூப்பலமீளவுநல்குமொண்செயலை
நிலையதங்குணம்வருத்தினுநீக்குறார்நிகரும்.
25
56விளவுதாழ்வரைச்சாதல்வாய்விழைபிடிவாய்த்தே
னளவிறால்பறித்தூட்டுவமால்களிறதுகண்
டுளவுபாதியினறுமுறுத்துறவிழிசிவப்பார்
களவுமேற்கொடாவயிற்பயில்காளையரம்மா.
26
57காந்தண்மெல்லரும்புடைதரக்கண்டமாமஞ்ஞை
பாந்தள்பைத்ததுபணமெனப்படர்ந்தெதிர்கொத்தி
யேய்ந்தநாணமுற்றுள்ளவாறரவெதிர்வரினு
மாய்ந்தசிந்தையினையமுற்றுழிதருமம்மா.
27
58மறந்தவாவிழிமங்கையர்புணர்ச்சியைமதித்துச்
சிறந்தவாடவர்நள்ளிருட்முறியிடைச்செலும்போ
துறந்தசெம்மணிவிளக்கெடுத்திடையிடையுதவ
நிறந்தவாவரவீன்றிடுநெடுவரைச்சாரல்.
28
59அறையிடைத்தினைக்குரல்பலபரப்பியிட்டவைமேற்
கறையடிச்சிறுகன்றுகள்சுழன்றிடக்கண்டு
பிறைமருப்புலக்கையினரற்குழியவைபெய்து
குறையறுத்தவைத்தளாவியின்றேன்கொள்வார்பலரும்.
29
60ஐயவற்புதக்குமரவேள்வள்ளியோடமரச்
செய்யமாதவமுஞற்றியசிலம்புயர்சீர்மை
யெய்யவல்லவர்யாவரேபலவளமியைந்து
பெய்யவல்லகானத்திறஞ்சிறிதுபேசிடுவாம்.
30

முல்லை.

61பராவுகற்பொருமடந்தைபாற்பாற்றியதோட
மராவுமாறுளங்குறித்தளவிறந்தகற்பாகி
விராவுமேன்மையிற்பொலிதரவிருத்திசெய்தென்று
முராரிவாழ்வதற்கிடமெனத்திகழ்வதுமுல்லை.
31
62எவ்விடங்களும்பசுந்துழாய்க்குலஞ்செறிந்திடலால்
வெவ்விடங்கொள்கட்பிருந்தையைப்புணர்சுகம்விராவ
வவ்விடங்குடிகொண்டனனலங்குநான்முகத்துக்
கவ்விடங்கொளப்பூத்தவோருந்தியங்கடவுள்.
32
63என்றுமால்சிவபத்தரிற்சிறந்தவனென்ப
தொன்றும்வாய்மையேகூவிளங்குருந்தொளிர்தூர்வை
கொன்றையானைந்துமல்கியவிடங்குடிகொண்டான்
பொன்றுமாறிலாப்பூசனைபுரிதரற்பொருட்டே.
33
64ஒன்றுமுல்லையுந்தெய்வதபூமியென்றுரைத்தற்
கென்றுமோரிடையூறிலையேதுவென்னென்னிற்
றுன்றுதேவெலாமுறுப்புறச்சுமந்தபல்பசுவு
மன்றவண்டரும்வைகலேசாலுமால்மதியீர்.
34
65தூயவேய்ங்குழலோசையுந்தொகுநிரைக்கழுத்தின்
மேயமாமணியோசையுமேகம்வாய்விடுக்கும்
பாயவோசையுந்தனித்துறைபாவையருவப்பா
ராயநாயகர்தேர்வருமோசைகேட்டம்மா.
35
66வளர்த்தநாந்தனித்தமர்வுழிமாரவேளெய்து
தளர்த்தவீசுவீரரும்பெனத்தையலார்நகைக்க
விளர்த்தமுல்லைகண்மீளவும்வீசுவவரும்பு
கிளர்த்மாதரார்கிளர்நகைக்கெதிர்நகைத்தென்ன.
36
67மலர்ந்தபூம்புனமுருக்குகள்சூழ்ந்தனமருவ
வலர்ந்தபூவைகளதனடுப்பொலிதருங்காட்சி
கலந்தசெந்தழற்கோட்டையுள்வாணண்முற்கரையும்
வலந்தவாவிறற்றானவருறைவதுமானும்.
37
68பூத்துநின்றிடுபலாசுநஞ்சிவபிரான்புரையு
மேத்துகார்புறஞ்சூழ்ந்ததுகரியதளியையும்
வார்த்தசெய்யதேனத்தகுதோனின்றுவழியு
மார்த்தபுண்ணிழிநீரெனலாம்வனத்தம்மா.
38
69வரகுஞ்சாமையுமவரையுந்துவரையுமலிந்து
விரவும்பல்வளமேதகப்பொலிவனவொருபாற்
பரவுதீஞ்சுவைப்பாறயிர்மோர்பகர்வெண்ணெ
யுரவுவாசநெயிவ்வளம்பொலிவனவொருபால்.
39
70கன்றுமாக்களுஞ்சேக்களும்பொலிபெருங்கானத்
தொன்றுமேன்மையையென்னுரைசெய்தனமுலவா
தென்றுநீர்வளமலிந்துகண்கவர்பொழிலியைந்து
துன்றுமென்மைசான்மருதத்தின்வளஞ்சிலசொல்வாம்.
40

மருதம். 

71தருவுந்தேனுவுஞ்சங்கமும்பதுமமுமணியும்
வெருவும்வாள்வலித்தேவருமிடுபணிவிரும்பத்
திருவுநேர்கலாச்சசிமுலைச்சுவடுயர்திணிதோண்
மருவுமிந்திரன்காவலிற்பொலிவதுமருதம்.
41
72மருதமென்பதுந்தெய்வமான்மியமுளதென்று
கருதவோரிடையூறிலைகமழ்சுராபான
மொருவுறாதுசெய்வார்களங்குறைதலுமாம்பை
வெருவுறாதமர்நீர்மையுமேதகுசான்றாம்.
42
73கொங்குதங்கியசந்தமுங்காரகிற்குறடுந்
தங்குமால்கரிக்கோடுமாமயிற்பெருந்தழையு
மெங்குமாகவெள்வயிரஞ்செம்மணிபலவெடுத்துப்
பொங்குவெண்டிரைகொழித்துலாய்வரும்பெரும்பொருநை.
43
74வலியவச்சிரமேந்திவெள்வாரணமூர்ந்து
பொலியநன்கரம்பைகடழீஇத்தானத்திற்பொருந்தி
யொலியகற்பகக்கானளாயுறுதலிற்பொருநை
கலியவாம்கழற்காலுடையிந்திரன்கடுக்கும்.
44
75ஓதிமஞ்செலுத்திடுதலாலொளிகெழுபணில
மாதியேந்துபுபூமணந்திடுதலாலலவன்
சோதிமாமணியரவஞ்சார்வேணிசூழ்தரலா
னீதிமூவருநிகர்ப்பதுநெடும்புனற்பொருநை.
45
76அன்றுதாகநோயொருகுறடணிந்திடவார்த்து
வென்றுவந்ததுபற்பலதாகநோய்வீட்ட
வின்றுவந்ததோவென்றிடமிகப்பெருக்கெடுத்து
நன்றுபொங்கியார்த்தெழுத்ததுநலமலிவையை.
46
77போந்துமேகம்வாய்மடுத்தொழித்திடுமெனல்பொய்யே
யேந்துமிந்நதிமடுத்துவரொழித்தநீரெடுத்து
மாந்துவிண்ணினிதாப்பெயுமெனவராவளர்கண்
மோந்துபொங்கியார்த்தெழுவதுமுதுமதுநதியே.
47
78வாரியேழுமொன்றாயினுமதித்திடப்படுமோ
ரேரிபோல்வதோவெனப்புகல்பற்பலவேரி
மூரிநீர்கடைபோகவுமுதுகரையலைத்து
மாரியாரினுமறாதருள்வாமெனமலிந்த.
48
79மொழிபல்லேரியினதிகளின்புனன்முதுமதகின்
வழிபுகுந்துபோய்வயலெலாம்புகுந்தனமறாத
பழிவிளைத்திடுமலமறப்பத்திசெய்தொழுகு
மிழிவிலாரிடத்தெம்பிரானருள்புகுந்தென்ன.
49
80திரைபரந்தெழுதீம்புனல்வயறொறும்புகுத
நுரைபரந்தெழுகட்புனனுளையவாய்ப்புகுத்தி
வரைபரந்தெழுதோளுடைமள்ளருண்மகிழ்ந்து
விரைபரந்தெழுபூம்பணைபுகுந்தனர்விரைந்தே.
50
81பிறங்குமாயவன்மனைவிதன்பேருடல்பிளப்ப
நிறங்குலாமவனொருபவத்துறுபடைநிறுத்தி
மறங்குலாவுதென்றிசையினானூர்திவன்பிடரி
னறங்குலாநுகம்பிணைத்தனர்மேழிகையணைத்தார்.
51
82வலக்கையுட்குறுமுட்டலைக்கோலொன்றுவாங்கி
விலக்கருங்கடுப்பமைதரவிளாப்பலகோலி
நலக்குறும்படைச்சால்செறிதரநகுபலவு
முலக்கவன்பகடுரப்பினருழுதனர்மாதோ.
52
83முன்னநம்முருக்கொண்டவன்முருக்குவெம்படையே
யன்னவன்றிருமனையொடுநம்மையுமடர்ப்ப
தென்னறிந்திலமெனச்சிலமீனெழீஇத்துள்ளும்
பன்னருந்துயருற்றொளித்திடும்பலகூர்மம்.
53
84கரக்குமாந்தர்பாலிரவலர்முகமெனக்கவிழ்ந்த
புரக்குமாயவன்கண்ணிலும்பொலிபலகமலம்
பரக்குமின்னனவிங்ஙனமாகவும்பாரார்
தரக்குமஞ்சியவலியினாலுழுதொழில்சமைந்தார்.
54
85வடக்கிருந்துதென்றிசைசெலநடத்தியும்வயங்கு
குடக்கிருந்துகீழ்த்திசைசெலநடத்தியுங்குளிர்செ
யடக்குபுன்முதலியாவையுமழிந்துசேறாகிக்
கிடக்கும்வண்ணமேயுழுதனர்கெழுவலிமள்ளர்.
55
86செறுவின்சீருறவரம்புருக்குலைந்ததுதேர்ந்து
மறுவில்செய்ப்புகழ்நுமக்குறாதெனமறுப்பார்போற்
பெறுவலத்துயர்மள்ளர்கள்பேணுகங்கரிந்து
கொறுகொறுத்துஞெண்டுழன்றிடக்குலையுயர்த்தினரால்.
56
87ஓதுவேதியர்முதலியோர்நடுநிலையுறுதற்
கேதுவாஞ்செறுநடுநிலையெனுஞ்சமமெய்தத்
தீதுதீர்பரம்பேறுபுமள்ளர்தாஞ்செலுத்தக்
கோதுதீர்படிமக்கலம்போற்சமங்கொண்ட.
57
88மேகவாகனனாகியவேந்தனைத்தொழுது
பாகமார்தரச்சமைந்தநென்முளைகள்பற்பலவும்
வேகமாய்விதைத்துறவழிநாட்புனல்வீழ்த்திக்
காகமாதிகளுறாவகையோப்பினர்களமர்.
58
89வெள்ளியங்குரித்தெனப்பொலிமுளையெலாம்விழைநீ
ரள்ளியுண்டுயர்மரகதமங்குரித்தென்னப்
புள்ளிதீர்பசப்புற்றதுபொற்புறத்தளிர்த்தாங்
கொள்ளிதாலெனத்தளிர்த்தனபெரும்பணையொருங்கு.
59
90உற்றகேவலத்துயிர்களைப்புவனங்களொருங்கு
பற்றவற்றதோர்பருவத்துவிடுபராபரன்போ
லற்றமற்றபைம்பயிர்களைப்பருவநன்கறிந்து
கொற்றமள்ளர்கள்கொண்டுபோய்வயறொறுநடுவார்.
60
91நட்டபைம்பயிர்நன்னிலந்தாழ்ந்தெழுநயமே
யொட்டமுன்புதாழ்ந்தெழுந்துபின்வளர்வுழியூறா
வட்டவாய்மலர்தாமரைகுமுதங்கண்மலிந்த
பட்டவாயிறங்குணங்களும்பாற்றுலோபம்போல்.
61
92எறிதருங்களையெறிதரும்பருவமீதென்று
செறிதரும்புயவலியுடைக்களமர்கள்செப்பக்
குறிதருங்கருங்கயல்விழியுழத்தியர்குழுமி
மறிதரும்புனல்வயலிடையனமெனப்புகந்தார்.
62
93அங்கண்மேவியவுழத்தியரளவையோராம்ப
லங்கண்வாங்கயல்வெண்டரங்கங்களேயாம்ப
லங்கண்ஞெண்டுநாற்காலிலோர்கானடையாம்ப
லங்கண்மாரிகைபொழிதரக்களைவதுமாம்பல்.
63
94கண்ணுமாற்றுக்காலாட்டியர்கொங்கைகோகனகங்
கண்ணுமற்றவர்குழல்பொழிமதுவுங்கோகனகங்
கண்ணும்வாண்மெய்யினொளியுமற்றையகோகனகங்
கண்ணுமாதெனத்தடிவதுமதுப்பெய்கோகனகம்.
64
95வாயுரைப்பதுவள்ளைகைதடிவதும்வள்ளை
யாயகையணிநகுவளையழிப்பனகுவளை
யோயமாய்ப்பதுசைவலமிசைவலமுடைய
பாயமென்பணையகம்புகூஉத்தொழில்செய்பாவையரே.
65
96இன்னவாறுபல்களைகளைந்தெழுதலுமுலோப
மென்னவோதுதலொழிதரக்குணந்தடித்தென்னப்
பன்னவாம்பயிர்முழுமையுந்தடித்துறப்பணைத்துப்
பின்னர்வான்சதிரீன்றனபேருலகுவப்ப.
66
97உம்பல்வாய்கிழித்தெழுமரப்பெனக்கதிரொருங்கு
நம்புபைம்பயிர்மடல்கிழித்தெழுந்துநன்மதியம்
பம்பவாக்கியகிரணத்தாலினியபால்பற்றி
யம்பர்முற்றுறவிளைந்துசாய்ந்தனபணையகத்து.
67
98பிறையுருப்புனையிரும்புகைக்கொடுபெருங்களமர்
முறையறுத்தவைமுழுமையும்வரிந்திருங்களத்து
நிறைதலைச்சுமையாக்கொடுசென்றுபோய்நிரப்பிச்
சிறைகுலைத்துமேற்கடாம்பலமிதித்திடச்செய்வார்.
68
99சங்கநின்றும்வெண்டாளம்வேறெடுத்தெனவைநின்
றங்களத்தடுசெந்நெல்வேறெடுத்தினிதாகத்
துங்கமார்தருவளியெதிர்தூற்றினர்குவித்தார்
சிங்கலில்லதோர்காலெடுத்தளந்தனர்சிறப்ப.
69
100இறைவன்பாகமுமேனையர்க்கீவதுமீந்து
குறையிலெஞ்சியயாவையுங்கொண்டுபோய்மனைவாய்
நிறையவிட்டுவைத்தைம்பலத்தாற்றையுநிலைசெய்
மிறையிலாக்குடியெங்கணுநிறைந்துளமேன்மேல்.
70
101கரும்புமஞ்சளுமிஞ்சியுந்தெங்குமொண்கமுகும்
விரும்புமேனம்பொலிதருமருதத்தின்மேன்மை
யரும்பும்வாஞ்சையிற்சிறிதுரைத்தனஞ்சிறிதறைவாஞ்
சுரும்புசூழ்தருநெய்தல்சார்தொடுகடல்வளமும்.
71

நெய்தல். 

102வேறு.
வருணன்காவலின்வயங்குநெய்தல்வாய்ப்
பொருணன்கீட்டியபோகுதோணியு
மருவிலவல்விரைஇவருபொற்றோணியு
மொருவுறாதொன்றோடொன்றுமுட்டுமே.
72
103மிக்ககைதையும்விரவுஞாழலுந்
தொக்கபுன்னையுந்தோட்டுநெய்தலு
மொக்கவீசுதோறுற்றவாசனை
புக்குலாவலிற்புலவுமாறுமே.
73
104கொடியிடைப்பரத்தியர்குழற்கணி
நெடியதாழைவாசனைநிரம்பலாற்
படியின்மற்றவர்பகர்புலாற்கயல்
கடியமீனெனக்களித்துக்கொள்வரால்
74
105உப்புமீனமுமொன்றுபட்டிட
வப்புநீர்மையினமைத்துணக்குவார்
தப்புறாதுபுள்சாயச்சாடுவார்
பப்புவாள்விழிப்பரத்திமார்களே.
75
106வலையிழுப்பவர்வயக்குமோதையு
முலைதரத்திமிலுந்துமோதையும்
விலைபடுத்துமீன்விற்குமோதையு
மலைகடற்கெதிராய்முழங்குமே.
76
107வேறு.
பரவுவாரிசூழ்நிலப்பெருவளமெவர்பகர்வார்
குரவுநெல்லியுமிருப்பையுங்கோங்கமுங்கொண்டு
விரவுநண்புடன்போக்கினர்விரும்புமாறேன்ற
புரவுசெய்திடுபாலையும்பொலியுமாங்காங்கு.
77
108திணைமயக்கம்.
வரையகம்பொலிகளிறுகைநீட்டிவண்கானத்
தரையகம்பொலியிறுங்குகொள்வதுமொருசாராம்
விரையகம்பொலிகான்குயின்மென்பணையோடை
நிரையகம்பொலிமாந்துணர்கோதலுநிகழும்.
78
109பணைவிராவியவயலைபோய்ப்புன்னைமேற்படாப்
பெணைவிராவியகடற்றுகிர்வஞ்சிமேற்பிறங்கு
மணைவிராவியசங்கினான்பாலோடுதேனு
மிணைவிராவியமாங்கனிச்சாறும்வீழ்ந்தியையும்.
79
110இன்னவாயவைந்திணைவளப்பாண்டிநாட்டியல்பைப்
பன்னகேசனும்பகரமுற்றாதெனப்பகர்வா
னென்னின்யாமெவன்சொற்றனநகரங்களெவைக்கு
முன்னிலாவியகண்டதேவிப்புகழ்மொழிவாம்.
80


திருநாட்டுப்படல முற்றிற்று. 
ஆக படலம்-2-க்கு. திருவிருத்தம்--110


2. திருநகரப்படலம். (111- 200 )

 

111அண்டருமுனிவருமவாவிச்சூழ்வது
தண்டருமறம்பொருளின்பஞ்சார்ந்தவர்க்
கெண்டரும்படியளித்தெச்சமெய்தவுங்
கண்டருமான்மியக்கண்டதேவியே.
1
112பூமருவுயிர்த்தெழுபுவனம்போர்க்குங்கா
வாமருவுலகமுமங்கைகூப்பிடப்
பாமருபுண்ணியம்பலவுமாக்கிடுங்
காமருவளத்ததுகண்டதேவியே.
2
113ஏற்றமார்தனைக்குறித்தெவருமாதவ
மாற்றவாழம்மையேயடைந்துமாதவம்
போற்றவாந்தலமெனிற்புரைவதில்லைதோங்
சாற்றவாமான்மியக்கண்டதேவியே.
3
114சிறைவலிக்கழுகொன்றுதேடிக்காணுறா
நறைமலர்த்திருமுடிநயந்துகண்டொரு
குறையுடைக்கழுகருள்கூடச்செய்தது
கறையறப்பொலிவளக்கண்டதேவியே.
4
115பண்ணியமாதவப்பண்பினோர்க்கலா
லண்ணியவேனையோர்க்கமைதராததா
லெண்ணியயாவையுமெளிதினல்கிடுங்
கண்ணியபெருவளக்கண்டதேவியே.
5
116புறநகர்.
கருங்கடலுவர்ப்பொடுபுலவுங்காற்றுவர்
னொருங்குமுற்றுறவளைந்துறுத்துதித்தெனப்
பெருங்குரற்புட்களின்பெருமுழக்கொடு
மருங்குறச்சூழ்தரும்பசியவான்பொழில்.
6
117அக்கருங்கடலகத்தளாந்துகிர்க்கொடி
யிக்கருஞ்சோலைவாயிளையமாதரா
ரக்கருங்கடலகத்தலங்குநித்தில
மிக்கருஞ்சோலையுளிலங்கரும்பரோ.
7
118அனையபைங்கடலகத்தாயநுண்மண
லினையபைஞ்சோலைவாயியைந்தபூம்பொடி
யனையபைங்கடலலையெழுந்தவெள்வளை
யினையபைம்பொழனை்மிசையிலங்குவெண்பிறை.
8
119தலம்புகுநல்லவர்தங்களுக்கிரு
நலம்புகுமன்னவைநல்குமாதரார்
குலம்புகுமாதனங்குழுமியென்னநீர்
நிலம்புகுமோரிருநிறத்தகஞ்சமும்.
9
120ஐயநீர்ப்பெருந்தடம்யாககுண்டமாஞ்
செய்யதாமரையழல்செறியுங்காரளி
வெய்யவாம்புகையழல்வளர்க்கும்வேதியர்
மையறீர்சுற்றெலாம்வயங்குமன்னமே.
10
121வானவர்சூழ்தலினவர்மரீஇயமர்
தானமென்றறிதரத்தக்கபன்மல
ரானவைசெறியவண்டளிகண்மொய்த்திட
வீனமினந்தனஞ்சூழுமெங்குமே.
11
122ஒன்றுநந்தனவனத்தொருங்குகாரளி
சென்றுசென்றுழக்குவபகைவர்சேரிட
மென்றுகண்டசுரர்களெய்திநாடொறு
மன்றுதல்புரிந்தளாயடர்த்தன்மானுமே.
12
123ஒருகழுகினுக்கருளுதவிக்காத்தவன்
றிருநகராதலிற்சேர்ந்தியாமெலா
மருவிடினக்குமின்னருள்வழங்குமென்
றொருவில்பைம்பொழிலுள்வீயொருங்குவைகுமே.
13
124நன்மலர்செறிதருநந்தனந்தொறு
மின்மலர்செருந்திகள்வீயுகுப்பன
வன்மலர்களத்தினானருளின்முன்னைநாட்
பொன்மழைபொழிந்ததைப்புதுக்கினாலென.
14
125தம்முருவெடுத்தவன்றனதுவெம்பகைக்
கம்மவீதினமெனவறிந்தடர்த்தல்போற்
செம்மலிதளர்பலசெறிந்தமாவெலாங்
கொம்மெனமிதித்தளாய்க்குயிலுலாவுமே.
15
126கதிர்படுசெந்நென்மென்காற்றினாலசைந்
ததிர்வருகரும்படியறைந்துகீறலா
லெதிரறப்பொழிந்தசாறெழுந்துபோயயற்
பிதிர்வறவரம்பைகள்வளர்க்கும்பேணியே.
16
127நம்மையூருமையயற்றலத்துநன்புலஞ்
செம்மையிற்காத்தலிற்றெவ்வலாமென
வம்மதண்பணைதொறுமளாவிநெற்கதிர்
கொம்மெனப்பசுங்கிளிக்குலங்கொண்டேகுமே.
17
128பித்தருமிகழ்தராப்பெரியநாயகி
கைத்தலமமர்தலிற்காமர்கிள்ளைக
ளெத்தலத்தெதுகவர்ந்தேகுமாயினுஞ்
சித்தமிக்குவப்பரந்நகரஞ்சேர்ந்துளார்.
18
129மருவலர்முடித்தலைதெங்கங்காயின்வைத்
தொருவறமிதித்தலினுறுசெந்நீரினாற்
கருவுரனிகர்த்தலாற்கறையடிப்பெய
ரிருபொருள்படப்புனைவழுவையெண்ணில.
19
130உருமுறழ்முழக்கினவூழித்தீயென
வெருவருந்திறலினவீசுவாலின
பொருபிறைக்கோட்டினபுலிங்கக்கண்ணின
வருகளிறுகள்செறிகூடமல்குவ.
20
131விழைமதகளிறுகண்மிக்குலாவுவ
தழைகருங்கீழிடந்தயங்குமேலிட
மழைமதச்சுரகரிமகிழ்ந்துலாவுவ
பிழைதபுவாரிகள்பிறங்குமெங்குமே.
21
132ஒன்னலர்மணிமுடியுருளத்தாவுவ
பன்னருமனத்தினும்பகர்கடுப்பின
வென்னருநடுநடுக்கெய்துந்தோற்றத்த
பொன்னணிமணிவயப்புரவியெண்ணில.
22
133குலமகளெனத்தலைகவிழுங்கொள்கையி
னிலகுவெம்பரிசெறியிலாயமீமிசை
யுலவதல்வழக்கெனவுவந்துலாவுறு
மலருமப்பெயர்புனைவானமீனரோ.
23
134ஆருறுகுடத்தினவம்பொற்சுற்றின
பாருறுவன்மையைப்பகிர்ந்துசெல்வன
காருறுவிண்ணையுங்கலக்குஞ்சென்னிய
தேருறுமிருக்கைகள்சிவணும்பற்பல.
24
135அடித்தலந்தேர்பலவமைத்தகூடத்து
முடித்தலந்தவழுதன்முறைமையாமெனத்
தடித்தலமரவொளிர்பரிதிசாலுந்தேர்
நொடித்தலங்கூர்ந்துசெனோக்கமிக்கதே.
25
136வாளொடுபரிசையும்வயக்குங்கையினர்
தாளொடுகூடியகழலர்தாங்கிய
கோளொடுகூற்றொடுமலைக்குங்கொள்கையர்
வேளொடுநிகர்த்தமாவீரரெண்ணிலர்.
26
137தெள்ளியவிஞ்சையர்வியக்குஞ்சீர்த்திய
ரெள்ளியபுறக்கொடையென்றுமில்லவர்
நள்ளியவினைத்திறநாளுநாடியாற்
றொள்ளியதாயகல்லூரியும்பல.
27
138அன்றுவெங்கரிபரியாதிபோலநா
மென்றங்கீழ்நோக்குதலில்லையாலெனா
நன்றுமேனோக்குபுநடக்குமொட்டகங்
கன்றுறாதமர்தருங்கைப்பவாவியே.
28
139கரிபரிதேர்க்குறுகருவியோடுகால்
வரிகழல்வீரர்கள்வயக்குமேதிகள்
புரிநர்பல்வளத்தொடுபொலியுஞ்சேரியுந்
தெரிதரினளப்பிலசிறந்தவாவயின்.
29
140அறநகரெனப்புகலனையமாநகர்ப்
புறநகர்வளஞ்சிலபுகன்றுளாமினி
துறநகர்பலவுமுள்ளுவக்குஞ்சீரிடைத்
திறநகர்வளஞ்சிலசெப்புவாமரோ.
30
141இடைநகர்.
வேறு.
வாவியோடைமலர்ந்தவுய்யானமு
மாவியன்னவணங்கனையாரொடு
மேவிமைந்தர்விராவுசெய்குன்றமு
மோவியம்புனைமாடமுமோங்குவ.
31
142குழல்கையேந்திக்குறுந்தொடியார்களுங்
கழலினாடவருங்கலந்தாடுவா
ரொழுகுநீர்களிறும்பிடியும்விராய்
முழுகுநீர்கைமுகந்திறைத்தாடல்போல்.
32
143இம்மையேமறுமை்பயனெய்துதல்
செம்மைசாலித்தலத்தின்சிறப்பென
வம்மையூர்மனைமேற்பயிலந்நலார்
கொம்மைவான்றருவின்கனிகூட்டுண்பார்.
33
144ஒண்ணிலாநுதலாரொளிர்மாடமேல்
வெண்ணிலாமுற்றத்தாடவிழுமலர்
கண்ணிலாங்குப்பைகாற்றவுங்கற்பக
மெண்ணிலாமலர்க்குப்பையிறைக்குமே.
34
145மாடமேனிலைமண்ணுந்தொழிலினர்
பாடமைந்தகளிப்புறப்பான்மதி
கூடவாங்குக்குலவுமக்கல்லற
னீடவாக்கிநிலவுறமண்ணுமே.
35
146புதுமணத்தமர்பூவையர்நாணுறா
மதுமலர்ப்பந்தின்வண்சுடர்மாற்றலு
முதுமணிக்கலமொய்யொளிவீசலா
லெதுவினிச்செயலென்றுகண்பொத்துவார்.
36
147தோன்றுமாடமிசைத்தொடிக்கையினார்
சான்றவெம்முலைசார்ந்துபவனத்து
ளான்றவொன்றடுப்பக்கண்டவாடவர்
மூன்றுகொங்கைமுகிழ்த்தமையென்னென்பார்.
37
148மன்னுமேனிலைமாடத்தின்மூடிய
மின்னனார்முத்தமாலைகைவீசுபோ
தன்னமாலைசிதறிவிண்ணாழ்ந்தன
வின்னுமோதுவர்தாரகையென்னவே.
38
149நன்றுநுங்கணலியுமருங்குலவிண்
ணென்றும்வெல்லுமிரண்டுகும்பங்கொளா
வொன்றுகொண்டநலிவில்விண்ணொப்புவ
தன்றுகாணென்றுவப்பிப்பராடவர்.
39
150வளியுலாமதரூடுதன்மாண்கர
மொளிநிலாவுறப்போக்குதலொண்மல
ரளிநிலாங்குழலார்முகத்தாரெழில்
களிநிலாவக்கவர்வதற்கன்றுகொல்.
40
151மேகந்தாழநிவந்தவெண்மாடமேற்
போகுசூலம்பொலிவுற்றுத்தோன்றிடு
மாகர்போற்றவயங்குகயிலைமே
லேகபாதவுருத்திரனின்றென.
41
152மாண்டசெம்பொன்வயங்குசெய்குன்றினைக்
காண்டருங்கருமேகம்வளைத்திடல்
பூண்டவந்திநிறத்தொருபுண்ணிய
னீண்டயானைத்தோல்போர்த்தனிகர்க்குமே.
42
153உள்ளெலாம்வயிரத்தொளியோங்கிட
வெள்ளிநீலம்வெளிவைத்திழைத்தலி
லுள்ளுசத்துவமுட்புறந்தாமதங்
கொள்ளுங்கோலவுருத்திரன்போலுமே.
43
154நீலவம்மனைகைக்கொடுநேரிழைக்
கோலமங்கையராடக்கொழுநர்தா
மாலநின்றமனத்தொடுதாமரைப்
பாலவீழ்வண்டுபற்பலவென்பரால்.
44
155ஊசலாடுவரொள்ளிழைமாதரார்
காசுலாமவர்காதிற்குழையொடு
மாசிலாதவலியுடையாடவர்
நேசமார்மனமுந்நெகிழ்ந்தாடுமால்.
45
156கொந்துவார்குழற்கோதையர்மேற்றுகில்
சந்துவாண்முலைநீங்கத்தவாதுபொற்
பந்தடிப்பர்பகைக்குத்தெரிவித்தே
யுந்துதண்டமவைக்குறுப்பாரென்.
46
157உன்னுதம்மொழியொப்புமைநோக்கல்போன்
மன்னுமாளிகைமீமிசைமாதரார்
பன்னும்யாழ்கொடுபாடுவர்விஞ்சையர்
துன்னும்வாஞ்சையிற்கேட்டுத்துணிவரே.
47
158ஊடலோதையுமூடலுணர்த்துபு
கூடலோதையுங்கோலத்திவவுயாழ்
பாடலோதையும்பாடற்சதிதழீஇ
யாடலோதையுமல்குவவாயிடை.
48
159பூவுஞ்சுண்ணமுஞ்சாந்தும்பொரியும்வின்
மேவுமுத்தமும்வெள்வயிரங்களும்
பாவுசெம்மணியும்பலவாயமற்
றியாவுங்குப்பையிடைநகர்வீதியே.
49
160அளவிலாவளமாயவிடைநக
ரளவிலாச்சிறப்பாருறைசெய்பவ
ரளவிலாப்பல்குடியமையுண்ணக
ரளவிலாச்சிறப்பிற்சற்றறைகுவாம்.
50

 

161உண்ணகர்.
வேறு.
மடலவிழ்துளபத்தண்டார்மாயவனாயமீனம்
படலரும்வலிசார்கூர்மங்கலக்கிடப்படாததாய
கடல்கொலிவ்வகழியென்றுகருதிடப்பரந்துநீண்டு
தொடலரிதென்னவாழ்ந்துசூழ்ந்ததுகிடங்குமாதோ.
51
162வெள்ளியதரளமொண்பூவிரைகுளிர்புறத்தும்வெம்மை
நள்ளியவன்மீனாதியகத்துங்கொணகுகிடங்கு
வள்ளியபுறத்துச்செம்மையகத்துவன்கொடுமைபூண்ட
தெள்ளியவிலைமின்னாரொத்திருப்பதுதெரியங்காலே.
52
163அன்றுலகளந்தமாயோன்வளர்ந்ததிவ்வளவையென்ன
நன்றுலகறியத்தேற்றித்தானவர்நடுங்கச்சூழ்ந்து
சென்றுபோர்மலையாவண்ணந்தேவர்வாழ்நகருங்காத்துப்
பொன்றதலறநிற்கும்பாம்புரிவளையகப்பாமாதோ..
53
164பொறிபலவடக்கலானுஞ்சலிப்பறுபொலிவினானும்
பறிநிகர்வேணியெங்கள்பரனையுட்கோடலானு
மறிவருமுயற்சியானும்பகையறவயங்கலானு
முறிவருந்தவத்தின்மேலாமுனிவரும்போலுநொச்சி.
54
165சாற்றுகிர்க்குறிகைகொண்டுதட்டல்பற்குறியணைத்தல்
போற்றுநல்லமுதுதுய்த்தன்முதற்புறக்கரணமோடு
மாற்றகக்கரணமாயகரிகரமாதியாவுந்
தோற்றுவபரத்தைமாதர்சுடர்மனப்புறத்திலோவம்.
55
166பன்னரும்வனப்பினானும்பயின்றபல்விஞ்சையானு
நன்னலக்கண்டதேவிநகரமர்கணிகைமாதர்
பொன்னமர்திருவைவேதன்புணர்மடமாதைவென்றா
ரன்னவரற்றைநாடொட்டலர்மடந்தையரானாரே.
56
167சுவைநனியுடையவூனும்பிறர்விழிசிறிதுதொட்டா
னவைமிகுமெச்சிலென்றேகழிக்குநன்மறையோர்தாமு
மவையகம்புகுதுநல்லார்பலர்நுகரதரவூறல்
செவையெனக்கொள்வார்தெய்வவலியெனத்தெளிந்தார்போலும்.
57
168அந்தணராதிநால்வரனுலோமராதியாக
வந்தவர்யாவரேனுமறாமலின்பளிக்குநீராற்
சந்தணிகுவவுக்கொங்கைத்தாழ்குழற்பரத்தைமாதர்
செந்துவர்ச்சடிலமோலிச்சிவபிரான்றானோதேறோம்.
58
169கணிகையர்சிறந்தோரென்றுகரைவதற்கையமின்று
மணிகெழுகூந்தலாதிமாந்தளிரடியீறாக
வணிகெழுமைந்தர்தம்மைமயக்குமற்றனையார்நல்கு
பணியுடைகளுமயக்குமவர்மயங்காதபண்பால்.
59
170உருவுடைமைந்தர்யாருமுறுபெருவிரத்தியாரிற்
பருவநன்மனைவியாதிப்பலரையம்வெறத்துமிக்க
பொருண்முதலனைத்துநல்கிப்பணிகளும்புரிவர்ஞானக்
குருவெனக்கொண்டார்போலுமவர்திறங்கூறற்பாற்றோ.
60
171விருந்துவந்துண்டாலன்றிமென்மலராதிகொண்டு
திருந்துசுத்திகளோரைந்திற்சிவார்ச்சனைசெய்தாலன்றி
வருந்துதீர்த்திரப்போருள்ளமகிழ்ச்சிசெய்திட்டாலன்றி
யருந்துதல்செய்யார்சாவாவமுதமும்வேளாண்மாக்கள்.
61
172ஒழுக்கமன்பருளாசாரமுறவுபசாரமுற்று
விழுக்குடிப்பிறப்பையோம்பிமேவபிமானம்பூண்டு
மழுக்கலில்சிறப்பில்வாழும்வண்மைசால்வேளாண்மாக்கள்
செழுங்குடிக்கிரகமேயதிருமறுகணிவிண்போலாம்.
62
173மழைகருக்கொண்டதெண்ணீர்முழுவதுமாநீர்ஞாலத்
துழையுறவிழுதலன்றிவிண்முதலுறாமைபோலத்
தழைதருபுவியினாயதவாப்பொருளெலாமந்நாயகர்
விழைதருமாடமன்றிவேறிடம்புகுதாவென்றும்.
63
174புலியதளுடுத்துவானும்பொலந்தருநல்கவாங்கி
மெலுவறவுடுத்துவாருமன்றிவேறிடத்துள்ளாரு
ளொலிபுகழ்க்கண்டதேவிநகருறைவணிகமாக்கண்
மலிநியமத்துளாடைவாங்குவான்புகாரும்யாரே.
64
175மலைவருமணிகமாக்கண்மருவியநியமமெல்லா
முலைவருகளங்கநீக்கியுவாமதியினைச்சேறாக்கி
நிலையுறப்பூசியன்னசுண்ணவெண்ணிகழ்ச்சியாலே
கலைமகளெனலாம்பற்பல்கலையமைந்திருத்தல்சான்றே.
65
176கோடுதலின்றிக்கோடிகோடியாக்கொடுக்கவல்லார்
நாடுயரவரேயன்றிஞாலத்துமற்றையார்கா
ணீடுறக்கொள்வானெண்ணியெத்தனைபேர்வந்தாலுங்
கூடுகைசலிப்புறாதுகொடுத்திடுவிரதம்பூண்டார்.
66
177நென்முதலொருபாலாகுநேத்திரமொருபாலாகும்
பன்மணியொருபாலாகும்பரவுபொன்வெள்ளிசெய்பூ
ணென்னவுமொருபாலாகுமிருங்கலையொருபாலாகு
மன்னவர்நியமம்பொற்கோனருங்கருவூலம்போலும்.
67
178வருந்தியெவ்விடத்துஞ்சென்றுமாண்பொருளீட்டல்போலத்
திருந்தியவன்னதானஞ்சிவாலயப்பணிமுன்னான
பொருந்தியபலவுஞ்செய்துபுண்ணியப்பொருளுமீட்டிப்
பெருந்திருவேற்றோர்க்கீய்ந்துபெரும்புகழ்ப்பொருளுங்கொள்வார்.
68
179கரப்பினெஞ்சுடையராகிக்கடனறிவாருமாய்ச்சீர்
பரப்புமவ்வணிகரானோர்பாலிரவாருமில்லை
நிரப்புமற்றவரைக்கண்டநேயத்தோரூருமில்லை
யிரப்புமற்றவரானாளுமிழிவினையடைந்ததில்லை.
69
180வெள்ளியநீறுபூசிவிளங்குகண்மணிகள்பூண்டு
தெள்ளியவெழுத்தைந்தெண்ணிச்சிவார்ச்சனைவிருப்பினாற்றித்
தள்ளியவினைஞராகித்தழைந்துவாழ்வணிகமாக்க
ளொள்ளியமாடவீதியுரைத்திடமுற்றுங்கொல்லே.
70
181வரூபரிதரங்கங்காட்டமதமலைமகரங்காட்டத்
திருவளர்கொடிஞ்சிப்பொற்றேர்செறிதருநாவாய்காட்டப்
பொருபடைக்கலமீன்காட்டப்பொருனர்மீனெறிவார்காட்டக்
கருநிறக்கடலேமானுங்காவலர்மாடவீதி.
71
182மருவலர்தருமண்கொண்டுவானகமவர்க்குநல்கிப்
பேருமையிலிழிந்ததேற்றுப்பிறங்கிமிக்குயர்ந்ததாய
பொருவருமின்பநலகும்புண்ணியப்பிரானையொத்த
திருவளர்மன்னர்வாழுந்தெருவளஞ்சொல்லப்போமோ.
72
183பசுவுடம்பழித்துமுக்கட்பதியுடம்போம்பிக்கொள்வார்
வசுவளர்த்ததனுட்சொன்னவள்ளலைத்தரிசிப்பார்பன்
முசுவுகள்சோலைதோறுமொய்த்தவானவரைக்கூவி
யுசுவினூண்மகத்தினூட்டுமொண்மையர்வீதியோர்பால்.
73
184காலையின்முழுகியாப்பிகைக்கொடுபவித்திரஞ்செய்
மாலையினட்டில்புக்குமடையமைத்தேந்தியுச்சி
வேலையினதிதியர்க்குவிருப்புடனூட்டுமஞ்சொற்
சோலையிற்கிளியன்னாராற்றுலங்குவமறையோரில்லம்.
74
184எண்ணில்வேதாகமங்களையமெய்தாமையாய்ந்து
மண்ணிலான்மார்த்தத்தோடுபரார்த்தமும்வயங்கப்பூசித்
தொண்ணிதியருட்பேறெய்தியொழிந்தமும்மலத்தினாராம்
புண்ணியவாதிசைவர்பொலிதிருமறுகுமோர்பால்.
75
186எழுமதமழகுபத்துங்குற்றமீரைந்தும்போகத்
தழுவியொண்கருத்துமுன்னாச்சாற்றியவைந்தனாலுங்
கெழுதகுபிறவாற்றாலுங்கிளரியலுரைக்கவல்ல
முழுதுணர்புலவர்மேயகழகமுமுகிழ்க்குமோர்பால்.
76
187புண்ணியமறையோராதியாவரும்புகுந்துமேலோர்
கண்ணியவுமையோர்பாகக்கண்ணுதற்பெருமான்பொற்றா
ணண்ணியவின்பேயென்றுநயப்புறவின்பமேன்மேற்
பண்ணியதாயதண்ணீர்ப்பந்தரும்பொலியுமோர்பால்.
77
188வேதியராதியோர்கள்விலாப்புடைவீங்கவுண்பான்
கோதியலாதவல்சிகுய்கமழ்கருனைபாகு
மோதியசுவையநெய்பான்முதலியபலவுநல்குந்
தீதியலாதசெல்வத்திருமடங்களுமுண்டோர்பால்.
78
189குலவியதெய்வஞானக்குரவனாரருளினாலே
நிலவியசமயமாதிநிகழொருமூன்றும்பெற்றுக்
கலவியபாசமைந்துங்கழிதரவொன்றியொன்றா
தலவியலாதவின்பமுறுநர்வாழ்மடமுமோர்பால்.
79
190இன்னபன்மறுகுஞ்சூழவெறிகதிர்மதாணிநாப்பண்
மின்னவிர்மணயேபோலவிளக்கமிக்கமைந்துமேவும்
பின்னமில்கருணைத்தாயாம்பெரியநாயகியோடெங்கண்
முன்னவன்மருதவாணன்முனிவறப்பொலியுங்கோயில்.
80
191உருத்திரப்பெருமான்றீர்த்தமுலகளந்தவன்செய்தீர்த்தந்
திகுத்தகுபிரமதீர்த்தஞ்செறிபுகழ்ச்சடாயுதீர்த்த
மருந்தபன்மலரும்பூத்துவாசமெண்காதம்வீசிக்
கருத்தமைகோயில்சூழ்ந்துகவின்கொடுபொலியாநிற்கும்.
81
192திரிபுரமெரித்தஞான்றுசேணுலகனைத்துந்தாங்கப்
பரிபுரம்புலம்பும்பூந்தாட்பரையொருபாகத்தண்ண
றெரிபுரம்பொலியுமேருவேறொன்றசெறித்ததென்ன
வரிபுரந்தரன்முன்னானோரடைபொற்கோபுரநின்றன்றே.
82
193பகைத்தமும்மதிலுநீறுபட்டமையுணர்ந்துதீயா
நகைத்தவனருள்கொள்பாக்குநயந்துயரொன்றுமேவி
யுகைத்தவெஞ்சினத்துத்தீயருறாவகையொதுக்கிச்சூழ்ந்து
தகைத்ததுநிற்றல்போலுந்தவாச்சுடர்ச்செம்பொனிஞ்சி.
83
194ஒருமதிலின்னதாகவொருமதிலுணர்ந்துவல்லே
தருமவெள்விடையினார்க்குத்தவாநிழனாளுஞ்செய்ய
மருமலர்த்தருவொன்றாகிநிழல்செய்துவயங்கிற்றென்னப்
பொருவில்வெண்மருதநாளும்பூத்துறத்தழையாநிற்கும்.
84
195மற்றுமோர்மதிலும்போந்துமண்டபமாதியாய
முற்றுமாய்ப்பொலிந்ததென்னமொய்த்தகால்பத்துநூறு
பற்றுமண்டபமுன்யாவும்பாரிடைக்கருங்கற்போழ்ந்து
செற்றுநன்கமைத்தலாலேகருங்கதிர்திகழவீசும்.
85
196தனைத்தவர்செய்தஞான்றுதனக்கெதிர்முளைத்ததோர்ந்து
நினைத்தபொன்மேருவள்ளனிறையருணிரப்பிக்கொள்ள
முனைத்தபல்விமானமாகிமுகிழ்த்ததென்றெவரும்பேச
வினைத்தெனவறிதராப்பொன்விமானங்களெங்குமோங்கும்.
86
197கூண்டவன்புடையதாயகுட்டிமமுன்றிலெங்கு
நீண்டவன்முதல்வானோருநிறைபெரும்புவியுளார
மாண்டவன்புடையராகிவந்துபொன்மாரிதூர்ப்பா
ராண்டவன்பொழிந்தவாறேயடியரும்பொழிவாரென்ன.
87
198மழைநிகர்களத்துப்பெம்மான்வண்மைசால்திருமுன்னாகத்
தழைமலர்சிறிதுமின்றிப்பிறதழைமலரேசார
வுழையமாமிசையுமின்றியொருதருநின்றுசூழ்வோர்
விழைதருபலன்களெல்லாங்கொடுத்திடுமேலுமேலும்.
88
199அரகரமுழக்குநால்வரருட்டிருப்பாடலார்ப்பு
முரசதிரொலியும்வீணைமுழவெழுமிசைப்புமம்மான்
பரவுசந்நிதிமுன்னாகப்பணிந்தெழுமடியார்பாவ
வுரவுவெங்களிறுமாய்க்குமரிமுழக்கொத்திசைக்கும்.
89
200கண்ணலங்கனிந்தவன்பிற்கடவுளோர்முதலோரீண்டி
யெண்ணலங்கனிந்தவெல்லாமெய்தியின்படையநல்கிப்
பெண்ணலங்கனிந்ததெய்வப்பேரருட்பெரியாளோடு
மண்ணலங்கனிந்தமேனியமலனக்கோயின்மேவும்.
90


திருநகரப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 3க்கு, திருவிருத்தம். 200
--------------------

4. நைமிசைப்படலம். (201 - 237)

 

201தருப்பொருந்தலாற்சலதரமூர்தலாற்சசியை
விருப்பொருங்குறத்தழுவலால்விண்ணவர்விழையுந்
திருப்பொருந்தலாற்கண்மலராயிரஞ்செறிந்த
வுருப்பொருந்தலானைமிசமிந்திரனொக்கும்.
1
202மலரணங்குறத்தழுவலான்மருவுநால்வாயா
லலர்மிசைப்பொலிமாண்பினான்மண்ணளித்தலினா
னலர்விரும்புபல்கலைப்பொலிவுடைமையானாளு
முலர்தராதநைமிசவனம்விதியையுமொக்கும்.
2
203உற்றதானவர்தமையொழித்தமரரையூட்டக்
கற்றமேன்மையாற்பூமணம்பொருந்தலாற்கருங்கார்
செற்றமேனிவந்தமைதலாலளிவளர்திறத்தாற்
கொற்றநேமியங்கடவுளும்போலுமக்குளிர்கான்.
3
204பிறையுங்கங்கையுமீமிசைத்தவழ்தலாற்பிறங்கி
நிறையும்பல்சடையுடைமையானிலவுபூங்கொன்றை
நறைமணத்தலாற்கூவிளநயத்தலானாளுங்
குறைவிலாச்சிவபரனையுமானுமக்குளிர்கான்.
4
205திருந்துவானவர்முனிவரர்மொய்த்தலாற்செவ்வே
யிருந்துநன்னலமெய்தினர்க்களித்தலாலால
மருந்துசெய்தவனமர்தலாற்சலிப்பரும்வலியாற்
பொருந்துவெள்ளியங்கயிலையும்போலுமக்கானம்.
5
206மோகமாதிகளொழிந்தவம்முழுத்தவவனத்து
யாகசாலையினெழும்புகையெங்கணுந்துழாவி
மேகமார்தருவெளியிடைப்படிதலாலன்றோ
மாகமார்நிறம்புகைநிறமென்பர்மண்ணுலகோர்.
6
207ஓங்குநைமிசத்துஞற்றிடுமகத்தழற்கொழுந்து
வீங்குபொன்னுலகுருக்குமென்றஞ்சியேவிண்ணோர்
தேங்குகங்கையுமங்குலுங்கீழுறச்செய்தா
ராங்குநின்றிவணுறுவதுங்குளிரவாயன்றோ.
7
208மேயபற்பலதருக்களினின்றுமேலிடத்துப்
போயபல்விடபங்களின்மலர்தொறும்புகுந்து
பாயவண்டுகளுகுத்தசெந்தாதுவீழ்பண்பாற்
றேயமோதும்விண்ணுலகுசெந்தாதுலகென்றே.
8
209விண்ணளாவியமகத்தழற்கொழுந்துமேலெழுந்து
கண்ணளாவியமரமுதற்கரைதருக்கொழுந்த
மெண்ணளாவியவேற்றுமைதெரிவரிதென்றுந்
தண்ணளாவியதண்மையும்வெப்பமுந்தவிர்ந்து.
9
210அண்டவாணர்தம்பசிதவிர்த்தருளுமத்தானம்
புண்டரீகமுமாம்பலும்புரிமகப்பொருட்டி
னண்டுகூர்மமும்பறவையுமளப்பரியதாய
வண்டுமொய்த்தலின்வனமெனற்கொத்ததுமாதோ.
10
211வேறு.
இன்னபல்வளத்தநைமிசவனத்திலிருப்பவர்விதிவிலக்கமைதி
சொன்னமெய்ப்பொருணூலாகியமறையுந்துளக்கமிலங்கமோராறும்
பன்னரும்புகழ்சாலாகமத்திரளும்பகர்தருமற்றுளவெவையு
நன்னயம்பயப்பப்பாலுணுங்குருகினவையொருமூன்றுமற்றுணர்ந்தார்.
11
212கொடுமருத்தெழுந்துநெடுவரைபிடுங்கிக்குவலயநடுங்கவீசிடினும்
படுதிரைக்கடலோரேழுமொன்றாகிப்பரந்துமேற்பொங்கினுங்கொண்மூ
வடுதிறற்பெருந்தீயுருமுவீழ்த்திடினுமணுத்துணையஞருமுட்கொளார்வெங்
கடுமிடற்றமைத்தகண்ணுதற்பெருமான்கழல்கழலாதுள்வைத்திருப்பார்.
12
213வானமர்நறவுக்கற்பகநீழல்வாழ்பவன்றோற்றமுயிறப்புங்
கானமர்கமலமலர்மிசைப்பொலியுங்கடவுடன்றோற்றமுமிறப்பு
மூனமர்திகிரிவலனெடுத்துவணமுயர்த்தவன்றோற்றமுயிறப்புந்
தானமர்காலமெனப்பலகண்டார்தவாதினும்பற்பலகாண்பார்.
13
214இருவினைப்பயனென்றுரைசெயப்பட்டவின்பமுந்துன்பமுமெய்தி
னுருவினைவிடாமுன்னமைந்தனவேயென்றுவப்புறார்முனிதராரென்றுங்
கருவினையொழிக்குஞ்செயல்செயலன்றிக்கருதுறார்பிறநகையிடத்தும்
வருவினையருளினிரிதரக்காண்பார்மாசறுகாட்சியிற்பொலிவார்.
14
215என்னபல்பிறப்புந்துயரமேவிளைக்குமித்தகுபிறப்பறற்குபாயம்
பன்னருமறையீறளப்பரும்பெருமான்பாதங்காணுதலதற்குபாய
மன்னவன்விபூதிகண்மணிபுனைந்தோரைந்தெழுத்தெண்ணியாங்காங்கு
மன்னவீற்றிருக்குந்தலப்புகழ்கேட்டுமனங்கொளலென்றுளந்துணிந்தார்.
15
216மொழிதருதவத்துச்சவுநகமுனிவன்முதற்பலமுனிவரர்குழுமி
வழிதருமதுப்பூங்கொன்றையானுவக்குமாமகம்பன்னிரண்டாண்டிற்
கழிதருமொன்றுபுரிந்தனரதனைக்காணியநீற்றொடுபரமன்
விழிதருமணிபூண்முனிவரர்பலருமேவினாரம்முனிவரருள்.
16
217செங்கதிரகத்துப்பொலிந்ததென்றுரைத்தல்செய்யமெய்ஞ்ஞானமும்புறத்துத்
தங்கவெண்மதியம்போர்த்ததென்றுரப்பத்தவலரும்விபூதியுமுடையோன்
பங்கமில்பரமன்விழிமணிபூண்டுபரவெழுத்தைந்துமுட்கணித்துத்
துங்கமாணவர்தங்குழாம்புடைசூழத்சூதமாமுனிவனும்வந்தான்.
17
218வந்தமாமுனியையிருந்தமாமுனிவர்மகிழ்ந்தெதிர்சென்றடிபணிந்து
சந்தமாரிருக்கையழகுறவிட்டுத்தனித்ததன்மேலுறவிருத்திக்
கந்தமாமலர்முற்கொண்டருச்சித்துக்கவின்றபாத்தியமுதலளித்துத்
தந்தமாதரவிற்பணிந்தனரிருந்தார்சவுநகமுனிவரனுரைப்பான்.
18
219மறைமுழுதுணர்ந்துவகுத்துபகரித்தவாதராயணமுனிவரன்பாற்
குறையறவுணர்ந்தவருட்பெருங்கடலேகோதிலாக்குணப்பெருங்குன்றே
துறைபலதெரிக்கும்புராணமுற்றளந்துதொகைவகைவிரியினிற்றெரித்து
மிறைதபுத்தருளுங்கற்பகதருவேவிமலவாழ்வேயெனத்துதித்து.
19
220துன்னியகருணைச்சிவபிரானுவக்கத்தொடங்கினமொருமகமுடிப்பான்
மன்னியவதுபோதனையனேயிரங்கிவந்தெனவந்தனையொருநீ
முன்னியநினதுதரிசனமதனான்முடிந்ததித்தினஞ்சுபதினமாய்
நன்னியமத்தேநானுமற்றியாருநன்மகமிம்மகமன்றோ.
20
221ஓரிடந்தலமற்றோரிடந்தீர்த்தமோரிடமூர்த்திநீர்சூழ்ந்த
பாரிடமதனிற்சிறந்ததாயிருக்கும்பகர்ந்தவோர்மூன்றன்மான்மியமு
மோரிடஞ்சிறந்தேயிருப்பதெத்தானமுரைக்கினுங்கேட்கினும்விழைவு
பாரிடங்குணிப்பக்குனிக்குநம்பரமன்பரிந்தருள்செய்வதெத்தானம்.
21
222எத்தலநினையிற்றருமமாமதனோடெத்தலமுரைக்கினன்பொருளா
மெத்தலவங்காணினின்பமாமவையோடெத்தலம்வசிக்கின்வீடாகு
மெத்தலமனாதிமுத்தனெம்பெருமானிடையறாதிருப்பதுமற்று
மெத்தலமயன்மாலாதியர்போற்றியிறைஞ்சிடவெற்றைக்கும்பொலியும்.
22
223இத்தனைவளங்கண்முழுவதுமமைந்தவிருந்தலமொன்றுநீநவின்றா
லத்தனையனையாயுய்குவமறைந்ததகலிடத்துண்டுகொலிலைகொன்
முத்தனையவதுநன்கிருந்திடுமேன்மொழிந்தவெம்பாக்கியமாமாற்
சித்தனையாதுதெளிதரவுரைத்திதேசிகோத்தமத்தவவென்றான்.
23
224தவத்துயர்பெருமைச்சவுநகமுனிவன்றன்மொழியகஞ்செவியேற்றுச்
சிவத்துயர்கருணைச்சூதமாமுனிவன்செம்மனத்துவகையனாகிப்
பவத்துயரகற்றுமிதுபகரென்றபடிநனிநன்றுநன்றந்தோ
வவத்துயரிதுபோற்களைவதுபிறிதின்றகலிடத்தென்றுரைசெய்வான்.
24
225நெடியமாதவத்துச்சவுநகமுனிவநீவினாவியதுலகோம்பும்
படியதாயெவர்க்கும்பேருபகாரப்பண்பதாய்நின்றதுகண்டாய்
கொடியதாகியநஞ்சமுதுசெய்தருளாற்குவலயம்புரந்தாம்பெருமா
னடியவாயடைதற்குபாயமீதன்றியாய்தரினும்பிறிதிலையே.
25
226விழைவினீவினாயபடியெலாம்பொருந்திமேவுமோர்தலமுமுண்டதன்வாய்க்
கழைகுலாஞ்சிலையோற்காய்ந்தவர்தமக்குக்கயிலையாதிகளினும்பிரியந்
தழைதருமனையதலமிதுகாறுஞ்சாற்றியதிலையொருவருக்குங்
குழைதருமனத்தினீவினாவியதாற்கூறுதுமனையமந்தணமே.
26
227மிகுபுகழ்படைத்ததமிழ்வளநாட்டுண்மேதகுபாண்டியநாட்டிற்
றகுபெருந்துறைக்குச்சற்றுமேற்றிசையிற்சாற்றுறும்யோசனையொன்றி
னகுபொழிற்கானப்பேருக்கீசானநற்றிசையோசனையொன்றி
னுகுதலில்சாலிவாடியூர்க்கழலோனுறுதிசையோசனையரையில்.
27
228ஒருதிருப்புத்தூர்க்குற்றகீழ்த்திசையினொன்றரையோசனையளவிற்
பொருவருபுனவாயிலுக்கியைமருத்துப்புணர்திசையோசனையொன்றிற்
றருவடர்பொழிலாடானைக்குவடபாற்றழைதிசையோசனையொன்றில்
வெருவருவீரைவனத்திற்குத்தென்பால்விராந்திசையோசனையொன்றில்.
28
229மதுநதிவிரிசன்மாநதிமுறையேவடக்கினுந்தெற்கினுமொழுகப்
புதுமதிமுடித்தான்றனக்கிடமாகிப்பொலிதருமொருதலமதன்பேர்
முதுதவமருதவனமெனமொழிவர்முளைத்தொருமருதமர்திறத்தா
லிதுவலாற்கண்டதேவியென்றொருபேரெய்தியதின்னமும்பலவால்.
29
230போற்றியநாமகாரணம்பின்னர்ப்புலப்படுமித்தலமேன்மை
யூற்றியலமைந்தசுவையுடைக்காந்தத்துருத்திரசங்கிதையுரைக்குந்
தேற்றியகானப்பேர்ப்புராணத்துஞ்செப்பியதுண்டிவையனைத்து
மாற்றியதவத்தோய்கேண்மதியுரைப்பாமற்புதம்பயப்பதென்றறிமோ.
30
231செறியொருமுகுர்த்தமெண்ணியுமிதன்மேற்சிறந்ததாயொருதலமுணரே
மறிவுருவனையதலமகத்துவத்திற்காகரமாயதுமற்று
முறிவினாற்பொருளுஞ்சேய்த்திருந்தகத்துமுன்னினுங்கொடுப்பதுகண்டாய்
குறிகெழுமனையதலத்துமான்மியமுற்கூறுதுந்தொகுத்துளங்கோடி.
31
232ஊழியுஞ்சலியாக்கயிலையங்கிரியினும்பர்தம்பிரான்றிருமுகக்கண்
வீழியங்கனிவாய்வெண்ணகையுமையாண்மென்கரங்கொடுபுதைத்ததுவும்
வாழியவனையானேவலிற்கழுவாய்வயக்கிடவுலகமுற்றுயிர்த்தாள்
பூழியர்நாட்டினருச்சுனவனத்துப்புகுந்துமாதவம்புரிந்ததுவும்.
32
233வழிகெழுசண்டன்கொடுந்தொழிற்கஞ்சிமாலயன்முதலியோர்கயிலை
யொலிகெழுகழற்காற்சிவபிரானேவவொருங்குவந்தளவிலாவளமை
பொலிகெழுமருதவனத்திடைப்புகுந்துபூரணிதன்னைக்கண்டதுவுங்
கலிகெழுசண்டாசுரனுயிரவியக்காளியைத்தோற்றுவித்ததுவும்.
33
234தேவியைமருதவனத்தமர்பெருமான்றிருக்கலியாணஞ்செய்ததுவுங்
காவியங்களத்தோனருடலைக்கொண்டுகருதுருத்திரப்பெருமானு
மோவியமனையாளுற்றமாமார்பத்தொருவனுங்கலைமகடவனும்
வாவிமூன்றாங்குத்தனித்தனியகழ்ந்துவரமலிபூசைசெய்ததுவும்.
34
235நிறைபுகழ்க்கதிருமதியுமாங்கெய்திநெடுந்தடந்தனித்தனிதொட்டுக்
குறையறப்போற்றிப்பூசைசெய்ததுவுங்கொடியவாளரக்கனோடமர்த்துச்
சிறையிலியாயசடாயுபூசித்துத்திருத்தகுமுத்தியெய்தியது
மறைவிதிப்படிகாங்கேயனோர்தீர்த்தம்வகுத்துறப்பூசித்தவாறும்.
35
236மற்றவன்பொருட்டுமருதமர்நிழல்வாழ்வள்ளல்பொன்மழைபொழிந்ததுவுங்
கொற்றவெங்சிலைமான்றனைவதைத்ததுவுங்குளிர்சிவகங்கையின்சிறப்பு
மற்றமிறலத்துப்பெருமையும்புகழ்சாலத்தலமான்மியமென்று
கற்றவர்புகழுஞ்சூதமாமுனிவன்கனிவொடுதொகுத்தினிதுரைத்தான்.
36
237மன்னியதவத்துச்சவுநகமுனிவன்மற்றதுகேட்டுளமகிழ்ந்து
மின்னியபுகழோய்தொகுத்துரைத்ததனைவிரித்துரைத்தருளியென்றிரப்பத்
துன்னியவுவப்பிற்குசூதமாமுனியுஞ்சொற்றனனதனைமாதவத்தோர்
பன்னியதமிழான்மொழிபெயர்த்தெடுத்துப்பாடுவான்றுணிந்தனனுய்ந்தேன்.
37


நைமிசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 4-க்கு, திருவிருத்தம். 237.
------------

5. திருக்கண்புதைத்தபடலம். (238 -312)

 

238வண்டுதுற்றதாமரைமலர்மிசையமர்மறையோன்
றண்டுசக்காம்வளைசிலைவாள்கொள்கைத்தலத்தோ
னண்டுவண்பதத்தோற்றமுமிறுதியுமனந்தங்
கண்டுநிற்பதுகண்ணுதல்வெள்ளியங்கயிலை.
1
239அரவுகான்றசெம்மணிபலமேற்பொதிந்தலங்கப்
பரவுமேன்மையிற்பொலிவரைபரம்பரனுதற்க
ணுரவுசால்விழிச்செந்தழற்கொழுந்தகத்தொருதான்
விரவுதன்மையைத்தெரித்ததுபோன்மெனவிளங்கும்.
2
240அகத்துவைகியசெந்தழல்புறஞ்சுலாயழற்ற
மிகத்தழங்குபாற்புணரிமேற்பொங்கினாலொக்கு
நகத்தழைந்தசெந்தளிர்ப்பொழில்சூழ்விராய்நண்ண
மகத்துவம்பொலிந்தோங்கியவன்னமால்வரையே.
3
241மருவுபாற்கடல்பொங்கிமேலெழுதரமாலு
மொருவுறாதுமீமிசைக்கிடந்துறங்குவதேய்ப்பப்
பொருவிலாதுயர்ந்தோங்கியவத்தகுபொருப்பின்
றிருவலாஞ்சிகரத்துமாலுறங்குவசெறிந்தே.
4
242அடிவறைத்தலைமடங்கறாழ்கந்தரமணையா
முடிவிலாவருவித்திரளாரமாமோலி
நெடியநாயகன்கோயிலாநிறைமதிகுடையாப்
படியிலாவரசிருக்குமத்தகுபருப்பதமே.
5
243எய்துமானிறக்கறுப்பன்றிக்கறுப்புவேறில்லை
தையன்மார்நடுத்தளர்வன்றித்தளர்வுவேறில்லை
வெய்யதங்கணனுதல்விழியன்றிவேறில்லை
யையபாதவவஞ்சமன்றில்லைமற்றாங்கே.
6
244பற்றுபேரிருண்முழுமையுமழிதரப்பருகிச்
சுற்றுமேயசெம்மணிநடுச்சுடர்ப்பெருங்கற்றை
செற்றுமால்வரைத்தோற்றமொண்செந்தழனாப்பண்
மற்றுவெண்ணிறப்புனலெழுந்தமைவதுவயக்கும்.
7
245மிக்கபேரொளியவ்வரைவீற்றிருந்தருளத்
தக்கவாதனமாகியதன்மைதேர்ந்தன்றோ
மைக்கண்மெல்லியறழுவிடக்குழைந்தமெய்வானோன்
கைக்கும்வில்லெனக்குழைந்ததோர்காமருபொருப்பு.
8
246நறியபைம்பொழிலவ்வரைத்தியானஞ்செய்நலத்தாற்
குறியமாமுனியொருகரம்மைத்தலுங்கோள்செ
னெறியபாவமாயினதெனுங்கவலைநீத்துவப்ப
வறியயாவருமழுந்தியதொருவரைபிலத்தே.
9
247இறைவன்மேனியுமேனியிற்பூதியுமேற்ற
பிறையுந்தும்பைமருக்கமுமனவும்பேணிறகு
நிறையுமேறுமால்யானையும்வெள்ளெனநிலாவி
யுறையுமவ்வரையுறுசுடர்மூழ்கலானன்றோ.
10
248அன்னமால்வரைதனைத்தொழுவலிகுறித்தன்றோ
மின்னவாவியமார்புடைவித்தகனொருகை
முன்னமோர்வரையெடுத்திடமெலியதாமுடிந்து
நன்னர்வான்குடையாயதுநானிலம்வியப்ப.
11
249அயனையோர்மலர்சுமக்குமற்றரியைநீர்சுமக்கும்
வியனிலாவுமிவ்வேதுவான்மெல்லியரவரே
பயனிலாவுமிம்மால்வரைசுமத்தலிற்பரனே
சயநிலாம்வலியோனெனிற்சாற்றுவதென்னே.
12
250வானநாடவர்சூட்டியபொன்னரிமாலைக்
கானமெங்கணுங்கிடப்பனகழித்திடவீழ்ந்து
பேனவார்திரைப்பாற்கடற்பெருக்கமேற்பிறங்கி
யானபற்பலாயிரந்துகிர்க்கொடிப்படர்வனைய.
13
251பொலங்கொள்கற்பகப்புதுமணம்போர்த்தியபுரமு
நலங்கொள்சத்தியவுலகமும்வைகுந்தநகரு
நிலங்கொளவ்வரைக்கடிமையாய்நிகழ்தலின்றோ
வலங்கொளப்பொலிதரலுடன்மாறுமாறுறினே.
14
252உலகுபற்றுயிர்சரியையாதியவொருமூன்று
மிலகுபொற்புறப்புரிதலவ்வரைகுறித்தென்னி
லலகுமுற்றுறாவத்தகுமால்வரைப்பெருமை
பலகுறித்துளத்தெண்ணினும்பாடமுற்றுவதோ.
15
253வேறு.

அன்னமால்வரைமேலாயிரங்கோடியவிரிளங்கதிரொருங்குதித்தா
லன்னமாமதில்கோபுரங்கருக்கிரகமத்தமாமண்டபம்விமான
மன்னமாநடையாராடரங்காதியாடகப்பசும்பொனான்மணியா
னன்னகாவண்ணமமைத்ததம்மனையோடங்கணரினிதமர்கோயில்.
16
254அனையவான்றளியுளாயிரங்கரமுமாயிரங்கால்களாநிறுவிப்
புனையவாங்கதிரேமேற்பரப்பாகப்பொருந்தியதென்னமண்டபமொன்
றெனையநாவலரும்புகழமுற்றாததிலங்குமம்மண்டபநாப்பண்
வினையம்வாய்ந்தவருமிற்றெனப்படாதமிளிர்மணிவேதியொன்றம்ம.
17
255அத்தகுமணிசெய்வேதிமேல்விறல்சாலாளரியாகியஞான்று
பொத்தியவகங்காரந்தவிர்த்தாண்டபுண்ணியந்தெரிந்ததுவிளைக்கும்
வித்தகமலசத்தியுந்தவிர்த்திடுவான்விழைந்தரிமுழுவதுமரியா
யுத்தமனடிகடாங்கினாலென்னவொளிர்மணிமடங்கலாதனமேல்.
18
256உருவுளொன்றாயும்விழியுளொன்றாயுமொளிவளர்தலைக்கலனாயு
மருவியவிரதக்காலுளொன்றாயும்வைகிடமாயும்வீற்றிருப்பெற்
கொரவரங்களங்கமொழியெனவிரப்பவொழித்தலுமுவந்தருடெரிப்பான்
வெருவருமதியமுடிமிசைப்பொலியும்விதமெனவெண்குடைநிழற்ற.
19
257அற்புதமுடிமேல்விரையிலாவருக்கமகற்றுபுதாம்வதிதருவான்
பொற்புறமலர்வெண்டாமரைமலர்கள்புந்தியுற்றெழுந்திருபாலும்
விற்பயின்மதிகண்டுறத்தலைகவிழ்ந்துமீளவுமெழுந்துழிதரல்போ
லெற்பொலிபசும்பொற்பூணணிமடவாரிரட்டுசாமரைதலைபனிப்ப.
20
258புலிதருசருமப்பிருதிவியரையிற்பொங்கொளியப்புவான்முடியி
னொலிதருதழல்கைநுதற்கணினடியாருறுமலக்குரோதவானுளத்தின்
மலிதருநம்போலெங்கணுங்கலந்துவயங்குவதில்லெனவுவந்து
கலிதருசிவிறிவிடுவளியெழுந்துகமழ்திருமெனிமேற்றவழ.
21
259திரிபுரமெரித்தாய்காலனைக்குமைத்தாய்சிலைமதனீறெழவிழித்தா
யரிபிறப்பைந்திற்றண்டநன்குஞற்றியதண்முதலறிகுறிபூண்டாய்
பரிகலமறையோன்றலையறுத்துவந்தாய்பற்பலதேவரென்பணிந்தா
யிரிதரவசுரரளவிலர்ச்செற்றாயென்றுவந்தியர்விறல்பாட.
22
260பலமுகமுழவமுதற்பலவியமும்படர்கணத்தவர்சிலரதிர்ப்ப
நலமலிபணிலம்வயிர்குழல்பீலிநகுதுளைக்கருவிகள்பிறவுஞ்
சிலகணமிசைப்பத்திவவியாழெடுத்துச்சிலர்நரம்புளர்ந்திசையமுத
மலகறவூற்றவரம்பையர்முதலோரபிநயத்தொடுமெதிர்நடிப்ப.
23
261சாரணரியக்கர்சித்தர்கந்தருவர்தக்ககிம்புருடர்கின்னரர்வெள்
வாரணரமரர்தயித்தியரரக்கர்மடலவிழ்கமலம்வீற்றிருக்கு
மாரணர்நறியபசுந்துழாய்ப்படலையலங்கியவிலங்கெழினிறத்து
நாரணர்பிறருந்தலைமிசைக்கரங்கணன்றெழீஇக்குவித்தனர்நெருங்க.
24
262குழிவிழிப்பிறழ்பற்குடவயிற்றிருண்மெய்க்குறுகுறுநடந்திடுகுறுத்தாட்
பழிதபுத்தியங்குபாரிடக்குழுவும்பற்பலவயிரவர்கணமுங்
கழியருட்கொடியசிறுவிதிமகத்தைக்கருக்கியவீரனுமறத்தை
யழிவறக்காக்குமையனும்பிறருமணிமையினெருங்கினர்நிற்ப.
25
263முனைவனங்குரவன்றிருமரபினுக்குமுதற்குருவாகியமுன்னோ
னனைவரும்பரமசிவனெனப்புகழ்வராரருணிரம்புறப்பெற்றோன்
றனைநிகர்கருணைநந்தியெம்பெருமான்றடங்கரச்சூரல்சற்றசைத்து
நினையவரவர்தந்தராதரந்தெரிந்துநிறுத்துபுதிருமுனருலாவ.
26
264கயமுகத்தவுணனுயிர்தபமாட்டிக்கடவுளர்பலரையும்புரந்த
வயவொருமருப்புப்புகர்முகக்கடவுள்வலப்புறத்தினிதுவீற்றிருப்ப
வியனமருலகமுழுதுமீன்றெடுத்தும்விளங்கருட்கன்னியேயாய
கயன்மருள்கருங்கட்செய்யவாய்ப்பசுந்தோட்கவுரிமற்றிடத்துவீற்றிருப்ப.
27
265ஒருவரைதாழ்த்திக்கொடுந்தொழிற்றகுவருடலெனும்பலவரையுயர்த்தி
வெருவருமொருவாரிதியறச்சுருக்கிவிளம்பியதகுவர்மெய்நெய்த்தோர்
பெருகியபலவாரிதியுறப்பெருக்கிப்பிறங்குமத்தகுவரைச்சாய்த்துப்
பொருவில்வானவரைநிமிர்த்தவேடனக்கும்புண்ணியவுமைக்குநள்ளிருப்ப.
28
266சடைமுடிநிலவுவெள்ளமுதொழக்கச்சற்பங்கள்காரமுதொழுக்க
வடையொருகரமானுடையெனப்பொலியுமரைப்புலியஞ்சியதேய்ப்ப
மிடைமிசைத்தாவவெள்ளியதரங்கம்விரிபுனல்கைத்தழலெழறேர்ந்
துடைதரும்பொருட்டுக்கிழக்கிழிதரவேரொருங்கமைதிருமுகம்பொலிய.
29
267புண்ணியநீறுநெற்றியிற்பொலியப்பொங்கிமேலெழுந்தழனோக்கந்
திண்ணியபகைதேர்ந்தடங்கியதொளிரத்திருமுகக்கண்களோரிரண்டுங்
கண்ணியகருணைமடைதிறந்தென்னக்கதிர்த்திடக்கரிசறுப்பவரே
யெண்ணியகழலிற்கழலுறத்தனிவீற்றிருந்தனனெம்மையாளுடையான்.
30
268வேறு.
காமருதிருவோலக்கங்கண்களிகொள்ளநோக்கித்
தேமருவலரின்மேலான்றிகழ்மணிமறுவினோடு
மாமருவலங்கன்மார்பன்வலனுயிர்குடித்ததோன்றல்
பாமருவியசீர்மற்றயாவரும்படிந்தாரின்பம்.
31
269அவரவர்முறைப்பாடெல்லாமஞ்செவிநிறையவேற்றுத்
துவர்படுசடிலத்தோன்றறூயநன்மொழியாற்கங்கை
யிவர்முடியசைப்பானோக்குநோக்கினாலின்பமெய்தக்
கவரருள்செய்துபோக்கிக்கவுரியோடெழுந்தானன்றே.
32
270காந்தளம்போதிற்செய்யகமலமென்மலரேய்ந்தென்ன
மாந்தளிர்மேனியம்மைவலக்கரமிடக்கைபற்றிப்
பூந்தளிரடிப்பூமாயோன்புதல்வன்வாய்வைத்துக்காப்புற்
றாய்ந்தபாதுகைமேற்சூட்டியந்நின்றுபெயர்ந்தானன்றே.
33
271மரகதச்சுடரினோடுமாணிக்கச்சுடரெழுந்து
பரவுறநடந்தாலென்னப்பயப்பயநடந்துசென்று
கரவறவெதிர்தாழ்வோர்க்குக்கண்ணருள்வழங்கிப்புக்கான்
குரவமந்தாரமாதிகுலவுபூந்தெய்வச்சோலை.
34
272புண்ணியப்பொழிலினூடுபுகுதலும்பொழில்காப்பாளர்
நண்ணியவிருப்பிற்போற்றிநயந்திருபாலுமோடித்
தண்ணியமலர்களகொய்துதருந்தொறும்வாங்கிமோந்து
துண்ணியமருங்குனாசிநுனையினுஞ்சேர்த்தாநின்றான்.
35
273அறிபொருள்செறியத்தோன்றுமான்றவர்கவிபோல்வித்துச்
செறிகனிசுமந்துநிற்குந்தாடிமச்சிறப்புநோக்காய்
குறிபருப்பொருளொன்றேய்ந்தசெய்யுளிற்குலவித்தோன்றும்
பறிகனிசுமவாநின்றுபரந்தமுந்திரிகைநோக்காய்.
36
274மிகுபொருளமையக்கற்றும்வெளிப்படைசெய்யார்போல
மிகுகனிமண்ணுட்கொண்டுவெளிசெயாப்பலவுநோக்காய்
நகுபொருள்பலவுமியாருந்தெவ்வுறநயப்பார்போல
நகுகனிபலவுமியாரந்தெவ்வவாழ்நன்மாநோக்காய்.
37
275தம்முடையாயுள்காறுநூலொன்றேசமைப்பார்போல
விம்முகாய்க்குலையொன்றம்மவெளிசெயுமரம்பைகாணா
யம்மபற்பலசெய்வாரினடர்பழக்குலைபல்கொண்டு
செம்மையுமுயர்வுவாய்ந்துதிகழ்தருதெங்குகாணாய்.
38
276சிலகவியானுஞ்செய்துசெறிதருபயன்படாரா
யலகறவுரைவிரித்துப்பயன்படுமவரையொப்பச்
சிலகனியானுமீன்றுசெறிதருபயன்படாவா
யலகறவலர்விரித்துப்பாடலமமைவநோக்காய்.
39
277ஒருகவியேதுக்கொண்டுபலவிரித்துரைப்பார்போன்றோர்
மருவடிகொண்டுபற்பல்விரிந்தமாதவியைநோக்காய்
பெருகியசெய்யுட்கோதம்பிறங்கிலக்கணமாறுற்றுக்
கருதடியொன்றேகொண்டவஞ்சியைத்தெரியக்காணாய்.
40
278ஆன்றநின்கொங்கைபோலவரும்பியக்கொங்கைமேலாற்
சான்றவொண்சுணங்குபோலத்தண்சுணங்கெழமலர்ந்தே
யேன்றநின்பதத்துமென்மையெனப்பொலிபஞ்சிகாய்த்துத்
தோன்றவிங்கமராநிற்குஞ்சொற்பொலிகோங்கம்பாராய்.
41
279ஏயுநின்மேனிவண்ணமெனப்பசுந்தளிர்களீன்ற
யாயும்வெண்ணகையின்வண்ணமாமெனவரும்புகான்று
சாயுநுண்மருங்குல்வண்ணமெனத்தளர்தொசிவதாகித்
தோயுமென்குணத்தமுல்லைக்கொடிபலதுவன்றல்காணாய்.
42
280எனப்பொழில்வளத்துட்சில்லவிமயமீன்றெடுத்தபாவை
தனக்கினிதியம்பியெங்கடம்பிரானங்கண்மேய
மனக்கினிதாயசெம்பொன்மண்டபத்தினிதுமேவி
யுனற்கருமுவப்பிற்சிங்கவொளிரணையிருந்தான்மன்னோ.
43
281அண்ணலவ்வாறுமேவமற்றவனனுஞைபெற்று
வண்ணமென்மலர்கள்கொய்வான்மலைமகளாயவன்னை
யெண்ணருமிகுளைமார்களேவலினுவந்துமேவக்
கண்ணகனாங்கோர்பாங்கர்க்கயிற்சிலம்பொலிக்கச்சென்றாள்.
44
282உந்தியின்வனப்பைவவ்வியொளித்தனவென்றுதேர்ந்து
முந்தியமௌவல்கொய்துமுளையெயிற்றழகுவவ்வி
யந்திலிங்கொளித்ததென்றுதளவரும்படங்கக்குற்றுஞ்
சந்தணிகொங்கைநங்கைவேறிடஞ்சாரச்சென்று.
45
283படர்வளியலைப்பத்தேம்பிப்பற்றுக்கோடின்றியொல்கு
மடர்பசுங்கொடிகட்கெல்லாந்தனித்தனியவிர்கொம்பூன்றித்
தொடர்புசெய்திடுமினென்றுதோழியர்சிலரையேவி
யிடர்தபுத்தெம்மையாளுமேந்திழையந்நின்றேகி.
46
284மற்றொருபாங்கரண்மிமணங்கமழ்ந்திங்குமேய
பொற்றபாடலத்தின்பூவும்புதுமதுப்பொழியுங்கோங்குஞ்
செற்றமந்தாரப்பூவுஞ்செறிதரக்கொணர்மினென்றே
யுற்றவர்சிலரைப்போக்கியந்நின்றுமுவந்துசென்று.
47
285வேறுமோரிடத்தையண்மிமென்புனலகத்துப்பூத்த
நாறுசெங்கழுநீர்நீலநக்ககோகனகமின்ன
கூறுகொண்டணைமினென்றுகூடநின்றவரையேவித்
தேறுநர்க்கருளந்தேவிதனித்தனடிருமினாளே.
48
286மதிமுடிக்கணவற்சாரும்வாஞ்சையின்வருபிராட்டி
திதியமைபாண்டிநாடுசெய்தமாதவத்தின்பேற்றால்
வதிமருதவனச்சீர்த்திவானமும்பொதிர்த்துச்செல்ல
வதிரருமகிழ்ச்சியாலேயாடலொன்றகத்துட்கொண்டு.
49
287பாதசாலங்களெல்லாம்பாதமேற்செலவொதுக்கி
யோதருங்காஞ்சியாதியுத்தராசங்கங்கொண்டு
மேதகமரங்குல்யாத்துமென்மெலநடந்துபின்போய்ப்
பூதநாயகன்முகக்கண்புதைத்தனண்மலர்க்கைகொண்டு.
50

 

288நிறைகலைமதியத்தேவேநிகழ்கதிர்த்தேவேநீவி
ரிறையவன்முகத்துக்கண்ணாயிருக்கினும்விடேம்யாமென்று
கறைமுகில்கரங்கணீட்டிக்கதுமெனமறைத்ததொக்கு
மறைபெரும்புவனமின்றாளையர்கண்புதைத்தகாட்சி.
51
289மூராரியென்றுரைக்கும்பெண்யான்முதலைநீங்குபுதனித்து
விராம்வனத்துறைவதோர்ந்தும்வெளிப்பட்டுமறைந்தும்வாட்ட
லிராவகையொழிப்பவின்றேயென்றவண்மறைத்ததொக்கும்
புராதனர்முகத்துநாட்டம்புராதனிமறைத்தகாட்சி.
52
290மறைமொழியிகந்தபாவிமகத்தவியுண்ணப்புக்கு
முறைதிறம்புற்றுமையன்முகத்துவீற்றிருந்துநாளு
மறைதரவிளங்கலொல்லாதவிரிருகதிர்காளென்று
பிறைநுதல்சினந்துபொத்தும்பெற்றியும்பொரூஉமக்காட்சி.
53
291அடியவருளத்துநீங்காவருட்பிரான்முகத்துநாட்டங்
கடியமைக்குழலிவ்வாறுகரங்களாற்புதைத்தலோடு
நெடியபல்புவனமுற்றுநிறைந்தபல்லுயிருஞ்சாம்பக்
கொடியகேவலமேயென்னக்குருட்டிருள்பரந்ததம்மா.
54
292எண்ணருநாள்கடோறுமெழுந்துதற்காயாநிற்கு
மண்ணலங்கதிர்கடம்மையடர்த்திடவலியிலாமை
யொண்ணலமின்றித்தேம்பியொடுங்கியவந்தகாரந்
தண்ணமுதனையாள்செங்கைத்தலங்களைப்புகழ்ந்ததன்றே.
55
293தெறுபகையொழிந்ததென்றுசெறிந்தெழுமிருளோடொத்துக்
கறுவுநம்பகையுந்தீர்ந்துகழிந்ததென்றுவப்புமேவி
மறுவறவிதுசெய்தாட்குமாறெவன்செய்வாமென்று
குறுநகைச்செவ்வாய்மாதைக்கூகையும்புகழ்ந்ததம்மா.
56
294செய்யதாமரைநேர்நாட்டச்செல்வனுமெண்கணானு
மையவாயிரங்கணானுமிமைப்பிலாதமர்விண்ணோரும்
வெய்யவாளவுணர்சித்தர்விஞ்சையர்முதலோர்யாரு
மொய்யவாமிருள்வீக்கத்தான்மூட்டமொத்திருந்தாரன்றே.
57
295வெருவில்பாதலத்துநாளுமேவிவாழுலகரெல்லா
மிருபுலன்கவராநிற்குமேற்றமார்நமதுகண்க
ளொருபுலன்கவருமற்றையொருபுலன்கவர்ந்ததில்லை
மருவுகாரணம்யாதோவென்றெண்ணினர்மயங்காநின்றார்.
58
296மம்மருற்றுயிர்களெல்லாமின்னணமயங்காநிற்ப
வம்மவென்செய்தாள்பேதையாயினார்போலவென்று
செம்மலெம்பெருமான்வலலேதிருவுளத்திரக்கம்பூண்டு
விம்முசெந்தழனுதற்கண்டிறந்தனன்றிமிரம்வீய.
59
297நுதல்விழிதிறத்தலோடுநோக்கியவெம்பிராட்டி
விதலையுற்றஞ்சியென்னாய்விளைந்ததென்செய்தாமென்று
முதலவனெதிரேவந்துமுன்னுறாதிழைத்தகுற்ற
மதலையாய்பொறுத்தியென்றுவணங்கினளெழுந்துநின்றாள்.
60
298திருவடிவணங்கிநின்றசேயிழையணங்கைநோக்கிப்
பொருவருங்கருணைமூர்த்திபுண்ணியப்பூங்கொம்பன்னா
யொருவருமுயிர்கண்மம்மருழந்திடநீயென்செய்தாய்
மருவுநித்தியமுன்னாயகருமங்கண்மாய்ந்தவன்றே.
61
299நீள்வரியறலைவென்றநிறைகுழற்கொம்பனாய்நம்
வாள்விழிபுதைத்துவிட்டவரையறைகணமேயேனு
மாள்செய்பல்லுயிர்க்குமூழியாயிற்றேயனையதாய
மூள்வருபாவநின்மேற்றன்றியார்முகந்துகொள்வார்.
62
300எண்ணரும்பாவமேனுமிரித்தருள்கொழிக்கவல்ல
கண்ணருநமதிலிங்கபூசனைகைக்கொண்டன்றிப்
பண்ணருங்கழுவாய்வேறுபகர்ந்திலமனையதாய
நண்ணருங்கழுவாயாற்றினாம்வந்துகலப்பேமென்றான்.
63
301என்றலும்பிரியாத்தேவிபிரிவதற்கிரங்கியேங்கி
யொன்றியபிரிவாற்றோன்றுமச்சமுமுஞற்றுபூசை
நன்றியல்சிறப்பாற்றோன்றுமன்புநன்கிருபாலீர்ப்பத்
தன்றுணைப்பெருமான்றுாளிற்றாழ்ந்தெழுந்திதனைச்சொல்வாள்.
64
302அடிகளோடடியேனாற்றுமாடலைக்கருதியன்றோ
தொடியவாங்கரத்தாற்கண்கள்புதைத்ததுசொல்லொணாத
கொடியதீவினையாய்வந்துமுடிந்ததுகூறலென்னே
கடியதாம்பிரிவையுன்னிநெஞ்சகங்கலங்காநின்றேன்.
65
303எவ்விடத்தடியேன்சென்றுபூசனையியற்றாநிற்ற
லெவ்வமுற்றொழியநீவந்தருளுநாளெந்நாளென்று
கௌவையிற்றேவிநெஞ்சங்கரைந்துவிண்ணப்பஞ்செய்யக்
கௌவையிற்கடனஞ்சுண்டோன்கனிந்திஃதருளிச்செய்வான்.
66
304மங்கைநீயஞ்சேனின்னைப்பிரிந்தியாம்வழங்கலில்லை
துங்கமார்பரதகண்டந்துற்றமர்பன்னாட்டுள்ளுஞ்
சிங்கலிறமிழ்நாடொன்றேசிறந்ததந்நாட்டினுள்ளும்
பங்கயப்பழனஞ்சூழும்பாண்டிநாடுயர்ந்ததாமால்.
67
305அத்தகுபாண்டிநாட்டுளருச்சுனவனமென்றொன்று
வித்தகமாயதானம்விருப்பமிக்குடையேமன்ன
வுத்தமதலத்திலியாமேயாதலாலுங்கணெய்திச்
சித்தம்வைத்தருச்சிப்பார்க்குவிரைந்தருள்செய்தல்கூடும்.
68
306ஆதலாங்கணெய்தியருச்சனையாற்றினொல்லைக்
காதலாலருள்வோமியாம்வந்தென்றனன்கருணைமூர்த்தி
போதெலாம்பொலியுங்கூந்தற்பொற்கொடியிருகைகூப்பி
மாதர்சாலனையதானத்தெல்லையைவகுத்தியென்றாள்.
69
307தன்னுயிர்த்தேவிவேண்டத்தம்பிரானருளிச்செய்வான்
றென்னுயிர்த்தழகுவாய்ந்ததிருப்பெருந்துறைக்குச்சற்றே
மின்னுயிர்த்தனையாய்மேற்கில்விரிபொழிற்சாலிவாடி
யென்னுயிர்த்தலத்திற்குத்தென்கீழெனவிசைக்குந்திக்கில்.
70
308மன்னியவளஞ்சால்வீரைவனத்திற்குத்தெற்குவாய்மை
மின்னியதிருவாடானைத்தலத்திற்குவடக்குமேலோர்
பன்னியவொருதேனாறும்பகர்தருவிரிசலாறுந்
துன்னியவடக்குந்தெற்குந்துன்னவுற்றுளதத்தானம்.
71
309அத்தகுபெருந்தானத்தினருச்சுனவலிருக்கநீழ
லுத்தமவிலிங்கமாகியொளிருவோம்வன்மீகத்துள்
வித்தகநீயங்கெய்திமேதகுருபூசையாற்றிற்
சத்தறிவின்பயாம்வந்தருளுதுஞ்சார்தியென்றான்.
72
310என்றருள்புரிந்துபெம்மானிரும்பொழிலிருக்கைநீத்து
மின்றிகழ்பேரத்தாணியகத்தெழுந்தருளிமேவி
யொன்றவந்திரப்போர்க்கெல்லாமருள்சுரந்துறைந்தானிப்பான்
மன்றலங்குழலாள்கூடத்தொடர்ந்தனண்மாதர்சூழ.
73
311நாயகனிருக்கைசார்ந்துநளினமென்பதத்திற்றாழ்ந்து
தூயநல்விடையும்பெற்றுத்துவன்றியகணங்கள்சூழப்
பாயதென்னாடுசெய்தபாக்கியப்பேற்றாலம்மை
யாயமென்மருதவைப்பையணைவதற்குள்ளங்கொண்டாள்.
74
312இன்னநற்காதைகேட்டுமிண்டையாதனத்தினானைப்
பன்னகப்பாயலானைப்பானுவைமற்றையோரை
யுன்னரும்பிரமமென்பாரொள்ளியவாயும்வாழ்க
நன்னர்கொணாவும்வாழ்கவென்றுமேனவிலலுற்றான்.
75


திருக்கண்புதைத்தபடலம் முற்றிற்று.
ஆக படலம் 5 -க்கு திருவிருத்தம். 312.
------------------

6. தேவிதவம்புரி படலம். (313 - 362 )

 

313பன்னியெவருந்தழுவுபாண்டிவளநாட்டு
மன்னியவருச்சுனவனம்புகுதும்வாஞ்சை
முன்னியெழவேழுலகுமுற்றுமினிதீன்ற
சுன்னிதலைமீதுகுவிகையொடுமெழுந்தாள்.
1
314வாழியறமோம்புமலைமங்கையெழலோடும்
வீழிபொருவாயெழிலனிந்திதைமுன்மேய
தோழியரெழுந்தனர்துவன்றிமகிழ்துள்ளிக்
காழ்வலியமைந்துயர்கணங்களுமெழுந்த.
2
315குடைகவரிசாமரைகொழுஞ்சிவிறிபிச்ச
மிடையொலியறோரணம்விரும்புவடவட்டந்
தடையறநெருங்கினதடாரிபணைதக்கை
யுடைகடன்முழங்குமுழவாதிகளொலித்த.
3
316சங்குவயிர்பீலியுறுதாரைகணரன்ற
நங்குதவிர்வீணையினரப்பொலியெழுந்த
மங்குதலில்கஞ்சவொலியாதிகண்மலிந்த
பொங்குமறைவாழ்த்தொலிபொலிந்துதிசைபோர்த்த.
4
317பன்னரியசெங்கதிர்பலப்பலதிரண்டா
லன்னதொருதிப்பியவிமானமெதிரண்ணப்
பொன்னகரவாணர்பொழிபூமழையின்மூழ்கித்
தன்னனையதாய்மகிழ்தலைக்கொளலிவர்ந்தாள்.
5
318ஏவறலைநிற்குமடமாதருமிவர்ந்தார்
காவலமைகூன்குறள்கனன்றுமுனெழுந்த
வோவவிலதாவிருதுமாகதருரைப்ப
நாவலர்சொறென்றிசைநடத்தினள்விமானம்.
6
319வடாதுதிசைநின்றுயர்தெனாதுதிசைவாஞ்சை
படாதமகிழ்வோடெழுபருப்பதமடந்தை
தடாதவலியோனமர்தலந்தொறுமணைந்து
விடாநசையினேத்துபுவிமானமிசையுய்ப்பாள்.
7
320காசியையடைந்துவிரிகங்கைநதிமூழ்கிப்
பூசியவிபூதியொடுபுண்டரிகன்மாயோன்
பேசியபுகழ்ப்பரமர்பெய்கழல்வணங்கி
யாசில்பலநாடுநதியாவையுமிகந்து.
8
321தண்டையெனநெல்விளைதடம்பணையுடுத்த
தொண்டைவளநாட்டுமகிழ்துன்றிடவணைந்து
கண்டைவிடையானமர்கவின்பொலிதலந்தோ
றிண்டைமலராதிகொடுபூசனையியற்றி.
9
322நாடுபலபோற்றுநடுநாட்டகநுழைந்து
காடுபடுசெஞ்சடையர்காமர்தலமெல்லா
நீடுபெருகன்புநிகழப்பெரிதுபோற்றி
யாடுமயிலன்னவியலாவயினகன்று.
10
323பொங்குபுனறங்குபொருபொன்னிவளமன்னி
யெங்குநிகழ்சோழவளநாட்டினிடையெய்தித்
தங்குபலவாகியதலந்தொறுமிறைஞ்சிக்
கொங்குமலர்தூயதுகடந்துகுறிகொள்வாள்.
11
324வெடிகெழுவராலெழுபுமேகமிசைபாயும்
படிகெழுதடங்கள்பொலிபாண்டிவளநாட்டுத்
துடிகெழுமருங்குலொருதோகையடைகுற்றாள்
வடிகெழுமலர்த்தொகுதிவானவரிறைப்ப.
12
325ஆங்குமருவந்தலமனேகமும்வணங்கிப்
பாங்குபெறுகோனுரைகுறிப்படிபடர்ந்து
தீங்குதவிரன்புநெகிழ்சிந்தையுணிரம்ப
வோங்குநலருச்சுனவனத்தினருகுற்றாள்.
13
326மதுநதியுமான்மியம்விழாவிரிசலென்னு
முதநதியுநாயகன்மொழிந்தபடிகண்டாள்
சதுமுகன்முன்னோர்தொழுதலங்களொருநான்கும்
புதுமையுறநாற்றிசைபொலிந்துறுதல்கண்டாள்.
14
327இறைவனுரைசெய்தலமிதேயெனமதித்து
நிறையொளிவிமானமிசைநின்றுடனிழிந்து
குறையறுகணங்கண்முதலோர்குழுமியேத்தப்
பொறைகெழுமடந்தைபுவிபோந்தனள்பணிந்தாள்.
15
328வேறு.
பணிந்தெழந்துபராவிக்கரங்குவித்
தணிந்தபாங்கியரியாருமணைதரத்
துணிந்தவென்றிக்கணங்களுஞ்சூழ்வரத்
தணிந்தசாகையத்தாழ்வனம்புக்கனள்.
16
329செல்லச்செல்லச்சிவானந்தமூற்றெழ
வொல்லற்காயவுரோமஞ்சிலிர்த்திட
மல்லற்றோகைமயில்பலவற்றையும்
வெல்லற்காம்பலவிம்மிதநோக்குவாள்.
17
330பகலெலாம்பன்மரத்தோடொன்றாயிருந்
திகலிலாவிரவெய்திடும்போழ்தினிற்
புகரிலாவழல்பொங்கியதொத்தொளிர்
நிகரிலாதநெடுந்தருவோர்புறம்.
18
331இளமரத்தின்கனைப்பங்கெழுந்தொறுங்
களமிலாவிளங்கன்றுகனைத்ததென்
றுளநெகிழ்ந்துகனைத்துறமேதியவ்
வளநிலம்புகுமாட்சியுமோர்புறம்.
19
332கொம்பரேறில்வெண்கோட்டுக்களிறுமா
வம்பொற்றேர்முதலாகியவற்புத
மும்பராரும்வியப்பவுண்டாக்கிடும்
வம்பறாததருவொருமாடரோ.
20
333பட்டகட்டையிற்பாதுகைசெய்ததி
லொட்டவேறினுடனும்பரார்பதிக்
கிட்டமாகவெழுந்துகொடுசெலுங்
கட்டமில்லாத்தருவொருகண்ணெலாம்.
21
334உறவிளைத்தவுடம்புடையார்களு
முறவடுப்பினுதிப்பவளாரினா
லுறவடித்துமறலியுறுநக
ருறவிடுக்குந்தருவுமொருபுறம்.
22
335அடித்துமோதியலைக்குந்தருவொரீஇத்
துடித்தயற்புறந்துன்னினச்செல்லலை
நொடித்துவல்லையுயச்செயுநோன்றருப்
பிடித்துமேவப்பிறங்குமொருபுறம்.
23
336ஆயைநீத்தவமலன்றிருவருண்
மேயையாலெத்தவம்விளைத்தாய்கொலிம்
மாயைநீத்தவடிவமுறற்கெனச்
சாயைநீத்ததருவுமொருபுறம்.
24
337எந்தநோயினிடர்ப்படுவார்களு
முந்தவந்துபரிசித்துமோப்பரே
லந்தநோய்நரையாதித்துயரொடுஞ்
சிந்தநல்குந்தருவுஞ்செறியுமால்.
25
338கவலைவெம்பசிகாற்றுஞ்செயலிலார்
திவலைபாலுணிற்றிங்களோராறள
வுவலைபோன்றவுடம்பைவருத்துமத்
தவலைநீக்குந்தருவுமொருபுறம்.
26
339அன்னபேதியகிலமவாங்கருஞ்
சொன்னபேதிசுடுவிடத்திற்கமு
தன்னபேதியூன்பேதியவைமுதற்
சொன்னபேதித்தருக்கடுவன்றுவ.
27
340போற்றுநீர்நிழல்போலப்பொலிதரு
மேற்றுவார்கொடியெந்தைகொலோவெனச்
சாற்றுமேன்மைதனைப்பிறர்காணுறத்
தோற்றுறாததருவுந்துவன்றுவ.
28
341கருநிறத்தவுங்காலையிளங்கதிர்
பொருநிறத்தவுமாகிப்பொலிதரு
திருநிறத்தவிர்சித்திரமூலங்கள்
வருநிறத்தவ்வனத்தொருபாலெலாம்.
29
342வெட்டுகின்றநலியம்விளங்கொளி
பட்டுமல்கும்பசியபொன்னாயுறு
முட்டுநீக்கமுகிழ்க்குந்தருக்களும்
பெட்டுநிற்கும்பிறங்கியோர்பாலெலாம்.
30
343வேறு.
இன்னவாயவளம்பலவெங்கணுநோக்கின
ணன்னரற்புதமற்புதமென்றுநயந்தனண்
முன்னருஞ்சிவலிங்கமுகிழ்த்தவருச்சுன
மன்னநின்றதெங்கன்றுதுருவினள்வல்லியே.
31
344அன்னமென்னடையாடுருவிச்செலுமாயிடை
யென்னரும்புகழ்கின்றவருச்சுனமென்பது
நன்னர்மேயசெழுமையிளமைநலங்கொடு
முன்னர்நின்றதுகண்டனளின்பமுகிழ்த்தெழ.
32
345வானமுட்டவெழுந்ததருக்கண்மலிந்தவிக்
கானமுட்டறுமாலயமாகக்கவின்றதா
லீனமுட்டறவெண்ணினர்க்கும்மருள்சூக்கும
மானமுட்டிலருச்சுனமென்றுவியந்தனள்.
33
346தேவியங்ஙனஞ்செப்பிவியந்ததிறத்தினா
லோவிலாதுசிறுமருதூரென்றுரைப்பராற்
காவிமேயகழிக்கடல்சூழுநிலத்தவர்
பாவியத்தருநோக்கினும்பண்ணவனாவனே.
34
347அன்னதாருவையங்கைகுவித்தடிநோக்கினாண்
முன்னமாலயன்காணரிதாயமுழுமுதன்
மன்னமேயவன்மீகமுங்கண்டுவணங்கின
ளின்னவற்புதங்கண்டறியேனெங்குமென்றனள்.
35
348செய்யதாமரைமேலுறைநான்முகச்செம்மலும்
பையராவணைமேற்றுயில்செங்கட்பகவனு
மையவின்னமுநாடருஞ்சிற்பரவற்புதன்
வெய்யவெற்கெளிதாயினனென்றுவியந்தனள்.
36
349பூசையாற்றும்விருப்பமுளத்துப்பொலிதர
மாசைநீத்தமணியிற்பொலிந்துவயங்கரு
ளீசைமேற்றிசையெய்தியோர்தீர்த்தமுண்டாக்கின
ளோசைகூர்சிவகங்கையையங்கணுறுத்தினள்.
37
350இன்னதீர்த்தப்பெயர்சிவகங்கையென்றிட்டனள்
சொன்னநூல்விதிபோற்றியத்தீர்த்தந்துளைத்தனண்
மன்னநீறுபுனைந்தொளிர்கண்மணிமாலையு
மன்னமென்னடைபூண்டலர்கொய்யவெழுந்தனள்.
38
351தோழிமாருமத்தீர்த்தந்துளைந்துவெண்ணீறணிந்
தாழிபோலுமருட்பரைபாங்கரடுத்திட
வாழிவாய்ந்தபிடகைமலர்க்கரந்தாங்கியே
யூழிநாளுமுலப்பருநந்தனத்துற்றனள்.
39
352வேறு.
நந்தியாவட்டமலரிபுன்னாகஞாழன்மந்தாரமொண்வகுளங்
கொந்தவிழ்செருந்தியசோகுகூதாளங்கொழுமலர்வழைகன்னிகாரங்
கந்தமார்கடுக்கைபாடலங்கொன்றைகருதுவெட்பாலைசெவ்வகத்தி
முந்தியவேங்கைகொக்குமந்தாரைமுகித்தபொன்னாவிரைவெட்சி.
40
353மருவுபொன்மத்தமாதளைபட்டிமராமலர்பருத்திசெவ்வரத்தம்
பொருவருகாஞ்சிகடம்பெருக்கழிஞ்சில்புரசுபன்னீர்திருவாத்தி
கருநிறச்செம்பைதுரோணம்வெள்ளிலோத்தங்கண்டங்கத்திரிவழுதுணைமா
வொருவருங்கூத்தன்குதம்பைநற்றாளியொள்ளியகுராமலர்கோட்டம்.
41
354கரைதருவில்வஞ்சதகுப்பைதிருமால்காந்திபச்சறுகொளிர்வன்னி
யுரைதருநாவல்செவ்வந்திதுளசியோங்குவெண்காக்கணம்பூளை
விரைதருபச்சைகருவிளங்காசைவிருப்புறுகாரைசெங்கீரை
வரைதருதருப்பைமருதிருவேலிமருவுநீர்முள்ளிமாதவியே.
42
355தூவிலாமிச்சவேர்வெட்டிவேரொண்சூரியகாந்திமஞ்சணாத்தி
தாவிலாநரந்தமெலுமிச்சைபாரிசாதகமுறுபுலிதொடக்கி
மேவியகிளுவைசந்தனநாணல்வெள்ளின்மாவிலிங்கநாயுருவி
பாவியவிதழொன்றுடையதாமரையெட்பசுமலர்கொட்டையங்கரந்தை.
43
356நெல்லியொண்கரந்தையிலந்தைசிந்துவாரநீர்மிட்டான்கேதகைவாகை
சொல்லியகுச்சிப்புல்கருங்காலிதோன்றிசாலிப்பயிர்தான்றி
மெல்லியகுருந்துமருமருக்கொழுந்துவெற்றிலைமல்லிகைமயிலை
நல்லியற்குளவிகுமுதமென்குவளைநளினமற்றிவைமுதற்கொய்து.
44
357சுவைபடுகனிகளுள்ளனகவர்ந்தூயநன்மருதடியடைந்து
செவையுறமுகந்துதோழியர்கொடுக்குஞ்சிவகங்கைமஞ்சனமாட்டி
நவையறவாய்ந்தபூமுதற்பலவுநன்மனுப்புகன்றுறச்சூட்டிக்
குவைபடுகனிகளூட்டிவன்மீகக்குழகனைப்பூசனைபுரிந்து.
45
358திருந்துவன்மீகந்தனக்கியல்வடகீழ்த்திசையுறுகாடுமுற்றகழ்ந்து
பொருந்துபல்கணங்களியற்றிடப்பட்டபுனிதமாம்பன்னசாலையின்க
ணருந்துதெள்ளமுதுநஞ்சமாக்கொண்டவண்ணலார்திருவுருநினைந்தே
யிருந்தனள்புவனத்துயிரெலாம்வருந்தாதீன்றுகாத்தருளுமெம்பிராட்டி.
46
359புற்றிடங்கொண்டசிவலிங்கப்பெருமான்பூசனைகாலங்கடோறும்
பற்றிடங்கொண்டவன்பொடுபுரிந்துபன்னசாலையினினிதமர்ந்து
கற்றிடங்கொண்டகருத்தினர்கருத்திற்கழலுறாக்கழலகத்திருத்தி
மற்றிடங்கொண்டவுலகமுற்றுயிர்த்தாள்வைகலுமமர்பவளானாள்.
47
360மலர்மணமெனவுமணியொளியெனவுமதுச்சுவையெனவுமுற்றுணர்ந்த
பலர்புகழ்பெருமானிடத்தகலாதபாவைமாதவம்புரிபண்பா
லலர்செறியனையவனத்தரிக்குருளையானைக்கன்றோடளவளாவு
முலர்தலிலுழுவைமுலைபொழிசுவைப்பாலுணங்குமான்கன்றினையருத்தும்.<
48
361கொடுவெயிலுடற்றநெளியராக்குருளைகுளிர்நிழல்பெறச்சிறைவிரித்துக்
கடுமுரட்கலுழன்மீமிசைப்பயிலுங்கருப்பைகளுணங்குறாவண்ணம்
படுவிடப்பாந்தள்பரூஉப்பணம்பைக்கும்பைம்புதலிடையகப்பட்ட
வடுவறுமானமானுடையுரோமம்வானரமெலவிடுவிக்கும்.
49
362பட்டபன்மரமுநனிதழைத்தரும்பிப்பண்புறக்காய்த்துறப்பழுத்த
துட்டபல்விலங்குமியங்குவார்க்கியன்றதொழிற்றலைநின்றுபகரிப்ப
கட்டமிலனையபுதுமைமுற்றளந்துகட்டுரைத்திடுநருமுளரோ
வட்டவொண்சடையாய்தெரிதியென்றுரைத்துமாதவச்சூதன்மேலுரைப்பான்.
50


தேவிதவம்புரிபடலம் முற்றிற்று.
ஆக படலம் 6-க்கு திருவிருத்தம். 362.
-------------------

7. தேவியைக்கண்ணுற்றபடலம். (363-412 )

 

363அறிதருநெறிதழுவுநராயவமரர்கண்மனநிலையழிவெய்தக்
குறிதருகொடுவினைநனியாற்றுங்கோணைவல்லவுணர்கள்களியெய்தச்
செறிதருபிறவுயிர்களும்வாடித்திசைதிசைநிலைகுலைதரமுன்னா
ளெறிதருபெருவலிமிகுசண்டனென்றொருதானவனுளனானான்.
1
364எரிவடவனல்குளிர்தருகண்ணானிகலுருமொலிநிகர்குரலுள்ளான்
வரிகழலொலிகழல்வலிமிக்கான்வடவரைகவிழ்தருதிணிதோளான்
றரியலர்பிறகிடநகைசெய்வான்சலதியினிலையெனுமுருவத்தான்
கரிபரியிரதமெய்வலிவீரர்கடல்பலவெனவளைதரவுற்றான்.
2
365பொருவலியவுணர்கள்பலர்சூழப்புகரெனுமொருகுரவனையுற்றுத்
திருகறவருள்செயுமடிகேணின்சேவடிசரணெனவடைகுற்றேன்
மருவியவொருகதியிலிநாயேன்வாழ்வகையருளிதியெனத்தாழ்ந்தான்
கருதியகுரவனுமெழுகென்றுகருணையின்முகமலர்ந்திதுசொல்வான்.
3
366வலிமிகுவானவர்நினக்கையமாற்றலராயினுமென்னாவ
ரெலிபலகூடினுமொருநாகமெறியுமுயிர்ப்பினிலறமாயும்
பொலிதருபனிவரைப்பாலண்மிப்புரிசடைக்கடவுடனடியுள்ளி
மலிதவமியற்றினவ்வருளாளன்வந்துவரம்பலநல்குவனால்.
4
367இமையவர்மாற்றலராதலினீயியற்றுதவத்தினுக்கிடையூறே
யமைதரவாற்றுவரவைக்கேதுமஞ்சலையெஞ்சலிறவமோங்க
வுமையொருபாலுடைப்பெருமான்வந்தொல்லையினருளுவனுறுசெல்வஞ்
சமைதரவோங்கிடுமின்னேநீதாழ்க்கலைநடமதியென்றனனால்.
5
368என்றருளாரியனடிபோற்றியெழுந்தனனிமவரைப்பாற்சென்றான்
பொன்றலில்மனவலியுடையோனாய்ப்பொறிவழிச்செலவுமுற்றறவோப்பி
மன்றவெழுந்தழல்சூழ்ந்தோங்கிமல்கவளர்த்ததனடுவைகிக்
கொன்றைமுடிப்பெருமான்பாதங்குறித்துணறீர்ந்தருந்தவஞ்செய்தான்.
6
369இடிபலவீழ்த்துதன்முதலாகவெண்ணரிதாமிடையூறாற்றிக்
கடிமலர்மாலிகைமுடிவானோர்கழிந்தனரொன்றுமஞ்சிலனென்றே
மடிவருமொருநிலையினனாகிவரடமோராயிரந்தவமாற்றப்
பொடியணிமேனியெம்பெருமான்முன்போந்தனனவன்புரிதவமகிழ்ந்தே.
7
370இறையவன்காட்சிதந்தனனமக்கீங்லென்றுணர்ந்தெழுந்தனனடிபணிந்தான்
முறைவலம்வந்தனன்சென்னிமிசைமுகிழ்த்தகைவிரித்திலன்முன்சென்று
மறைநவிறோத்திரம்பலசெய்துவரழ்ந்தனன்வாழ்ந்தனனென்றுரைத்தான்
கறைகெழுகண்டனண்மகிழ்ச்சியனாய்க்கருதியவரமெவனரையென்றான்.
8
371ஐயநின்னடிமலரிடத்தென்றுமளப்பருமன்பெனக்குண்டாக
வையமும்வானமும்பாதலமுமாற்றலரிரிதாத்துரந்தரசு
செய்யவெவ்வுலகினுமாணுருவஞ்சிவணினர்சிவணியவிரண்டாலு
மெய்யமராற்றுழியுடையாதவித்தகவீரமிக்குளதாக.
9
372இந்திரன்மாலயன்முதலாகயாவருமென்பணிதலைக்கொள்ள
வந்திலிவ்வரங்கொடுத்தருளென்றானண்ணலுமிளநகைமுகத்தரும்பச்
சந்தணிமுலைக்கொடியிடைமடவார்தமைப்பொருள்படுத்திலன்வானோர்செய்
சிந்தலிறவப்பயனெனமகிழ்ந்துசெப்பியயாவுந்தந்தனமென்றான்.
10
373மனநிலைபலவரமும்பெற்றேன்வாழ்ந்தனன்வாழ்ந்தனனடியேனென்
றனகன்மெல்லடிமலர்மிசைப்பணிந்தானங்கணன்மறைந்தனனவணின்று
தனதருட்குரவனதிடஞ்சார்ந்துதாழ்ந்தனன்றவம்புரிந்ததும்பெம்மான்
கனவரங்கொடுத்ததுமெடுத்தோதிக்களிப்பொடுவிடைகொடுபுறம்போந்தான்.
11
374வேறு.
வானளவோங்கியவொருபருப்பதத்தைமாகடல்வளைந்தெனவவுணர்தற்சூழக்,
கானளவோங்கியகற்பகநாட்டிற்காற்றினும்விரைதரப்புகுந்தறைகூவி,
யூனளவோங்கியபெரும்படைவானோருடன்றமராடினரொருங்குடைந்தோட,
மீனளவோங்கியபாற்கடல்கலக்கும்வெற்பெனக்கலக்கினன்விறலுடைச்சண்டன்.
12
375வஞ்சினம்பகர்ந்தனன்வச்சிரம்விதிர்த்தான்மதமலையுகைத்தனன்விழியழல்கால,
வெஞ்சினங்கொடுசமர்புரிந்தனன்மகவான்விளைசமர்க்காற்றிலனோட்டெடுத்துய்ந்தா,
னஞ்சினர்யாவருமனையபொன்னுலகையடிப்படுத்தினன்கொடிநாட்டினனினப்பா,
லெஞ்சினவுலகங்களெங்கணும்புகந்தானிருஞ்சமராடினனிகலறுத்தெழுந்தான்.
13
376மீதலத்தமரரிந்திரனயன்மாலோன்வெந்கொடுத்திரிதரத்துரந்தனன்பொருது,
பூதலத்தியங்கினனொருநொடிப்பொழுதிற்பொள்ளெனத்தாட்படுத்துறுபிலவழியே,
பாதலத்திழிந்தனனாவயிற்பொலியும்பலரையும்வாட்டினனாணைவைத்தெழுந்து.
மாதலத்துயரியபூமியின்மீட்டும்வந்தனன்பற்பலமாதரைமணந்தான்.
14
377விரைதரத்தென்றிசைமயன்சமைத்துதவும்விசயமென்றுரைசெயுநகர்குடிபுகுந்து,
புரைதரச்சிங்கவொண்மணியணையிருந்துபூங்குடைநிழற்றிடச்சாமரையிரட்டக்,
கரைசெயற்கரும்பலதேவரும்போற்றக்கண்ணில்பல்லவுணருங்களித்தனர்சூழ,
வுரைசெயற்கரும்பலபோகமுந்துய்த்தேயுவந்தரசிருந்தனனுறுவலிக்கொடியோன்.
15
378கொடியவனிங்ஙனமரசுசெய்நாளிற்குளிர்விசும்பமரர்கள்கற்பகமாலை,
முடியவனெனுமகபதிநறிதாயமுண்டகம்வீற்றிருப்பவன்றுளவணியு, 
நெடியவன்முதலியவமரர்கள்குழுமிநிலைகுலைந்தென்னினிச்செய்குதுமென்று, 
கடியவன்மனத்தவன்புரிதொழிற்கஞ்சிக்கயிலையங்கிரியினையடைந்தனர்மாதோ.
16
379வெள்ளியங்கிரிமிசையிவர்ந்தனர்நந்திவிமலனையடிதொழுதேத்தினரடிகே,
டுள்ளியகொடுந்தொழிற்பெருவலிச்சண்டாசுரன்றவம்புரிந்துபல்வரங்களும்பெற்று,
நள்ளியவெங்களைஞாட்பிடைப்பொருதுநடுநடுங்கிடத்துரந்தெவ்வகைவளனு,
மெள்ளியகுறிப்பொடுந்தெவ்வினனமர்வானிதுமுறையிடுவதற்கடைந்தனமென்றார்.
17
380என்றலுமிரங்கியநந்தியெம்பெருமானிறையவன்றிருமுனமிமையவர்பலருஞ்,
சென்றிடவிடுத்தனன்கொன்றையஞ்சடிலத்தேவெதிர்சென்றனர்தொழுதடிவிழுந்தா
, ரொன்றியகவலையங்கடற்கரைகாணாதுயங்கினமடிகளென்றுரைத்துரைத்தழுதார்,
கன்றியமத்தெமைக்காத்தல்செய்திரங்காய்களைகண்மற்றிலமுனையன்றியென்றிரந்தார்.
18
381பெருந்தவமாற்றியடுவலிச்சண்டன்பெறும்படியடிகண்முன்னருளியவரத்தாற்,
கருந்தலையவுணர்கள்பலரொடும்புகுந்துகற்பகநாடுமுற்பற்பலநாடு, 
மருந்திறல்வலியினிற்கவர்ந்தனமர்வானவனுயிர் தொலைத்தெமைப்புரத்தியின்றென்
னிலிருந்தநின்களவிடத்தினைவெளிவிடுத்தியின்றெனினுதல்விழியாவதுதிறத்தி.
19
382இசைந்தவித்திறங்களிலியாதுசெய்திடுதியியம்புகென்றடிபணிந்தனாரவரைக்கண்,
ணசைத்தவன்றிருவுளமிரங்கிமற்கருணையலர்முகத்தெழவிசைத்தருளுவனமரீர்,
பசைத்தவிர்தருதலின்மன்னுடையவுணன்பகரருந்தவம்புரிந்துறுவரங்கொளுநாள்,
வசைத்தலைவிடுமெனமகளிரைப்பொருளாமதித்திலனதுநுமக்குதவியதுணர்வீர்.
20
383வேறு.
ஆணுருவமைந்தோராலுமமைந்தனவாலுமாலு
மேணுருவனையான்றன்னைவேறலின்றிமையீர்பெண்மை
பூணுருவொன்றேயன்னாற்பொருதுயிர்சவட்டுமற்றான்
மாணுருவுமையாள்பாதம்வணங்கியீதுரையினென்றான்.
21
384என்றலுமயன்மாலாதியிமையவரெம்பிரானே
நன்றருள்செய்தாயெங்கணாயகியமர்வதெங்கே
கன்றலின்றெளியேமுய்யக்கருணைசெய்தருள்வாயென்றா
ரன்றவர்க்கியம்பியெங்கோனருள்சுரந்தருளுமன்னோ.
22
385நம்மிடையொருவினோதநயந்துகண்புகைத்தலாலே
விம்முபேரிருளின்மூழ்கிமெலிந்துயிர்கருமநீத்த
வம்மவிப்பிழைதீரும்பாக்காற்றுதிகழுவாயென்று
செம்மைசேர்புவியுண்மேவச்செலவிடுத்தனமெங்கென்னில்.
23
386நாவலந்தீவின்மேலாம்பரதகண்டத்துநாளு
மோவரும்பலதேயத்துமுத்தமமாகிவைகுந்
தாவருந்திராவிடி்சாறேயத்துத்தவத்தாரன்றி
முவரம்பாண்டிநாட்டுவிளங்குமோர்தெய்வத்தானம்.
24
387மதுநதிவடபாலோடவயங்கியவிரிசலென்னு
முதுநதிதென்பாலோடமுகிழ்த்ததோரடவியாங்கு
விதுவெனவிளங்காநிற்கும்வெள்ளியமருதொன்றுண்டா
லதுதுயரகற்றாநிற்குமடைந்துகண்டவர்க்குநாளும்.
252
388அத்தருநிழலில்யாமோரருட்குறிவடிவமாகி
நித்தலும்வசிப்போநம்மைநெடியவன்மீகமொன்று
பொத்தியாங்கிருக்குமந்தப்புண்ணியதலத்தைச்சார்ந்து
சித்திசானமக்குமேலாற்றீர்த்தமொன்றியற்றிக்கொண்டு.
26
389காலங்கடொறுந்தப்பாமேகருத்துறுபூசையாற்றி
யேலங்கொள்குழலாள்பன்னசாலைசெய்தினிதுமேவிச்
சீலங்கொணமைத்தியானஞ்செய்துவீற்றிருப்பளந்த
மூலங்கொடலத்தையுற்றுமொழிமினீதனையாட்கின்னும்.
27
390அனையமாதலத்தைநீவிர்காதலித்தடைந்தபோதே
நினைவெலாமுற்றாநிற்குநெடும்பகைக்கிறுதிகூடுந்
துனையநம்மருளும்வந்துசூழ்தருமாதலாலே
புனையவாமமரீரங்குப்போவதுகுறிமின்யாமும்.
28
391பெய்வளைக்கருளுமாறுபின்னரேவருதுமென்றா
னெய்வளைத்தொளிருமொண்கூர்நேமியோனாதிவானோர்
மைவனைத்தன்னகண்டவள்ளலார்செம்பொற்பாதங்
கைவளைத்திரைஞ்சிப்போற்றிவிடைகொண்டார்களித்துமாதோ.
29
392விடைகொடுபோந்துவானோர்வெள்ளியங்கயிலைநீங்கி
யுடைகடற்புடவியுற்றாருறுவலிச்சண்டற்கஞ்சி
யடையுருமுழுதுமாறியாற்றிடைப்பட்டகங்கைச்
சடையவன்றானமெல்லாந்தாழ்ந்துதாழ்ந்திறைஞ்சிப்போந்தார்.
30
393காழகிற்றுணியுஞ்சந்துங்கதிர்மணித்திரளுநால்வாய்
வேழமெண்மருப்பும்பொன்னுநித்திலக்குவையும்வீசி
யாழ்கடற்கிடங்குதூர்க்குமகன்புனற்பொருனைசூழ்ந்து
வாழியவளமிக்கோங்கும்வழுதிநன்னாடுபுக்கார்.
31
394சங்கினமுயிர்த்தமுத்தந்தலைத்தலைநிலவுவீசிக்
கங்குலும்பகலேயாகக்கண்டிடும்பாண்டிநாட்டி
லெங்குளதலமும்போற்றியெம்பிரானருளிச்செய்த
பொங்குமாதலமெங்குள்ளதென்றுளம்பொருந்தவாய்ந்தார்.
32
395வரைபெயர்த்தெறிந்துசெல்லுமதுநதிகண்டுகொண்டு
கரையகலந்நீருள்ளுங்களிப்பினுங்கலந்துமூழ்கி
விரைசெலற்பெருக்குவாய்ந்தவிரிசலாறதுவுங்கண்டக்
குரைபுனலகத்துமூழ்கிக்குலவுபேரின்பமுற்றார்.
33
396இருதிறநதியுங்கண்டோமிவைக்கிடையுள்ளதாய
மருமலர்வனமேயம்மான்வன்மீகத்தமராநிற்குந்
திருவமர்மருதமேவித்திகழ்வனமென்றுதேர்ந்து
பொருவிறம்முருவங்கொண்டார்பொய்யுருவகற்றிமாதோ.
34
397தேவியைக்காண்பான்சிந்தைசெய்தினிதேகுவார்முன்
மேவியவளியலைப்பவிடபங்களசையுந்தோற்றங்
காவியங்கண்ணாளென்னுளிருக்கின்றாளென்றக்கானம்
பூவியல்கரங்கணீட்டிப்புலவரையழைத்தல்போலும்.
35
398மருதமர்கானமெங்குமாமலர்பொலியுந்தோற்றங்
கருதுநந்தமைநீங்காதகடவுளர்பலரும்வந்தா
ரொருதனிமுதல்விசெய்யுமோங்கருட்குரியராவார்
பொருதடுபகையுந்தீர்வாரெனப்பொலிதோற்றம்போலும்.
36
399நால்வகைநோயுமின்றிநண்ணியதருச்சால்கானம்
பால்வகைவளங்களெல்லாங்கண்குளிர்படைப்பப்பார்த்து
மால்வகைகழிந்ததூயமனத்தினராகிப்புக்குச்
சேல்வகையுகளுந்தெய்வச்சிவகங்கைத்தீர்த்தந்தோய்ந்தார்.
37
400வெள்ளியநீறுபூசிவிரும்புகண்மணியும்பூண்டு
வள்ளியவெழுத்தைந்தெண்ணிமருதமர்தானஞ்சார்த்து
தெள்ளியவன்மீகத்திற்செறிசிவக்கொழுந்தைக்கண்டு
துள்ளியவுவகையோராய்ச்சூழ்ந்துதாழ்ந்தெழுந்தார்வானோர்.
38
401தந்தையைக்கண்டுகொண்டோந்தாயினைக்காண்போமென்று
சிந்தையுட்களிப்புமேவவடகிழக்கெல்லைசேர்ந்து
நிந்தையில்பன்னசாலைநேருறப்புகந்தாராங்கு
முந்தைமாமறையுங்காணாமுதல்வியைக்கண்டாரன்றே.
39
402காண்டலுமுவகைபொங்கக்கண்கணீரருவிபாய
நீண்டமெய்ப்புளகம்போர்ப்பநெஞ்சநெக்குருகாநிற்பத்
தாண்டவம்புரியாநிற்குந்தம்பிரானிடப்பான்மேய
மாண்டவொண்குணத்துத்தேவிமலரடிதொழுதுவீழ்ந்தார்.
40
403அடியரேமுய்ந்தேமுய்ந்தேமசுரரால்வருத்தப்பட்ட
மிடியரேமுய்ந்தேமுய்ந்தேம்வெவ்வினைத்தொடக்குண்டஞ்சுங்
கொடியரேமுய்ந்தேமுய்ந்தேங்கோலங்கண்டின்பமுற்ற
படியரேமுய்ந்தேமுய்ந்தேமெனப்பகர்ந்தாடினாரே.
41
404அரியநாயகியைக்கண்டோமம்பலத்தாடியுள்ள
மரியநாயகியைக்கண்டோம்வண்மையினமையாட்கோடற்
குரியநாயகியைக்கண்டோமுலகெலாமொருங்குபெற்ற
பெரியநாயகியைக்கண்டோமெனப்பலபேசினாரே.
42
405வழுத்துவார்பவநோய்தீர்க்கமலைவருமருந்தேவன்மை
கொழுத்தவாளவுணன்சாடக்குலைகுலைந்தடைந்தவேழைத்
தொழுத்தையேமுய்யுமாறுசுரந்தருள்செய்யிலென்று
முழத்தபேரறிவினூடுமுயக்கியதாகுமென்றார்.
43
406இவ்வண்ணமலறியோலமிடுமையவரைநோக்கி
யவ்வண்ணம்போலவெங்குமறிவுருவாகிநிற்குஞ்
செவ்வண்ணப்பெருமான்பாகந்தீர்தராச்செல்விநுங்கட்
கெவ்வண்ணமுற்றதிங்ஙனெய்தியதெற்றுக்கென்றாள்.
44
407என்றலும்பிரமனேர்சென்றிருகரங்கூப்பிச்சொல்வான்
மன்றலங்குழலாய்சண்டனென்பவன்றவத்தான்மாண்டு
மின்றயங்கிடைநல்லாரைப்பொருள்செயான்விண்ணோராதி
யொன்றமற்றியாவராலுமுடைதராவரம்பெற்றுள்ளான்.
45
408அன்னபாதகனானாடுமுதலியவனைத்துந்தோற்றுப்
பன்னகாபரணன்முன்போய்ப்பகர்ந்தனங்கயிலாயத்தின்
முன்னவனின்பான்மேவமுடுக்கினானிங்குமேவி
யுன்னதாள்போற்றப்பெற்றோமென்றுரையாடினானே.
46
409வண்ணப்பொன்மலரின்மேலான்மலர்க்கரங்குவித்துச்செய்த
விண்ணப்பமுழுதுங்கேட்டுமிகுபெருங்கருணைகூர்ந்து
தண்ணப்பண்சடைப்பிரானார்தந்திருவருளோநீவிர்
கண்ணத்துன்பகற்றுமிங்குக்கலந்ததென்றுவகைபூத்தாள்.
47
410நிறைவலியவுணன்சாடநிலைகுலைந்திங்குமேய
கறையில்வானவர்காணெஞ்சங்கவன்றிடீரஞ்சல்வேண்டா
குறைபடவனையாற்கொன்றுகுலத்தொடுநம்மைக்காப்போ
மிறையிலென்றபயமீந்தாளேழுலகீன்றசெல்வி.
48
411தேவியாதரவிற்கூறும்வார்த்தைதஞ்செவியிற்கேட்டுப்
பாவியேமுய்ந்தேம்யாதும்பயமிலையினிமேலென்று
மேவிமாமலரிற்சீர்த்தமென்பதம்பலகாற்போற்றி
வாவிசூழனையகானமருவிவீற்றிருந்தார்வானோர்.
49
412வண்மைசாறவத்துவாய்மைச்சவுநகமனிவர்வானோர்
திண்மைசாலங்குச்சென்றுதேவியைக்கண்டவாற்றா
லொண்மைசாலறிஞர்கண்டதேவியென்றுரைப்பரந்தத்
தண்மைசாலறத்தையென்றுசாற்றிமேற்சாற்றுஞ்சூதன்.
50


தேவியைக்கண்ணுற்றபடலம் முற்றிற்று.
ஆக படலம் 7-க்கு, திருவிருத்தம்- 412.
-----------------

8. சண்டாசுரன்வதைப் படலம். (413- 544 )

 

413கந்தமலரோன்முதல்வானோர்கண்டதேவியெனுந்தலத்து
நந்தமருதினடியமருநம்மானடித்தாமரைமலருஞ்
சந்தமுலைமென்கொடிமரங்குற்றலைவியடித்தாமரைமலர
முந்தவணங்கிப்பெருகன்பின்முதிர்ந்துபணிசெய்தொழுகுநாள்.
1
414மிறைசெயவுணன்கொடுங்கோன்மைவெள்ளிவரைநம்பெருமான்பால்
முறையினியம்பமருதவனமுற்றியிறைவியடிவணங்கி
யறைமினெனவுய்த்தனனிறைவியடிசார்ந்துரைப்பவஞ்சாமே
யுறைதீர்கவலையொழித்துமெனவுரைத்தாளுரைத்தமொழிப்படியே.
2
415வல்லையியற்றும்படிதுதிப்போம்வம்மினெனவானவர்யாரு
மொல்லையெழுந்துசிவகங்கையுற்றுமூழ்கிநீறணிந்து
செல்லையலைக்குமருதவனத்தேவதேவனடிபணிந்து
முல்லைமுறுவற்பெருந்தேவிமுன்வந்திறைஞ்சித்துதிக்கின்றார்.
3
416எல்லாம்வல்லசிவபெருமானெழிலார்தருநின்னொடுகலந்தே
யெல்லாவுலகும்படைத்திடுவானெல்லாவுலகும்புரந்திடுவா
யெல்லாவுலகுந்துடைத்திடுவானெல்லாவுயிர்க்குமறைப்பருள்வா
னெல்லாவுயிர்க்கும்வீடருள்வானென்றாற்பெரியநாயகிநீ.
4
417எல்லாமறையின்வடிவானாயெல்லாமறையும்வியாபித்தா
யெல்லாமறையுந்தொழப்படுவாயெல்லாமறையுமேகலையா
யெல்லாமறைக்குமுதலானாயெல்லாமறையின்முடியமர்வா
யெல்லாமறையின்முடிவுணராயென்றாற்பெரியநாயகிநீ.
5
418என்றுதுதிக்கும்வானவருக்கிரங்கியருள்கூர்ந்தருட்செல்வி
நன்றுநுமதுதுதிமகிழ்ந்தோநயந்துபெரியநாயகியென்
றின்றுநமைநீர்சொற்றமையாலென்றுநமக்கிப்பெயராக
வொன்றுநுமதுகவலையுமின்றொழிப்போமுணர்மினென்றுரைத்து.
6
419பொல்லாவவுணன்மடவாரைப்பொருளாமதித்திடாமையினா
லொல்லாவனையானவமதித்தார்தமைக்கொண்டவனையொறுத்தலே
நல்லாதரஞ்செய்திறனென்றுநன்றாராய்ந்துதன்கூற்றி
னெல்லாவுலகுநடுங்கவருவித்தாளொருபெண்ணிறைவியே.
7
420கரியகடலொன்றிரண்டுபிறைகவ்வியெழுந்ததோற்றமெனத்
தெரியவுயர்ந்தபெருவடிவஞ்சிலைக்கும்வாயில்வளையெயிறும்
பெரியவடமேருவுஞ்சமழ்க்கப்பிறங்குமுலையுமிளங்காலைக்
குரியகதிராயிரம்வளைந்தாலொக்குமரையிற்செம்பட்டும்.
8
421வாளதாதிபொலிகரமும்வடவைகால்கண்களுமண்ட
கோளமேவுநெடுமுடியுங்குறிக்குந்திசைபேர்த்திடுபுயமு
மூளவெழுந்தசினக்கனலுமுழங்குமுருமிற்பொலிகுரலுங்
காளவுருவுங்கொடுதோன்றிக்காளியெனும்பேர்தழீஇநின்றாள்.
9
422நின்றகாளியிறைவியடிநேர்சென்றிரைஞ்சிப்போற்றியெழுந்
தொன்றவுலகம்வாய்மடுக்கோவுருட்டிவரைகள்பொடிபடுக்கோ
கன்றவயன்மாலாதியரைக்கையிற்பிசைந்துபொட்டிடுகோ
துன்றவமைந்தகடல்குடிக்கோசொற்றிபுரியும்பணியென்றாள்.
10
423என்றுகுமரிகூறுதலுமிமையோர்க்கிடுக்கணனிசெய்யுங்
குன்றுநிகர்தோட்சண்டனுயிர்குடித்திநினக்குப்பணிபுரிய
வொன்றுமகளிர்பற்பலருமுகைக்கும்விறல்சாலூர்தியுநா
மின்றுபடைத்தத்தருகின்றோமென்றாணினைந்தாளப்பொழுதே.
11
424குன்றுபிளப்பவுலகநிலைகுலையமுழங்குங்குரல்யாளி
யொன்றுவெளிப்பட்டதுகடல்வந்தொருங்கசூழ்ந்தாலெனவதிர்த்துத்
துன்றவலிசாலிடகினிகள்சூழ்ந்தார்குமரியூர்தியா
யொன்றுபணிசெய்திடுவாராயுறுகமாவேமடவீரே.
12
425என்றுகருணைநோக்கருளியிகல்சால்வீரியுருவஞ்சித்
துன்றுமனத்துட்குடையாராய்த்தூரத்தகலுமாலாதிக்
கன்றுமமரர்தமைநோக்கிக்கடவுளானீரெல்லீரு
மொன்றுமடவார்வடிவமெடுத்துறுவீர்குமரியுடனென்றாள்.
13
426என்றபொழுதேயிந்திரன்மற்றிந்திராணியுருக்கொண்டான்
மன்றல்கமழுமலர்மேலான்வயங்குபிராமியாயினான்
வென்றதிகிரிப்படைமாயோன்விறல்சாலொருவைணவியானா
னொன்றமற்றைவானவருமுற்றமடவாருக்கொண்டார்.
14
427கோடிகோடிவானவர்தங்கூறென்றுரைக்குமடவாருங்
கோடிகோடிவலவைகளுங்கூடிப்போற்றவெழுந்துலகங்
கோடிகோடிமுறையுயிர்த்தாள்குளிர்தாட்கமலமிசைநறும்பூ
கோடிகோடிதூய்ப்பணிந்துகொண்டாள்விடைவெங்குரற்காளி.
15
428கண்ணார்மருதவனத்தளவுங்காலானடந்துகடந்தப்பா
னண்ணார்வெருவவருகாளிநாடுமுழுதுங்குடியேற
விண்ணார்நகரந்திருவேறவிழைபுண்ணியமுமீடேற
வெண்ணார்நிறங்கீண்டுதிரம்வாய்மடுக்கும்யாளியேறினாள்.
16
429கலிக்குந்தத்தமூர்திமிசையிவருமாறுகடைக்கணிப்ப
வொலிக்குமணிப்பூண்மடவார்கள்பலருமுள்ளமுவந்திவர்ந்தார்
சலிக்கும்புடவிவெரிநெளியத்தாங்கக்கடலுங்குமிழியெழ
வலிக்குமொருதென்றிசைநோக்கிவிடத்தாள்யாளிமாகாளி.
17
430இருகுரோசத்தளவெய்தியாளியிழிந்தங்கினிதிருந்தா
ளருகுமாதரரசாதற்கபிடேகஞ்செய்தடிபணிந்து
பெருகுகாலமெனச்சூழ்ந்துபேணிக்காவல்புரிந்திருந்தார்*
கிருகுதீரவ்விடஞ்சிவணுந்தேலிசாலமெனுந்திருப்பேர்.
18
431அன்னதேவிசாலபுரமம்மைசெம்மையபிடேக
மென்னநவிலந்திருவடைந்தவிடமாதலினந்நகருள்ளார்
பன்னவரியபெருந்திருவம்பொருந்திப்பயில்வரடைந்தோருஞ்
சொன்னமுதலாம்பலவளனுந்துலங்கப்பெறுவரெஞ்ஞான்றும்.
19
432அந்தத்தலத்தினினிதமர்ந்தவலகைக்கொடியாள்வைணவிமற்
சந்தக்குவிமென்முலைமடவார்தம்மைநோக்கியொருதூது
முந்தப்பகைவனிடத்தனுப்பிமுன்னந்தெரிந்துமற்றவன்போர்
நந்தப்பொருதலறனென்றாணன்றென்றுரைத்தாரெல்லாரும்.
20
433ஆனாலங்குப்போய்மீளுமாற்றலுடையார்யாரென்ன
மானாவியன்றகருநெடுங்கண்மடந்தைபிராமியெனப்படுவாள்
போனானன்றுபுகன்றுவருமென்றுபுகன்றாள்வயிணவிமற்
றூனால்விளங்குஞ்சூலத்தாளுள்ளதுரைத்தாய்நீயென்றாள்.
21
434என்றலோடும்பிராமியெழுந்திறைஞ்சியானேபோய்வருவ
லொன்றவிடைதந்தருளென்றாளுவப்புற்றனையாண்முகநோக்கி
மன்றவிசையநகரடைந்துவல்லவவுணன்றனைக்கண்டு
கன்றவியற்றல்கடனன்றுகடவுளாரையெனப்புகறி.
22
435ஈதுமொழியினவன்மறுப்பானென்னில்விரைந்துபடையோடு
மோதுசமருக்கெழுதியெனமொழிந்துவருதியென்றுரைத்தாள்
காதுகொடுஞ்சூற்கங்காளிகருதும்பிராமிநன்றென்று
போதுமலர்தூய்ப்பணிந்தெழுந்துபோந்தாள்விசையநகர்நோக்கி.
23
436வெளியேவழியாவிரைந்தெழுந்துசென்றுவிசையநகர்புகுந்து
களியேயடைத்தமனத்தவுணர்கைகள்கூப்பித்தொழுதெத்த
வொளியேமண்மாமண்டபத்துளோங்குமடங்கலாதனமே
லளியேயாதகுணத்தினமர்சண்டாசுரன்முன்னடுத்தனளால்.
24
437அடுத்துநிற்குமடந்தைமுகமவுணர்கோமானெதிர்நோக்கிக்
கடுத்துநமக்குநேராகக்காமர்மங்கையிவளடைதற்
கெடுத்துநிறுவுகருமம்யாதிவள்யாரின்னேயறிதுமென
மடுத்துநீயார்நின்வரவென்மடந்தாயுரைத்தியாலென்றான்.
25
438உலகுபோற்றுமருதவனத்துறையாநின்றமாதேவி
யிலகுசரணமடுத்திறைஞ்சியேத்தியிமையாரெல்லாரு
மலகுதவிர்நின்பெருங்கொடுமையறைந்துகாத்தியென்றுரைப்ப
நலகுமானைமுன்னுயிர்த்தநங்கையொருமங்கையையுயிர்த்தாள்.
26
439மேருவிடிக்கவேண்டிடினும்வீரைகுடிக்கவேண்டிடினும்
பாரும்விசும்புமேல்கீழாப்படுத்துநிறுத்தவேண்டிடினு
மாரும்வியக்கவொருநொடியிலமைப்பாள்காளியெனும்பெயராள்
சோருமமரர்தமைப்புரந்துதுட்டர்தமைமாட்டிடுந்துணிபாள்.
27
440அனையள்விடுக்கவருந்தூதியான்பிராமியெனப்பெயரே
னினையவமரர்கொடுங்கோன்மையியற்றுகுணநீத்தெஞ்ஞான்றும்
புனையவமையுஞ்செங்கோன்மைபொருத்துகுணநீபொருந்திலுனை
முனையசூலப்பெருமாட்டிமுனியாதுவக்குமுயிர்வாழ்வாய்.
28
441அன்றேலவள்கைப்படைக்குவிருந்தாதல்சரதமிதுபுகல்வா
னின்றேயினளென்றனையுணர்தியிதுநீகருத்தினுறக்கொள்ளி
னன்றேபணியவுடன்போதியன்றேலமர்க்குநண்ணுதிவன்
குன்றேபுரையுந்தோளாயென்னுரைத்திகூறுகூறென்றான்.
29
442கேளாமாற்றங்கேட்டிடலுங்கிளர்வெங்கோபந்தலைக்கொண்டு
மூளாநிற்பவிழிசிவந்துமுகரோகங்கடுடிதுடிக்க
வாளாநகைத்துக்கையெறிந்துவானமுழுதுமடிப்படுத்த
தாளாண்மையினேற்கிம்மொழியுங்கேட்டறகுமென்றிஃதுரைப்பான்.
30
443நீயோர்பேதைநின்னைவிடுத்தவளுநினக்குமூத்தாளே
பாயோரரவாக்கொண்டான்முற்பலரும்போரிற்புறங்கண்டே
னாயோர்பகையுமில்லாதேற்கடுத்தபகையுமழகிற்றே
பேயோர்கொடியாடூதுவிடுபெற்றிநினைக்குந்தொறும்வியப்பே.
31
444பேதாயிங்குநீமொழிந்தபேச்சுமுழுதும்பெரிதாய
தீதாய்முடிந்ததுனைத்தண்டஞ்செய்தல்புகழன்றிவணின்று
போதாய்விரைந்தென்றனன்கேட்டபொற்கொம்பனையாண்முறுவலித்துக்
கோதாய்விடுமேகுணமுமழிகாலங்குறுகினென்றிசைத்தாள்.
32
445என்றலோடுமோதிபிடித்திழுத்துவம்மினிவளையென
நின்றசிலரைப்பார்த்துரைக்கநெடியோனாதிவானவர்மே
லொன்றவேவாதுரைத்தமொழியுரைக்கவந்தவொருபெண்மே
லின்றவாவியேவியதென்னென்றுபிணங்கியவரகன்றார்.
33
446கண்டமாதுமுறுவலித்துக்கழியுங்காலங்குறுகிற்று
சண்டவிரைந்தாகவபூமிதன்னிலுனதுபெரம்படையோ
டண்டவடைந்திலாயெனினின்னாண்மையெவனாமென்றுரைத்துக்
கொண்டவிரைவினவணின்றுமெழுந்தாடேவிமுன்குதித்தாள்.
34
447கண்டதேவிவாழ்வானோகழிவானோசண்டாசுரனுட்
கொண்டதுணிபென்னுரையென்றாள்குணப்பிராமியடிவணங்கி
மண்டநெடும்போராற்றுதற்கேவருவான்வந்துமாய்வான்மற்
றண்டர்புரிமாதவம்பழுதாங்கொல்லோவன்னாயறியென்றாள்.
35
448சான்றதேவியொருதேவிசாலபுரத்திவ்வாறிருந்தா
ளான்றவிசையநகர்மேவுமவுணர்கோமானுளங்கறுத்துத்
தோன்றவமைச்சர்படைத்தலைவர்முதலோரிங்குத்துன்னகவென்
றேன்றதூதுவிடவவருமிறுத்தார்பணியென்னெனவினவி.
36
449வந்தார்முகத்தைவாளவுணர்கோமானோக்கிமறமுடையீர்
சந்தார்முலையோர்மாகாளிசாற்றிவிடுத்ததுணர்ந்தீரே
முந்தாரவத்திற்படைகளொடுமுழங்கிஞாட்பிற்கெழுகவென
வந்தார்புனையுமவரிசைந்தாரமைச்சர்பல்லோருளுங்கனகன்.
37
450தொழுதுநவில்வான்பெருமான்பாற்றோலாவரநீகொண்டநாள்
பழுதுபடுமேந்திழையாரென்றெண்ணிப்பொருளாப்பற்றிலா
யெழுதுபுகழாயதனாலேயெண்ணிப்போருக்கெழுகென்றா
னுழுதுவரிவண்டுழக்குதாருரவோன்சினங்கொண்டீதுரைப்பான்.
38
451அந்தநாளிற்பொருளாகமதித்தேனல்லேனதுமறப்புற்
றிந்தநாளிற்பொருளாகமதித்துளேன்கொலென்னுரைத்தாய்
முந்தவமருக்கஞ்சினாயென்றுமொழிந்தவவன்கருத்தை
யுந்தவுணராதிகந்துரைத்தான்மூர்க்கர்க்குணர்த்துவாருளரோ.
39
452அன்னபொழுதின்மகதியாழ்முனிவன்விரைவினாங்கடுத்து
மன்னநினக்கேயாக்கமுளவாகவென்றுவாய்மொழிந்து
பொன்னங்கடுக்கைமுடிக்கணிந்தபுத்தேணினக்குக்கொடுத்தவரந்
தன்னமுணராதொருமடந்தைசமருக்கெழுந்தாள்படையோடும்.
40
453படையுமிடையுஞ்சிறுமருங்குற்பாவைமாரையென்றக்கா
லடையும்விறன்மற்றவட்காமேயண்ணால்பெண்ணென்றிகழாமே
யுடையுங்கடனேர்படையினொடுமுருத்துச்சென்றுபோர்புரிதி
மிடையும்வாகைநின்னதேயென்றான்கேட்டவெங்கொடியோன்.
41
454குய்யம்வைத்துமுனியுரைத்தகூற்றைக்கூற்றென்றெண்ணானா
யையநன்குமதித்துரைத்தாயறிஞர்சூடாமணிநீயே
வெய்யபெரும்போராற்றிடினும்வெற்றிகொள்வேனொருகணத்தென்
செய்யவல்லாளொருபேதையென்றுநகைத்துச்செப்பினான்.
42
455வல்லையதுசெய்யென்றுமுனிவரனுண்மகிழ்ந்துவிடைகொண்டான்
மல்லைவிழைக்குந்திணிதோளான்வயவரானார்தமைநோக்கி
யொல்லைநமதுபெரும்படையோடொருங்குசென்றுகாளியம
ரைல்லையடைமின்யாமும்விரைந்தெய்துவாமென்றார்த்தெழுந்தான்.
43
456இறைவனுரைத்தமொழிப்படியேயெழுகபடையென்றுறவியவ
ரறையுமுரசமெருக்குதலுமாங்காங்குள்ளமதகளிறு
நிறையுங்கலினவாம்பரியுநெருங்குகொடிஞ்சிப்பொற்றேரும்
பிறையுஞ்சமழ்க்குமெயிற்றவுணர்குழுவுமெழுந்தபெருங்கடல்போல்.
44
457எட்டிமுகிலைத்துதிக்கைவளைத்திறுகப்பிழிந்துநீர்குடிப்ப
கிட்டிமருப்பாற்றிசையானைகீளப்பொதிர்ப்பமால்வரையை
முட்டியருகுசாய்த்திடுவமுருகுவிரிகற்பகக்குளகு
கட்டியெனக்கொள்வனவலகங்கலங்கவெழுந்தமால்யானை.
45
458பற்றார்முடிமேற்குரமழுந்தப்பதிப்பவுததியோரேழும்
பொற்றார்புலம்பத்தாவுவபல்புவனமுழுதுமுழிதருவ
சுற்றார்தரவல்லிடிமாரிசொரியுமேனுந்துளக்கறுவ
கற்றாராலுமதித்துரையாக்கடுப்பிற்படர்வவாம்பரியே.
46
459முடியால்விசும்பைப்பொதிர்த்திடுவமுழக்கான்முகிலையடக்கிடுவ
வடியானிலனைப்பிளந்திடுவவச்சால்வரையைப்பொடித்திடுவ
கடியாலினனைமழுக்கிடுவகடுப்பாற்காற்றைத்துடைத்திடுவ
கொடியால்வெளியைமறைத்திடுவகூடாரஞ்சுங்கூவிரமே.
47
460இடியுங்கனலுங்கொடுவிடமுமேகவுருக்கொண்டனநீரார்
படியும்விசும்புநிலைகுலையப்பரவையேழுங்குடித்தெழுவார்
கடியுஞ்சினக்கூற்றெதிர்ந்தாலுங்கலங்காரருளற்றுழிதருவார்
மிடியுந்துயருமுலகுறுத்தும்வெய்யோர்வெய்யவாள்வீரர்.
48
461தானக்களிறுசுறவாகத்தாவும்புரவிதிரையாக
மானக்கொடிஞ்சிப்பொலந்திண்டேர்வயங்குஞ்சிதைப்பாரதியாக
வானத்தவர்தம்பகைவீரர்வருமீனெறியுமவராக
வீனக்கொடியோன்பெரும்படைதானெழுந்துகடலிற்படர்ந்ததே.
49
462இன்னவாறுபடையேகவெழுந்தசண்டாசுரன்புனலுண்
முன்னமூழ்கியுண்டுடுத்துமுடிகுண்டலமாதிகளணிந்து
பன்னவரியபடைக்கலங்கள்பலவுமாராய்ந்தனனெடுத்தப்
பொன்னங்கொடிஞ்சிநெடுந்திண்டேரிவர்ந்தான்சங்கம்புயன்முழங்க.
50
463ஆர்த்தமுரசுமுழவுபணையார்த்தபணிலம்வயிர்பீலி
யார்த்தவயவரணிந்தகழலார்த்தவிறற்றோள்புடைக்குமொலி
யார்த்தவளைந்தவெஞ்சிலைநாணார்த்தபுழைக்கைமால்யானை
யார்த்தகடுப்பின்வாம்புரவியார்த்தபலவுமடங்காதே.
51
464கண்டான்வீணைத்திருமுனிவன்கடிதுபடர்ந்துகாளிமுனந்
தொண்டானிறைஞ்சியெழுந்துவலிதோலாத்திறல்சால்வீரரொடு
மண்டாகின்றபடைநெருங்கவந்தான்வானோர்புலஞ்சாய்த்த
சண்டாசரனீபோர்க்கெழுதிதாழாயெனக்கூறினன்போனான்.
52
465வேறு.
முனிவரனுரைத்தவார்த்தைகேட்டுவந்துமுகிழ்நகையரும்பினளிருந்தா
ணனிவளமடியார்பெறவருள்பெரியநாயகியுயிர்த்தமாகாளி
வனிதையர்பலருமொய்யெனவெழுந்துவட்டுடையரையுறப்புனைந்து
கனியிருட்கூந்தனாண்கொடுவரிந்துகச்சிறுக்கினர்முலைமறைய.
53
466பரிசையும்வாளும்பற்றினர்சில்லோர்பகழிசால்கூடுவெந்நசைத்து
வரிசிலைகுழையவாங்கினர்சில்லோர்வடித்தவேலேந்தினர்சில்லோ
ரெரிகிளர்ந்தனையபரசுவெஞ்சூலமிருகையுந்தரித்தனர்சில்லோர்
விரிசுடர்க்குலிசமேந்தினர்சில்லோர்விறற்கதைசமந்தனர்சில்லோர்.
54
467இன்னராய்மகளிர்யாவருங்குழுமியெரிகிளர்ந்தெனச்சினமூண்டு
நன்னராதரத்தினிறைவிபொற்றிருத்தாணயந்தனர்தாழ்ந்துதாழ்ந்தெழுந்து
முன்னராடமர்க்குவிடைகொடுத்தருடிமுதல்வியென்றிரத்தலுமனையாள்
சொன்னவாறடைந்தாடுகசமர்யாமுந்தொடர்ந்தடைகுதுமெனவிடுத்தாள்.
55
468கரியிவர்ந்தாருமரியிவர்ந்தாருங்காய்கடுந்தழலுமிழ்செங்க
ணரியிவர்ந்தாருமறுகிவர்ந்தாருமலைதொழிற்பேயிவர்ந்தாரும்
விரிசிறைபறவைமிருகமற்றுள்ளவிழைந்திவர்ந்தாருமாயெவரும்
பரிகரியிரதந்துவன்றியவவுணர்படைக்கடல்கலந்தனரார்த்தே.
56
469பரந்துவந்தடுத்தபாவையராயபகைப்பெருங்கடலினைக்குய்யஞ்
சுரந்துகொண்டிருக்குமன்னுடையவுணர்சுடர்விழிநெருப்பெழநோக்கி
நிரந்தரம்பந்துங்கழங்குமம்மனையுநிகழ்தரக்கோடலையொழித்தே
யரந்தடிபடைகளேந்திவந்தடுத்தீரரிவைமீரெனநகைத்தமர்த்தார்.
57
470ஒருகடலொடுமற்றொருகடல்கலந்தாலொப்பெனவிருதிறத்தாரும்
வெருவறக்கலந்தார்வெஞ்சிலைவளைப்பார்விறல்கெழுநாணொலியெறிவார்
பொருதிறற்பகழிபற்பலதொடுப்பார்போகயர்வரைபொடிபடக்கும்
பெருவிறற்றண்டஞ்சுழற்றினரடிப்பார்பிறங்குசக்கரந்திரித்தெறிவார்.
58
471மகபடாமிழந்துங்கிம்புரிவயங்குமுதுபெருங்கோடுகனிழந்து
மகனிலந்துழாவும்புழைக்கரமிழந்துமடர்நிரியாணமற்றிழந்தும்
புகர்முகமிழந்தும்போகுவாலிழந்தும்புகல்கறைக்காத்திரமிழந்தும்
தகவமருயிரேயிழந்துமிவ்வாறுசலித்தனகலித்தமாலியானை.
59
472கடுநடையிழந்துங்கடுநடையொருநாற்கால்களுமிழந்துநாற்காலோ
டடுதிறல்படுபாய்த்திழந்துமப்பாய்த்தொடமைவலிமார்பகமிழந்து
மிடுகிலம்மார்போடெறுழ்வெரிநிழந்துமிசைத்தவவ்வெரிநொடுமணிகள்
படபெருங்கலனையிழந்துமிவ்வாறுபட்டனபட்டவாம்புரவி.
60
473கொடிபலமுறிந்துங்கொடிஞ்சிகளழிந்துங்குடங்குடைமதலியவிழந்தும்
வடிமணிசிதர்ந்துங்கிடுகள்முறிந்தும்வயங்கியதட்டுகளுடைந்தும்
படிகிழித்தியங்குகால்பலகழன்றும்பரியநீளச்சுகடெறித்துங்
கடியவிர்செம்பொணாதனம்விரிந்துங்கழிந்தனகலந்ததேரெல்லாம்.
61
474தாளொடுகழலுந்தலையொடுமுடியுந்தயங்கியபூணொடுமார்பும்
வாளொடுகரமுமிறுகுறச்செறிந்தவட்டுடையொடுமிடையிடையுந்
தோளொடுதொடையும்விழியொடுகனலுந்தும்பைமாலிகையொடுபோருங்
கோளொடுகுரலுங்குலைந்தனர்வீழ்ந்தார்கொடியபோரேற்றவல்லவுணர்.
62
475வேறு.
புரந்துளைத்தனதுளைத்தனபொம்மல்வெம்முலையைக்
கரந்துளைத்தனதுளைத்தனவட்டுடைக்கலானை
யுரந்துளைத்தனதுளைத்தனவொண்டொடிப்புயத்தைச்
சிரந்துளைத்தனமகளிர்கட்டெவ்வர்வில்விடுகோல்.
63
476முறிந்தவாளிகள்முறிந்தனகேடகம்வடிவான்
முறிந்தவங்குசமுறிந்தனபிண்டிபாலங்கண்
முறிந்ததோமரமுறிந்தனமுழுக்கதைஞாங்கர்
முறிந்தவெஞ்சிலையிருதிறத்தவர்க்குமொய்போரில்.
64
477மலையுருண்டனவெனத்தலையுருண்டனவையக்
கலையுடைந்தனவெனக்கமழரக்குநீரெழுந்த
நிலைகுலைந்தனநிகழறக்கடையெலாமென்னத்
தலையவிந்தனசாடியவவுணர்தந்தானை.
65
478எங்கணுங்குடரெங்கணுங்குருதியெங்கணுமென்
பெங்கணுங்கொழுவெங்கணுநாடியெங்கணுந்தோ
லெங்கணுந்தடியெங்கணுமிருளெங்கணுங்கை
யெங்கணுஞ்சிரமெங்கணுமழன்களாயிறைந்த.
66
479ஆடுகின்றனகுறைத்தலைப்பிணங்களோடலகை
யோடுகின்றனவுற்றநெய்த்தோரொடுமுயிர்கண்
மூடுகின்றனதசைகுடர்வழும்பொடுமூளை
வீடுகின்றனகொண்டமானத்தொடுவீரம்.
67
480இன்னவாறிருபடையினும்பெருஞ்சிதைவெய்த
முன்னமேயமர்புரிந்திலமெனச்சினமூண்டு
சொன்னதானவர்தொழுமிறைமகன்றொகுவானோர்
வென்னவாவதிவீரனென்பவன்விரைந்தெழுந்தான்.
68
481வாங்கினான்கொடுமரத்தினைமால்வரைகுலையத்
தாங்கினானெறிந்தார்த்தனன்சரம்பலதொடுத்தா
னேங்கினாரரமாதர்கள்பலருமெய்த்திருதோள்
வீங்கிநேரெழுந்தார்தார்த்தனள்விறலயிராணி.
69
482இருவர்வார்சிலையுமிழ்தருசிலீமுகமெழுந்து
மருவுவார்கடல்குடிப்பனவரைபொடிபடுப்ப
வொருவுறாதுவிண்பொதிர்ப்பனவுருவுவவையம்
வெருவினார்பலவுலகரும்விளைந்ததுபெரும்போர்.
70
483கொடியதானவனாயிரங்கொடுங்கணைகோத்து
நெடியசீரயிராணிமேல்விடுத்தனனிகழும்
படியபல்கணையவையெலாம்பாய்தலற்றொல்லை
யொடியவேவினளத்தொகைப்பகழிமற்றொருத்தி.
71
484தருநறுந்தொடைமிலைச்சியதையலாயிரங்கோ
லொருவன்மேற்றொடுத்தேகினளவுணனுட்சினந்து
வெருவிலாயிரங்கோறொடுத்தவையெலாம்வீழ்த்தான்
பருவமங்கையேவினளொருபிறைமுகப்பகழி.
72
485ஆலமேயெனவதுசினந்தடுத்தலுமடுதீக்
கோலமேயெனவவனொருபிறைமுகங்கொடுங்கோன்
ஞாலமேவிசும்பேயிவைநடுங்கிடவுய்த்தான்
சாலமேயெனக்கலாய்த்துமாய்ந்தனதளர்ந்திரண்டும்.
73
486தீயன்வச்சிரமெடுத்தயிராணிமேற்செலுத்தப்
பாயவச்சிரமேவினாளுடல்விழிப்பாவை
யாயமற்றிருபடைகளுநெடும்பொழுதமர்த்துச்
சாயவெய்த்தனவிட்டவர்கைத்தலஞ்சார்ந்த.
74
487கடியவாயிரம்பகழியோராயிரங்கண்ணி
நெடியயானைமேற்செலுத்தினானெடியவாளவுண
னொடியமற்றவையாயிரங்கடுங்கணையுகைத்துக்
கொடியன்றேரினையாயிரஞ்சரங்களாற்குலைத்தாள்.
75
488வேறுதேரிவர்ந்தாயிரங்கடுங்கணைவிடுத்துத்
தாறுபாய்களிநான்மருப்பியானையைச்சாய்த்திட்
டூறுசோரிமிக்கொழுகிடவானநாடுடையா
ளேறுகோமலர்மேனியைத்துளைத்தனனிளைத்தாள்.
76
489இளைத்ததோர்ந்தனனகையெறிந்தார்த்தனனிருங்கை
வளைத்தவெஞ்சிலையொடுங்கணைமழையொடுமுழிதந்
துளைத்தவான்மடமாதர்களொருங்குவீழ்ந்தவிய
முளைத்ததீயனான்சிறிதுதன்மொய்ம்புகாட்டினனால்.
77
490ஈதுநோக்கியவயிணவிகலுழன்மேலிவர்ந்தாள்
சாதுநோக்கியமகளிரைத்தளரற்கவென்றாள்
போதுநோக்கியகைத்தலங்கார்முகம்பொறுத்துத்
தீதுநோக்கியசிலீமுகம்பற்பலசெறித்தாள்.
78
491தலையிழந்தனர்சிலர்நறுந்தாரணிதடந்தோண்
மலையிழந்தனர்சிலர்பெருவாரிநின்றன்ன
நிலையிழந்தனர்சிலர்நிலைகுலைதரநிகழ்த்துங்
கொலையிழந்தனர்சிலர்துழாய்வயிணவிகோலால்.
79
492ஓடினார்சிலரொளிந்துகொண்டுய்வதற்குறுதே
நாடினார்சிலரொளிந்துமென்னென்றுளநைந்து
வீடினார்சிலர்தலையறுபடவிசையொடுநின்
றாடினார்சிலரவுணருளவனதுகண்டான்.
80
493கண்டவெய்யவன்கடுங்கனலினுமிகக்கனன்று
தண்டமொன்றெடுத்தெற்றினன்வயிணவிதலைமே
லண்டம்விண்டதென்றஞ்சினவதுபொறுத்தனையாள்
கொண்டதண்டவன்றலைப்புடைத்தனள்புவிகுலுங்க.
81
494தலைபிளந்ததுதானவன்வெஞ்சினந்தலைக்கொண்
டுலைவில்வெஞ்சிலைவாங்கியோராயிரமயுத
மிலைமுகக்கணைதொடுத்தனனார்த்தனனெல்லாங்
கொலைபடப்புயம்பாய்ந்ததுவயிணவிகொதித்தாள்.
82
495ஓங்குதேவியார்திருவடியுளங்கொளீஇயொளிகள்
வீங்குசக்கரமெடுத்தனள்பூசித்துவிடத்தா
ளாங்குவெஞ்சுடரெனப்படர்ந்தவன்றலையறுத்துப்
பாங்குவந்ததுபனிமலர்பொழிந்ததுபடர்வான்.
83
496இறைவன்மைந்தனாருயிர்துறந்தமையுளத்தெண்ணிக்
குறைவில்வெம்படைத்தலைமையோன்வலிகெழுகோரன்
பிறையெயிற்றுவன்றானவர்குழாத்தொடும்பெயர்ந்து
கறைபடக்கதழ்ந்துழக்கினன்கன்னியர்குழாத்தை.
84
497ஆயகாலையின்மூர்ச்சைதீர்ந்தெழுந்தயிராணி
தீயனோடமரேற்றனடிசாதிசைதிரிந்தார்
பாயவேதிகள்பற்பலவிடுத்தனர்பதைத்துக்
காயமேகினர்மண்ணிடைக்குதித்தனர்கனன்று.
85
498இனையவெஞ்சமராடுழிவச்சிரமெடுத்துப்
புனையவல்லவிந்திராணியப்பதகன்மேற்போக்க
முனையவப்படையவன்விடுபடையெலாமுருக்கித்
துனையவேகிமற்றவன்றலைதுணித்துமீண்டன்றே.
86
499கோரன்மாய்தலுங்கனகனென்றுரைபெயர்கொண்ட
வீரன்வந்தமராடலும்பிராமியுள்வெகுண்டு
சேரவெம்படைபலவிடுத்தமர்த்தவன்சென்னி
பாரவன்கதைமோதலுந்தலைவிண்டுபட்டான்.
87
500மற்றுமுள்ளபல்வீரருமந்திரத்தவரு
முற்றுவெஞ்சமராடினரச்சமிக்குறுத்தார்
பற்றுவெஞ்சினந்தலைக்கொடுவலவைகள்பல்லோர்
சுற்றுநின்றுபல்படைவிடுத்திடவுயிர்தொலைந்தார்.
88
501யானையெண்ணிலமுயல்களாலிறுப்புண்டதென்னச்
சேனைவீரருமந்திரத்தலைவருஞ்சேயும்
வானையார்மடமாதறாற்றொலைந்தனர்மாற்றா
ரூனையார்படையாயென்றுதூதர்சென்றுரைத்தார்.
89
502உரைத்தவார்த்தைதன்செவிபுகவுள்ளமிக்குழைந்து
குரைத்தபூணதிவீரனுமாண்டனன்கொல்லோ
வரைத்தசாந்தணிமுலையினாரமரழகென்று
விரைத்ததார்ப்புயச்சண்டன்வெங்கனலெனவெகுண்டான்.
90
503கடவுதேரெனப்பாகனுக்குரைத்திடக்காற்றை
நடவுமாறெனநடத்தினனுலகெலாநடுங்கத்
தடவுவார்முலைமடவரலியர்குழாஞ்சார்ந்தான்
புடவியேத்தும்யாழ்முனிவரன்காளிமுன்போந்தான்.
91
504பொருவிலாவலிச்சண்டனம்படையினுட்புகுந்தான்
வெருவிலாவிறல்யாளியைநடத்தெனவிளம்ப
மருவிலாபநம்படைக்கின்றுவந்ததென்றெண்ணி
யொருவிலாவடற்காளிநக்கிவர்ந்தனளூர்தி
92
505வலவைமார்பலர்தாங்கியபடையொடும்வளையக்
குலவைவாயினைநடத்திவெஞ்சண்டன்முன்குறுகக்
கலவையார்முலைக்கன்னியைக்கண்களாற்கண்டா
னுலவையோடுறுவிடமெனத்தேரொடுமுற்றோன்.
93
506கண்டகாலையில்வெஞ்சினங்கொழுந்தெழக்கனலா
வண்டம்வாய்திறந்தெனப்புலைவாய்திறந்தறைவான்
கொண்டசிற்சிலவிரும்பிற்குங்குரூஉச்சுடர்மதியத்
துண்டநேர்சிலபல்லிற்குந்துளங்குவேனல்லேன்.
94
507காகமேறிடப்பனம்பழம்வீழ்ந்திடுங்கதைநே
ராகவாயுடீர்ந்தவர்சிலரமர்த்துநின்னணியா
மேகவார்குழலார்விடபடைகளால்வீந்தா
ரேகவீரன்யானவர்களோடெண்ணலையென்றான்.
95
508அன்னவாய்மொழிகேட்டலுமவிதருதீப
மென்னவேதலையெடுப்பினோடுரைத்தனையெல்லாம்
பின்னரோரலாங்கூற்றுவன்பிடர்பிடித்திருந்தா
னென்னவோதினாளுலகெலாமுய்விக்குமிறைவி.
96
509வீரிவாய்மொழிகேட்டலும்வெகுண்டுவெங்கொடியோன்
மூரிவெஞ்சிலைவாங்கினன்முழங்கினாணெறிந்தான்
வாரிசூழ்புவிவிண்டதுவானகநடுங்கிற்
றோரியார்த்திடுகளத்திலுற்றவரெலாமுலைந்தார்.
97
510கண்டதேவியுங்கைச்சிலைவளைத்தநாணெறிந்தா
ளண்டம்விண்டனவரையெலாம்பொடிந்தனவாழி
யுண்டமேகங்களஞ்சிமிக்குதிர்த்தனவுருமு
விண்டபல்வகைப்புவனமும்விளம்புவதென்னோ.
98
511ஒன்றுபத்துநூறாயிரமயுதமோரிலக்கந்
துன்றுவாளிகளொரோவொருதொடையுறத்தொடுத்துக்
கன்றுமாதரைக்கலக்கினன்கலங்கினரழுதார்
வென்றுமேம்படுவாள்வலிவிறலுடைச்சண்டன்.
99
512அஞ்சுமாதரையஞ்சலீரெனக்கரமமைத்து
நஞ்சுநேர்கணைதைத்தலினாகியநலிவுந்
துஞ்சுமாகடைக்கணித்தனடொடிக்கையார்பலரும்
பஞ்சுவாய்நுதித்துனைவடுக்களுமறப்பட்டார்.
100

 

513தனையவாவியயாவருமூறின்றித்தழையப்
புனையவாம்விறற்செல்விகண்டகமகிழ்பூத்துத்
துனையமாற்றலன்பெரும்படையனைத்தையுந்துகள்செய்
தினையவாக்குவன்சண்டனையென்றுகோலெடுத்தாள்.
101
514கரிகண்மேற்பதினாயிரங்கால்விசைத்தெழுவாம்
பரிகண்மேற்பதினாயிரம்படருருள்பூண்ட
கிரிகண்மேற்பதினாயிரங்கேழ்கிளர்கழற்கா
லரிகண்மேற்பதினாயிரமழற்கணைதொடுத்தாள்.
102
515மண்ணெலாங்கணைவாரியெலாங்கருணைவயங்கு
விண்ணெலாங்கணைதிசையெலாங்மேருக்
கண்ணெலாங்கணைவேறுளவரையெலாங்கணைமற்
றெண்ணெலாங்கணையாயினவெனப்பலவிடுத்தாள்.
103
516அரவணிந்தவன்கட்டழலெனச்சிலவடுக்கும்
பரவுமற்றவனகைத்தழலெனச்சிலபாயுங்
கரவிலன்னவன்கைத்தழலெனச்சிலகடுகு
முரவுசால்விறற்காளிவெஞ்சிலையுமிழ்வாளி.
104
517அழிந்தவாரணமழிந்தனவாம்பரியச்சிற்
றழிந்தகூவிரமழிந்தனவவுணர்தங்குழுக்க
ளழிந்தவேதிகளழிந்தனவூர்திகளனைத்து
மழிந்தவானவர்கட்டமொட்டறக்கடையனைத்தும்.
105
518வரையெலாம்பிணமண்டியமலர்செறிகானத்
தரையெலாம்பிணந்தாமரையோடைகால்பொய்கை
நிரையெலாம்பிணநெடுங்கழிநெய்தல்வீநாறுந்
திரையெலாம்பிணமாக்கினகாளிவில்செலுத்தே.
106
519மருவரக்குநீர்ப்பெருக்கின்மேற்கேடகமறித்து
வெருவில்பேய்க்கணங்கிடத்திமேலிவர்ந்தங்குமிதக்கும்
பொருவிலாக்கழக்கடைகொடுபோகுமாறுந்துந்
திருவமல்கியபாரிடமெங்கணுஞ்செறிந்தே.
107
520பட்டுவீழ்ந்தமால்கரிச்செவிப்பரிகலந்திருத்திக்
கிட்டுபேய்ப்பிணாமூளைவெண்சோறுமேற்கிளர
விட்டுமென்றசைக்கறிபலபடைத்திழுதிரத்தம்
விட்டுநன்குபசரிப்பனவாண்மயன்மிசைய.
108
521திருந்துவன்றடிகொழுவழும்பீருள்வான்செந்நீர்
விருந்துபற்பலகிளையொடும்விரும்பிமிக்குண்டு
பருந்துங்காகமுமெருவையுமேலெழீஇப்பந்தர்
பொருந்துநீர்மையிற்பறப்பனபோர்க்களமுழுதும்.
109
522தேருமற்றனபெருமதமழைபொழிசெங்கட்
காருமற்றனகடும்பரியற்றனவயவர்
போருமற்றனதனித்தனியுரைப்பதென்பொருன
ராருமற்றனரொருவனாய்நின்றனனவுணன்.
110
523துன்றுவெம்படைதொலைந்ததுந்தேவர்தந்தொகுதி
வென்றுமேம்படுவீரர்களொழிந்ததும்விறல்மிக்
கொன்றுவீரிதன்படையொடுபொலிவதுமுணர்ந்து
நன்றுநன்றுநஞ்சேவகத்திறனெனநகைத்தான்.
111
524ஆயிரங்கணானுலகுகூட்டுண்டவனழன்றோ
ராயிரங்கணையம்மைமேற்றொடுத்துவிட்டார்த்தா
னாயிரங்கணையாயிரங்கணைகளாலறுத்தோ
ராயிரங்கணையவுணன்மேற்செலுத்தினளம்மை.
112
525அனையவாளியோராயிரம்வாளியாலறுத்துத்
துனையவானவர்வலியெலாந்தொலைத்ததோர்தண்ட
மினையவேவினன்சண்டன்மற்றதனைத்தன்னியல்கைப்
புனையவாயதண்டாற்பொடிபடுத்தினளம்மை.
113
526தண்டமாய்தலும்வெஞ்சினந்தலைக்கொடுசண்டன்
கொண்டன்மாமழைபொழிந்தெனமாயையாங்கொடுங்கோ
லண்டம்யாவையுமுயிர்த்தவளளித்தவண்மறையக்
கண்டயாவருநிலைகலங்கிடக்கதழ்ந்தெய்தான்.
114
527மாயையாங்கணைபடர்ந்தனகாளியைமறைத்த
வேயைவென்றதோள்வயிணவியாதியர்மெலிவுற்
றாயைநீத்தழுமழவெனப்புழுங்கினரழுதார்
பேயைவன்கொடியேற்றினாண்மற்றதுபேணி.
115
528ஞானவாளியைவிடுத்தனண்மாயைபோய்நசித்த
தூனமில்லெனத்தெரிந்துமிக்குவந்தனருலகோர்
மானநாயகிதிருவருவாட்டியதிறத்தா
லானவவ்விடந்தனையுருவாட்டியென்றறைவார்.
116
529விடத்தைநேர்பவன்மெய்யெலாந்துளைபடவிசிகங்
குடத்தைநேர்முலைதொடுத்தனள்யாவரங்குழுமி
நடத்தையாற்றிமங்கலநனிநவின்றனரனைய
விடத்தைமங்கலமென்றுரைசெயுமுலகின்னும்.
117
530விரவுவெஞ்செருப்புரிந்தபேரிடமெலாம்விளங்கப்
பரவுமிங்ஙனமொவ்வொருகாரணம்பற்றி
யுரவுசால்பெயருரைப்பர்வாரிதிவளையுலகோர்
புரவுமேயவவ்விடந்தொறும்பொலிவண்மாகாளி.
118
531மெய்யடங்கலுந்துளைபடவெஞ்சினங்கொண்டு
பொய்யடங்கலுமுள்ளவன்புகுத்தினன்வானிற்
செய்யடங்கலுமுள்ளதன்றேரதுநோக்கி
மொய்யடங்கலுமோருருக்கொண்டன்னமுதல்வி.
119
532தன்னதூர்தியுஞ்செலுத்தினளாவயிற்சமர்த்தா
ரென்னகூறுதுமிருவர்தம்போர்த்திறமெல்லா
நன்னராய்ந்துணர்த்திடுபவர்ஞாலத்துமுளரோ
பன்னருங்கடுப்பொடுசுழன்றனர்பலவிடமும்.
120
533விண்ணிற்சூழுவமேருவிற்சாருவதிசையின்
கண்ணிற்பாய்வனகடலினும்புகுவனகருது
மெண்ணிற்சீர்த்தவல்விரைவொடுமிங்ஙனமுழன்று
மண்ணிற்சார்ந்தனவிருவரூர்தியுமுன்போல்வயங்கி.
121
534வையமேவலுங்குமரிவெஞ்சினங்கொடுவலிசால்
வெய்யயாளியைமற்றவன்றேர்மிசைச்செலுத்தி
யையபாகனைப்பரிகளைவாளெடுத்தடர்த்துச்
செய்யநீர்ப்பெருக்கெழத்தலைகீழ்விழச்செய்தாள்.
122
535ஊரும்வையமற்றூர்தராவையமுற்றுரவோன்
யாருமச்சுறவெஞ்சிலைவளைத்தனனதனைத்
தேருமுன்னரவ்வாள்கொடுதொலைத்தனள்செல்வி
பாரும்விண்ணமுமுநடுங்குமோர்சக்கரம்பரித்தான்.
123
536அந்தச்சக்கரஞ்சுழற்றிமேலெறிந்தனனதுபோ
திந்தச்சக்கரமென்னதேயென்றுகையேற்றாள்
சந்தச்சக்கரங்கழிதலுந்தோமரந்தரித்தான்
முந்தச்சக்கரப்பகவனைமுருக்கிமூர்க்கன்.
124
537அன்னதோமரந்தன்னையும்வாளினாலறுத்தா
னென்னசெய்துமென்றெண்ணியோர்வரைபறித்தெழுந்து
முன்னர்வந்தனனதையொருதண்டினான்மோதிப்
பின்னமாக்கினளுலகெலாம்பெற்றவள்பெற்றாள்.
125
538படையெடுத்தமராடலென்மேற்சென்றுபற்றி
யடைதரச்சினந்துயிருண்பனெனச்சினந்தடுத்தா
னுடையநாயகிபதநினைந்தொய்யெனவொருதன்
புடைவிராவுவெஞ்சூலத்தையேவினள்புரப்பாள்.
126
539கொடியநஞ்செனக்கூற்றெனக்கொடந்தழலென்னக்
கடியசூலஞ்சென்றவனுரந்துளைத்துயிர்கவர்ந்து
படியவாங்கடன்மூழ்கிவான்மலரினும்படிந்து
நெடியகாளியையடத்ததுபுவிமகிழ்நிரம்ப.
127
540பற்றிவெங்கொலைச்சண்டனைப்படுகளத்தவித்து
வெற்றிமேவியவிடத்தினைவெற்றியூரென்பர்
முற்றியாவரும்வளைந்தனர்சோபனமொழிந்தார்
கொற்றிமற்றவனூரழித்திடும்படிகூறி.
128
541அழித்துவந்தவர்தம்மொடுங்கானப்பேரடைந்து
செழித்தநின்றருடம்பிரான்சேவடிசேவித்
தொழித்துவெம்பகையுய்ந்தமாதர்களொடுமுவகை
கொழித்துமீண்டனள்தேவிப்பதிகுறுக.
129
542வாவிசூழ்கண்டதேவியுண்மகிழ்ந்துவந்தடைந்து
தேவியார்திருவடிதொழுதெழுந்தனள்செல்வி
காவிநேர்தருங்கண்ணியர்பலருமுட்கனிந்து
பாவியேங்களுய்ந்தனமெனப்பன்முறைபணிந்தார்.
130
543பணிந்தமாதர்கள்பலரையுந்தேவியார்பார்த்துத்
துணிந்தபேரருள்செய்திடத்தொழுதெழுந்திருந்தா
ரணிந்தபெண்ணுருவாயினார்யாவருமாங்குத்
திணிந்தவாணுருவாதல்பெற்றகமகிழ்சிறந்தார்.
131
544முன்னுமாதவத்துயரியசவுநகமுனிவ
மன்னுவெந்திறற்சண்டனைவதைசெய்ததிதுமேற்
பன்னுதம்பிரான்பெரியநாயகிக்கருள்பண்பி
னுன்னுமற்புதங்கேளெனவுரைத்திடுஞ்சூதன்.
132


சண்டாசுரன்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 8-க்கு திருவிருத்தம் - 544.
-----------

9. திருக்கலியாணப்படலம். (545 - 634)

 

545சிறுமருதடவிமேயசிற்றிடையெம்பிராட்டி
மறுவறுகருணையாலேவானவர்பகைவனாய
தெறுதொழிற்சண்டன்மாயச்செழித்தனவுலகமெல்லா
முறுமகமாதியாவும்பொலிந்தனவூறுதீர்ந்தே.
1
546பேசுபல்லுலகுமீன்றபெரியநாயகியென்பாண்மற்
றாசுதீர்ந்துயிர்கள்செம்மையடைந்ததின்மகிழ்ந்தாளேனு
மூசுபேரன்புவாய்ந்தோர்முன்னத்தின்வழியேநிற்குந்
தேசுசால்கொழுநற்காணாக்கவலையுஞ்சிந்தையுள்ளாள்.
2
547பண்டுபோலெழுந்துமேல்பாற்பயில்சிவகங்கைமூழ்கி
மண்டுபேரன்புபொங்கமலர்முதலாயயாவுங்
கொண்டுவன்மீகம்போற்றிக்குறித்தமரிருக்கைசார்ந்து
விண்டுவாதியர்காணானைமிகநினைத்திருந்தாளன்றே.
3
548நினையாரைநினையானாகிநினைப்பாரைநினையாநிற்கு
நனையாரைவேய்ந்தமோலிநாயகன்கருணைபூத்து
முனையாரைமுனையாவென்றிமுழுவிடைமேற்கொண்டெங்க
ளனையாரையருளவந்தானம்மருதவனத்தம்மா.
4
549கறையகலத்துக்காட்சிகழிதரப்புறத்தேதோற்று
மிறைதிருக்காட்சிநோக்கியெழுந்திருகைகள்கூப்பி
மறைமுடிக்கரியபாதமலர்மிசைத்தொழுதுவீழ்ந்து
குறையறக்களித்தெழுந்துகோற்றொடிதுதிக்லுற்றாள்.
5
550பாரிடையைந்துமாகிப்பாருமாய்நின்றாய்போற்றி
நீரிடைநான்குமாகிநீருமாய்நிகழ்வாய்போற்றி
போரிடையழலின்மூன்றாயழலுமாய்ப்பொலிவாய்போற்றி
தேரிடைவளியிரண்டாய்வளியுமாய்த்திகழ்வாய்போற்றி.
6
551வெளியிடையொன்றேயாகிவெளியுமாய்விளைந்தாய்போற்றி
யளியுயிர்க்குயிருமாகியுயிருமாய்விரவாய்போற்றி
தெளிபுவிபுனறீகால்வான்செஞ்சுடர்மதியான்மாவென்
றொளிசெயெட்டுடம்புபெற்றமுடம்பொன்றுமில்லாய்போற்றி.
7
552தொழில்களோரைந்துசெய்துந்தொழிலொன்றுமில்லாய்போற்றி
யெழில்செயெற்கலந்திருந்தும்விகாரமொன்றில்லாய்போற்றி
பொழில்களோரீரேழாயும்பொழில்கடந்தவிர்வாய்போற்றி
விழிலெழுந்தெழிலழுந்திமிளிர்ந்துமவ்வில்லாய்போற்றி.
8
553காரணமெவைக்குமாயுங்காரணமில்லாய்போற்றி
யாரணமுடிவிருந்துமதற்கறிவொண்ணாய்போற்றி
நாரணன்பிரமராயுநயந்தவர்காணாய்போற்றி
பூரணமுதல்வபோற்றிபுண்ணியப்பொருளேபோற்றி.
9
554பிறையவிர்சடையாய்போற்றிபிறங்குவெள்விடையாய்போற்றி
கறையவிர்களத்தாய்போற்றிகருதுநருளத்தாய்போற்றி
யறைமழுவலத்தாய்போற்றியற்புதநலத்தாய்போற்றி
மறைநவில்சனத்தாய்போற்றிமருதமர்வனத்தாய்போற்றி.
10
555என்றுநெஞ்சுருகக்கண்ணீரிறைத்திடத்துதியாநிற்குங்
குன்றுவெம்முலையினாளைக்குழகனாரருளினோக்கி
யொன்றுவல்விடையினின்றுமிழிந்தருகுற்றுப்பின்பா
னன்றுதைவந்திளைத்தாய்நற்றவம்புரிந்துநீயே.
11
556இருளெனப்படுகூந்தான்மற்றிலகுறுநமக்குநம்பே
ரருளெனப்படுநினக்குமறக்கடையில்லையேனும்
பொருளெனப்படுபேரன்பிற்பூசித்துப்புவனமுய்வான்
றெருளெனப்படுமிப்பூசைசெய்யெனச்செப்பினேமால்.
12
557சொல்லியவாறேநீயுஞ்சுருதியின்முழக்கமாறா
நல்லியலினையதானநண்ணிநீநோற்றாயற்றாற்
புல்லியபாவமுற்றும்போயதபுனிதமுற்றா
யல்லியங்குழலாய்நம்பாலவாம்வரம்பெறுதியென்றான்.
13
558வளவிடைப்பிரானிவ்வாறுவாய்மலர்ந்தருளப்போற்றி
யிளமகப்பிணிக்கீன்றாளேமருந்தயின்றிடுதலெண்ணி
யுளமகிழ்பூப்பவெல்லாவுயிர்களுமுய்யுமாற்றாற்
றளரிடையெம்பிராட்டிவரங்கொளச்சமைந்தாளன்றே.
14
559இத்தலநாமஞ்சொற்றோரித்தலமுளஞ்சிந்தித்தோ
ரித்தலந்தரிசித்தோர்மற்றித்தலம்வசித்தோர்நாளு
முத்தலம்புகழவாநின்சாலோகமுதலோர்நான்கு
முத்தலமருநீர்ணேியாய்முறையுறதல்வேண்டும்.
15
560மறையுணர்ந்தவரைச்செங்கோன்மன்னரைவணிகர்தம்மைக்;
கறையில்சூத்திரரைத்தந்தைதாயரைக்கடும்பைப்பீளைப்
பறைதருபாவைமாரைப்பசுக்களைவதைத்தபாவ
மிறைவநின்றரிசனத்தாலித்தலத்தொழிதல்வேண்டும்.
16
561மேயவித்தலத்தைச்சார்ந்துவிளம்புநின்கோயிலாதிப்
பாயமல்பணியுமாற்றிப்பகர்தருபூசையோடு
மாயவுற்சவமுநன்குசிறப்பிப்போரவனியாண்டு
மாயவன்முதலோராய்ப்பின்னின்பதமருவல்வேண்டும்.
17
562ஒருதமியேனன்றாற்றுமுயர்சிவகங்கைதோய்வார்
கருதருங்குட்டமாதிக்கடும்பிணியனைத்தும்பற்றிப்
பொருதலைத்திடும்பேயாதித்துன்பமும்பொரிந்துபோக
மருதமர்பிரானேயெல்லாவளங்களும்பெறுதல்வேண்டும்.
18
563பலவுரைத்திடுவதென்னைபற்பலநாளுமிந்தத்
தலனடைதவத்தினோர்க்குன்றாட்பிழையொன்றுநீங்க
வலனுயர்கொடியவாயபாதகமனைத்துமாய்ந்து
புலனனிசிறந்தோராயெப்போகமும்பெறுதல்வேண்டும்.
19
564ஆன்றவன்மீகநின்றுமருட்குறிவடிவம்யார்க்குந்
தோன்றநீயருளல்வேண்டுந்தொழுதபல்லுயிருமுய்ய
மான்றவென்றனைநீயின்னேவதுவைசெய்தரளல்வேண்டுஞ்
சான்றவெண்குணத்தாயென்றாளுலகெலாமீன்றதையல்.
20
565அம்மைவாயுரைத்தவார்த்தையடங்கலுஞ்செவியினேற்றுச்
செம்மைசான்மேனியம்மான்றிருமுகமலர்ச்சிகாட்டி
மும்மையாருலகுமுய்வான்முயன்றனையனைத்துநன்று
கொம்மைவாரணிந்தகொங்கைக்கோற்றொடிமடந்தாய்கேட்டி.
21
566நாடவன்மீகநின்றுநம்மருட்குறியின்றோன்று
மாடுபாம்பனையவல்குழாயிழாயதான்றுமற்றை
நீடுபல்வரமுமின்னேபெறுகெனநிகழ்த்தினானுட்
கூடுமோகையளாயுய்ந்தேனென்றுகைகுவித்தாளம்மை.
22
567அன்னதுகண்டவேந்தனயனரிமுதல்வானாட
ரென்னருமுய்ந்தோமுய்ந்தோமென்றுதாள்பணிந்தெழுந்தார்
மின்னகுசூலக்காளிவிரைமலர்ப்பாதந்தாழ்ந்து
பொன்னவிர்சடையாயிந்தத்தலத்தில்யான்பொலிதல்வெண்டும்.
23
568என்னைவந்திப்போர்நாளுமெண்ணருஞ்செல்வத்தாழ்ந்து
முன்னைவல்வினையினீங்கிமுளைகடும்பாதிமல்க
வன்னையினருண்மிக்கோராயலங்குறவேண்டுமென்றாள்
பொன்னைநேர்சடையானவ்வறாகெனப்புகன்றுவிட்டான்.
24
569அவ்வரம்பெற்றகாளியத்தலவடபாற்கோயிற்
செவ்விதிற்கொண்டுமேவிச்சேவித்துப்போற்றுவாருக்
கெவ்வமுற்றொழித்துநாளுமிட்டகாமங்கைகூடி
யொவ்வவெவ்வரமும்பாலித்துறும்பிரசன்னமாயே.
25
570பொங்குமங்கலங்களெல்லாம்பொலிதரவெவர்க்குநல்கி
யங்குமங்கலமாய்நாளுமமர்கின்றாடன்னைவானோர்
தங்குமங்கலமுண்டாகத்தழைதிருமேனிமுற்றுங்
குங்குமங்கலவச்சாத்திக்குங்குமகாளியென்றார்.
26
571அவணிலையன்னதாகவயன்முதலாயவானோர்
தவமலியம்மைவேண்டத்தம்பிரானிசைந்தவாறே
கவலரும்வதுவையாற்றக்கடைப்பிடித்துவகைபொங்க
வவமையின்றுய்ந்தோநாமென்றொருங்கருனைவருந்தொக்காரே.
27
572முருகியலன்பிற்கஞ்சனியவரைமுன்னர்க்கூவிப்
பெருகியவனப்புவாய்ந்தபெரியநாயகியம்மைக்கு
முருகியமனத்துமேவுமொருசிறுமருதூரர்க்குந்
திருகியமனத்தர்காணாத்திருமணநிகழ்தலாலே.
28
573காதலமருங்கும்பக்கொங்கையரோடாடவர்களீண்ட
மீதலமருங்குந்தெண்ணீர்விரிதிரைக்கடலுடுத்த
பூதலமருங்குஞ்சென்னிப்பொலிமணியுடையார்மேய
பாதலமருங்குஞ்சென்றுபடர்முரசறைதிரென்றான்.
29
574என்றலுமுவகைமீக்கொண்டியலருட்டலைமைபூண்டார்
நன்றமர்புனலுண்மூழ்கிநல்லனதுய்த்துடுத்து
வென்றபல்லணியணிந்துவெய்யவெங்களிறுபண்ணி
யொன்றமற்றதன்மேலேற்றினுரிப்பெருமுரசிட்டேறி.
30
575வாழியகுணில்கைக்கொண்டுவாழியசெருத்தலாக்கள்
வாழியமறையுணர்ந்தோர்வாழியவேள்விச்செந்தீ
வாழியமழைபெய்வானம்வாழியவுயிர்களெல்லாம்
வாழியசைவநீதிவாழியமன்னர்செங்கோல்.
31
576சிறுமருதூரின்மேயதேவதேனுக்குமன்பிற்
பெறுமொருசிறுமருங்குற்பெரியநாயகிக்குமன்ற
லுறுவதுகாணயாருமொல்லையினணிந்துகொண்டு
மறுவறுசிறப்புமேவவம்மினென்றெருக்கினானே.
32
577எருக்கியமுரசங்கேளாயாவருமுளத்துமேன்மேற்
பெருக்கியவுவகைதுள்ளப்பெறலரும்பேறும்பெற்றோ
முருக்கியவினைஞரானோமூழ்கினமின்பத்தென்று
தருக்கியதன்மையோராய்த்தம்முளெக்கழத்தமுற்றார்.
33
578தண்டகநிழற்றுங்கற்பதருவுறையமரர்வேந்து
முண்டகமலரின்மேயமுதல்வனுமுருகுவெள்ளம்
வண்டகங்குடையவூற்றும்வனத்துழாய்மாலைத்தேவு
மெண்டகமற்றையோருமிருங்களிபயப்பச்சூழ்ந்து.
34
579விச்சுவகன்மற்கூவிமெல்லியலுமைக்கும்வேத
வச்சுவப்பெருமானுக்குமருங்கடிநிகழ்தலாலே
மெச்சுவமானமின்றிவிளங்குமண்டபங்களாதி
யெச்சுவர்க்கமுமோகிக்கவியற்றுதிகடிதினென்றார்.
35
580வேறு.
என்றபொழுதகத்துவகையெய்தநனிமுகமலர்ந்து
மன்றவருவிக்கினங்கண்மருவாதுமுடிவெய்தி
யொன்றவலம்புரிக்களிற்றையுரைக்குமனுவாற்போற்றி
நன்றமைமண்டபமாதிநவிற்றிடலுற்றான்மயனே.
36
581கருங்கடன்மேற்பலபரிதிகாலூன்றிநின்றாற்போ
லொருங்குமணிக்குறடியற்றியுதன்மீதுசெம்மணித்தூ
ணெருங்குபலபலநிறுவிநின்றபரிதிக்கிறைமே
லருங்குரைத்தென்றிடக்கிடந்தாலனபொற்போதிகைகிடத்தி.
37
582மீதுமதிகிடந்ததெனவெள்ளியவுத்திரம்பொருத்திக்
கோதுதவிரம்மதிமண்டலத்திறைமேற்குலாயதெனப்
போதுமரகதப்பலகைபொருந்திடவெங்கணும்பரப்பி
யோதுகனலெனத்துகிர்விமானமேலுறவமைத்து.
38
583அந்தவொளிமண்டலத்துக்கரசுமேலமர்ந்ததெனச்
சந்தமலிசெம்மணிசெய்தசும்புமேலுறவமைத்துச்
சுந்தரமார்நாற்புறத்துஞ்சோபானமியற்றியதிற்
பந்தமுறவிவ்விரண்டுபக்கமும்யாளிகணுறுவி.
39
584அத்தகையமண்டபச்சுற்றருகுமுழந்தாழ்ந்திருப்ப
வெத்தகையமண்டபமுமிதற்கிணையாகாவென்ன
முத்தகையவுலகடங்கமொய்த்திடினுமிடங்கிடப்ப
வித்தகையதெனப்புகறற்கியலாமண்டபமொன்று.
40
585ஒளிவளர்பொற்குறட்டுமிசையுறுவயிரக்கானிறுவித்
தெளிவளர்செம்மணிப்போதிசெறிதருநீலுத்திரங்கள்
வெளிவளர்மேதகப்பலகைமேதினிநீரழலுழலும்
வளிவளர்வானடுக்கென்னமாண்புபெறும்படியியற்றி.
41
586பித்தியும்பொற்சாளரமும்பிறங்கியொளிர்நிலைப்புதவு
மொத்தியல்பல்கொடுங்கைகளுமொள்ளியபொன்னரிமாலை
நித்திலமாலிகைபவளமாலைநிகழ்மணிமாலை
கொத்தியல்பூமாலைமுதல்யாவுமெழில்கொளப்பொருத்தி.
42
587அன்மயில்கிளிபூவையான்றகபோதகமுதலா
வென்னபறவையும்பொலியலிணர்மலராதிகணெருங்கி
வன்னமிகச்சித்திரித்தவான்பட்டுவிதானித்துப்
பொன்னமையுமரதனகம்பலம்பொலியக்கீழ்விரித்து.
43
588இருவகைமண்டபஞ்சூழவியைந்தபெருவெளிமறையத்
திருநிலைகாவணமிட்டுத்தெங்கிளநீர்பைங்கரும்பு
பொருவருதாற்றுக்கதலிபூம்பிணையன்முதலாக
வொருவருபல்லலங்காரமுலகம்வியப்புறப்புரிந்து.
44
589அன்னகாவணஞ்சூழவைந்தருவும்பணிசெய்யப்
பன்னகாபரணர்திருவருள்பபோலும்பதஞ்செய்யச்
சொன்னமாமணியாதிதுலங்குபலவிதத்தமைந்த
தென்னவாமிளஞ்சோலைதேவர்புலங்கொளப்புரிந்து.
45
590ஆயகாவணஞ்சூழவழகுபொலிநான்மறுகு
மேயவிருபான்மாடமாளிகையும்விண்டடவத்
தேயமெலாஞ்சிறிதென்றுசெப்பவிடங்கொளப்புரிந்து
பாயதோரணமுதலாப்பலவலங்காரமுஞ்சமைத்து.
46
591நாற்புறமுஞ்சோபானநயந்தநறுநீர்வாவி
யேற்புறநாற்றிசையிடத்துமிண்டையாதிகண்மலர்ந்து
நூற்புறமிலிலக்கணத்தினோன்மையதுகொளச்சமைத்து
மாற்புறங்கண்டிடும்வதுவைமண்டபத்தினடுவாக.
47
592நாடுமுறைமுதல்பெரியநாயகியோடினிதமரப்
பாடுமுடங்குளைமடங்கல்பலசுமந்தமணிப்பீட
நீடுவனப்புறவிட்டுநிகழ்பவளக்காலூன்றி
மாடுசெறிமணிவிளங்கவளர்விமானமுஞ்சமைத்து.
48
593சுற்றமையுங்கொடுங்கைதொறுந்தூக்கியநித்திலமாலை
முற்றமையுமிருண்மேய்ந்துமுழுநிலாக்கதிர்காலப்
பற்றமையுமத்தகையபைம்பொனணைக்கெதிராக
மற்றவையும்வேதியுங்குண்டமும்பிறங்கும்வகைபுரிந்து.
49
594விரவுபுவியிடத்தவர்கண்மிகநோக்கியிமையாரா
யுரவுசெறிசுரராகவும்பர்களுமுறநோக்கி
விரவுதிருவடியின்பமேவியவரேயாகப்
பரவுசிவலோகமெனும்படியழகுபெறச்சமைத்தான்.
50

 

595வேறு.
பெருகியவனப்பிற்சமைத்தகல்யாணப்பிறங்குபொன்மண்டபச்சிறப்பை
யுருகியமனத்தின்யாவருநோக்கியுவந்தனர்மற்றதனூடு
முருகியகளிப்பினியவர்களறைந்தமுரசொலியகஞ்செவிநிறையப்
பருகியவொருமூன்றுலகினுளாரும்பரந்ததிவிரைந்துசென்றடைவார்.
51
596மருவியவாட்கேசர்கூர்மாண்டர்வயங்கியபுத்தியட்டகர்தோ
மொருவியகாலாக்கினியுருத்திரர்பூவுறைபவன்புரூரநள்ளுதித்தோர்
வெருவியவவரால்விதித்திடப்பட்டோர்விளங்கொருகாலுருத்திரர்தீப்
பொருவியசூலகபாலத்தராகிப்பொலிதருவயிரவர்முதலோர்.
52
597வானவர்மகவான்மலர்த்தலையுறைவோன்வண்டழாய்த்தொடைப்புயமாயோன்
றானவரியக்கர்சித்தர்கிம்புருடர்சாரணர்வித்தியாதரர்க
ளானவர்செழங்கந்தருவர்கின்னரர்மற்றாசைகாப்பாளர்வல்லரக்கர்
மானவர்பரிதிமதியுறுகோணாண்மாதவமுனிவரர்முதலோர்.
53
598அரமடந்தையரேயவிர்புலோமசையேயையவெண்டாமரைமகளே
வரமிகுதிருவேயருந்ததிமுதலாமாதவமுனிவர்பன்னியரே
பரவியநாகநாட்டுமங்கையரேபற்பலபுவிமடந்தையரே
விரவியமற்றைக்கருநெடுந்தடங்கண்வெண்ணகைச்செய்யவாயினரே.
54
599அனைவருநெருங்கித்தோளொடுதோளுமழகியமுடியொடுமுடியும்
புனைவருகழற்காலொடுகழற்காலும்பூணணிமார்பொடுமார்பு
மினைவருமடந்தைமாரொடாடவருமிறுகிமிக்குரிஞுறப்புகுந்து
நினைவருமனையர்தகுதியினிருந்தார்நின்மலன்மணவணியுரைப்பாம்.
55
600வேறு.
கடிமலர்த்தவிசினானுங்கண்ணியந்துளவினானு
முடிவிலாமுதல்வன்பாதமுன்சென்றுவணங்கிப்போற்றி
யொடிவின்மஞ்சனஞ்செய்சாலையுள்ளெழந்தருளவேண்டு
மடிகளோவென்னவையனலர்முகமுறுவல்பூத்து.
56
601மாயவனெடுத்துவைக்கும்பாதுகைமலர்த்தாள்சேர்த்துத்
தூயபட்டமைந்தமுன்கையிருவருந்துணைந்துநீட்டச்
சேயகைக்கமலம்வைத்துத்திருத்தகநடந்துசென்று
பாயமஞ்சனஞ்செய்சாலையுட்புக்கான்பரமயோகி.
57
602மறைமுடியென்றுந்தூயமாதவருள்ளமென்று
மறைதருமொருபொற்பீடத்தமர்ந்தினிதிருக்கவேத
னிறைசிவகங்கைத்தெண்ணீர்நிலையுறும்படிபூரித்த
குறைவில்பொற்குடங்கையேந்தியாட்டினான்குளிரமாதோ.
58
603நுழையிழைக்கலிங்கங்கொண்டுநோக்குடைத்திருவாழ்மார்பன்
மழைமிடற்றடிகண்மேனிமெல்லெனமருவவொற்றக்
குழையுடைச்செவியாலாலசுந்தரன்குறுகிநீட்டும்
பிழையில்வட்டகைவெண்ணீறுபிறங்குறநுதலிற்சாத்தி.
59
604மன்னியவரைநாண்பட்டுக்கோவணமாயோனீட்டத்
துன்னியவீரமாற்றிமற்றவைசூழச்சேர்த்து
மின்னியசெம்பொற்பன்னூல்விளிம்புசெய்வெண்பட்டாடை
முன்னியவரைப்பின்போக்கிமுகிழ்த்தழகெறிப்பச்சாத்தி.
60
605வடதிசைத்தலைவனிட்டமாயவனுவந்துவாங்கிப்
படவரவாடிச்சீறும்பண்பிவணாகாதெனுங்
கடன்மதித்தடக்கல்போலங்கங்கையைமறைத்தல்போலு
மடர்மணியிழைத்தசெம்பொன்னவிர்முடிமுடியிற்சேர்த்து.
61
606கடிமணப்பணிகணோக்கக்காதல்செய்முகநாட்டம்போற்
பொடியணிநதலினாப்பட்பூத்தகண்டிறவாவண்ணம்
படிதரக்கட்டும்பட்டப்பண்பெனப்புனைபொற்பட்டத்
தொடிவில்பன்மணியும்வாரியுண்டிருளனுக்கச்சேர்த்து.
62
607படுகடலுலகமேத்தும்பாண்டிநாடாளுஞ்சீருந்
தொடுசிலைமதவேண்மேனிசுண்ணஞ்செய்திட்டசீரும்
வடுவறவிளக்கியாங்குமாண்பிலேன்மொழிபுன்பாட்டு
மிடுபெருஞ்செவியினாலமகரகுண்டலங்களிட்டு.
63
608பன்மணிபொலியுஞ்செம்பொற்பருப்பதந்தனைக்குழைத்த
வன்மையைமதித்துமிக்கவன்மையுற்றடைந்துவீங்குந்
தன்மையைத்தடைசெய்தென்னத்தவாப்பலமணிகால்யாத்த
புன்மையில்பொற்கேயூரம்புயவரைபொலியச்சேர்த்து.
64
609வெருவரவுலகமெல்லாம்விழுங்கியவிருள்கால்சீப்பத்
திருமகண்முதலாயுள்ளதெய்வமங்கையர்தங்கண்ட
மொருவரும்பலபூண்பூணவுதவிசெய்திருக்கண்டத்திற்
பொருவருமொளிசால்கட்டுவடம்பலபொலியப்பூட்டி.
65
610நிலம்புணரேனக்கோடுநெடுவலிக்கூர்மத்தோடும்
புலம்புகொண்டினைந்துதேம்பப்பொங்கொளிமணிமதாணி
நலம்புனைதரளக்கோவைநகுமுபவீதம்வெய்யோன்
றலம்புகர்படுக்கும்வீரசங்கிலியாதிசேர்த்து.
66
611குடங்கைசெங்கமலமென்றுகுறித்திளங்கதிர்சூழ்ந்தென்ன
வடங்கலுங்கமலராகமழுத்தியகடகமுன்கை
யிடங்கொளப்பனைந்துமாயமீன்விழியெலும்புள்ளூடத்
தடங்கரவிரலினூடுதவாமணியாழிகோத்து.
67
612அகத்தமர்கருணைபோலப்புறத்தினுங்குளிர்ச்சியார
மிகத்தழைகலவைச்சாந்தும்விளங்குறமார்பிற்பூசிப்
புகத்தகுமரவம்போக்கிப்பொன்னரைஞாணுந்தேசு
தகத்தழையுதரபந்தமுந்திருவரையிற்சாத்தி.
68
613கரியுரிகழித்துச்செம்பொற்கலிங்கவுத்தரியம்போர்த்தி
வரிகழன்மறையீரெட்டாமலர்ப்பதநாலவீக்கி
விரிமலர்மாலைசூட்டிவிளங்குபேரழகுநோக்கி
யரியயனாதியெல்லாவமரருந்தொழுதுநின்றார்.
69
614பல்லியமுகிலினார்ப்பப்பனவர்வாய்வாழ்த்துமல்க
நல்லியலடியார்ரெல்லாநயந்துபன்மலருந்தூவ
வல்லியமுரித்தபுத்தேண்மணவரைத்தவிறசுமேவி
யல்லியங்குழலாராடுமாடல்கண்டிரந்தானன்றே.
70
615கருங்குழலிந்திராணிகலைமகடிருமான்மற்று
மருங்குளமகளிர்கூடிமலர்க்கரங்குவித்துப்போற்றி
யொருங்குலகீன்றாடன்னையுறுவிரைதுவர்களப்பி
நெருங்குபல்லியங்களேங்கநிலவுநீராட்டினாரே.
71
616மெல்லிழைக்கலிங்கங்கொண்டுமேனியினீரமொற்றி
வல்லிருமுலைப்பொன்னோதிவாசனையூட்டிச்சீவி
நல்லியலெஃகந்தொட்டுநலம்புனைதெய்வவுத்தி
வில்லியல்பிறைமுற்சேர்த்துவிளக்கஞ்சால்செருக்குச்செய்து.
72
617மழைமுகிலடுத்துநின்றவானவிற்பொலிவுமானத்
தழையெழினுதலின்மேலாலிலம்பகந்தயங்கச்சூட்டிக்
குழையுமற்றதற்குநாப்பட்டடித்தொன்றுகுலாயதென்னப்
பிழையில்செம்மணிகால்யாத்தபட்டமும்பிறங்கச்சேர்த்து.
73
618அவையடியொருமீன்றோன்றிற்றெனவவிர்பொட்டொன்றிட்டே
யிவைகளானோக்கப்பட்டோர்க்கிருங்கருமலமென்றுள்ள
நவைபுறப்படுமாலென்றுஞாலத்துக்கறிவிப்பார்போற்
செவையிவர்கட்புறத்திலஞ்சனந்திகழத்தீட்டி.
74
619மதிவளர்குலத்திற்றோன்றிமாண்புமிக்களித்தாய்நாயேன்
பதிதருங்குலத்துந்தோன்றிற்பண்புமிக்காமேயென்று
கதிரிருசெவியினூடுங்கரைவதற்கடுத்ததொப்பத்
துதிசெயுங்குழைகடுக்குந்தோடிருகாதும்பெய்து.
75
620நகைமுகமதியமீன்றநகுகதிர்முத்தமென்னத்
தகைகெழநாசிமேலாற்றயங்கொளிமுத்தொன்றிட்டு
மிகையுறுகொங்கைவெற்பின்மேலெழுபசுவேயீன்ற
பகையில்பன்முத்தமென்னப்படர்முத்தமாலைசாத்தி.
76
621கந்தரமெனும்பேர்பூண்டவளைநிதிகமலராக
முந்தொளிவயிரஞ்செம்பொன்முதற்பலவீன்றதென்ன
நந்தியவிருள்கால்சீத்துநகுகதிர்விளக்கஞ்செய்ய
வந்திலாங்கியையத்தக்கவணிகள்பற்பலவும்பூண்டு.
77
622படரொளிமுத்தமாலையுள்ளுறப்பைம்பொன்மாலை
யடரும்வித்துருமமாலைமரகதமாலையான்ற
தொடர்புடைவயிரமாலைதோற்றஞ்சான்மற்றைமாலை
விடலருமதாணியோடுமேதகவொழுங்கிற்பூண்டு.
78
623இறையவன்முகத்துக்கண்ணாயிருந்துநாடோறும்வாழு
முறையுடையெங்கடேசுமுருக்குறாதருள்கவென்றே
யறையிருகதிருங்கைசூழ்ந்தமைந்தெனப்பதுமராக
நிறையொளிவயிரம்யாத்தகடகங்கைநிகழச்சேர்த்து.
79
624காந்தளம்போதுமேலாற்கலந்தபொன்வண்டர்மானப்
போந்தபொன்மணிபதித்தவாழிபொன்விரலிற்கோத்து
மாந்தளிர்மருட்டும்பட்டுவயங்கியமருங்குல்சேரச்
சேந்தபன்மணிகால்யாத்தமேகலைசிலம்பச்சேர்த்து.
80
625சிலம்புகிண்கிணிபொற்றண்டைமுதற்செறிபாதசால
மலம்புறமறையீரெல்லாமளப்பருமடியிற்சூட்டி
நலம்புரியுத்தரீயநககதிர்விளக்கஞ்செய்ய
நிலம்புகழ்நறம்பூமாலைநிறைதரவெடுத்துச்சூட்டி.
81
626திருமகண்முதலாயுள்ளார்செங்கரங்குவித்துப்போற்றி
யருகுகைகொடுத்துப்போதமென்மெலவடிபெயர்த்துப்
பெருகபல்லியங்களார்ப்பப்பெருமறைமுழக்கஞ்செய்ய
மருமலர்க்கூந்தல்போந்துவள்ளல்பாலிருந்தாளன்றே.
82
627வடவறைமுகட்டின்மேலான்மாணிக்கத்தருவும்பச்சைப்
படரொருகொடியுஞ்சேர்ந்தபான்மையிற்சிவபிரானு
மிடர்கெடுத்தெம்மையாளுமெழிற்பராபரையுஞ்செய்ய
சடர்மணித்தவிசின்மேவக்கண்டவர்தொழுதுவாழ்ந்தார்.
83
628மாயவனெழுந்துவள்ளன்மலரடிவிளக்கியந்தப்
பாயதண்புனறன்சென்னிமேற்படத்தெளித்துக்கொண்டு
நேயமிக்குறப்பூசித்துநிலவுபல்லியமுமார்ப்பச்
சேயமாமுதல்வன்செங்கைச்சிரகநீரொழிக்கினானே.
84
629தருப்பைமாவிலையினோடுஞ்சார்ந்தவாண்டளப்பானாங்கு
விருப்பமாரரணிச்செந்தீமேகலைக்குண்டத்திட்டே
யருப்புபல்சமிதையுஞ்சேர்த்தாச்சியஞ்சிருக்கின்வாக்க
வுருப்பவெந்தழன்மிக்குண்டுவலஞ்சுழித்தோங்கிற்றன்றே.
85
630மறையவர்வாழ்த்துமல்கமங்கலவியங்களார்ப்பக்
முறையறுத்துலகமெல்லாங்கூறொணாக்களிப்பின்மூழ்கப்
பிறைமுடிப்பெருமானங்கைபிறங்குமங்கலநாணெல்லா
முறையுயிர்த்தவடன்கண்டமுகிழ்த்திடத்தரித்திட்டானே.
86
631மின்னியபெருமான்முன்னர்மிகுமதுப்பருக்கநல்கி
மன்னியசுரர்முன்யாருமுத்தவாலரிசிவீசித்
துன்னியமகிழ்ச்சிமேவச்சொலற்கருபேரானந்த
நன்னியமத்தரானார்நாமினிப்புகல்வதென்னே.
87
632பெரியநாயகிபெற்செங்கைபிறங்குதன்கையாற்பற்றி
யரியதானென்னுந்தீச்சூழ்த்தமைதரப்பொரிகளட்டித்
தெரியவோர்கையாற்றூக்கிச்சீறடியம்மிசேர்த்துப்
பிரியமார்சாலிகாட்டிமகிழ்வித்தான்பெருமான்வையம்.
88
633மற்றுளசடங்குமுற்றும்வழுவறமுடித்தபின்னர்க்
கற்றுளமனிவர்போற்றக்காமனைக்காய்ந்தபெம்மான்
சற்றுளவிடையாளோடுந்தவாவுவளகத்தையுற்றான்
முற்றுளவுவகைபூப்பமுழுகினார்யாருமின்பம்.
89
634இடைசிறிதுடையாளோடுமெம்பிரான்காட்சிநல்க
மிடைதருபலருங்கண்டுவாழ்ந்தனர்விடையும்பெற்றா
ரடைதருதத்தம்வைப்பையடைந்தனரமர்ந்தாரப்பாற்
சடையுடைமுனிவகேட்டியென்றனன்றவாதசூதன்.
90


திருக்கலியாணப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 9-க்கு திருவிருத்தம் 634
----------------

10. உருத்திரதீர்த்தப்படலம். (635 - )

 

635ஒருநொடிவரைப்பொழுதுலகழித்திடும், 
பெருவிறலுருத்திரப்பிரானபேதமாந்
திருவடைதரமனங்குறித்துச்செம்மலைப், 
பொருவருபூசனைபுரிதற்கெண்ணினான்.
1
636எண்ணியமுத்தலைவேற்கையெம்பிரான், 
நண்ணியதீர்த்தமுந்தலமுமூர்த்தியும்
புண்ணியம்பயப்பதோர்பொருவின்மான்மிய, 
நண்ணியவிடமெதுவென்றுநாடினான்.
2
637மறுவறுகடிமணமகிழ்ந்துகண்டநா, 
ளுறுபெரும்புண்ணியமொன்றிக்கூடலாற்
கறுவுவெம்பவப்பகைகாற்றுமான்மியச், 
சிறுமருதூரெனத்தெளிந்தெழுந்தனன்.
3
638எண்ணியவெண்ணியாங்கெய்தநல்குமப், 
புண்ணியப்பெருந்தலம்பொருக்கென்றண்மினான், 
கண்ணியபுகழ்ச்சிவகங்கைமூழ்கினான், 
புண்ணியபற்றுளாம்பரனைப்போற்றினான்
4
639செம்மலுக்கெதிரொருதீர்த்தமாக்கினா, 
னம்மலர்ப்பெருந்தடத்தகிலதீர்த்தமும்
விம்முறத்தாபித்துவிரும்பிமூழ்கினான், 
றும்முவெந்தீப்பொரிச்சூலத்தண்ணலே.
5
640நிலவுவெண்ணீற்றொடுநிகரில்கண்மணி, 
யிலகுறப்பூண்டெழுத்தைந்துமெண்ணிய
வ், வுலகவாம்புனல்முகந்தாட்டியொள்ளிய, 
பலனருள்வில்வமுற்பலவுஞ்சூட்டினான்.
6
641அருக்கியமுதலியவனைத்துமன்புறு, 
திருக்கிளரபேதமாந்தெளிவுமேவுற
மருக்கிளர்பூசனைவயங்கச்செய்தபின், 
பொருக்கெனத்துதிபலபுகறன்மேயினான்.
7
642கற்பனையென்பனகழன்றசோதிநீ, 
யற்புதமூர்த்திநீயனைத்துமாகிய,
சிற்பரவியோமநீசெல்வமிக்குயர்,
பொற்பமர்சிறுமருதூரிற்புங்கவ.
8
643மறைமுடியமர்தரும்வள்ளனீநெடு, 
மறைமுடிமுழக்கிடுமான்மியத்தனீ
மறைமுடியணுகரம்வரதநீபுகன், 
மறைமுடிபொருமருதூரின்வாழ்பவ.
9
644என்றுதோத்திரம்பலவிசைக்குமேந்தன்மு, 
னொன்றுநாயகனெழுந்தருளியுத்தம
நன்றுநீகருதியநலமளித்தனஞ், 
சென்றுநின்பெரும்பதஞ்சிவணிவாழ்தியால்.
10
645ஒன்றியவெமக்குமற்றுனக்கும்பேதமே, 
யின்றிஃதுணர்பவரெம்மொடொன்றுவர்
நன்றியதகைநினைநம்மின்வேறுசெய், 
புன்றகையினர்க்கிலைபொருவின்ஞானமே.
11
646புரிதொழில்குறித்திருபுலவரோடுனைச், 
சரிசொலுமவர்விழுந்தகையர்கும்பியி
னெரிமருள்சூலிநீயியற்றுதீர்த்தந்தோய், 
பரிவினரெண்ணியபலவுமெய்துவர்.
12
647என்றநல்வரங்கொடுத்திறைமறைந்தன, 
னொன்றுவெஞ்சூலிதன்னுலகம்புக்கன
னன்றுயர்பலமெலாநலக்கவெய்துவர், 
சென்றுநல்லுருத்திரதீர்த்தமூழ்குவோர்.
13
648நீதியவுருத்திரநீரின்மூழ்குதற், 
கோதியநாளெலாமுறுவிசேடமா
மாதிரைநாளவற்றதிவிசேடமாந், 
தீதியலாதவித்தினங்கடம்முளும்.
14
649மார்கழியாதிரைமருவிமூழ்குறிற், 
சீர்கழியாப்பலசிறப்புஞ்செல்வமும்
பார்கழிமுத்தியும்பயப்பதுண்மையாற், 
கார்கழிஞானமுட்கலக்குமெண்ணினும்.
15
650செம்மைசாலுருத்திரதீர்த்தமான்மிய, 
மும்மையார்புவனத்துமொழியவல்லார்
ரம்மையோர்பாகங்கொண்டகிலங்காத்திடு, 
மெம்மையாளிறைவனேயிசைக்கவல்லவன்.
16
651வரத்திரவுரவமுற்றுயரமாழற்றுற, 
முருத்திரதீர்ததத்தினுயர்ச்சிகூறினுங்
கருத்திரமுறாதெனக்கரைந்துமற்றதுங், 
குருத்திரவியமெனக்கூறுஞ்சூதனே.
17


உருத்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 10-க்கு, திருவிருத்தம். 651.
-----------------------------------

11. விட்டுணுதீர்த்தப்படலம். (652 - 669)

 

652சங்குசக்கந்தாங்குந்தடக்கையான், 
பொங்குதானவரோடுபொரல்குறித்
தெங்குநாஞ்சென்றிறைஞ்சுதுமென்றெண்ணித், 
தெங்குமேயசிறுமருதூருற்றான்.
1
653தெளிசெய்நாயகிசெய்சிவகங்கையு, 
மொளிசைய்மேன்மையுருத்திரதீர்த்தமு
மளிசெயன்பினணைந்துமுழுகினாள், 
களிசெய்வண்டுகலக்குந்துழாயனே.
2
654திருந்துநீறதிகழப்புனைந்தறம், 
பொருந்துகண்மணிபூண்டெழுத்தைந்தையும்
வருந்துதீரமதித்துக்கொடுவிட, 
மருந்துநாயகன்முன்னரணைந்தனன்.
3
655அங்கமெட்டினுமாறினுமைந்தினும், 
பங்கமோவப்பணிந்துபணிந்தெழுந்
துங்கணீங்கியுருத்திரதீர்த்தப்பாற், 
றுங்கமார்கிழக்கோர்தடந்தொட்டனன்.
4
656முன்னமூழ்கிமுகிழ்க்குமலர்செறி, 
யன்னதீர்த்தங்கொண்டையனையாட்டியே
பன்னமாதிப்பலமலர்சூட்டிமிக், 
குன்னவாங்கனியாதியுமூட்டினான்.
5
657செய்யவேண்டுபசாரமெலாஞ்செயா, 
வையவிங்ஙனமம்மையையும்புரிந்
தெய்யமீண்டுபிரான்முனமெய்தினான், 
றெய்யவான்றுதிசெப்பலுற்றானரோ.
6
658ஆதியேயறமேயருளேயுமை, 
பாதியேபரமேபரவானமே
மோதியேயிருள்சாடுமுழுப்பெருஞ், 
சோதியேயுன்றுணையடிபோற்றினேன்.
7
659ஐயனேயழல்கான்மழுமான்மறிக், 
கையனேபொய்கடிந்தவருள்ளமர்
மெய்யனேயந்திமானமிளிருருச், 
செய்யனேயுன்றிருவடிபோற்றினேன்.
8
660காலகாலகபாலசுபாலன, 
நீலவாலமிடற்றநெருப்பெழும்
பாலலோசனபார்ப்பதிபாகவி, 
சாலசீலநின்றாளிணைப்போற்றினேன்.
9
661பொருதமேவும்புயவலித்தானவர், 
நிருதராதியர்நீங்கவருள்செய்வாய்
கருதமிக்கினியாய்கண்டதேவிவாழ், 
மருதவாணநின்மாண்பதம்போற்றினேன்.
10
662என்றுதோத்திரஞ்செய்யுமிணர்த்துழா, 
யொன்றுமாலையலப்புயத்தானெதிர்
கன்றுமான்மழுவேந்துகைத்தம்பிரா, 
னன்றுதோன்றியருளுதன்மேயினான்.
11
663திதிமகாரொடுநீபொரல்சிந்தைவைத், 
ததிகபூசனைநம்மடிக்காற்றினை
யெதிரிலாதொளிரித்தலத்தாதலான், 
மதிசெய்மாயவவுள்ளமகிழ்ந்தனம்.
12
664வலியதானவர்மாட்டமராடிநீ, 
பொலியவாகைபுனைவரநல்கினோ
மொலியவாங்கழலாயுனக்கின்னுமென், 
மெலியலாவரம்வேண்டுமுரையென்றான்.
13
665என்றபோதினிறைஞ்சியிம்மாத்தலத், 
தொன்றநின்னடிபோற்றியுறைதர
நன்றவாவினனான்புரிதீர்த்தத்து, 
மன்றமூழ்கினர்வாழ்தரவேண்டுமால்.
14
666ஈதுமையநல்கென்றடிதாழ்தலுந், 
தீதுதீரநிருதித்திசைவயி
னோதுகோயில்கொளுன்புனன்மூழ்குவோர், 
காதுதீவினைக்கட்டறுத்துய்வரால்.
15
667என்றுகூறிமறைந்தனனெம்பிரா, 
னன்றுமாயவனத்திசைக்கோயில்கொண்டொ
ன்றுதானவர்தம்வலியோட்டியே, 
யென்றும்வாழ்வனுற்றார்க்கின்பருளியே.
16
668அனையனாற்றியவப்புனலோணநா, 
ணினையமூழ்குனர்நீடுவறுமைநோ
யினையவெவ்வகைச்செல்வமூமெய்துவார்,
துனையவன்னானுலகத்துந்துன்னுவார்.
17
669ஈதுமாயவன்றீர்த்தச்சிறப்பினிச், 
சாதுமேன்மைச்சவுநகமாதவ
போதுசேரயன்றீர்த்தப்புகழ்மையு, 
மோதுகேனென்றுரைத்திடுஞ்சூதனே.
18


விட்டுணுதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 11-க்கு திருவிருத்தம் - 669.
-----------------------

12. பிரமதீர்த்தப்படலம் (670 - 685)

 

670இண்டைமாமலரிருக்குநான்முகன், 
றொண்டைவாயொருதோகைமாதைமன்
கண்டையாவுளங்கலங்கிமோகித்தான்,
பண்டையூழ்வினைபாற்றவல்லரார்.
1
671அன்னபாவமேலடர்ந்துபற்றலு, 
முன்னமாந்தொழின்முழுதுந்தீர்ந்ததா
லென்னசெய்துநாமினியென்றுற்றனன், 
கன்னல்வேலிசூழ்கண்டதேவியே.
2
672அங்கண்வந்துமையமைத்ததீர்த்தமுஞ், 
சிங்கறீருருத்திரநற்றீர்த்தமுஞ்
சங்கபாணியோன்சமைத்ததீர்த்தமுந், 
துங்கமார்தரத்துளைந்தெழுந்தனன்.
3
673செங்கண்மாயவன்றீர்த்தத்தென்றிசை, 
முங்குதீர்த்தமொன்றாக்கிமூழ்கினான்
புங்கநீறுகண்மணிபுனைந்தன, 
னங்கணுற்றெழுத்தைந்துமெண்ணினான்.
4
674அன்னநீர்முகந்தாட்டியையனைச், 
சொன்னகூவிளமாதிசூட்டியே
யுன்னவாஞ்சுவையுணவுமூட்டினா, 
$னென்னசெய்கையுமினிதியற்றினான்.
5
675கண்டவாமொழிக்கண்ணிபாகனே, 
கண்டவாநுதற்காலகாலனே
கண்டமாமதிகலந்தசென்னியாய், 
கண்டதேவிவாழ்கருணைமூர்த்தியே.
6
676அண்டராதியோரலறியச்சமுட், 
கொண்டதோர்ந்துவெங்கொலைசெய்நஞ்சினை
யுண்டநாயகாவுமையோர்பாகனே, 
கண்டதேவிவாழ்கருணைமூர்த்தியே.
7
677என்றுதோத்திரமியம்பியிவ்வண,
மொன்றுபல்பகலுறையுமேல்வையிற்
கன்றுமான்மழுக்கையர்தோன்றினார், 
நன்றுநான்முகனயந்துபோற்றினான்.
8
678அன்னவூர்திகேளான்றவித்தல, 
மென்னபோதுநீயெய்தப்பெற்றுளா
யன்னபோதுபோயழிந்ததுன்கரி, 
சென்னமேன்மையுமெய்தப்பெற்றுளாய்.
9
679இந்தமாத்தலம்யாலரெய்தினும், 
பந்தமாருமெப்பாதகங்களு
முந்தவோட்டுவார்,முத்தியெய்துவார், 
சந்தமேவுமெய்ச்சிறப்புஞ்சாருவார்.
10
680இங்குறாதுநீயெங்குமேவினும், 
பொங்குதீவினைபோதலில்லைகாண்
கொங்குசார்மலர்க்கோயின்மேவுவோய், 
தங்குநின்றொழிற்றிறமஞ்சார்தியால்.
11
681இன்னும்வேண்டுவதியம்புகென்றனன், 
மன்னநான்முகன்வணங்கியையவென்
முன்னுதீர்த்தநீர்மூழ்குவோரெலாம், 
பன்னுமேன்மையிற்படரநல்கென்றான்.
12
682அன்னதாகெனவருளிவள்ளலா, 
ருன்னவாயபுற்றுண்மறைந்தனர்
பின்னல்வார்குழற்பெரியநாயகி, 
தன்னதாள்களுந்தாழ்ந்துபோற்றினான்.
13
683ஓங்குசத்தியவுலகநண்ணினா, 
னாங்குமுன்றொழிலாற்றிவாழ்ந்தனன்
றேங்குமற்றவன்றீர்த்தமூழ்குவோர், 
பாங்குசால்வரம்பலவுமெய்துவார்.
14
684தெரிந்துரோகணித்தினத்தின்மூழ்குவோ, 
ரரிந்துதீவினையாக்கமெய்துவார்
புரிந்துமற்றவன்பதத்தும்போய்ப்புகுந், 
திரிந்துதீர்தராதென்றும்வாழ்வரே.
15
685கஞ்சமேலவன்கண்டதீர்த்தமீ, 
தஞ்சமாமனுவமைந்தசிந்தையாய்
தஞ்சவெய்யவன்சமைத்ததீர்த்தமுந், 
துஞ்சவோர்தியென்றோதுஞ்சூதனே.
16


பிரமதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 12-க்கு, திருவிருத்தம் -685.
-------------------------------

13. சூரியதீர்த்தப்படலம் (686 - 700)

 

686மோதுகடன்முகம்புழுங்கமுளரிமுகைமுறுக்குடைய
வோதுமலர்தலையுலகத்துயிரெலாங்கண்விழிப்பச்
சாதுமறைமுழக்கெடுப்பத்தழைகருமச்சான்றாகித்
தீதுவிரோராழித்தேருதையமெழுவெய்யோன்.
1
687ஒருமனைவியவன்கனல்வெப்புடறழுவற்காற்றாளாய்ப்
பொருமியழுதினைந்தேங்கிப்போய்த்தந்தைபாலுரைப்ப
வெருவில்வலித்தந்தையெனும்விச்சுவகன்மன்றெரிந்து
குருமலிபொற்பூங்கொடியையஞ்சற்கவெனக்கூறி.
2
688சான்றபரிதியைப்பிடித்துச்சாணையிடைவைத்துரைத்திட்
டான்றகதிர்களைத்தேய்த்தானாறியதுவெப்பமுட
னேன்றகுலக்கொடிமகிழ்ந்தாள்கதிர்முழுதுமிழந்தமையாற்
றோன்றவருசெம்பரிதிசுடரின்றிமழுங்கிற்றே.
3
689இனியாதுசெய்குதுமென்றெண்ணியடைந்தவர்க்கெல்லா
முனியாதுகருணைபொழிமுதல்வனார்சிறுமருதூர்
பனியாதுசென்றடைந்துபரவுதுமேற்றுயர்முழுதங்
கனியாதுசெய்வரென்றுகண்டதேவியையடுத்தான்.
4
690கண்டதேவியினயன்மால்காணாத்தேவியையொருபாற்
கொண்டதேவனைவணங்கிக்குலவியமற்றவன்றென்பால்
விண்டதேமலர்நாளுமிடைசிவகங்கைக்கீழ்பால்
வண்டர்தேதேயெனும்பன்மலர்த்தடமொன்றியற்றினான்.
5
691அன்னபெரும்புனன்மூழ்கியழகியவெண்ணீறணிந்து
பன்னருங்கண்மணிபூண்டுபரவுறுமைந்தெழுத்தெண்ணிச்
சொன்னபுனன்முகந்துமருதடிவளர்சோதியையாட்டி
மின்னகுபன்மலர்சூட்டிவில்வமுங்கொண்டருச்சித்தான்.
6
692இவ்வண்ணம்பூசைபுரிந்திருக்குநாளிரங்கிமிளிர்
செவ்வண்ணப்பெருமானார்திருக்காட்சிகொடுத்தருள
வுய்வண்ணமுண்டாயிற்றுண்டாயிற்றென்றெழுந்து
மைவண்ணத்துயரொழிந்துமலரடிதாழ்ந்திதுததிப்பான்.
7
693திருமுகத்துவலக்கண்ணாய்த்திருமேனிகளுளொன்றாய்க்
பொருசமருக்கெழங்காலைப்புவியியக்கும்பதத்தொன்றாய்
மருவுமிருக்கையுளொன்றாய்வயங்குமொருசிற்றடியே
னுருவவொளியிழந்திருத்தலுன்பெருமைக்கழகேயோ.
8
694பிறங்குபெருங்குணக்குன்றேபெரியநாயகியைமணந்
தறங்குலவவுலகினுக்கின்பளித்தபேரருட்கடலே
நிறங்குலவுமருதடிவாழ்நித்தியநின்மலச்சுடரே
புறங்கிளருமொருநாயேன்பொலிவிழத்தலழகேயோ.
9
695புரமூன்றுமொருநொடியிற்பொடிபடுத்தபுண்ணியனே
சிரமூன்றுமொருநான்குஞ்செறிந்தாருக்கறிவரியாய்
வரமூன்றும்படியடைந்தார்தமக்கருளுமாநிதியே
திரமூன்றுமொளியிழந்தியான்றேம்பிடுதலழகேயோ.
10
696என்றுதுதித்திடுவானுக்கெம்பிரானருள்சுரந்து
நன்றுகுணக்குதித்திடுவோய்நாமொழிதிமுன்போலத்
துன்றுமொளிபெறுதியிருடொலைத்துவாழுதியின்னு
மொன்றுவரம்வேண்டுவதென்னுரைத்தியெனப்பணிந்துரைப்பான்.
11
697ஐயவறிவிலிநாயேனுய்ந்தனனெ்ன்னழலுடலஞ்
செய்யமனையவடழுவுந்திறமுமுதவுதல்வேண்டு
மெய்யமையவென்றீர்த்தம்விரும்பிமுழுகுனர்நினது
மையிலருட்குரியராய்வயங்கிமருவுதல்வேண்டும்.
12
698இனையவரந்தருதியெனவிரந்தனனீலிழைந்தபடி
யனையவரந்தந்தனமென்றருளிமறைந்தனன்பெருமான்
முனையமழுப்படையேந்துமுதல்வனைமற்றவனிடப்பா
னனையமலர்க்குழற்பெரியநாயகியைப்பணிந்தெழுந்து.
13
699தன்னுலகம்புகுந்துகதிர்தழைந்துகருகிருளோட்டி
மன்னுலகவிழியாகிவயங்கினான்மார்த்தாண்டன்
றுன்னுலகம்புகழுமவன்றொட்டதீர்த்தம்படிவோர்
பொன்னுலகமடைந்துபெரும்போகமெலாந்துளைந்திடவார்.
14
700ஆதிவாரம்படிவோரையனருட்குரியராய்ச்
சோதிவார்கயிலாயந்துன்னிடுவர்பரிதிதட
நீதிகாணிதுமதிசெய்நெடுந்தீர்த்தப்பெருமையுங்கே
ளோதியாயென்றுரைத்துமேலுமறைத்திடுஞ்சூதன்.
15


சூரியதீர்த்தப்படலம் முற்றிற்று..
ஆக படலம் - 13 க்கு, - திருவிருத்தம் 700.
------------------------

14. சந்திரதீர்த்தப்படலம் (701- 727)

 

701மதியெனுங்கடவு, டுதிபுரிகுரவன், 
பதிமனையவடன், பொதிநலனகர்ந்தான்.
1
702அதுதெரிகுரவன், விதுமுகநோக்கி, 
முதுசினங்கடவக், கதுமெனவைதான்.
2
703நீகயரோகி, யாகவென்றுரைத்த, 
மோகமிலுரைகேட், டாகமிக்குளைந்தான்.
3
704என்னினிச்செய்வ, தென்னநைந்தழிந்தே, 
யென்னவந்தறின, மென்னரனுளனால்.
4
705என்றுளந்துணிந்தா, னன்றுவந்தடைந்தான், 
றொன்றுவெவ்வினைதீர்த், தொன்றுபொன்மாரி.
5
706மருதடிமேய, வொருதனிக்கடவு, 
ளிருசரண்போற்றிப், பருவரறீர்ப்பான்.
6
707தூயவள்பெரிய, நாயகிபதமு, 
நேயமிக்குருகி, யாயறப்பணிந்தான்.
7
708மடக்கொடிபாகற், கிடப்புறமாகக், 
கடப்படுரெயா, டடத்தொருகீழ்பால்.
8
709ஒருதடமாற்றி, வெருவறமூழ்கித், 
திருவமர்நீறு, மருவமெய்ப்பூசி.
9
710வாலியவக்க, மாலிகைபுனைந்து, 
கோலியவெழத்தைந், தாலியவெண்ணி.
10
711அப்பனன்முகந்து, வெப்பமில்பெருமான், 
றிப்பியமுடிமே, லொப்பறவாட்டி.
11
712மலர்பலசூட்டி, யலர்கனியூட்டி, 
யலர்சுடர்கோட்டி, நலர்கொளத்துதிப்பான்.
12
713அறிவிலிநாயேன், செறிதரப்புரிந்த, 
முறிவில்வெம்பழியைப், பிறிதுசெய்பெரும.
13
714குணமிலிொாயேனணவுறப்புரிந்த, 
தணவரும்பழியை, யுணவுசெய்யொருவ.
14
715கோடியநாயேன், றேடியபழியை,
வாடியபுரிதி, நீடியநிமல.
15
716சிறுமருதூர்வாழ், மறுவறுதேவே, 
கறுவுசெய்நாயேன், பெறுபழிதவிர்த்தி.
16
717என்றுரையாட, வன்றுநங்கோமான், 
முன்றனித்தோன்றி, நின்றனனுவந்தே.
17
718கண்டனனாலோன், றண்டருமுவப்பின், 
மண்டனிற்றோயத், தெண்டனிட்டெழுந்தான்.
18
719குரவனெப்பிழைத்த, வுரவுடைப்பாவம், 
விரவியித்தேயத்துப், பரவலிற்றீர்த்தோம்.
19
720தேய்தலும்வளர்வு, மாய்தரலின்றி, 
யாய்தரப்பொலிதி, பாய்மதித்தேவே.
20
721வேண்டுவதினியென், னீண்டுரையென்னக், 
காண்டகுதிரத்தாள், பூண்டிஃதுரைப்பான்.
21
722தோற்றியநாயே, னாற்றியதீர்த்தம்,
போற்றியமேலோர், பாற்றிருவுறுக.
22
723இதுதருகெ்ன்றா, னதுநனியருளிக், 
கதுமெனமறைந்தான், விதுமுடிப்பெருமான்.
23
724மதிதனதுலகம், பதிதரப்புகுந்தான், 
றுதியவன்றீர்த்தம், விதியொடுதோய்வார்.
24
725வேண்டியசெல்வம், பூண்டினிதமர்வா, 
ராண்டவன்வார, மூண்டுறப்படிவோர்.
25
726எண்ணியதடைவார், புண்ணிமதிநீர், 
நண்ணியதிதுமேற், கண்ணியகதையும்.
26
727சொற்றிடக்கேட்டி, நற்றவனேயென், 
றுற்றுரைசெய்வான், சொற்றகுசூதன்.
27

சந்திரதீர்த்தப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 13-க்கு, திருவிருத்தம். - 727.
----------------------

15. சடாயுபூசைப்படலம் (728 - 767 )

 

728முராரிமுற்பிருகுமாமுனிவன்சாபத்தாற், 
றராதலித்தயோத்தியாடசாதற்கிணை
யராவளைதிகிரிகளனுகராயுற, 
விராமனென்பெயர்புனையெச்சமாயினான்.
1
729நிறைபெருங்கலையெலாநிரம்பக்கற்றபின், 
குறையொழியிளவல்பின்றொடரக்கோசிக
னறைமகச்சாலையையடைந்துதாடகை, 
முறைமகனோடுயிர்முடியப்பாற்றியே.
2
730மகவினைநிரம்புறக்காத்துமாமைசா, 
லகலிகைகல்லுருவகற்றியாய்வள
மிகலுடைமிதுலையிற்புகுந்துவில்லிறுத், 
திகல்விழிச்சீதைகையினிதபற்றியே.
3
731மழுப்படையிராமனைவழியினேற்றவன், 
கொழுப்படைதரப்பறித்தகன்றுகூடிய
முழுப்படையொடுமதிலயோத்திமுன்னினான், 
விழுப்படையேந்தியவீரர்வீரனே.
4
732இளையதாய்கலாம்புரிந்திடலிற்சீதையும், 
வளைசிலைத்தம்பியுந்தொடரமன்னனெஞ்
சுளைதரநகரநீத்துவந்துபோயொரு, 
விளைவலிக்குகனையம்விரும்பிநட்டரோ.
5
733பாதுகைகொடுத்தழும்பரதற்போக்கியே, 
மோதுவல்விராதனைமுடித்துமாதவச்
சாதுமாமுனிவர்தம்மைப்போற்றிநட், 
டோதுகோதாவிரிதீரத்துற்றனன்.
6
734ஆவயினரக்கிமூக்கரிந்துபோக்கிட, 
மேவியகரன்முதலோரைவீட்டிமெய்
சார்வருநவ்விமாரீசன்சார்தரக், 
கூர்வரும்பகழியொன்றேவிக்கொன்றனன்.
7
735வையமேத்திளவன்முன்மாட்டுச்சென்றிடக், 
குய்யம்வைத்ததிதிபோற்குறுகிநோக்கிய
வெய்யவாளரக்கர்கோன்விரும்புசீதையை, 
யையகொண்டேகலுமவள்பலம்புவாள்.
8
736ஓதரும்பேதமையுறைத்தநீர்மையாற், 
றீதமையும்படிசிந்தைசெய்துளெ
னாதகாதெனவிவணடைந்துகாத்தியென், 
னாதனேநாதனேயென்றுநையுமால்.
9
737வளமிலைமாயமான்வண்ணமென்னவு, 
மளமருமனத்தொடுமவாவப்பட்டயான
களமிகுமரக்கனாற்கலங்கிநொந்துளே, 
னிளவலேயிளவலேயென்றுதேம்புமால்.
10
738வேறு.
சீதையிங்ஙனமழுதழுதிரங்குபுதேம்பு
மோதையஞ்செவியூடழற்சலாகையினுறல
மாதையாவனோகொடுசெல்வானெனமதித்திராமன்
றாதையாகியநெடுவலிப்பெருஞ்சிறைச்சடாயு.
11
739எழுந்துவான்மிசைப்பறந்தனனேகுதேரெதிருற்
றழுந்துதுன்பமுற்றயர்தருமருகியைக்கண்டான்
விழந்துதேம்பிநீமெலியற்கமெல்லியலென்று
கொழுந்துகொண்டெழுவெகுளியான்கொடியனைநோக்கி.
12
740என்னகாரியஞ்செய்தனைகொழுந்தழுலெடுத்துத்
தன்னதாடையிற்பொதிபவர்தம்மைநீநிகர்த்தாய்
மன்னன்மைந்தனீதுணர்தரின்வாழுவைகொல்லோ
வன்னனோருமுன்னணங்கைவிட்டகலுதியாக்க.
13
741என்றுகூறலுநீயொருசழுகுமற்றெனக்கு
நன்றுகூறுதனன்றுநன்றாலெனநகைத்தான்
வென்றுமேம்படுமென்னுரைவிழைந்திலைநகைத்தாய்
கொன்றுநின்னுயிர்குடிப்பலென்றுருத்தனன்சடாயு.
14
742வில்வளைத்தனனன்வெஞ்சரம்பற்பலதொடுத்தான்
மல்வளைத்ததோளிராவணன்மற்றதுநோக்கிச்
சொல்வளைத்தவெஞ்சிறைவலிச்சடாயுவுந்துனைந்து
கொல்வளைத்தனனலகினாற்குலைதரக்கறித்தான்.
15
743மீட்டும்பற்பலவெஞ்சரந்தொடுத்தனன்றோட்டி
காட்டுமூக்கினுங்காலினுஞ்சிதர்தரக்கழித்துப்
பாட்டுவண்டுளர்மாலைமற்றவன்கரம்பரித்த
கோட்டுவெஞ்சிலைப்பறித்ததுமுறித்ததுகுருகு.
16
744புள்ளுவன்மைமிக்கழகிதானென்றிறும்பூது
கொள்ளுநெஞ்சினன்மூட்டுமோர்கொடுஞ்சிலைகொண்டு
தெள்ளுகூர்ங்கணைபற்பலவுடம்பெலாஞ்செறிந்து
நள்ளுமாறுதொட்டார்த்தனன்வானமுநடுங்க
17
745ஆர்த்தகாலையினெருவையுந்தனதுமெய்யடங்கப்
போர்த்தவாளிகளனைத்தையுமுதறுபுபோக்கிக்
கூர்த்தமூக்கினாற்குண்டலமணிமுடிபுயத்துச்
சேர்த்தபூண்முதற்பறித்துமட்சிதறியதன்றே.
18
746கொடியவெஞ்சினங்கொதித்தெழவேலொன்றுகொண்டு
நெடியவன்சிறைச்சடாயுமேல்விடுத்தனனிருதன்
மடியமற்றதுசிறைவலிக்காற்றினான்மாற்றிப்
படியமண்ணிடைப்பாகனைச்செகுத்ததுபறவை.
19
747தண்டமொன்றுகொண்டெறிந்தனனரக்கர்தந்தலைவ
னண்டம்விண்டதென்றறைதரவதுவிரைந்தணுகல்
கண்டபுள்ளுமற்றென்செயுமிதுவெனக்கடுகித்
துண்டம்வைத்திருதுண்டமாக்கியதவன்சோர.
20
748நாட்டுமன்னவன்மருகியுணலிதரப்பொழுது
நீட்டுகின்றதென்னென்றுவெஞ்சினங்கொடுநிமிர்ந்து
கோட்டுவார்சிலைதூணியாழ்க்கொடியையுங்குறைத்துப்
பூட்டுவாம்பரிமுழுமையுங்கொன்றதுபுள்ளே.
21
749இனையவெஞ்சமராற்றுழியிராவணனெண்ணின் 
முனையவெம்படைசெலுத்தியுமொருமயிர்முனையு
நினையமாய்ந்திலதென்னினிச்செயலெனநினைந்து
வினையமொன்றனால்வெல்லுவான்குறித்திதுவிளம்பும்.
22
750வருதிவீரருள்வீரனீயுயிர்நிலைமதித்தே
பொருதனன்றுநின்னுயிர்நிலைபுகலெனப்புகன்றான்
கருதல்வேறிலானின்னுயிர்நிலைகழறென்றா
னிருதனென்வலத்தாட்பெருவிரனிலையென்றான்.
23
751வஞ்சமில்லவனிருஞ்சிறையடியெனவகுத்து
நஞ்சமன்னவனகுபெருவிரற்றலைமோதத்
துஞ்சறீர்ந்தவனிருந்தனன்சுடர்வடிவாள்கொண்
டெஞ்சுறாதிருசிறையையுமறுத்துமண்ணிட்டான்.
24
752சடாயுவீழ்தலுஞ்சாநகிதனைக்கொடுபோனான்
கடாவுவாள்வலியரக்கன்மற் றிவணிலைகலங்கிப்
படாதமெய்யுரைத்திறத்தலின்வெற்றியென்பாற்றே
கெடாதசீருமுண்டாயதென்றுவந்ததுகிளர்புள்.
25
753உண்மைகூறுதலெங்குநன்றாயினுமுறாரை
யண்மையாரெனமதித்ததுகூறுதலடாதா
லெண்மையாயினேன்படையிடத்தஃதிசைத்தெனினும்
வண்மைசால்புகழ்க்கீறிலையென்றுளமகிழ்ந்தான்.
26
754கறைவிடந்தருகூரெயிறிழந்தகட்செவியும்
பிறைநிகர்த்திடுமருப்பிழந்துழன்றபேருவாவு
மிறைசெயேதிகையிழந்தவோர்வீரனும்விசைக்குஞ்
சிறையிழந்தமற்றியானுமொப்பினிச்செயலென்னே.
27
755மண்ணின்மீமிசையிருந்துயிர்வாழ்தலின்மதிப்பா
ரெண்ணின்மேவியசிவபிரான்பூசனையியற்றி
விண்ணின்மேலெனுமவனடியடைவதேமேன்மை
கண்ணினீங்கிதிற்சிறந்ததுவேறொன்றுகாணேன்.
28
756என்றுதேறினன்மென்மெலநடந்துவந்திமையோர்
சென்றுபோற்றிடுமருச்சுனவனத்தினைச்சேர்ந்தான்
கன்றுமாலயற்கறிவரியான்பெருங்கருணை
நன்றுசெய்திடப்பூசனைபுரிதிறநயந்தான்.
29
757மன்னுதம்பிரான்பச்சிமதிசையுமைவகுத்த
துன்னுதீர்த்தத்தின்குணதிசையொருதடந்தொட்டான்
முன்னுமத்தடமுழுகிவாயப்புனன்முகந்து
மின்னுநீண்முடியாட்டினன்வேடர்கோமகன்போல்.
30
758நறிய கூவிள மாதி கணயந் துகொய்தெடுத்துச்
செறியச் சூட்டி னன்காய் கனியூட் டினன்சேவித்
தறிய முன்ன நின்றன் புறவடிக் கடிபணிந்து
நிறிய மேன்மை யிற்புகுந் திடுதோத் திரநிகழ்த்தும்
31
759சிறையி லாத வென்பவத் துறுசிறை தவிர்ப்பதற்கே
குறையி லாத விக்கான் மருதடிக் குடிகொண்டாய்
மிறையி லாத வெம்மழுப் படைவித் தகவிமல
கறையி லாத நின்கண் ணருள்வழங் கிடக்கடவை
32
760அரிய சான்புகுந் தருந்தவ மாற்றி லேனந்தோ
பிரிய மேமிகுந் தூனுகர் வாழ்க்கை யேபெற்றேன்
றெரிய நின்னடிக் கடிய னாயடைந் தனன்சீர்சால்
பெரிய நாயகி மணாள நின்பே ரருள்புரிதி
33
761என்று வேண்டலு மெம்பிரான் பெரிய நாயகியோ
டன்று மால்விடை மேற்பொலி காட்சி தந்தருள
நன்று போற்றுபு நின்றன னாய கனோக்கி
யொன்று பத்தியிற் புரிந்தநின் பூச னையுவந்தேம்
34
762யாது வேண்டினுங் கொடுப்ப தற்கொரு தடையின்றா
லோது கென்றலுஞ் சடாயு மற்றுவப் பொடுபணிந்து
சாது மாமறைத் தலைவ நின்னிரு சரண்சார்ந்தேன்
போது மேயநின் னடித்த லம்புணர் தலேவேண்டும்
35
763சிறையி லாதவென் பூசனை யேற்ற லிற்செழுந்தே
னுறைசெய் கொன்றையாய் சிறையிலி நாத னென்றொருபேர்
நிறைய நின்றனக் காக யானிய மித்ததீர்த்தத்
துறையின் மூழ்குவோர் தூய ராய்ப்பொலி வதுவேண்டும்
36
764இன்ன மூவகை வரமுந் தந்தரு ளெனவிரந்தா
னன்ன தாகென வருளு புமறைந் தனனமலன்
பின்ன ராவயிற் பெயர்ந்தி ராகவன் வரல்பேண
முன்னர் வந்தன னடந்த காரிய மெலாமொழிந்து
37
765பொத்தை யூன்பொதி புலையுடம் பொழித்த னன்பொலிந்து
மித்தை யாகிய பவஞ்ச வாழ்வனைத் தையும்வெறுத்து
நத்தை யேந்தினோன் முதலி யோர்நணு குதற்குரிய
சித்தை மேயினன் சிவானந்த போக மேதிளைத்தான்
38
766ஒற்றை மேருவில் வாங்கி முப்புரத் தெரியூட்டுங்
கற்றை வார்சடை மருத வாணரைக் கடவுளர்க
ளற்றை நாண்முதற் சிறையிலி நாத ரென்றறைவார்
பற்றை யார்மனு வெனப்படும் பகர்ப வர்க்கப்பேர்
39
767சடாயுதீர்த்தநீர்மூழ்குவோர்தவாவினைதணந்து
படாதபேரின்பவாரியுண்மூழ்குவர்பத்தி
விடாதபுள்புரிபூசைசொற்றனமொருவேந்தன்
கெடாதபூசைசெய்மாட்சிகேளெனச்சொலுஞ்சூதன்.
40


சடாயுபூசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 15 - க்கு, திருவிருத்தம் - 767.
------------------------

16. காங்கேயன்பூசைப்படலம் (768 - 798)

 

768அருண்முகத்தமைந்தநெஞ்சிற்பாண்டிநாடடங்கவாழ்வோ
னிருண்முகந்துண்டுமேற்செலிலங்கிலையலங்கல்வேலான்
பொருண்முகந்தெடுத்துவீசிப்புவியெலாம்புரக்குங்கையான்
வெருண்முகந்தொழியாவென்றிக்காங்கேயனெனுமோர்வேந்தன்.
1
769தாறுபாய்களிற்றானேற்றதரியலர்மகுடமேலா
லேறுபாய்பரியானெங்குமெதிர்ந்துசெலிவுளித்தேரான்
மாறுபாய்வயவர்வெள்ளமகிதலமுழுதும்போர்க்கப்
பாறுபாய்களத்துச்சென்றுபகைப்புறங்காணவல்லான்.
2
770செழுமணிப்பூணான்சார்ந்தவுயிர்க்கெலாஞ்செய்யுநீழன்
முழுமதிக்குடையானெல்லாக்கலைகளுமுற்றக்கற்றான்
பழுதில்வெண்ணீற்றுச்செல்வம்பாலிக்கும்பண்புமிக்கான்
றொழுதகுசிவமேமேலாம்பரமெனத்துணிந்தநீரான்.
3
771காமருகண்டதேவி ெஇனுநகர்கலந்துநாளு
மாமருமனைவிமக்கண்மலிதரவாழுநீரான்
பூமருவீசுமாலைப்புயாசலன்கடுஞ்சொலில்லான்
றேமருவடைந்தார்காட்சிக்கெளியவன்றிறத்தான்மிக்கான்.
4
772அனையவன்மதியான்மிக்கவமைச்சராதியர்தற்சூழ
நினைதருசெங்கோலோச்சிநீடுலகளிக்குநாளின்
வினையுறுவலியென்சொல்வாமேவுகோணிலைதிரிந்து
வனைதருமாரியின்றிவற்கடநிரம்பிற்றன்றே.
5
773பரவுசோதிடநூல்வல்லார்பற்பலர்தம்மைக்கூவி
யுரவுநீர்ஞாலத்தென்னோமழைபெயலொழிந்ததென்றான்
புரவுசேரளியாயாண்டுபன்னிரண்டொழிந்துபோனால்
விரவுநீர்பொழியுமேகமென்றனர்வேந்தன்சோர்ந்தான்.
6
774உற்றபல்லுயிருமந்தோவுணவின்றிவருந்துமேயென்
றற்றமிலரசன்வேறுகளைகணுமறியானாகிச்
சொற்றடுமாறவீழ்ந்துசோர்ந்தனன்சோராநின்ற
மற்றவனுயிருண்கூற்றின்வற்கடம்பரந்ததன்றே.
7
775கருமுகிலேட்டிலன்றிக்ககனத்துக்காண்பாரில்லை
யொருவிறம்பாணியன்றியுண்டிடும்பாணியில்லை
மருவுவெந்தாகநோயும்பசிநோயும்வருத்தலாலே
பொருவில்வெங்காமவேளும்போர்த்தொழிலொழிந்தானன்றே.
8
776உழுதொழின்மறந்தாரெல்லாவுழவருமுழன்றுவெம்போர்க்
கெழுதொழின்மறந்தாரெல்லாவீரருமெரியுட்டெய்வந்
தொழுதொழின்மறந்தாரெல்லாப்பனவறுஞ்சோறுசோறென்
றழுதொழின்மறந்தாரில்லையகலிடத்தெவருமம்மா.
9
777பூசைசெய்தன்றியொன்றும்புரிதராப்புந்தியோர்க்கு
மாசைதம்முயிர்போகாமற்காப்பதையன்றியில்லை
மாசையேவிகை்குஞ்சோரமரீஇப்புணர்மடந்தைமாரு
மோசைகூர்கற்பின்மிக்கமாதரொத்திருந்தாரண்றே.
10
778கமர்பலவுடையவாகிக்கடும்பணியுலகந்தோற்றி
யமர்பலவேரியெல்லாமறல்கவர்நசைமீக்கஐொண்டே
யிமிழ்முகிலினங்காள்வேட்கையிரிதரவொருங்குநீலி
ருமிழ்புனலென்றுகாண்போமென்றுவாய்திறத்தலொக்கும்.
11
779விரும்புசெஞ்சாலிமற்றைவெண்சாலியரம்பையிஞ்சி
கரும்புகள்விளையாநின்றகாமருகழனியெல்லாம்
வரம்புபோய்நின்னதென்னதெனக்கொளும்வழக்குமாறிக்
கரம்புகளாயவென்றாலுயிர்நிலைகரைதற்பாற்றோ.
12
780பாதலம்புகுதற்காயபாதையொன்றமைப்பார்போலப்
பூதலங்குடைந்துதண்டமாயிரமகழ்ந்துபோந்துங்
காதலம்புனல்கண்காணார்காணிலங்கவருமுன்னர்
மீதலம்பயிலும்வெய்யோன்வெப்பமுண்டொழிக்குமன்றே.
132
781நகர்வயினில்லந்தோறுநகுமடைப்பள்ளியெல்லாந்
தகரருமடுப்பினூடுதழைந்தனமுளைத்தவாம்பி
புகர்படுமாணைபல்லிபுகுந்தனமுட்டையிட்டு
நிகரறக்கிடக்குமேன்றானிகழ்த்துவதின்னுமென்னே.
14
782விழைதருகுளகிலாதுமெலிதருகளிநல்யானை
மழைபொழிதுவாரம்போலமதம்பொழிதுவாரமாகிக்
குழைதருதூங்கலாயுங்குறித்துரையத்தியாயும்
பிழைகண்முற்றுறுதோலாயுமொழிந்தனபெயர்தலற்றே.
15
783கடுவிசைமுரணிற்றாவுங்கவனவாம்பரிகளெல்லாம்
படுபுனலுணவோடற்றுப்பசித்தழல்வெதுப்பப்பட்டு
நெடுவிலாவெகும்புதோற்றிநெட்டுயிர்ப்பெறிந்துதேம்பி
முடுவல்போனாக்குநீட்டிமுயங்கினவியைமாதோ.
16
784குடம்புரைசெருத்தலாக்கள்கோதனமீனாவாகி
விடம்புரைகருங்கட்செவ்வாய்த்தெய்வமெல்லியலாரொத்த
கடம்புரைபறவையெல்லாங்கடுப்பொடுபறத்தலற்றுத்
தடம்புரைசடாயுவேபோற்றரைத்தலைநடந்தமாதோ.
17
785ஒருவர்மற்றரிதுபெற்றசிற்றமுதொருகலத்து
மருவவைத்துண்ணுங்காலைமனங்கொளார்மிச்சிலென்று
வெருவவந்தொருவரீர்ப்பர்விரைந்திருவரும்வந்தீர்ப்பர்
கருதருமிதனைநோக்கிக்கரந்துவெத்துண்பாராரும்.
18
786முன்னவர்வேதமோதுமுறைமையுமறந்தார்செங்கோன்
மன்னவர்படையெடுக்குமாட்சியுமறந்தார்நாய்க
ரென்னவர்துலைக்கோறூக்குமியற்கையுமறந்தார்மற்றைப்
பின்னவருழுதலென்னும்பெற்றியுமறந்தாரம்மா.
19
787காய்பசிதணிக்கவேண்டிக்காட்டகத்தூடுபுக்கு
மாய்தருவனைத்துநோக்கித்தழைகளுமாண்டவென்பா
ராய்தருமாயோன்முன்னாண்மண்முழுதள்ளியுண்டா
னேய்தருமுணவிலாதவித்தகுகாலத்தென்பார்..
20
788இன்னணமுயிர்கள்சாம்பல்கண்டிரங்குறகாங்கேய
மன்னவன்றன்பண்டாரமன்னியநிதிகளெல்லா
முன்னரிதாகமொண்டுமொண்டுபல்லிடத்தும்வீசி
யன்னனும்வறியனானானாரினித்தாங்கவல்லார்.
21
789நிதியெலாமாண்டபின்னர்நெடுமணிப்பணிகளெனப்
பதியெலாம்விற்றுவிற்றுப்பாருயிரோம்பிவந்தான்
றுதியெலாப்பொருளும்விற்றுத்தோற்றபினியாதுசெய்வான்
றிதியெலாவுயிர்க்குஞ்செய்யுந்திருநெடுமாலைச்சார்ந்தான்.
22
790ஆண்டவனருளினாலேயலங்குமிந்நகரத்துள்ளாற்
காண்டகநிருதித்திக்கிற்கவின்றவோர்கோயில்கொண்டு
பூண்டநற்கருணையாலேபோற்றுவையுயிர்களெல்லா
மீண்டவந்தடுத்தவெய்யகலியிரித்திடாமையென்னே.
23
791என்றளியரசன்றாழ்ந்துவேண்டலுமிணர்த்துழாய்மா
னன்றுளமிரங்கியன்னான்காணமுன்னணுகிமன்னா
வொன்றுவெங்காலத்தீமைக்கியற்றலொன்றில்லையேனுஞ்
சென்றுநம்பிரானைத்தாழ்ந்துதெரியவிண்ணப்பஞ்செய்வோம்.
24
792வருதியென்றரசனோடுமருதமர்நீழன்மேய
பெருவிறலடிகட்சார்ந்துபெய்மலர்ப்பாதம்போற்றி
முருகமர்மாலைவேந்தன்முகிழ்த்தவற்கடத்தினாலே
யிருநிலத்துயிர்கள்சாம்புமெனப்பெருந்துயரத்தாழ்வான்.
25
793அன்னவன்றுயரந்தீரவாரருள்சுரத்தல்வேண்டு
மென்னரும்பரவிப்போற்றவிணர்மருதடியில்வாழு
முன்னவவென்றுபோற்றிமுகுந்தன்மிக்கிரத்தலோடுந்
தன்னருள்சரந்துமுக்கட்டம்பிரானருளிச்செய்வான்.
246
794மாயநீயிரந்தவாறேமன்னவற்கருளிச்செய்வோ
மாயவெங்கலியைத்தாங்குமளிதலைக்கொண்டுநம்பான்
மேயநீயின்றுதொட்டுக்கலிதாங்கியெனவிளம்புந்
தூயபேரொன்றுகோடியென்றனன்றெழுதான்மாலே.
27
795தொழுதுமானிருதித்திக்கிற்றோன்றுதன்கோயிலுற்றான்
பழுதுதீரன்றுதொட்டுக்கலிதாங்கிப்பகவனென்று
முழுதுலகவனையோதுமுழங்குமப்பெயர்சொல்வார்க
ளெழுதுசீர்த்தியராய்வெய்யகலியிரித்திருப்பரன்றே.
28
796அளிகிளர்திருமாலேகவண்ணல்காங்கேயனென்பான்
களிகிளர்நிருதிமூலைகலந்தொருநீர்த்தமாக்கித்
தெளிகிளரந்நீர்மூழ்கித்திப்பியநீறுபூசி
யொளிகிளருருத்திராக்கம்பூண்டெழுத்தைந்துமுன்னி.
29
797அன்னபுண்ணியநன்னீர்மொண்டமலனையாட்டியாட்டிப்
பன்னரும்வில்வமாதிப்பற்பலமலருஞ்சூட்டிச்
சொன்னபல்லுணவுமூட்டித்தொக்கபல்லுபசாரங்க
ளென்னவுமினிதுசெய்துதிருமுனரிறைஞ்சிநின்றான்.
30
798இன்னணம்பூசையாற்றியிலங்கிலைவேற்காங்கேய
மன்னவன்வருநாண்முக்கண்வானவன்மருதநீழன்
முன்னவனருளிச்செய்ததிறமினிமொழிவாமென்று
பன்னருஞ்சூதன்சொல்வான்சவுநகமுனியைப்பார்த்தே.
31


காங்யேன்பூசைப்படல முற்றிற்று.
ஆக படலம் - 16 - க்கு, திருவிருத்தம் - 798.
---------------------

17. பொன்மாரிபொழிந்த படலம் (799 - 835)

 

799வட்டவெண்குடைக்காங்கேயமன்னவன்றன்னாலாக்கப்
பட்டநீராட்டியாட்டிப்பரம்பரன்றன்னைப்பூசித்
திட்டமிக்குறுநாளோர்நாளருளுவதெந்நாளென்று
முட்டகலன்பினோடுமுன்னின்றுதுதிக்கலுற்றான்.
1
800வற்கடகாலமேலிட்டுயிரெலாமயங்கச்சாடி
யற்குதலுடையதாகவடியனேவருந்திச்சோர்வே
னொற்கமிலுணர்ச்சியாளர்க்குள்ளொளியாகிநிற்குஞ்
சிற்கனசொரூபவென்றோதிருவருள்செய்யுநாளே.
2
801உறுகலிவருத்தாநிற்கவுயிரெலாம்வாடநோக்கித்
தெறுவகையில்லேனாயசிதடனேன்வருந்துகின்றேன்
மறுவறதவத்தோருள்ளம்வயங்குபுமன்னாநிற்குஞ்
சிறுமருதூரவென்றோதிருவருள்செய்யுநாளே.
3
802வாவிமேன்மேலும்வந்துவற்கடம்வருத்தாநிற்கப்
பாவியேன்வருந்துகின்றேன்பளகிலாக்குணத்தோர்தம்மைக்
கூவியாட்கொள்ளுந்தெய்வக்குணப்பெருங்கடலேகண்ட
தேவிவாழ்பரமவென்றோதிருவருள்செய்யுநாளே.
4
803என்றுநெஞ்சுருகிநையவிருகணீரருவிபாய
நின்றுதன்வருத்தமோம்பனினைந்துவிண்ணப்பஞ்செய்யும்
பொன்றுதலில்லாவன்பற்கிரக்கமில்லாரேபோல
வொன்றும்வாய்மலராதையரிருந்தனருடைந்துபோனான்.
5
804போனவன்கிரகம்புக்குப்புந்திசெய்யுணவும்வேண்டா
னானவன்றரைமேல்வீழ்ந்துகிடந்தனனனையபோது
வானவனருளினாலேநித்திரைவந்ததாக
வூனவன்மயக்கந்தீர்ப்பான்கனவகத்துற்றானன்றே.
6
805நரைபொலிசிகைமுடிந்துநாலநெற்றியில்வெண்ணீறுந்
திரைபொலிமார்பிற்பூண்டதெய்வப்பூணூலுமல்க
வரைபொலிசழங்கற்பின்போக்காடையுத்தரீயத்தோடு
தரைபொலிதாளராகித்தண்டமொன்றூன்றிச்சென்றார்.
7
806விருத்தவேதியராய்ச்சென்றார்வேந்தர்கோன்முன்னநின்று
கருத்தமைதுயரமெல்லாங்காற்றுதிபெரியாளோடும்
வருத்தமொன்றின்றித்தெய்வமருதர்சிவம்யாங்கண்டாய்
பொருத்lமின்றுன்னைவாட்டிப்பொருகலிக்கின்றுதொட்டு.
8
807நிலவுநாமமர்வன்மீகநின்றொர்பொற்கொடிமேற்றோன்றுங்
கலவமற்றதையரிந்துகோடிநாடோறுநின்பாற்
கலவுவார்தமக்குநல்கக்காணுமென்றருளிவானோர்
பலவுபாயத்துங்காணாப்பரமனார்மறைந்துபோனார்.
9
808கற்றைவார்சடிலத்தையர்கனவில்வந்தருளிச்செய்த
வற்றைநாண்முதற்கொண்டியாருமவர்தமைவிரத்தரென்பார்
புற்றையார்பிரானோவென்றுபொருக்கெனவிழித்தான்வேந்த
னொற்றையாழியந்தேரோனுமொத்துடன்விழித்தானன்றே.
10
809அதிசயம்பயப்பமன்னன்சிரமிசையங்கைகூப்பி
மதிமகிழ்சிறப்பவான்றமந்திரர்முதலோர்க்கூவிப்
புதியதன்கனவுகூறிப்பொருக்கெனவெழுந்துசென்று
கதியருடெய்வமேன்மைச்சிவகங்கைகலந்துமூழ்கி.
11
810நித்திய கரும முற்றி நிறைந்துபே ரன்பு பொங்கச்
சத்திய ஞானா னந்தத் தனிப்பரஞ் சோதி வைகும்
பொத்திய திருவன் மீகத் தெதிர்புகுந் திறைஞ்சிக் கண்டான்
மெத்திய தேசு மிக்கோர் பொற்கொடி விளங்கா நிற்றல்.
12
811கனவிடை யையர் வந்து கட்டுரைத் திட்ட வாறே
நனவிடை நிரம்பக் கண்டு நயந்துகா ரேனக் கோடு
மனவிடை யமைத்தார் செய்த திருவருண் மதிக்குந் தோறப்
புனவிடை யாரைப் பல்காற் போற்றுவான் றுதிப்பான் மன்னன்.
13
812பூசைமுன் போலச் செய்து புற்றின்மேற் றோன்றா நிற்கு
மாசையங் கொடியை வாளா லரிந்துகைக் கொண்டு மாடத்
தோசையங் கழலான் சென்றா னற்றைநா ளுற்றோர்க் கெல்லா
மீசைபங் குடையான் றன்பே ரருணிகர்த் திருந்த தன்றே.
14
813வழிவரு நாளு முன்போல் வந்துபூ சித்துச் செம்பொன்
பொழிகொடி முன்னை நாள்போற் பொலிந்திருந் திடவ ரிந்து
கழிமகிழ் சிறப்பக் கொண்டு கலந்தவர்க் கிலையென் னாது
பழிதப வன்று நல்கும் படிநிறைந் திருந்த தம்மா.
15
814பற்பல நாளு மிந்தப் படியரிந் தரிந்தெ டுத்துப்
பொற்புற வருவோர்க் கெல்லாம் வறுமைபோக் கிடுவா னேனு
மற்புற வற்றைக் கன்றி மறுதினத் திற்க வாவும்
பெற்றிமற் றொழிந்த தின்றே யுயிர்க்கெனப் பெரிது முள்வான்.
16
815ஒருதினம் பண்டு போல வுற்றுவண் கொடியைப் பற்ற
மருதமர் முக்கண் மூர்த்தி மற்றவன் கவலை தீர்ப்பான்
கருதுபைங் கொடியை யுள்ளாற் செலுத்தினன் கவலை யோடு
வெருவுமுள் ளலைப்பப் பற்றி விடாதிழுத் தனன்பார் வேந்தன்.
17
816இழுத்தலும் புற்று விண்டு சிதர்ந்ததங் கிலிங்க மாய
முழுத்தசெஞ் சோதி தோன்ற முகிழ்த்தபொற் கொடியை விட்டே
யெழுத்தடந் தோளா னஞ்சி யிருகரங் குவித்து வீழ்ந்தான்
பழுத்தபே ரன்பன் காணும் படிவெளி வந்தா ரையர்.
18
817கனவகம் வந்தாற் போல நனவினுங் காட்சி நல்கும்
பனவரைக் கண்டு தாழ்ந்து பார்த்திபன் றுதித்து நின்றான்
றினகர கோடி யென்னத் திருவுருக் கொண்டு நின்ற
வனகமா மறையோர் பொன்பெ யெழிலியை நினைத்தா ரன்றே.
19
818நினைத்தலு மோடி வந்து நெஞ்சநெக் குருகித் தாழ்ந்து
நனைத்தடங் கொன்றை மாலை நம்பனே பணியா தென்னக்
கனைத்தமா முகில்காள் கண்ட தேவியி னெல்லை காறு
முனைத்தபொன் பொழுதி ராலோர் முகுர்த்தமென் றருளி னானே.
20
819இவ்வண்ணமருளிச்செய்தேயிலிங்கத்துண்மறைந்தானெம்மான்
வெவ்வண்ணவேலான்மிக்கவிம்மிதனாகிநின்றான்
செவ்வண்ணப்பெருமான்சொற்றதிருமொழிசென்னிமேற்கொண்
டவ்வண்ணப்புயல்களெல்லாமெழுந்துவானடைந்தமாதோ.
21
820வானகம்பரந்துநின்றேவளர்கண்டதேவியெல்லை
யானவைங்குரோசமட்டுமமைதரவொருமுகுர்த்த
மீனமில்செம்பொன்மாரியெல்லையில்லாதுபெய்த
தேனகமலர்பூமாரிதேவரும்பொழிந்தாரன்றே.
22
821புடவிபொன்னிறமேயென்பார்பொன்னெனாதென்னோவென்பா
ரிடவியபுவிமறைத்தவித்துணைச்செம்பொன்முற்றுந்
தடவியெங்கெடுத்துவந்தித்தண்முகில்பொழிந்ததென்பார்
மடவியல்வறுமைசெய்தவற்கடமொழிந்ததென்பார்.
23
822மன்னியபுகழ்க்காங்கேயன்வான்றவம்பெரியதென்பார்
மின்னியவனையானொக்கும்வேந்தருமுளரோவென்பார்
துன்னியவவன்செங்கோலேதூயசெங்கோல்காணென்பார்
பன்னியவவனேதெய்வம்படிக்குவேறில்லையென்பார்.
24
823வையகமாந்தரெல்லாமின்னணமகிழ்ந்துகூறச்
செய்யகோன்மன்னர்மன்னன்சேனையைக்காவலிட்டே
யையபொன்னடங்கவாரியமைந்ததென்மேருவென்ன
வெய்யவற்கடம்போய்நீங்கிவிலகுறக்குவித்துப்பார்த்தான்.
25
824மலையெனக்குவிந்தசெம்பொன்வளமுழுதமையநோக்கி
யிலையெனற்கிசையார்யாருமிரந்திடப்படுவோராகக்
கலையெனப்படுவவெவ்லாங்கற்றுணர்ந்தவருஞ்செல்வ
நிலையெனவாரிவாரிக்கொடுத்தனனிருபர்வேந்தன்.
26
825மிடிகெடமுகந்துசெம்பொன்வேந்தர்கோன்கொடுக்கும்போதே
படிகெடவருத்திநின்றபாவவற்கடகாலத்தின்
குடிகெடவெழுந்துகொண்மூகுரைகடலுண்டுவெய்யோன்
கடிகெடவிசும்புபோர்த்துக்கதிர்த்தவில்லொன்றுவாங்கி.
27
826மிடிபுரிகாலந்தன்னைவாள்கொடுவெட்டியாங்குக்
கடிபுரிதடித்துவீசிச்சளசளவென்றுகான்ற
படிபுரிகளிநல்யானைப்பரூஉப்புழைக்கானேர்தாரை
வெடிபுரியேரியாதிவெள்ளமாய்முடியமாதோ.
28
827விரம்புநீரெங்கும்போர்ப்பமென்பணையுழுதலாதி
யரும்புபஃறொழிலுமேன்மேன்மூண்டனவாதலாலே
யிரும்புலமெங்குஞ்செந்நெல்வெண்ணெலாதிகளுமீண்டக்
கரும்புபைங்கதலியாதிகஞலினபாண்டிநாடு.
29
828உரம்பொலிவறுமைநீங்கியொழிந்துசெல்வஞ்செருக்கி
வரம்பொலிபாண்டிநாடுவாழ்தரக்கண்டமன்ன
னிரம்பொலிநறுநீர்வேணிநின்மலனருளாவலிந்தப்
பரம்பொலிமகிழ்ச்சியெங்கும்பராயதென்றுவகைபூத்தான்.
30
829சிறுமருதூரின்மேயதெய்வநாயகர்க்குமன்பிற்
பெறுமொளிர்கருணைமேனிப்பெரியநாயகிக்கும்பாசந்
தெறுமொருகுஞ்சிதத்தாட்டிருநடராசருக்கு
மறுதியின்மற்றையோர்க்குமாலயமெடுக்கலுற்றான்.
31
830வானளவோங்குசெம்பொற்கோபுரம்வயங்குநொச்சி
யூனமில்கருவிலத்தமண்டபமுரையாநின்ற
வேனவுஞ்செம்பொனாற்செய்திலங்குபன்மணிகால்யாத்துக்
கூனல்வெஞ்சிலையானன்னாட்கும்பாபிடேகஞ்செய்து.
32
831குடைகொடிமுதலாயுள்ளவிருதும்பொற்குடமுன்னாக
மிடைபல்பாத்திரமுமோலியாதிவில்வீசுபூணு
மடைதருகனகவாடையாதிவட்டமும்பல்லூரு
முடைமதக்களிறுமாவுமெண்ணிலவுதவினானே.
33
832நித்தியவிழவுமுன்னாநிகழ்பலவிழவுஞ்செய்து
சத்தியஞானானந்தத்தனிப்பரஞ்சுடர்க்குயாரும்
பொத்தியவொளிர்பொன்மாரிபொழிந்தவரென்னும்பேரிட்
டொத்தியனகர்க்குஞ்செம்பொன்மாரியென்றுரைத்தானாமம்.
34
833பொலிதருசெம்பொன்மாரிபொழிந்தவர்திருமுன்னாக
வொலிதருகழற்கான்மன்னனெஞ்சியவொளிர்பொன்னெல்லா
மலிதரும்படிபுதைத்துவைத்தனன்கணங்கள்காத்து
நலிதருவருத்தமாக்குமாங்குநண்ணுநரையின்னும்.
35
834எண்ணருநாள்களிவ்வாறிருந்தரசாட்சிசெய்து
நண்ணரும்பொன்பொழிந்தகண்ணுதலருளினாலே
நண்ணருஞ்சிவலோகத்தைநண்ணிவீற்றிருந்தான்வானோர்
மண்ணருமகிழ்ச்சிபொங்கமலர்மழைசொரிந்தாரன்றே.
36
835போற்றுபொன்மாரியூரிற்காங்கேயன்பொலியமுந்நா
ளாற்றுநீர்படிவோர்யாருமரும்பெரும்போகத்தாழ்வார்
நீற்றுமாமுனிவசெம்பொன்பொழிந்தமைநிகழ்த்தினோமேற்
சாற்றுதுங்கேட்டியென்றுதவப்பெருஞ்சூதன்சொல்வான்.
37


பொன்மாரிபொழிந்தபடலம் முற்றிற்று.
ஆக படலம்-17-க்கு-திருவிருத்தம்-835
-------------------------

18. சிலைமான்வதைப்படலம் (836 - )

 

836பஞ்சுசேரடிபங்காருள்செய,
மஞ்சுகான்றகனகத்துண்மன்னவ
னெஞ்சுசெம்பொன்புதைத்திருக்கின்றசொல், 
விஞ்சுமானிலத்தெங்கும்விராயதே
1
837வடபுலத்தவன்வாய்ந்தபடையினா, 
னடல்மிகுத்தவனாழியவாவினான்
மடனுடைச்சிலைமானெனும்பேரினான், 
விடனொருத்தன்விழைந்திதுகேட்டனன்
2
838கேட்டபோதுகிளர்ந்தெழும்வேட்கையா,
னாட்டமார்கண்டதேவியைநண்ணி
யே, யீட்டரும்பொனெலாங்கவர்வாமெனா, 
வோட்டமாய்வருவான்படையோடரோ.
3
839வலத்துமிக்கவடபுலத்தான்வந்து, 
கலக்கும்வார்த்தைமுன்கண்டவர்கூறிடத்
தலத்துமேவியயாருமவன்றனை, 
விலக்குமாற்றலிலேமென்றுவெம்பினார்.
4
840என்னசெய்துயினியெனநாடியே, 
முன்னவன்றிருக்கோயிலைமுன்னினா
ரன்னமன்னவணங்கொருபாலுடைச், 
சொன்னமாரிபெய்தாரைத்தொழுதனர்.
5
841சம்புசங்கரதற்பரவற்புத, 
வெம்புமெங்கண்மெலிவைத்தவர்த்தருள்
வம்புசெய்யும்வடபுலத்தான்வந்துன், 
பம்புசெம்பொன்கொளாவகைபண்ணியே.
6
842என்றுகூறியிறைஞ்சிமுறையிட, 
வன்றுநாயகனாகாயவாணியா
லொன்றுமாறுரைப்பானொன்றுமஞ்சலீர், 
வென்றுமற்றவனாருயிர்வீட்டுவோம்.
7
843பின்னமில்லாப்பெரியசிறையிலி, 
சின்னமேயசிறியசிறையிலி
யென்னவாழ்நம்மிடபமிரண்டையு, 
முன்னமேவமுடுக்குவிடுமென்றான்.
8
844என்றசொற்செவியேற்றுமகிழ்ந்தனர், 
குன்றநேர்தருகுண்டையிரண்டையு
மன்றவையன்றிருமுன்வரவழைத், 
தொன்றநல்லுபசாரம்புரிவரால்.
9
845ஆட்டிநீரினரியவுணவெலா, 
மூட்டியப்பியுவப்புறுசாந்தந்தார்
சூட்டியங்கைதொழுதுபகைவனை, 
மாட்டிவம்மினென்றார்தலவாணரே.
10
846தலையசைத்துப்பயப்பயத்தாள்பெயர்த், 
திலையப்பிலமாலையிலங்குற
நிலையகாரிருள்கோட்டணிநீக்கிட, 
மலைபெயர்ந்தெனச்சென்றனமால்விடை.
11
847கோடுகொண்டுவன்மீகங்குதர்ந்துநாத், 
தோடுகொண்டிருதுண்டந்துழாவியே
மாடுகொண்டெழுவாஞ்சையனைத்துரீஇ, 
நீடுகொண்டகடுப்பொடுநேர்ந்தன.
12
848காலினாற்சிலர்தம்மைக்கலக்கிடும், 
வாலினாற்சிலராருயிர்மாய்த்திடும்
வேலினாற்பொலிவீரர்தம்முட்சுவைப், 
பாலினாற்பொலிபுல்லங்களென்பவே.
13
849பூட்டிநாண்விற்பொருகணையேவிட, 
வீட்டியன்னவையாவும்விரைந்தெழீஇக்
கோட்டினாற்குத்திச்சாய்த்துக்குளிறிடு, 
மீட்டினாற்பொலிபுல்லங்களென்பவே.
14
850இன்ன வாறுப டையினை யீறுசெய் 
தன்ன வெஞ்சிலை மானை யடர்ந்தெழுந்
துன்ன வாமவ னேதி யொருங்குமேற் 
றுன்ன வாலின டித்துத் துடைத்தன.
15
851கல்லி னைப்பொடி கண்டிடு தோளினான்
வில்லி னைப்பொடி காணமி தித்தவன்
மல்லி னைப்பொடி தோற்றி வயங்கிளர்
புல்லி னைப்பொடி பூணி முழங்கின.
16
852ஆய காலைய வன்சினங் கொண்டுநேர்
பாய வேறுக ளும்மெதிர் பாய்ந்திடத்
தீய மார்பிற் றிணிமருப் பாழ்ந்தன
போய தாலவ னாவிபு லம்பியே.
17
853மீண்டு நாயகன் கோயிலை மேவின
வாண்டி யாரும திசய மெய்தின
ரீண்டு வான்சிவ கங்கையி ரும்புகழ்
வேண்டு மாநவில் வரமெனுஞ் சூதனே.
18


சிலைமான்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 18 - க்கு - திருவிருத்தம் - 853.
-------------

19. சிவகங்கைப்படலம் (854- 868)

 

854திருவளர் சிறப்பு வாய்ந்த சிவகங்கை மூழ்கு வோர்க்கு
மருவளர் தரும நல்கும் வளத்தினாற் றரும தீர்த்த
முருவள ரருத்த நல்கு முண்மையா லருத்த தீர்த்தங்
கருவளர் காம நல்கு மேதுவாற் காம தீர்த்தம்.
1
855பெறவரு முத்தி நல்கும் பெற்றியான் முத்தி தீர்த்த
முறலருந் தீர்த்த மெல்லா முறுதலிற் சறுவ தீர்த்த
மறவரு ஞான மேன்மேல் வளர்த்தலான் ஞான தீர்த்தஞ்
செறலரு மிட்ட மெல்லாஞ் செறித்தலி னிட்ட தீர்த்தம்.
2
856குட்டநோய் தொழுநோய் பொல்லாக் குன்மநோய் விழிநோய் வெய்ய
கட்டநோய் நெய்த்தோ ராதி காலுநோ யிரக்க முற்றும்
விட்டநோ யென்று யாரும் விளம்புநோ யனைத்து மாய்ந்து
பட்டநோ யாகு மந்தப் பட்டநீர் மூழ்கு வார்க்கே.
3
857பெயர்வரி தாய மண்ணை பிரமராக் கதம்வெம் பூத
மயர்வரு மனைய தீர்த்த மாடினோர் தமைவிட் டேகு
முயருறு மனைய தீர்த்தத் தொருநுனி பட்ட போது
மயருறு பாவ மெல்லாம் வயங்கழ லிட்ட பஞ்சாம்.
4
858அன்னமா தீர்த்தக் கோட்டிற் றென்புலத் தவருக் காற்று
நன்னர்வான் செய்கை யெல்லா நயந்தனர் நாடி யாற்று
லென்னபா தகரே யேனு மெய்துவர் சுவர்க்க மாக
தன்னமு மடையா ரெல்லாப் போகமுந் தழுவி வாழ்வார்.
5
859ஆண்டுயர் தோற்ற மாதத் தோற்றமீ ரயனம் யாரும்
வேண்டுமீ ருவாவி யாள மதிகதிர் விழுங்கு கால
மீண்டுநற் சோம வார மிவைமுத லியநா ளன்பு
பூண்டதிற் படிவோ ரெய்தும் புண்ணிய மளவிற் றாமோ.
6
860அலர்செறிகற்பநாட்டினமர்ந்துசெயரசுவேண்டின்
மலர்மிசையிருக்கைவேண்டின்மூசுணக்கிடக்கைவேண்டி
னுலர்வவென்றிவற்றையெள்ளியுறுபெருவாழ்க்கைவேண்டிற்
பலர்புகழனையதீர்த்தம்படிந்தினிதாடல்வேண்டும்.
7
861அன்னநீரகத்துதித்ததவளைமீனாதியாய
வென்னவுங்கயிலாயத்தையெய்திவீற்றிரந்துபன்னாட்
பின்னரத்தலத்தேவந்தோர்பெறலரும்பிறவியுற்று
நன்னர்மெய்ஞ்ஞானம்பெற்றுநம்பிரான்பதமேசாரும்.
8
862புண்ணியம்பயக்குநாளிற்பொங்குமத்தீர்த்தமூழ்கிக்
கண்ணியமருதவாணர்கழலடிக்கன்பராய
தண்ணியமறையோர்மற்றைச்சாதியோரெவர்க்குங்கையி
னண்ணியசெம்பொனாதிநல்குமாதவத்தின்மிக்கார்.
9
863மனைமகவாதியெல்லாச்சுற்றமுமருவவாழ்ந்து
கனைகடலுலகநீத்துக்கற்பகநாடுபுக்குப்
புனைபெரும்போகமார்ந்துபுண்ணியனருளாலீற்றிற்
றனைநிகர்சிவலோகத்திற்சார்ந்துவாழ்ந்திருப்பரன்றே.
10
864விரிதிரைபரப்புங்கங்கைகாளிந்திவிருத்தகங்கை
புரிதருயமுனைகண்ணவேணிபொன்பொலிகாவேரி
யிரிதலில்பொரநையாதியெய்துபுபன்னாண்மூழ்கி
னுரியபேறனையதீர்த்தத்தொருதினம்படியினுண்டாம்.
11
865பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தெவருஞ்சென்று
சொற்பொலியனையதீர்த்தந்துளைகமுற்றாதேயென்னி
லற்புறவரவழைத்தாவதுபடிதருதல்வேண்டு
மற்பொலியதுவுமுற்றாதென்னின்மற்றுரைப்பக்கேண்மோ.
12
866சாற்றுமந்நீரிற்றோய்ந்ததவமுடையரைக்கண்டேனும்
போற்றுதல்வேண்டுமன்னாரரியரேற்புகலத்தீர்த்த
மேற்றவழ்காற்றுவந்துமேனியிற்படுமாறேனு
மாற்றுதல்வேண்டும்போகமாதிகள்விரம்பினோரே.
13
867மன்னியகதிரோன்றீர்த்தமதியவனியற்றுதீர்த்தம்
பன்னியசடாயுதீர்த்தம்பரவுகாங்கேயன்றீர்த்த
மன்னியபிரமனாதிமூவரும்புரிந்ததீர்த்த
நன்னியமத்தமேன்மைநவின்றனமுன்னங்கண்டாய்.
14
868எண்ணரும்புகழ்சாறேவியியற்றியவனையதீர்த்தக்
கண்ணரும்பெருமையாரேகணித்தெடுத்துரைக்கவல்லார்
பண்ணருந்தவத்தினாரேபற்றமத்தலத்தின்மேன்மை
விண்ணருமவாவுநீரதறியெனவிளம்புஞ்சூதன்.
15


சிவகங்கைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 19- க்கு திருவிருத்தம். 868
-----------------

20. தலவிசேடப்படலம். (869-884)

 

869பார்கெழுகயிலைமேருபருப்பதம்வாரணாசி
சீர்கெழுதிருக்காளத்திதிருவாலங்காடுகாஞ்சி
யேர்கெழுமுதுகுன்றண்ணாமலைகழுகிருக்குங்குன்ற
மார்கெழுதில்லைகாழியணியிடைமருதூராரூர்.
1
870ஆலவாய்திருக்குற்றாலமணியிராமீசமின்ன
சீலமார்தலங்களுள்ளுஞ்சிவபிராற்கினியதாய
மூலமாந்தலமாயெல்லாவளங்களுமுகிழ்ப்பதாயெக்
காலமுமுளதாயோங்குதலங்கண்டதேவியொன்றே.
2
871புண்ணியமுதல்வியென்னும்புவனங்களீன்றதாயே
நண்ணியவிருப்பின்மேவிநற்றவம்புரிந்தாளென்னி
லெண்ணியவனையதானம்போல்வதொன்றினியுண்டென்று
கண்ணியவமையுங்கொல்லோகரையுமுப்புவனத்துள்ளும்.
3
872உலகெலாமீன்றசெல்வியுறுதவம்புரிந்ததன்றி
யலகிலத்தவத்தின்பேறாவையர்பாலளவிலாது
நிலவுபல்வரமுங்கொண்டுநிரப்பினண்மேலுமென்னிற்
குலவுமத்தலத்துக்கொப்பொன்றுளதெனல்கூடுங்கொல்லோ.
4
873மிடிதவிர்த்தருளாயென்றுவேண்டிடுமடியார்க்கென்றும்
படியில்பொற்காசுமுன்னாப்பலவளித்திட்டதன்றி
நெடியபொன்மாரிபெய்ததுண்டுகொனெடுநீர்வைப்பி
லொடுவிலத்தலத்திற்கொப்பென்றொருதலஞ்சொல்லப்போமோ.
5
874அன்னமாதலத்திலாதிசைவர்களமருமாறும்
பன்னகாபரணனன்பிற்பனலர்மற்றுள்ளோராய
வென்னருமமருமாறுமிடஞ்சமைத்துதவுவோரு
நன்னுமற்றவர்க்குவேண்டுமடைமுதல்வழங்குவோரும்.
6
875சத்திரமியற்றியன்னதானஞ்செய்திடுகின்றோரு
மொத்தியன்மடங்களாக்கிமுனிவருக்குதவுவோரு
மெத்தியபொழிலுண்டாக்கிவெள்விடைப்பெருமாற்கென்று
பத்தியினுதவுவோரும்பழனங்கணல்குவோரும்.
7
876திருமுடியாட்டுமாறுதிருந்துபால்பொழியாநிற்கும்
பெருமடித்தலத்தினாக்கள்பேணிநன்குதவுவோரு
மருவியகிலமாயுள்ளமண்டபமதின்முன்னாய
பொருவில்பற்பலவுநன்குபொலிதரப்புதுக்குவோரும்.
8
877திருவிழாச்சிறப்பிப்போரும்பூசையைச்சிறப்பிப்போரு
மருவியவேனிற்காலம்வளங்கெழுதண்ணீர்ப்பந்தர்
பொருவரவைக்கின்றோருநந்தனம்பொலியச்செய்து
திருவமர்பள்ளித்தாமஞ்சாத்திடல்செய்கின்றோரும்.
9
878இன்னவர்பலருமண்ணிலிருங்கிளைசூழவாழ்ந்து
பன்னருஞ்சுவர்க்கமேவிப்பற்பலபோகமார்ந்து
பின்னர்நம்பெருமான்செய்யும்பேரருட்டிறத்தினாலே
யன்னவன்சிவலோகத்தையடைந்துவாழ்ந்திருப்பரன்றே.
10
879பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தறஞ்செய்வோர்க
ளற்பதம்பயவாநிற்குமத்தலமடைந்துசெய்யி
னற்பயன்மேருவாகுநவிலணுவளவேயேனுங்
கற்பனையன்றீதுண்மைகரிசறுத்துயர்ந்தமேலோய்.
11
880இத்தகுபுராணத்தாங்காங்கிசைத்தனமனையதானத்
துத்தமவிசேடமெல்லாமுரைத்திடமுற்றுங்கொல்லோ
சத்தறிவின்பரூபத்தனிமுதல்சரணஞ்சார்ந்த
சுத்தமெய்த்தவத்தோயென்றுசொற்றனன்சூதமேலோன்.
12
881சாற்றருமகிழ்ச்சிபொங்கச்சவுநகமுனிமுன்னானோர்
மாற்றருந்தலத்துச்சூதமாமுனிபாதம்போற்றி
யாற்றருமகமுமுற்றியனைவருமெழுந்துபோந்து
சேற்றருநறுநீர்வாவிச்சிறுமருதூரையுற்றார்.
13
882தெளிதருநன்னீராயசிவகங்கையாதித்தீர்த்தங்
களிதருசிறப்பின்மூழ்கிமருதடிகலந்துளானை
நளிதருகருணைவாய்ந்தபெரியநாயகியைப்போற்றி
யளிதருமுவகையோராய்நைமிசமடைந்துவாழ்வார்.
14
883பழுதகல்கண்டதேவிப்புராணத்தைப்படிப்போர்கேட்போ
ரெழுதுவோரெழுதுவிப்போரிரும்பொருளாய்வோர்சொல்வோர்
முழுதமைசெல்வத்தாழ்ந்துமுனிவரும்போகமாந்திப்
பொழுதுபற்பலதீர்ந்தீற்றிற்புண்ணியனடியேசார்வார்.
15
884வேறு.
சீர்பூத்தபொன்மாரிசிறுமருதூரெனுங்கணடதேவிவாழ்க
பார்பூத்தவனையதலபாலனஞ்செய்வணிகரெல்லாம்பரவிவாழ்க
கார்பூத்தகுழற்செவ்வாய்ப்பெரியநாயகியம்மைகருணைவாழ்க
வேர்பூத்தபொன்மழைபெய்தவர்மணிமன்றெடுத்தபொற்றாளென்றும்வாழ்க.
16


தலவிசேடப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 20 க்கு திருவிருத்தம் - 884.
-----------------------

கண்டதேவிப்புராணம் முற்றிற்று.

 

Related Content

உண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)

உறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

கோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய

சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது

சுப்பிரமணியதேசிகர் மாலை