logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஈச்வர குரு த்யானங்கள்

 

 

ஈச்வர குரு த்யானங்கள் (PDF file)  

 

விநாயகர்

குணாதீத மாத்யம் சிதானந்தரூபம்

     சிதாபாஸகம் ஸர்வகம் ஞானகம்யம் |

முனித்யேய மாகாசரூபம் பரேசம்

     பரப்ரம்மரூபம் கணேசம் பஜேம ||

 

திகட சக்கரச் செம்முக மைந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட   சக்கர வின்மணி யாவுரை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

 

ஸுப்ரமண்யர்


ஷட்வக்த்ரம் சிகிவாகனம் த்ரிணயனம்

     சித்ராம்பராலங்க்ருதம்

சக்திம் வஜ்ரமஸிம் த்ரிசூலமபயம்

     கேடம் தனு : சக்ரகம் |

பாசம் குங்குடமங்குசம் ச வரதம்

     ஹஸ்தைர் ததானம் ஸதா

த்யாயேத் ஈப்ஸித ஸித்திதம் சிவஸுதம்

     ஸகந்தம் ஸுராராதிதம் ||

 

 

மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி

மாவடிவைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்

சேவலும் மயிலும் போற்றி திருக்கை வேல் போற்றி போற்றி

 

கற்பகாம்பிகை


கம்ஸபுரீச்வரீம் கெளரீம் சிவஞான ப்ரதாயினீம் |

ஜன்மக்லேச நிவர்த்யர்த்தம் வந்தேஹம் கல்ப்பகாம்பிகாம் ||

 

மீனாக்ஷிதேவி


ஸ்ரீ வித்யாம் சிவ வாமாபாகநிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீ சக்ராங்கித பிந்து மத்யவஸதீம் ஸ்ரீமத் ஸபா நாயிகாம் |

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன் மோகினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாரரம் நிதிம் ||

 

அம்பிகை துதி


எழிலுறு வைகுந்தமதி லேய்ந்தவனே பரமென்ன

     விசைப்போர் சிந்தை

வழியிலுறு மகந்தையுடன் வாழ்நாளு மகன்றொழிய

     வலிய பொல்லா

மொழியதனா லரிமகனை யிறக்குமா றுரைசெய்த

     முகின்மென் கூந்தற்

பழிதபுநல் லுமையவடன் வனஜமல ரடியிணையைப்

     பணிந்து வாழ்வாம்.                         [பானுகவி]

 

பரமேச்வரன் துதி


அங்கணா போற்றி வாய்மை யாரணா போற்றி நாக

கங்கணா போற்றி மூலகாரணா போற்றி நெற்றிச்

செங்கணா போற்றி யாதிசிவ பரஞ்சுடரே போற்றி

எங்கணாயகனே போற்றி யீறிலா முதலே போற்றி.

 

ஸ்ரீ அக்னீச்வரர்


பரவு புகழ் சோணாட்டிற் பலாசவனத் தமர்ந்துயிர்கட்

கிருளடருந் துயரொழிப்பா னெல்லையிலா தெழுந்தபெருங்

கருணை திரு வடிவான கற்பகநா யகியொருபால்

மருவவள ரக்னீச் சுரர் மலர்த்தா ளிணைபோற்றி.

 

தக்ஷிணாமூர்த்தி


ஸ்படிக ரஜதவர்ணம் மெளக்திகீம் அக்ஷமாலாம்

அம்ருத கலசவித்யா ஞானமுத்ராம் கராக்ரே |

த த த முரக கக்ஷ்யம் சந்த்ரசூடம் த்ரிணேத்ரம்

வித்ருத விவிதபூஷம் தக்ஷிணாமூர்த்திமீடே ||

ஆல்வருக்கந் தனிலுயர்ந்த வடநிழற்கே

     தென்முகங்கொண்டு, அறவோராய

நால்வருக்கு ளிருவருக்கு மொருவருக்கு

     நவின்றருளி நவிலொணாத

நூல்வருக்க மொருவருக்கு நுவலாம

     னுவன்றானை நுதற்கண்ணானைப்

பால்வருக்கைக் கனியையருட் பசுந்தேனைப்

     பரவாமற் பரவல் செய்வாம்.

நடராஜர் துதி


த்யாயேத் கோடி ரவிப்ரபும் த்ரிணயனம் சீதாம்சு கங்காதரம்

தக்ஷாங்க்ரி ஸ்தித வாமகுஞ்சித பதம் சார்தூல சர்மாம்பரம் |

வன்ஹி டோல கராபயம் டமருகம் வாமே சிவாம் ச்யாமளாம்

கல்ஹாராம் ஜபஸ்ருக்சுகாம் கடிகராம் தேவீம் ஸபேசம் பஜே ||

 

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதிய னம்பலத் தாடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

 

நந்தி தேவர் துதி


விப்ராணம் பரசும் ம்ருகம் கரதலை ரீச ப்ரணாமாஞ்சலிம்

பஸ்மோத்தூளன பாண்டரம் சசிகலா கங்காகபர்தோஜ்ஜ்வலம் |

பர்யாய த்ரிபுராந்தகம் ப்ரமதப : ச்ரேஷ்டம் கணைர் வந்திதம்

ப்ரம்மேந்த்ராச்யுத பூஜிதாங்க்ரி கமலம் ஸ்ரீ நந்தி கேசம் பஜே ||

 

ஐயிரு புராணநூல் அமலர்க் கோதியும்

செய்யபன் மறைகளும் தெரிந்தும் மாயையால்

மெய்யறு சூள் புகல் வியாதன் நீட்டிய

கையடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்,

 

சண்டிகேசரர் துதி


சிவாஞ்ஜலி க்ருதம் சண்டம் சிவத்யான பராயணம்

சிவார்ச்சா பலதாதாரம் சிவ சண்டேசரம் பஜே.

நால்வர் துதி


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

     ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரானடி போற்றி

வாழிதிரு நாவலுர் வந்தொண்டர் பதம் போற்றி

     ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி.

 

விஷ்ணு துதி


(ஆதி சங்கரர் சிவானந்தலஹரியில் விஷ்ணுவை 

சிவபக்தாக்ர கண்யர் என்று போற்றுகிறார்)


பாணத்வம் வ்ருஷபத்வம் அர்த்த வபுஷா பார்யாத்வ மார்யாபதே

கோணித்வம் ஸகிதா ம்ருதங்க வஹதா சேத்யாதி ரூபம் ததெள |

த்வத்பாதே நேத்ரார்ப்பணம் ச க்ருதவான் த்வத் வாமபாகோ ஹரி :

பூஜ்யாத் பூஜ்ய தர: ஸ  ஏவ ஹி ந சேத் கோவா ததன்யோ

                                     அதிக : ||

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் விஷ்ணுவை 

சிவஸ்வரூபியாகப் போற்றுகிறார்.


பாலே பஸ்ம விலேபனம் கரதலே லிங்கம் ஹ்ருதீந்து ஸ்திதி :

ருத்ராக்ஷா பரணம் கலே சிரஸிஜே விப்ரஜ்ஜடாமண்டலம் |

ஜிஹ்வாக்ரே சிவமந்த்ர ஜாப்ய மனிசம் ராத்ரெள திவா கீர்த்தனம்

ஏவம் ருத்ரமயம் ஹரிஸ்ஸ்வயமிதி வ்யக்தம் புராணோதிதம் ||

 

ஏறாகிப் பூணணியா மென்பாகி அன்பாகி எழில்கொள் மேனி

நீறாகிப் பூந்தொடையா நிலையாகிக் கலையாகி நிமலன் பாலோர்

கூறாகிப் பவளவிதழ்க் கொம்பாகி யம்பாகிக் குலவி யீசன்

பேறாகி யுறத்த வஞ்செய் சக்கரமா லடிமலடைப் பேணி வாழ்வாம்.

                                                       [பானுகவி]

ஸ்ரீ ஹரதத்தர்


அனுதின மனுதிஷ்டந் சைவபூஜா விதானம்

மனஸி வசஸி காயே சைவ பாவம் ப்ரபந்ந : |

த்விஜவர ஹரதத்த : கம்ஸ பூராக்ய க்ராமே

ஐயது விஜித மாயோ வாஸுதே வாம்ச பூத : ||

 

(புண்யகோடி ஸோமஸுந்தரக் குருக்கள் பாடியது)


 

(1)

ஏக வக்த்ரம் த்விநயனம் த்ரிபுண்ட்ரேன விராஜிதம் |

பஸ்மருத்ராக்ஷ பூஷரட்யம் அனலாஸன ஸம்ஸ்திதம் ||

 

(2)

சதுர்வேதார்த்த தாத்பர்ய வக்தாரம் சிவரூபகம் |

பஞ்சாக்ஷர ஜபாஸக்தம் பஞ்சவக்த்ர பராயணம் ||

 

(3)

பஞ்சப்ரம்ம ஷடங்காதி மந்த்ரன்யஸ்த களேபரம் |

ஸப்தஸ்வர ஸமாயுக்தம் கானவித்யா விசாரதம் ||

 

(4)

மஸ்தகாஞ்சலி முத்ரார்த்த மோதகம் பரமம் குரும் |

ஹரதத்தம் சிவாசார்யம் பத்ரமூர்த்திம் ஸ்மராம்யஹம் ||

 

(இந்த த்யான சுலோகங்களில் 1,2,3,4,5,6,7, எண்களைக் குறிக்கும் பதங்கள் அமைந்திருக்கும் நயம் கவனிக்க)

ஸ்ரீ ஹரதத்தருக்கு உபதேசம் செய்த 

தக்ஷிணாமூர்த்தி ஸ்துதி – கீர்த்தனை


ராகம் : சஹானா                                தாளம் : சாபு

 

பல்லவி

தக்ஷிணா மூர்த்தியின் தாள்கள் பணிபவர்க்கே

முக்தியாம் ஆனந்தம் – ஸித்திக்கும் அறிவீரே.

 

அனுபல்லவி

ஸனகாதி நால்வர்க்கும் ஸத்குருவாய் அன்று

மனமாதி களடங்க – மெளனோபதேசம் செய்த

 

சரணம்

மாலின் அம்சமாய் வந்த பாலன் பக்தியை ஏற்று

ஆலயத்தி லமர்ந்தே – அவனுக்கும் குருவாகி

நால்வே தங்களில் தேற்றி – நாமதீக்ஷையும் செய்து

பால்பாய ஸ்அ ன்னத்தைப் பரிவுடன் உண்பித்த 

Related Content

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruchchorruththurai

Sundaramurthy Swamigal - Thevaram - Thirukkazumalam

श्री दशिणामूर्ति स्तोत्रम - Shri daxinamurti stotram

ਸ਼੍ਰਿਇ ਕਾਲਭੈਰਵਾਸ਼੍ਹ੍ਟਕਂ - Kaalabhairavaashtakam

आर्तिहर स्तोत्रम - Artihara stotram