logo

|

Home >

hindu-hub >

temples

பூவனூர்

இறைவர் திருப்பெயர்: புஷ்பவனநாதர், சதுரங்க வல்லபநாதர்.

இறைவியார் திருப்பெயர்: கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி.

தல மரம்:

தீர்த்தம் : க்ஷீரபுஷ்கரணி, கிருஷ்ணகுஷ்டஹர தீர்த்தம். கற்பக தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், சுகப்பிரம்மரிஷி.

Sthala Puranam

 

gOpuram
 

  • வசுசேன மன்னனுக்கு மகளாகப் பிறந்து சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கிய அம்பாளை, சதுரங்கத்தில் வென்று, மணந்து கொண்டதால் இறைவன் சதுரங்கவல்லப நாதர் என்னும் திருநாமம் பெற்றார்
  • தேவாரப் பாடல்கள்   :
    
    பதிகங்கள்     :    அப்பர்   -    1. பூவ னூர்ப்புனி தன்றிரு (5.65); 
    
    பாடல்கள்      : சேக்கிழார்  -       பழுதில் சீர்த் திருப் பரிதி (12.28.375) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • சுகப்பிரம்மரிஷி மலர்வனம் வைத்து வழிபட்ட தலம்.

     

  • இங்குள்ள தீர்த்தங்களில் கோயிலின் பின்புறம் உள்ள 'கிருஷ்ண குஷ்டஹரம்' தீர்த்தம், கருங்குஷ்டம் போக்கும் தன்மையுடையது. ஆனபோதிலும் இவ்விரண்டும் பிணி தீர்க்கும் குளங்களாக உள்ளன.

     

  • இத்தலத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. விஷம் தோஷம் நீக்கவல்ல பிரத்யட்ச பிரார்த்தனைச் சந்நிதி, விஷக்கடிக்கு, எலிக்கடிக்கு இங்குத்தரப்படும் வேரைக்கட்டிக் கொண்டு இவ்வம்பிகையை வழிபட்டு மக்கள் குணமடைகின்றனர்.

     

  • இறைவனுக்கு நாடொறும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன.

  • pUvanUr temple with pond

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர், நீடாமங்கலம் - மன்னார்குடி செல்லும் பேருந்தில் ஏறிப் பூவனூர் நிறுத்தத்தில் இறங்கி, பாமணி ஆற்றுப் பாலத்தைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கோயிலையடையலாம். மன்னார்குடி - அம்மாப்பேட்டை; வலங்கைமான் - மன்னார்குடி நகரப் பேருந்துகள் பூவனூர் வழியாகச் செல்கின்றன.

Related Content