logo

|

Home >

hindu-hub >

temples

அரியமங்கை - (ஹரிமங்கை)

இறைவர் திருப்பெயர்: அரிமுத்தீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: ஞானாம்பிகை

தல மரம்:

தீர்த்தம் : ஹரிதீர்த்தம்

வழிபட்டோர்:மகாவிஷ்ணு, அரிமங்கை.

Sthala Puranam

ariyamangai temple

 

  • ஹரி (மகாவிஷ்ணு) வழிபட்டு முத்தி பெற்றமையால் இவ்விறைவர் அரிமுத்தீஸ்வரர் என்ற விளங்குகின்றார்.

  • இத்தலம் ஒரு காலத்தில் நெல்லி வனமாக இருந்தது. அங்கிருந்த அரிநெல்லி மரக் கனியை மட்டும் உண்டு, இங்குள்ள சத்திய கங்கை தீர்த்தத்தில் நீராடி, திருமாலை ஒருகாலத்திலும் பிரியாதிருக்கும் வரம் வேண்டி சிவபிரானைப் பூஜித்து வந்தாள் மகாலக்ஷ்மி.

  • சப்த மங்கையரில் ஒருவளான மாகேச்வரி வழிபட்ட இத்தலத்தை  பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது சிரத்தின் உச்சியில் கங்கை பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். அதுவே தற்போது சத்திய கங்கை தீர்த்தமாகத் திகழ்கிறது.

  • காசி தம்பதியர்க்கு ஞானாம்பிகை, பெதும்பை(பள்ளி)ப் பருவத்தவளாகக் காட்சி அளித்தாள்.

Specialities

  • தனிச் சன்னதியில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் உதீட்சராஜப் பெருமாள் காட்சி தருகிறார். 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் இவ்வூர் உள்ளது. கோவிலடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்திற்கு செல்லலாம்.

Related Content

நல்லிச்சேரி - (நந்திமங்கை)

பசுபதிகோயில் - (பசுமங்கை)

தாழமங்கை (தாயமங்கலம்) - பசுபதிகோயில்