logo

|

Home >

hindu-hub >

temples

நல்லிச்சேரி - (நந்திமங்கை)

இறைவர் திருப்பெயர்: ஜம்புகேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி

தல மரம்:

தீர்த்தம் : தேவகாத தீர்த்தம்

வழிபட்டோர்:நந்தி, சூரியன், கௌதமர்.

Sthala Puranam

long view of temple

 

  • நந்திகேச்வார் பரமேச்வரனைப் பூஜை செய்து, பெருமானது பாத தரிசனம் பெற்ற தலமாதலால் நந்தி மங்கை எனப்படுகிறது.

  • சப்த கன்னிகைகளுள் வைஷ்ணவி தேவி இத்தலத்து ஈசனை வழிபட்டுப் பேறு பெற்றாள். 

  • அகிலாண்டேச்வரி என்ற பெயருடன் அம்பிகையும் இங்கு வந்து தவம் செய்து ஈச்வரனது பாத தரிசனம் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது.

  • காசியிலிருந்து வந்த தம்பதிகளுக்கு அம்பிகை கன்னிகை வடிவில் காட்சி கொடுத்தாள்.

  • காசியைப்போலவே அருகில் மயானமும் அதன் எதிரில் ஒரு சிவ சன்னதியும் உள்ளன.

Specialities

 

  • மேற்கு நோக்கிய சன்னதி

     

  • இறக்க முக்தி தரும் தலம். காசியைப்போல் சன்னதி மயானத்தை நோக்கி அமைந்துள்ளது.

     

  • பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தியன்று இவ்விறைவனை சூரியன் வழிபடும் அற்புத காட்சி இன்றளவும் சிறப்பாக காணக்கூடியதாக உள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் இவ்வூர் உள்ளது. நல்லிச்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்திற்கு செல்லலாம்

Related Content

அரியமங்கை - (ஹரிமங்கை)

பசுபதிகோயில் - (பசுமங்கை)

தாழமங்கை (தாயமங்கலம்) - பசுபதிகோயில்