logo

|

Home >

hindu-hub >

temples

திருவேட்களம்

இறைவர் திருப்பெயர்: பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்.

இறைவியார் திருப்பெயர்: சற்குணாம்பாள், நல்லநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : தீர்த்தக்குளம் - கோயிலின் எதிரில் உள்ளது. நள தீர்த்தம்

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சேக்கிழார், நாரதர், அர்ச்சுனன் முதலியோர்.

Sthala Puranam

Tiruvetkalam temple

 

அர்ச்சுனனுக்குப் பாசுபதம் தந்தருளிய தலம்

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்   :  சம்பந்தர்   - 1. அந்தமும் ஆதியு மாகிய (1.39);                  அப்பர்     - 1. நன்று நாடொறும் நம்வினை (5.42); பாடல்கள்    :  அப்பர்     -       வெண்காட்டார் (6.51.4),                                     மண்ணிப் படிக்கரை (6.70.6),                                     நள்ளாறும் (6.71.10);                 சேக்கிழார்  -      மேவிய பணிகள் (12.21.172) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                    செய்ய சடையார் (12.28.166) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம். 

 

 

Specialities

 

ஞானசம்பந்தபெருமான் சிலநாள் இங்கு தங்கியிருந்து நாடொறும் சென்று தில்லை சபாநாயகரைத் தரிசித்து வந்தார்.

 

சந்நிதி வாயிலின் இருபுறமும் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

 

பாசுதம் ஏந்திய மூர்த்தியும், அருச்சுனன் திருமேனியும் வரலாற்றுத் தொடர்புடயவை; இவை இரண்டும் மிகப் பழங்காலத்தில் குளத்திலிருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

 

முன்மண்டபத் தூண்களில் அரிய சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன.

 

நாடொறும் ஐந்து கால வழிபாடுகள் உள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் உள்ளது. (அண்ணாமலை பல்கலைகழகப் பகுதியைத் கடந்து சென்றால் எளிது)
தொடர்பு : 09842008291, 09843388552

Related Content