logo

|

Home >

hindu-hub >

temples

கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

இறைவர் திருப்பெயர்: மணியம்பலநாதர், அமுதலிங்கேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: மணியம்பலநாயகி, அமுதாம்பிகை, மதுரவசனாம்பிகை.

தல மரம்:

தீர்த்தம் : இந்திர தீர்த்தம்.

வழிபட்டோர்:பிரமன், ஐராவதம்.

Sthala Puranam

கீழ்க்கோட்டூராகிய இத்தலமே மணியம்பலம் எனப்படும். ஐராவதம் வழிபட்ட பெருமையுடையது மேலக்கோட்டூர் சிவாலயம். அந்த ஐராவதத்தின் மணி விழுந்ததால் கீழ்க்கோட்டூர் சிவாலயம் மணியம்பலம் என்று பெயர் பெற்றது.

Specialities

கோட்டூர் சோழநாட்டு (காவிரி)த் தென்கரைத் தலம். கோட்டூர், (1) மேலக்கோட்டூர் (2) கீழ்க்கோட்டூர் என இரு பிரிவுகளாக உள்ளது. மேலக்கோட்டூரிலுள்ள திருக்கோயில் திருமுறைப் பாடல் பெற்றது. கீழ்க்கோட்டூரில் உள்ள இத்திருக்கோயில் தான் திருவிசைப்பா தலம்.

இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் கருவூர்த்தேவர், திருவிசைப்பா பாடியுள்ளார்.

ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது.

மூலவர் சிறிய அழகான மூர்த்தி.

நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன.

நவராத்திரி, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விசேஷகால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.

 

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி பாதையில் "திருப்பத்தூர் பாலம்" என்னுமிடத்தைத் தாண்டி மேலும் 1-கி.மீ. சென்றால் கோட்டூர் தலத்தையடையலாம். முதலில் வருவரு திருமுறைப்பாடல் பெற்ற ஆலயம்தான். (மேலக்கோட்டூர்) கோயிலின் முன்பு வளைவு உள்ளது; அதைத்தாண்டி சற்று உள்ளே சென்றால் கீழக்கோட்டூர் மணியம்பலம் கோயிலை அடையலாம். வழி விசாரித்துச் செல்ல வேண்டும்.

Related Content

திருக்கோட்டூர்

திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

கங்கைகொண்ட சோழபுரம்

தஞ்சை இராசராசேச்சரம் பிரகதீஸ்வரர் கோயில்

திருவிடைக்கழி