logo

|

Home >

hindu-hub >

temples

திருவெண்டுறை (திருவண்டுதுறை, திருவெண்துறை) திருக்கோயில் தல வரலாறு Sthala puranam of Thiruvendurai Temple

இறைவர் திருப்பெயர்: மதுவனேஸ்வரர், பிரமரேஸ்வரர், பிரமபுரீசர்,வெண்டுறைநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சத்யதாயதாக்ஷி, பிரஹதாம்பாள், வேல்நெடுங்கண்ணி.

தல மரம்:

தீர்த்தம் : காவிரி, பிரம புரீச தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர்,வித்யாதரர், பிரமன், துருவன், திருமால் ஆகியோர்.

Sthala Puranam

  • மக்கள் வழக்கில் 'வண்டுதுறை' என்று வழங்கப்படுகிறது.

     

  • பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனின் திருமேனியின் இடையில் துளைத்துச் சென்று அவரை மட்டும் வலம் வந்தமையால், அம்பிகை சாபம் தர, வண்டு உருவில் இருந்து இங்கு வழிபட்டார் என்பது வரலாறு. (கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்பதாகப் பண்டை நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கேட்கவில்லை.)

 

Thiruvendurai temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. ஆதியன் ஆதிரையன் (3.61); 

பாடல்கள்      :     அப்பர்     -       கயிலாயமலை (6.71.11); 

                    சேக்கிழார்   -       நம்பர் மகிழ் (12.28.574) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

Specialities

  • பிரகாரத்தில் பிட்சாடனார் மூலத் திருமேனி உள்ளது; தரிசிக்கத் தக்கதும், விசேஷமானதுமாகும்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள்; மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன. தொடர்புக்கு :- 04367 - 294 640.

Related Content