logo

|

Home >

puranas-stories-from-hindu-epics >

kandhapuranam-sagathiravagukal-vathai-padalam

கந்தபுராணம் - மகேந்திர காண்டம் - சகத்திரவாகுகள்  வதைப் படலம்

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய

Kandhapuranam of Kachiyappa Shivachariyar


 

செந்திலாண்டவன் துணை

திருச்சிற்றம்பலம்

 

3. மகேந்திர காண்டம்

 

 

16.  சகத்திரவாகுகள் வதைப் படலம்

 

ஏயின பான்மையின் இவன்மூதூ£¢

மாயத்ரும் எல்லையின் வருகின்ற

ஆயிர வாகுள அடல்வீரர்

மேயின தன்மை விளம்புற்றாம்.                 1

 

ஓலம் உடைக்கடல் உமிழகின்ற

நீல விடத்தினை நிகர்மெய்யார்

மாலை யுடைப்பல வடவைத்தீக்

கோல மெனச்சிகை கொண்டுற்றார்.                      2

 

தீங்களி றாதிய திறல்மாக்கள்

தாங்குவை யோடு தலைப்பெய்தே

ஆங்குள சோரி அறாதீமப்

பாங்கா¢கள் அன்னதொர் பகுவாயார்.                    3

 

எல்லையின் நேமிகள் யாவுந்தாம்

ஒல்லொலி நீரின் உடைந்தென்னக்

கல்லுறை சிந்து கருங்கொண்மூச்

செல்லென ஆர்த்தனர் செல்கின்றார்.                     4

 

வேறு

 

மைவரு நீல வரைத்தொகை தாங்கும்

மொய்வரு கின்ற முடிக்குழு வென்ன

ஐவகை நூற்றின் அமர்ந்தகல் வானைத்

தைவரு கின்ற தலைத்தொகை கொண்டார்.              5

 

மராமர மானவை மாதிர மெங்கும்

பராவ விடுத்திடு பலகவ டென்ன

விராவிய அங்கத மேவிய விளங்கும்

ஒராயிர மாகிய ஒண்புய முள்ளார்.                      6

 

எழுக்கொடு முத்தலை எ•கம்பில் நாஞ்சில்

கழுக்கடை சங்கொடு கப்பணம் வெவ்வாள்

மழுக்கதை சக்கரம் வச்சிர மாதி

விழுப்படை யாவும் விராவிய கையார்.                  7

 

எண்டகு நேமிகள் ஏழும் அளக்கர்

மண்டல மானவு மன்னுயிர் யாவுங்

கொண்டிடி னுங்குறை வின்றி நிரம்பா

தண்டம தென்ன அகன்ற வயிற்றார்.                    8

 

விழுமிய ப•றலை வெம்பணி யேனைக்

குழுவொடு போற்றினர் கொண்டுற லாற்றா

தழுதிட நாடிய தற்கயர் வார்போல்

கழல்கள் அரற்று கழற்றுணை கொண்டார்.               9

 

இருபுயம் ஓர்முகம் எய்திய வானோன்

ஒருவனை வெல்ல ஒராயிர ரானேம்

பொருவகை சென்றிடல் புன்மைய தென்னா

வருபழி யுன்னி மனந்தளர் கின்றார்.                     10

 

மாகர வான்முன மாயையின் வந்தான்

ஆகையி னால்இவன் ஐதென வானிற்

போகுவ னால்இது பொய்யல வல்லே

ஏகுமின் ஏகுமின் என்றுசெல் கின்றார்.            11

 

மீளிகை யாலெறி மேதகு வேர

மாளிகை கோபுர மண்டபம் வீழ்வ

காளிக ரன்னக ரங்கள்கொ டேற்றுத்

தூளிகள் செய்தனர் தூர்த்திடு கின்றார்.           12

 

எய்யென மெய்யிடை எங்கும் வியர்ப்பச்

செய்யன கண்வழி செந்தழல் சிந்த

வெய்ய  உயிர்ப்பெழ வேர்வுள மூள

ஒய்யென ஓடினர் உற்றிடு கின்றார்.                      13

 

நாகர் தமக்கொர் நமன்றனை யன்னோர்

ஆகிய ஆயிரர் ஆயிர மொய்ம்பர்

வேகம தாகி விழுத்தகு வீர

வாகுவை எய்தி மடங்கலின் ஆர்த்தா£¢.          14

 

ஆர்த்திடும் ஓதை அகன்செவி செல்லத்

தார்த்தொகை தூங்கு தடம்புய வீரன்

பார்த்தனன் மூவெயில் பண்டெரி செய்த

தீர்த்தனெ னச்சிறி தேநகை செய்தான்.           15

 

மேனிமிர் மந்தர வெற்பென நின்றே

வானள வோங்கு மராமரம் ஒன்றைத்

தேனினம் வான்றிசை சிந்தி யரற்ற

ஊன்முதிர் கைகொ டொசித்தனன் மன்னோ.              16

 

அண்டம் இருண்டிட ஆதவ ரானோர்

மிண்டிய பேரொளி வீந்திட வீரன்

வண்டழை துன்று மராமரம் அங்கை

கொண்டது பன்முறை கோட்புறல் செய்தான்.             17

 

வேறு

 

மாயிர மருப்புள மராமரம் இறுத்தே

தூயன்அம ராடல் முயல் தொன்னிலைமை நோக்கி

ஆயிரம் அடுத்தபுயர் ஆயிரரும் அங்கண்

மூயினர்கள் அண்ணலை முரட்படை சொரிந்தார்.         18

 

தொடுத்தனர்கள் வார்கணைகள் தொட்டனர்கள் வைவேல்

எடுத்தபல தோமரம் எறிந்தனர்கள் ஆலம்

விடுத்தனர்கள் முத்தலை வியன்கழுமுள் உய்த்தார்

அடற்குலிசம் வீசினர்கள் ஆழிகள் துரந்தார்.                      19

 

இப்பரிசி னுள்ளபடை  யாவுமுறை தூங்கு

மைப்புயல்க ளென்னவரை வின்றிவிரை வாக

ஒப்பரிய வீரன்மிசை உய்த்திடலும் அன்னோன்

துப்பொடு மரந்தனி சுழற்றிஅடல் உற்றான்.                      20

 

விட்டபடை யாவையும் வெறுந்துகள வாகப்

பட்டிட மரங்கொடு பராகமவை செய்ய

 உட்டௌ¤வின் மானவர் ஒராயிரரும் வீரற்

கிட்டினர் வளைந்தனர் கிளர்ந்தமர் முயன்றார்.            21

 

ஒட்டியம ராடிய ஒராயிரவர் தாமுங்

கெட்டிரிய மேருநிகர் கேழ்கிளர் புயத்தோன்

மட்டுநனை வார்சினை மரங்கொடு புடைத்தே

சட்டக மிறந்துபடு தன்மைபுரி குற்றான்.                  22

 

செக்கர்புரை குஞ்சிகெழு சென்னிகள் கிழிந்தார்

நெக்கனர் கபோலவகை நெற்றிபிள வுற்றார்

அக்கநிரை சிந்தினர் அலங்குகுழை யற்றார்

உக்கனர்கள் பல்லெயி றுடைந்தனர்கள் துண்டம்.          23

 

வாய்நிரை பகிர்ந்தனர்கள் மாழைதிகழ் கண்ட

மானவு முரிந்தனர்கள் அற்றனர்கள் பொற்றோள்

ஊனமகல் அங்கைகள் ஒசிந்தனர் தசைந்தே

பீனமுறு மார்பினை பிளந்தனர் தளர்ந்தார்.                       24

 

உந்திகள் குடங்கரின் உடைந்துகுடர் யாவுஞ்

சிந்தினர் மருங்கெழில் சிதைந்தனர் புறங்கண்

முந்துதொடர் என்பொடு முரிந்தனர்கள் வாமஞ்

சந்துபொரு கின்றமுழந் தாளடிகள் அற்றார்.                      25

 

வீந்தனர்க ளோர்சிலவர் வீழ்ந்துமிதி பட்டுத்

தேய்ந்தனர்க ளோர்சிலர் செய்யகுடர் சிந்திச்

சாய்ந்தனர்க ளோர்சிலர் தங்குருதி ஆற்றுள்

தோய்ந்தனர்க ளோ£¢சிலர் துடித்தனர்கள் சில்லோர்.               26

 

எறிந்திடு படைத்தொகுதி ஏகுமுனம் வீழ்ந்து

மறிந்தனர்க ளோர்சிலவர் மாய்ந்துகக னம்போய்ச்

செறிந்தனர்க ளோர்சிலர் சிதைந்துதலை போயும்

முறிந்தவுடல் கொண்டமர் முயன்றனர்கள் சில்லோர்.              27

 

ஏரகலும் வீரர்தமி யாக்கையிது வண்ணஞ்

சேரவிறல் உற்றுடைய செவ்வியின் எழுந்த

சோரிநதி மாநகர் தொலைத்துவளன் வாரி

வாரிதி நிறைந்தவனி மீதினும் மடுத்த.                          28

 

வேறு

 

அறந்தெ ரிந்துணர் ஆண்டகை அகன்மரம் புடைப்பக்

குறைந்த சென்னிவான் திரிவன எயிற்றொடு குலவிச்

செறிந்த தேவரோ டமிர்தொளித் துண்டவர் சென்னி

நிறைந்தி டாமதித் துணைகவர்ந் துலவுதல் நேரும்.                       29

 

அடல்கொள் மொய்ம்பினன் மரம்புடைத் தலுஞ்சில அவுணர்

உடல்சி னப்பரி முகத்தவர் தலைதுமிந் துதிர

நெடிதும் வாய்வழி சிந்தவீழ்ந் தனர்நெடுங் கடலுள்

வடவை மாமுக மங்கிகான் றிடுவதே மான.                             30

 

வள்ளல் மாமரத் தண்டுகொண் டடித்தலும் வலியோர்

பிள்ளை மாமதி எயிற்றணி சிந்துவிண் பெயர்ந்தே

அள்ளல் வேலையின் முறைமுறை வீழ்வன அதன்கண்

துள்ளு மீன்கணம் உகண்டுவீழ் கின்றதோர் தொடர்பின்.           31

 

வலிந்த வூழ்முறை யாவரே கடந்தவர் மரத்தாற்

பொலந்த யங்குபூண் மார்பினன் எற்றிடும் பொழுதிற்

கலந்து போர்செய்தார் ஓர்சிலர் வாளடு கரம்போய்த்

தொலைந்து ளார்செலும் நெறியின்வீழ்ந் தவர்சிரந் துணிப்ப.               32

 

இனைய பற்பல நிகழந்திட இணையிலா ஒருவன்

தினையின் வேலையில் ஆயிரம் புயமுடைத் திறலோர்

அனைவர் தம்மையும் ப•றுணி படுந்திறன் அட்டுத்

தனிமை தன்னொடு நின்றனன் அமர்க்களந் தன்னில்.              33

 

ஆகத் திருவிருத்தம் - 803

      - - -

 

 

17.  வ ச் சி ர வா கு  வ தை ப்  ப ட ல ம்

 

கூடி ஆரமர் இயற்றினார் தம்வலி குறைந்து

வீடி ஆவிபோய் விளிதலும் அன்னது விரைவின்

நேடி விண்ணிடை நணுகிய தூதுவர் நில்லா

தோடி யாளுடை அவுணர்கோன் முன்புசென் றுரைப்பார்.   1

 

துன்றும் ஆயிர மொய்ம்புடை நின்படைத் தொகைஞர்

சென்று சில்லமர் புரிந்தனர் அவனது தெரியா

ஒன்றொர் பாதவம் பறித்தனன் புடைத்தலும் ஒருங்கே

பொன்றி வீழ்ந்தனர் புகுந்தவா றீதெனப் புகன்றார்.         2

 

புகன்ற வேலையின் அவுணர்கோன் புரையிலோன் வன்மை

புகன்ற வேலையின் வடவையார் அழலெனப் பொங்கி

அகன்ற னன்பெரு மிதத்துடன் ஆணையுந் திறலும்

அகன்ற னன்பெருந் துயர்கொளீஇ யினையன அறைவான். 3

 

உமைய ளித்திடு சிறுமகன் தூதுவன் ஒருவன்

எமது முன்னம்வந் தவமதி செய்தனன் ஏகி

அமரில் யாரையும் அட்டுநின் றின்னமும் அகலான்

நமது கொற்றமும் நன்றுநன் றாலென நகைத்தான்.               4

 

முச்ச கம்புகழ் அவுணர்கோன் முனிவினை முன்னி

யச்சே னக்கிளர்ந் தெழுந்துசென் றவனடி வணங்கி

மெய்ச் சிரங்கள் ஓரையிரு திறலுடை விறல்சேர் 

வச்சி ரத்திரு மொய்ம்புடைக் காதலன் வகுப்பான்.         5

 

நொய்ய தூதுவன் பொருட்டினால் இத்திறம் நுவறல்

ஐய கேட்கநிற் கியலுமே இறையிவண் அமா¢தி

மொய்யில் யான்சென்று மற்றவன் பெருமுரண் முருக்கிக்

கைய கப்படுத் துய்ப்பனால் அன்னது காண்டி.             6

 

வேறு

 

என்ன லோடும் இறப்பெதிர் உற்றிடா

மன்னன் மைந்தனை நோக்கி மகிழ்வுறா

அன்ன தன்மையை ஆற்றுதி நீயெனப்

பன்னி யேகும் படிபணித் தானரோ.                      7

 

விடைபு ரிந்திட மெய்வழித் தாதைதன்

அடிவ ணங்கி யகன்றுமன் கோயிலிற்

புடையி ருந்தன போர்ப்படைச் சாலையின்

இடைபு குந்தனன் யாரும் வழுத்தவே.                   8

 

அட்டல் இன்றி அமர்தரு சாலிகை

இட்டு மார்பின் இறுக்கி  வயத்தகு

பட்டி கைக்கலன் பாலத் துறுத்தியே

புட்டில் அங்குலி பூண்டு பொருக்கென.            9

 

ஆணி கொண்ட அயிற்கணை பெய்தபொற்

தூணி கொண்டுபின் தும்பை மிலைச்சியே

நாணி கொண்டு நலந்தரு கார்முகம்

பாணி கொண்டு படைபிற ஏந்தியே.                     10

 

கொற்ற  மாரமர்க் கோலங்கள் உள்ளன

முற்ற  வேகொண்டு மூரிவில் வெஞ்சமர்

கற்ற காளை கதுமென நோக்கியே

சுற்று கம்மியர்க் கின்னன சொல்லுவான்.         11

 

மிக்க நம்படை வௌ¢ளத்தி லோர் சில

தொக்க பூசல் தொழிலினை முற்யி

இக்க ணந்தரு வீர்இவண் என்றலுந்

தக்க தேயெனத் தாழ்ந்தவர் போயினார்.          12

 

ஆங்கு நின்றிடும் ஏவலர் அப்பணி

தாங்கி யேகத் தகுவர்தங் கோமகன்

நீங்க லின்றுதன் நீழலின் வந்திடும்

பாங்கர் யாரையும் நோக்கிப் பகருவான்.          13

 

குமர வேள்விடு கோற்றொழில் தூதனைச்

சமரில் வென்றொரு தாம்பில் தளைபுரீஇ

இமையொ டுங்குமுன் எந்தைமுன் உய்க்குவன்

அமைதிர் போருக் கனைவிரும் என்றனன்.               14

 

பாலன் மற்றிவை பன்னலும் நன்கெனா

ஏலு கின்ற இளைஞரும் மள்ளரும்

மேலை வெஞ்சமர் செய்ய விரைந்துபோர்க்

கோல மெய்திக் குழீஇயினர் கோட்புற.                   15

 

தாறு கொண்டவன் தன்குறிப் பிற்செலும்

நூறு நூறு நொறில்பரி மான்பெறீஇ

வீறு பண்ணமை தேரொன்றின் வெய்தென

வேறி னான்மொய்ம் பிருபது கொண்டுளான்.              16

 

தந்தி ரத்துத் தலைவர் தம் மைந்தரும்

மந்தி ரத்து மதிஞர்தம் மைந்தருஞ்

சுந்த ரத்துத் தொடர்பினில் சுற்றுறா

எந்தி ரப்பெருந் தேர்களில் ஏறினார்.                     17

 

ஆன வேலை அரசன் சுதன்விடப்

போன கம்மியர் போர்வினை கூறியே

யானை மேல்கொண் டிரும்பணை எற்றலுஞ்

சேனை தம்முட் சிலதிரண் டுற்றவே.                    18

 

ஒருங்கு தாம்பல ஓடலின் அன்னவை

பரங்கொ ளற்கரி தாகிப் படிமகள்

புரங்கி ழிந்திடு புண்கொண் டரற்றல்போல்

இரங்கும் ஓதைகொண் டேகுவ தேர்களே.         19

 

கருவி வானங் கடலுண்டு செல்லுறும்

வரைக ளாமென வந்துதம் மேலுறீஇ

உருமி னத்தை உகுத்தொலி கேட்டலும்

வெருவி வீழ விரைவன வேழமே.                      20

 

கிட்டி நாடு நயனமுங் கேடுசெய்

தொட்ட லார்தம் உளமுஞ் சுழன்றிட

வெட்டு மாதிரத் தெல்லையுஞ் சாரிகை

வட்ட மாகி வருவன வாசியே.                          21

 

ஆடல் வேல்கதை ஆழி அலப்படை

பாடு சேர்ந்த பலகைஔ¢ வாள்சிலை

நீடு சூலம் நெடுமழு ஆதியாக்

கூடு பல்படை கொண்டிடு கையினார்.            22

 

இடித்த சொல்லர் இமையவர் போர்பல

முடித்த மொய்ம்பர் முரணிய பல்படை

வடித்த கற்பினர் மால்வரை யானவை

படித்த லத்திற் படர்ந்தன்ன காட்சியார்.           23

 

விசும்பின் மாலை மிலைச்சிய குஞ்சியர்

பசும்பொன் வீரமெய்ப் பட்டிகை நெற்றியர்

நிசும்பர் அன்னதொர் நேரலர் சோரியின்

அசும்ப றாத அகன்பில வாயினார்.                      24

 

தீம டங்கல் திறலினர் தென்புலக்

கோம டங்கலின் கொள்கையைர் தங்கிளை

தாம டங்கத் தறிபிளந் தார்த்தெழு

மாம டங்கல் தனைப்பொரும் வன்மையார்.              25

 

ஏகும் வெஞ்சமா¢க் கென்றலும் பூண்பரீஇ

மாகம் அஞ்ச வளர்ந்தெழு தோளினார்

மோகம் இல்லவர் மொய்ம்பினின் மேலவ

ராகும் வீரர் அளப்பிலர் எய்தினார்.                      26

 

ஐந்து நூறெனும் வௌ¢ளம் அழுங்குதேர்

தந்தி யின்குழுத் தானும் அனையதே

உந்து மாக்கள ராயிரம் வௌ¢ளமாம்

பந்த மிக்க பதாதி இரட்டியே.                           27

 

இத்தொ கைப்படும் ஈரிரு தானையும்

மைத்தி ரைக்கடல் வாரியின் ஆர்ப்புறீஇப்

பத்தி ரட்டி படர்புயத் தண்ணலைத்

தத்த மிற்கலந் தொன்றித் தழீஇயின.                    28

 

துடிவ லம்புரி துந்துபி சச்சரி

கடிகொள் மொந்தை கரடிகை தண்ணுமை

இடிகொள் பேரி இரலைகள் ஆதியாம்

முடிவி லாவிய முற்று முழங்கிய.                      29

 

இற்ற எல்லையின் ஈரிரு தானையும்

நெற்றி யேகடை நீடய லிற்செல

மற்று ளார்களும் வந்திட வச்சிரப்

பொற்ற டம்புயன் பொள்ளென வேகினான்.               30

 

வல்லி யக்கடு மான்பொரு மானவா¢

செல்லி யக்கமுஞ் செல்லினை மாறுகொள்

சொல்லி யக்கமுந் துண்ணெனத் தொக்கெழு

பல்லி யக்கடல் ஆர்ப்பும் பரந்தவே.                      31

 

ஊழி மால்படை ஒல்லென வேயெழப்

பூழி ஈண்டிவிண் பொள்ளென மூடிய

வேழ மால்வரை வீழ்தரு தானநீர்

ஆழி யென்ன அகன்புவி கொள்ளவே.                    32

 

திகந்தம் எட்டுந் திருநிழல் ஓச்சியே

உகந்த தேர்களின் ஒண்கொடி ஆடுவ

குகன்வி டுத்திடு கொற்றவன் ஆற்றல்கண்

டகன்சி ரங்கள் அசைப்பன போன்றவே.           33

 

ஆகும் எல்லை அவுணர்மன் தேர்மிசைப்

பேய்கள் சூழ்ந்து பிணங்கி மலைந்தன

காகம் யாவுங் கழுகும்வெஞ் சேனமுங்

கூகை யோடு குழீஇயிரங் குற்றவே.                     34

 

மடிந்த வாயுடை வச்சிர மொய்ம்பினான்

பிடித்த கையிற் பெருஞ்சிலை வீழ்ந்தது

தொடுத்த வெந்நுறு தூணியும் இற்றதால்

துடித்த வால்இடக் கண்களுந் தோள்களும்.               35

 

அண்ணல் மைந்தன தாழியந் தேர்மிசைக்

கண்ண கன்கொடி கையற வீழ்ந்தன

விண்ணின் ஏறு விசும்பின்றி ஆர்ப்பன

எண்ணில் தீக்குறி இவ்வகை யுற்றவே.          36

 

உற்ற காலவை உள்ளுறக் கொள்கிலன்

செற்ற மேல்கொண்டு சென்னியோர் பத்துளான்

மற்றொர் தூணியும் வா£¢சிலை யுங்கொளாப்

பொற்ற டங்கை புறந்தனிற் சேர்த்தினான்.         37

 

மொய்கொள் வச்சிர மொய்ம்பன்இத் தன்மையால்

வெய்ய தன்படை வௌ¢ளமொ டேகியே

செய்ய வேலுடைச் சேவகன் ஏவல்செய்

ஐயன் நின்ற அடுகளம் எய்தினான்.                      38

 

வண்டு லாந்தொடை வச்சிர வாகுதன்

தண்ட மோடு சமர்க்களஞ் சேர்தலும்

அண்டர் நாயகன் தூதுவன் அன்னவை

கண்டு நின்று கழறுதல் மேயினான்.                     39

 

வேறு

 

இந்திர ஞால வையத் திறைவனே அல்லன் மற்றை

மைந்தரில் ஒருவ னாகும் வருபவன் வருவான் றன்னை

முந்திய தானை யோடு முரணற முருக்கி வீட்டி

அந்திவான் புகுமுன் எந்தை அடிதொழப் போவன் என்றான்.               40

 

எறிதிரை அளக்கர் என்ன ஈண்டுறும் அனிகம் யாவும்

முறைமுறை சாடி வந்த முதல்வனை முடித்து மாலை

உறுதல்முன் விசய மோடும் ஒய்யென மீளேன் என்னின்

அறுமுக ஐயன் தூதன் ஆவனோ அடிய னென்றான்.                      41

 

எண்டிசை புகழும் வீரன் இனையன விளம்பிச் செவ்வேள்

புண்டரீ கத்துப் பொற்றாள் புந்தியால் இறைஞ்சிப் போற்றி

மண்டமர் முயன்று நேமி மறிதர வரைகள் கீற

அண்டமுந் திசையும் வானுங் குலுங்கத்தோள் கொட்டி ஆர்த்தான்.  42

 

ஆர்த்திடும் ஓதை கேளா அமர்குறித் தெழுதேர் மேலோர்

கார்த்திடு தந்தி மேலோ£¢ கவனமாப் புரவி மேலோர்

பேர்த்திடு நிலத்தின் மேலோர் பிறங்குசீ ரவுணர் யாரும்

வேர்த்தனர் தி£¤ந்து சிந்தை வெருவினர் விளம்பு கின்றார்.         43

 

வாழிய உலகம் யாவும் மன்னுயிர்த் தொகையு மாய

ஊழியில் தனிநின் றா£¢க்கும் உருத்திரன் ஆர்ப்போ அன்றேல்

ஆழிகட் கரசன் ஆர்ப்போ அண்டங்கள் நெக்க ஆர்ப்போ

ஏழ்கட லுடைந்த ஆர்ப்போ இத்திறம் ஆர்ப்ப தென்றார்.           44

 

செருவலி கொண்ட சீற்றச் செங்கணான் ஆர்க்கும் ஓதை

மருமலர்த் தொடைய லாக வச்சிர வாகு வென்போன்

இருபது செவியி னூடும் இரவியம் புழைகள் புக்க

உருமெனச் சேற லோடும் உளம்பனித் துரைக்கல் உற்றான்.               45

 

ஈரெழு திறத்த வான உலகினுள் இன்று காறிப்

பேரொலி கேட்ட தின்றால் பிறந்ததித் துழனி யாதோ

தேருதி ரென்று பாங்கர் உழையரில் செப்பத் திண்டேர்ச்

சாரதி விசய னென்பான் தாழ்ந்திவை புகலல் உற்றான்.            46

 

தெற்றென உணர்தி மான்தேர் செலுத்திய வலவ னென்றே

மற்றென துரையை எள்ளல் வல்லைமேற் காண்டி எந்தை

அற்றமில் படையி னோடும் அமர்செய வருதல் நாடி

ஒற்றென நின்றோன் போர்வேட் டார்த்திடும் ஒலியீ தென்றான்.     47

 

தூதுவன் ஆர்ப்பி தென்று சொல்லுமுன் உருத்துக் கண்கள்

மீதெரி பொங்க நக்கு வெய்துயிர்த் துரப்பி யான்போய்

ஈதொரு கணத்தின் அன்னான் இகல்முரண் அழித்துப் பற்றித்

தாகைமுன் உய்ப்பன் காண்டி சரதம்இத் தன்மை யென்றான்.              48

 

என்றிவை உரைத்துப் போதும் எல்லையின் முன்ன  மாகச்

சென்றிடும் அவுண வீரர் சேனையை வகுத்துச் சீறித்

தன்றுணைத் தாளுந் தோளுந் தடக்கையும் அனிக மாக

நின்றதோர் வீரன் றன்னை நேமியிற் சுற்றி ஆர்த்தார்.                     49

 

கைதனில் இருந்த செம்பொற் கார்முகங் குனித்து வெங்கோல்

எய்தனர் முசலம் நாஞ்சில் எறிந்தனர் தண்டஞ் சூலம்

பெய்தனர் கணிச்சி விட்டார் பிண்டிபா லங்கள் தூர்த்தார்

நெய்தவழ் அயில்வேல் தொட்டார் நேமிகள் உருட்டு கின்றார்.             50

 

வேறு

 

தஞ்செனக் கொடுமைசெய் தானவப் படைஞர்கள்

வெஞ்சினத் தன்மையால் விடுபடைக் கலமெலாங்

கஞ்சனைச் சிறைசெயுங் காரணன் தூதுவன்

செஞ்சுடர்ப் படிவமேற் செவ்வண்வந் துற்றவே.           51

 

துய்யன்மேல் வெம்படைத் தொகுதிவந் தடைதலும்

மெய்யெலா முற்றதான் மிக்கசோ ரிப்புனல்

மையல்தீர் காலையின் வந்தெழும் பரிதிபால்

பையவே செய்யதண் கதிர்வரும் பான்மைபோல்.         52

 

ஆனதோர் காலையெம் மையன்வெஞ் சினமுரு

மானினம் பலபல மருவியே செறிவுழி

மேனிவந் தேகியோர் வேங்கைபாய்ந் தடுதல்போல்

தானவப் படையினைத் தாக்குதல் மேயினான்.            53

 

ஆயிரம் ஆயிரம் அவதிசேர் அவுணர்தஞ்

சேயதண் குஞ்சியைச் செங்கையாற் பற்றியே

பாயிருந்த துரையினும் பாற்படு கிரியினும்

ஏயெனும் அளவைமுன் எற்றியே எறியுமால்.                    54

 

எய்யும்வெம் படைகளும் எறியும்வெம் படைகளுங்

கையினிற் பற்றியே கனலெழப் பிசைதரு

மொய்யெனப் பதைபதைத் தோலமிட் டுயிருகச்

செய்யபொற் றாள்களால் சிலவரைத் தேய்த்திடும்.        55

 

மத்தமால் கரிகளும் வாம்பரித் தொகுதியுஞ்

சித்திரந் திகழ்மணித் தேர்களும் அவுணர்தங்

கொத்தொடே வீழ்தரக் கோலமால் அடிதனக்

கொத்ததன் றாள்களல் உதைபுரிந் துலவுறும்.                     56

 

கிடைத்திடுஞ் சிலவரைக் கீண்டனன் நீண்டமெய்

துடித்திடக் கழல்களால் துகைத்தனன் சிலவரை

அடித்தனன் சிலவரை அரைத்தனன் சிலவரைப்

புடைத்தனன் சிலவரைப் புதுமரத் தண்டினால்.            57

 

மத்தவெங் கரிபரி வயவர்தேர் ஆயின

பத்துநூ றொருதலைப் படநெடும் பாணியாற்

குத்திடுஞ் சிகரமேற் கோளரி பாய்ந்தெனத்

தத்தியே திரிதருந் தலைமலைக் குலமிசை.                      58

 

தேரெலாம் இற்றன திண்டிறற் கவனமாப்

பேரெலாம் இற்றன பிளிறுமால் கரிகளின்

தாரெலாம் இற்றன தானவந் தலைவர்செய்

போரெலாம் இற்றன புகழெலாம் இற்றதே.                       59

 

ஆங்கதோர் பொழுதினில் அவுணருக் கிறைமகன்

பாங்கராய் வந்திடும் பல்பெருங் குமரரும்

ஓங்குநாற் படையொடும் ஒருவனைச் சுற்றியே

தாங்குபல் படையினால் சமர்முயன் றாற்றினார்.          60

 

வேறு

 

அன்ன காலையில் வீரவா குப்பெயர் அறிஞன்

தன்ன தோர்கரத் திருந்திடு பழுமரத் தண்டான்

முன்னர் வந்துசூழ் மைந்தர்கள் முரட்படை யோடுஞ்

சின்ன மாகியே விளிவுறப் புடைத்தனன் திரிந்தான்.               61

 

செய்ய மத்தகம் இற்றன இற்றன செழுந்தாள்

கைகள் இற்றன மருப்பிணை இற்றன கரிகள்

வெய்ய காலுடன் எருத்தமும் இற்றன மிலைச்சுங்

கொய்யு ளைத்தலை இற்றன குரகதக் குழுவே.           62

 

தட்ட ழிந்தன பாரகம் அழிந்தன சகடு

கெட்ட ழிந்தன கேதனம் அழிந்தன கிளர்ந்த

மொட்ட ழிந்தன பாகினம் அழிந்தன முரண்மாக்

கட்ட ழிந்தன ஒழிந்தன கனைகுரல் ப•றேர்.                      63

 

கால்க ளுற்றிடும் வெஞ்சிலை இற்றன கடிய

கோல்க ளிற்றன பரிதிகள் இற்றன கொட்பார்

தோல்க ளிற்றன நாந்தகம் இற்றன தூண்டும்

வேல்கள் இற்றன நாஞ்சில்கள் இற்றன விரைவில்.               64

 

நெரிந்த சென்னிகள் நெரிந்தன மார்பகம் நெடிது

சரிந்த வெங்குடர் சரிந்தன இழுக்குடைத் தசைகள்

சொரிந்த மூளைகள் சொரிந்தன விரிந்தெழு சோரி

திரிந்த கூளிகள் திரிந்துமாய் வுற்றன சேனை.                    65

 

கரந்து ணிந்தனர் புயங்களுந் துணிந்தனர் காமர்

சிரந்து ணிந்தனர் நாசிகள் துணிந்தனர் செழும்பூண்

உரந்து ணிந்தனர் கழலடி துணிந்தனர் உளதொல்

வரந்து ணிந்தனர் வன்மையுந் துணிந்தனர் மைந்தர்.              66

 

வாக்கி னாற்சிலர்  தம்முயிர் உண்டிடும் வன்கைத்

தாக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடுஞ் சமர்செய்

ஊக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடும் உலம்பு

நோக்கி னாற்சிலர் தம்முயிர் உண்டிடு நொய்தின்.         67

 

ஆங்கண் ஓர்சில அவுணரை ஆடல்வெம் பரியை

வெங்கண் யானையை இரதத்தை வாரினன் விரைவின்

மங்குல் வானினுந் தரையினுங் கடலினும் வரைகள்

எங்கு மாகியே வீழ்தர வீரனார்த் தெறிந்தான்.                    68

 

அன்பு லப்புறு கொடுந்தொழில் அவுணர்கள் அமரும்

வன்பு லத்துயிர் கொளவரு மறலிதன் தூதர்

துன்பும் அச்சமும் அணங்குடன் அகன்றுதற் றுதிப்பத்

தென்பு லத்தவன் முன்னுற வீசினன் சிலரை.                     69

 

ஒருத லைப்படுங் கேளிரைத் துன்னுவான் உய்ப்பக்

கருதி னான்கொலோ சிற்சில அவுணர்தங் கணத்தை

நிருதி மாநகர் புகுந்திட வீசினன் நிகரில்

சுருதி நாயகன் ஏவலாற் றியதனித் தூதன்.                       70

 

நேர்ந்து போர்புரிந் துயிர்தனை விடாததந் நிலைமை

ஓர்ந்து விண்ணவர் மானங்கள் விடுத்திடா துயர்வான்

சார்ந்த ஞாயிறு பிளந்திடா தாடலின் தன்மை

சேர்ந்து ளார்பெறுந் துறக்கமேல் வீசினன் சிலரை.         71

 

எண்டி சைப்புறந் தாங்கியே பெயர்கிலா திரக்கங்

கொண்ட வெங்கரிக் கிரையெனச் சிலவரைக் கொடுக்குந்

தெண்டி ரைப்புனல் பருகிய நிரப்பது தீர

உண்டி யாகவே வடவைபால் சிலவரை உய்க்கும்.        72

 

ஏந்தல் இன்னபல் வகையினால் அடுதலும் இமைப்பின்

வீந்த தானைகள் துணைவரும் பொன்றினர் மிக்கோர்

ஓய்ந்து வானினுங் கடலினுந் திசையினும உலைந்து

சாய்ந்து போயினர் மானமும் வன்மையுந் தவறி.         73

 

மற்றிந் நீர்மையைக் காண்டலும் வச்சிர வாகு

இற்ற தேகொலாம் நம்பெருந் தானையென் றிரங்கிச்

செற்ற மீக்கொண்டு வலவனை நோக்கியித் தேரை

ஒற்றன் முன்னுற விடுத்தியால் கடிதென உரைத்தான்.     74

 

உரைக்கும் வாசகங் கேட்டலுந் தொழுதுமுன் னுற்ற

பரிக்கு லங்களின் மத்திகை வீசியே பாகன்

அருக்கன் ஆழியந் திகிரியூர் வலவனும் அஞ்சி

வெருக்கொ ளும்படி தேரினை வீரன்முன் விடுத்தான்.     75

 

கொடிய வெஞ்சினந் திருகியே சூ£¢தரு குமரன்

கடிது போர்செய்வான் வருவது மேலையோன் காணா

முடிவி லாமகிழ் வெய்தியே முழுதுல களந்த 

நெடிய மாலினும் நெடியன்மற் றிவனென நிமிர்ந்தான்.             76

 

நெடிய தான்புவி அளந்திடப் புயங்கள்விண் நெருக்க

முடிய லாங்கடந் தண்டகோ ளகைதனை முட்ட

வடிவ மைந்திடு திறலினான் பணிபதி மயங்க

அடிபெ யர்ந்துபார் வெடிபட இடிபட ஆர்த்தான்.           77

 

புரம டங்கலுந் தெறுகணை போன்றுளான் பொன்னோன்

வரம டங்கலுஞ் சோரிய தடங்கலும் வாணாள்

உரம டங்கலும் உண்டிடத் தறியின்வந் துதித்த

நரம டங்கலும் வெருவர எரியெழ நகைத்தான்.           78

 

முச்ச கம்புகழ் திறலினான் முறுவலும் முழக்கும்

வச்சி ரத்தட மொய்ம்பினான் கேட்டலும் மறுகி

மெய்ச்சி ரத்தொகை துளக்கி ஆரழலெழ விழித்து

நச்செ யிற்றர வாமெனச் செயிர்த்திவை நவில்வான்.             79

 

வீர நன்றுநின் ஆண்மையும் நன்றுமே தக்க

பேரு நன்றுபே ராற்றலும் நன்றுநீ பெற்ற

சீரும் நன்றுநின் விஞ்சையும் நன்றுசெய் கின்ற

போரு நன்றுநிற் கேற்பதிவ் வார்ப்பெனப் புகன்றான்.               80

 

மற்று மோருரை புகலுவான் வந்தெதிர் மலைந்த

கொற்ற வீரரைப் படுத்தனம் என்றுளங் கொண்டாய்

அற்றெ லாமினி விடுமதி நின்மிடல் அலைத்துப்ஹ

பற்றி எந்தைமுன் விடுப்பனால் உனையெனப் பகர்ந்தான்.  81

 

நின்னை வென்றிட முயலுவன் தமியனும் நீயும்

என்னை வென்றிட முயலுதி இருவரும் அதனைப்

பன்னி நிற்பதிற் பயனெவன் கடிதமர் பயிறி

பின்னை வென்றுளார் வெல்லுக என்றனன் பெரியோன்.   82

 

என்று முன்னரே வச்சிர வாகுவென் றிசைக்கும்

மன்னன் மாமகன் தனதுகைக் கார்முகம் வாங்கிப்

பொன்னின் நாணொலி கொண்டொரா யிரங்கணை பூட்டி

மின்னு லாந்தனி வேலவன் தூதன்மேல் விடுத்தான்.              83

 

விடுத்த ஆயிரம் பகழியும் விடலைதன் மிசையே

அடுத்த எல்லையிற் காணுறா அங்கையொன் றதனை

எடுத்து முன்னுற ஓச்சியே அங்கவை எனைத்தும்

பிடித்து வல்லையின் நுண்டுகள் பட்டிடப் பிசைந்தான்.    84

 

விட்ட வாளிகள் பூழிபட் டிடுதலும் வெகுண்டு

மட்டு வாகைவெஞ் சிலையினைப் பின்னரும் வணக்கி

நெட்டி லைச்சரம் ஒருபதி னாயிரம் நிறத்திற்

பட்டி டும்படி தொட்டனன் அவுணர்கோன் பாலன்.         85

 

அசைவி லானது நோக்கியே முந்துபோர் அகத்தில்

இசைமை நீங்கியே முடிந்திடு தானவர் இட்ட

முசல மாகிய தொன்டிறனை யெடுத்துமுன் வந்த

விசிகம் யாவையும் புடைத்தனன் திசைதொறும் வீழ.             86

 

வழுவில் வாளிகள் வறிதுபட் டிடுதலு மற்றும்

வழுமி தாகிய ஒருபதி னாயிரம் விசிகம்

பழுது றாதன தூண்டியே ஆண்டகை பரித்த

எழுவை நுண்டுகள் ஆக்கியே பின்னரும் எய்வான்.                87

 

தலையி லாயிரங் களத்தினில் ஆயிரந் தடந்தோள்

மலையி லாயிரம் உரத்தினி லாயிரம் வயத்தாள்

நிலையில் ஆயிரங் கணைகளாத் தூண்டினன் நீடுங்

கொலையில் ஆயிரங் கூற்றினைப் பாலுறுங் கொடியோன். 88

 

கையில் ஏந்திய பேரெழு முரிந்திடக் காமர்

செய்ய மெய்ம்முழு தீண்டியே பகழிகள் செறிய

ஐயன் நின்றனன் ஓரிறை வருந்தியே அதற்பின்

ஓய்யெ னச்சென்று வெய்யவன் தேரினை உதைத்தான்.    89

 

உதைத்த காலையிற் பண்ணுறு பரியெலாம் ஒருங்கே

பதைத்து வீழ்ந்தன பாகனும் உருண்டனன் பட்டான்

கதித்த வையமும் அழிந்தது அன்னது காணா

மதித்து வேறொரு தேரிடைப் பாய்ந்தனன் மற்வோன்.             90

 

பாய்ந்து வச்சிர வாகுவாந் தொல்பெயர் படைத்தோன்

தேய்ந்த ஒண்பிறை பணியொடு சேர்ந்தன சிலையின்

ஆய்ந்தொ ராயிரம் அயிற்கணை பூட்டியே அடுபோர்

ஏந்தல் நெற்றியுட் செறித்தனன் அமரர்கள் இரங்க.         91

 

ஆயி ரங்கணை நுதலிடை அழுத்தலும் அடல்வேல்

தூய வன்றிருத் தூதுவன் சூரருள் புரிந்த 

தீய வன்தடந் தேரினைச் செங்கையால் எடுத்து

மீயு யா¢ந்திடும் விண்ணிடை எறிந்தனன் விடுத்தான்.             92

 

விண்ண கத்திடை எறிந்தபின் வீரவா குப்பேர்

அண்ணல் வச்சிர வாகுவந் தேறுவான் அமைந்து

பண்ணு றுத்திய ஏமமாய் நின்றதேர் பலவுந்

துண்ணெ னப்புடைத் தெறிந்துதைத் தொல்லையிற் றொலைத்தான்.

                                                             93

 

தொலைக்கும் எல்லையின் அவுணர்கோன் மதலைதொல்

புவிக்கோர்

                       இலக்கம் யோசனை  எல்லையின் காறும்விண் ணேகி

அலக்க ணுற்றமீண் டழிதரு தேருடன் அமரில்

வெலற்க ருந்திறல் அறுமுகன் தூதன்முன் வீழ்ந்தான்.     94

 

நிலவ ரைப்புறுஞ் சூர்மகன் எழுந்துதன் நெடிய

சிலைவ ளைத்தமர் செய்திட முன்னலுந் திறலின்

தலைமை பெற்றவன் கண்டுகை ஓச்சியத் தனுவை

வலிது பற்றியே முரித்தனன் பேரொலி மயங்க.                   95

 

ஏந்து கார்முகந் தனைமுரித் திடுதலும எரியிற்

காந்து கண்ணுடை வச்சிர மொய்ம்பனோர் கரத்தின்

வாய்ந்த வாள்கொடே எதிர்தலுந் தன்னுடை மருங்கின்

நாந்த கந்தனை உறைகழித் தறிவன்மேல் நடந்தான்.              96

 

நடந்து வச்சிர வாகுமுன் உய்த்திட நனிதோள்

அடைந்த வாளினை விலக்கியே அறிவரில் அறிவன்

கடந்த போர்வலி கொண்டதன் வாளினாற் கடது

கடிந்து வீட்டினன் அவுணர்கோன் நாந்தகத் தடக்கை.       97

 

செய்ய தோ£¢கரந் துணிபடத் தீயவன் செறுத்தோர்

கையி ருந்திடு தண்டினை எறிதலுங் கண்டு

மையில் கேள்வியன் துணிபடுத் தவுணர்கோன் மதலை

ஐயி ரண்டவாந் தலையையும் வாளினால் அறுத்தான்.            98

 

வேறு

 

எந்தைதன் தூதுவன் எறிந்த வாளினால்

ஐந்திரு சென்னியும் அற்று வீழ்தலும்

மைந்தியல் வச்சிர வாகு வாகிய

வெந்திறல் அவுணர்கோன் வீடி னானரோ.        99

 

ஆடியல் அவுணர்தம் அண்ணல் தன்மகன்

வீடிய காலையின் வெருவிப் பாங்கரின்

நாடிய அவுணர்கள் நனிபு லம்புறீஇ

ஓடினர் திசைதொறும் உடைந்து போயினார்.             100

 

துஞ்சினன் வச்சிரத் தோளன் கண்டிது

நெஞ்சகம் மகிழ்ந்திவண் நிற்ப னேயெனின்

வெஞ்சின அவுணர்கோன் வினவில் தீமையென்

றஞ்சினன் கரந்தென அருக்கன் போயினான்.              101

 

ஆகத் திருவிருத்தம் - 904

     - - -

 

 

18.  யா ளி மு க ன்  வ தை ப்  ப ட ல ம்

 

திண்டிறல் அவுணர்கோன் சிறுவன் வீந்ததும்

மண்டமர் இயற்றிட வருநர் இன்மையுந்

தண்டம துடைந்ததுந் தபனன் மாய்ந்ததுங்

கண்டனன் இனையன கருதல் மேயினான்.                       1

 

எந்தையை எள்ளினான் இருந்த கோநகர்

சிந்தினன் புரத்தையுஞ் சிறிது வீட்டினன்

வந்தவர் யாரையும் மாய்வு செய்தனன்

புந்தியின் வெகுளியிற் சிறிது போக்கினன்.                2

 

ஏலவெம் போர்செய எவரும் வந்திலர்

ஞாலம தவிரொளி நடாத்து ஞாயிறு

மேல்கடல் நீந்தினன் விரையப் போனினான்

மாலையும் இவ்விடை வந்து நேர்ந்ததே.                 3

 

அறந்தனை நினைகிலா தல்லல் செய்பவர்

உறைந்திடு நகரிதின் ஒற்றிற் போந்தயான்

சிறந்திடும் அறுமுகத் தேவ தேவனை

மறந்திட லாங்கொல்இம் மாலை காறுமே.                       4

 

ஏவரும் வழுத்திய எநதை கந்தவேள்

பூவடி தணந்திடு புலம்பும் இவ்விடைத் 

தேவர்கள் புன்மையுந் தீர வல்லையிற்

போவது துணிவெனப் புந்தி தேற்றினான்.                 5

 

தேற்றிய திறலுடைச் செம்மல் இம்மென

மாற்றலர் படுநில வரைப்பு நீங்கியே

காற்றெனக் கனலெனக் காலன் என்னவெங்

கூற்றென மறுகிடைக் குலவி ஏகினான்.                  6

 

திறல்கெழு மொய்ம்புடைச் செல்வன் செல்லுழி

மறுகிடை அவுணர்கள் மறலி மற்றிவன்

குறுகலிர் நுங்களைக் கொல்வன் கொல்வனென்

றறைகுநர் முறைமுறை அரற்றி ஓடினார்.                       7

 

                       எஞ்சிய அவுணர்கள் யாரும் இவ்வகை

அஞ்சினர் இரிந்திட அழிந்து முன்னையாள்

துஞ்சிய ஆவணத் தொகைகள் தந்தாராய்

விஞ்சிய மகேந்திரம் விடுத்து நீங்கினான்.                8

 

புடையகல் மகேந்திர புரத்தை நீத்தபின்

விடைபொரு வலியினான் விண்ணின் பாலெழீஇ

முடுகினன் வழக்கொடு முருகற் போற்றியே

வடதிசை இலங்கையின் வரைப்பு நண்ணினான்.          9

 

     வேறு

 

ஆங்கது காலையில் அனைய

பாங்கரின் மேவரு பழையோன்

ஓங்கிய மூவெயி லுள்ளோர்

தாங்கிய வன்மை தரித்தோன்.                          10

 

முடியும் மகேந்திர மூதூர்

வடதிசை யார்அரண் மன்னி

உடைய இலங்கையின் ஓம்பும்

படியறு காவல் பரித்தோன்.                             11

 

ஆயிர மாமுகன் அடுதோள்

ஓய்வில் இராயிர முடையோன்

ஞாயிறு தன்மகன் நகரின்

வாயில்கள் அன்னதோர் வாயான்.                       12

 

வடவரை ஆயிரம் வந்தோர்

உடல்கொடு மேவிய தொப்பான்

படைபல பாணி பரித்தான்

கடையழல் கான்றிடு கண்ணான்.                13

 

தண்ணளி யோரிறை தானும்

உண்ணிகழ் வற்ற உளத்தான்

எண்ணரும் வெம்பவம் யாவும்

பண்ணினன் அன்று பயின்றான்.                 14

 

மீளில் சினத்ததி வேகக்

கோளரி யைத்தரு கொடியோன்

யாளி முகத்தவன் என்போன்

வாள்வய முற்றிடு வலியோன்.                         15

 

வேறு

 

பெருந்தகை யாங்கவன் பெயர்ந்த காலையின்

அருந்திறற் சூரனை அடைந்து மீண்டுபின்

மருந்துறழ் தன்மகன் மாட்சி தேர்வுறீஇ

இருந்தனன் வருந்தியே இலங்கை தன்னிடை.             16

 

சண்டவெங் கதிகொடு தமியன் சேறலுங்

கண்டனன் யாரிவன் கள்வன் போலுமால்

விண்டலம் நீந்தியே மேவு வானெனத் 

தொண்டுசெய் உழையரில் ஒருவன் சொல்லுவான்.               17

 

நங்குல நாயக நவில்வன் கேட்டிநீ

செங்கதிர் முளைத்துழிச் செல்வற் காணிய

பொங்கொளி மகேந்திர புரத்திற் போந்தனை

இங்குநின் திருமகன் இருந்து காப்பவே.                  18

 

போந்திடு கின்றபின் புணரி தன்னுள்வான்

நீந்தினன் நீங்கிவன் நேர வன்னதை

வாய்ந்திடு பெருந்திறல் மடங்கற் பேரினான்

காந்திய கனலெனக் கண்டு சீறினான்.                    19

 

சீறினன் படையொடு சென்று தாக்கலும்

வீறொடு வருமவன் வெகுண்டு வாளுரீஇ

மாறமர்  இயற்றியே மற்ற வன்றனைக்

கோறல்செய் தொருவிறல் கொண்டு மேயினான்.          20

 

மின்னவிர் பூணுடை வீர மொய்ம்பினான்

இன்னதோர் இலங்கையின் இடைக்கட் பாய்ந்தனன்

அன்னவன் அடிபொறா தாழி உற்றதாற்

பொன்னகர் வளனொடும் அங்கட் புக்கம்போல்.            21

 

புக்கிட அளப்பிலர் பொன்ற ஏனையோர்

அக்கணம் எழுந்தனர் அவற்கண் டஞ்சியே

திக்கொடு வானமுஞ் சிந்த நின்மகன்

மைக்கடல் அகமொரீஇ வல்லை எய்தினான்.                     22

 

வெய்தென இவண்வரும் வீர னோடமர்

செய்தனன் வாள்கொடு செவ்வி அன்னதின்

மைதவழ் மேனியின் மதலை மார்புதான்

கைதலை யொருதலை கண்ட  மாக்கினான்.                     23

 

பூழியம் புயமுடைப் பொருநன் பின்னுறக்

கேழுறு வானெறி கிளர்ந்து போந்திடர்

வாழிய மகேந்திர வரைப்பிற் புக்கனன்

ஆழுறும் இலங்கையும் ஆழி மேலெழ.                          24

 

சூருறை திருநகர் துன்னி யாயிடைச்

சீரினை முழுவதுஞ் சிந்தி நங்குல

வீரரொ டேயமர் விளைத்து வென்றவன்

நேருநா¢ இன்மையின் நீங்கி னானரோ.                  25

 

என்னலும் உருமினும் இடித்த சொல்லினன்

வன்னிகொள் உயிர்ப்பினன் மடித்த வாயினன்

துன்னிய வியர்ப்பினன் சுழலுங் கண்ணினன்

மெய்ந்நிறை வெகுட்சியன் விளம்பல் மேயினான்.         26

 

காண்டியென் கடிமுறை கடந்து மைந்தனை

ஈண்டுயிர் வவ்வியே இறைவன் ஊர்புகா

மீண்டிடு கள்வன்இவ் வீரந் தன்னொடே

மாண்டிட அடுகுவன் வன்மை யாலென்றான்.                     27

 

என்றிவை விளம்பியே யாளி மாமுகன்

குன்றென ஏழுந்தொரு கொற்ற வாள்கொளீஇ

நின்றசில் படையொடு நேர்ந்து வீரன்முன்

சென்றனன் இனையன செப்பல் மேயினான்.                      28

 

நங்கடன் முறையினை நடாத்து மைந்தனை

இங்கடல் செய்தனை இனைய காப்பொரீஇ

அங்கடற் போந்தனை அழிவு செயதனை

வெங்கடல் கடந்தனை மீடி யேகொலாம்.                 29

 

ஒல்லொலி அளக்கரை உகண்டு நிற்கினிச்

செல்லுதல் அரிதியான் செருவின் நேர்ந்தனன்

கொல்லுவன் பெருவயங் கொள்வன் நீயிவண்

வல்லது புரிமதி மதியிலாய் என்றான்.                           30

 

சொற்றது கேட்டலுந் துழனிப் பேரொலி

உற்றெரி கனலென உயிர்ப்பு மூரலுஞ்

செற்றமும் எய்தியே துளக்கிச் சென்னியைக்

கொற்றமொய்ம் புடையதோர் குரிசில் கூறுவான்.         31

 

ஒருதலை யுடையவென் னுயர்வும் ஆயிரந்

தருதலை யுடையநின் தாழ்வும் யாமிவட்

பொருதலை இழைத்திடும் போது காண்புறுங்

கருதலை பெருபடி வமைந்த காட்சியே.                  32

 

தீயவ இம்மொழி திண்ணந் திண்ணமுன்

மாயிரும் புழைக்கையின் மாமு கங்களோர்

ஆயிரந் தன்னையும் அறுத்து வீட்டியே

நாயினங் கவரிய நல்கு வேனென்றான்.                  33

 

கருணைகொள் நந்தியங் கணத்தன் இவ்வகை

உரைதரும் எல்லையின் உததி மேருமால்

வரையினை விழுங்கிய வளைந்த தேயென

விஆவொடு படைஞர்கள் வீரற் சுற்றினார்.                       34

 

சுற்றிய தானையர் தோன்றல் மீதுதாம்

பற்றிய படைக்கலம் பலவுந் தூண்டியே

செற்றமொ டமர்வினை செய்யச் சூறைபோல்

மற்றவர் சூழலுள் வாள்கொண் டெய்தினான்.                     35

 

துண்டமும் அகலமுந் தோளுந் தாளுமொண்

கண்டமுஞ் சென்னியுங் கரமு மானவை

விண்டுவிண் டழிவுற வெய்ய தானவர்

தண்டம தனைத்தையுந் தடிந்திட் டானரோ.                      36

 

வேறு

 

அறுகு மாமுகத் தண்ணல் ஆற்றவுங்

கறுவு பெற்றிடுங் கருத்தின் வீரனைக்

குறுகி ஆயிரங் கொண்ட கைகளால்

இறுதி யூழிநாள் இடியின் எற்றினான்.                           37

 

அடித்த கைகளை அங்கை ஒன்றினால்

பிடித்து மேலவன் பெருங்கை வாளினால்

உடைத்த சோரிநீர் உகுத்து வீழந்திறை

துடித்தி டும்படி துண்டம் ஆக்கினான்.                            38

 

ஆயி ரங்கரம் அறலும் மற்றுள

ஆயி ரங்கரம் அவைகள் நீட்டியே

ஆயி ரங்கிரி அவைப றித்தனன்

ஆயி ரங்கணான் ஆடல் கொண்டுளான்.                  39

 

பறித்த ஆயிரம் பருப்ப தத்தையுங்

கறுத்து வீரன்மேற் கடிது வீசலும்

இறத்தல் கொண்டுமெய் எங்கும் எய்தியே

புறத்து வீழ்ந்தன உடைந்து பூழியாய்.                            40

 

பொற்றை யாவையும் பூழி ஆகியே

அற்ற காலையில் ஐயன் தூதுவன்

மற்றை ஆயிரம் வான்க ரத்தையுங்

கொற்ற வாள்கொடே குறைத்து வீட்டினான்.                      41

 

இழைக்கும் எல்லையின் எய்துங் கூற்றினை

அழைக்கு மாறென ஆர்த்துத் தானவன்

தழைக்கு மொய்ம்பினான் தன்னைப் பற்றுவான்

புழைக்கை முற்றவும் பொள்ளென் றுய்த்தனன்.           42

 

உய்த்த காலையின் ஒருதன் வாளினால்

எய்த்த வன்மைசேர் யாளி மாமுகன்

பத்து நூறெனப் பட்ட சென்னியுங்

கொத்தொ டேவிழக் குறைத்திட் டானரோ.                       43

 

ஆகத் திருவிருத்தம் - 947

     - - -

 

 

19.  வீ ர வா கு  மீ ட் சி ப்  ப ட ல ம்

 

இன்ன பான்மையால் யாளி மாமுகன்

தன்னை அட்டபின் தன்கை வாளினைப்

பொன்னு லாவுறை புகுத்திச் சென்றனன்

மின்னு செஞ்சுடர் மேனி வீரனே.                        1

 

இந்தி ரத்திரு இலங்கை நீங்கியே

அந்தி ரைக்கடல் அழுவம் வாவியே

கந்த மாதனங் கவின்ற வேலைசேர்

செந்தி மாநகர் சென்று புக்கனன்.                        2

 

புக்க காலையில் பொருவில் ஆற்றலான்

மிக்க சேவகன் மேவல் காணுறாத்

தொக்க பாரிடஞ் சோமற் காணுறு

மைக்கருங் கடல் மான ஆர்த்தவே.                             3

 

பாரி டத்தொகை பரிக்கும் மன்னவர்

சேர வந்துதஞ் செங்கை கூப்பியே

வீர வாகுவை மெய்யு றத்தழீஇ

ஆர்வம் எய்தினார் அன்பு கூறினார்.                             4

 

தழுவு வோர்தமைத் தானும் புல்லியே

இழிஞர் தம்பதிக் கேகும் வெம்பவம்

ஒழிவ தாயினன் உமைக்கண் டேயெனா

முழுவ லன்பினான் முகமன் கூறினான்.                 5

 

விலக்கில் வன்மைகொள் வீர வாகுவை

இலக்கத் தெண்மரும் எதிர்ந்து மற்றவன்

மலர்க்க ருங்கழல் வணங்கிக் கைதொழ

அலக்கண் நீங்குமா றனையர்ப் புல்லினான்.                      6

 

அமைவில் பாரிடத் தனிக வேந்தருக்

தமர்க ளாயினோர் தாமுஞ் சூழ்வர

விமல னாகியே வீற்றி ருந்திடுங்

குமர நாயகன் கோயில் மேயினான்.                             7

 

விண்டு வானுளோர் விரிஞ்சன் மாதவர்

கொண்டல் ஊர்பவன் குழுமிப் பாங்குற

அண்டர் நாயகன் அமருந் தன்மையைக்

கண்டு முந்துகண் களிப்பின் மேயினான்.                 8

 

உள்ளம் அன்புடன் உருகத் தூயநீர்

வௌ¢ளங் கண்ணுற விதிர்ப்பு மேவரப்

பொள்ளெ னப்புரம் பொடிப்பச் சூரடும்

வள்ளல் சேவடி வணங்கி னானரோ.                             9

 

அணங்கு சால்வுறும் அந்தண் சேவடி

வணங்கி மும்முறை மகிழ்ச்சி அன்பிவை

இணங்க அஞ்சலித் தேத்தி நிற்றலுங்

குணங்கள் மேற்படுங் குமரன் கூறுவான்.                 10

 

சுரரை வாட்டுறுஞ் சூரன் முன்புபோய்

விரைவின் நம்மொழி விளம்ப மற்றவன்

உரைசெய் திட்டதும் ஒல்லை மீண்டதும்

மரபின் இவ்விடை வகுத்தியால் என்றான்.                       11

 

வீரன் கூறுவான் விமல நின்மொழி

சூரன் முன்புபோய்ச் சொல்ல விண்ணுளோர்

ஆரி ருஞ்சிறை அதனை வீடலே

காரி யம்மெனக் கருத்திற் கொண்டிலன்.                 12

 

கெடல ருஞ்சுரர் கிளையை வெஞ்சிறை

விடுகி லேனொ வெகுண்டு கூறினான்

அடிகள் அன்னதால் ஆண்டு நீங்கியே

கடிது வந்தனன் கருமமீ தென்றான்.                             13

 

என்ற காலையின் யாண்டு மாகியே

நின்று முற்றொருங் குணர்ந்த நீர்மையான்

உன்றன் செய்கையுள் ஒன்றுஞ் சொற்றிலை

நன்று மற்றது நவிறியால் என்றான்.                            14

 

தொடக்க முற்றுவாழ் சூரன் மாநகர்

அடுத்த காலையின் அகன்ற வேலையில்

தடுத்து ளோரைநின் சரண வன்மையால்

படுத்து வந்தனன் பான்மையீ தென்றான்.                 15

 

அருந்தி றற்புயன் அனைய செப்பலும்

இருந்த கந்தவேள் இகலி னோர்களால்

வருந்தி னாய்கொலோ மன்ற என்றுதன்

திருந்து பேரருள் செய்தல் மேயினான்.                          16

 

அங்கவ் வெல்லையின் ஆயிர ரம்பெயர்ச்

செங்கண் மாயவன் திசைமு கத்தவன்

மங்குல் மேலவன் வதன நோக்கியே

எங்கள் நாயகன் இனைய கூறுவான்.                            17

 

தேவ ரைச்செயுஞ் சிறைவி டுத்துநீ

மேவு நன்கெனா வெய்ய சூரனுக்

கேவு தூதைவிட் டியம்பு வித்தனம்

பாவி யன்னது பயனென் றுன்னலான்.                           18

 

வீத லேயவன் விதிய தாதலின்

தீதில் விண்ணவா¢ சிறைவி டோமென

ஓதி னான்அவன் உயர்வு நீக்குவான்

போது நாளையா மெனப்பு கன்றனன்.                            19

 

ஆறு மாமுகத் தையன் இவ்வகை

கூறக் கேட்டுளோர் கொடிய சூர்மிசைச்

சேறு மென்றசொல் தௌ¤வின் நந்துயர்

மாறிற் றென்றனர் மகிழ்ச்சி எய்தினார்.                  20

 

ஆன வத்துணை ஆடன் மொய்ம்பினான்

தான அப்பதிச் சயந்தன் உற்றதும்

ஏனைச் செய்கையும் எடுத்துக் கூறியே

வான வர்க்கிறை மனத்தைத் தேற்றினான்.                       21

 

சீரு லாமகேந் திரபு ரத்தினும்

வீர வாகுமீண் டதுவி ளம்பினாம்*

ஆர ஞர்க்கடல் அலைப்ப ஆண்டுறுஞ்

சூர னுற்றதும் பிறவுஞ் சொல்லுவாம்.                           22

 

( * விளம்பினாம் - கூறினோம்; கவிக்கூற்று.)

 

ஆகத் திருவிருத்தம் - 969

     - - -

 

 

20.  சூ ர ன்  ந க ர் பு ரி  ப ட ல ம்

 

ஊக வான்படை உலப்ப வச்சிர

வாகு மாண்டதும் வாகை மொய்ம்பினான்

ஏகுந் தன்மையும் ஏவல் தூதுவர்

சோக மோடுபோய்ச் சூர்முன் கூறினான்.          1

 

ஈரைஞ் சென்னிசேர் இளைய கான்முளை

வீரஞ் சிந்தியே விளிந்த வாற்றினைச்

சூரன் கேட்டலுந் துளங்கித் துன்பெனும்

வாரி யுள்ளுற மயங்கி வீழ்ந்தனன்.                     2

 

வேறு

 

கண்ணிடை நெடும்புனல் கால மைந்தன்மேல்

உண்ணிகழ் அன்புசென் றுயிரை ஈர்ந்திடத்

துண்ணென உயிர்ப்பெனும் புகையுஞ் சுற்றிட 

எண்ணருஞ் செல்லல்கொண் டிரங்கி ஏங்கினான்.          3

 

ஏங்கினன் புலம்பலும் இனைய வெய்யசூர்

பாங்கமர் தமர்களும் பரிச னத்தருந்

தீங்குசெய் அரக்கருந் தெரிவை மார்களும்

நீங்கற அழுதனர் நெடுங்கண் நீருக.                             4

 

பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன்

ஒழிவுறு தன்மையை ஓர்ந்து மாமலர்க்

குழலவிழ்ந் தலமரக் கொங்கை மேற்புடைத்

தழுதனள் வீழ்ந்தனள் மறிக்கும் அங்கையாள்.            5

 

தொல்லியல் இழுக்கிய சூர னென்பவன்

புல்லிய பின்முறைப் புணர்வின் மாதருஞ்

சில்லியற் கூந்தல்தாழ் சேடி மார்களும்

எல்லவ ருந்தழீஇ யிரங்கல் மேயினார்.                          6

 

களமெழு மிசையொலி கடிநல் யாமொலி

துளையொலி வயிரொலி தூரி யத்தொலி

அளமரு மொழியொலி அடங்கி அப்பெரு

நளநகர் புலம்பொலி மயங்கிற் றென்பவே.                7

 

அன்னது போழ்தினில் அறத்தைக் காய்தரு

துன்னெறி மந்திரி சூர பன்மனாம்

மன்னவன் முன்னுற வந்து கைதொழு

தின்னன கேண்மென இசைத்தல் மேயினான்.             8

 

மெய்ப்புவி அண்டங்கள் பரித்த மேன்மையை

ஒப்பருந் திருவினை உலப்பி லாயுளை

செப்பருந் திறலினை சிறந்த சீர்த்தியை

இப்பரி சழுங்குதல் இயற்கை யாகுமோ.                  9

 

தெண்டிரை நேமிவான் செறிந்து கொள்ளினும்

அண்டம தழியினும் அனைத்து மாயினும்

விண்டிடல் இன்றிவாழ வீர நீமனங்

கொண்டிடு திண்மையுங் குன்றற் பாலதோ.                       10

 

ஏவரும் வியத்தகும் இறைவ நீயிவண்

ஓவென அரற்றியே உயங்குற் றாயெனின்

மூவரும் நகைப்பர்கள் முன்னம் ஏவல்செய்

தேவரும் நகைப்பர்கள் புகழுந் தேயுமால்.                11

 

பூதர்தம் படையல புராரி நல்கிய

காதல னேயல கழற விட்டதோர்

தூதுவன் செய்தபுன் தொழிலுக் காற்றலை

பேதுற லாகுமோ பெருமைக் கீறிலாய்.                          12

 

தந்தையர் துஞ்சினுந் தம்முன் பின்னவர்

மைந்தர்கள் துஞ்சினும் மற்றுஞ் சார்ந்தவர்

தந்தொகை துஞ்சினுஞ் சயத்தின் மேலையோர்

சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தேயுமோ.                    13

 

மேதகு பெருந்திறல் வீரர் தம்மையும்

மாதரும் ¦லிவரால் மாயும் ஊழ்வரின்

ஆதலின் நின்மகற் காயுள் குன்றலின்

தூதனும் அட்டன னாகித் தோன்றினான்.                 14

 

வெவ்விய ஒன்னலர் வினையும் வன்மையுங்

கைவரு நெல்லியங் கனியின் நாடியே

செய்வகை தேற்றினஞ் செய்க லாதிவண்

நைவதும் ஆண்மையின் நலத்திற் காகுமோ.                     15

 

வரங்களும் மதுகையும் வரம்பின் றெய்தியே

உரங்கிளர் சூரனென் றொருபேர் பெற்றநீ

தரங்கம தடைவதுந் தலைமைக் கேற்பதோ

இரங்கலை இரங்கலை யென்று தேற்றினான்.                     16

 

மேற்றிகழ அறத்தினை வெகுளும் நாமத்தான்

தேற்றலும் அவுணர்கோன் தௌ¤வு பெற்றெழீஇ

ஆற்றருந் துயரினை அடக்கித் தன்பணிக்

கூற்றியல்  உழையரை நோக்கிக் கூறுவான்.                     17

 

சேயுயிர் வௌவியே சிறந்த இந்நகர்

மாய்வது புணர்ந்திடு வலிய தூதுவன்

போயது தெரிந்திரோ புகலக் கேட்டிரோ

நீயிர்கள் வாய்மையை நிகழ்த்து மென்னவே.                     18

 

துப்புடன் இவ்வழி தூதிற் சென்றுளான்

இப்புரம் அகன்றனன் இலங்கை நோக்குறா

அப்புற மேகினான் அதனைக் கண்டனம்

மெய்ப்பரி சி•தென விளம்பி னாரரோ.                           19

 

வேறு

 

அம்மொழி வினவ லோடும் அவுணர்கோன் தன்பால் நின்ற

கம்மியர் தம்மை நோக்கிக் கடிதுபோய் அகிலம் நல்கிச்

செம்மலர் மிசையே வைகுந் திசைமுகத் தொருவன் றன்னை

இம்மெனக் கொணா¢திர் என்ன அனையவா¢ இசைக்க லுற்றார்.    20

 

ஈங்கிது கேட்டி மன்ன இனையமூ தண்டம் நல்குந்

தேங்கமழ பதுமத் தண்ணல் தேவர்கோ னாதி யான

பாங்கின ரோடு மேவிப் படையொடும் புவியில் வந்த

காங்கெயன் றன்கண் உற்றான் உன்பராற் கண்டோர் என்றார்.       21

 

தொழுவர்கள் இனைய மாற்றஞ் சொற்றலுஞ் சூரன் கேளா

விழுமிது விழுமி தென்னா வெய்துயிர்ப் பெய்திச் சீறி

அழலெழ நகைத்து மற்றை அண்டத்தின் இருந்து நல்குஞ்

செழுமலர் அயனைப் பற்றிச் செல்லுமின் வல்லை என்றான்.              22

 

கொற்றவன் இனைய மாற்றங் கூறலும் உழையர் கேளா

இற்றிது செய்தும் என்னா இசைவுகொண் டொல்லை ஏகி

மற்றையண் டத்திற் சென்று வானவர் முதுவன் றன்னைப்

பற்றினர் கொணர்ந்தார் தங்கோன் பணித்திடு பரிசு கூறி.           23

 

பரிசனர் பலரும் ஈண்டிப் பார்புகழ் சூர னென்னும்

அரசன்முற் கொணர்ந்து வேறோ£¢ அண்டத்தின் அயனை உய்ப்ப

வரிசையால் அவனை நோக்கி மாணழி வுற்ற மற்றித்

திருநகர் அதனைத் தொன்மை போலவே செய்தி யென்றான்.               24

 

சூரன்மற் றிதனைச் செப்பச் சொற்பணி தலைக்கொண் டைய

ஓரிறை யொடுங்கு முன்னர் உனதுதொன் னகர மாற்ற

ஏருற முன்ன மேபோல் இயற்றுவன் யானே யென்னாப்

பேருல குதவுகின்ற பெற்றியை நினைந்து செய்வான்.                     25

 

பொன்மதில் மாட வீதி பொலன்மணிச் சிகரம் வேரம்

மன்மதன் விழையுஞ் சோலை மண்டபம் வாவி பொய்கை

சென்மலி அரங்க மன்றந் தெற்றியே முதல வெல்லாந்

தொன்மைபோல் ஆகத் தன்கைத் தொழில்முறை படைத்தான்மன்னோ.26

 

இவ்வகை நகர முற்றும் எழில்பெறப் படைத்த பின்றை

மைவரை மேனி மன்னன் மாபெருங் கோயில் தன்னைச்

செவ்விதின் முதுமை போலச் சிறப்பினால் திருத்தல் செய்தான்

ஐவகை இருபான் கொண்ட அல்லியங் கமலத் தண்ணல்.          27

 

கொன்பெரு நகரும் அந்தண் கோயிலும் படைத்த லோடும்

மன்பெருந் தகைய சூரன் மற்றவன் செய்கை நோக்கி

அன்புசெய் துவகை யாகி அவுணர்கள் யாரும் போற்ற

முன்புபோல் அரிமா னேற்று முழுமணித் தவிசின் உற்றான்.               28

 

உற்றன னாகிப் பின்னர் ஓதிமத் திறையை நோக்கி

மற்றுநின் னண்டஞ் சென்று வைகுதி நல்கி என்னாச்

சொற்றினர் ஏவ அன்னோன் துண்ணென விடைபெற் றேகிப்

பெற்றதன் னண்டஞ் சென்று பிறங்குதன் னுலகம் புக்கான்.         29

 

ஆகத் திருவிருத்தம் - 998

     - - -

 

 

 

21.  சூ ர ன்  அ மை ச் சி ய ற்  ப ட ல ம்

 

அந்தநல் லமையந் தன்னின் அவுணா¢கோன் ஏவல் போற்றி

முந்துசெல் லொற்ற ரானோர் மூரிநீர்க் கடலை வாவிச்

செந்தியிற் சென்று கந்தன் சேனையும் பிறவுந் தேர்ந்து

வந்தனர் விரைவின் அங்கண் மன்னனை வணங்கிச் சொல்வார்.    1

 

ஏற்றவெம் பூத வௌ¢ளம் இராயிரம் படையின் வேந்தர்

நூற்றுடன் எண்மர் பின்னும் நுவலருஞ் சிறப்பின் மிக்கோர்

மேற்றிகழ் இலக்கத் தொன்பான் வீரர்மற்றி னையரோடுந்

தோற்றமில் பரமன் மைந்தன் தொடுகடல் உலகின் வந்தான்.               2

 

சரமீ தவுணர் கோவே தாரக வீரன் தன்னைக்

கரையறு மாயை போற்றுங் காமரு பிறங்கல் தன்னை

இருபிள வாக வேலால் எறிந்தனன் ஈறு செய்து

திரைபொரும் அளக்கர் வேலைச் செந்திமா நகரின் உற்றான்.              3

 

விலங்கிய கதிர்வேல் அண்ணல் விரைந்திவன் மேவு மாற்றால்

உலங்கிளர் மொய்ம்பில் தூதன் ஒருவனை விடுத்தான் அன்னான்

இலங்கையை அழித்து வந்தான் யாளிமா முகவன் றன்னை

வலங்கையின் வாளாற் செற்று வாரிதி கடந்து போனான்.          4

 

செங்கதிர் அயில்வேல் மைந்தன் தெண்டிரைப் புணரி வாவி

பொங்குவெங் கணங்க ளோடும் போர்ப்படை வீர ரோடும்

இங்குவந் தாடல் செய்வான் எண்ணினன் இருந்தான் ஈது

சங்கையென் றுன்னல் வாய்மை தகுவன உணர்தி யென்றார்.              5

 

ஒற்றர்சொல் வினவி மன்னன் ஒருதனி இளவல் தன்னை

அற்றமில் கேள்வி சான்ற அமைச்சரை மைந்தர் தம்மைச்

சுற்றமொ டமைந்த தானைத் தொல்பெருந் தலைமை யோரை

மற்றொரு கணத்தின் முன்னர் மரபொடு கொணரு வித்தான்.       6

 

வேறு

 

ஆங்கவர் யாவரும் அவுணர் மன்னவன்

பூங்கழல் கைதொழூஉப் புடையின் வைகலுந்

தீங்கனல் சுடுவதோர் சீற்றம் உள்ளெழ

வீங்கிய உயிர்ப்பினன் விளம்பல் மேயினான்.                    7

 

போற்றல ராகிய புலவர் யாரையும்

மாற்றருஞ் சிறையில்யான் வைத்த பான்மையைத்

தேற்றிய மகபதி சென்று சென்னிமேல்

ஆற்றலின் வைத்திடும் அமலற் கோதினான்.                     8

 

கண்ணுத லுடையதோர் கடவுள் வல்லையோர்

அண்ணலங் குமரனை அளித்து மைந்தநீ

விண்ணவர் சிறையினை வீட்டிச் செல்கெனத்

துண்ணென நம்மிசைத் தூண்டி னானரோ.                9

 

வாய்த்திடு கயிலைமால் வரையை வைகலுங்

காத்திடு நந்திதன் கணத்து வீரரும்

மீத்தகு பூதரும் விரவ மாலயன்

ஏத்திட அரன்மகன் இம்பர் எய்தினான்.                   10

 

பாரிடை யுற்றுளான் பாணி கொண்டதோர்

கூருடை வேலினாற் கொடிய குன்றொடு

தாரக இளவலைத் தடிந்து பின்னுற

வாரிதி யகன்கரை வந்து வைகினான்.                           11

 

அன்னதோர் அறுமுகன் ஆங்கொர் தூதனை

என்னிடை விடுத்தலும் ஏகி மற்றவன்

மைந்நிற நெடுங்கடல் வரைப்பிற் பாய்ந்தொராய்ப்

பொன்னவிர் இலங்கைமா புரத்தை வீட்டினான்.           12

 

இலங்கையங் காவலும் இகப்புற் றின்னதோர்

பொலங்கெழு திருநகர் நடுவட் புக்குலாய்

நலங்கிளர் என்னவைக் களத்தின் நண்ணினான்

கலங்கலன் நிறையது மாயைக் கறபினான்.                       13

 

நண்ணினன் எதிருற நவையில் வீரர்போல்

விண்ணவர் பாங்கராச் சிலவி ளம்பியென் 

கண்முனஞ் சிலருயிர் களைந்து வன்மையால்

எண்ணலன் பின்னுற எழுந்து போயினான்.                       14

 

போயவன் இந்நகர் பொடித்துச் சிந்தியான்

ஏயின வேயின படைஞர் யாரையும் 

மாயுறு வித்தனன் மற்றும் என்னிளஞ்

சேயுயர் கொண்டனன் செருக்கு நீங்கலான்.                       15

 

அழிந்ததித் திருநகர் அளப்பில் தானைகள்

கழிந்தன செறிந்தது களேப ரத்தொகை

கிழிந்தது பாரகங் கெழீஇய சோரியா

றொழிந்ததென் னாணையும் உயர்வுந் தீர்ந்ததால்.         16

 

ஒற்றென வந்தவவ் வொருவன் தன்னையும்

பற்றிவெஞ் சிறையிடைப் படுத்தி னேன்அலேன்

செற்றிலன் ஊறதே எனினுஞ் செய்திலேன்

எற்றினி வசையுரைக் கீறு கூறுகேன்.                            17

 

இம்பரின் இவையெலாம் இழைத்த தூதுவன்

நம்பதி இகந்துபோய் இங்கை நண்ணிய

மொய்ம்புடை யாளிமா முகவற் சாடியே

அம்புதி கடந்தனன் அவனி யெய்தினான்.                 18

 

கார்பொரு மிடற்றவன் காதன் மாமகன்

வாரிதி கடந்திவண் வந்து நம்மொடும்

போர்பொர நினைகுவான் போலும் இவ்வெலாஞ்

சாரணர் மொழிந்தனர் சரத மாகுமால்.                           19

 

நெற்றியில் அனிகமாய் நின்ற பூதரைச்

செற்றிகல் வீரரைச் செகுத்துச் செயினை

வெற்றிகொண் டேனையர் தமையும் வீட்டியே

மற்றொரு விகலைமுன் வரவல் லேனியான்.                    20

 

சூரனென் றொருபெயர் படைத்த தொல்லையேன்

பாரிடர் தம்மொடும் பாலன் தன்னொடும்

போரினை இழைத்திடல் பு£¤ந்து வெல்லினும்

வீரம தன்றெனா வறிது மேவினேன்.                            21

 

துய்த்திடுந் திருவினில் வலியிற் சூழச்சியில்

எத்துணைப் பெரியர்தாம் எனினும் மேலையோர்

கைத்தொரு வினைசெயக் கருதிற் றம்முடை

மெய்த்துணை யோரைமுன் வினவிச் செய்வரால்.        22

 

ஆதலின் வினவினன் யானு மாற்றுதல்

ஈதென வுரைத்திரால் என்று மன்னவன்

ஓதினன் அன்னதை உணர்ந்து கைதொழூஉ

மேதியம் பெயரினான் இவைவி ளம்பினான்.                     23

 

மேலுயர் மாயைகள் விளைக்கும் வெற்பினை

மாலினை வென்றநின் வலிய தம்பியை

ஏலவொர் கணத்தின்முன் எறிந்த வீரனைப்

பாலனென் றுரைப்பதும் உணர்பின் பாலதோ.                     24

 

மேதகு தாரக வீரன் தானையை

ஆதிபர் தம்முடன் அட்ட தீரரை

ஏதுமோர் வலியிலா எளிய ரென்பதும்

பூதரென் றிகழ்வதும் புலமைப் பாலவோ.                 25

 

மீதெழு திரைக்கடல் விரைவிற் பாய்ந்துநம்

மூதெயில் வளநகர் முடித்து நின்னுடைக்

காதல னுயிரையுங் கவர்ந்த கள்வனைத்

தூதனென் றுரைப்பதும் அறிஞர் சூழ்ச்சியோ.                     26

 

சற்றையஞ் சிறையுடைக் கலுழன் ஊர்தரு 

கொற்றவன் திசைமுகன் அமரர் கோமகன்

மற்றொரு வடிவமாய் வந்த தேயலால் 

ஒற்றுவன் நிலைமைவே றுணரற் பாலதோ.                      27

 

உன்றனி இளவலும் ஒருநின் னோங்லும்

பொன்றிய காலையே புராரி மைந்தன்மேற்

சென்றிலை யல்லதுன் சேனை தூண்டியும்

வென்றிலை தாழ்த்திவண் வறிது மேவினாய்.                    28

 

தீயழல் வறியதே எனினுஞ் சீரியோர்

ஏயிது சிறிதென எள்ளற் பாலரோ

வாயத னாற்றலை அடக்க லாரெனின்

மாயிரும் புவியெலாம் இறையின் மாய்க்குமால்.         29

 

மாற்றலர் சூழ்ச்சிய தெனினும் மாறதாய்

வீற்றொரு நிலைமைய தெனினும் மேவுமுன்

ஏற்றெதிர் காப்பரே என்னின் அன்னவர்க்

காற்றரும் இடுக்கண்வந் தடைதற் பாலதோ.                      30

 

துறந்திடா வளந்தனைத் துய்த்துச் செய்வகை

மறந்தன மாகியே வன்மை யாளவரை

எறிந்தவர் தமையிகழ்ந் திங்ஙன் வாழ்துமேற்

சிறந்தவர் யாமலால ஏவர் சீரியோய்.                           31

 

முன்னமக் குமரன்மேல் முனிந்து சேறியேல்

உன்னகர்க் கேகுமோ ஒற்று மற்றுநீ

அன்னது புரிந்திலை ஆடல் மைந்தனோ

டிந்நகர் அழிந்ததென் றிரங்கற் பாலையோ.                       32

 

மொய்யுடை நின்முகன் முடிந்த தன்மையும்

ஐயநின் திருநகர் அழிவ தானதுஞ்

செய்யுறு நிலைமைகள் தெரிந்து செய்திடா

மையலின் கீழ்மையால் வந்த வாகுமால்.                33

 

கழிந்திடு பிழையினைக் கருதிச் சாலவுள்

அழிந்திடல் இயற்கையன் றறிஞர்க் காதலால்

ஒழிந்தன போகவொன் றுரைப்பன் கேண்மியா

விழிந்ததென் றுன்னலை இமைப்பிற் செய்திநீ.                   34

 

ஆயது பிறவிலை அவுணர் தம்மொடு

மேயின படையொடும் விரைந்து கண்ணுதற்

சேயினை வளைந்தமர் செய்யப் போதியால்

நீயினித் தாழ்க்கலை நெருநல் போலவே.                35

 

என்றிவை மேதியன் இசைப்பக் கேட்டலும்

நன்றிது வாமென நவின்று கையெறிந் 

தொன்றிய முறுவலும் உதிப்ப நல்லறங்

கொன்றிடு துர்க்குணன் இனைய கூறுவான்.                      36

 

வன்றிறல் உவணன்மேல் வந்த மாயன்மேல்

நின்றிடும் அமரர்மேல் நேர்ந்து போர்செயச்

சென்றிலை இளையரால் திறல்கொண் டேகினாய்

இன்றினிப் பாலன்மேல் ஏக லாகுமோ.                           37

 

இறுதியில் ஆயுளும் இலங்கும் ஆழியும்

மறுவிலா வெறுக்கையும் வலியும் வீரமும்

பிறவுள திறங்களுந் தவத்திற் பெற்றனை

சிறுவனொ டேயமர் செய்தற் கேகொலாம்.                       38

 

மேதகு பசிப்பிணி அலைப்ப வெம்பலிக்

காதல்கொண் டலமருங் கணங்கள் தம்மையுந்

தூதுவன் தன்னையுந் தொடர்ந்து போர்செயப்

போதியோ அமரரைப் புறங்கண் டுற்றுளாய்.                      39

 

இன்றுநின் பெரும்படைக் கிறைவர் யாரையுஞ்

சென்றிட விடுக்குதி சிறிது போழ்தினில்

குன்றெறி பகைஞனைக் கூளி தம்மொடும்

வென்றிவண் மீள்குவர் வினைய மீதென்றான்.            40

 

கருதிடு துர்க்குணக் கயவன் இன்னன

உரைதரு முடிவினில் ஒழிக இங்கெனாக்

கருமணி யாழியங் கைய மைத்தரோ

தருமவெம் பகையுடை யமைச்சன் சாற்றுவான்.          41

 

குலம்படு நவமணி குயின்று பொன்புனை

அலம்படை கொண்புன் முதிரை ஆக்கத்தாற்

புலம்படக் கீறுவ போலும் வீரநீ

சிலம்படி மைந்தனோ டாடல் செய்வதே.                 42

 

மேலுயர் கண்ணுதல் விமலன் அன்றெனின்

ஆலவன் அன்றெனின் அயனும் அன்றெனில்

காலனும் அன்றெனிற் காவல் வீரநீ

பாலனொ டமர்செயிற் பயனுண் டாகுமோ.                       43

 

மன்னிளங் குதலைவாய் மதலை மீதினும்

இன்னினி அமா¢செய இறத்தி யென்னினும்

அன்னவன் நினதுபோ ராற்றல் காண்பனேல்

வென்னிடும் எதிர்ந்துபோர் விளைக்க வல்லனோ.         44

 

நேரலல் தங்களை நேர்ந்து ளாரெனப்

பேரிகல் ஆற்றியே பெரிது மாய்வதும்

பூரியா¢ கடனலாற் புலமைக் கேற்பதோ

சீரியர் கடனவை தெரிந்து செய்வதே.                           45

 

எரிமுகன் இரணியன் எனுமுன் மைந்தரில்

ஒருவனுக் காற்றலர் இலக்கத் தொன்பது

பொருதிறல் வயவரும் பூதர் யாவரும்

அரனருள் புரிதரும் அறுமு கத்தனும்.                           46

 

கீள்கொடு நகங்கொடு கிள்ளும் ஒன்றினை

வாள்கொடு தடியுமோ வன்மை சான்றதோர்

ஆள்கொடு முடித்திடும் அவரை வென்றிட

நீள்கொடு மரங்கொடு நீயுஞ் சேறியோ.                   47

 

மாணிமை கூடுறா மகவு தன்னொடு 

மேணறு சாரதர் இனங்கள் தம்மொடும்

பூணுதி செருவெனும் புகற்சி கேட்பரேல்

நாணுவர் நமரெலாம் நகுவர் தேவரும்.                  48

 

பொற்றையை முடித்தனன் பொருவில் தம்பியைச்

செற்றனன் என்றிளஞ் சிறுவன் தன்னையும்

வெற்றிகொள் புதல்வனை வீட்டி னானெனா

ஒற்றையும் மதித்தனை தொன்மை உன்னலாய்.          49

 

ஆறணி செஞ்சடை அண்ணல் தந்திடும்

பேறுடை வேலினைப் பிள்ளை உய்த்தலும்

மாறுள படையினான் மாற்ற லாமையால்

ஈறது வாயினன் இளவல் தாரகன்.                              50

 

குறுமுனி தொல்லைநாட் கூறும் வாய்மையால்

இறுதியை யடைந்ததாங் கிருந்த மால்வரை 

அறிகிலை ஈதெலாம் ஆற்றல் கூடுறாச்

சிறுவன செய்கையே சிந்தை கோடியால்.                51

 

எச்சமொ டழிவுறா இரதஞ் சாலிகை

கைச்சிலை பெற்றிலன் கருதி நீயவை

அச்சொடு புரிந்தலை அதனில் தூதனால்

வச்சிர வாகுவாம் மகனுந் துஞ்சினான்.                  52

 

பலவினி மொழிவதென் படியில் தானவத்

தலைவரில் ஒருவனை விளித்துத் தானையோ

டிலையயின் முருகன்மேல் ஏவு வாயெனின்

அலைவுசெய் தொல்லையின் அடல்பெற் றேகுவான்.              53

 

அன்னது செய்கென அறத்தைச் சீறுவான்

சொன்னதோர் இறுதியின் முறுவல் தோன்றிடக்

கன்னிகர் மொய்ம்புடைக் கால சித்தெனுங்

கொன்னவில் வேலினான் இனைய கூறுவான்.            54

 

செந்தியின் இருந்திடுஞ் சிறுவன் சாரதர்

தந்தொகை தன்னொடு மீண்டு சாருமேல்

எந்தையொர் சிலவரை ஏவல் அல்லது

மந்திரம் வேண்டுமோ மற்றி தற்குமே.                           55

 

வயந்தன தையனை வாச வன்றனைச்

சயந்தனைப் பிறர்தமைச் சமரின் வென்றநாள்

இயைந்தெமை வினவலை இன்றொர் பாலற்கா

வியன்பெரு மந்திரம் வேண்டிற் றாங்கொலோ.                   56

 

அண்டர்கள் ஒடுங்கினர் அரக்கர் அஞ்சினர்

எண்டிசைக் கிழவரும் ஏவ லாற்றுவர்

மண்டமர் அவுணரின் வலியர் பூதராங்

கண்டனம் இன்றியாங் கலியின் வண்ணமே.                      57

 

பணிக்குதி தமியனைப் பரமன் மைந்தனைக்

கணத்தொகை வீரரைக் கால பாசத்தாற்

பிணித்திவண் வருகுவன் என்று பேசலுந்

துணுக்கெனச் சண்டன்என் றொருவன் சொல்லுவான்.      58

 

கழிபசி நோயடக் கவலும் பூதரும்

மழலையம் பிள்ளையும் மற்ற வற்குறு

தொழில்புரி சிலவருஞ் சூழ்ச்சிப் பாலரோ

அழகிது மந்திரம் அவுணர்க் காற்றவே.                   59

 

கொல்லுவன் பூதரைக் குமரன் றன்னையும்

வெல்லுவன் பிறரையும் விளிவு செய்வனான்

மல்லலந் தோளுடை மன்னர் மன்னவுன்

சொல்லதின் றென்னஇத் துணையுந் தாழ்த்துளேன்.                60

 

ஏவுதி தமியனை இமைப்பிற் சென்றியான்

மூவர்கள் காப்பினும் முரணிற் றாக்கியே

தூவுறு சாரதத் தொகுதி தன்னொடு

மேவலன் தனைஇவண் வென்று மீள்வனால்.                     61

 

எனவிவை சண்டனாங் கிசைத்த வெல்லையின்

அனலியென் றுரைத்திடும் அவுணர் காவலன்

சினமொடு முறுவலுஞ் சிறிது தோன்றிட

வினையமொ டிம்மொழி விளம்பல் செய்குவான்.         62

 

தெம்முனை மரபிலோர் சிறுவன் என்னினும்

வெம்மையொ டேற்குமேல் வெகுண்டு மேற்செலா

தெம்மொடு மந்திரத் திருப்ப ரேயெனின்

அம்மவோ சூரருக் கழகி தாற்றலே.                             63

 

என்றிது மொழிதலும் எரியுங் கண்ணினன்

ஒன்றிய முறுவலன் உயிர்க்கு நாசியன்

கன்றிய மனத்தினன் கறித்து மெல்லிதழ்

தின்றிடும் எயிற்றினன் சிங்கன் கூறுவான்.                       64

 

வெந்தொழில் மறவரை விளித்த தன்மையும்

மந்திரம் இருந்தது மனங்கொள் சூழ்ச்சியும்

இந்திரன் உதவிசெய் இளையன் வன்மையைச்

சிந்திட வேகொலாம் நினைந்த செய்கையே.                      65

 

இருநில அண்டமேல் இருந்து ளோரெலாம்

மருவல ராகியே வருக வந்திடின்

ஒருதமி யேன்பொரு துலையச் செய்வனால்

தெரியலை போலுநின் னடியன் திண்மையே.                     66

 

வன்மையை உரைப்பது மரபன் றால்எனைச் 

சென்மென விடுக்குதி சேனை யோடுபோய்

உன்முனி வுற்றிடும் ஒன்ன லாரையட்

டின்மைய தாக்கியே வருவன் ஈண்டென்றான்.            67

 

இன்னவை போல்வன இயல்பி னேன்ஐய

துன்னெறி அமைச்சருஞ் சூழ்ச்சித் தொல்படை

மன்னரும் இசைத்தலும் வயங்கு செங்கதிர்

ஒன்னலன் கையமைத் துரைத்தல் மேயினான்.           68

 

சென்றிடு முனிவரர் தியங்க மாயைசெய்

குன்றுடன் இளவலைக் குமரன் கொன்றிடும்

அன்றெனை விடுத்தலைஅழைத்தொன் றோர்ந்திலை

இன்றிது வினவுவ தென்னை யெந்தைநீ.                 69

 

உள்ளுறு கரவினன் ஒருவ னும்பரான்

எள்ளரும் ஒற்றுவந் தீண்டு போர்செயின்

முள்ளெயி றின்னமும் முற்றுந் தோன்றிலாப்

பிள்ளையை விடுக்குமோ பெரியை சாலநீ.                      70

 

இழித்தகு தூதனால் இடா¢ப்பட டாயெனும்

பழித்திறம் பூண்டனை பாலன் ஆவியை

ஒழித்தனை நகரமும் ஒருங்கு சீரற

அழித்தனை நீயுன தறிவி லாமையால்.                          71

 

பொருளல தொன்றினைப் பொருளெ னக்கொடு

வெருவுதல் செய்வது வினைய மோர்கிலா

தொருசெயல் விரைந்துசெய் துயங்கி வாழ்தலும்

பெரியவர் கடமையோ பேதைத் தன்மையே.                     72

 

பொற்றையொ டிளவலைப் பொன்ற வீட்டினோன்

கொற்றமும் பூதர்தங் குழாத்தி னாற்றலும்

ஒற்றுவன் நிலைமையும் உணரிற் சென்றியான்

பற்றிமுன் னுய்க்குவன் பிணித்துப் பாசத்தால்.                    73

 

ஆயிரத் தெட்டெனும் அண்டத் துக்கெலாம்

நாயக முதல்வநீ நம்பன் நல்கிய

சேயமர் குறித்தெழல் சீரி தன்றெனை

ஏயினை வெற்றிகொண் டிருத்தி எம்பிரான்.                      74

 

ஆண்டெனை விடுத்தியேல் அமர தாற்றிட

மூண்டிடும் அவர்தொகை முருக்கித் தேவராய்

ஈண்டுறு வோரையும் இமைப்பில் வென்றுபின்

மீண்டிடு வேனென விளம்பி னானரோ.                  75

 

இரவியம் பகையவன் இனைய சிற்சில

உரைதரும் இறுதியின் உலைவு றாததோர்

முரணுறு தாதைதன் முகத்தை நோக்கியே

குரைகழல் இரணியன் கூறல் மேயினான்.                76

 

வேறு

 

வள்ளல் தன்மைசேர் வயப்பெருஞ் சூரனோர் மழலைப்

பிள்ளைப் போர்வலிக் கிரங்கினன் எனும்மொழி பிறக்கின்

உள்ளத் தேநினை நினைக்கினும் வெருவும்ஒன் னலரும்

எள்ளற் கேதுவாம் விடுத்தியான் மந்திரம் இனியே.                       77

 

மைதி கழ்ந்திடு மிடற்றவன் மதலைமா நிலத்தின்

எய்தி னான்அமர்க் கென்றலும் என்றனை விளித்து

வெய்தெ னப்பொர விடுத்திலை வெறுத்தியோ வினையேன்

செய்தி டுந்தவ றுண்டுகொல் உனக்கொரு சிறிது.                 78

 

பானல் போலொளிர் மிடற்றினன் பாலன்மேற் பசிநோய்க்

கூனை வேட்டுழல் பூதர்மேல் ஒழிந்துளார் தம்மேன்

மான வெஞ்சமர்க் கெம்முனோன் சேறலும் வசையே

சேனை யோடியான் ஏகுவன் செருத்தொழில் புரிய.                       79

 

வெற்றிப் பேரமர் ஆற்றியே மேவலர் தொகையைச்

செற்றுத் தேவர்கள் யாரையுந் தடிந்துசெல் குவனால்

இற்றைக் கங்குலின் என்றனை ஏவுதி யெனலும்

மற்றைத் தம்பியாம் எரிமுகன் இனையன வகுப்பான்.                    80

 

இணையி லாவண்டம் ஆயிரத் தெட்டினுக் கிறைநீ

துணைய தாயொரு வீரகே சரியுளன் சுதராய்க்

கணித மில்லவா யாமுளங் கரிபரி கடுந்தேர்

அணிகொ டானவப் படையுள அலகிலா தனவே.                  81

 

அழிவில் பாகுள தேருள சிலையுள அ•தான்

றொழிவி லாதமா¢ அம்புபெய் தூணியும் உளவால்

இழிவில் தெய்வதப் படைகண்முற் றும்முள இறைமைத்

தொழில் நடாத்துறு பரிதியும் ஒன்றுண்டு தொல்லோய்.            82

 

அண்டம் ஆயிரத் தெட்டையுங் கன்னலொன் றதனில்

கண்டு மீடரும் இந்திர ஞாலமுங் கவனங்

கொண்ட தோர்தனி மடங்கலும் உனக்குள குறிக்கின்

விண்டு மாலுறு மாயைகள் பலவுள மேலோய்.                          83

 

இன்ன பான்மைசேர் வெறுக்கைபெற் றீறிலா துறையும்

மன்னர் மன்னநிற் போன்றுளார் யாவரே மலையக்

கன்னி பாலகன் தூதுவன் சிறுதொழில் கருத்தின்

உன்னி யுன்னியே இரங்கவுந் தகுவதோ உனக்கே.                 84

 

குழந்தை வெண்பிறை மிலைச்சினோன் மதலையைக் குறுத்தாள்

இழிந்த பூதரைப் பிறர்தமை வென்றிட எமரில்

விழைந்த மானவர் ஒருவரை விடுப்பதே யன்றி

அழிந்தி ரங்கியே வினவுமோ இதுகொல்உன் னறிவே.                     85

 

மூளும் வெஞ்சமர் புரிந்தஎன் னிளவல்பன் முடியும்

வாளி னாலடும் ஒற்றனை மற்றுளார் தம்மைக்

கேள டுந்தடிந் தல்லது கேடில்சீர் நகா¢க்கு

மீள்க லேனெனப் பகர்ந்தனன் வெய்யசூ ளுரையே.                86

 

கரந்தை சூடுவான் குமரனைப் பொருதல்கா தலியா

இருந்த வீரர்கள் அளப்பில ராயினும் இப்போர்

விரைந்து நீயெனக் குதவுதி ஏகுவன் மேனாட்

பொருந்து பாதலத் தரக்கர்மேற் சென்றதே போல.                 87

 

வலிய தோர்சிலை ஈறிலாக் கவசம்வான் படைகள்

உலகு தந்தவன் அளித்திட முன்புபெற் றுடையேன்

குலம டங்கவாள் அரக்கரைத் தடிந்திசை கொண்டேன்

மெலியன் அன்றியான் அறுமுகன் மேலெனை விடுத்தி.            88

 

என்னு மாற்றங்கள் எரிமுக முடையவன் இசைபப

அன்ன வன்றனை விலக்கியே கரதலம் அமைத்துச்

சென்னி ஆயிரம் பெற்றுள சிங்கமா முகத்தோன்

மன்னர் மன்னனை நோக்கியே வகுத்துரை செய்வாய்.             89

 

மந்திர ரத்தருந் தானையந் தலைவரும் மகாருந்

தந்த மக்கியல் வன்மையே சாற்றிய தல்லால்

இந்தி ரப்பெருந் திருவுறும் உன்றனக் கியன்ற

புந்தி சொற்றிலர் இம்மொழி கேளெனப் புகல்வான்.                90

 

வேறு

 

பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினங்

கற்றவர் உணர்வையுங் கடக்கும் அன்னது

முற்றுறு கின்றதன் முன்னம் அன்பினோர்

உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால்.                      91

 

மன்னவர் செவியழல் மடுத்த தாமென

நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச்

சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர்

ஒன்னலர் விழைந்தவாறு ரைக்கின் றார்களே.                    92

 

முற்றுற வருவது முதலும் அன்னதால்

பெற்றிடு பயன்களும் பிறவுந் தூக்கியே

தெற்றென உணர்ந்துபின் பலவுஞ் செய்வரேல்

குற்றமொன் றவர்வயிற் குறுக வல்லதோ.                       93

 

மால்வரு தொடா¢பினால் வனத்துச் செல்லுமீன்

கோல்வரும் உணவினைக் குறித்து வவ்வியே

பால்வரு புணர்ப்பினிற் படுதல் போலநீ

மேல்வரு கின்றதை வினவல் செய்கிலாய்.                       94

 

இந்திர னாதியாம் இறைவர் தங்களை 

அந்தரத் தமரரை யலைத்த தீயவர்

முந்துறு திருவொடு முடிந்த தல்லதை

உய்ந்துளர் இவரென உரைக்க வல்லமோ.                95

 

தேவர்கள் யாரையுந் திரைகொள் வேலையின் 

மேவரு மீன்றொகை விரைவிற் றம்மென

ஏவினை இனிதுகொல் இனிய செய்கையும் 

மாவியில் விருப்பிலார் அன்றி யார்செய்வார்.                    96

 

அஆகைழல் வாசவற் கலக்கண் ஆற்றியே 

இறையினை அழித்தனை இருந்த மாநகர்

நிறைதரு வளனெலாம் நீக்கு வித்தனை

சிறையிடை உய்த்தனை தேவர் யாரையும்.                      97

 

அத்தகு தேவரால் ஐய நங்களுக்

கித்துணை அலக்கண்வந் தெய்திற் றிங்கிது

மெய்த்திற மாமென விரைந்துட் கொள்ளலை

பித்தரின் மயங்கினை பேதை ஆயினான்.                98

 

பொன்னகர் அழிந்தநாட் புகுந்த தேவரை

இன்னமும் விட்டிலை இரக்கம் நீங்கினாய்

அன்னதற் கல்லவோ ஆறு மாமுகன்

உன்னுடன் போர்செய வுற்ற தன்மையே.                 99

 

வேறு

 

பேறு தந்திடு பிஞ்ஞகன் பெருந்திரு வுடனீர்

நூறு தன்னுடன் எட்டுகம் இருமென நுவன்றான்

கூறு கின்றதோர் காலமுங் குறுகிய ததனைத்

தேறு கின்றலை விதிவலி யாவரே தீர்ந்தார்.                     100

 

எத்தி றத்தரும் நுங்களை வெல்கிலர் எமது

சத்தி வென்றிடும் என்றனன் கண்ணுதற் றலைவன்

அத்தி றத்தினால் அல்லவோ அறுமுகக் குமரன்

உய்த்த செய்யவேல் உண்டது தாரகன் உயிரை.           101

 

பேதை வானவர் தங்களைச் சிறையிடைப் பிணித்தாய்

ஆத லானுனக் கானதென் றுன்பமே அல்லால்

ஏது மோர்பயன் இல்லதோர் சிறுதொழில் இயற்றி

வேத னைப்படு கின்றது மேலவர் கடனோ.                       102

 

குரவ ரைச்சிறு பாலரை மாதரைக் குறைதீர்

விரத நற்றொழில் பூண்டுளோ£¢ தம்மைமே லவரை

அரும றைத்தொழி லாளரை ஒறுத்தனர் அன்றோ

நிரய முற்றவுஞ் சென்றுசென் றலமரும் நெறியோர்.              103

 

அமரர் தம்பெருஞ் சிறையினை நீக்குதி யாயிற்

குமர நாயகன் ஈண்டுபோ ராற்றிடக் குறியான்

நமது குற்றமுஞ் சிந்தையிற் கொள்ளலன் நாளை

இமையொ டுங்குமுன் கயிலையின் மீண்டிடும் எந்தாய்.   104

 

சிட்ட ராகியே அமர்தரும் இமையவர் சிறையை

விட்டி டாதுநீ யிருத்தியேன் மேவலர் புரங்கள்

சுட்ட கண்ணுதல் குமரனங் குலமெலாந் தொலைய

அட்டு நின்னையும் முடித்திடுஞ் சரதமென் றறைந்தான்.   105

 

தடுத்து மற்றிவை உரைத்தலும் வெய்யசூர் தடக்கை

புடைத்து வெய்துயிர்த் துரப்பியே நகைநிலாப் பொடிப்பக்

கடித்து மெல்லிதழ் அதுக்கிமெய் பொறித்திடக் கனன்று

முடித்த னித்தலை துளக்கியே இன்னன மொழிவான்.              106

 

ஏவற் றொண்டுசெய் தின்னமுங் கரந்தஇந் திரற்குந்

தேவர்க் குஞ்சிறு பாலற்குஞ் சிவனுறை கயிலைக்

காவற் பூதர்க்கும் அஞ்சினை கருத்தழிந் தனையோ

மூவர்க் கும்வெலற் கரியதோர் மொய்ம்புகொண் டுடையோய்த.107

 

எல்லை நாள்வரை இழைத்ததும் எம்பெருஞ் சத்தி 

வெல்லு நுங்களை என்றதுங் கண்ணுதல் விமலன்

சொல்ல யான்முன்பு கேட்டிலன் வஞ்சமுஞ் சூழ்வும்

வல்லை வல்லைகொல் எம்பிநீ புதிதொன்று வகுத்தாய்.   108

 

நூற்றின் மேலுமோ ரெட்டுக நுவலருந் திருவின்

வீற்றி ருந்தர சியற்றுதிர் என்னினும் மேனாள்

ஆற்றி னைச்சடை வைத்தவன் கொடுத்திடும் அழியாப்

பேற்றை யாவரே விலக்குவார் அதுபிழை படுமோ.               109

 

ஆதி நாயகன் எம்பெருஞ் சத்தியே அல்லால்

ஏதி லார்வெலார் என்னினுஞ் சத்தியும் இறையும்

பேத மோவரங் கொடுத்தவன் அடுமென்கை பிழையே

ஓத லாவதோர் வழக்கமே உண்மைய தன்றால்.          110

 

பழுது றாதுநம் போலவே வேள்வியைப் பயிலா

தழிவி லாவரம் பெற்றிலன் தாரகன் அதனால்

ஒழிவ தாயினன் வச்சிர வாகுவும் உணர்வில்

குழவி யாதலின் மாய்ந்தனன் ஈதுகொல் குறையே.               111

 

அண்ட மாயிரத் தெட்டையுந் தனியர சாட்சி

கொண்டு வைகினன் குலத்தொடும் அமரர்தங் குழுவைத்

தொண்டு கொண்டனன் யாவா¢வந் தெதிர்க்கினுந் தொலையேன்

உண்டு கொல்லிவண் எனக்குநே ராகவே ஒருவர்.         112

 

தவமு யன்றுழல் அமரரின் அரக்கர்கள் தம்மின் 

அவுணா¢ தங்களின் ஆயிரத் தெட்டெனும் அண்டம்

புவன முற்றவும் ஒருதனி யாழியால் புரந்தே

எவரெ னக்குநே ராகவே அழிவிலா திருந்தார்.            113

 

மால யன்முத லாகிய முதுவர்கள் வரம்பில்

கால மாகயான் அமரரைச் சிறைசெயக் கண்டுஞ்

சால வென்றனக் கஞ்சியே இருந்தனர் தனியோர்

பால னேகொலாம் அழிவிலா என்னுயிர் படுப்பான்.               114

 

வேறு பாடுறா வச்சிரப் படிவமும் மிடலும்

ஈறி லாததோர் ஆயுளும் பெற்றிடும் என்னை

ஊறு தான்செயக் கூடுறா தொருவர்க்கு மென்றான்

மாறு போர்செய்து பாலனோ எனையட வல்லான்.         115

 

எண்ணி லாததோர் பாலகன் எனைவெல்வன் என்கை

விண்ணி லாதவன் றன்னையோர் கனியென வெ•கிக்

கண்ணி லாதவன் காட்டிடக் கையிலா தவன்போய்

உண்ணி லாதபேர் ஆசையால் பற்றுமா றொக்கும்.        116

 

என்று மற்றிவை சூரபன் மாவிசைத் திடலுந்

துன்று ப•றலைச் சீயமா முகமுடைத் துணைவன்

நன்று நன்றென வினவியே இன்னமும் நானிங்

கொன்று கூறுவன் முனியலை கேட்டியென் றுரைப்பான்.   117

 

வாலி தாமதிச் சடிலமும் பவளமால் வரையே

போலும் மேனியும் முக்கணும் நாற்பெரும் புயமும்

நீல மாமணி¢ கண்டமுங் கொண்டுநின் றனனால்

மூல காரணம் இல்லதோர் பராபர முதல்வன்.                    118

 

தன்னை நேரிலாப் பரம்பொருள் தனியுருக் கொண்ட

தென்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி

முன்னை யாருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப்

பின்னை வீடுபே றருளுவான் நினைந்தபே ரருளே.        119

 

அப்ப ரன்றனை உன்னியே அளவைதீர் காலம்

மெய்ப்பெ ருந்தவம் இயற்றினை அதுகண்டு வௌ¤ப்பட்

டொப்பி லாவர முதலியே ஆங்கதற் கொழியுஞ்

செப்பி வைத்தனன் தேர்ந்திலை போலுமத் திறனே.               120

 

பெறல ருந்திரு வுடையநீ அறத்தினைப் பேணி

முறைபு ரிந்திடா தாற்றலால் அமரரை முனிந்து

சிறையில் வைத்தனை அதுகண்டு நின்வலி சிந்தி

இறுதி செய்திட உன்னினன் யாவர்க்ம் ஈசன்.                     121

 

வரம ளித்தயாம் அழிப்பது முறையன்று வரத்தால் 

பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்

அரிதெ னப்பரன் உன்னியே தன்னுரு வாகும்

ஒரும கற்கொடு முடித்துமென் றுன்னினான் உளத்தில்.    122

 

செந்நி றத்திரு மேனியுந் திருமுக மாறும்

அன்ன தற்கிரு தொகையுடைத் தோள்களு மாக

முன்ன வர்க்குமுன் னாகிய பராபர முதல்வன்

தன்னு தற்கணால் ஒருதனிக் குமரனைத் தந்தான்.        123

 

மானு டத்தரில் விலங்கினில் புட்களில் மற்றும்

ஊன முற்றுழல் யாக்கையில் பிறந்துளார் ஒப்ப 

நீநி னைக்கலை பரஞ்சுடர் நெற்றியந் தலத்தே

தானு தித்தனன் மறைகளுங் கடந்ததோர் தலைவன்.              124

 

சீல மில்லவர்க் குணரவொண் ணாதசிற் பரனைப்

பால னென்றனை அவனிடத் திற்பல பொருளும்

மேலை நாள்வந்து தோன்றிய சிறியதோர் வித்தின்

ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித் ததுபோல்.               125

 

அருவு மாகுவன் உருவமு மாகுவன் அருவும்

உருவு மில்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்

கருமம் ஆகுவன் நிமித்தமு மாகுவன் கண்டாய்

பரம னாடலை யாவரே பகர்ந்திடற் பாலார்.                      126

 

வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த

போதக் காட்சிக்குங் காணலன் புதியரில் புதியன்

மூதக் கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவாய்

ஆதிக் காதியாய் உயிர்க்குயி ராய்நின்ற அமலன்.          127

 

ஞானந் தானுரு வாகிய நாயகன் இயல்பை

யானும் நீயுமாய் இசைத்துமென் றால• தௌ¤தோ

மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந்

தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந் தலைமை.     128

 

தத்த மாற்றங்கள் நிறுவிய சமயிகள் பலருங்

கத்து புன்சொலை வினவினர் அவன்செயல் காணார்

சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி

உய்த்த ணர்ந்திடு நீரரே ஒருசிறி துணர்வார்.                      129

 

கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப்

பொருளெ னப்படு நான்மையும் ஐவகைப் பொறியும்

இருதி றத்தியல் வினைகளுங் காலமும் இடனும்

மரபின் முற்றுறு பயனுமாய் நின்றவன் வள்ளல்.         130

 

ஞால முள்ளதோர் பரம்பொருள் நாமெனப் புகலும்

மாலும் வேதனும் மாயையாம் வரம்பினுட் பட்டார்

மூல மாகிய தத்துவ முழுவதும் கடந்து

மேலு யர்ந்திடு தனிமுத லவன்அன்றி வேறார்.                   131

 

தூய பார்முத லாகவே குடிலையின் துணையுங்

மேய அண்டமும் உயிர்களும் வியன்பொருள் பலவு

மாயும் நின்றனன் அல்லனு மாயினன் அவன்றன்

மாயை யாவரே கடந்தனர் மறைகளும் மயங்கும்.                132

 

இன்ன தன்மைசேர் முதல்வனைச் சிறுவனென் றிகழ்ந்து

பன்னு கின்றனை அவுணர்தங் கிளையெலாம் படுத்து

நின்னை யுந்தடிந் திடுவனோர் இமைப்பினின் இரப்புந்

தன்ன ருட்டிறங் காட்டுவான் வந்தனன் சமர்மேல்.        133

 

அற்றம் இவ்வகை ஆயிரத் தெட்டெனும் அண்டம்

பெற்ற னம்மென வியந்தனை தத்துவ பேதம்

முற்று ணர்ந்திலை தரணியோ அளப்பில வுளகாண்

மற்றை அண்டங்கள் கேட்டியேல் மருளுதி மன்னோ.              134

 

குடிலை யீறதா வாரியே முதலதாக் குழுமி

யுடைய அண்டங்கள் அலகில என்பரொன் றொன்றின்

அடைத லுற்றிடு புவனத்தின் பெருமையார் அறிந்தார்

முடிவு றாததோர் பொருளினை முடிவுகூ றவற்றோ.              135

 

அன்ன வாகிய அண்டங்கள் அனந்தகோ டியையுந்

தன்ன தாணையால் ஓரிமைப் பொழுதினில் தரவும்

பின்னர் மாற்றவும் வல்லதோர் ஆதியம் பிரான்காண்

உன்னொ டேபொரும் ஆடலாற் செந்திவந் துற்றான்.              136

 

வச்சி ரத்தனி யாக்கைபெற் றனமென மதித்தாய்

இச்சி ரத்தைய விடுமதி இருவினைக் கீடா

அச்செ டுத்திடும் உயிர்கண்மாய்ந் திடுமென அறிஞர்

நிச்ச யித்தனர் முடிவுறா திருத்திகொல் நீயே.                    137

 

பெருமை பெற்றிடு வானத்தின் நிலத்திடைப் பிறந்தோர்

இருமை பெற்றிடு காயமும் இறந்திடுந்  திண்ணம்

பருமி தத்துநின் வச்சிர யாக்கையும் பாரின்

உரிமை பெற்றுள தாதலான் அழிவின்றி யுறுமோ.        138

 

அழிவில் மெய்வரம் பெற்றனம் என்றனை அதற்கு 

மொழித ரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்

கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற் கெடாது

கழிபெ ரும்பகல் இருந்திடும் பான்மையே கண்டாய்.              139

 

அச்சு தன்அயன் அமரரா கியபெய ரவர்க்கு

நிச்ச யம்படு முகமனே யானபோல் நினது

வச்சி ரத்தனி யாக்கையும் அழிவிலா வரமும்

முச்ச கந்தொழப் பல்லுகம் இருத்தலாய் முடியும்.        140

 

வான்செய் தேவரை நீயலைக் கின்றதை மதியா

ஊன்செய் கின்றபல் லுயிருக்கும் உயிரதாம் ஒருவன்

தான்செய் கின்றதொல் வரத்தினைத் தான்தவிர்த் திடுமேல்

ஏன்செய் தாயென வினவியே நிறுவுவார் எவரே.          141

 

கெடுத லில்லதோர் வளனொடு நீயுநின் கிளையும்

படுத லின்றியே வாழ்தியென் றின்னன பகர்ந்தேன்

இடுதல் கொண்டிடு சிறையிடைத் தேவரை யின்னே

விடுதல் செய்குதி யென்றனன் அறிஞரின் மிக்கான்.               142

 

இன்ன பான்மையான் மடங்கலம் பெருமுகத் திளவல்

சொன்ன வாசகம் வினவியே மணிமுடி துளக்கிக்

கன்ன மூடுசெங் கனல்செறித் தாலெனக் கனன்று

முன்னை யாகியோன் பின்னருஞ் சிற்சில மொழிவான்.    143

 

காற்றிற் றள்ளுண்டு நெருப்பினிற் சூடுண்டு கங்கை

ஆற்றில் தாக்குண்டு சரவணம்  புக்கலை யுண்டு

வேற்றுப் பேர்முலை உண்டழு தேவிளை யாடும்

நேற்றைப் பாலனை யோபரம் பொருளென நினைந்தாய்.   144

 

பிரம மாகிய ஒருபொருள் உயிரெனப் பேர்பெற்

றுருவ மெண்ணில கொண்டுதன் மாயையால் உலப்பில்

கரும பேதங்கள் ஆற்றிடும் பல்புனற் கடத்துள்

இரவி தன்னுருத் தனித்தனி காட்டிய இயல்பின்.          145

 

கடந்த கர்ந்துழி அவற்றிடை வௌ¤கக னத்தோ

டடைந்த வாறுபோல் யாக்கையின் பேதகம் அனைத்தும்

முடிந்த காலையில் தொன்மைபோல் அபேதமாம் மொழிக்குந்

தொடர்ந்த சிந்தைக்கும் நாடொணா தமர்பெருஞ் சோதி.    146

 

பிரம மேயிவர் அல்லவர் இவரெனப் பேதித்

திருமை யாகவே கொள்ளலை யாக்கையே வேறு

பரம மாகிய உயிரெலாம் ஒன்றுபல் பணியும்

பொருள தாகியே ஒருமையாய் முடிந்தவா போல.        147

 

விறலும் வன்மையும் இல்லவர் தாழ்வர்மே தக்க

நெறியர் ஓங்குவர் ஈதுல கத்திடை நிகழ்ச்சி

இறுதி யில்லதோ£¢ பெரியன்யான் அறுமுகன் என்போன்

சிறியன் ஆதலின் அவனையான் வெல்குவன் திண்ணம்.   148

 

தொகைமை சான்றநங் குரவர்பல் லோருயிர் தொலைத்த

பகைஞ ராதலின் அமரரைச் சிறையிடைப் படுத்தேன்

மிகைசெய் தார்களை நாடியே வேந்தொறுத் திடுதல்

தகைமை யேயென மனுமுறை நூல்களுஞ் சாற்றும்.              149

 

மாக ராயுளோர் காப்பினை விடுகிலன் மற்றைப்

பாக சாதனன் தன்னையும் அருஞ்சிறைப் படுப்பன்

ஏக நாயகன் எய்தினும் எதிர்ந்துபோர் புரிவன்

ஆகை யால்இனி இச்சிறு மொழிகளை அயர்த்தி.          150

 

உரைப்ப தென்னினி ஒருவயிற் றென்னுடன் உதித்துப்

பெருக்க முற்றனை நங்குலப் பகைஞரைப் பெரிது

நெருக்கல் இன்றியே அவர்கள்பாற் பட்டனை நீயே

இருக்க மற்றொரு தெவ்வரும் வேண்டுமோ எனக்கே.     151

 

பத்துக் கொண்டநூ றுடையதோர் சென்னியும் பலவாங்

கொத்துக் கொண்டமர் தோள்களுங் கரங்களின் குழுவும்

எத்துக் காற்றினை வன்மையும் வீரமும் இழந்தாய்

பித்துக் கொண்டவர் தம்மினும் பேதைமை விடித்தாய்.    152

 

வேறு

 

தானவர் வழிமுறை தன்னை விட்டனை

வானவர் போன்றனை வன்மை சிந்தினை

மேனிகழ் திட்பமும் விறலு மாண்டனை

மோனமொ டருந்தவ முயலப் போதிநீ.                  153

 

மறந்தனை இழந்தனை மான நீங்கினை

சிறந்திடும் அவுணர்தஞ் சீர்த்தி மாற்றிடப்

பிறந்தனை ஈண்டொரு பயனும் பெற்றிலை

இறந்தனை பொலுநீ இருந்து ளாய்கொலோ.              154

 

மந்திரி யாதியான் மற்றி தற்குநீ

சிந்தையில் வெருக்கொளின் திசைமு கத்தர்போல்

ஐந்தியல் அங்கமொன் றங்கை பற்றுதி

வெந்திற லேயெனப் படையும் வீசியே.                  155

 

கிளைத்திடு கள்ளியின் கிளைக ளாமென

வளர்த்தனை பலதலை வரம்பில் கைத்தலம்

நௌ¤த்தனை சுமந்தனை நெடிது காலமா

இளைத்தனை வலியிலாய் யாது செய்திநீ.               156

 

பண்டுணர் வில்லதோர் பருவம் ஆதலின்

சண்டனை வருணனைத் தளையின் இட்டனை

அண்டரை யலைத்தனை அறிவு கூடலின்

பெண்டிரின் நடுங்கினை பேடி போலுநீ.           157

 

பன்னெடுந் தலையுடைப் பால னாகுமுன்

வன்மையும் ஆடலும் வந்து பா£¢த்திட

இன்னமும் வந்திலள் வருந்தி ஈன்றதாய்

அன்னைதன் குறைகொலோ அருவ மானதே.     158

 

பகையென ஒன்றுறிற் பதைபதைத் தெழீஇச்

சிகையுடை வாலுளைச் சீயஞ் சீறியே

தகுவிறல் கொள்ளுமால் அவற்றின் தன்மையாய்

மிகுதலை பெற்றதும் வீண்கொல் எம்பிநீ.        159

 

பூதரைத் தலைவரைப் புராரி மைந்தனை 

ஏதிலர் யாரையும் யான்வென் றேகுவன்

நீதளர் வெய்திடல் நினது மாநகர்

போதுதி என்றனன் புலனில் புந்தியான்.           160

 

என்றிவை அவுணர்கோன் இசைத்த காலையின்

நன்றிவன் உணர்வென நகைத்துக் கொண்டொறுந்

துன்றிய பேரழல் சொரிய வெஞ்சினத்

தொன்றிய தன்னுளத் தினைய உன்னுவான்.              161

 

உறுதியை உரைத்தனன் உணர்வி லாதவன்

வறிதெனை இகழ்ந்தனன் வருவ தோர்கிலன்

இறும்வகை நாடினன் யாதொர் புந்தியை

அறிவிலர்க் குரைப்பவர் அவரிற் பேதையோர்.            162

 

உய்த்தனர் தேன்மழை உதவிப் போற்றினுங்

கைத்திடல் தவிருமோ காஞ்சி ரங்கனி

அத்தக வல்லவோ அறிவி லாதவன்

சித்தம துணர்வகை தெருட்டு கின்றதே.          163

 

தொலைக்கருந் திருவுடைச் சூரன் புந்தியைக்

கலக்கினும் உய்வகை கருது கின்றிலன்

அலக்கணுற் றிருந்துநாம் இரங்கி ஆவதென்

விலக்கரும் விதியையாம் வெல்ல வல்லமோ.           164

 

ஆவது விதியெனின் அனைத்து மாயிடும்

போவது விதியெனின் எவையும் போகுமால்

தேவருக் காயினுந் தீர்க்கத் தக்கதோ

ஏவரும் அறியொணா ஈசற் கல்லதே.                    165

 

நீண்டசெஞ் சடைமுடி நிமலன் ஈந்தநாள்

மாண்டது மாய்ந்திடு மெல்லை வந்ததால்

ஈண்டுளார் யாவரும் இறையுந் துஞ்சுமால்

பூண்டிடும் அமரர்கோன் தவமும் பொய்க்குமோ.   166

 

இறப்பது சரதமேல் இறைவன் என்னுரை

வெறுத்தனன் இகழுமேல் வேண்டி இன்னும்யான்

மறுத்தெதிர் மொழியலன் மன்ன என்பிழை

பொறுத்தியென் றின்னுரை புகல்வ தல்லதே.              167

 

மன்னவர் மன்னவன் வள்ளல் வேலினால்

இன்னினி இறந்திடும் இதுவும் நோக்கியே

பின்னுமிங் கிருந்திடல் பிழைய தாகுமால்

முன்னுற முடிவதே முறைய தாமெனா.                 168

 

சிந்தனை செய்திடு சிங்க மாமுகன்

தந்தையை நிகர்வரு தம்முன் தாள்தொழா

வந்தனை செய்தனன் மன்ன சீறிடேல்

புந்தியி லேன்பிழை பொறுத்தல் வேண்டுமால்.           169

 

சிறியவா¢ ஒருபிழை செய்யின் மேலவர்

பொறையொடு பின்னரும் போற்றல் அல்லதை

இறையதும் வெகுள்வரோ யானுஞ் செய்பிழை

அறிவன்நீ அன்றியே ஆர தாற்றுவார்.                    170

 

பொறுத்தனை கோடியென் புன்மை யுள்ளமேற்

செறுத்தெனை இகழந்திடல் செருவிற் சென்றியான்

மறுத்தெதிர் மலைந்திடு மாற்ற லா£¢தமை

ஒறுத்திடு கின்றனன் அதனை ஓர்திநீ.            171

 

செருவினுக் கேகுவன் செறுநர் தம்மிசைத்

தருதியால் விடையெனத் தம்பி கேட்டலும்

பெரிதுள மகிழ்ந்தனன் பிறங்கு காதலால்

வருதியென் றனையனை மார்பிற் புல்லினான்.            172

 

பையர வளித்திடும் பாத லத்தினில்

வையக வரைப்பினில் திசையின் வான்களிற் 

செய்யஅண் டங்களிற் செய்யும் வென்றியுள்

ஐயநிற் கேதுகொல் அரிய தானதே.                      173

 

நீக்கமில் கேள்வியாய் நீமுன் சொற்றன

தூக்குறின் என்மனத் துணிவுந் திட்பமும்

றுக்கமு முணரவே ஒன்ன லாரெனும்

மாக்களை அடுவதோ£ மடங்கல் அல்லையோ.    174

 

சென்றனர் மாற்றலர் என்கை தேர்தியேல்

கொன்றபின் அல்லது கும்பிட் டோடிட

வென்றபின் அல்லது வெகுளி தீ£¢தியோ

உன்றன தாற்றலை உணர்கி லேன்கொலோ.              175

 

இற்றைநாள் நின்னகர் ஏகி ஆயிடை

உற்றிடு படையெலாம் ஒருங்கு கொண்டுநீ

கொற்றமொ டிருக்குதி குமரன் ஈண்டுறின்

மற்றுனை விளிக்குவன் வருதி யாலென்றான்.            176

 

ஒல்லென முருகவேள் உனது மாநகர்

செல்லினும் ஏகலை செருவுக் கன்னது

சொல்லினை விடுத்தியோர் தூதன் தன்னையான்

வல்லையின் அமர்செய வருகின்றேன் என்றான்.  177

 

என்றலும் அவுணருக் கிறைவன் ஈங்கிது

நன்றென விடையது நல்கத் தாழ்ந்துபோய்த்

தன்றிரு மாநகர் சா£¢ந்து வைகினான்

வன்றிறல் உடையதோர் மடங்கற் பேரினான்.             178

 

ஆனதோர் பொழுதினில் அரசன் ஆண்டுறை

தானையந் தலைவரைத் தனயர் தங்களை

ஏனையர் யாரையும் ஏகச் செய்துதன்

மாநகர் இந்திர வளத்தின் வைகினான்.           179

 

அந்தமில் வளனுடை அவுணர் காவலன்

மந்திரம் இருந்தது வகுத்துக் கூறினாம்

இந்திரன் முதலினோர் யாரும் ஏத்திடச்

செந்தியின் அமர்ந்தவன் செய்கை செப்புவாம்.    180

 

ஆகத் திருவிருத்தம் - 1178

     - - -

 

 

மகேந்திர காண்டம் முற்றுப்பெற்றது

ஆகக் காண்டம் மூன்றுக்குத் திருவிருத்தம் - 4890

 

* * *


·  முந்தையது : மகேந்திர காண்டம் - பகுதி 2...

·  அடுத்தது : யுத்த காண்டம்...

 

Related Content

Discourse - The Great Vratas - Significance

Skanda Puranam Lectures

History of Thirumurai Composers - Drama-திருமுறை கண்ட புராணம

கந்தபுராணம் - பாயிரம்

கந்தபுராணம் - உற்பத்தி காண்டம் - திருக்கைலாசப்படலம்