logo

|

Home >

hindu-hub >

temples

பழமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)

இறைவர் திருப்பெயர்: நீலகண்டேஸ்வரர், முத்தீஸ்வரர், பரமேஸ்வரர், மகதீஸ்வரர், படிக்கரைநாதர்.

இறைவியார் திருப்பெயர்: அமிர்தகரவல்லி, மங்களநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம். மண்ணியாறு

வழிபட்டோர்:சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார், பாண்டவர்கள், பிரமன், மாந்தாதா, நளன் முதலியோர்.

Sthala Puranam

view of the temple

 

மக்கள் வழக்கில் இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது.

 

இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் 'பழ மண்ணிப் படிக்கரை ' என்றாயிற்றென்பர்.

 

இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் - இலுப்பை; பட்டு - ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று.

 

இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை ஸ்பரிசித்த தலம்.

 

பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.

 

தருமர் வழிபட்டது நீலகண்டேஸ்வரர்; வீமன் வழிபட்டது மகதீஸ்வரர்; அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர்; நகுலன் வழிபட்டது பரமேசர்; சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது.

 

திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :    சுந்தரர்    -    1. முன்னவன் எங்கள் (7.22); பாடல்கள்      :  சேக்கிழார்   -       அங்கு நின்று ஏகி (12.28.288) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                         கண் நுதலார் விரும்பு (12.29.118) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.  

 

தல மரம் : இலுப்பை

 

Specialities

 

 

பிராகாரத்தில் வீமன், நகுல பூசித்த லிங்கங்களும், திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும் உள்ளனர்.

 

இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது.

Contact Address

அமைவிடம் இந்தியா - மாநிலம் : தமிழ் நாடு வைத்தீஸ்வரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைக் கடந்து, 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். தொடர்புக்கு :- 92456 19738.

Related Content