logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-tiruarur-sithan-telivirkal

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்


 1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்    
        
பண் -  குறிஞ்சி        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்    
    பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.    1.91.1
        
    பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை    
    மறவா தேத்துமின், துறவி யாகுமே.    1.91.2
        
    துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்    
    நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.    1.91.3
        
    உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்    
    கையி னால்தொழ, நையும் வினைதானே.    1.91.4
        
    பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்    
    கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே.    1.91.5
        
    பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்    
    வாச மலர்தூவ, நேச மாகுமே.    1.91.6
        
    வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்    
    செய்ய மலர்தூவ, வையம் உமதாமே.    1.91.7
        
    அரக்கன் ஆண்மையை, நெருக்கி னான்ஆரூர்    
    கரத்தி னால்தொழத், திருத்த மாகுமே.    1.91.8
        
    துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை    
    உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.    1.91.9
        
    கடுக்கொள் சீவரை, அடக்கி னான்ஆரூர்    
    எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.    1.91.10
        
    சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்ன    
    பாரூர் பாடலார், பேரா ரின்பமே.    1.91.11
        
        
    திருச்சிற்றம்பலம்.    

 

Related Content

The Glory of Arudra Dharisanam

Don't Worry Mind, You will be blessed !

Instead of ripe I went for immature !

Recipe for Liberation

Pictures of Kongunattu Padalpetra Thalangal