logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா

ஸ்ரீ ஹரதத்தர் 24 காரணங்கள் சொல்லி 
சிவபரத்வம் ஸ்தாபித்தருளிய

Sloka Panchakam

ஆசிரியர்: ஹரதத்தர் (மூலம்) சிவஞான ஸ்வாமிகள் (தமிழில்)

(தமிழில்: திருவையாறு அண்ணாஸ்வாமி சிரெளதிகள்)

பஞ்சரத்ன சுலோகங்கள் (PDF file)

குறிப்பு: காயத்ரீ மந்த்ரத்தில் 24 அக்ஷரங்கள் அமைத்திருக்கின்றன. காயத்ரீ வல்லபத்வாத் என்று ஆரம்பிக்கும் இந்த பஞ்சரத்ன சுலோகங்களில் 24 காரணங்கள் சொல்லி, சிவோத் கர்ஷம் பாடியிருக்கிறார்.


(1) 
காயத்ரீ வல்லபத்வாத் தசரததனய ஸ்தாபிதாராதி தத்வாத் 
 
செளரே: கைலாஸ யாத்ரா வ்ரத முதிததயா அபீஷ்ட  
 
                           ஸந்தான தானாத் | 
 
நேத்ரேண ஸ்வேன ஸாகம் தசசத கமலை: விஷ்ணுனா பூஜிதத்வாத் 
 
தஸ்மை சக்ர ப்ரதானாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || 
 
  
(2) 
கந்தர்ப் பத்வம்ஸகத்வாத் கரள கபளனாத் காலகர்வா பஹத்வாத் 
 
தைதேயாவாஸபூத த்ரிபுர விதலனாத் தக்ஷயாகே ஜயித்வாத் | 
 
பார்த்தஸ்ய ஸ்வாஸ்தர தானாத் நரஹரிவிஜயாத் மாதவே ஸ்த்ரீசரீரே 
 
சாஸ்துஸ் ஸம்பாத கத்வாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || 
 
(3) 
வாராணஸ்யாம் ச பாராசரி நியமிபுஜ ஸ்தம்பனாத் ப்ராக் புராணாம் 
 
ப்ரத்வம்ஸே கேசவேனா ச்ரித வ்ருஷவபுஷா தாரித  
 
                           க்ஷ்மாத லத்வாத் | 
 
அஸ்தோகர் ப்ரம்ம சீர்ஷை: அனிசகல க்ருதாலங்க்ரியா பூஷிதத்வாத் 
 
தானாத் ப்ரக்ஞான முக்த்யோரபி ச பசுபதி: ஸர்வதேவ  
 
                               ப்ரக்ருஷ்ட: || 
 
  
 
(4) 
பூமெள லோகைரனேகை: ஸதத விரசிதாராதிதத்வாத் அமீஷாம் 
 
அஷ்டைச்வர்ய ப்ரதானாத் தசவித வபுஷா கேசவேனாச்ரி  
 
                                                   தத்வாத் | 
 
ஹ  ம்ஸ க்ரோடாங்க தாரி த்ருஹிண முரஹரான் விஷ்ட 
 
                                சீர்ஷாங்க்ரிகத்வாத்  
 
ஜன்மத்வம்ஸாத் யபாவாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || 
 
(5) 
வைசிஷ்ட்யே யோனி பீடாயித முரரிபுச்லிஷ்ட பாவேன சம்போ: 
 
ஸஸ்த்ரீ கார்த்த ப்ரதீகாயித ஹரிவபுஷா ஆலிங்க தத்வேன  
 
                                      யத்வா | 
 
அப்ராதான்யாத் விசிஷ்டாத்வய ஸமதிகமே தானவானா மராதே: 
 
சம்போருத்க்ருஷ்ட பாவாதபி ச பசுபதி: ஸர்வதேவ ப்ரக்ருஷ்ட: || 
 
 
 
இந்த பஞ்சரத்ன சுலோகங்களுக்கு  
 
ஸ்ரீ பாஷ்யகாரராகிய மாதவ சிவஞானஸ்வாமிகள் 
 
அருளிச் செய்த பஞ்சரத்ன மொழி பெயர்ப்பு 
 
ஸ்ரீ பாஷ்யம் முதல் ஸூத்ரம் இரண்டாவது  
 
அதிகரண வுரை. 
 
  
 
உயர் காயத்திரிக் குரிய பொருளாதலிற் 
 
றசரதன் மதலைத் தாபித் தேத்தலிற் 
 
கண்ணன் கயிலையி னண்ணி நின்றிரப்பப் 
 
புகழ்ச்சி யினமைந்த மகப் பேறுதவலிற் 
 
  
 
றனாது விழியுட னொராயி ரங்கமலப் 
 
புது மலர் கொண்டரி பூசனை யாற்றலி 
 
னாங்கவர்க் கிரங்கி யாழி யீந் தருடலி 
 
னைங்கணைக் கிழவனை யழல்விருந் தாக்கலி 
 
  
 
னமைப் பருங் கடுவிட மமுது செய்திடிதலிற் 
 
றென்றிசைத் தலைவனைச் செகுத்துயிர் பருகலி 
 
னவுணர் முப்புற மழியவில் வாங்கலிற் 
 
றக்கன் வேள்வி தகர்த்தருள் செய்தலின் 
 
  
 
தனஞ்சயன் தனக்குத் தன்படை வழங்கலின் 
 
மானுட மடங்கலை வலிதபக் கோறலின் 
 
மாயோன் மகடூஉ வாகிய காலைத் 
 
தடமுலை திளைத்துச் சாத்தனைத் தருதலின் 
 
  
 
கங்கைசூழ் கிடந்த காசிமால் வரைப்பிற் 
 
பொய்புகல் வியாதன் கைதம் பித்தலின் 
 
முப்புற மிறுப்புழி முகுந்தப் புத்தேள் 
 
மால்விடையாகி ஞாலமொடு தாங்கலி 
 
  
 
னயன் சிரமாலை யளவில் வணிதலின் 
 
ஞானமும் லீடும் பேணினற் குதவலின் 
 
னாழ்கடல் வரைப்பி னான்றோ ரனேக 
 
ரன்புமீ தூர வருச்சனை யாற்றலி 
 
  
 
னான்கிரு செல்வமு மாங்கவர்க் கருடலி 
 
னையிரு பிறப்பினு மரியருச் சித்தலி 
 
னிருவரு மன்னமு மேனமு மாகி 
 
யடிமுடி தேட வழற் பிழம்பாகலிற் 
 
  
 
பிறப்பிறப் பாதி யுயிர்க்குண மின்மையிற் 
 
பசுபதிப் பெயரிய தனிமுதற் கடவு 
 
ளும்பர்க ளெவர்க்கு முயர்ந்தோ 
 
னென்பது தெளிக வியல்புணர்ந் தோரே. 
 

குறிப்பு:

பஞ்சரத்ன சுலோகங்களில், முதல் நான்கு சுலோகங்களில் சொல்லப்பட்ட 22 காரணங்கள் தான் இந்த மொழி பெயர்ப்பில் அமைந்திருக்கின்றன. ஐந்தாவது சுலோகத்திலுள்ள இரண்டு காரணங்களையும் பெரியோர்களிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமென்பது ஸ்ரீ சிவஞான ஸ்வாமிகளின் அபிப்பிராயம். ---------(தி.வி.க)

மேற்படி 22 காரணங்களின் விவரம்

  1. காயத்ரீ மந்த்ர ப்ரதிபாத்யன் பரமேச்வரன்.
  2. தசரத புத்ரனான ஸ்ரீராமர் (விஷ்ணுவின் அவதாரம்) ராவணனைக் கொன்ற ஹத்தி தோஷம் போவதற்காக ராமேச்வரத்தில் சிவலிங்க ப்ரதிஷ்டை செய்து பூஜை செய்தார்.
  3. விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் பரமேச்வரனைக் குறித்துத் தவம் செய்து புத்ரபாக்யம் பெற்றார்.
  4. ஸாக்ஷாத் விஷ்ணுவே நித்தம் ஆயிரம் தாமரை மலர்களால் ஈச்வரனை அர்ச்சித்துப் பூஜை செய்துவர, ஒரு நாள் ஈசனருளால் ஒன்று குறைய (மறைய) தன் கண் மலரை எடுத்து அர்ச்சித்து பூஜையை முடித்தார்.
  5. அப்படி பூஜை செய்த விஷ்ணுவிற்குப் பரமேச்வரன் தர்சனம் கொடுத்து புண்டரீகாக்ஷன் என்ற பெயரைக் கொடுத்து, அவர் வேண்டினப்ரகாரம் சத்ரு ஸம்ஹாரம் செய்யும் சக்ராயுதமும் கொடுத்தருளினார்.
  6. மன்மதனை எரித்தார். (பிறகு பிழைத்து எழுந்திருக்கவும் செய்தார்).
  7. ஆலகால விஷத்தை ஏற்று விஷ்ணுப்ரம்மாதிகளையும், இதர தேவதைகளையும், ஸகல ஜீவராசிகளையும் ரக்ஷித்தார்.
  8. காலனை உதைத்து அவன் கர்வத்தையடக்கினார். (பிறகு ஈச்வரனே காலனை உயிர்ப்பித்தார்).
  9. பசுக்களான விஷ்ணு ப்ரம்மாதிகளால் செய்ய முடியாத த்ரிபுரஸம்ஹாரம் கேவலம் ஸங்கல்ப்பத்தினால்-நினைத்த மாத்ரம் செய்தார்.
  10. வீரபத்ரராகத் தோன்றி தக்ஷயாகத்தை யழித்து அதில் ஸம்பந்தப்பட்ட விஷ்ணு முதலானவர்களை தண்டித்தார்.
  11. பார்த்தனுக்குப் பாசு பதாஸ்த்ரம் அருளினார்.
  12. சரபாவதாரம் எடுத்து ந்ருஸிம்மத்தை ஓடுக்கினார்.
  13. ஸ்த்ரீ ரூபமெடுத்த விஷ்ணுவின் கர்ப்பத்தில் சாஸ்தா பிறக்கும்படி செய்தார்.
  14. காசியில் விச்வேசர் ஸந்நிதியில் கோவிந்தனைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை யென்று கைகளைத் தூக்கி அழுத்தமாகச் சொல்லத் துணிந்த வ்யாஸரின் கைகளும் நாக்கும் ஸ்தம்பித்தன. (நந்திகேசரின் ஸூங்காரத்தினால்).
  15. த்ரிபுர ஸம்ஹாரத்துக்குமுன் பூமியான ரதத்தில் ஈச்வரன் ஆரோஹணிப்பவர் போல் ஒரு காலை வைக்க, ரதம் தவிடு பொடியானபோது-வ்ருஷப ரூபமாக ஈச்வரனைத் தாங்க முயன்ற விஷ்ணுவிற்குத் தன்னைத் தாங்கி நிற்கும் சக்தியருளி, விஷ்ணுவின் வேண்டுகோளின்படி அவர் ரிஷப ரூபத்தையும் தனக்கு உகந்த வாகனமாக ஏற்றுக் கொண்டு அனுக்ரஹித்தார்.
  16. அளவில்லாத ப்ரம்மாவின் சிரஸ்களை மாலையாகத் தரித்திருக்கிறார்.
  17. ஞானத்தையும், முக்தியையும் கொடுப்பவர் பரமேச்வரனே.
  18. எல்லோரும் பரமேச்வரனைப் பூஜித்திருக்கிறார்கள்; அவர் யாரையும் பூஜித்ததில்லை.
  19. எல்லாருக்கும் அஷ்டைச்வர்யங்களையும், பதவிகளையும் நல்கினவர் பரமேச்வரன் தான்.
  20. பத்து அவதாரங்களிலும், விஷ்ணு ஈச்வரனைப் பூஜித்திருக்கிறார்.
  21. ப்ரம்மவிஷ்ணுக்கள் லிங்கோத்பவ மூர்த்தியின் முடியையும், திருவடிகளையும் தேடிக்காண முடியாமல் எய்த்தார்கள்.
  22. பிறப்பு, இறப்பு, இல்லாதவர் பரமேச்வரன் ஒருவரே. சுலோகத்தில் ஜன்மத்வம்ஸாதி யென்றும், மொழிபெயர்ப்பில், பிறப்பு இறப்பாதி யென்றும் சொல்லப்பட்டிருக்கிறது காண்க. அதாவது ஜனனாதி மாறுதல்கள் ஆறு. பிறத்தல், வ்ருத்தியாதல், ப்ரணாம மடைதல், குறைதல், அழிதல், இறத்தல், உயிர்களுக்குள்ள இந்த ஆறு விகாரங்களும் பரமேச்வரனுக்கு இல்லை.
  23. ----------
  24. ----------

This file was last revised on 05 May 2007

Related Content

அரிகரதாரதம்மியம் - தமிழ்ப் பாடல் உருவில்

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-1

சுருதி ஸூக்தி மாலா - பகுதி-2

சுருதி ஸூக்தி மாலா 1-50

சுருதி ஸூக்தி மாலா 51-100