logo

|

Home >

hindu-hub >

temples

பிடவூர் (திருப்பட்டூர்) Pidavur (Tirupattur)

இறைவர் திருப்பெயர்: பிரமபுரீசுவரர்.

இறைவியார் திருப்பெயர்: பிரம்ம நாயகி.

தல மரம்:

தீர்த்தம் :

வழிபட்டோர்:பிரம்மன்.

Sthala Puranam

  • பிடவூர் - 'திரு' என்னும் அடைமொழி பெற்று திருப்பிடவூர் என்றாகி - இது காலப்போக்கில் மாறி, இன்று 'திருப்பட்டூர்' என்று வழங்குகிறது.

     

  • திருக்கயிலையில் இறைவன் முன்பு சேரமான் பெருமாள் நாயனார் விண்ணப்பஞ் செய்த ஞானவுலாவை அப்பொழுது கேட்ட மாசாத்தனார் (ஐயனார்) இந்தத் தலத்தில் - திருப்பிடவூரில் கொண்டு வந்து வெளிப்படுத்தினார் என்பது பெரிய புராணத்துள் வெள்ளானைச் சருக்கத்தில் வரும் வரலாறு.

  • வைப்புத்தலப் பாடல்கள்		: அப்பர் - 1. தெய்வப் புனற்கெடில (6-7-6), 
    					   2. ஆரூர்மூ லத்தானம் (6-70-2). 
    
    				  சுந்தரர் - 1. அம்மானே ஆகம சீலர்க் (7-96-6). 

Specialities

  • இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

     

  • பெரிய புராணத்தில் வரும் வரலாற்றுக்குச் சான்றாக - இத்தலத்தில் உள்ள சாஸ்தா - ஐயனார் கரத்தில் ஏட்டுச் சுவடியை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார்.

     

  • நான்முகன் வழிபட்ட தலம் - கோயிலுள் பிரம்மாவின் மூலத் திருமேனி - பேருருவில் உள்ளது. இவ்வாறு காண்பது அரிது. விசேஷமான திருமேனி.

     

  • அம்பாள் சந்நிதிக்கு அருகில் தாயுமானவ லிங்கம் உள்ளது.

     

  • வெளியிடத்தில் தனித்தனி சந்நிதிகளாக வரிசையில் சிவலிங்கங்கள் பலவுள்ளன. அவை 1. சப்தரிஷீசுவரர், 2. காளத்திநாதர், 3. ஜம்புகேஸ்வரர், 4. அருணாசலேஸ்வரர், 5. ஏகாம்பரேஸ்வரர், 6. மாண்டுக்யநாதர்.

     

  • தேர்வடியில் அமைந்துள்ள கல்லாலான அடுக்கு விமானம் உள்ளது. கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அற்புதமான அமைப்பு.

     

  • பிரமன் சந்நிதி, இங்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

     

  • பங்குனி 14, 15, 16 நாட்களில் சூரிய பூசை நிகழ்கிறது.

     

  • இக்கோயிலில் சோழர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

ஐயனார் கோயில் :-

  • ஐயனார் கோயில் மிகப் பழமையானது. பூரண, புஷ்களா சமேதராகக் காட்சி தருகிறார்.

     

  • கோயிலுக்கு வெளியில் கல்யானை ஒன்றுள்ளது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தையடுத்துள்ள சிறுகனூர் வந்து - அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பட்டூரையடையலாம்.

Related Content